புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_m10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10 
100 Posts - 48%
heezulia
கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_m10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_m10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_m10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_m10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10 
7 Posts - 3%
prajai
கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_m10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_m10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_m10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_m10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_m10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_m10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10 
227 Posts - 51%
heezulia
கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_m10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_m10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_m10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_m10கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 25, 2011 5:04 pm

என்.கணேசன் அவ‌ர்க‌ளால் விக‌ட‌னில் எழுத‌ப்ப‌ட்ட‌தை நான் ப‌டித்த‌தும் இது உங்க‌ளுக்கும் இஷ்ட‌மான‌தாக‌ இருக்குமே என்று ப‌கிர்கிறேன் ந‌ண்ப‌ர்க‌ளே....

செல்வதற்கு முன்...

பகவத் கீதைக்கு ஆதிசங்கரர் முதல் எத்தனையோ ஞானிகள் உரை எழுதியிருக்கிறார்கள். எத்தனையோ பண்டிதர்கள் வியாக்கியானம் செய்து இருக்கிறார்கள். ஒரு சாமானியனாக நான் கீதையை இன்றைய கால கட்ட மனிதர்களுக்கு எப்படி வழி காட்டுகிறது என்பதை அதனைப் படித்து ஆழ்ந்து சிந்தித்த ஆர்வத்தால் எழுத முற்படுகிறேன். கீதோபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமல்லாமல் யாரெல்லாம் அதை ஆழ்ந்து படிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் வழிகாட்டக்கூடியது.

மகாத்மா காந்தி அதை மிக அழகாகக் கூறியுள்ளார்: "கீதை சூத்திரங்கள் அடங்கிய நூல் அல்ல. அது கவிதை உருவான மகத்தான நூல். நீங்கள் அதை எந்த அளவுக்கு ஆழ்ந்து பரிசீலனை செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு அதிலிருந்து அற்புதமான அர்த்தங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். காலம் செல்லச் செல்ல அதில் உள்ள முக்கிய வார்த்தைகள் புதிய விரிவான அர்த்தங்களுடன் திகழ்கின்றன... என்னைப் பொறுத்த மட்டில் எனது நடத்தையை உருவாக்கும் தவறாத ஒரு வழிகாட்டியாக கீதை அமைந்தது. அது தினந்தோறும் என் சந்தேகங்களைத் தீர்க்கும் ஓர் அகராதியாக அமைந்தது. எனக்கு கஷ்டங்களும் சோதனைகளும் ஏற்பட்ட போது அதிலிருந்து விடுதலை பெற நான் இந்த அகராதியையே நாடினேன்".
FPRIVATE "TYPE=PICT;ALT="

கீதோபதேசம் அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ உள்ளங்களில் இருள் மண்டிய போதெல்லாம் ஞான விளக்கேற்றி வைத்திருக்கிறது. பண்டிதன் முதல் பாமரன் வரை, அரசன் முதல் அன்றாடங்காய்ச்சி வரை இந்த ஞானாக்னியில் தங்கள் துக்கங்களையும், அறியாமையையும் பொசுக்கி பலனடந்து இருக்கிறார்கள். இன்று நமக்கும் கீதோபதேசம் எவ்வாறு பொருந்துகிறது, கீதையின் ஞானம் எப்படி நமக்கு போக வேண்டிய பாதையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது என்கிற நோக்கையே இந்தத் தொடரில் பிரதானப்படுத்தி இருக்கிறேன்.

எனவே, இதில் கீதையின் முழு உரையையும் அப்படியே தராமல் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் உண்மைகளை அழகாகக் கூறும் அதன் முக்கிய சாராம்சத்தை உதாரணங்களுடனும், விஞ்ஞான உண்மைகளுடனும், மற்ற அறிஞர்கள் கருத்துடனும் இணைத்து விளக்க முற்பட்டுள்ளேன். இது அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.

*

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் அவ்வப்போது தனக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தைக் காண்கிறான். தர்மம்-அதர்மம், நன்மை-தீமை, பலம்-பலவீனம், கட்டுப்பாடு-கிளர்ச்சிகள், அறிவு-அறியாமை, லட்சியம்-அலட்சியம் போன்ற அணிகள் நேரெதிராக நின்று அவனுக்குள்ளே அடிக்கடி போர் புரிந்த வண்ணம் இருக்கின்றன. அவன் அந்தப் போரில் ஒவ்வொரு ஜதையிலும் எதை ஜெயிக்க விடுகிறான் என்பதை வைத்தே அவன் அளக்கப்படுகிறான். அதை வைத்தே அவன் வாழ்க்கையின் தரமும் தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால், அப்படி நடக்கும் போரில் எல்லா சமயங்களிலும் சரியாகத் தீர்மானித்து உறுதியாகச் செயல்படும் தெளிவை மனிதன் பெற்றிருப்பதில்லை. சில சமயங்களில் அவன் தன்னிலை இழந்து குழப்பத்தால் செயலிழந்து விடுகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறான். சில சமயங்களில் தெரிந்தாலும் அதனைச் செயல்படுத்த திறனின்றி தவிக்கின்றான். செயல்பட வேண்டிய நேரத்தில் ஸ்தம்பித்துப் போகிற முட்டாள்தனம் அவனுள் ஏற்பட்டு விடுகிறது. செயலிழந்து நிற்கையில் பிரச்னைகள் பெரிதாக ஆரம்பிக்கின்றன. எதிர்நோக்கி நிற்கும் பிரச்னைகளின் பிரம்மாண்டத்தைப் பார்க்கையில் வாழ்க்கையை முடித்துக் கொள்வது நல்லது என்று கூட சிலர் முடிவு செய்கிறார்கள். சிலர் பேசாமல் சன்னியாசம் வாங்கிக் கொண்டு விலகிக் கொள்வது உத்தமம் என்று நினைக்கிறார்கள்.

அர்ஜுனன் குருக்‌ஷேத்திர பூமியில் இந்த நிலையில் தான் நிற்கிறான். அப்போது அவனுக்கு பகவான் கிருஷ்ணன் செய்யும் உபதேசம் தான் பகவத் கீதை. அந்த உபதேசம் அன்று அர்ஜுனனின் குழப்பத்தைக் களைந்து தெளிவு பெற வைத்து அவனை உறுதியுடனும் வீரத்துடனும் செயல்பட வைத்தது. அவனை வெற்றி பெறவும் வைத்தது. பகவத் கீதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அர்ஜுனனுக்காக சொல்லப்பட்டது என்றாலும், பிற்கால மனிதர்கள் அனைவருக்காகவும், அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு இக்கட்டான கட்டத்திலும் பொருந்தும் படியாக தனித்தனியே சொல்லப்பட்டிருக்கிறது என்று உணரத்தக்க வகையில் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பேருண்மைகளை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் சிறப்புப் பெற்று அமரத்துவம் அடைந்து விட்டது.

முன்பு சொன்னது போல நாம் அனைவருமே சில சமயங்களில் அர்ஜுனன் நிலைக்கு வந்து விடுகிறோம். வாழ்க்கையில் பிரச்னைகள் பூதாகரமாக நம் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கையில் தெளிவாகவும், விரைவாகவும், உறுதியாகவும் செயல்பட வேண்டியிருக்கும் கட்டத்தில் குழப்பம், பயம், துக்கம், செயலின்மை, விரக்தி ஆகியவற்றின் பிடியில் கட்டுண்டு நிற்க நேர்கிறது. எளிய தேவைகள், எளிமையான வாழ்க்கை என்றிருந்த நம் முன்னோர்களை விட அதிகமாக ஏராளமான தேவைகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையை சிக்கலாக்கி வைத்திருக்கும் நாம் அவ்வப்போது அந்த குழப்ப நிலைக்கு வந்து விடுகிறோம். மேற்கொண்டு செல்லும் வழியறியாது தடுமாறி நிற்கிற அது போன்ற தருணங்களில் எல்லாம் அணையா விளக்காக ஒளிரும் கீதை நமக்கு தெளிவான வழியைக் காட்டுகிறது.

ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட மகத்தான இதிகாசமான மகாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் 25 முதல் 42 வரை உள்ள 18 அத்தியாயங்களே பகவத் கீதை. வியாசர் வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் முழு சாராம்சத்தையும் பகவத் கீதையில் தந்துள்ளார். குருட்டு மன்னன் திருதராஷ்டிரன் "தர்மக்‌ஷேத்ரமான குருக்‌ஷேத்திரத்தில்" என்ன நடக்கிறது என்று சஞ்சயனிட்ம் கேட்க, சஞ்சயன் வியாச முனிவரால் அளிக்கப்பட்ட ஞானதிருஷ்டியால் அங்கு நடப்பதை நேரடி ஒளிபரப்பாகக் கண்டு சொல்ல ஆரம்பிக்கிறான். ஆக பகவத்கீதையே தர்மம் என்ற சொல்லில் இருந்து தான் ஆரம்பமாகிறது.

தர்மம் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு இணையான சொல்லை எந்த மொழியிலும் சொல்வது எளிதல்ல. சரி, நியாயம், வள்ளல் தன்மை, கடமை, விதிமுறை என்று பல பொருள்கள் அதற்கு இருக்கின்றன. ஆனால் அந்த பொருள்களில் எதுவுமே தனியாக முழுமையான பொருளைத் தந்து விடுவதில்லை. பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் எப்படி ஒருவன் இருக்க வேண்டுமோ அப்படி இருப்பது தர்மம். அப்படி இருக்கும் வரையில் மனிதன் தானும் அமைதி அடைகிறான், பிறர் அமைதிக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்கிறான். அப்படி இல்லாத போது, அந்த தர்ம நெறியில் இருந்து விலகும் போது மனிதன் தானும் அமைதியிழந்து பிறர்க்கும் தீங்கிழைக்கிறான். எனவே அவரவர் தர்மத்தின் படி ஒவ்வொருவரும் இருப்பார்களேயானால் உலகம் அமைதிப்பூங்காவாகி சிறப்பாக இயங்கி வரும்.

கீதையின் முதல் அத்தியாயமான அர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜுனன் தன் தர்மம் மறக்கிறான். அதுவே அவன் கலக்கத்துக்கும் குழப்பத்துக்கும் காரணமாக அமைகிறது. பாண்டவ, கௌரவ சேனைகளுக்கு மத்தியில் தன் தேரை ஓட்டிச் சென்று நிறுத்தும்படி அர்ஜுனன் சொல்ல பகவான் கிருஷ்ணனும் அப்படியே செய்கிறார். இருபுறமும் அர்ஜுனன் பார்வையைச் செலுத்துகிறான். உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள், குருமார்கள் முதலானோரே இருபக்கமும் இருக்கக் கண்டான். அனைவரும் தன்னுயிரைத் துறக்கவும், பிறர் உயிரைப் பறிக்கவும் தயாராக உறுதியுடன் கூடி இருக்கும் நிலையைப் பார்த்த போது அவனுக்குள்ளே விவரிக்க முடியாத துக்கம் ஏற்பட்டது. இத்தனை பேருக்கு அழிவை ஏற்படுத்தி பெறக்கூடிய வெற்றி வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. அவன் கண்கள் கலங்கின. கையிலிருந்து காண்டீபம் நழுவியது. உடல் நடுங்கியது. போர் புரிய வேண்டாம் என்று முடிவு செய்கிறான்.

கிருஷ்ணனுக்கே அவன் போரின் தீய விளைவுகளை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான். போரினால் குலம் அழியும், அதர்மம் பெருகும், மக்கள் மனம் போன படி நடந்து கொள்ள ஆரம்பிப்பார்கள், விபசாரம் அதிகரிக்கும், பஞ்சம் வரும், பல சமூகப் பிரச்னைகள் தோன்ற ஆரம்பிக்கும் என்றெல்லாம் எடுத்துச் சொன்னான். அவன் சொன்ன எதிலுமே உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அவன் சொல்லாத ஒரு உண்மை அத்தனை பேச்சுக்கும் அடித்தளமாக இருந்தது. அது தன் அன்பிற்குரியவர்கள் மீது அவனுக்கு இருந்த அளவு கடந்த பாசம் தான். அவர்கள் அல்லாமல் வேறு யார் எதிரணியிலிருந்தாலும் அவர்களைக் கொன்று குவிப்பதில் அவனுக்கு எள்ளளவும் வருத்தம் இருந்திராது. அவனுக்கு யுத்தங்கள் புதிதல்ல. அவன் கொன்று குவித்த ஆட்களும் குறைவல்ல. அவனுடைய உடலெல்லாம் வீரம் நிரம்பியே இருந்தது.

அக்ஞாத வாசத்தின் இறுதியில் உத்தரனுக்காக தனியொருவனாக நின்று பீஷ்மர், திரோணர், கிருபர், துரியோதனன், கர்ணன் ஆகியோரை எதிர்கொண்டு வெற்றி பெற்றவன் அவன். ஆனால் இத்தனை நாள் வராத ஞானோதயம் இப்போது அவனுக்கு வரக் காரணம், இந்த மகத்தான யுத்தத்தில் பலருடைய மரணத்தின் மூலம் தான் வெற்றி சாத்தியம் என்பது தான். அப்படி இறக்கப் போகிறவர்கள் அவனுடைய பாசத்துக்கு உரியவர்கள் என்பது தான்.

அசோகனுக்கு கலிங்கப் போரில் ஏற்பட்ட மாற்றம் உண்மையானது. இறந்தவர்கள் அவனது உறவினர்கள் அல்ல. ஆனால் அந்த போரின் அழிவுக் காட்சிகளைப் பார்த்த போது அவன் மனதில் ஏற்பட்ட துக்கமும், போரின் வெற்றி மகிழ்ச்சிக்குப் பதிலாக ஒரு வெறுமையை உணர வைத்ததும் மன ஆழத்திலிருந்து வந்தவை. அதனால் அது அவனுடைய பிற்பகுதி வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றி விட்டது. அர்ஜுனன் மாற்றம் அப்படிப்பட்டதல்ல. கடமையை ஆற்ற வேண்டிய தருணத்தில் பாசமிகு உறவுகளையும், அன்பு வைத்த மனிதர்களையும் கண்ட பின் வந்த தயக்கம் அவனுடையது.
சூதினாலும், சூழ்ச்சியினாலும் கவர்ந்த ராஜ்ஜியத்தை முழுவதும் கொடுக்கா விட்டாலும் ஐந்து கிராமங்களையாவது தருமாறு தர்மபுத்திரன் மிக அதிகமாகத் தாழ்ந்து வந்த போதும் ஊசிமுனை அளவு இடமும் தர மாட்டேன் என்று அகம்பாவத்தோடு மறுத்தவன் துரியோதனன். அவனைப் போன்றவனிடம் அவர்களுடைய ராஜ்ஜியத்தை விட்டு விட்டால் அவன் ஆளும் மக்களுக்கு என்ன நன்மை செய்வான்? அவர்கள் படப்போகும் துன்பங்களுக்கெல்லாம் விட்டுக் கொடுத்த இவர்களே அல்லவா முழுக்காரணமாவார்கள். நல்லாட்சி புரிந்து மக்களைக் காப்பாற்ற வேண்டியவர்கள் சூதினால் ஆட்சியை கொடியவர்களிடம் இழந்தது மட்டுமல்லாமல் திரும்பப் பெறாமல் தத்துவம் பேசி விட்டுக் கொடுப்பது அந்த மக்களுக்கிழைக்கும் தர்மமாகுமா? அதை விடப் பெரிய அதர்மம் என்ன இருக்க முடியும்? தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக லட்சக்கணக்கான மக்களுக்கு அநீதி ஏற்படுத்துவது எந்த விதத்தில் தர்மம்?

மனம் பலவீனமாக இருக்கின்ற நேரத்தில் செயல்பட வேண்டிய மனிதன் செயல்படாமல் இருக்க ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிப்பான். மனித சுபாவத்தில் அன்றும் இன்றும் இது இயல்பே. தன் மனதில் தோன்றிய நல்லவை, கெட்டவை அனைத்தையும் ஒளிவு மறைவின்றி அப்படியே பகவானிடம் கொட்டிய அர்ஜுனன் கடைசியில் தன் குதிரையின் கடிவாளங்களை கிருஷ்ணனிடம் ஒப்படைத்தது போலவே தன் மனதின் கடிவாளத்தையும் அவரிடம் ஒப்படைத்து சரணடைந்தான். "நான் சிறியவன். குறை மிகுந்தவன். தர்மம் எது என்பதை அறியாதவன். என் அறிவு மயங்குகிறது. அதனால் உன்னைக் கேட்கின்றேன். தர்மம் எது என்று எனக்கு உறுதியாகச் சொல். நான் உன் சீடன், உன்னையே நான் சரணடைகின்றேன்."

வாழ்க்கையில் எத்தனையோ குழப்பங்களிலும், பிரச்னைகளிலும் சிக்கி நமக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தை அடிக்கடி கண்டு தவிக்கும் நாமும் அர்ஜுனன் செய்ததையே செய்வோம். நம்முள்ளே அந்தர்மியாய் இறைவன் இருக்கிறார். அவர் அனைத்தும் அறிந்தவர். நம்முடைய பிரச்னைகளையும், சிக்கல்களையும், துக்கங்களையும் அவர் முன் வைத்து வழி காட்ட வேண்டும் என்று வேண்டி சரண் அடைவோம். அவர் கண்டிப்பாக வழி காட்டுவார்!

அர்ஜுனனோடு சேர்ந்து நாமும் ஞானமும் தெளிவும் பெறத் தயாராவோமா?

தொடர்வோம்...

ந‌ன்றி என் க‌ணேச‌ன் (விக‌ட‌ன்)

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் 47
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Jan 25, 2011 5:14 pm

அருமையான பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 25, 2011 5:16 pm

அன்பு நன்றிகள் பூஜிதா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 25, 2011 5:39 pm

நல்ல பதிவு மஞ்சு அக்கா... கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் 677196 கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் 677196 கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் 677196

கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் Power-Star-Srinivasan
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 5:50 pm

பகிர்வுக்கு நன்றி மஞ்சு அக்கா..

கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் 0018-2கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் 0001-3கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் 0010-3கீதை காட்டும் பாதை - நமக்குள் ஒரு குருஷேத்திரம் 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 04, 2011 9:20 am

நானும் இந்த வாழ்க்கைப்போர்க்களத்தில் எதிர்ப்பட்ட துன்பங்கள் என்னும் கௌரவர்களுக்கு முன்னால் மனம் ஒடிந்து கலங்கி நின்ற தனியாள் அர்ஜுனனாக எல்லா நம்பிக்கை ஆயுதங்களையும் கைவிட்டு வருந்தி நின்ற போழ்து சிறந்த தோழன கண்ணனாய் என் முன் நின்று மனம் கலங்காதே .. வாழ்க்கை என்பது போர்க்களம்.. அதில் வாழ்ந்தே தீரனும் என்று கீதையாய் எனக்கு பாதையுரைத்த என் அருமைத்தோழி மஞ்சுவின் இந்த கீதை காட்டும் பாதையை தொடர்ந்து வாசிக்க ஆவலாய் உள்ளேன்..

தொடர்வாய் மஞ்சு..!

8999.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Mar 04, 2011 9:25 am

நன்றி மஞ்சு அக்கா
எனக்கு தேவையான நேரத்தில் கிடைத்த பொக்கிஷம் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக