புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
79 Posts - 68%
heezulia
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
1 Post - 1%
nahoor
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
133 Posts - 75%
heezulia
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
8 Posts - 4%
prajai
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
1 Post - 1%
nahoor
உலகப் போர்கள் Poll_c10உலகப் போர்கள் Poll_m10உலகப் போர்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் போர்கள்


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:10 am

முதல் உலகப்போர்


இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சி இரண்டாம் உலகப் போர். உலக நாடுகள், இரு பிரிவாகப் பிரிந்து 1939 முதல் 1945 வரை போர் புரிந்தன. இந்தப் போரில், ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டு, லட்சக் கணக்கான மக்கள் மாண்டனர். இரண்டாம் உலகப் போரைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், முதல் உலகப்போரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இரண்டு போர்களுக்கும் தொடர்பு உண்டு.


முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில்தான் பயன்படுத்தப் பட்டன. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியா வுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன.

செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா, ஆகியவை போரில் ஈடுபட்டன. 1914 ஆகஸ்ட் 4ந்தேதி முதலாம் உலகப்போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது. கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:10 am

இரு தரப்பினருக்கும் இடையே தரையிலும், கடலிலும் பயங்கரப் போர்கள் நடந்தன. நீர் மூழ்கிக் கப்பல்களையும், போர் விமானங்களையும் ஜெர்மனி அதிக அளவில் பயன்படுத்தி, நேச நாடுகளுக்கு கடும் சேதத்தை உண்டாக்கியது. நேச நாடுகள் டாங்கிப் படைகளை அதிகமாகப் பயன்படுத்தின. போர் நடந்து கொண்டிருந்த போதே, ரஷியாவில், புரட்சி மூண்டு, லெனின் தலைமையில் உலகின் முதலாவது கம்žனிச அரசு உதயமாகியது.

1917ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு போரில் இருந்து விலகிக் கொண்டது. இந்தப் போரில், ஜெர்மனி படைகள் விஷ வாயுவை பயன்படுத்தின. போர்க்களத்திற்கு வரும் ஜெர்மனி வீரர்கள் முகமூடி அணிந்திருப்பார்கள்.


அவர்களுக்குப் பின்னால் குதிரை வண்டிகளில் விஷப் புகை நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வரும். எதிரிப்படைகளை நெருங்கியதும், சிலிண்டர்களின் வாய் உடைக்கப்படும். அவற்றிலிருந்து விஷ வாயு வெளியேறும். அதைச் சுவாசிக்கும் எதிரிப் படையினர் மயங்கி விழுந்து மரணம் அடைவார்கள்.

போரில் விஷப்புகையைப் பயன்படுத்தக்கூடாது என்று எல்லா நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்தன. ஆனால் அதை மீறி ஜெர்மனி விஷப் புகையை பயன்படுத்தியது. ஆரம்பத்தில் ஜெர்மனிக்கு வெற்றிகள் கிடைத்தன. முடிவில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் படைகளும் ஜெர்மனியை நோக்கி விரைந்தன. இதன் காரணமாக ஜெர்மனி மக்கள் பீதி அடைந்து மன்னர் கெய்சருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:10 am

மக்களை அடக்க, ராணுவத்தை கெய்சர் ஏவினார். உலகப்போரில் ஈடுபட்டிருந்த ஜெர்மனி படைகள், சொந்த மக்களைச் சுட்டுக் கொல்லும் நிலை ஏற்பட்டது. நேச நாடுகளின் படைகள், ஜெர்மனி தலைநகரான பெர்லின் நகருக்குள் 1918 நவம்பர் 11-ந்தேதி Žழைந்தன. இந்தப் பெரும் படைகளின் தாக்குதலை, ஜெர்மனி படைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் ஜெர்மனி சரண் அடைந்தது. ஜெர்மனி மன்னர் கெய்சர் முடிதுறந்தார்.



ஆட்சியை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். சேதம் 1,561 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரில் 2 கோடிப்பேர் மாண்டனர். யுத்தம் முடிந்த பிறகு உலகம் முழுவதும் பரவிய விஷக் காய்ச்சலால் 2 கோடி மக்கள் உயிர் இழந்தார்கள். 40 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் நாசம் அடைந்தன. போரில் ஈடுபட்ட நாடுகள் இடையே 1919 ஜுன் 28ந் தேதி ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி படை திரட்டும் உரிமையை ஜெர்மனி இழந்தது. போரில் பங்கு கொண்ட நேச நாடுகளுக்கு ஜெர்மனி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும் முடிவாயிற்று.

ஜெர்மனியின் வளமான பகுதிகள் சிலவற்றை பிரான்ஸ் கைப்பற்றிக் கொண்டது. சிதறியது ஆஸ்திரியா நாடு, பல்வேறு இன மக்களைக் கொண்ட நாடாகும். போருக்குப்பிறகு, ஆஸ்திரியா நாடு துண்டு துண்டாகச் சிதறியது. ïகோஸ்லேவியா, போலந்து, செக்கசு லோவக்கியா ஆகிய புதிய நாடுகள் உதயமாயின. மீண்டும் இதுபோன்ற உலக யுத்தம் மூளக்கூடாது என்று உலக நாடுகள் கருதின. அதற்காக "சர்வதேச சங்கம்" ஒன்று நிறுவப்பட்டது. இதில் பல நாடுகள் சேர்ந்தன. ஆனால் சங்கத்தை அமைக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட அமெரிக்கா சேர வில்லை.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:12 am

இரண்டாம் உலகப்போர் (வெற்றிப்பாதையில் ஹிட்லர் )

போலந்தை பிடித்துக் கொண்ட ஜெர்மனியுடன் போர் தொடுக்க இங்கிலாந்தும், பிரான்சும் முடிவு செய்து அதற்கான போர் பிரகடனத்தை 1939 செப்டம்பர் 6-ந்தேதி வெளியிட்டன. "போலந்தை விட்டு ஜெர்மனி ராணுவம் உடனே வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்" என்று இறுதி எச்சரிக்கை விடுத்தன. இதை ஹிட்லர் பொருட்படுத்தவில்லை. இங்கிலாந்தையும், பிரான்சையும் தாக்கும்படி தன் படைகளுக்கு கட்டளையிட்டார். அந்த நிமிடம் வரை இது உலக யுத்தமாக மாறும் என்று யாரும் நினைக்கவில்லை. ஹிட்லர் தன் தளபதிகளிடம் பேசும்போது "இந்த யுத்தம் ஐரோப்பாவுடன் நின்று விடும். முதல் உலகப் போரைப் போல, உலகம் முழுவதும் பரவாது" என்று கூறியிருந்தார். ஆனால் இங்கிலாந்தும், பிரான்சும் போரில் குதித்ததும் அது உலக யுத்தமாக மாறியது.


ஹிட்லரின் கட்டளைப்படி இங்கிலாந்தையும், பிரான்சையும் தாக்க ஜெர்மனியின் முப்படைகளும் துரிதமாக செயல்பட்டன. அக்டோபர் 14-ந்தேதிஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் பிரிட்டிஷ் கடற்படையினரின் கட்டுக்காவலையும் மீறி, இங்கிலாந்தின் மிக பிரமாண்டமான போர்க்கப்பலை (பெயர்: "ராயல் ஓக்") தாக்கி மூழ்கடித்தது. இதனால் கப்பலில் இருந்த 800 மாலுமிகள் பலியானார்கள்.

இது இங்கிலாந்தை அதிர்ச்சி அடையச் செய்தது. இங்கிலாந்துக்கு சேதம் உண்டாக்கிவிட்ட மகிழ்ச்சியில் பின்லாந்து மீது படையெடுத்தார்ஹிட்லர். ஆரம்பத்தில் பின்லாந்து படைகள் எதிர்த்துப் போரிட்டபோதிலும் பிறகு சரண் அடைந்தன. பின்னர் நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் மீது மின்னல் வேக தாக்குதல் நடத்தி வெகு விரைவில் அந்த இரு நாடுகளையும் கைப்பற்றிக் கொண்டார் ஹிட்லர். பின்னர் சுவீடன், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகியவற்றையும் தாக்கி வெற்றி பெற்றார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:13 am

1940 மே 10-ந்தேதி, பிரான்ஸ் நாட்டின் மீது ஹிட்லர் படையெடுத்தார். பிரிட்டன் படைகள் பிரான்சுக்கு ஆதரவாக அனுப்பப்பட்டன. என்றாலும் ஜெர்மனியின் டாங்கி படைக்கும், விமானப் படைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் பிரிட்டிஷ், பிரெஞ்சு படைகள் திணறின.

பிரான்ஸ் ராணுவத்தில் 51 லட்சம் வீரர்களும், பிரான்சுக்கு ஆதரவாக 7 லட்சம் பிரிட்டிஷ் ராணுவத்தினரும் இருந்த போதிலும் பயனில்லை. ஜெர்மனியின் 4 ஆயிரம் விமானங்கள், பிரான்ஸ் மீது குண்டு மாரி பொழிந்தன. அதே சமயத்தில் ஜெர்மனியின் தரைப்படைகளும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரை நோக்கி முன்னேறின.


மே 27-ந்தேதி டன்கிர்க் துறைமுகத்தில் இங்கிலாந்து மற்றும் நேசப்படைகளைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். அவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க ஜெர்மனி முயற்சி செய்தது. எனினும் சர்ச்சிலின் விïகத்தால் அவர்களில் பெரும்பான்மையோர் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஆயினும் சுமார் 40 ஆயிரம் பேர் ஜெர்மனியிடம் யுத்தக் கைதிகளாகப் பிடிபட்டனர்.

1940 ஜுன் மாத மத்தியில் பாரீஸ் நகரை ஜெர்மனி படைகள் முற்றுகையிட்டன. போரில் பிரான்ஸ் வீரர்கள் 5 லட்சம் பேர் மாண்டார்கள். 10 லட்சம் பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர். "உடனே சரண் அடையாவிட்டால் பாரீஸ் நகரத்தை எரித்துச் சாம்பலாக்குவேன்" என்று கொக்கரித்தார் ஹிட்லர். இதன் காரணமாக, 1940 ஜுன் 14-ந்தேதி ஜெர்மனியிடம் பிரான்ஸ் சரண் அடைந்தது. ஹிட்லர் நேரடியாக பாரீஸ் நகருக்குச் சென்று சரணாகதிப் பத்திரத்தில் பிரெஞ்சு பிரதமரிடமும், ராணுவத் தளபதியிடமும் கையெழுத்து வாங்கினார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:14 am

இரண்டாம் உலகப்போர் (லண்டன் மீது குண்டு வீச்சு )

பிரான்சை கைப்பற்றிக் கொண்ட ஹிட்லர் அடுத்தபடியாக பிரிட்டன் மீது குறிவைத்தார். போர் ஆரம்பமானபோது இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் சேம்பர்லைன். அவர் ஜெர்மனியை "தாஜா" செய்து சமாதானமாகப் போய்விடலாம் என்று நினைத்தார். அதன் விளைவாக போர் நடவடிக்கைகளை சரியாக எடுக்கவில்லை. பிரிட்டனை ஹிட்லர் தாக்கியபோது அதை இங்கிலாந்து ராணுவம் சமாளிக்க முடியவில்லை.

இதனால் பிரதமர் சேம்பர்லைன் மீது இங்கிலாந்து மக்கள் சீற்றம் கொண்டனர். பதவியை விட்டு விலகும்படி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் பதவியை சேம்பர் லைன் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக சர்ச்சில் பிரதமரானார். இங்கிலாந்துக்கு ஹிட்லர் "இறுதி எச்சரிக்கை" விடுத்தார். "நீங்களாக சரண் அடைந்து விடுங்கள். இல்லா விட்டால்பிரிட்டனை தரைமட்டம் ஆக்கிவிடுவேன்" என்று கொக்கரித்தார்.


சர்ச்சில் மிகப்பெரிய ராஜ தந்திரி. போர்ப்பயிற்சி பெற்றவர். இரும்பு போல உறுதியானவர். அவர் சுருட்டைப் பிடித்தபடி சிரித்துக் கொண்டே சொன்னார்: "சரண் அடையும்படி யாரைப்பார்த்து சொல்கிறாய்? உன் மிரட்டலுக்கு எல்லாம் இங்கிலாந்து மக்கள் பயந்து விடமாட்டார்கள். உன்னால் முடிந்ததைச் செய்!" சர்ச்சில் இவ்வாறு கூறியதைக்கேட்டு அடங்காத கோபம் கொண்டார், ஹிட்லர்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:17 am

1940 ஜுலை 10-ந்தேதி தனது விமானப்படையைப் பிரிட்டன் மீது ஏவிவிட்டார். ஜெர்மன் போர் விமானங்கள், அணி அணியாகப் பறந்து சென்று பிரிட்டன் மீது குண்டுமாரி பொழிந்தன. ஜுலை 28-ந்தேதிக்குள் 7,500 தடவை விமானத்தாக்குதல் நடந்தது. லண்டன் மாநகரத்தின் மீதும் குண்டு வீச்சு நடந்தது. இதில், ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

இங்கிலாந்து அரண்மனை ("பக்கிங்காம் பாலஸ்"), பாராளுமன்ற கட்டிடம் ஆகியவையும் விமானத்தாக்குதலுக்கு தப்ப முடியவில்லை. அவை பலத்த சேதம் அடைந்தன. பிரிட்டிஷ் விமானப்படை எதிர்த்தாக்குதல் நடத்தியது. 575 ஜெர்மனி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. பிரிட்டன் இழந்தது 100 விமானங்கள் மட்டுமே. நவம்பர் 14-ந்தேதி லண்டன் மீது மிகப்பெரிய தாக்குதலை ஜெர்மனி நடத்தியது. 500 போர் விமானங்கள் லண்டன் மீது பறந்து குண்டுமாரி பொழிந்தன. இதனால், புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயம் உள்பட சுமார் 60 ஆயிரம் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. 586 பேர் பலியானார்கள்.


ஜெர்மனி விமானங்கள் வரிசை வரிசையாக வந்து சரமாரியாக குண்டு வீசியபோது, "நெருப்பு மழை" பெய்தது போல இருந்ததாக அந்த சம்பவத்தை நேரில்பார்த்தவர்கள் கூறினார்கள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:17 am

ஜெர்மனி இவ்வாறு இடைவிடாமல் தாக்குதல் நடத்தியபோதும், இங்கிலாந்து மக்கள் மனம் தளர்ந்து விடவில்லை. மலைபோல் நிமிர்ந்து நின்றார்கள்.

பிரதமர் சர்ச்சில் பின்னால் மக்கள் ஓரணியில் நின்று அவர் கரத்தை பலப்படுத்தினார்கள். பிரிட்டனை சுலபமாக சரண் அடையச் செய்ய முடியும் என்று நினைத்த ஹிட்லர் ஏமாற்றம் அடைந்தார்.

அவருக்கு கோபம் அதிகமாகியது. இங்கிலாந்து மீது விமானத் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு, ரஷியா மீது தன் பார்வையைத் திருப்பினார்.

"ரஷியாவைப் பிடித்துவிட்டால்பிரிட்டன் தானாகப் பணிந்து விடும்" என்று நினைத்தார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:20 am

இரண்டாம் உலகப்போர் (ரஷ்யா நடத்திய வீரப்போர் )

முதல் உலகப்போரின்போது ஜெர்மனியிடம் தோற்றுப் போன ரஷியா அதனுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. ஆனால் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு 1941 ஜுன் 22-ந்தேதி ரஷியா மீது படையெடுத்தார், ஹிட்லர். இரண்டாம் உலகப்போரில் ரஷியா மீது ஹிட்லர் படையெடுத்தது முக்கியமான கட்டமாகும்.

ரஷியாவுக்கு ஹிட்லரால் பெரும் உயிர்ச்சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்த முடிந்ததே தவிர, வெற்றி பெறமுடியவில்லை. "இரும்பு மனிதர்" ஸ்டாலின் தலைமையில் ரஷிய மக்கள் விஸ்வரூபம் எடுத்து ஹிட்லருக்கு சரியான பதிலடி கொடுத்தனர். அது போரின் போக்கையே மாற்றியது. உலகின் பல்வேறு நாடுகளிலும் போர் பரவிக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஜெர்மனிக்கும், ரஷியாவுக்கும் இடையேயான போர் 1941 ஜுன் மாதம் தொடங்கி, 1943 ஜனவரி வரை நடந்தது. 1941 ஜுன் 22-ந்தேதி அதிகாலை நேரம். ஜெர்மனி விமானங்கள் சாரி சாரியாகப் பறந்து ரஷிய நகரங்கள் மீது குண்டு வீசின. அதே சமயம், 1,000 மைல் நீள எல்லையைத் தாண்டி, ரஷியாவுக்குள் ஜெர்மனி ராணுவம் புகுந்தது. என்றைக்காவது ஒருநாள் ரஷியா மீது ஜெர்மனி படையெடுக்கக்கூடும் என்று ஸ்டாலின் ஏற்கனவே எதிர் பார்த்தார்.

ரகசிய ஒற்றர்கள் மூலம் அவருக்கு இது பற்றிய தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இவ்வளவு பெரிய அளவில் ஹிட்லர் தாக்குதல் நடத்துவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய மூன்றிலும் ஜெர்மனியைவிட ரஷியாவின் கையே ஓங்கியிருந்தது. எனினும் ரஷிய விமானங்கள் மிகப்பழையவை. ஆயுதங்களும் பெரும்பாலும் உபயோக மற்றவை.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:20 am

எனவே நவீன விமானங்களைக் கொண்டு ஜெர்மனி நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல், ரஷியா திணற வேண்டியிருந்தது. ரஷியாவின் போக்குவரத்து பாதைகளை ஜெர்மனி ராணுவம் துண்டித்துவிட்டு முன்னேறியது. ஆகஸ்டு மாத இறுதிக்குள் ரஷியா இழந்த விமானங்கள் எண்ணிக்கை சுமார் 5,000. நாள் ஒன்றுக்கு 50 மைல் வீதம் ஜெர்மனி படைகள் முன்னேறிக்கொண்டிருந்தன.

ரஷியா பதிலடி கொடுத்த போதிலும், போரில் ரஷிய வீரர்கள் ஏராளமாக பலியாகிக் கொண்டிருந்தனர். 1941 செப்டம்பர் 8-ந்தேதி ரஷியாவின் முக்கிய நகரமான லெனின்கிராடை ஜெர்மனி படைகள் முற்றுகையிட்டன. ஜெர்மனியின் மற்றொரு படை, மாஸ்கோவுக்கு 250 மைல் தூரத்தில் இருந்தது. ஏறத்தாழ, ரஷியாவின் பாதிப் பகுதியை ஹிட்லரின் படைகள் கைப்பற்றிக் கொண்டு விட்டன. 0

எனினும் ரஷிய எல்லை 1,000 மைல் களுக்கு மேலாக விரிந்து பரந்து இருந்த காரணத்தால், கைப்பற்றிய பகுதிகளில் ஜெர்மனி படைகள் வேரூன்ற முடியவில்லை. ரஷியப் புரட்சி நாளான நவம்பர் 7-ந்தேதிக்குள் மாஸ்கோவை கைப்பற்றி விட வேண்டும் என்பது ஹிட்லரின் திட்டம். அக்டோபர் 14-ந்தேதி மாஸ்கோவை ஜெர்மனி படைகள் நெருங்கி விட்டன.

Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக