புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் - எஸ் இராமசந்திரன்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தமிழக வரலாற்றில் தனது தொல்லியல் முதன்மையால் இடம்பிடித்த ஊர். இவ்வூர் தாமிரபரணியாற்றின் தென்கரையில், திருநெல்வேலி திருச்செந்தூர்ச் சாலையில் திருவைகுண்டத்துக்கு முன்னர், பொன்னன் குறிச்சி பேருந்து நிறுத்தத்தையடுத்து அமைந்துள்ளது. இவ்வூருக்கு ஆதிச்சநல்லூர் என்ற பெயர் எப்போது எப்படி ஏற்பட்டதென உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆயினும், இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆதிச்சநாடாழ்வான் என்ற பட்டப்பெயர் உடைய நிலைமைக்கார நாடார் குடும்பத்தவர் இருந்துள்ளனர் என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குதிரைமொழித்தேரி எள்ளுவிளையிலுள்ள கி.பி. 1639ஆம் ஆண்டுக் கல்வெட்டு, திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் மடத்து அச்சம்பாடு தேவபிச்சை நாடார் தோட்டத்திலுள்ள கி.பி. 1645ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஆகியவற்றில் ‘ஆதிச்ச நாடாவான்' என்ற பட்டப் பெயர் கொண்டோர் இடம்பெறுகின்றனர். குறிப்பாக, மடத்து அச்சம்பாடு கல்வெட்டின்மூலம் அச்சன்பாடு என்ற அவ்வூரைத் திருவைகுண்டம் கைலாசநாதர் கோயிலுக்கு மானியமாகக் கொடுத்தோருள் ஆதிச்ச நாடாவார்களும் அடங்குவர் எனத் தெரியவருகிறது. எனவே அவர்களுடைய பெயர்த் தொடர்பு இவ்வூருக்கு இருந்திருக்க வாய்ப்புண்டு.
முதலில் ஆதிச்சநல்லூர்ப் பறம்பு என்ற பெயர் பற்றி நான் ஆய்ந்து அறிந்த செய்தியைக் கூறிவிடுகிறேன். இப்பறம்பு 114 ஏக்கர் பரப்புள்ள, சீனிக் கல் பாறைகள் (Quartzite) நிரம்பிய மேட்டுநிலம் ஆகும் இப்பறம்பு அமைந்துள்ள இடத்தைத் தொட்டடுத்து ஆதிச்சநல்லூர் என்ற சிற்றூர் அமைந்திருப்பதால் இது ஆதிச்சநல்லூர்ப் பறம்பு என வழங்கப்படுகிறது. இப்பறம்பில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாகப் புதைக்கப்பட்டிருப்பதால் தாழிக்காடு என்றும் கூறப்படுவதுண்டு. இங்கு தாழிகளில் அடக்கம் செய்யப்பட்ட மனிதர்களின் வாழ்விடமாக இருந்த பேரூர் எது என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
ஆதிச்சநல்லூர் மிகச் சிறிய ஊர். நெல்லை - திருச்செந்தூர் ரயில்ப் பாதையில் ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் உள்ளது. ஆதிச்சநல்லூர்ப் பறம்பு 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே மிகப் பிரபலமாகிவிட்டதால் இந்த ரயில் நிலையம் உருவாக்கப்பட்டிருக்கலாம். (இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டபோது நிகழ்ந்த ஒரு சாதாரண நிகழ்வு இப்போது வேடிக்கையான செயல்பாடாக எஞ்சித் தொடர்கிறது. அது பற்றிப் பிறகு பார்க்கலாம்.) ஆனால் ஆதிச்சநல்லூர் என்பது வெள்ளூர் கஸ்பா என்ற வருவாய்க் கிராமத்தின் பிடாகையாகக் கருதப்பட்டு வெள்ளூர் ஆதிச்சநல்லூர் என்றே அடங்கல் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டு வருகிறது. வெள்ளூர் என்ற ஊர் கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்குரிய சுசீந்திரம் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது1. எனவே அவ்வூர் மிகப் பழமையான ஊரென்பது தெரியவருகிறது. 18-19ஆம் நூற்றாண்டுகளில் 'வெள்ளூர்க் கவிராயர் குடும்பம்' என்று பெயர் பெற்ற ஒரு புலவர் குடும்பத்தவரும் அக்குடும்ப வாரிசுகளும் இவ்வூரில் வாழ்ந்துள்ளனர். மேலும், வெள்ளூரிலுள்ள பெருமாள் கோயில் திடலில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு - சிவப்புப் பானையோடுகள் என்னால் சேகரிக்கப்பட்டன2. எனவே, ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் அடக்கமாகியிருக்கிற மனிதர்கள், வெள்ளூரில் வாழ்ந்தவர்களாக இருக்கலாம்.
1906ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்ட அலெக்சாண்டர் ரீ, தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கொங்கராயக் குறிச்சி என்ற ஊரே, இத்தாழிக்காட்டு முன்னாள் மனிதர்கள் வாழ்ந்த இடமாக இருந்திருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். தற்போது ஆதிச்சநல்லூர்ப் பறம்புக்கும் கொங்கராயக் குறிச்சிகுமிடையே மேற்கு - கிழக்காக ஓடுகிற தாமிரபரணி, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்போதிருப்பதைவிட வடக்கில் 2 கி.மீ. தொலைவில் கொங்கராயக் குறிச்சிக்கு வடக்கே ஓடியிருக்கலாம் என்று அலெக்சாண்டர் ரீ கருதியுள்ளார். இவ்வாறு ஆற்றின் போக்கு மாறியது - மாற்றப்பட்டது - பற்றி இப்பகுதியில் ஒரு கதை வழங்குகிறது. பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தாமிரபரணி வெள்ளத்தால் திருவைகுண்டம் ஊரும், கைலாசநாதர், கள்ளப்பிரான் கோவில்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவந்தன என்றும், செழுவனூர் வேளாளர் பொன்னப் பிள்ளை என்பவரின் முன்முயற்சியால் ஆற்றின் போக்கு மாற்றப்பட்டது என்றும், அவருடைய உதவிக்குக் கைமாறாக திருவைகுண்டத்தில் கோட்டையொன்று உருவாக்கப்பட்டு அக்கோட்டைப் பகுதியில் அவரது வர்க்கத்தார் குடியேற்றப்பட்டுக் 'கோட்டைப் பிள்ளைமார்' என அழைக்கப்படலாயினர் என்றும், அவருடைய நினைவைப் போற்றும் வகையில் ஆதிச்சநல்லூர்க்கு அருகில் பொன்னன் குறிச்சி என்ற ஊர் உருவாக்கப்பட்டதென்றும் அக்கதையில் கூறப்படுகின்றன. அக்கதையில் இடம்பெறும் பொன்னப் பிள்ளையைப் பற்றித் திருவைகுண்டம் கைலாசநாதர் கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 1441ஆம் ஆண்டுக்குரிய வீரபாண்டியனின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதென்றும், “செழுவனூர்ப் பிறவிக்கு நல்லான் பொன்னப் பிள்ளை” என்பது அவருடைய முழுமையான பெயரென்றும் முனைவர் கமலா கணேஷ், திருவைகுண்டம் கோட்டைப் பிள்ளைமார் பற்றிய தமது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.3
கொங்கராயக் குறிச்சி, பழமையான ஊரே. அவ்வூரில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்கட்டுமானம் ஒன்றினைத் தாம் கண்டதாக ரீ குறிப்பிட்டுள்ளார். அவ்வூரில் உள்ள விநாயகர் கோயில் வாயில் நிலையில் கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இரண்டு என்னால் கண்டறியப்பட்டன.4 அக்கல்வெட்டுகளின் மூலம், கொங்கராயக் குறிச்சியின் பழம்பெயர் ‘முதுகோனூர்' என்பதும், அக்கல்வெட்டுகள் ‘முன்றுறை வீரர் ஜினாலயம்' என்ற சமணப் பள்ளிக்குரியவை என்றும் தெரியவருகின்றன. சமண சமயம் பின்பற்றுவாரின்றி மறைந்துபோன பின்னர், இக்கல்வெட்டுகள் மட்டும் விநாயகர் கோயிலின் நிலைக்காலில் பொருத்தப்பட்டுவிட்டன எனத் தெரிகிறது. முன்றுறை வீரர் ஜினாலயத்தின் இறைவன் என்ன ஆனார் எனத் தெரியவில்லை. சற்றொப்ப 40 ஆண்டுகளுக்கு முன்னர்வரை ஆதிச்சநல்லூர்ப் பறம்பில் ஒரு சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் இருந்ததாகவும், இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஒருமுறை இப்பகுதிக்கு வருகைதந்தபோது இப்பறம்பையும் இங்கிருந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தையும் பார்வையிட்டுள்ளாரென்றும் இப்பகுதி மக்களால் பேசப்படுகிறது. அச்சிற்பமே கொங்கராயக் குறிச்சியிலிருந்த ஜைனப் பள்ளியின் தீர்த்தங்கரர் சிற்பம் போலும். அச்சிற்பம் இப்போது எங்கு உள்ளதெனத் தெரியவில்லை.
ஆங்கிலேய அரசு, மதராஸ் அரசாணை 867 - நாள்: 13.08. 1876 மூலம் ஆதிச்சநல்லூர்ப் பறம்பு பற்றிய ஒரு குறிப்பினைப் பதிவு செய்தது. அந்த ஆணையில் அரசு செயற்பொறியாளர் ஜே.டி. கிரான்ற் என்பவர், திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மாதேவி, தூத்துக்குடிக்கு மேற்கே புதுக்கோட்டை என்ற ஊரையடுத்து அமைந்துள்ள நல்லமலை, ஆதிச்சநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் முதுமக்கள் தாழிகள் புதையுண்ட நிலையில் காணப்படுவது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜாகோர் என்ற மானிடவியலாளர் ஆதிச்சநல்லூர்ப் பறம்பில் அகழாய்வு செய்து, ஆய்வில் கிடைத்த அரும்பொருள்களை பெர்லின் நகருக்கு எடுத்துச் சென்றார். (அவை Volkar Kunde அருங்காட்சியத்தில் உள்ளன.) இதனையடுத்து 1903-1904ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சுத் தொல்லியலாளர் லூயி லாப்பெக்யூ அகழாய்வு மேற்கொண்டு, கிடைத்த அரும்பொருள்களை பாரிஸ் நகர அருங்காட்சியகத்திற்குக் கொண்டுசென்றார். இதே காலகட்டத்தில் அலெக்சாண்டர் ரீ அகழாய்வு மேற்கொண்டு, 1906ஆம் ஆண்டில் அகழாய்வு அறிக்கை வெளியிட்டார். இந்த அகழாய்வின்போது கிடைத்த அரும்பொருள்களுள் பெரும்பாலானவை சென்னை அரசு அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டன. பொன்னாலான கழுத்தணி போன்ற ஓரிரு அரும்பொருள்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் மனைவியால் எடுத்துச் செல்லப்பட்டன. பழங்கலைப் பொருள்கள் பதிவுச் சட்டமோ, அகழாய்வு குறித்த திட்டவட்டமான வரையறைகளோ இல்லாமலிருந்த நிலை இத்தகைய நிகழ்வுகளுக்குத் துணைக் காரணங்களெனில், இந்நாடே தமது உடைமை எனக் கருதிய ஆங்கிலேயர்களின் ஆதிக்க மனப்பான்மையே முதன்மையான காரணம்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரும்பொருள்கள் பற்றிய ரீ அவர்களின் அறிக்கை, வரலாற்று ஆர்வலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திற்று. குறிப்பாக இங்கிருந்து கிடைத்த மனித மண்டையோடுகள், உடற்கூறு அடிப்படையிலான மானிடவியல் ஆய்வு மேற்கொள்வோருக்குச் சுவையான ஊகங்களைத் தூண்டுகிற பொருள்களாயின. அரும்பொருள்களுள் மட்கலன்களின் வகைப்பாடுகள், பிற பழமையான பண்பாட்டு அகழ்விடங்களில் கண்டறியப்பட்ட மட்கலன்களின் வகைகளுடன் ஒப்பிடப்பட்டுக் குடிப்பெயர்வுகள் பற்றிய ஊகங்களுக்கு வித்திட்டன. ஆனால் தமிழறிஞர்கள் இத்தகைய ஆய்வுகளையோ ஊகங்களையோ அதிகமாகப் பொருட்படுத்தவில்லை. சாத்தான்குளம் இராகவன் போன்ற இதழாளர்கள் ஆதிச்சநல்லூர் பற்றி விரிவான கட்டுரைகள் எழுதி இவ்வூரைப் பிரபலப்படுத்தினர் என்ற அளவில்தான் தமிழறிஞர்கள், தமிழக வரலாற்றறிஞர்களின் முயற்சி நின்று போயிற்று.
2003-2004ஆம் ஆண்டுகளில் இந்திய அரசு தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் தென் மண்டலக் கண்காணிப்புத் தொல்லியலாளர் தியாக. சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை அகழாய்வில் கிடைத்த அரும்பொருள்களை உலோகவியல், மானிடவியல் முதலிய துறை சார்ந்த வல்லுநர்களின் சோதனைக்கு ஆட்படுத்திச் சில முடிபுகளை அறிவித்துள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை இரண்டு: 1) உலோகங்களின் அறிமுகம், குறிப்பாக இரும்பின் அறிமுகம் கி.மு. 1000 ஆவது ஆண்டுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளது. கி.மு. 1500 அளவில் இருக்கலாம். 2) மண்டையோட்டு ஆய்வின் அடிப்படையில் கூறுவதானால், இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள மனிதர்கள் முன்னிலை நிக்ராய்டு, முன்னிலை ஆஸ்திரலாய்டு, மங்கோலாய்டு, இந்தோ ஐரோப்பிய (காகசாய்டு) இனங்களின் கலப்புக் கூறுகள் உடையோர். திராவிட இனம் என நம்பப்படும் மத்தியதரைக் கடற்பகுதி இனக்கூறுகள் மிகக் குறைவான அளவிலேயே (ஐந்து விழுக்காடு) உள்ளன.
மண்டையோடுகளை ஆராய்ந்து மேற்குறித்த முடிவினை வெளியிட்டவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கைத் தமிழர் திரு. பத்மநாதன் இராகவன். உலோகங்களின் பயன்பாட்டுக்கான கால வரையறையை நிர்ணயித்தலில் தியாக. சத்தியமூர்த்தி அவர்களுக்கு, கடல் சார் தொழில்நுட்பவியலுக்கான தேசிய நிறுவனத்தின் (National Institute of Ocean Technology) சென்னைக் கிளையைச் சேர்ந்த விஞ்ஞானி திரு. சசிசேகரன் உதவி புரிந்துள்ளார்.
தற்சமயம், இந்திய அரசின் தொல்லியல் பரப்பாய்வுத் துறை - தென் மண்டலக் கண்காணிப்புத் தொல்லியலாளர் திருமதி. சத்தியபாமா பத்ரிநாத் தலைமையிலான குழுவினரால் அகழாய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிகிறது.
ஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வின் வரலாற்றைப் படிக்கும்போதே ஓர் உண்மை விளங்கியிருக்கும். தமிழ்ச் சமூக வரலாற்றின் முதன்மையான ஆவணங்களாகக் கருதத்தக்க சங்க இலக்கியங்களையும், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும், பாண்டிய நாட்டின் மிகப் பழமையான வரலாற்று நிகழ்வுகளைப் புராண வடிவில் கூறுகிற திருவிளையாடற் புராணம் போன்ற இடைக்கால இலக்கியங்களையும் ஆதிச்சநல்லூர் ஆய்வு மூலம் கண்டறியப்பட்ட விடயங்களுடன் தொடர்புபடுத்தி ஆழமாக ஆராயப்படவில்லை. சங்க இலக்கியங்களிலும் மணிமேகலையிலும் தாழிகளைப் பற்றி வருகிற குறிப்புகளைப் பட்டியலிடுவது மட்டுமே நடைபெற்றுள்ளது.
சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் வீரயுகத்தின் கூறுகள் மிகுந்த அளவில் கலந்திருந்தன. ஆனால் முழுமையான வீரயுகச் சமூகம் என்று கூறஇயலாத வகையில், நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் கூறுகளும் பரவலாக இருந்தன. வீரர் குடியைச் சேர்ந்தவனான பாண்டிய மன்னன், ‘கொற்கைப் பொருநன்' (கொற்கைத் துறைமுகத்தின் போர்வீரன்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டாலும், அவன் பொருநராற்றுப் படை குறிப்பிடும் பொருநர் குடியைச் சேர்ந்தவன் அல்லன். பொருநர் குடி என்பது கழைக் கூத்தாடிகளையொத்த (சர்க்கஸ் வீரன் போன்ற) மற்போர், வாள்வீச்சு போன்ற போர் முறைகளில் தேர்ந்த நிபுணர் குடி. ஆனால் அரசர்கள் குடி என்பது சமூகப்படி நிலையில் மிக உயர்ந்த நிலையிலிருந்த குடியாகும். நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்படைகளை வழிநடத்துதல் போன்ற, ‘அரச தர்மம்' சார்ந்த முறையான உயர் கல்வியை அரச குடியினர் பெற்றிருந்தனர். அத்தகைய நிலையில் அரச குடியினர்க்கு மிக நெருக்கமான குடியினராகக் கருதப்பட்ட ஆசான் குடியினர் அல்லது ஆசிரியக் குடியினர் யாராக இருந்திருக்கலாம்? (தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப்படும்) அதங்கோட்டாசான் போன்றோரின் குலமாகக் கருதத்தக்க அரசகுலமும், சங்கறுத்து வளையல் செய்கிற நக்கீரரின் குலமாகிய கொல்லர் குலமுமே ஆசிரியர் குலம் எனக் குறிப்பிடத்தக்கவையாகக் தோன்றுகின்றன. இவ்விரு சமூகப் பிரிவினர்தவிர வானநூல், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் நிபுணர்களாக இருந்த வள்ளுவர் குலத்தவரும் ஆசான் பதவிக்குப் பொருத்தமானவர்களே. இவர்களுள் கொல்லர் சமூகப் பிரிவினைச் சேர்ந்த, சங்கறுத்து வளையல் செய்யும் பிரிவினர், ‘வேளாப்பார்ப்பனர்' (வேள்வி செய்யாத பிராமணர்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.5 நக்கீரர் பற்றிய பிற்காலக் கதைகள், அவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்ததோடு, “ஆரியம் நன்று தமிழ் தீது” என்றுரைத்த குயக்கோடன் என்பவனை மந்திரச் செய்யுளால் உயிரிழக்கச்செய்து பின்னர் மன்னித்து உயிர்ப்பித்தார் என்றும் குறிப்பிடுகின்றன.6 இத்தகைய பல குறிப்புகளைச் சங்க கால வாழ்வியலோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அரசர்களின் படைக் கலன்கள், மணிமுடி போன்றவற்றையும் அரியணை அல்லது அரசு கட்டில், அரண்மனை முதலானவற்றையும் உருவாக்கிப் படைத்தளித்த விஸ்வகர்ம சமூகத்தவரே ஆசான்களாக இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம்.
ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருள்களை உருவாக்கியவர்கள் சமூக அந்தஸ்தில் உயர்வாகக் கருதப்பட்ட ஆச்சார்ய மரபினராகவே இருந்திருக்க வேண்டும். இத்தகைய தச்சர் - கொல்லர் சமூகத்தவரின் தலைநகர இருக்கையாகத் திகழ்ந்தமையால்தான் (கொல்லுத் தொழில் இருக்கை) கொற்கை என்ற ஊர்ப்பெயர் உருவாகி இ¢ருக்கவேண்டும். கொற்கை, ஆதிச்சநல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொற்கையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் நக்கீரரை நினைவூட்டும் வகையில் கீரனூர் என்ற ஊரும் உள்ளது.
‘வேள்வி செய்யாத பார்ப்பனர்' எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுவது வேறொரு வகையிலும் கவனத்துக்குரியதாகும். வேள்விச் சடங்குகளைப் புறக்கணித்த வைதிக சமயத்தவரை விராத்யர் எனப் புராணங்களும், தர்ம சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. முதுமக்கள் தாழிப் பண்பாடு அதாவது இரும்பு யுகத்தை அறிமுகப்படுத்திய பெருங்கற்படைப் பண்பாடு என்பதே விராத்யர்களுடைய பண்பாடுதான் என்பது அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களின் கருத்து.7 கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட ‘சாதிநூல்', விஸ்வகர்ம சமூகத்தவரை ‘விராத்யர்' பிரிவிலேயே சேர்க்கிறது.8
விஸ்வகர்ம சமூகத்தவர் பலர், சமண பெளத்த சமயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அச்சமயங்களை ஆதரித்தனர். கருங்கல்லை மரணச் சடங்குகளோடு மட்டுமே வைதிக சமயம் தொடர்புபடுத்திற்று. பெருங்கற்படைப் பண்பாட்டின் அரச குருக்கள் மரபினரான விஸ்வகர்ம சமூகத்தவர், சமண பெளத்தப் பள்ளிகளை உருவாக்கவும், அப்பள்ளிகளுள் கற்படுக்கைகள் அமைக்கவும், கற்படுக்கைகள் அமைக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு எழுத்தின் மூலம் அறிவிக்கவும் செய்தனர். எழுத்து என்ற சொல் தொடக்கத்தில் ஓவியத்தையே குறித்தது. ஓவிய எழுத்துகளிலிருந்தே ஓரொலிக்கு ஓர் எழுத்து என்ற அகர ஆதி எழுத்துகள் உருவாயின. எனவே, ஓவியச் செந்நூல் உருவாக்கிய விஸ்வகர்ம சமூகத்தவரே எழுத்துகளை வடிவமைத்திருக்க வேண்டும். ‘கண்ணுள் வினைஞர்' எனச் சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடும் சொல்லாட்சியையும் எழுத்தினைக் குறிப்பதற்கு வடமொழியில் வழங்குகிற ‘அக்ஷரம்' (அக்ஷம் = கண்) என்ற சொல்லையும் ஒப்பிட்டால் இவ்வுண்மை புலப்படும். ‘அக்ஷசாலி' என்ற தொடரின் திரிபான ‘அக்க சாலி' என்பதே கன்னட மொழியில் பொற்கொல்லர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும்.
அரசர்களின் மனையை - அரண்மனையை வடிவமைக்கும் ஸ்தபதியை ‘நூலறி புலவர்' என நெடுநல்வாடை (வரி 76) குறிப்பிடுகிறது. சரியாகச் சொல்வதானால் அவர்கள் நூல் அறிபுலவர்கள் மட்டுமல்லர், நூல் உருவாக்கிய புலவர்கள். இத்தகைய விஸ்வகர்ம சமூகத்தவரின் பங்களிப்பு, சங்க காலச் சமூகத்தின் வாழ்வியலில் முதன்மையான ஒன்றாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாகச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களுக்கே, பாண்டிய அரசகுலம் உருவான காலப்பகுதியிலும் எழுத்தறிவு சார்ந்த நிர்வாக நடைமுறைகள் உருவான காலப்பகுதியிலும் விஸ்வ கர்ம சமூகத்தவர் தாம் குலகுருக்களாக இருந்திருக்க வேண்டும். அத்தகைய மக்கட் பிரிவினர் தாம் ஆதிச்சநல்லூரில் உலோக நாகரிகத்தை அறிமுகப்படுத்தினர் என்ற வரலாற்று உண்மையைப் பாண்டிய மன்னர்களின் முத்துபடு துறைமுகமாக இருந்த கொற்கை மூதூரின் வரலாற்றுடன் இணைத்து ஆராய்ந்தால்தான் தமிழக வரலாற்றின் தொடக்கப்பகுதி துலக்கமுறும். அத்தகைய ஆய்வில் தொல்லியல் அறிஞர்களும், தமிழறிஞர்களும் இணைந்து ஈடுபடவேண்டும் என்பதே நமது விண்ணப்பம்.
(ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் பற்றிய ஒரு வேடிக்கையான செய்தி: 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு ரயில் பாதை போடப்பட்டபோது, ஆழ்வார் திருநகரியிலிருந்த சடகோபாச்சாரியார் வைணவ மடத்துக்குரிய துண்டு நிலமொன்றின் ஊடாக ரயில் பாதை போடநேர்ந்தது. அம்மடத்தின் அதிபர், நிலத்தை ரயில்வே துறையிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார். பிரிட்டிஷ் அரசு, அந்நிலத்துக்கு வருட வாடகையாக நான்கணா கொடுப்பதாகத் தீர்மானித்தது. வைணவ மடாதிபதி அதனை ஏற்றுக்கொண்டார். நான்கணா ஆண்டு வாடகை, நானறிந்தவரை 2000ஆம் ஆண்டு வரை கொடுக்கப்பட்டு வந்தது. தற்போதும் தென்னக ரயில்வே சார்பில் 25 பைசா கொடுக்கப்பட்டு வருகிறதா எனத் தெரியவில்லை.)
அடிக்குறிப்புகள்:
1. “திருவழுதி வளநாட்டுத் திருவெள்ளூரில் சேனாவரையன் தத்தன் அந்தரி” - கோ மாறஞ்சடையனின் சுசீந்திரம் கல்வெட்டு (Travancore Archaeological Series Vol. III, no. 27.)
2. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கொற்கை அகழ்வைப்பகக் காப்பாட்சியராக நான் பணிபுரிந்தபோது 6. 10. 1995 அன்று கள ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்தது.
3. South Indian Inscriptions, Vol. V, no.736, quoted in “Boundary walls: Caste and women in a Tamil community”, Dr. Kamala Ganesh, South Asia Books, 1993.
4. 7 .03. 1999 அன்று கள ஆய்வில் கண்டறிந்த கல்வெட்டுகள்.
5. அகநானூறு
6. தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், ‘‘நிறை மொழி மாந்தர் ஆணையிற்கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப'' என்ற நூற்பாவுக்கான நச்சினார்க்கினியர் உரை.
7. ”Arguments for the Aryan origin of South Indian Megaliths”, Asko Parpola, Published by the State Dept. of Archaeology, Tamilnadu, 1970.
8. கமலை ஞானப்பிரகாசரின் ‘சாதிநூல்', பதிப்பாசிரியர்கள்: சந்திரசேகர நாட்டார், சண்முக கிராமணி, மயிலை, 1870. (உ.வே.சா. நூலகத்தில் அச்சுப்பிரதி உள்ளது.)

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|