புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_m10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10 
31 Posts - 55%
heezulia
ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_m10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_m10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_m10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_m10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_m10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_m10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_m10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_m10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10 
17 Posts - 3%
prajai
ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_m10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_m10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_m10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_m10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_m10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_m10ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2009 1:55 am

ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Image510


நாகை மாவட்டம்: ஆலத்தூர் தலத்தில் பழம் பெருமை துலங்க சிறப்பு காட்சி தருகிறது அருட் சித்தர் கோயில். உண்மையில் ஒரு சித்தர் பெருமானின் ஜீவ சமாதியே கோயிலாக உருவாகியிருக்கிறது. அந்த சித்தர் & மலைப்பெருமாள் சுவாமிகள்.

தன்னுடைய பூலோக வசிப்பு நாட்களில், மக்களை இறைவழிப்படுத்தும் உத்திகளாக, சித்துகள் பல புரிந்திருக்கிறார். இவர், தஞ்சை மாவட்டம், பொறையாறு வட்டம், காட்டுச்சேரியில் செட்டியார் மரபில் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றினார். பாலக வயதிலேயே தன் பெற்றோரை இழந்த அவர், தன் சிற்றன்னையையும் அவரது குழந்தைகளையும் காக்கும் கடினமான பொறுப்பை ஏற்றார்.

அதற்காக ஆப்பிரிக்க நாட்டின் சான்சிபர் நகருக்குச் சென்று வருமானத்திற்காக உழைக்க ஆரம்பித்தார். ஆனால், நிரந்தர வேலை அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும், தாயாரின் வேண்டுகோளின்படி ஊருக்குத் திரும்பிவந்த அவர், தோற்றத்திலும் செய்கையிலும் முற்றிலும் மாறியிருந்தார். எப்போதும் தனித்திருக்கவே அவர் விரும்பினார்.

உலகியல் வாழ்வில் அவர் நாட்டம் காட்டாதது பலரை திகைப்படையச் செய்தது. அடிக்கடி காணாமல் போய்விடுவார். அப்படித்தான் ஒருமுறை காட்டுச்சேரியை விட்டுச் சென்றவர் பல நாட்களாகியும் திரும்பவில்லை. ஆனால், திரும்பி வந்தபோது அவர் துறவியாக
இருந்தார். தன் சிற்றன்னையிடம், ‘‘என் உயிருக்குத் தாய் இறைவனே, அவனருளே எனக்கு எல்லாம் இனி.

உங்கள் எல்லோரையும் அந்தத் திருவருள் காக்கும்’’ என்று உறுதியாகச் சொன்னார்; குடும்பத்தை விட்டுப் பிரிந்து போனார். ஆலத்தூருக்கு அருகே உள்ளது, தூதுபோன மூலை என்னும் சிற்றூர். அங்கே பெரிய தம்பிப் பிள்ளை என்பவர், பெரும் பரப்பிலான விளை நில சொந்தக்காரர், சிறந்த சிவபக்தர்.

ஒவ்வொரு வருடமும் ஆனி உத்திரத் திருநாளன்று நடராஜர் தரிசனம் காணச் செல்வார். குறிப்பிட்ட வருடத்தில் அவ்வாறு செய்ய இயலாதவாறு அவரது நிலத்தில் விவசாய வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அவரது உடல் வயல் வரப்பில் இருந்தாலும் உள்ளம் மட்டும் சிதம்பரத்திலேயே ஒன்றிப்போய் ஏக்கத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது அவ்வழியே வந்தார் மலைப்பெருமாள் சுவாமி.

அவருடைய வருத்தத்தைப் புரிந்துகொண்டார். ‘‘சிதம்பர தரிசனம் தானே பார்க்க வேண்டும்? இப்போதே பார்க்கலாம். கண்களை மூடிக்கொண்டு என் தோளினை நன்கு பிடித்துக் கொள்’’ என்றார். அவரிடம் தோன்றிய தெய்வீக ஒளியில் தன்னை மறந்த பிள்ளை உடனே கண்களை மூடிக்கொண்டு சுவாமியின் தோள்களை நன்கு பற்றிக் கொண்டார். ஒரு சில விநாடிகளுக்குப் பிறகு, ‘‘கண்களைத் திற’’ என்றார், சுவாமி.

பிள்ளை கண்களைத் திறந்து பார்த்தபோது சிதம்பரம் தேரடிக்கு அருகில் இருப்பதை உணர்ந்தார். ‘‘நீராடித் தரிசனம் செய்து வருக!’’ என்றார் சுவாமி. அளவிலா ஆனந்தம் அடைந்த பிள்ளை, உடனே சென்று நீராடி, நடராஜப் பெருமானின் திவ்ய தரிசனம் கண்டு, பிரசாதம் பெற்று மகிழ்ச்சி மேலிட, மீண்டும் தேரடிக்கு வந்து சுவாமியை வணங்கி நின்றார்.

அவரும் ‘‘மீண்டும் முன்போல கண்களை மூடிக்கொண்டு என் தோள்களைப் பற்றிக்கொள்’’ என்றார். பிள்ளையும் அவ்வாறே செய்ய, அடுத்த சில விநாடிகளுக்குள் அவர் ஆலத்தூர் வயல்வெளியில் இருந்தார். திகைப்பால் திக்குமுக்காடிப்போன பிள்ளை, மாலையில் வீட்டிற்குச் சென்று, மனைவி & மக்களிடம் சிதம்பரம் கோயில் பிரசாதத்தைத் தந்து சுவாமியின் அற்புதச் செயலைச் சொல்லிப் போற்றிக் கொண்டாடினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2009 1:56 am

ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Image511

மறுநாள் பொழுது புலர்ந்ததும் ‘‘மலைப்பெருமாள் சுவாமி பெரிய சித்தர். அவருக்கு எவரும் சிறு தீங்கும் செய்தல் கூடாது; அவருக்கு இடையூறு செய்பவர் தண்டிக்கப்படுவர்’’ என்ற பறை அறிவித்தார் பிள்ளை. அது மட்டுமா? சுவாமி இருந்த காட்டைச் சீர் செய்து மாமரத்தில் கயிறு கட்டி அதில் அமரவும் செய்வித்தார்.

அப்பகுதியைச் சித்தருக்கு உரிமை செய்து கொடுத்ததோடு ஐந்துமா நன்செய் நிலத்தையும் அவருக்குச் சாசனம் செய்து வைத்தார். ஒரு புன்சிரிப்புடன் தன்னைச் சுற்றி நடப்பவை களையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார் சுவாமி. சுவாமிகள் தம் அருள் செய்கையால் பலருக்கும் வாழ்வளித்துக் கொண்டிருந்தார். அவரின் பெருமையைச் செவியுற்ற பலர் தம் நோய் தீர அவரை நாடி ஓடி வந்தனர்.

வயிற்று வலியென வந்தவர் பூரண நலம் பெற்றுச் சென்றனர். நெஞ்சு நோயென வந்தவர் நெடுநாள் நலம் கொண்டு சென்றனர். பேய் பிசாசென அஞ்சியவர் அச்சம் நீங்கி, அமைதி பெற்றுச் சென்றனர். சுவாமியின் சித்தாடல்களை எல்லாம் கேட்டு மனம் மகிழ்ந்த சிற்றன்னை ஆனையாத்தாள் அவரைக் காண மிகுந்த பாசத்தோடு காட்டுச்சேரியிலிருந்து வந்தார்.

தாயைக் கண்டதும் சுவாமி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். தான் கொண்டு வந்திருந்த பிட்டையும் வடையையும் ஒரு தாம்பாளத்தில் வைத்துச் சித்தரிடம் பரிவோடு நீட்ட, அவரும் அதனை வாங்கிச் சிறிது பிட்டையும் வடையையும் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, தம்மைச் சுற்றி இருந்த அன்பர்கள் அனைவருக்கும் தம் கரத்தாலேயே அப்பண்டங்களை வழங்கினார்.

அன்று முதற்கொண்டு சுவாமிக்குப் பிட்டும், வடையும் வைத்துப் படைக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. முன்பெல்லாம், ஆலத்தூர் மக்கள் சித்திரை வருடப் பிறப்புத் திருநாளில் விழுதியூர் மாரியம்மனை வழிபடுவதற்காகத் திரண்டு செல்வார்கள். வழிபாட்டுக்காக ஊர்விட்டு ஊர் செல்லும் மக்களிடம் இரக்கம் கொண்ட சுவாமி, அவ்வூரிலேயே மாரியம்மன் ஆலயம் அமைக்க எண்ணம் கொண்டார். “திருமலைராயன்பட்டினத்-தின் எல்லையில் வாஞ்சூர் பால் குளத்தின் கன்னிமூலையில் அம்மன் இருக்கிறாள்.

ஒரு வண்டியைக் கட்டிக்கொண்டு போய்க் கொண்டு வாருங்கள்!” என்றார் சுவாமி. அதேபோல சிலை கிடைக்க, குறுந்தாளம்மன் என்று பெயரிட்டு அம்மனுக்கு சுவாமியின் ஆசியுடன் கோயில் எழுப்பினார்கள். ஆலத்தூர் மக்களெல்லாம் ஊரு விட்டு ஊரு போகவேண்டிய அவசியம் இல்லாமல் தம் ஊரிலேயே அம்மனைக் கொண்டாடினார்கள்.

அம்மனுக்குக் கோயில் எழுப்பித் தந்த சுவாமிக்கும் கோயில் கட்டும் எண்ணம் ஊர் மக்களிடையே பரவலாக எழுந்தது. அவர்களுடைய அன்புள்ளம் புரிந்து, சுவாமியே தம் கால்களால் அளந்து கயிறு கட்டித் தர, கோயில் கட்டும் திருப்பணி தொடங்கியது. கோயில் முழுமையடைய மேலும் பணம் தேவைப்பட்டதால் சுப்பப் பிள்ளை என்பவர் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்று தம் வணிகத்தை வளப்படுத்தி, பொருள் ஈட்டி வருவதாகக் கூறிச் சென்றார்.

ஒருநாள் இரவு, சுவாமி, பிள்ளையின் கனவில் தோன்றி “இவன் விரைவில் உலக வாழ்விலிருந்து விடுபடப் போகிறான். இவனுக்கெனக் கட்டப்படும் கோயிலில் இவன் சமாதி நிலை அடையும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் ஆலத்தூர் வந்து சேர். எல்லாம் நலமாகும்’’ என்றுரைத்தார்.

விருட்டென விழித்தெழுந்த பிள்ளை உடனே புறப்பட்டு வந்து சுவாமியின் பாதங்களில் பதறி விழுந்து அழுதார். அவரைக் கனிவோடு தூக்கி நிறுத்திய சுவாமி, “ஆவணி மாதம், மூல நட்சத்திரத்தன்று இரவு பன்னிரண்டு மணிக்கு இவன் சமாதி நிலையில் இருப்பான். அப்பொழுது இந்தக் கட்டையிலிருந்து வியர்வைப் பெருக்கெடுக்கும்.

உடனே இவ்வுடலை மூடும்படியாகத் திருநீற்றைக் கொட்டுக, பின்னர் திருநீறு உலர்ந்ததும், அதனைக் களைந்து பத்திரப்படுத்தி யாவர்க்கும் வழங்கி நோய்களை வென்று எல்லா நலன்களையும் பெற்று வாழ்க!” என்றார். அதைக் கேட்டு மனம் பேதலித்த பிள்ளை, சுவாமியின் யோசனைப்படி ஒரு ஓவியர் மூலம் அவர் உருவை வரையச் சொல்லி வாங்கி வைத்துக்கொண்டார். சுவாமி குறிப்பிட்ட ஆவணி மூலத்திருநாளும் வந்தது. சுவாமி, பிள்ளையை அழைத்து, “இன்று பன்னிரண்டு மணிக்குச் சமாதி ஆகப் போகிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2009 1:57 am

ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Image512
இதனை மலைப்பெருமாள் என்றே வழிபடு. எல்லாப் பேறுகளும் பெறுவாய்” என்று தம் கரத்தை நீவி அதிலிருந்து ஓர் எலும்புத் துண்டை எடுத்துப் பிள்ளையின் கையில் வழங்கினார். பிள்ளையும் அதனைப் பணிந்து போற்றி வாங்கிக் கொண்டார். (அவ்வெலும்பை இன்றும் ஆலந்தூரில் அவரது மரபில் வந்தவரின் இல்லத்தில் காணலாம்.) சுவாமி சுப்பப் பிள்ளையைப் பார்த்து மேலும் சொன்னார்:

“கோயில் கருவறையில் அமைக்கப்-பட்டுள்ள சமாதியினுள் முதலில் என்னை வடக்கு முகமாக வை; மூடி விடாதே; மூன்றாம் நாள் நான் கிழக்கு முகமாக இருப்பேன். அதன்பின் என் சமாதியை மூடிவிடு! நான் முக்தி பெற்ற பிறகு, ஓர் அன்பன் தானே மனமுவந்து ஒரு காசி லிங்கம் தருவான். அதனை என் சமாதி மேல் வைத்துவிடு. ஒரு சிவாச்சார்யார் வந்து எனக்கு பூஜை செய்ய விரும்புவார்.

அவருக்கு அனுமதி கொடு” என்றார். பிறகு சித்தர் மாமரக் கயிற்றிலிருந்து இறங்கி மெல்ல நடந்து வந்து சின்முத்திரையைக் காட்டியபடி சமாதி நிலையில் அமர்ந்துகொண்டார். சிறிது நேரத்தில் சுவாமியின் உடலிலிருந்து வியர்வை பெருக்கெடுக்க, பிள்ளையும் அவர் மனைவியாரும் திருநீற்றைச் சுவாமியின் உடல் மீது கொட்டி மூடினர். சற்றைக்கெல்லாம் திருநீறு, வியர்வை நீர் வற்றி உலர்ந்தது.

இருவரும் அதனைக் களைந்து எடுத்துப் பத்திரப்படுத்தினர். பின்னர் சுவாமிக்குச் சந்தனம் பூசி, பன்னீர் தெளித்து பூமாலைகள் அணிவித்து, விலை உயர்ந்த நார்முடியைத் தலைப்பாகையாகக் கட்டித் தூப தீபம் காட்டிக் கைகூப்ப, சுவாமியின் அருட் கண்கள் திறந்து அவர்களைப் பார்த்து பிறகு மூடிக் கொண்டன.

சாலிவாகன சகாப்தம், 1774&ல் கலியுகம் 4953 பரிதாபி வருடம், ஆவணி மாதம் (1852 ஆகஸ்டு) 11&ம் நாள் புதன்கிழமை, பூர்வபட்சம் ஏகாதசி திதி, மூலநட்சத்திரத்தில் இரவு மணி பன்னிரண்டுக்குச் சுவாமி இறைவனோடு ஐக்கியமாகிவிட்டார்கள். சுவாமியின் புகழ் நான்கு திசைகளிலும் பரவியது. மயிலாடுதுறையிலிருந்து வந்த ஓர் அன்பர், “சுவாமியின் சமாதியில் பிரதிஷ்டை செய்வதற்கு அடியேன் வழங்கும் லிங்கத்தை ஏற்றருள வேண்டும்’’ என்று சுப்பப் பிள்ளையிடம் விண்ணப்பித்தார்.

நல்லதோர் நாளில் சமாதியில் லிங்கப் பிரதிஷ்டை சாஸ்திர முறைப்படி நடந்தேறியது. சிறிது காலத்திற்குப் பிறகு ஒருநாள் வேதாகமங்கள் அறிந்த சிவாச்சாரியார் ஒருவர் சுவாமியை வழிபட்ட பின்பு அங்கிருந்து மீள மனம் இல்லாதவராக சுப்பப் பிள்ளையிடம், “அடியேன் இக்கோயிலில் பூஜை செய்ய ஆசைப்படுகிறேன். அனுமதிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

பிள்ளையும் பெரிதும் மகிழ்ந்து பூஜை கைங்கரியத்தை அவரிடமே வழங்கினார். மலைப்பெருமாள் சுவாமி சொன்னவாறே நடைபெற்றதை எண்ணிப் பிள்ளை வியப்பும் விம்மிதமும் உற்றார். மலைப்பெருமாள் ஜீவசமாதிக்கு மேலே கொலுவீற்றிருக்கும் சிவலிங்கத்தை தரிசிக்கும்போதே மனசுக்குள் அவர் அருள் சிலீரிடுகிறது.

ஊர்ப் பெரியவர்கள் அவருடைய அற்புதங்களை விளக்கும்போது மலைப்பு நெஞ்சை விம்மச் செய்கின்றது. இன்றும் அருவமாக சமாதி கொண்டிருக்கும் சுவாமி, நம்மையே பார்த்துகொண்டிருப்பது போலவும், தன் அருளை வாரி வழங்குவது போலவும் நாம் உணர்வதைத் தவிர்க்க முடியாது. இக்கோயிலில் சூரியனும், சனி பகவானும் ஒரே மேடையில் கொலுவீற்றிருப்பது காணுதற்கரிய காட்சி.

அருகே பைரவர் சந்நதி. சித்தர் பெருமான் திருவீதி உலா வரும் ரிஷப வாகனம் தனியே அழகுற காட்சியளிக்கிறது. அரச மரமும், வேம்பும் இணைந்து தலவிருட்சமாக குளிர்ச்சியளித்து கொண்டிருக்கிறது. சுவாமி கோயிலுக்கு அருகே கமலாம்பிகை அன்னைக்கு தனியே ஓர் ஆலயம் உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2009 1:58 am

ஆலத்தூர் மலைபெருமாள் சித்தர் கோயில் Image513




கருணைக் கடாட்சமாக ஒளிரும் அம்பாள் தன் தாய்ப் பார்வையாலேயே நம் துயரங்களைக் களைந்துவிடுகிறாள். படிகளுடன் கூடிய திருக்குளம் சற்றே வற்றிக் காணப்படுகிறது. இவை தவிர அருட் சித்தர் வசித்த இல்லமும் கோயிலாகப் பரிணமிக்கப் போகிறது. இத்தனை சிறப்பு மிக்க சித்தர் கோயில் புனரமைக்கப்படவிருக்கிறது.

மலைப்பெருமாள் சுவாமிக்கு ஆண்டுதோறும் ஆவணி மக நட்சத்திர நாளன்று விழா தொடங்கிப் பத்து நாட்கள் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அப்பொழுது ஆலத்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டுவிடும். மக்கள் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பார்கள். கோயிலோ புதுப்பொலிவு கொண்டு விளங்கும்.

விழாவானது ஒவ் வொரு நாளும் ஒவ்வொருவர் உபயமாக அமையும். பத்து நாட்களும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், அடியவர்க்கு அன்னதானமும் உபயதாரர்களால் செய்யப்படுகின்றன. ஆலத்தூருக்கு வாருங்கள்; அற்புத தரிசனம் காணுங்கள். என்றென்றும் ஆனந்தமாக வாழுங்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக