புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_m10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10 
90 Posts - 71%
heezulia
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_m10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_m10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_m10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_m10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_m10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_m10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10 
255 Posts - 75%
heezulia
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_m10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_m10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_m10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10 
8 Posts - 2%
prajai
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_m10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_m10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_m10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_m10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_m10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_m10அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகக்கண் திறப்பாள்... காந்தாரி!


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 7:43 pm

சிந்தனை செய் மனமே!
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!
காந்தார தேசத்து மன்னன் சுபலனின் மகள் காந்தாரி. மிதிலை நகரத்துப் புதல்வி மைதிலியைப் போல், காந்தார தேசத்தின் புதல்வியானாள், அவள். தந்தைக்கு மகள் என சுருங்கிவிடாமல், விரிவான தேசத்தின் மகள் என தேசம் காப்பவளாகத் தோற்றமளித்தாள்.

பீஷ்மரின் அறிவுறுத்தலால் திருதராஷ்டிரரை கணவராக ஏற்றாள் காந்தாரி. கணவர் பார்வையில்லாதவர் எனத் தெரிந்ததும், தனக்கும் பார்வை தேவையில்லை எனத் தன் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு, பதிவிரதையின் அறத்துக்கு ஏற்ப வாழ்ந்தாள். இவளின் அளவுக்கு, சிறப்பு கொண்ட பதிவிரதை எவரும் இல்லை.

ஒருமுறை, கடும் பசியுடன் காந்தாரியின் வீட்டுக்கு வந்தார் வியாசர். அவளும் அவரை அன்புடன் உபசரித்தாள். இதில் மகிழ்ந்த வியாசர், ''நூறு குழந்தைகளைப் பெறுவாய்!'' என அருளினார். அதன்படி கருவுற்றவளுக்குப் பேறுகாலம் தாமதமானது. இந்த நிலையில், குந்திதேவி குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த விவரம் அறிந்து கலங்கினாள்; பொறாமைப்பட்டாள். ஆத்திரத்துடன் தனது வயிற்றைத் தானே அடித்துக்கொண்டதில், உள்ளேயிருந்த மாமிசப்பிண்டம் வெளியே வந்தது. அப்போது அங்கே தோன்றிய வியாசர், 101 மடக்கில் நெய் விட்டு நிரப்பினார்; மாமிசப் பிண்டத்தை குளிர்ந்த நீரில் கழுவி, 101 பாகமாகப் பிரித்து, நெய்யிலிட்டுப் பாதுகாத்தார். காலம் கனிந்ததும், அவை 101 குழந்தைகளாக உருப்பெற்றன. முதல் மடக்கில் தோன்றியவன் துரியோதனன்; கடைசி மடக்கில் உருவானவள், துச்சலா (விஞ்ஞானம் அறிமுகம் செய்த டெஸ்ட்டியூப் பேபி, விந்து வங்கி, இன்கு பேட்டர் போன்றவற்றின் முன்னோடி!).

திருதராஷ்டிரரும் பாண்டுவும் வியாசரின் அருளில் தோன்றியவர்கள். குந்தி மற்றும் மாத்ரிக்குப் பிறந்தவர்களும் தேவாம்சம் பொருந்தியவர்கள் (பாண்டவர்கள்). அதாவது, இணைப்பில் பிறக்காமல், அருளில் பிறந்தவர்கள். துரியோ தனன் பிறந்த வேளையில், அபசகுனம் தென்பட... குறிப் பறிந்த அறிஞர்கள், குலத்தை அழிவில் இருந்து காப்பாற்ற, அவனைத் துறக்கும்படி பரிந்துரைத்தனர். ஆனால், கண வனும் மனைவியும், துரியோதனனை இழக்க விரும்பவில்லை. ஆனால், நாம் ஒன்று நினைக்க, தெய்வம் வேறொன்றை நினைக்கும் அல்லவா?! பாரதப் போரில், துரியோதனனுடன் சேர்ந்து, மற்ற மகன்களும் மாண்டனர். ஒரு மகனை இழக்க விரும்பாத மனம், நூறு பேரையும் இழந்த துயரத்தைச் சந்தித்தது. துயரத்தில் மூழ்கியுள்ள பெரியன்னையைச்

சந்திக்கப் பாண்டவர்கள் தயங்கினர். காந்தாரி தங்களைச் சபித்துவிட்டால் என்ன செய்வது என்று பயம்! பிறகு, ஸ்ரீகிருஷ்ணர் அவளைச் சந்திக்க... அவள் சாந்தமானதும் திருதராஷ்டி ரரின் அனுமதியுடன் காந்தாரியைச் சந்தித்தனர். அவர்கள் பயந்தது போலவே, அவளும் ஆத் திரத்துடன் சபிக்க முற்பட்டாள். வியாசர் அவளைச் சமாதானப்படுத்தி, ''கௌரவர்கள் தினமும் உன்னை அடிபணியும்போது, 'அறம் இருக்கும் இடத்தில் வெற்றி உண்டு’ என வாழ்த்தினாய். அதன்படி, அறம் வென்றது. எனவே, சினம் வேண்டாம்'' என்றார்.

''பீமன், அறத்துக்குப் புறம்பாக யுத்தத்தில், தொப்புளுக்குக் கீழே கதையைப் பயன்படுத் தினான். அதை எப்படிப் பொறுப்பது?'' என்று காந்தாரி வினவ, பீமன் மன்னிப்புக் கேட்டான். அத்துடன், சூது விளையாட்டு மற்றும் திரௌ பதியின் வஸ்திராஹரணம் ஆகியவை அறத்துக் குப் புறம்பானவை என வாதிட்டான் பீமன். இதில் கோபமுற்றவள், ''துச்சாதனனின் ரத்தத் தைக் குடித்தாய். உன்னை எப்படி மன்னிப்பது?'' எனக் கத்தினாள். உடனே அவன், ''அவனது ரத்தம் என் பற்களைக் கடந்து உள்ளே செல்ல வில்லை. கைகள் ரத்தத்தில் தோய்ந்திருந்தன. அந்தக் கைகளால், 'அவிழ்ந்த உனது கேசத்தை சேர்த்து வைக்கிறேன்’ என்று சொன்ன வாக்குறு திப்படி, திரௌபதியின் தலையில் ரத்தத்தைப் படியச் செய்தேன்'' என்றான்.

இதன் பிறகு காந்தாரி, தருமரை அழைக்க... 'உங்கள் மைந்தர்களை அழித்தது தவறுதான்; மன்னியுங்கள்’ எனச் சொல்லி, அவளது காலில் விழுந்தார் தருமர். அவளது காலைத் தொட்டதும், தருமரின் கால் நகங்கள் கறுத்துப் போயின. காந்தாரியின் கோபமும் தணிந்தது.

வேதவியாசர், காந்தாரிக்கு திவ்ய திருஷ் டியை அளித்தார். போரில் தோற்றவர்களையும், இறந்தவர்களையும் கண்டு கவலையானாள். சிதையில் எரியும் கணவன்மார்களின் உடல்களை வலம் வந்துகொண்டிருந்த இளவயதுப் பெண்க ளைப் பார்த்ததும், ஸ்ரீகிருஷ்ணரை ஆவேசத்துடன் பார்த்தாள். ''இத்தனைத் துயரங்களுக்கும் நீயே காரணம்! நான் பதிவிரதை என்பது உண்மை யானால், எனது வம்சத்தில் சகோதரர்கள் ஒரு வருக்கொருவர் சண்டையிட்டு மாண்டதுபோல, நீ தோன்றிய யாதவ வம்சத்து சகோதரர்கள் ஒரு வருக்கொருவர் அடித்துக்கொண்டு சாகவேண்டும். நீயும் காட்டில், தனிமையில் மரணத்தைச் சந்திப் பாய்'' எனச் சபித்தாள். ''யுத்தத்தைத் தவிர்த்திருக்க உன்னால் முடியும். ஆனால், குரு வம்சம் அழிவதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் நீ'' என கிருஷ்ணரை நிந்தித்தாள். ஸ்ரீகிருஷ்ணர் பொறுமையுடன், ''தாங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், இவை முன்பே நிச்சயிக்கப்பட்ட விஷயங்கள். நடந்துதான் தீரும்!'' என்றார்.

யாதவன் ஒருவன், பெண் வேடமிட்டுத் தன்னை கர்ப்பவதியாகக் காட்டிக்கொண்டு, முனிவர் ஒருவரிடம், 'எனக்கு எந்தக் குழந்தை பிறக்கும்?’ என்றான். இதை அறியாமல் இருப்பாரா முனிவர்? அவனது விளையாட்டையே வினையாக்கினார். 'நீ உலக்கை ஒன்றைப் பெற் றெடுப்பாய்; அது, உனது குலத்தையே அழிக்கும்’ என்றார். அதன்படி, உலக்கையை ஈன்றெடுத்தான், அவன். அந்த உலக்கையைப் பொடிப் பொடியாக்கி, யமுனையில் கரைத்தனர் யாதவர்கள். அவை அனைத்தும் நாணல் காடாகத் தோன்றி வளர்ந்தன. யமுனைக் கரையில், இருதரப் புக்கும் சண்டை வலுத்தது; அனைத்து யாதவர்களும் ஒன்று திரண்டு, நாணலைப் பிடுங்கி அடித்துக்கொண்டு, மாண்டனர்.

உலக்கையில் இருந்த இரும்புக் காப்பினைப் பயன்படுத்தி, வேடன் ஒருவன் பாணம் உருவாக்கினான். வனத்தில், தனியே மரத்தில் அமர்ந்து, குழலூதும் கண்ணனின் கால்களைப் பறவை என நினைத்து, பாணம் தொடுத்தான். அது ஸ்ரீகிருஷ்ணரின் மறைவுக்குக் காரணமாயிற்று எனும் தகவல் புராணத்தில் உண்டு!

காந்தாரியின் சாபம்... யாதவர்களையும் கண்ணனையும் இறக்கச் செய்தது. பதிவிரதையின் சாபம் பலிக்காமல் போகாது. துளசியின் சாபம் கண்ணனைக் கல்லாக்கியது என்கிறது புராணம். பதிவிரதையரின் சரிதம், பாரதப் பண்பாட்டின் பெருமைக்கு எடுத்துக்காட்டு!

பிறவியில் பார்வையை இழந்தவன், ஒருகட்டத்தில், தினசரி வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடித்துவிடுவான். அவனது துயரமும் மாறி விடும். ஆனால், உலகைப் பார்த்து ரசித்த கண்கள், பார்வையை இழந் தால், தடுமாற்றம் நிகழும்; ஆறாத் துயரமாகிப் போகும். பார்வை இருந்தும், அதைக் கணவரின் நிலை கருதி பயன்படுத்தாமல் இருந்தது, அசாதாரணமான விஷயம். இப்படி, இரண்டு மனங்கள் ஒன்றாவது, தாம்பத்தியத்தின் சிறப்புக்கு அடித்தளம். கணவரைப் பின்பற்றுகிற விஷ யத்தில், தனது துயரத்தை அவள் பொருட்படுத்தவில்லை, பதிவிரதைக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு, காந்தாரி!

திருதராஷ்டிரருடன் இணைந்து மகாபாரதத்துக்கு வித்திட்டவள் காந்தாரி. எங்கே அறம் உள்ளதோ, அங்கே வெற்றி என்பதை நடத்திக் காட்டியவள் அவள்.

இன்றைய தம்பதியரிடம் உள்ள கருத்து வேறுபாடுகள், விபரீதங்களை நிகழ்த்தி வருவதைக் காண்கிறோம். பெற்றோரின் அன்புக்கு ஏங்குகிற குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர் என்பதும் வருத்தத்துக்கு உரிய ஒன்று. பண்பு இருக்குமிடத்தில் இன்பம் பொங்கும்.

எதிரிகளைச் சந்தித்த காந்தாரி, எரிந்து விழாமல், அவர்களையும் அரவணைத்துச் செயல்பட்டாள். அறம் எனும் குறிக்கோளுடன் வாழ்ப வர்கள், தாம் துயரத்தைச் சந்தித்தாலும் பிறரைத் துயரப்படுத்த மாட்டார்கள். துயரத்தின் தாக்கம், கோபத்துக்கு வடிகாலாக மாறினாலும், பிறகு அவர்களையும் அணைத்துக்கொள்கிற பாங்கு, பாரதத்தில் பிறந்த பெண்மணியின் மிகச் சிறந்த குணம்; அந்த நற்குணத்துக்குச்

சொந்தக்காரி, காந்தாரி!

நன்றி விகடன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அகக்கண் திறப்பாள்... காந்தாரி!  47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக