புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை சாம்பார்... Poll_c1030 வகை சாம்பார்... Poll_m1030 வகை சாம்பார்... Poll_c10 
85 Posts - 79%
heezulia
30 வகை சாம்பார்... Poll_c1030 வகை சாம்பார்... Poll_m1030 வகை சாம்பார்... Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
30 வகை சாம்பார்... Poll_c1030 வகை சாம்பார்... Poll_m1030 வகை சாம்பார்... Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
30 வகை சாம்பார்... Poll_c1030 வகை சாம்பார்... Poll_m1030 வகை சாம்பார்... Poll_c10 
4 Posts - 4%
Guna.D
30 வகை சாம்பார்... Poll_c1030 வகை சாம்பார்... Poll_m1030 வகை சாம்பார்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை சாம்பார்... Poll_c1030 வகை சாம்பார்... Poll_m1030 வகை சாம்பார்... Poll_c10 
250 Posts - 77%
heezulia
30 வகை சாம்பார்... Poll_c1030 வகை சாம்பார்... Poll_m1030 வகை சாம்பார்... Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
30 வகை சாம்பார்... Poll_c1030 வகை சாம்பார்... Poll_m1030 வகை சாம்பார்... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
30 வகை சாம்பார்... Poll_c1030 வகை சாம்பார்... Poll_m1030 வகை சாம்பார்... Poll_c10 
8 Posts - 2%
prajai
30 வகை சாம்பார்... Poll_c1030 வகை சாம்பார்... Poll_m1030 வகை சாம்பார்... Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
30 வகை சாம்பார்... Poll_c1030 வகை சாம்பார்... Poll_m1030 வகை சாம்பார்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
30 வகை சாம்பார்... Poll_c1030 வகை சாம்பார்... Poll_m1030 வகை சாம்பார்... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
30 வகை சாம்பார்... Poll_c1030 வகை சாம்பார்... Poll_m1030 வகை சாம்பார்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
30 வகை சாம்பார்... Poll_c1030 வகை சாம்பார்... Poll_m1030 வகை சாம்பார்... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
30 வகை சாம்பார்... Poll_c1030 வகை சாம்பார்... Poll_m1030 வகை சாம்பார்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை சாம்பார்...


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 8:34 pm

30 வகை சாம்பார்

கேரளா முதல் இலங்கை வரை....
டிபன், சாப்பாடு, ஸ்நாக்ஸ், டின்னர் என எதுவாக இருந்தாலும், ஜோடி சேர்ந்துக் கலக்குவதில்... சாம்பாருக்கு இணை இல்லை! ச்சும்மா... சப்புக் கொட்டிக்கிட்டே சாப்பிடலாம்!

வெங்காயம் முதல் பீட்ரூட் வரை... கேரளா முதல் இலங்கை வரை... என்று வெரைட்டியான சாம்பார்களைத் தேடிப்பிடித்து... இங்கே மணக்க மணக்க பரிமாறும் சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார், ''வாசனையா மட்டும் இருந்தா போதாது... ருசியாவும் இருக்கணும். அப்பதான் அது சாம்பார்! பருப்பை வேக வைக்கறதுக்கு முன்ன, 15 நிமிஷம் ஊற வெச்சா, சீக்கிரம் வெந்துடும். சீரகம், வெந்தயம், பெருங்காயம் இதையெல்லாம் கூடவே சேர்த்து வேக வெச்சா... மறுநாள் வரைகூட சாம்பார் கெட்டுப் போகாம இருக்கும்.

சாம்பாருக்குனு ஸ்பெஷலா வறுத்து அரைச்ச பொடி, இல்லைனா விழுதுதைச் சேர்க்கறது நல்லது. அப்பத்தான் ரொம்ப நேரம் கொதிக்க விடவேண்டிய அவசியம் இருக்காது. கடைசியா, கொத்தமல்லி தூவி இறக்கி, அப்படியே மூடி வெச்சுட்டா... வாசனை மூக்கைத் துளைக்கும்'’ என்று டிப்ஸ்களைத் தந்து ஆவலைத் தூண்டுகிறார்!

பிறகென்ன... 'சபாஷ்... சரியான சாம்பார்' என்று உங்கள் வீடே உச்சிமுகர்ந்து வாழ்த்தும் அளவுக்கு... ஜமாயுங்கள்!

தூள் சாம்பார் - இலங்கை ஸ்பெஷல்

தேவையானவை: நறுக்கிய காய்கறிக் கலவை - ஒரு கப் (100 கிராம்), துவரம்பருப்பு (அல்லது) மசூர் பருப்பு - 100 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, கீறிய பச்சை மிளகாய் - 2, தேங்காய்ப் பால் - 4 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - 10, நெய், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். இன்னொரு பாத்திரத்தில் காய்கறிகளுடன் பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, அரைத்த சாம்பார் பொடி, வெந்த பருப்பை சேர்க்கவும். பச்சை வாசனை போனதும். தேங்காய்ப் பால், தட்டிய பூண்டுப்பல் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவற்றை, நெய்யில் தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சாம்பார் பொடி தயாரிக்கும் முறை: காய்ந்த சிவப்பு மிளகாய் - 12, தனியா - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், விரலி மஞ்சள் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு (வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்).

இடி சாம்பார் - நெல்லை ஸ்பெஷல்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், கத்திரிக்காய் - 2, முருங்கைக்காய் - பாதி அளவு, சிறிய மாங்காய் - 1 (சீவிக் கொள்ளவும்), சின்ன வெங்காயம் - 10, புளி - கொட்டைப்பாக்கு அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - முக்கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



வறுத்து அரைக்க: வெந்தயம், உளுத்தம்பருப்பு, சீரகம், தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2 (சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும்).

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, வெந்தயம் - சிறிதளவு.

செய்முறை: துவரம்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வேகவிடவும். தனியாக ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை வேகவிட்டு, பாதி வெந்ததும் வெங்காயம், மாங்காய், சாம்பார் பொடி, புளிக் கரைசல் சேர்த்துக் கொதிக்க விட்டு, வெந்த பருப்பை சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். வறுத்து அரைத்த பொடியை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

கமகமவென மணக்கும் இந்த ஸ்பெஷல் சாம்பார். அந்த காலத்தில் உரலில் இடித்துப் பொடித்ததால், 'இடி சாம்பார்’ என்று பெயர் வந்தது. இதை 'மாப்பிள்ளை சாம்பார்’ என்றும் கூறுவர்.

பாசிப்பருப்பு - கொத்தமல்லி சாம்பார்

தேவையானவை: பாசிப்பருப்பு - 100 கிராம், தக்காளி - 2, கீறிய பச்சை மிளகாய் - 6, சின்ன வெங்காயம் - 20, இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி - அரை கட்டு, மஞ்சள்தூள் - முக்கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: பாசிப்பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். கொத்தமல்லி, தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து... சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கலக்கி, கொத்தமல்லி சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.

இட்லி, தோசைக்கு ஏற்ற சாம்பார் இது.

வெந்தயக் கீரை சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், வெந்தயக் கீரை - ஒரு கட்டு, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 2 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்.



செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். கடாயில் நெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்து... சின்ன வெங்காயம், பூண்டு, கீரை சேர்த்து வதக்கவும். கூடவே புளியைக் கரைத்து ஊற்றி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, வெந்த பருப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போய், கொதித்து வரும்போது இறக்கவும்.

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய சாம்பார் இது.

பாசிப்பருப்பு சாம்பார்

தேவையானவை: பாசிப்பருப்பு - 100 கிராம், முருங்கைக்காய், கத்திரிக்காய் - தலா 1, சின்ன வெங்காயம் - 10, புளி - எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - முக்கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: பாசிப்பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்து... நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய், சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். வெந்த பருப்பை காயுடன் சேர்த்து வேகவிடவும். கூடவே சாம்பார் பொடி, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி... கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்க்கவும்.

சின்ன வெங்காய சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், சின்ன வெங்காயம் - 25 முதல் 30, புளி - எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - முக்கால் டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: துவரம்பருப்புடன் சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி... சாம்பார் பொடி, புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்க விடவும். உப்பு, வேக வைத்த பருப்பை சேர்த்து, மேலும் கொதிக்க விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துச் சேர்த்து இறக்கவும். கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

இட்லி, தோசை, சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சாம்பார் இது. வெந்தயம், சீரகம், தனியா சம அளவு எடுத்து வறுத்து அரைத்து சேர்த்தால், சாம்பார் வாசனை ஊரைத் தூக்கும்.

பச்சை மிளகாய் சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், சின்ன வெங்காயம் - 10, கத்திரிக்காய், தக்காளி - தலா 1, பச்சை மிளகாய் - 5 முதல் 6, புளி - நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: துவரம்பருப்பை தனியே வேக வைக்கவும். சிறிது எண்ணெயில் சின்ன வெங்காயம், நறுக்கிய கத்திரிக்காய், நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து புளியைக் கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து வரும்போது வெந்த பருப்பை சேர்த்துக் கலக்கவும். சிறிது எண்ணெயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்த்து இறக்கி, கொத்தமல்லி தூவவும்.

விருப்பப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், முக்கால் டீஸ்பூன் சீரகத்தை ஒன்றிரண்டாக தட்டிச் சேர்க்கலாம்.

வல்லாரைக் கீரை சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், வல்லாரைக்கீரை - ஒரு கட்டு, சீரகம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், நறுக்கிய தக்காளி - 1, சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, நெய் - 2 டீஸ்பூன், பூண்டு - 4 பல், உப்பு - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை: கீரையை நன்றாக ஆய்ந்து சுத்தம் செய்யவும். துவரம்பருப்பில் மஞ்சள்தூள், சீரகம் சேர்த்து வேகவிடவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்து... சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, கீரை சேர்த்து வதக்கி, அரிசி கழுவிய நீரை விட்டு வேகவிடவும். உப்பு, சாம்பார் பொடி, வேக வைத்த பருப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

ஞாபகசக்தியை அதிகரிக்கக்கூடியது வல்லாரை. அரிசி கழுவிய நீரில் சமைப்பதால் கீரையின் துவர்ப்பு மற்றும் கசப்பு தெரியாது.

தக்காளி சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், பழுத்த தக்காளி - 5, சின்ன வெங்காயம் - 10, சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்.



செய்முறை: மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகம் சேர்த்து துவரம்பருப்பை வேகவிடவும். தக்காளியைத் தனியாக வேக வைத்து, வெந்த பருப்புடன் சேர்த்து மசிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்து... சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, பருப்பை சேர்த்துக் கலக்கவும். உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிட்டு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு ஏற்றது.

வெண்பூசணி சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், பூசணி - ஒரு கீற்று, கீறிய பச்சை மிளகாய் - 2, சீரகம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள், வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 6, புளி - கொட்டைப்பாக்கு அளவு, தக்காளி - 1, கொத்தமல்லி, தேங்காய் துருவல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.



செய்முறை: துவரம்பருப்புடன் சீரகம், வெந்தயம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் மற்றும் தக்காளியைச் சேர்த்து வேக வைத்து, மசிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளித்து... சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், நுறுக்கிய பூசணி சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து, காய் வெந்ததும் புளியைக் கரைத்து ஊற்றி, வெந்த பருப்பு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இறக்கி வைக்கும்போது நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து, பிறகு பரிமாறவும்.



பரங்கிக்காய் சாம்பார் - கோவைஸ்பெஷல்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், பரங்கிக்காய் - ஒரு கீற்று, தக்காளி - 1, சின்ன வெங்காயம் - 10, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - 6, தனியா - ஒரு டீஸ்பூன், கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன் (சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும்).

அரைக்க: தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: துவரம்பருப்பை வேக வைக்கவும். பரங்கிக்காய், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து... பரங்கிக்காய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வெந்த பருப்பு, வறுத்து அரைத்த பொடி ஆகியவற்றை அதில் சேர்த்து வேகவிடவும். இதில், புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதித்ததும் இறக்கி... அரைத்த தேங்காய் விழுது சேர்த்து மேலும் ஒருமுறை கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

அரைத்துவிட்ட சாம்பார் -இலங்கை ஸ்பெஷல்

தேவையானவை: கத்திரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, சௌசௌ, நூல்கோல் கலவை - ஒரு பெரிய கப் (150 கிராம்), புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் (அ) நெய், உப்பு - தேவையான அளவு.



வறுத்து அரைக்க: துவரம்பருப்பு (அ) பாசிப்பருப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூன். காய்ந்த மிளகாய் - 4, தனியா - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன் (எல்லாவற்றையும் சிறிது எண்ணெயில் லேசாக வறுத்து அரைக்கவும்).

தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: காய்கறிகளை நறுக்கி வேகவிடவும். பாதி வெந்ததும் வறுத்து அரைத்த கலவையைத் தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி... பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளித்து, சாம்பாரில் சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால் 2 பல் பூண்டு தட்டிப் போடலாம்.

மோர் சாம்பார் - இலங்கை ஸ்பெஷல்

தேவையானவை: துவரம்பருப்பு, கத்திரிக்காய் - தலா 100 கிராம், கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், தயிர் - ஒரு கப் (100 மில்லி), அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பச்சை மிளகாய் - 5, தேங்காய்ப் பால் - 4 டேபிள்ஸ்பூன், தட்டிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கத்திரிக்காயை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து... கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கத்திரிக்காயைப் போட்டு நன்கு வேகும் வரை வதக்கவும். பிறகு, வேக வைத்த பருப்பு, தயிர், உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்து, சிறிது தண்ணீரில் அரிசி மாவைக் கரைத்து ஊற்றி, கொதித்ததும் இஞ்சியைத் தட்டிப் போட்டு இறக்கவும்.

பீட்ரூட் சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், பீட்ரூட், தக்காளி, பெரிய வெங்காயம் - தலா 1, புளிக் கரைசல் - கால் கப் (50 மில்லி), மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒன்றரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, வெந்தயம், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகளைச் சேர்த்து வதக்கி, வேகும்போது புளிக் கரைசல், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்க்கவும். காய்கள் வெந்ததும், வேக வைத்த பருப்பைச் சேர்த்து, கொதிக்க வைக்கவும். இறக்கும்போது நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.

அரைத்துவிட்ட மோர் சாம்பார் - இலங்கை ஸ்பெஷல்

தேவையானவை: தயிர் - ஒரு கப், ஏதேனும் ஒரு காய் (முருங்கை, பூசணி, வெண்டை, கத்திரி) - 100 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, மிளகு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், சீரகம், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன் (இவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து விழுதாக அரைக்கவும்).



தாளிக்க: கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் - 4.

செய்முறை: தயிரைக் கடைந்து மோராக்கி அரிசி மாவு கலந்து வைக்கவும். வறுத்து அரைத்த விழுதை தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். காயைத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து... காய்கறிகளைச் சேர்த்து வேகவிடவும். வறுத்து அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது கரைத்த மோர்க் கலவையைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு, இஞ்சியைத் தட்டிப் போட்டு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

மோர் சாம்பார் - தஞ்சாவூர் ஸ்பெஷல்

தேவையானவை: துவரம்பருப்பு, வெண்பூசணி, தயிர் - தலா 100 கிராம், தக்காளி - 1, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.



வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - 3, தனியா - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் - 2 (சிறிது எண்ணெயில் வறுத்து, தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும்).

செய்முறை: துவரம்பருப்பில் மஞ்சள்தூள், சீரகம் சேர்த்து வேகவிடவும். தயிரைக் கடைந்து கொள்ளவும். தக்காளி, பூசணியைத் துண்டுகளாக நறுக்கி வேகவிடவும். காய் வெந்து வரும்போது உப்பு, வறுத்து அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, வேக வைத்த பருப்பு, கடைந்த தயிர் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கி, லேசான தீயில் மீண்டும் கொதிக்கவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, சாம்பாரில் சேர்த்து இறக்கவும்.

கூட்டுக்காய் சாம்பார் -கேரளா ஸ்பெஷல்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், சேப்பங்கிழங்கு, கத்திரிக்காய், முருங்கை, பூசணி, பீன்ஸ் கலவை - 100 கிராம், தக்காளி - 1, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 4 பல், புளி பேஸ்ட், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: துவரம்பருப்பில் மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயத்தூள், தக்காளி, 2 சின்ன வெங்காயம் சேர்த்து வேகவிட்டு மசித்துக் கொள்ளவும். காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். சிறிது எண்ணெயில் பூண்டு, மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு வதக்கி, காய்கறிகளைச் சேர்த்து வேகவிடவும். இதில் தனியாத்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், சேர்த்துக் கலக்கவும். உப்பு, புளி பேஸ்ட் சேர்த்துக் கொதிக்கவிடவும். காய்கறிகள் வெந்ததும், பருப்புக் கலவையைச் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

கடலைப்பருப்பு சாம்பார்

தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், நறுக்கிய கத்திரிக்காய், முருங்கைக்காய், தக்காளி - ஒரு பெரிய கப் (150 கிராம்), சின்ன வெங்காயம் - 10, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை: கடலைப்பருப்புடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகம், காய்கறிகள் சேர்த்து குக்கரில் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்... காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில், வெந்த பருப்பு, காய்களைச் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலக்கி கொதிக்கவிடவும். கடைசியாக, தேங்காய்ப் பால் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இட்லி சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - 150 கிராம், தக்காளி, கேரட், கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு - தலா 1, பீன்ஸ் - 5, புளி - எலுமிச்சம்பழ அளவு, மஞ்சள்தூள், சீரகம் - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், மிளகு - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 (சிறிது எண்ணெயில் வறுத்துக் அரைத்துக் கொள்ளவும்).

செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். காய்களைச் சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கி, வெங்காயம் சேர்த்து வேகவிடவும். புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து, வெந்த காய்களில் கொட்டி உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய்கள் வெந்ததும்... வெந்த பருப்பு, வறுத்து அரைத்த பொடியைத் தண்ணீரில் கலக்கி சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.

புடலங்காய் சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், சிறிய புடலங்காய், தக்காளி, வெங்காயம் - தலா 1, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், சீரகம், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். புடலங்காயை வட்டமாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், புடலங்காய், தக்காளி சேர்த்து வதக்கி வேகவிடவும். வெந்த பருப்பு, சாம்பார் பொடி, உப்பு ஆகியவற்றை அதில் சேர்த்து, நன்றாகக் கொதித்ததும், தாளிக்கும் பொருட்களை தாளித்துச் சேர்க்கவும். கடைசியாக, கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

பாகற்காய் சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், பாகற்காய் - 100 கிராம், வெல்லம் - சிறிய துண்டு, புளிக் கரைசல் - கால் கப் (50 மில்லி), நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - 7, தனியா, தேங்காய் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் (சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும்).



தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: துவரம்பருப்பை வேக வைக்கவும். பாகற்காயை வட்ட வடிவமாக வெட்டி, அரிசி கழுவிய நீரில் சிறிது ஊற வைத்தால், அதிகம் கசப்பு தெரியாது. புளிக் கரைசலை கொதிக்க வைத்து, நறுக்கிய பாகற்காயை அதில் போட்டு வேகவிடவும். வெந்த பருப்பு, உப்பு, வறுத்து அரைத்த பொடி ஆகியவற்றையும் அதில் சேர்த்துக் கலக்கி, கொதிக்கவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, சாம்பாரில் சேர்க்கவும். கடைசியாக, கொத்தமல்லி, வெல்லம் சேர்த்து இறக்கவும்.

அரைத்துவிட்ட சாம்பார் - நெல்லை ஸ்பெஷல்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், கத்திரிக்காய் (அல்லது) முருங்கைக்காய், தக்காளி - தலா 1, புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, வெந்தயம் - சிறிதளவு, சீரகம் - முக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - முக்கால் டீஸ்பூன், சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 10.

வறுத்து அரைக்க: பூண்டு - 2 பல், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன். (சிறிது எண்ணெயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்).

செய்முறை: துவரம்பருப்பில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகம், வெந்தயம் சேர்த்துக் குழைய வேகவிடவும். கத்திரிக்காய் அல்லது முருங்கைக்காய், தக்களியை நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும். வறுத்து அரைக்க வேண்டியவற்றை அரைத்துக் கொள்ளவும். காய்கறி வேகும்போது, சாம்பார் பொடி, புளி கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு, பச்சை வாசனை போனதும், வெந்த பருப்பு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். வறுத்து அரைத்த கலவையை கடைசியாக சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

சாம்பார் - தஞ்சாவூர் ஸ்பெஷல்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், தக்காளி - 1, சின்ன வெங்காயம் - 10, ஏதேனும் ஒரு காய் - 50 கிராம் (முள்ளங்கி, கத்திரி, வெண்டை, முருங்கை), புளி - எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - முக்கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து குழைய வேகவிடவும். இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு... சின்ன வெங்காயத்துடன், தக்காளி, காய் சேர்த்து வதக்கி வேகவிடவும். காய்கறி வேகும்போது, சாம்பார் பொடி, புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். வெந்த பருப்பை சேர்த்து கொதித்ததும் இறக்கவும். நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

தால்சா

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், தக்காளி, கத்திரிக்காய் - தலா 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, மாங்காய், முருங்கைக்காய் - தலா 1, புளிக் கரைசல் - சிறிதளவு, பெரிய வெங்காயம் - 2, பட்டை, கிராம்பு, ஏலக்காய் அரைத்த விழுது - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தேங்காய் விழுது - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கத்திரிக்காய், தக்காளி, முருங்கைக்காய், மாங்காய் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்தவுடன் புளிக் கரைசல், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது, தேங்காய் விழுது, வெந்த பருப்புகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கொதிக்க விடவும். கடைசியாக, கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவிட்டு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

அனைத்து பிரியாணிக்கும் ஏற்ற சைட் டிஷ் இது! சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

அவரைக்காய் - மாங்காய் சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - 150 கிராம், அவரைக்காய் - 100 கிராம், சிறிய மாங்காய் - 1, சின்ன வெங்காயம் - 10, புளி - எலுமிச்சம்பழ அளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை : துவரம்பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகம் சேர்த்து வேகவிடவும். அவரைக்காயைப் பெரிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து... சின்ன வெங்காயம், நறுக்கிய மாங்காய், அவரைக்காய் சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் விட்டு வேகவிடவும். வெந்ததும் சாம்பார் பொடி, வெந்த பருப்பு, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சேப்பங்கிழங்கு சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், சேப்பங்கிழங்கு - 10, சீரகம்-அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், புளிக் கரைசல் - கால் கப் (50 மில்லி), மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: துவரம்பருப்புடன் மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும், சேப்பங்கிழங்கை தனியே வேக வைத்து, தோல் உரித்து, நீளவாக்கில் நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து... வெங்காயம், கிழங்கு சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும் வெந்த பருப்பையும் சேர்த்து கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சுரைக்காய் சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், சுரைக்காய் துண்டுகள் - ஒரு சிறிய கப் (50 கிராம்), பச்சை மிளகாய் - 4, சின்ன வெங்காயம் - 10, சாம



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை சாம்பார்... 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 05, 2011 9:37 pm

அப்போ குவைத்திற்கு வந்தால் அனைத்து சாம்பாறையும் ருசித்து விடலாம் ,சரிதானே அக்கா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக