புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே... அமுதே...


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 18, 2011 4:47 pm

First topic message reminder :

1. இலை

தமிழ்ல ஒவ்வொன்றையும் அதனோட தன்மைக்கு ஏத்தமாதிரி பெரியவங்க தனிச்சுக் காமிக்கும்படியா சொற்களை செய்து வெச்சு இருக்காங்க. அதை நாம சரியாப் பயன்படுத்தணும்ங்க.... இன்னைக்கு இலையைபத்தி யோசிக்க வேண்டி வந்தது.... (தேர்தல் நேரம்ங்கிரதாலே இரட்டை இலையை நினைச்சேன் அப்படின்னு நீங்களா கற்பனை பண்ணக் கூடாது) இலைக்கே எத்தன சொல் பாத்தீங்களா...

ஆமாங்க, நீட்ட வாக்குல முளை விடுறது எல்லாத்தையுஞ் சொல்லுறது தாள் வெங்காயத்தாள், இராகித்தாள், வரகுத்தாள், சாமைத்தாள் அப்படின்னு.

அகத்தி, பசலை, முருங்கை போன்ற தாவரங்கள்ல, உணவுக்கு நேரிடையாப் பாவிக்கக் கூடியது கீரை.

சின்ன அளவுல நீட்ட நீட்டமா வர்றது எல்லாம் புல்; அறுகம்புல், கோரைப்புல் இதெல்லாம். அதுவே தரையில படர்ந்து போச்சுன்னா, அதுக்குப் பேரு பூண்டு. நெருஞ்சிப்பூ(ண்)டு.... புல், பூண்டு அப்படீன்னு சொல்ரோம்மில்லையா?

பரந்து, விரிஞ்சு இருந்தா அது மடல், சப்பாத்திக்கள்ளி மடல்!

கரும்பு, நாணல் இதுல வர்றதைச் சொல்லுறது தோகை.

அதே போல, குறுகலா நீட்ட நீட்டமா வர்றது ஓலை, தென்னை ஓலை, கமுகு ஓலை இப்படி!

உசிலை, சாணிப்பூட்டான், இந்த மாதிரி பத்தையில பச்சைப் பசேல்னு இருக்குறதெல்லாம் தழை.

சரி, சரி... அப்ப எதைத்தான் இலைன்னு சொல்லுறதுன்னு என்கிறீங்களா? செடியானாலும் சரி, கொடியானாலும் சரி, சிறு, குறு, பெரு மரமானாலும் சரி, தன்னிச்சையா எடுப்பா விரியுறது இலை, வேப்பிலை, அரச இலை, மாவிலை, .... இப்படி!

இவன் என்ன இன்னைக்கு இலைய இங்கே பதியாறேன் அப்படின்னு யோசிக்கிறீங்களா? வேற ஒண்ணும் இல்ல தலைவா... இன்னைக்கு மதியம் கீரை கொழம்பு சாப்பிட்டேனா... அதான்...

என்ன என்னை அடிக்க வரமாட்டீங்களே... சரி இப்போதைக்கு [You must be registered and logged in to see this image.] மீண்டும் வருவேன்!!!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 22, 2011 2:14 pm

7. ஆண்டு விழா பெயர்கள்

1 ஆண்டு - காகித விழா
2 ஆண்டு - பருத்தி விழா
3 ஆண்டு - தோல் விழா
4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு - மர விழா
6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு - வெண்கல விழா
9 ஆண்டு - மண் கலச விழா
10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு - எஃகு விழா
12 ஆண்டு - லினன் விழா
13 ஆண்டு - பின்னல் விழா
14 ஆண்டு - தந்த விழா
15 ஆண்டு - படிக விழா
20 ஆண்டு - பீங்கான் விழா
25 ஆண்டு - வெள்ளி விழா
30 ஆண்டு - முத்து விழா
40 ஆண்டு - மாணிக்க விழா
50 ஆண்டு - பொன் விழா
60 ஆண்டு - வைர விழா
75 ஆண்டு - பவள விழா
100 ஆண்டு - நூற்றாண்டு விழா



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 23, 2011 3:43 pm

8. நீர் நிலைகள்

வெயில் காலம் தொடங்கி விட்டது... தண்ணீர் குறைபாடும், தண்ணீர் சிக்கனமும் கண்டிப்பாகிவிட்டது. தண்ணீரை எப்படி சேமிப்பது? என்றெல்லாம் யோசிக்கும் காலம் இது. அப்ப, நீர் நிலைகளைப் பற்றி தமிழ் என்னதாஞ் சொல்லுதுன்னு பார்க்கலாமா....

1. அகழி (Moat) : கோட்டைக்கு வெளில அகழ்ந்தமைச்சிருக்குற நீர் அரண்
2. அணை, அணைக்கட்டு (Dam) : ஆற்றின் குறுக்கே அணைத்துக் கட்டப்பட்ட நீர்நிலை
3. அருவி (Water fall) : மலைமுகட்டுல இருக்குற தேக்க நீர் குத்திட்டுக் குதிப்பது
4. ஆழிக்கிணறு (Well in shore) : கடலருகே இருக்கும் கிணறு
5. ஆறு (River) : அறுத்துக் கொண்டு பெருகி ஓடுவது
6. இலஞ்சி (Reservoir for drinking) : குடிதண்ணீர்த் தேக்கம்
7. உறை கிணறு (Ring well) : மணலில் தோண்டி, சுடுமண் வளையமிட்ட கிணறு
8. ஊருணி (Drinking water tank) : பருகுநீர் உள்ள நீர்நிலை
9. ஊற்று (Spring) : நிலத்தடியிலிருந்து நீர் ஊறி வரும் நிலை
10. ஏரி (Irrigation Tank / Lake): வேளாண்மைக்கு உதவும் நீர் நிலை
11. ஓடை (Brook) : ஊற்றெடுத்து ஓடி வரும் வாய்க்கால்
12. கட்டுக்கிணறு (Built-in-well) : அகச்சுவர் கட்டியெழுப்பிய கிணறு
13. கடல் (Sea) : பரவை என்றும் சொல்லப்படும் பெரும் நீர் நிலை
14. கம்வாய் / கண்மாய் (Irrigation Tank): ஏரிக்கு தென் மாவட்டங்களில் சொல்லப்படுவது
15. கலிங்கு (Sluice with many vent ways): தேக்கம் உடைப்பெடுக்காமல் இருக்கக் கட்டப்படும் கடைவாய் நீர் வெளி
16. கால் (Channel) : நீரோடும் வழி
17. கால்வாய் (Supply channel to a tank): ஏரி, குளம், ஊருணிக்கு நீர் கொண்டு செல்லும் வழி
18. குட்டம் (Large pond): பெருங்குட்டை
19. குட்டை(Small Pond): சிறுகுட்டை
20. குண்டம் (Small pool): சிறு குளிக்கும் நீர் நிலை
21. குண்டு (Pool) : சிறுகுழியான நீர் நிலை
22. குமிழி (Rock cutwell) : நிலத்தின் பாறையைக் குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச் செய்த நீர் நிலை
23. குமிழி ஊற்று (Artesian fountain) : அடியிலிருந்து கொப்புளித்து வரும் நீர் நிலை
24. குளம் (Bathing Tank) : ஊரார் குளிக்கப் புழங்கும் நீர் நிலை
25. கூவம் (Abnormal tank) : ஒழுங்கில் அமையாத நீர்நிலை
26. கூவல் (Hollow) : ஆழமற்ற, கிணறு போனறதொரு பள்ளம்
27. கேணி (Large Well) : பெருங்கிணறு
28. சிறை (Reservoir) : தேக்கி வைக்கப்பட்ட பெரிய நீர் நிலை
29. சுனை (Mountain Pool) : மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர் நிலை
30. சேங்கை (Tank with duck weed) : பாசிக் கொடி மண்டிய குளம்
31. தடாகம், தடம் (Beautiful bathing tank) : அழகுற அமைக்கப்பட்ட குளம்
32. தளிக்குளம் (Tank sorrounding a temple) : கோவிலின் நாற்புறமும் சூழ்ந்த அகழி போன்றதொரு நீர் நிலை
33. தாங்கல் (Irrigationtank) : தமிழகத்தின் ஒரு பகுதியில் ஏரியின் மறு பெயர்
34. திருக்குளம் (Temple tank): ’புட்கரணி’ எனும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். கோவிலுக்கு அணித்தாகிய குளம்.
35. தெப்பக்குளம் (Temple tank along with parapet walls) : மக்கள் காண்பதற்கேற்ப உள்ள கோயிற்குளம்.
36. தொடுகிணறு (Digwell) : ஆற்றின் ஊடகத் தோண்டிய கிணறு
37. நடைகேணி (Large well with steps) : நடந்து சென்று தண்ணீர் எடுக்கக் கூடிய கிணறு
38. பிள்ளைக்கிணறு (Well in middle of lake) : குளம், ஏரி போன்றவற்றின் உள்ளமைந்த கிணறு
39. பொங்குகிணறு (Well with bubbling spring) : கொப்புளித்து ஊற்றெடுக்கும் கிணறு
40. பொய்கை (Nature Lake): தாமரை முதலிய மண்டிக் கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீர் நிலை
41. மடு (Deep place in a river): ஆற்றினிடையே உள்ள ஏதமான ஆழ் பகுதி
42. மடை(Small sluice with single ventway): ஒரு கண்ணுடைய சிறுமதகு
43. மதகு (Slice with many ventways): அடைப்புத் திறப்பு கொண்ட பல கண்களாய் அமைந்த மடை
44. மறுகால் (Surplus water channel): மிகைநீர் கழிக்கக் கூடிய கால்வாய்
45. வலயம் (Round tank): வட்டமாய் அமைந்த குளம்
46. வாய்க்கால் (Small water course): ஏரியிலிருந்து பயிருக்கு நீர் பாயும் சிறு கால்
47. வாவி (Stream): ஆற்று, ஊற்று நீர் வழிந்தோடு நிலை, நீரோடி
48. புனற்குளம் (Tank of rain water): அகத்தில், மழைநீரால் நிரம்பியுள்ள நீர்நிலை
49. பூட்டைக்கிணறு(Well with water lift): பூட்டை உருளை கொண்டு கமலை நீர் பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 23, 2011 6:54 pm

9. நீர் நிலைகள் (தொடர்ச்சி)

மேற் குறிப்பிட்டன தவிர நீர்நிலையைப் பொதுவாகக் குறிக்கும் பெயர்கள்:

1. அருநிலை
2. அலந்தை
3. இலந்தை
4. உடுவை
5. உவளகம்
6. உவன்றி
7. ஏல்வை
8. கயம்
9. குடா
10. குழி
11. கொண்டம்
12. பள்ளம்
13. கோட்டகம்
14. சரசு
15. சலதரம்
16. சலாசயம்
17. சித்தேரி
18. சுண்டை
19. சூழி
20. தட்டம்
21. தாங்கல்
22. பயம்பு
23. வாரி
24. ஓருமம்

---- இந்த சொற்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருப்பனவாதலால், மேற்குறிப்பிட்ட பட்டியலில் இடம் பெறவில்லை.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 25, 2011 12:58 pm

10. பைய எனும் சொல்....

நெல்லையைச் சார்ந்த ஒருவர் சென்னைக்கு பேருந்தில் பயணம் செய்யும்போது பயணச் சீட்டு வாங்கிக் கொண்டு ரூபாய் நோட்டைக் கொடுத்தார்.

நடத்துனர்: சில்லறை இல்லை, அப்புறம் தருகிறேன்...
நெல்லைக்காரர்: ”பையக் கொடுங்க”
நடத்துனர்: ஏய்யா, நாந்தான் அப்புறம் தரேன் என்று சொன்னேனே... உன்னோட சில்லறைக் காசுக்கு என் பையையே கேக்குரியே?

இதை நாம் நகைச்சுவையாக கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்.... ஆனால் பைய என்பது "மெதுவாக / பிறகு" என பொருள்படும் ஒரு தூய தமிழ்ச் சொல்.

”பஞ்சு கொண்டு ஒற்றினும் பைய, பைய என
அஞ்சிப் பின் வாங்கும் மெல்லடி”

என்று கண்ணகியின் மென்மையான பாதங்கள் பற்றி சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது.

ஆனால் இப்போது இத்தகைய சொற்களை நமது பேச்சிலே உபயோகித்தால் நம்மை வினோதமாக பார்க்கிறார்கள்.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 25, 2011 1:10 pm

மிகவும் அருமை! தமிழில் அறியாத விடயங்கள் இவ்வளவு உள்ளனவா என வியக்க வைக்கிறது!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 25, 2011 1:13 pm

சிவா wrote:மிகவும் அருமை! தமிழில் அறியாத விடயங்கள் இவ்வளவு உள்ளனவா என வியக்க வைக்கிறது!

என்னால் இயன்ற ஒரு சிறு முயற்சி...... நன்றிகள் சிவா....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Mar 28, 2011 11:51 am

11. பதினாறு பேறுகள் / செல்வங்கள்

இது குறித்து ஒரு பதிவு ஏற்கனவே உள்ளது. http://www.eegarai.net/t7280-16 இருப்பினும் சற்று விளக்கமாக.

"ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என்று திருமணத்தின் போது மணமக்களை, பெரியவர்கள் வாழ்த்துவது தமிழர் மரபு.

அவை 1. கல்வி, 2. புகழ். 3. வலி, 4. வெற்றி, 5. நன் மக்கள், 6. பொன், 7. நெல், 8. நல்லூழ், 9. நுகர்ச்சி, 10. அறிவு, 11. அழகு, 12. பொறுமை, 13. இளமை, 14. துணிவு, 15. நோயின்மை, 16. வாழ்நாள் என்று கூறுவர்.

இதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுவன:

1. அபிராமிப் பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதியில் ஒரு பாடல் :

சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ
தனயை மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்
தமருக்கு இரங்கி மிகவும்
அகில மதில் நோயின்மை கல்வி தன தானியம்
அழகு புகழ் பெருமை இளமை
அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
ஆகுநல்லூழ் நுகர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
சுகானந்த வாழ்வளிப்பாய்.
சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி
சூலி! மங்கள விசாலி!
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை
வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி உமையே!

1. நோயற்ற வாழ்வு, 2. கல்வி, 3. தனம், 4. தானியங்கள் (உணவிற்கான மூலாதாரம்), 5. அழகு, 6. புகழ், 7. பெருமை, 8. இளமை, 9. அறிவு, 10. சந்தானம் (குழந்தைச் செல்வம்), 11. வலிமை, 12. துணிவு, 13. வெற்றி, 14. ஆயுள், 15. ஆகுநல்லூழ் (நல்வாய்ப்பு/அதிர்ஷ்டம்), 16. நுகர்ச்சி

என்பனதான் அந்த பதினாறு பேறுகள் (செல்வங்கள்) என்கிறார் அபிராமிப் பட்டர்.

2. கவி காளமேகப் புலவர்

"துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
அதிதானியம் செளபாக்கியம் போகம் அறிவு அழகு
புதிதாம் பெருமை அறம்குலம் நோயின்மை பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே"


புகழ், கல்வி, வெற்றி, மக்கட்பேறு, துணிவு, செல்வம், மிகுந்த தானியம், சுகம், இன்பம், அறிவு, அழகு, புதிதுபுதிதாக ஏற்படக்கூடிய சிறப்புக்கள், அறவுணர்வுடைய குடிப்பிறப்பு, நோயற்ற வாழ்வு, நீண்ட வயது ஆகியவைகளே பதினாறு பேறுகள் என காளமேகப்புலவரின் பாடல் நமக்குப் புலப்படுத்துகிறது.

3. திருநள்ளாறு கோவிலில் உள்ள ஒரு வரைவு:

[You must be registered and logged in to see this image.]

கலையாத கல்வி, குறையாத வயது, கபடட்ற நட்பு, குன்றாத வளமை, போகாத இளமை, பிணியற்ற உடல், பரவசமான பக்தி, சலியாத மனம், அன்பான துணை, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடையற்ற கொடை, பரவசமான பக்தி, தொலையாத நிதி, கோணாத கோல், துன்பமில்லா வாழ்வு

என்பன பதினாறு பேறுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. (எனக்கு இந்த வரைவில் 15 தான் புலப்படுகிறது)

அப்ப இந்தப் பதிவைப் படிப்பவர் மட்டுமன்றி அனைவரும் "பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க" என வாழ்த்துகிறேன்.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 28, 2011 11:55 am

அருமை & பயனுள்ள பதிவு சுதானந்தன்
தொடருங்கள்



[You must be registered and logged in to see this image.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Mar 28, 2011 10:30 pm

உதயசுதா wrote:அருமை & பயனுள்ள பதிவு சுதானந்தன்தொடருங்கள்



வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..........



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 29, 2011 9:33 am

அருமையான பல தகவல்களை அனாயாசமாக வழங்கிவரும் சுதானந்தன் அவர்களைப் பாராட்டுகிறேன்..! தொடருங்கள் நண்பரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக