புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடு நிசி நாய்கள்!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
முன்னிரவில் உள்ளேறிய பரோட்டா பின்னிரவில் இப்போதே வெளியேறுவேன் என்று அடம் பிடிக்க வயிற்றை பிடித்துக்கொண்டு டிரைவரிடம் ஓடுகிறீர்கள். வண்டி நிற்கிறது. அப்போது ஒருவர் உங்களை வழி மறித்து "இந்த நடு காட்டில் தண்ணி இல்லாம எப்படி சமாளிக்க போறீங்க?" என்று கேட்கிறார். கையிலிருக்கும் நியூஸ் பேப்பரை காட்டி "இத வச்சு தொடச்சுக்குவேன்" என்கிறீர்கள். "துடைத்து போடுவது நம் கலாசாரம் இல்லையே. கழுவி விடுவது தானே கண்ணியம்" என்று உங்களை போக விடாமல் வழிமறித்து உபதேசம் செய்தால் என்ன செய்வீர்கள்.
அதே கலாசார காவலர் தாசி வீட்டுக்கு சென்றிருக்கிறார். அந்த பெண்ணோ காண்டம் உபயோகப்படுத்துங்கள் என்று அறிவுறுத்துகிறாள். கலாசார காவலரோ அதை சற்றும் பொருட்படுத்தாமல் காரியத்தை முடித்துவிட்டு வெளியேறுகிறார். அடுத்த நாள் தன் நண்பரை சந்தித்து விஷயத்தை பெருமை பொங்க "நம்ம கலாசாரத்த நாம தாம்பா காப்பாத்தணும்" என்று தான் காண்டம் போடாமல் கண்டம் செய்த கதையை விளக்குகிறார்.
அப்போது நண்பர் "காண்டம் உபயோகிக்கணும்ன்னு அரசாங்கமே சொல்லுதே அதுல என்ன கலாசார சீர்கேடு இருக்கு?" என்று ஐயப்படுகிறார்.
"அட போயா காண்டம் அமெரிக்க காரன் கண்டு புடிச்சது. அது வெஸ்டர்ன் கல்சர். அத போய் நாம எப்படி பயன்படுத்துறது. நம்ம கலாசார சாஸ்திர சம்பிரதாயத்துல எங்கேயும் காண்டம் இல்லையே. நம்ம கலாசாரத்துல சுந்தர காண்டம் இருக்கே ஒழிய கோகினூர் காண்டம் கிடையாது நண்பா"
"சரி எயிட்ஸ் வந்தா?"
"என்னது எயிட்ஸா எனக்கா? தம்பி எயிட்ஸ் வெஸ்டர்ன் வியாதி. அது நமக்கு எல்லாம் வராது. " என்று புள்ளி ராஜா மீதே சத்தியம் செய்து சொன்னார் அந்த கலாசார காவலர்.
ஆட்டுக்கல்லும் அம்மி கல்லும் அல்லவா நம் கலாசாரம். பிறகு மிக்ஸியும் கிரைண்டரும் எதற்கு. வேட்டி அல்லவா நம் கலாசாரம். பிறகு ஜீன்ஸ் எதற்கு. இப்படி தன் சௌகரியங்களுக்கு ஏற்றாற் போல் மேற்கத்திய பங்களிப்பையும் நாகரீகத்தையும் உபயோகப்படுத்திக்கொள்ளும் இந்த கலாசார காவலர்கள் வருடா வருடம் வேலன்டைன்ஸ் டே வந்தால் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காதலர் தினம் மேற்கத்திய கலாசாரமாம். அதனால் இந்திய ஆண்களும் பெண்களும் சீரழிகிறார்கள் என்று சொல்லி போராட்டம் நடத்தும் காதலிக்கும் வயதை தாண்டிய பழுத்த கலாசார காவலர்களுக்கு பாடம் புகட்டும் படம் தான் நடுநிசி நாய்கள்.
கதை சுருக்கம்
முதல் காட்சியிலேயே இயக்குனர் நம்மை கட்டி போடுகிறார். சுமித்ரா கல்லூரி மாணவி. அவள் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வருகிறாள். சிறிது நேரம் டி.வி. பார்க்கிறாள். தம்பியோடு சண்டை போடுகிறாள். போனில் அரட்டை அடிக்கிறாள். பிறகு டின்னர் முடித்து தன் அறைக்குள் போய் கதவை சாற்றி விளக்கை அணைத்து போர்த்திக்கொண்டு படுத்துவிடுகிறாள். கழுத்து வரை போர்வையை போர்த்திக்கொண்டு படுத்திருக்கும் சுமித்ராவை ஒரு நிமிடம் கேமரா வளைய வர இரவு மெல்ல மெல்ல விடிகிறது. சுமித்ரா கண்களை திறந்து சோம்பல் முறித்து போர்வையை விலக்கி பார்க்கிறாள்.
அதிர்ச்சி. தான் அணிந்திருக்கும் நைட்டியின் மேல் அழகான பூமாலை. அதிர்ச்சியின் உச்சத்தில் கழுத்தை தடவி பார்க்கிறாள். தாலி!!! தன் கழுத்தில் இன்னும் மஞ்சள் ஈரம் காயாத புத்தம் புது தாலி. போர்வையை முழுவதும் விலக்கி பார்க்கிறாள் காலில் மெட்டி. பரபரத்து அறையை விட்டு வெளியே ஓடி வருகிறாள்.
ஹாலில் மணக்கோலத்தில் தங்களின் மகள் நைட்டியோடு நிற்பதை வினோதமாக பார்க்கிறார்கள் அவளது பெற்றோர். தம்பி சிரிக்கிறான். சுமித்ரா பயத்தில் பதறியபடி யாரோ இரவில் தான் உறங்கிக்கொண்டிருக்கும் போது இதை செய்துவிட்டதாக சொல்கிறாள். சுமித்ராவுக்கே இது கனவா நனவா என்றே சந்தேகம் வருகிறது. முதலில் அவளது பெற்றோர் அவளை நம்பவில்லை. சுமித்ரா அழுது புரள்கிறாள். நடு வீட்டில் மாலையும் கழுத்துமாக ஒரு பத்ரகாளி போல் தன் நிலையை வீட்டிலிருப்பவர்களுக்கு உரக்க கத்தி விளக்குகிறாள். கேமரா வீட்டின் இன்னொரு ஜன்னல் வழியாக அருகிலிருக்கும் சுடுகாட்டை காட்டுகிறது. பேயின் வேலையாக இருக்குமோ எனும் போது அவளது தம்பியின் முகத்தில் பயம்.
சுமித்ராவின் அறைக்கு போய் சோதனை இடுகிறார்கள். ஜன்னல் கம்பிகள் எல்லாம் உடைபடாமல் அப்படியே இருக்கின்றன. பிறகு யார் உள்ளே வந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்ணுக்கு அவளை எழுப்பாமல் மாலை அணிவித்து தாலி கட்டி மெட்டி வரைக்கும் போட்டுவிவ்ட்டு போயிருப்பார்கள்? அடுத்து என்ன செய்வது என்ற பரபரப்புக்கு வீடு நகர்கிறது.
அப்பா தாலி மாலை எல்லாவற்றையும் கழற்றி தூக்கி எறிந்துவிடலாம் என்கிறார். அம்மா தன் குடும்ப புரோகிதரை அழைத்து பூஜை செய்து தான் அதை செய்யவேண்டும் என்கிறாள். சுமித்ராவோ இந்த விஷயம் யாருக்கும் தெரியவேண்டாம் என கெஞ்சுகிறாள். தம்பி அவளை ஒரு பயங்கர பேயை பார்ப்பது போல் பார்க்கிறான். இது பேயின் வேலை தான் என்றும் உடனே வீட்டில் ஹோமம் வளர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். சுமித்ரா தாலியை கழட்ட மறுக்கிறாள். தன் கழுத்தில் ஏறிய தாலி அப்படியே இருக்கட்டும் என்கிறாள்.
சுந்தரவள்ளி. படிப்பு முடிந்து ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாள். வெகு நாட்களாக வரன் பார்த்து ஒன்றும் அமையாமல் முப்பது வயதாகியும் திருமணம் ஆகாமலிருக்கிறாள். ஜாதக பொருத்தம் குலம் கோத்திரம் என்று இழுத்தடிக்கிறது. அவளுக்கு ஒரு ரெசிடென்ஷியல் பள்ளியில் வேலை.. எனவே அங்கேயே குழந்தைகளோடு ஒரு அறையில் உறங்குவாள். அன்றும் அது போல் போர்வையை கழுத்து வரை போர்த்திக்கொண்டு உறங்குகிறாள். காலையில் எழுந்து போர்வையை விலக்கி நிற்க அனைத்து பிள்ளைகளும் ஒரு சேர
"ஏய் மிஸ்ஸுக்கு இன்னைக்கு கல்யாணம்" என்று கத்தியபடி வெளியே சிதறி ஓடி அறைக்கு எல்லோரையும் கூட்டி வருகிறார்கள்.
அடுத்து பெங்களூரில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் ராகவி. ஆட்டோ டிரைவரின் மகள் சாந்தி என்று அடுத்தடுத்த இரவுகளில் திருமணமாகாத பெண்கள் உறங்கி காலையில் விழிக்கும் போது மண கோலத்தில் விழிக்கிறார்கள். ஆட்டோ டிரைவரின் மகள் போலீஸில் புகார் அளிக்கிறார். விஷயம் பேப்பரில் வருகிறது.
அடுத்தடுத்த நாட்களில் திருமணமாகாத பெண்கள் காலையில் எழும் போது போர்வையை நடுநடுங்க விலக்கி பார்க்கிறார்கள். அடுத்து யார் என்று நகரமே கிலியிலாடுகிறது. இரவில் பல பெண்கள் உறங்காமல் தங்கள் Marital Statusக்கு காவல் இருக்கிறார்கள்.
அப்போது இந்த வினோதமான சம்பவத்தை விசாரிக்க அதிரடி அசிஸ்டன்ட் கமிஷனராக வருகிறார் சமீரா ரெட்டி.சமீர ரெட்டியின் ஆரம்பகட்ட பாய்ச்சல் அதிரடியாக இருந்தாலும் இந்த சதி செயல்களை செய்வது யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் திணறுகிறார்.
ஆனால் நகரில் தொடர்ந்து கன்னி பெண்களுக்கு திருமணம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. முதலமைச்சரிடமிருந்து பிரஷர். கமிஷரிடமிருந்து பிரஷர் என்று சமீர ரெட்டி வதங்கிப்போன ரொட்டியாய் லட்டியை டேபிளில் தட்டி தட்டி சிந்தித்தும் விடை கிடைத்தபாடில்லை. அப்போது தான் படத்தில் ஒரு திருப்பம்.
அன்றிரவு கேஸ் விஷயமாக வெகு நேரம் விசாரித்துவிட்டு தன் அறைக்கு திரும்புகிறார் சமீரா. அப்போது அவர் உடை மாற்றும் காட்சி ஆறுதல். இள நீல நைட்டியில் நம்மை எல்லாம் வாரன்ட் இல்லாமல் அரெஸ்ட் செய்கிறார். போரையை கழுத்து வரை போர்த்திக்கொண்டு அயர்ந்து உறங்குகிறார். காலையில் எழுந்து பார்த்தால் அதே தான். அதன் பிறகு திரைக்கதை ஜெட் வேகத்தில் நகர்கிறது.
அடுத்தடுத்த காட்சியில் சமீரா ரெட்டி தன் மண கோலத்தை அதே கோலத்தில் இருந்தபடி குற்றவாளியை கண்டுபிடிப்பது அசத்தல். சமீர ரெட்டியின் வீட்டில் பாதுகாப்புக்காக ஒரு கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அதன் ரெக்கார்டர் இமேஜை ஸ்கேன் செய்து அலசுகிறார்கள். அதில் இரவு 2 மணிக்கு மேல் சமீர ரெட்டியின் அறைக்குள் இரண்டு வெள்ளை உருவங்கள் ஜன்னல் வழியாக உள்ளே நுழைவதை கவனிக்கிறார்கள். ஜூம் செய்து பார்த்தால் இரண்டு வெள்ளை நிற பொம்மேரியன் நாய்கள்.
அந்த இரண்டு நாய்களும் உள்ளே சென்று சமீராவின் முகத்தில் ஒரு கர்ச்சீப்பை காட்டி அவரை மயக்கமடைய செய்கிறது. பிறகு மாலை தாலி எல்லாம் கட்டி மெட்டியும் போட்டுவிட்டு அந்த நாய்கள் ஜன்னல் வழியாக குதித்து வெளியேறிவிடுகின்றன. ஏன் இந்த நாய்கள் இப்படி செய்கிறது என்பதை கிளைமாக்ஸில் இயக்குனர் விளக்குகிறார். கிளைமாக்ஸில் அந்த நாய்களின் தலைவன் பேசும் வசனம் கலாசார காவலர்களின் முகத்தில் கடித்து வைக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
சாம்பிளுக்கு.........
"டேய் நீங்க எல்லாம் என்ன மாதிரி மனுஷங்கடா. வேலன்டைன்ஸ் டே புடிக்கலைன்னா வேலன்டைன்ஸ் டே கொண்டாடுறவங்கள போய் கடியுங்கடா. அதுக்கு துப்பு இல்லாம அப்பிராணியா தெருவுல சுத்திகிட்டு இருக்கிற எங்கள புடிச்சு எதுக்குடா கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க. இது தான் உங்க போராட்டமா? வாயில்லா ஜீவங்குறதுனால பக்கத்து தெருவுல சுத்திகிட்டு இருக்குற பங்கஜத்துக்கும் எனக்கும் பிப்ரவரி 14 கல்யாணம் பண்ணி வச்சீங்களேடா. பங்கஜம் அன்னைக்கு இராத்திரியே சுந்தரோட ஐக்கியமாயிட்டாளே அத பத்தி உங்களுக்கு கவல இருந்திச்சா. எங்களுக்கு பெரிய பருப்பு மாதிரி கல்யாணம் பண்ணி வச்ச நீ...கல்யாணம் பண்ணி வச்ச நீ......கல்யாணம் பண்ணி வச்ச நீ.....கல்யாணம் பண்ணி வச்ச நீ.....பஸ்ட் நைட்டும் நடத்தி வச்சிருக்கணும்டா."
"அதென்ன கல்யாணம் பண்ணி வச்சிட்டு நடு தெருவுல விட்டுட்டு போறது. இது என்ன டைப் போராட்டம்டா. நாங்க தான் உங்கள மாதிரி கல்யாணம் கர்மாந்திரம் எல்லாம் இல்லாம சுதந்திரமா சுத்திகிட்டு இருக்கோம். எங்கள புடிச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறியே நீ என்ன லூசா? நீங்க போராட நாங்க தான் கிடச்சமா? ஏன்னா எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சா எவனும் திருப்பி கேக்க நாதி இல்லேங்குற திமிரு தானேடா. அதான் நாங்க திருப்பி அடிச்சோம். ஏ.சி.பி. நோட் பண்ணிக்க. சுமித்ராவ கட்டினது காசி மேட்டு காஜா. இதோ வாலாட்டிகிட்டு நிக்கிறானே இவன். கூட்டிட்டு போய் குடும்பம் நடத்த சொல்லு. சுந்தரவள்ளிக்கு கோயம்பேடு குணா. ஏ.சி.பி. உனக்கு மட்டும் கொஞ்சம் காஸ்ட்லி நாயா நான் தான் அனுப்பி வச்சேன்.பாக்குறதுக்கு டெர்ரரா இருந்தாலும் பழகுறதுக்கு நல்ல பிகரா இருக்க அதனால பொழச்சு போ."
"டேய் மக்கு பசங்களா போராடுறதுக்கு எத்தன வழி இருக்கு. உண்ணாவிரதம் உப்பு சத்தியாகிரகம் ஒத்துழையாமை இயக்கம் அப்படின்னு போராடின காந்தி பொறந்த மண்ணுடா இது. அவரு வெள்ளக்காரன எதிர்த்து போராடுறேன் பேர்வழின்னு வெள்ளக்கார நாய்க்கும் இந்திய கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வச்சா சுதந்திரம் வாங்கி கொடுத்தாரு. சரி போராடுறதுக்கு எத்தனை பிரச்சனை இருக்கு இந்த நாட்டுல. விலைவாசிக்கு எதிராவோ இலவச கல்விக்காகவோ எங்களுக்கு கல்யாணம் என்ன குடும்ப கட்டுப்பாடு செஞ்சு வச்சு போராடியிருந்தா கூட நாங்க கவல பட்டிருக்கமாட்டோம். கேவலம் வேலன்டைன்ஸ் டே கொண்டாடுறதுக்கு போய்.... சீ...தூ...."
"வேலன்டைன்ஸ் டே கொண்டாட கூடாதுன்னு போராடுற நீ சுதந்திர தினத்த கண்டிப்பா எல்லா குடிமகனும் கொண்டாடணுமுன்னு போராடு. குடியரசு தினத்த எத்தன பேரு வீட்டுல கொண்டாடுறீங்க? காந்தி செத்த நாள எத்தன பேரு ஞாபகம் வச்சு பக்தியோடு அனுசரிக்கிறீங்க. FEB 14 அன்னைக்கு மட்டும் தான் லவ்வர்ஸ் கிஸ் அடிக்கிறாங்களா. கிப்ட் கொடுக்குறாங்களா. இல்ல அன்னைக்கு மட்டும் தான் தப்பு தண்டா நடக்குதா. என்னமோ மேற்கத்திய கலாசாரத்த ஒழிக்கிறேன்னு அன்னைக்கு ஒரு நாள் அதுவும் எங்கள மாதிரி அப்பாவி ஜீவன்கள புடிச்சு கல்யாணம் பண்ணி வச்சு போராடுற உனக்கெல்லாம் இது தான்டா சரியான தண்டனை. என் தோஸ்து கழுதைக்கு கூட கல்யாணம் பண்ணி வச்சதா கேள்விபட்டேன். அவங்களும் கொதிச்சு போய் தான் இருக்காங்க. இனி மேல் எவனாவது கலாசாரத்த காப்பாத்துறேன் கக்கூஸ கழுவுறேன்னு நாயுங்களுக்கோ இல்ல எங்கள மாதிரி வாயில்லா ஜீவன்களுக்கோ கல்யாணம் பண்ணி வச்சீங்க .....அப்புறம் இது தான்டா உங்க கதி."
என்ற தலைவன் நாய் சவால் விட சமீரா ரெட்டி தலைவன் நாய்க்கு ஒரு வீர சல்யூட் வைத்து "நான் காக்கி சட்ட போட்டு செய்ய வேண்டியத நீ எதுவுமே போடாம செஞ்சிருக்க" என்று கண் கலங்க சுபம்.
படத்தில் பின்னணி இசை இல்லை என்பது இந்த போராட்டங்களை முன்னணியில் நின்று நடத்தியவர்களுக்கு ஆறுதல்.
DISC: கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள் திரைப்படத்தின் கதை நிச்சயம் இதுவாக இருக்காது என்று உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை.
http://writervisa.blogspot.com

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1