புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_m10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10 
5 Posts - 71%
Manimegala
தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_m10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_m10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_m10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_m10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_m10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10 
11 Posts - 4%
prajai
தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_m10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_m10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_m10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10 
3 Posts - 1%
jairam
தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_m10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_m10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_m10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_m10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனும் சினிமாவும் - எஸ். ராஜாராம்


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Mar 02, 2011 10:53 am




தமிழனையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. ஒரு காலத்தில் ஒரே திரைப்படத்தை திரையரங்குகளில் ஓராண்டு ஓடச்செய்து வரலாற்றில் இடம்பிடித்த பெருமைக்குரியவன் தமிழன்.

ஆனால், அண்மைக்காலமாக தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் அதிகபட்சமாக 30 நாள்களுக்குமேல் ஓடுவதில்லை. என்ன ஆயிற்று? திரைப்படங்களின் தரம் குறைந்துவிட்டதா அல்லது தமிழன் திருந்திவிட்டானா?

திரையரங்குகளில் கட்டணம் அதிகம், புதிய திரைப்படங்கள் வெளிவந்த சில நாள்களிலேயே திருட்டு சி.டி. வெளிவந்துவிடுகிறது எனப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதற்கு பரிகாரமாகத்தானோ என்னவோ திரைப்படங்களை சின்னத்திரையில் ஓடவைக்கிறான் தமிழன்.

தமிழனின் ரசனையை நன்றாகப் புரிந்துவைத்திருக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள் இப்போது திரைப்படங்களை நம்பித்தானே "கல்லா' கட்டுகின்றன.

ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு போன்ற விசேஷ நாள்களில் "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' எத்தனை திரைப்படங்களை சேனல்கள் ஒளிபரப்பின. திரைப்படங்கள் தவிர மற்ற நிகழ்ச்சிகளும் திரைப்படங்களை, திரை நட்சத்திரங்களைச் சார்ந்துதான் இருந்தன. 2010-ம் ஆண்டின் டாப் 20 பாடல்கள், டாப் 20 நகைச்சுவைக் காட்சிகளை (வழக்கமாக டாப் 10 தானே உண்டு) சேனல்கள் ஒளிபரப்பின. நல்லவேளை, டாப் 20 அழுகைக் காட்சிகள், டாப் 20 வசனக் காட்சிகள், டாப் 20 ஆக்ஷன் காட்சிகள், டாப் 20 பஞ்ச் டயலாக் காட்சிகள் என்றெல்லாம் பயமுறுத்தாமல் இதோடு நிறுத்திக் கொண்டனவே.

இதுபோக, நடிகர், நடிகைகளின் பேட்டி, சின்னத்திரை நடிகர்களின் சங்கமம், தமிழ் சினிமா இந்த வாரம், கடந்த வாரம், வரும் வாரம் என சேனல்களும் நடித்துத் தள்ளிவிட்டன.

கடந்த ஆண்டை நினைவுகூர இந்த சினிமாவைவிட்டால் வேறு எதுவுமே இல்லையா?

இந்திய ரூபாய்க்கு அடையாளக் குறியீடு உருவாக்கிய தமிழன் உதயகுமாரிடம் ஒரு பேட்டி எடுத்திருக்கலாம்.

டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடித்து நொறுக்கும் தமிழகத்தின் முரளி விஜய்யுடன் ஒரு நேர்காணல் நடத்தியிருக்கலாம்.

1000-வது ஆண்டு விழா நடைபெற்ற தஞ்சைப் பெரிய கோயில் பற்றி ஒரு நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பி இருக்கலாம். இன்னும், காமன்வெல்த் வில்வித்தையில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்ரீதர், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சந்தோஷ் என சாதனைத் தமிழர்களை நினைவுகூர்வது நல்ல விஷயம் இல்லையா?

ஒருவேளை, ஸ்ரீதர் வில்வித்தை வீரராகவும், முரளி விஜய் கிரிக்கெட் வீரராகவும் சினிமாவில் நடித்திருந்தால் அவர்களது பேட்டி தொலைக்காட்சிகளில் வந்திருக்கக் கூடும்.

ஒரு கதாநாயகன் ஒரு படத்தில் விவசாயியாக நடித்திருந்தால், "விவசாயி கேரக்டரை எப்படி ஸ்டடி செய்தார், அந்த கேரக்டராகவே படத்தில் எப்படி வாழ்ந்திருந்தார் என்று அலசி ஆராய்ந்து நிகழ்ச்சி தயாரிக்கும் சேனல்கள், உண்மையிலேயே விவசாயத்தில் சாதனை படைத்த ஒருவரைத் தேடிப்பிடித்து அவரது சாதனையை எல்லோரும் அறியும்படி செய்வதேயில்லை.

பண்டிகை நாள்களில் ஒளிபரப்பாகும் சிறப்புப் பட்டிமன்றத்தின் பேச்சாளர்கள்கூட இப்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

சினிமா அல்லாத மற்ற சமூகப் பொறுப்புடன் கூடிய நிகழ்ச்சியை சேனல்கள் ஏன் ஒளிபரப்புவதில்லை? சில சேனல்களில் "ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ' என்ற பெயரில் சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. தம்பதியர் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சிகளில் "உங்கள் திருமண தேதி என்ன? யார் முதலில் காதலை வெளிப்படுத்தினீர்கள்? திருமணத்துக்கு முன்பே ஒருவரை ஒருவர் பார்த்திருக்கிறீர்களா, உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகை (இதிலும் சினிமாவை விடுவதாக இல்லை) யார்?'- இவையெல்லாம் உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், அந்த நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் "அறிவுப்பூர்வமான' வினாக்கள். திரையரங்குகளில் மார்னிங் ஷோ, மேட்னி ஷோ, ஈவினிங் ஷோ-க்களைவிட இந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் இந்த ஷோக்களுக்குத்தான் இப்போது மவுசு அதிகம்.

இசைக்கு என்றே தனியாகச் சேனல்கள் வந்துவிட்டதால் அதில் எப்போதும் இசைமழைதான். சொந்தங்களையோ நண்பர்களையோ நேரில் பார்த்தால் இரண்டு நிமிடம் பேச நேரமில்லாத நம் தமிழன், இசைச் சேனல்களின் காம்பியர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு உலகத் தமிழர்களுக்கெல்லாம் வாழ்த்து சொல்லச் சொல்லி, தனக்குப் பிடித்தமான சினிமாப் பாடலை "டெடிகேட்' செய்கிறான்.

ஆக, திரையரங்குகளுக்குச் சென்று சினிமா பார்க்க யாரும் தயாராக இல்லை என வருத்தப்பட வேண்டாம். அதற்குப் பதிலாக, தொலைக்காட்சிகளில் சினிமாவைத் தவிர வேறு எதையும் பார்க்கவும் யாரும் தயாராக இல்லை. இதிலும் ஓர் ஆச்சரிய முரண், நாடகத்தனமான சினிமாக்கள் திரையரங்குகளில் ஓடுவதில்லை.

சினிமாத்தனமான நாடகங்கள் தொலைக்காட்சிகளில் ஓடோ ஓடு என்று ஓடுகின்றன. கவனியுங்கள்... தமிழன் என்றுமே சினிமாவைக் கைவிடமாட்டான்.

தினமணி


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 02, 2011 11:01 am

மக்கள் திருந்தாத வரை இந்த மாதிரி நடந்து கொண்டே இருக்கும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக