ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by Dr.S.Soundarapandian Today at 1:46 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by Dr.S.Soundarapandian Today at 1:43 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Today at 1:34 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Today at 1:31 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:57 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:57 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Yesterday at 12:24 am

» சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:22 am

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 12:21 am

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:53 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:52 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:50 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:49 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:48 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:46 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:44 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:43 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:42 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:41 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:36 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:35 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:34 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:33 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:32 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:31 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:17 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 10:22 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 10:08 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 10:01 pm

» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 9:56 pm

» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 3:37 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 3:22 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 3:18 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sun Aug 14, 2022 1:26 am

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sun Aug 14, 2022 1:22 am

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sun Aug 14, 2022 1:17 am

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 7:37 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 4:48 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 4:47 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 2:46 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 2:44 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 10:30 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 8:10 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 8:07 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 8:03 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 am

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 am

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 3:22 pm

Top posting users this week
ayyasamy ram
குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Vote_lcapகுழந்தையின் உடல் எடை அதிகரிக்க Voting_barகுழந்தையின் உடல் எடை அதிகரிக்க Vote_rcap 
T.N.Balasubramanian
குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Vote_lcapகுழந்தையின் உடல் எடை அதிகரிக்க Voting_barகுழந்தையின் உடல் எடை அதிகரிக்க Vote_rcap 
mohamed nizamudeen
குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Vote_lcapகுழந்தையின் உடல் எடை அதிகரிக்க Voting_barகுழந்தையின் உடல் எடை அதிகரிக்க Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

5 posters

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Empty குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

Post by Manik Thu Mar 17, 2011 8:54 pm

வணக்கம் நண்பர்களே,
எனது அண்ணன் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. அதனால் குழந்தையின் எடை மிகவும் குறைவாகத்தான் உள்ளது. குழந்தையின் எடை அதிகரிக்க குழந்தையின் அம்மா எவ்வாறு உணவு உட்கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Empty Re: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

Post by mohan-தாஸ் Thu Mar 17, 2011 9:14 pm

வாயாலதான் மாணிக்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Empty Re: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

Post by Manik Thu Mar 17, 2011 9:18 pm

அண்ணா கிண்டல் பண்றதுக்கு இது இடம் இல்ல தப்பா எடுத்துக்காதீங்க உண்மையில் இது அனைவருக்கும் பயனுள்ள பதிவா இருக்கணும் இப்படி கிண்டல் பேச்சை பயனுள்ள பதிவில் போட்டு அந்த பதிவ கெடுத்துராதீங்க நான் சொன்னதுல தப்பு இருந்தா மன்னிச்சிருங்க முடிஞ்சா உதவி பண்ணுங்க இல்லன பரவாயில்ல
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Empty Re: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

Post by கலைவேந்தன் Fri Mar 18, 2011 2:05 am


1. முருங்கைக்கீரை – இதை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிடலாம், ஆனால் இந்த கீரை சரியான முறையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லையேல் வயிற்றுவலி வரக்கூடும்.
2. மீன் , பால் சுறாப்புட்டு மிகச்சிறந்த உணவு, இதுவும், செய்த அன்று சாப்பிடுவது நல்லது, வைத்திருந்து சாப்பிடக்கூடாது குறிப்பாக பால் கொடுக்கும் பெண்கள்.
3. கீரை வகைகள் அத்தனையும் சாப்பிடலாம்.
4. பசும்பால் குறைந்தபட்சம் 500 மிலி குடிக்கவேண்டும்.
5. வாழைப்பழம் அதிகம் உண்டுவரவேண்டும். பால் பொருட்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.. புரதச்சத்துள்ள மீன் வகைகள் அதிகம் உட்கொண்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Empty Re: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

Post by mohan-தாஸ் Fri Mar 18, 2011 2:15 am

சாதனை தாஸ் wrote:வாயாலதான் மாணிக்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பை தவிர்த்தல்
ஊட்டச்சத்து குறைபாடு
ஊட்டச்சத்து குறைபாடு என்பது உணவில் தேவையான சத்துக்கள் போதுமான அளவவில் இல்லாமல் இருத்தலாகும். புரதச்சத்து மற்றும் சக்தி குறைபாடு என்பது மிகப்பெரிய பிரச்சினையாகும். பொதுவாக 6 மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட சாத்தியக்கூறுகள் அதிகம். இது குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, தொற்று நோய்களை உண்டாக்க கூடும்.

குழந்தை பிறந்து 5 முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மாத்திரம் அதிகமாக தரவேண்டும்.
5 லிருந்து 6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் பிற இணைஉணவுப் பொருட்களான பசும்பால், பழங்கள், நன்கு சமைத்து மசித்த சாதம், பிற தானியவகை மற்றும் பருப்பு வகை உணவுப்பொருட்களை ஆகாரமாக தரவேண்டும்.
பின்னர் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், பால் மாற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பிற உணவுப் பொருட்களை கொண்ட முழுமையான உணவினை கொடுக்க வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு சரியான மற்றும் போதுமான உணவு வழங்கப்படுகிறதா என்பதனை உறுதிசெய்ய வேண்டும்.
கர்ப்ப காலத்திற்கு / கர்ப்பமடைவதற்கு முன்னரே பெண்கள் போதுமான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்கின்றார்களா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.
சத்துணவு குறைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு சரியாய் சிகிச்சை அளிக்க வேண்டும்.
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Empty Re: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

Post by mohan-தாஸ் Fri Mar 18, 2011 2:17 am

குழந்தை நலனில் அக்கறை எடுத்தல் (குழந்தை நலன் பராமரிப்பு)

குழந்தை நலனில் அக்கறை எடுத்தல் என்பது குழந்தை
கருத்தரிப்பதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை மற்றும் குழந்தை பிறந்ததிலிருந்து 5 வயது ஆகும் வரை குழந்தையைக் குறித்து பெற்றோர் மேற்கொள்ளும் செயல்களாகும்.
ஒரு குழந்தையின் உடல் நலம் என்பது பிற்காலத்தில் ஒரு குழந்தையின் தாயாகப் போகும் பெண்பிள்ளையின் பிறப்பிலிருந்தே ஆரம்பமாகிறது. பெண் குழந்தை நலன் பராமரிப்பு என்பது கரு சிசுவாக உருவெடுப்பதிலிருந்து ஆரம்பமாகிறது. அதாவது குழந்தை கருவில் இருக்கும் போது மற்றும் பிறப்பதற்கு முன் எடுத்துக்கொள்ளும் அக்கறை, குழந்தை பிறந்த 28 நாட்கள் வரை பராமரிப்பு, ஒரு மாத பருவத்திலிருந்து 12 மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் குழந்தையைப் பராமரிப்பது, நடக்கக்கற்றுக் கொள்ளும் (1-2 ஆண்டிற்கு) காலத்தில் பராமரிப்பு, இரண்டு வயது நிரம்பிய பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு எடுக்கும் அக்கறை என எல்லா பருவத்தோடு சம்பந்தப்பட்டது.

குழந்தை பராமரிப்பு பணியின் நோக்கம் என்பது கீழ்க்காண்பவற்றை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் சரியான பராமரிப்பு மற்றும் போதுமான ஊட்டச்சத்து பெறுவது
அவர்களுடைய வளர்ச்சி சரியாக கண்காணிக்கப்படுகிறதா மற்றும் மாறுபாடான வளர்ச்சி கண்டறியப்பட்டு அதற்கான சரியான சிகிச்சை அளிக்கப்படுகிறதா.
ஏற்படுகிற சுகவீனங்கள் கண்டறியப்பட்டு நோயின் தன்மை மோசமான நிலையை அடையாதவண்ணம் எந்த தாமதமும் இன்று சிகிச்சை அளிக்கப்படுகிறதா.
நன்கு பயிற்சி பெற்ற நபர்களைக்கொண்டு பராமரிக்கப் படுகிறார்களா.
தாய் மற்றும் குடும்பத்திலுள்ள நபர்கள் கல்வியறிவு பெற்றவர்களா மற்றும் குழந்தையின் நலனை மேம்படுத்துவதற்கான குழந்தையின் நலனில் அக்கறை எடுக்கும் அளவில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனரா.
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Empty Re: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

Post by mohan-தாஸ் Fri Mar 18, 2011 2:18 am

வளர்ச்சியையும் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தையும் கண்காணிப்பது.

குழந்தையின் வளர்ச்சியையும் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தையும் கண்காணிப்பது என்பது முக்கியமானது ஆகும். இதன் மூலம் குழந்தையின் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலை போன்றவற்றை நாம் அறியலாம். அதோடன்றி குழந்தை வளரும் போது பொதுவான வளர்ச்சியும் அதனால் ஏற்படும் முன்னேற்றமும் காணப்படுகிறது. மாறுபட்ட வளர்ச்சி காணப்பட்டால் அதனை சரிசெய்ய குடும்பத்திலும் மற்றும் சுகாதார மையங்களிலும் நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகளைச் செய்யவும் உதவியாயிருக்கிறது.
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Empty Re: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

Post by mohan-தாஸ் Fri Mar 18, 2011 2:19 am


குழந்தையின் வளர்ச்சி

குழந்தையின் வளர்ச்சி என்பது ஒரு குழந்தையின் உடல் அளவில் ஏற்படும் வளர்ச்சியினை குறிக்கிறது. இதனை உடல் எடை, உயரம் (குழந்தையின் உயரம்). தலை மற்றும் கை. மார்பு போன்றவற்றின் சுற்றளவுகளைக் கொண்டு அளக்கலாம். இவ்வளவுகளை மாதிரி மேற்கோள்களைக் கொண்டு ஒப்பீடு செய்து, குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதனை அறியலாம்.
சாதாரணமாக, நல்ல உடல் நலம் மற்றும் நன்கு போஷிக்கப்பட்ட குழந்தைகளில், குழந்தை பிறந்த ஓராண்டுக்குள் மிக அதிவேகமான வளர்ச்சி ஏற்படும்.
எடை- பெரும்பாலும் எல்லா குழந்தைகளிலும் பிறந்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் உடல் எடை குறைந்து பின் 7லிருந்து 10 நாட்களுக்குள் மீண்டும் கூடும். உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது முதல் மூன்று மாதத்திற்கு, ஒரு நாளுக்கு 25 முதல் 30 கிராம் வரை கூடும். அதற்குப் பின்னர் எடைகூடுவதின் வேகம சற்று குறையும். பிறந்த 5 மாதத்தில், உடல் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கும் மற்றும் ஒருவருடத்தில் அது மூன்று மடங்காக அதிகரிக்கும். ஆனால் எடை குறைவாக பிறந்த குழந்தைகளில் இதுபோன்று ஏற்படுவதில்லை. மாறாக எடைகுறைவாய் பிறந்த குழந்தைகளின் எடை ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே இரண்டுமடங்காக உயரும். ஒரு வருடத்திற்கு பின் உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது அவ்வளவு விரைவாக உயராது. பெரும்பாலும் குழந்தைகளின் உடல் எடை முதல் ஐந்து முதல் ஆறு மாதங்கள் மிக நன்கு உயர்ந்து இரண்டு மடங்காகும். ஆனால் ஆறுமாதத்திற்கு பின் எடை உயர்வு ஏற்றத்தாழ்வுடன் காணப்படும். ஏன் அப்படி நடக்கிறது என்றால் ஆறு மாதத்திற்கு பின் தாய்ப்பால் மாத்திரம் குழந்தைக்குப் போதுமானது அல்ல. தாய்ப்பாலுடன் பிற கூடுதல் உணவுப்பொருட்களையும் சேர்த்திருக்க வேண்டும். ஒரு குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் உடல் உயரத்தையும் பொறுத்தமைகிறது. குழந்தையின் எடை பரிந்துரைக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதனை கண்டறிவது மிக முக்கியமானது. உடல் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இன்றி காணப்பட்டால் அது குழந்தையின் இளைத்துப்போவதை அல்லது குழந்தையின் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை குறிப்பிடுகிறது.

உயரம் - உயரம் என்பது குழந்தையின் வளர்ச்சியினை அளவிடும் ஒரு அளவுகோலாகும். புதிதாய் பிறந்த குழந்தையின் உயரம் 50 செ.மீ இருக்கும். முதல் வருடத்தில் குழந்தையின் உயரத்தில் 25 செ.மீ அதிகரிக்கும். இரண்டாம் வருடத்தில் 12 செ.மீ அதிகரிக்கும். 3 ஆம் 4ஆம் மற்றும் 5ஆம் வருடங்களில் 9 செ.மீ, 7செ.மீ மற்றும் 6 செ.மீ என்ற அளவில் உடலின் உயரம் அதிகரிக்கும்.

தலை மற்றும் மார்பின் சுற்றளவு - குழந்தை பிறப்பின் போது குழந்தையின் தலைசுற்றளவு 34 செ.மீராக இருக்கும். 6-9 மாதத்திற்கு பிறகு மார்பின் சுற்றளவு அதிகரித்து தலையின் சுற்றளவை விட அதிகமாக இருக்கும். குழந்தை சரிவர போஷிக்கப்படாமலிருப்பின் மேற்கூறிய வண்ணம் மார்பின் சுற்றளவு தலையின் சுற்றளவை விட அதிகரிக்க 3 முதல் 4 வருடங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.

நடுக்கையின் (புயத்தின்) சுற்றளவு - குழந்தையின் கைகள் பக்கவாட்டில் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளபோது, புயத்தின் நடுவில் அதன் சுற்றளவு அளக்கப்பட வேண்டும். அவ்வாறு அளக்கும் போது, அளக்கும் டேப்பை மெதுவாக, மென்மையாக, குழந்தையின் உடற்திசுக்களை அழுத்தாவண்ணம் புயத்தில் நடுப்பகுதியில் வைத்து அளவீடு செய்ய வேண்டும். பிறந்ததிலிருந்து ஒரு வருடம் வரை மிக அதிகமான வளர்ச்சி காணப்படும். அதாவது 11 செ.மீ-லிருந்து 12 செ.மீ வரை சுற்றளவில் வளர்ச்சி காணப்படும். நன்கு போஷிக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகளின் புயத்தின் சுற்றளவானது ஓராண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை சுமார் 16-லிருந்து 17 செ.மீ அளவிலேயே இருக்கும். இந்த காலகட்டங்களில் குழந்தையின் உடலில் உள்ள கொழுப்பு, தசைகளினால் மாற்றப்படுகிறது. தேவைப்படும் அளவின் 80 சதத்திற்கு அதாவது 12.8 செ.மீ கீழாக இருந்தால் இது மிதமானது முதல் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினை சுட்டிக்காட்டுகிறது.

அனைத்து ரீதியிலும் குழந்தையின் மேம்பாடு

குழந்தையின் உடல் வளர்ச்சியோடு கூட மன வளர்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் இவற்றைக் கூட கண்காணிப்பது அவசியம். இவற்றைவிட வளர்ச்சிக் குறியீடுகள் பயன்படுத்தி, குழந்தையின் உடல், மன, புத்தி வளர்ச்சியைக் கணக்கிட, சுகாதார நலப் பணியாளர்கள் தாயையும், பிற குடும்ப நபர்களையும் பயிற்றுவிக்க வேண்டும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Empty Re: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

Post by mohan-தாஸ் Fri Mar 18, 2011 2:21 am

மனதால் அழுத வண்ணமே உள்ளேன் குழந்தை போன்று.
நன்றி மாணிக் நான் யாருடனும் கோபம் இல்லை!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Empty Re: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

Post by mohan-தாஸ் Fri Mar 18, 2011 2:29 am

குழ‌ந்தைகளு‌க்கு‌ப் ‌பிடி‌த்தமான உணவு

ஒ‌வ்வொரு குழ‌ந்தையு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ரு‌சியை ‌விரு‌ம்பு‌ம். ‌சில குழ‌ந்தைக‌ள் காரமான உணவுகளை ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடு‌ம், ‌சில குழ‌ந்தைக‌ள் இ‌னி‌ப்பு, ‌சில குழ‌ந்தைக‌ளி‌‌ன் ‌விரு‌ப்ப‌ம் பு‌ளி‌‌ப்பாக இரு‌க்கலா‌ம். எதுவாக இரு‌ந்தாலு‌ம், அவ‌ர்களு‌க்கு செ‌ய்யு‌ம் உணவுகளை அவ‌ர்களது ‌விரு‌ப்பமான ரு‌சி‌க்கே‌ற்ப செ‌ய்வது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். ச‌த்தான உணவை, அவ‌ர்க‌ள் ‌விரு‌ம்பு‌ம் வகை‌யி‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம். இ‌னி‌ப்பை ‌விரு‌ம்பு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு, அவ‌ர்க‌ள் ‌விரு‌ம்பு‌ம் உண‌வி‌ல் ச‌ர்‌க்கரை‌க் கல‌க்காம‌ல், வெ‌ல்ல‌ம் கல‌ந்து அ‌ளி‌ப்பது ந‌ல்லது. பொதுவாக குழ‌ந்தைகளு‌க்கு அனை‌‌த்து ‌விதமான உணவுகளையு‌ம் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம். அ‌ப்போதுதா‌ன் அவ‌ர்க‌ள் பலதர‌ப்ப‌ட்ட சுவைகளை அ‌றிவா‌ர்க‌ள். முத‌லி‌‌ல் கா‌ய்க‌றிகளை ம‌ட்டுமே ஊ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல், ‌பிறகு, ‌மீ‌ன், மா‌மிச‌ம் போ‌ன்றவ‌ற்றை உ‌ண்ண மறு‌ப்பா‌ர்க‌ள். எனவே உண‌வினை பழ‌க்‌க‌ப்படு‌த்து‌ம் போதே அனை‌த்து ‌விதமான உணவுகளையு‌ம் உ‌ண்ண வை‌க்க வே‌ண்டு‌ம்.
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Empty Re: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

Post by mohan-தாஸ் Fri Mar 18, 2011 2:34 am

ஊட்டச்சத்து

புரதம் - இதன் முக்கியத்துவம்
புரதங்கள் அமினோ அமிலங்களினால் ஆனவை. இவை உயிர்வாழ்வினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல வேலைகளை செய்வதற்கு இன்றியமையாத பொருளாகும். பெரும்பாலும் உடலிலுள்ள புரத அளவில் பாதியளவு தசை வடிவில் அமைந்துள்ளன. புரதத்தின் தரமானது உணவில் அமைந்துள்ள அத்தியாவசியமான அமினோ அமிலங்களைப் பொறுத்து அமைகிறது.

புரதத்தின் செயல்பாடுகள்
புரதமானது உடலில் ஏற்படக்கூடிய முக்கிய வேதியியல் மாற்றச் செயல்களுக்கு என்ஸைம் மற்றும் ஹார்மோன் வடிவிலும் தேவைப்படுகிறது. குழந்தை மற்றும் விடலைப் பருவத்தில் உடல் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஆதாரப்பொருட்களை புரதங்கள் தருகின்றது. வளர்ந்தவர்களில் தேய்மானம் மற்றும் சேதாரத்தினால் ஏற்படும் இழப்புகளை பராமரிக்க புரதங்கள் உதவியாயிருக்கின்றன.
கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் தாய்சேய் இருவரின் உடற்திசு வளர்ச்சிக்கும் மற்றும் பால் சுரப்பதற்கும் கூடுதலான புரதம் தேவைப்படுகிறது

உணவில் எடுத்துக்கொள்ள வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட புரதத்தின் அளவு
இறைச்சியில் உள்ள புரதங்கள் மிகவும் உயர்ரக புரதங்களாகும். அவற்றிலிருந்து உடலுக்கு தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் சரியான விகிதாசாரத்தில் கிடைக்கிறது. சைவ உணவு பழக்கமுள்ளவர்களுக்கும் தானியங்கள் மற்றும் முந்திரிப்பருப்பு, நிலக்கடலை போன்ற பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளும்போது போதுமான புரதங்கள் கிடைக்கின்றது. பால் மற்றும் முட்டையில் நல்ல தரமான புரதங்கள் உள்ளன. பயறு வகைகள், கடலை மற்றும் எண்ணெய் வித்துக்கள், பால் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்கள், இறைச்சி, மீன் மற்றும் கோழி இறைச்சி போன்றவை புரதம் அதிக அளவில் உள்ள சில பொருட்களாகும். தாவர உணவுகளில், சோயாபீன்ஸில் மிக அதிகளவு புரதம் கிடைக்கின்றது. இவை 40 சதம்வரை புரதங்களை கொண்டவை. 57 கிலோ உடல் எடை கொண்ட 16-18 வயதுடைய ஒரு ஆணுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு 78 கிராம் ஆகும். அப்படியிருக்க 50 கிலோ எடைகொண்ட அதே வயதை சேர்ந்த பெண்ணிற்கு ஒரு நாளைக்கு 63 கிராம் புரதம் தேவைப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 65 கிராம் புரதம் தேவைப்படுகிறது. பால் கொடுக்கும் காலங்களில் (குழந்தை பிறந்த 6 மாத காலம்வரை) பெண்களுக்கு ஒரு நாளைக்கு 75 கிராம் புரதம் தேவைப்படும்.உணவுப் பொருட்கள்
சாப்பிடக்கூடிய பகுதியில் உள்ள புரதத்தின் அளவு (கிராம்/100 கிராம்/ )

சோயாபீன்ஸ்

43.2

கொண்டைக்கடலை, உளுந்து, பச்சை பயறு மற்றும் துவரை

22

நிலக்கடலை, முந்திரி மறறும் பாதாம் பருப்பு

23

மீன்

20

இறைச்சி

22

பசும்பால்

3.2

முட்டை (ஒரு முட்டையில்)

13.3
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Empty Re: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

Post by mohan-தாஸ் Fri Mar 18, 2011 2:35 am


தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்

தாய்ப்பால் மற்ற உணவுகளைவிட ஒரு மேலான சத்துணவு ஆகும். தாய்ப்பால் கொடுப்பதால் பிள்ளை மற்றும் தாய் இருவரின் சுகாதார நலன்கள் பெருகும்.

குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுப்பது மிகவும் நல்லது. அப்படி செய்வது அவசியமும் கூட, ஏனெனில் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு வயிறு மற்றும் குடல் உபாதைகள் வராமல் தடுக்கும். தாய்ப்பாலானது குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது மற்றும் மலச்சிக்கல் ஏற்படுத்தாது. தாய்ப்பால் குழந்தையின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிர்ப்பு தன்மையை பெருக்கும்.
தாய்ப்பால் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதைத் தடுக்கும். ஏனெனில் தாய்ப்பாலானது மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் உள்சுவரில் நடு பாதுகாப்பு படலத்தை ஏற்படுத்துகிறது.
பசும்பால் கொடுப்பது சில பிள்ளைகளுக்கு அலார்ஜி எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. பசும்பாலோடு ஒப்பிடும்போது தாய்ப்பால் கொடுப்பது 100 சதம் பாதுகாப்பானது.
தாய்பபால் உட்கொள்ளும் பிள்ளைகள் மற்ற குழந்தையை விட உடற்பருமனால் சிறிதாகவே பாதிக்கப்படுகின்றன என சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் தாய்பபால் கொடுப்பதால் உடல் பருமனாவது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.
தாய்ப்பால் கொடுப்பதால் லூக்கேமியா எனும் இரத்த சம்பந்தமான கான்சர் சர்க்கரை நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதை தடுக்கிறது.
தாய்ப்பால் குழந்தையின் புத்திக்கூர்மையை மேலும் உயர்த்துகிறது என நம்பப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நல்ல பாசப்பிணைப்பு எற்படுகிறது. மேலும் தாய்ப்பாலில் குழந்தையின் மூலை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
மற்ற தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களோடு ஒப்பிடும் போது குழந்தைபிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உடல்எடை குறைவு சீக்கிரம் ஏற்படுகிறது. உடல் எடை குறைவது தாய்ப்பால் கொடுக்கும் தாயின் மன அழுத்தத்தையும் மற்றும் பிள்ளைபேருக்குப்பின் ஏற்படும் உதிரப்போக்கையும் குறைக்க உதவுகிறது.
குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் கொடுப்பதினால் பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகிறது என நம்பப்படுகிறது. நீண்ட நாட்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது மேற்க்கூறிய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு.
தாய்ப்பால் கொடுப்பது வசதியானது, இலவசமானது (மிகவும் முறைப்படுத்தப்பட்ட, பாட்டில் உணவு மற்றும் பிறகுழந்தையின் அத்தியாவசிய தேவையான உயர்வகை உணவகளுடன் ஒப்பிடும் போது ) மற்றும் தாய்ப்பால் எல்லாவற்றிலும் சிறந்தது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்சேய் உறவில் நல்ல இணக்கத்தை ஏற்பட உதவிசெய்கிறது. தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் அந்த அணைப்பு பிள்ளைக்கு மிகவும் ஆறுதலையும் தேறுதலையும் ஏற்படுத்தும் ஒரு சிறந்த வழி.
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Empty Re: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

Post by mohan-தாஸ் Fri Mar 18, 2011 2:36 am

எவ்வளவு காலம் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்?

பிரத்தியோகமாக முதல் ஆறுமாதங்கள் தாய்பால் கொடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தாய்ப்பால் தருவதை தொடரலாம்.
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Empty Re: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

Post by தாமு Fri Mar 18, 2011 10:57 am

நன்றி தாஸ் மிகவும் உபயோகமான தகவல் [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Empty Re: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

Post by கலைவேந்தன் Fri Mar 18, 2011 1:23 pm

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன் .. பயனுள்ள தகவல்களை வழங்கிய தாஸுக்கு மிக்க நன்றி..! நன்றி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க Empty Re: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை