புதிய பதிவுகள்
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
87 Posts - 64%
heezulia
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
2 Posts - 1%
kaysudha
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
1 Post - 1%
prajai
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
423 Posts - 76%
heezulia
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
8 Posts - 1%
prajai
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
3 Posts - 1%
sram_1977
அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_m10அந்த இராமர் எந்த இராமாயணம்-1 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த இராமர் எந்த இராமாயணம்-1


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Feb 19, 2011 1:39 am

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்பே, ‘தீர்ப்பு எங்களுக்கு எதிராக வருமென்றால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஏனெனில், இது நம்பிக்கை சார்ந்த பிரச்சனை’ என்றனர் சங்பரிவார் அமைப்பினர். இராமன் வரலாற்று நாயகன் என்பதை நிரூபிக்க இயலாது என்பதால், சாட்சியங்களுக்கு மரியாதை அளிக்கிற நீதிமன்றம், ஒரு தொன்மத்தின் பிறப்பிடத்தை நிர்ணயிக்காது என அவர்கள் கருதினார்கள்.

நீதிமன்ற தீர்ப்பு அல்ல; நம்பிக்கைத்தான் பிரதானம் என வாதிடும் இந்துத்துவ சக்திகளுக்கு, இராமயணம் தொடர்பான நம்பிக்கைகள் துணை நிற்குமா என்பதுதான் கேள்வி. ஏனெனில், இராமயணமல்ல; இராமாயணங்கள்தான் உள்ளன. அதுவும் இராமாயணம் இந்தியாவில் மட்டுமல்ல; அது ஆசிய நாடுகளின் பொது நம்பிக்கை. இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, பூட்டான், இலங்கை, சீனா, திபெத், பாகித்தான் ஆகிய நாடுகளிலும் இராமயணங்கள் உள்ளன. இந்துக்களைப் போன்று புத்த-சமண-தலித்-ஆதிவாசி இனங்கள் மத்தியிலும் இராமயணங்கள் உள்ளன. எழுத்து மொழியில் மட்டுமல்ல; வாய்மொழியிலும் உள்ளன.

இராமாயண பண்டிதரான ஏ.கே.இராமானுசரின் ஒரு நூலுக்கு ‘முன்னூறு இராமயணங்கள்’ என்று பெயர். ‘எத்தனை இராமயணங்கள் உள்ளன. முன்னூறா, மூவாயிரமா?’ என்ற கேள்வியோடு அந்த நூல் துவங்குகிறது. ஆயிரக்கணக்கான இராமாயணங்கள் உள்ளன. அவை யாவும் வால்மீகி இராமாயணத்தின் பாடபேதங்கள் அல்ல என்றும், அவை சுதந்திரமான கதைகள் என்றும் கூறப்படுகிறது.

காமின் புல்கே எழுதிய ‘இராமகதை:உற்பத்தியும் வளர்ச்சியும்’ எனும் நூலிலும், பௌலா ரிச்மேன் தொகுத்த ‘பல இராமாயணங்கள்’(Many Ramayanas) எனும் நூலிலும், சிறீராமதாச கௌடர் தனது ‘இந்துத்துவம்’ எனும் நூலிலும், முனிவர்களால் எழுதப்பட்ட 19 இராமயணங்கள் குறித்துச் சொல்லப்பட்டுள்ளன.

மகா இராமாயணம், சம்விருத இராமாயணம், லோமச இராமாயணம், இராமாயணம் மகாமால், அகத்திய இராமாயணம், மஞ்சுள இராமாயணம், சௌபத்ம இராமாயணம், சுப்ரஹ்ம இராமாயணம், சுவர்ச்ச இராமாயணம், சிரவண இராமாயணம், வேத இராமாயணம், துரந்த இராமாயணம், இராமாயண சம்பு என ஏராளமாக உள்ளன.

பௌத்தர்களுக்கிடையே வழக்கில் உள்ள ‘பௌத்த தசரத யாதகமும், அனாமகம் யாதகமும் பிரசித்தி பெற்றவை. தசரத யாதகத்தில் உள்ள இராமகதை உருவம்தான் இராமாயண கதைகளின் மூலம் என இராமாயண ஆய்வாளரான முனைவர்.வெபர் முதல் தினேச சந்திரசேனன் வரையிலான பண்டிதர்களின் கருத்து. விமலாசுரி எழுதிய ‘பவுமசரியம்’, சமணர்களின் இராமாயணம் என்று அறியப்படுகிறது.

இராமாயணம் என்பது வால்மீகி, துளசிதாசு, கம்பர், எழுத்தச்சன் ஆகியோரின் மட்டும் படைப்பல்ல. அது ஆயிரக்கணக்கான பாடங்களின் தொகுப்பு. இராமாயணத்தின் ஒரு நிகழ்வுகூட நிரூபிக்கப்பட்டதல்ல. எல்லாவற்றிலும் பாடபேதங்கள் உள்ளன.

இராமாயணத்தின் அயோத்தி மன்னன்தான் இராமன் என்பதைக் கூட பல இராமாயணங்கள் ஏற்பதில்லை. இராமாயணம் இந்தியாவில் நடந்தது என்பதை கூட பல கதைகள் ஏற்றுக்கொள்வதில்லை. அயோத்தியில்தான் இராமன் பிறந்தான் என்று கூறுபவர்கள் கூட, அதற்கு உதவியாக வால்மீகியின் இராமாயணத்தைக் காட்டுவதில்லை. கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுதப்பட்டது வால்மீகி இராமாயணம். ஆனால், அது ஒரு நம்பிக்கையின்படி 181,49115 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அன்று பூமியில் மனிதர்கள் இருந்தார்களா என கேட்க கூடாது. ஏனெனில், இது நம்பிக்கையின் பிரச்சனை.

உ.பி.யின் அயோத்தியில்தான் இராமர் பிறந்தார் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது பல நம்பிக்கைகளின் மீதான அத்துமீறல். ஏனெனில், பைசாபாத்தின் அயோத்தியில் அல்ல இராமர் பிறந்தார் என நம்புகிற ஏராளமான இராமாயணக் கதைகள் இந்தியாவில் மட்டுமே உள்ளன. புத்தமத-’பௌத்த தசரத யாதகம்’ இராமன் அயோத்தியின் மன்னனல்ல; வாரணாசியின் மன்னன் என்று கூறுகிறது. மேலும், இந்தக் கதையில் சீதை இராமனின் சகோதரி. சகோதரியைத்தான் இராமன் திருமணம் செய்தான் என்று வருகிறது.

தாய்லாந்தின் ‘இராமகியேனா’(இராமகீர்த்தி) எனும் இராமயணத்தின் கதை நடந்தது, தாய்லாந்தில். சீதையும், இராமனும் அங்குள்ளவர்கள்தான். இராமனும், இராவணனும் சகோதரர்கள். தாய்லாந்தின் இன்றைய அரசகுலமான சாக்ரி இனத்தின் நிறுவனரான ப்ராபுத்த சோட் பாசூலா ‘உலகமகா மன்னன்’ எனும் பெயர் பெற்றவர். அவரது பதவி ‘முதலாம் இராமன்’ என்பதாகும்.

ஏறத்தாழ 417 வருடங்கள் தாய்லாந்தின் தலைநகரம் ‘அயுத்தியா’ எனும் பெயரில் அழைக்கப்பட்டது. கிசுகிந்தா, இலவபுரி, அயோத்தியா ஆகிய இராமாயணத்தோடு தொடர்புடைய நகரங்கள், தாய்லாந்தில் உள்ளன என இராமானுயர் தமது ‘முன்னூறு இராமாயணம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

இந்தோ-சீனாவின் வாய்மொழி இலக்கியங்களில் உள்ள இராமயண பாடத்தின்படி இராமன் அங்குள்ள வீண்டெயின் எனும் நாட்டின் மன்னன். இராவண வதம் செய்த பிறகு, இராமன் தாய்லாந்து வழியாக விண்டெயின் வந்ததாக நம்பப்படுகிறது.

பிலிப்பைன்சு நாட்டுக் கதையில், ‘தாஞ்சோம் பங்க்’ அங்குள்ள அயோத்தியாகவும், கக்காபுரி, இலங்கையாகவும் நம்பப்படுகிறது.

இன்றைய இலங்கைக்கு வால்மீகி இராமாயணத்தின் இலங்கையோடு தொடர்பில்லை என்றும், வால்மீகி இராமாயணத்தின் இலங்கை மத்திய பிரதேசத்தில்தான் என்றும், வால்மீகி விந்திய மலைகளுக்கு அப்பால் உள்ள தென் இந்தியா குறித்து எதுவும் தெரியாது எனவும் வரலாற்று ஆசிரியர் சங்காலியா கூறுகிறார்.

இன்றைய இலங்கையிலும் பிற அன்னிய நாடுகளைப்போல இராமாயண இலக்கியங்கள் உள்ளன. அங்குள்ள ராமகதையின்படி இராவணன் சீதையைக் கடத்தியது இலங்கையின் ‘சீதாவாக’ எனும் இடத்தில் வைத்துத்தான் என்றும், இந்தியாவில் வைத்து அல்ல என்றும் நம்புகிறார்கள்.

இசுலாமியர்கள் ஏராளமாக வாழும் மலேசியாவின் இராமாயணத்துக்கு இந்திய இராமாயணத்தோடு ஒற்றுமை உண்டு என்றாலும், அவை மலேசிய மண்ணின் மணமுடையது. அவர்களும் தங்கள் இராமாயணம் என்பது இந்தியக் கதை என்பதை ஒத்துக்கொள்வதில்லை. பஞ்சதந்திர கதை போல அவர்களின் இராமாயணம் வெறும் கதைகள் ஆகும்.

தெற்காசியாவிலும் பல சமூகங்கள் பல மொழிகளில் பண்பாட்டு உற்சவங்களில் 2,500 ஆண்டுகளாக இராமாயணம் பாடிக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு இராமனும் ஒவ்வொரு விதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த இராமானுயத்தின் கட்டுரை, தில்லி பல்கலைகழகத்தில் பட்ட வகுப்பு மாணவர்களின் வரலாற்றுப் பாடப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தது. 2008, பிப்ரவரியில், இதற்கு எதிராக ஏ.பி.வி.பி.யினர் கிளர்ச்சி செய்து பேராசிரியர் சாப்ரியைத் தாக்கினர்.

ஏனெனில், சங்பரிவார் கும்பலுக்கு ஒரே ஒரு இராமன் தான் வேண்டும். அதுவும் வாளும், திரிசூலமும், துப்பாக்கியும் ஏந்திய இராமனைத்தான் வேண்டும். மசூதி இடிப்புக்கு முன்பு வந்த தற்கொலை படையை நாம் கண்டோம். அது யெர்மனியின் நாசிப்படையை நினைவூட்டியது. எல்லா பன்மைத்தன்மையையும் மறுத்து, இராணுவ முறையில் ஒற்றைத் தன்மையைக் கொள்வது பாசிச குணமாகும். அசாமீசு, சைனீசு, வங்காளம், கம்போடியன், குசராத்தி, யாவானீசு, கன்னடர், காசுமீரி, கோட்டனீசு, லாவேசியன், மலேசியன், மராத்தி, ஒரியா, சமத்கிருதம், சிங்களீசு, தமிழ், தெலுங்கு, தாய், திபத்தியன் ஆகிய அநேக மொழிகளில் இராமகதை உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மாறுபட்டவை.

மலையாள மொழியின் தந்தை என போற்றப்படும் ‘துஞ்சத்து எழுத்தச்சனின்’ இராமாயணம், இந்து மதத்தின் பக்திக் காவியமாக கருதப்படுவதில்லை. சுதேசி ஆட்சியினரும், காலனி ஆதிக்கமும் ஒன்றிணைந்து சாதாரண மக்களின் வாழ்க்கையைத் துயரத்தில் ஆழ்த்தியதற்கு எதிராக கோபமாகவும் பக்தியாகவும் உருவகப்படுத்தி எழுதப்பட்ட கதை இது. சாதி மத பேதமின்றி மனிதர்களின் வலிகளைக் கூறிய கதை அது என்கிறார் Fr.காமின் புல்கே(சாகித்திய அகாடமி-1978). இதில் எந்த இராமாயணத்தின் கதையை அடிப்படையாக வைத்து நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லும்?

இராமன் ஒரு தொன்மம். தொன்மத்தை வரலாறாக மாற்றுகிறார்கள் சங்பரிவார்கள். அதற்கு நீதிமன்றம் துணைபோயுள்ளது. தொன்மத்தை வரலாறாகவும், உண்மை எனவும் நம்புவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால், நீதிமன்றமும், நாடாளுமன்றமும் தொல்லியல் ஆய்வு மற்றும் வரலாற்றுத் துறையினரும் கூட அந்த நம்பிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என்பது சனநாயக மதசார்பற்ற நீதி உணர்வை தகர்க்கும் என்பதை உணர வேண்டும்.

ஒரு சிவில் வழக்கில் நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பளிக்க சட்டத்தில் இடமில்லை என்பது குறித்து இந்தியத் தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கருத்து கேட்டது. சில கோவில் எச்சத்தின் மீதுதான் பள்ளி கட்டப்பட்டது என கிரவுண்ட் பெனிட் ரேட்டிங்சாருடன் தோண்டுதல் மூலமாக கண்டுபிடித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

தொல்லியல் துறையின் அறிக்கை வந்த வழியை ஆராய்ந்தால், அதன் பின்னணியில் மிக கேவலமான ஒரு நாடகம் வெளிப்படும். தொல்லியல் துறை(ASI)யின் இயக்குநர் பதவியிலிருந்து முனைவர் கத்தூரி குப்தாவை திடீரென கைத்தறித் துறைக்கு இடம் மாற்றியது, செண்டில்மேன் வாய்பாய் அரசு. பிறகு தொல்லியயோடு எந்த தொடர்பும் இல்லாத ஆர்.எசு.எசு. தொடர்புள்ளவர் என்ற ஒரேயொரு தகுதி படைத்த பண்பாட்டுத் துறை கூடுதல் செயலராக இருந்த கௌரி சாட்டர்யியை, அகழ்வாய்வு செய்யும் குழுத் தலைவராக நியமித்தார், பாபரி வழக்கின் மற்றொரு குற்றவாலியான முரளி மனோகர் சோசி.

அங்கு 50 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் உள்ள இந்துக் கோவிலாக இருக்க வாய்ப்புள்ள ஒரு கட்டிடம் இருந்ததாக நன்றி விசுவாசத்துடன் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது 12ஆம் நூற்றாண்டில் சுல்தானேட் காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் ‘ஈத்கா’வாக இருக்க வாய்ப்புள்ளதாக குழுவில் இடம்பெற்ற மற்றொரு ஆய்வாளர், முனைவர் சூரய்பானின் கருத்து குழிதோண்டி புதைக்கப்பட்டது. தொடர்ந்து, தொல்லியல் துறையின் அறிக்கை பலத்த விவாதத்தை கிளப்பியது. அறிக்கையை ஆதாரமாக வைத்து பொய் சாட்சியை உருவாக்கியது. அதனடிப்படையில், சர்ச்சைக்குரிய இராமர் பிறந்தார் என்றது, நீதிமன்றம்.

இராமர் கோயிலை இடித்துத் தான் பாபர் மசியித் கட்டப்பட்டது என்பதற்கு வரலாற்று ரீதியான ஆதாரம் எதுவும் இல்லை. துளசிதாசு கோசாமி(1532-1623) இராமசரித மானசம் எழுதத் தொடங்கியது, 1574 ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதியாகும். அதாவது, பாபர் மசூதி கட்டப்பட்டு 46 ஆண்டுகளுக்குப் பிறகு. அங்ஙனம், இடித்து கட்டப்பட்டிருந்தால் துளசிதாசு அது குறித்து எழுதியிருக்க மாட்டாரா? மேலும், பாபர் காலத்துக்குப் பிறகு, உமாயூன் மற்றும் அக்பர் காலத்திலோ அதற்குப் பிறகோ, இராமயென்ம பூமி என்ற பெயரில் யாரும் உரிமை கோரவில்லை.

மட்டுமல்ல; அயோத்தி இந்து-இசுலாமிய நல்லிணக்கத்துக்கு உதாரணமாக இருந்தது.

1855இல் பிரித்தானியர் பிரச்சனையை உருவாக்க முயன்றனர். 1857 முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்தப் பகுதியில் இசுலாமியர்களும் இந்துக்களும் இணைந்து போராடினர். அதற்கு அமீர் அலியும் இராம் சரண்தாசும் தலைமை தாங்கினர். இவர்கள் இருவரையும் 1858 மார்ச் 18இல் ஒன்றாக, ஒரே மரத்தில் தூக்கிலிட்டனர். அந்த மரம் இந்து-இசுலாமியர்களின் ஒற்றுமையின் சின்னமாக திகழ்ந்தது. ஆனால், வெள்ளையர்கள் இந்த மரத்தை வெட்டிச் சாய்த்தனர். இந்த ஒற்றுமைக்கு வேட்டுவைக்க பிரித்தாளும் சூழ்ச்சியோடு ஒரு பிரித்தானிய அதிகாரி பைசாபாத் மாவட்ட கெசட்டில் ‘இராமர் கோவில் இடித்து கோயில் கட்டப்பட்டிருக்கலாம்’ என்ற விசவிதையை விதைத்து எழுதி வைத்தான்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Feb 19, 2011 1:44 am

இதைத் தொடர்ந்து, 1885-86இல் பள்ளிவாசல் சுவருக்குள்ளே கோயில் கட்ட அனுமதி கோரி இந்து புரோகிதர் ஒருவர் பைசாபாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். நீதிமன்றம் அதை நிராகரித்தது. 1949, ரிசம்பரில் அகில பாரத் இராமாயண மகாசபை தலைமையில்,ன் 9 நாள் அகண்ட நாம நிகழ்வு நடந்தது. அதன் இறுதிநாளில்(ரிச.22) இரவு 50பேர் கொண்ட கும்பல் மசுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஒரு சிலையை வைத்தனர் என்பது பைசாபாத் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையிலேயே பதிவாகியுள்ளது.

பிறகு, காவல்துறை அறிக்கையை மீறி, மாவட்ட நீதிமன்றம் பள்ளிவாசலை மூடவும் இசுலாமியர்கள் 200 அடிக்கு அப்பால் மட்டுமே வரவேண்டும் எனவும் அறிவித்ததோடு, பள்ளிவாசலின் பொறுப்பை ஒரு ரிசீவரிடம் ஒப்படைத்தது. ஆனால், அரசு செலவில் பூசை நடந்தது. சுதந்திர இந்தியாவின் மதசார்பற்ற அரசியல் கட்டமைப்புக்கு சவாலான இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வதில் நேரு அரசு தவறு செய்தது. சிலையை அகற்ற முன்வரவில்லை. 1950இல் மீண்டும் பூசை செய்ய பக்தர்களை அனுமதிக்குமாறு நீதிமன்றம் சென்றனர். இங்ஙனம் நீதிமன்றம் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து வந்துள்ளது.

நீதிமன்ற பாரபட்சத்தின் தொடர் நிகழ்வு இது. எண்பதுகளின் ஆரம்பத்தில் விசுவ இந்து பரிச்சத் 114 பள்ளிவாசல்களின் பட்டியலுடன் இவற்றை மீட்க ‘தர்மசுதான முக்தியக்ஞ சமிதி’ என்ற அமைப்பை நிறுவியது. தொடர்ந்து நடந்தவை நமக்கே தெரியும்.

18 இலட்சம் ஆண்டுகலுக்கு முன்பு கல்தோன்றி மந்தோன்றா காலத்தே பாபர் மசூதியின் மத்திய கோபுரத்தின் கீழ் 1482, 5 சதுர அடிக்குள்ளே தசரத மாமன்னனின் மகன் இராமபகவான் பிறந்தார் என பிறப்புச் சான்றிதழ் வழங்கியுள்ளது. மசூதி பாபரோ, மிர்பாகியோ யார் கட்டினார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு கோயில் இடிக்கப்பட்டதையும் கண்டுபிடித்துள்ளது. ஆனால், 18 ஆண்டுகளுக்கு முன்னால் உலகமே தன் கண்களால் உற்றுநோக்கியிருக்கையில் பட்டப்பகலில் நேரடி ஒளிபரப்பில் தகர்க்கப்பட்ட பள்ளிவாசல் குறித்து எதுவும் கூறவில்லை.

மசூதி இடிப்பு இரகசியமாக நடந்த கெரில்லாத் தாக்குதல் அல்ல. கோயில் கட்ட 7 இலட்சம் கிராமங்களிலிருந்து இராமர் செங்கல் யாத்திரை நடத்தப்பட்டது. ஒருவகையில் அது சனநாயக இந்தியாவின் ஒப்புதலுடன் நடைபெற்றது என்றால் மிகையல்ல. இந்தியாவின் ஆன்மாவை தகர்த்த நிகழ்வு அது. இடதுசாரிகள் கூட துணிச்சலுடன் இசுலாமியர்கள் பக்கம் நிற்கவில்லை. சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் இசுலாமியர்கள் பக்கம் நியாயம் இருப்பதை உரக்கக் கூறவில்லை என அன்று பன்னாட்டு விவாதம் எழுந்தது. George Bernardsதான் ‘எந்த இராமன்? காந்தியின் இராமனா. R.S.S.இராமனா? என்று கேட்டார். பிறகு அவரும் அந்தக் கூட்டணியில் இணைந்தார்.

இந்தியாவின் பண்பாட்டு உளவியல் வலதுசாரி மயமானது, டிசம்பர் 6க்குப் பிறகுதான் என சிவிக் சந்திரன் போன்றோர் கூறியுள்ளனர். அத்வானிகள் ஆட்சிக்கு வந்ததைவிட ஆபத்தானது, நடுத்தர வர்க்க அறிவுயீவிகளின் காவியமான மனநிலை என்றார், அவர்கள்.

காங்கிரசிடமிருந்து அரசியலதிகாரத்தை பறிப்பதற்கான முயற்சி காந்தி படுகொலை. பிறகு இந்திய தேசியம் இந்துத்துவமாக நிறுவன மயமாக்கப்பட்டதினூடாக, யனசங்கத்திலிருந்து B.J.P., சங்பரிவார் அமைப்புகளின் ஆதரவுடன் மைய நீரோட்ட அரசியல் இயக்கமாகிறது. இந்துத்துவ அரசியலை அவர்கள் கையில் எடுத்த போது, அதற்கு சவாலாக அன்றிருந்தது வி.பி.சிங்கின் மண்டல் குழு பரிந்துரை நடைமுறைபடுத்துவதற்கு எடுத்த வரலாற்று முடிவு. இந்த வேளையில்தான் இந்துத்துவத்தின் அணி திரட்டலுக்கு பாபர் மசுயித் இடிப்பு வழிவகுத்தது.

அதற்கு அவர்கள் டிசம்பர்6 ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்தது எதேச்சையாக அல்ல. அம்பேத்கார் நினைவு நாளில் ஒரு வரலாற்று தகர்ப்பு நடத்த அவர்கள் திட்டமிட்டனர். வி.பி.சிங் மண்டலை எடுத்தபோது அவர்கள் கமண்டலங்களை எடுத்தனர். நான் இந்துவாக இறக்கமாட்டேன்’ எனச் சொன்ன முனைவர்.அம்பேத்கர் நினைவு தினத்தை தேர்ந்தெடுத்து இடித்தது, கோடிக்கணக்கான தலித் மக்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை.

இந்துக்களின் அவமானச் சின்னம்தான் தகர்க்கப்பட்டது என்று கூறியது சங்பரிவார். ஆனால், R.S.S. நிறுவனரான எட்கேவரோ, கோல்வார்கரோ, சாவர்கரோ அவர்களது நூல்களில் எங்கும் அயோத்தியின் இராமர் கோயில் குறித்து பேசவில்லை. 1980களில் V.H.P. இதை பிரச்சனையாக்கும்வரை அயோத்திக்கு வெளியே எவரும் அது குறித்து கவலைப்படவில்லை என பீட்டர் வாண்டிட் குறிப்பிடுகிறார்.

நீதிமன்றத்துக்கு சாட்சியங்களே தேவை என்பது, சட்டம் குறித்த ஆனா ஆவன்னா தெரிந்தவர்களுக்கும் தெரியும். ஆனால், நாடே எதிர்நோக்கிய வழக்கில் தீர்ப்பளிக்கையில், வரலாற்றைத் தலைகீழாக்கி, சாட்சியங்களைவிட நம்பிக்கைதான் முக்கியம் என்ற முடிவு கேலிக்கூத்தாக உள்ளது.

பாபர் மசியித் இடிக்கப்பட்டு அந்தக் கற்களைப் படிக்கட்டுகளாக்கி அதிகாரத்தைப் பிடித்தவர்கள்தான் இப்போதும் தீர்ப்பை வரவேற்று ஆரவாரம் செய்கிறார்கள். அன்று பள்ளிவாசலைத் திறந்து கொடுக்க ஏற்பாடு செய்த கே.கே.நாயருக்கு இந்து மகா சபை M.P.பதவி அளித்து அழகு பார்த்தது. இந்த மாதம் 30 ஆம் தேதி, நீதிபதி சர்மாவுக்கு V.H.P. வரவேற்பு அளிக்கிறது.

மசூதி இடிப்புக்கு வசதி செய்து கொடுத்த கல்யாண் சிங்கை ஒருநாள் சிறை என்ற மகா தண்டனையை அளிக்கும் நீதிமன்றங்கள்தான், விசாரணை என்ற பெயரில் 9 ஆண்டுகள் மதானிகளைச் சிறையில் சித்திரவதை செய்துவிட்டு நிரபராதிகள் என விடுவிக்கிறது.

இந்த தீர்ப்பை இசுலாமிய சமூகம் அமைதியாக எதிர் கொண்டதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று, நமது சன்நாயக மதச்சார்பற்ற கட்டமைப்பிலிருந்து இசுலாமிய சமூகத்துக்கு கிடைத்த முதல் அடி அல்ல இது. பாபர் மாசியித் இடிப்பிற்கு பின்னர் குசராத்தினூடாகத்தான் அவர்கள் இந்த தீர்ப்புக்கு எட்டினர்.

ஒரு பிரச்சனையின் காலதாமதம், அதன் உணர்ச்சியின் தீவிரத்தைக் குறைக்கும் என்பது ஒரு காரணம். இப்பிரச்சனையில் இனி உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறதோ என்ற ஆதங்கம் இசுலாமியர்களுக்கு உண்டு.

இசுலாமியர்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறார்கள் என்று கூற ஒரு சில முலாயம்சிங்களுக்குத்தான் துணிச்சல் வந்துள்ளது. அதுவும் பெரிய பாதகம் போல ஊடகங்கள் உளறின. பிரபல குறும்பட இயக்குநர் சுப்ரதீப் சக்ரவர்த்தி, இது பாலியல் வன்முறை செய்த ஒருவனுக்கு, இரையைத் தானம் செய்வது போன்ற தீர்ப்பு’ என்றார்.

தீர்ப்பு வந்த பிறகு பெரும்பாலான மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டது இந்த தீர்ப்பின் மெரீட்டை அங்கீகரித்து அல்ல. இதன் பெயரால் ஒரு கலவரம் ஏற்படவில்லையே என்பதால்தான். தீர்ப்பு வருவதை ஒட்டி ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒரு விழுக்காடாவது, 1992, டிசம்பர் 6 அன்று செய்திருந்தால் அந்த வரலாற்றுத் தகர்ப்பை தவிர்த்திருக்கலாம்.

1992, டிசம்பர் 6, ஞாயிறு அன்று, பாபர் மசியித் இடித்துத் தூளாக்கப்பட்டது. அதனை வேதனையோடு பார்த்தவர்கள் இசுலாமியர்கள் மட்டுமல்ல. ‘இனி நான் இந்து மதத்தில் இருக்க மாட்டேன்’ என்று விலகினார் புகழ்ப்பெற்ற மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு’.

‘இந்துவாக பிறந்ததற்கு வெட்கித் தலைகுனிகிறேன். சுய இழிவாகக் கருதுகிறேன்’ என்றார், பிரபல எழுத்தாளர் கே.அரவிந்தாசன். கறுப்புநாள் எனவும் காந்திப் படுகொலைக்குப் பிறகு நாடு சந்தித்த மிகத் துயர நாள் எனவும் நாடெங்கும் கூறப்பட்டது.

யார் பெயரால் இந்தப் பாதகம் நடந்தது? இராமன் பெயரால். எழுபத்தைந்து ஆண்டுகளில் ஒவ்வொரு நிமிடம்ம் இராமநாமம் உச்சரித்த காந்தி கூறுகிறார்:

நாம் தினமும் பாடும் இராமன், வால்மீகியின் இராமனோ, துளசிதாசின் இராமனோ அல்ல. இந்த இராமன் தசரத புத்திரனோ, சீதாபதியோ அல்ல. உண்மையில் அவர் உடல் உருவம் கொண்ட இராமன் அல்ல. இந்த ஆண்டின் சைத்ரத்தின் ஒன்பதாம் நாளில் பிறந்த இராமன் அல்ல. அவன் பிறப்பில்லாதவன்; அவன் படைப்பாளி. பிரபஞ்ச புருசன்”. (அரியன் - 30.03.1928)

எனது இராமராசியம் இந்து இராசியமல்ல. அது தெய்வீகமான ஆட்சி. இராமனும், இரகீமும் எனக்கு ஒரே தெய்வீகம்தான். சத்தியமும் – தர்மமும் இல்லாத இறைவனை நான் அங்கீகரிக்கவில்லை.(யங் இந்தியா – 10.09.1929).

இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் நீதியின், தர்மத்தின், சகோதரத்துவத்தின், நல்லிணக்கத்தின் உருவமாக இருந்த இராமனை, கடத்தி பாபர் மசியித்தை இடிப்பதற்கான கோடரியாக மாற்றியவர்கள், சங்பரிவார் கும்பல்கள்.

அந்த மாபாதகச் செயலுக்கு கிடைத்த சட்ட அங்கீகாரமாக அவர்கள் இந்த தீர்ப்பைக் கருதுகிறார்கள்.



சமநிலைச் சமுதாயம் இதழ் ‘குரலற்றவர்களின் குரல்’

நவம்பர் 2010.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக