புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இலவசங்களை வாரி இறைப்பதைப் போல்  விருதுகளை வாரி இறைத்திருக்கிறேனா? கலைஞர் பேச்சு !!! Poll_c10 இலவசங்களை வாரி இறைப்பதைப் போல்  விருதுகளை வாரி இறைத்திருக்கிறேனா? கலைஞர் பேச்சு !!! Poll_m10 இலவசங்களை வாரி இறைப்பதைப் போல்  விருதுகளை வாரி இறைத்திருக்கிறேனா? கலைஞர் பேச்சு !!! Poll_c10 
6 Posts - 50%
Dr.S.Soundarapandian

2 Posts - 17%
heezulia

Ammu Swarnalatha

1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

238 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
 இலவசங்களை வாரி இறைப்பதைப் போல்  விருதுகளை வாரி இறைத்திருக்கிறேனா? கலைஞர் பேச்சு !!! Poll_c10 இலவசங்களை வாரி இறைப்பதைப் போல்  விருதுகளை வாரி இறைத்திருக்கிறேனா? கலைஞர் பேச்சு !!! Poll_m10 இலவசங்களை வாரி இறைப்பதைப் போல்  விருதுகளை வாரி இறைத்திருக்கிறேனா? கலைஞர் பேச்சு !!! Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசங்களை வாரி இறைப்பதைப் போல் விருதுகளை வாரி இறைத்திருக்கிறேனா? கலைஞர் பேச்சு !!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 14, 2011 11:04 am

தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கும் விழா இன்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. இவ்விழாவில் முதல்வர் சிறப்புரையாற்றினார்.

அவர், ‘’தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் பாரதியார் பெயரால் விருது - எம்.எஸ். சுப்புலெட்சுமி பெயரால் விருது - பாலசரஸ்வதியின் பெயரால் விருது - மற்றும் கலைமாமணி விருதுகள் - சின்னத்திரை விருதுகள் ஆகியவற்றை வழங்குகின்ற இந்த விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உங்களையெல்லாம் சந்திக்கின்ற நல்ல வாய்ப்புக்காக மகிழ்ச்சியைத் தெரிவித்து, விருது பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பாரதி விருது பெற்ற அன்புக்குரிய நண்பரும், புரட்சி எழுத்தாளருமான நண்பர் ஜெயகாந்தன் அவர்கள், “இது ஒரு பொற்காலம்” என்று இந்த விழாவிலே குறிப்பிட்டார்கள். பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு - நடிகர்களுக்கு - என்று மாத்திரம் இல்லாமல், ஏழையெளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ - என்றைக்கும் அந்த நற்காலம் நீடிக்கின்ற நிலைமை ஏற்படுகிறதோ - அது தான் பொற்காலமாகும்.

இதைப் பொற்காலம் என்று நான் சொன்னால் - “நீ அப்படித்தான் சொல்லிக் கொள்வாய்; ஏனென்றால், ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற காரணத்தால், இந்த ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்று நீ கூறுவதிலே ஆச்சரியமில்லை” என்று நீங்கள் எண்ணக் கூடும் அல்லது சொல்லக் கூடும். ஆனால், நண்பர் ஜெயகாந்தன் அவர்கள் எதையும் விமர்சிக்கக் கூடியவர்; நாணயமாக விமர்சிக்கக் கூடியவர்; நேர்மையாக விமர்சிக்கக் கூடியவர்; அச்சத்திற்கு ஆட்படாமல் எந்தவிதமான சலுகைகளையும் எதிர்பாராமல், பட்டதை “பட்” என்று சொல்லக் கூடிய ஆற்றல் வாய்ந்தவர் என்னுடைய நண்பர் - எழுத்து வேந்தராகத் திகழ்கின்ற ஜெயகாந்தன் அவர்கள்.

அவர்கள் இதைப் பொற்கால ஆட்சி என்று சொன்னதை - தமிழகத்திற்கு இது பொற்காலம் என்று கூறியதை - இன்றைக்கு உங்களுக்கெல்லாம் வழங்கப்பட்ட பொன்னாலான பதக்கத்தை விட - அழகாக வரைந்த ஓவியங்கள் பொறிக்கப்பட்ட பட்டயங்களை விட - சிறந்த பரிசாக (கைதட்டல்) எனக்கு அவர் வழங்கிய பரிசாக நான் நன்றியோடு அதை எடுத்துக் கொள்கிறேன். (கைதட்டல்) நல்லவர்களுடைய வாழ்த்து - ஜெயகாந்தனைப் போன்ற தமிழ் வல்லுநர்களுடைய வாழ்த்து - இந்த ஆட்சிக்கு - எங்களுக்கு என்றென்றும் தேவை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 14, 2011 11:05 am

இங்கே நம்முடைய இளையராஜா அவர்களுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் பெயரால் அமைந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. பாரதியாருடைய பெயரால் அமைந்த விருது ஜெயகாந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாலசரஸ்வதியின் பெயரால் அமைந்த விருது பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுக்குரியவர்களுடைய பெயர்களை மாத்திரமல்ல; அவர்களையே நான் நேரடியாக அறிந்தவன்.

அவர்களோடு பழகியவன், அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தவன். அவர்களால் பாராட்டப்பட்டவன். இதிலிருந்து எத்தனை தலைமுறை நான் கடந்து வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட தலைமுறைக் கலைஞனாக - தலைமுறைகள் பலவற்றைக் கண்ட கலைஞனாக - வாழ்கிற நான் - பாரதி விருது பெற்ற ஜெயகாந்தனை வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்.

பாரதியைப் பற்றி விவரித்து, அவருடைய சிறப்புகளைச் சொல்லி, அவருடைய எழுச்சிமிக்க பாடல்களை எடுத்துக்காட்டி வர்ணிக்கத் தேவையில்லை. பாரதி என்றாலே பாரதி தான். அந்தப் பாரதியின் பெயர் - இந்திய நாட்டினுடைய விடுதலையை நினைக்கும் போதெல்லாம் தமிழகத்திலே ஒவ்வொரு தமிழனுக்கும் நினைவிலே வரக்கூடிய பெயர். அந்தப் பாரதியின் பெயரால் அமைந்த விருதை என்னுடைய அருமை நண்பர் ஜெயகாந்தனுக்கு அளித்ததில் - கொடுத்தவர்களுக்குத் தான் பெருமையே தவிர, பெற்றவர்களுக்குப் பெருமையல்ல என்பதை நான் இங்கே எடுத்துக்காட்ட (கைதட்டல்) விரும்புகிறேன்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் பெயரால் அமைந்த விருது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இங்கே உரையாற்றியவர் களுக்குச் சிறப்புப் பெயர்கள், பட்டப் பெயர்கள் - இவைகள் எல்லாம் அவர்களுடைய பெயர்களோடு இணைத்துக் கூறப்பட்டன.

நம்முடைய தம்பி வைரமுத்துவை உரையாற்ற அழைத்த போது, “கவிப் பேரரசு” வைரமுத்து உரையாற்றுவார் என்று இங்கே அழைக்கப்பட்டு, அவர் உரையாற்றினார். அந்தக் கவிப் பேரரசு என்ற சிறப்பு பட்டத்தை, அவருடைய கவிதை நூல்களை, அவருடைய கட்டுரைகள் தொகுக்கப்பட்ட நூல்களை, நான் படித்துப் பார்த்து மெய்மறந்து நான் பாராட்டிய வாசகம் தான் “கவிப்பேரரசு” என்பதாகும். கவியரசுகள் இருக்கிறார்கள் - தமிழ்நாட்டில்.

அந்தக் கவியரசுகளுக்கெல்லாம் பேரரசாக வைரமுத்து விளங்குகிறார் என்று “கவிப்பேரரசு” என்று நான் அன்றைக்கு வாழ்த்தினேன்.

அதைப்போலத்தான், நான் பட்டம் சூட்டி - அது நிலைத்து, புகழ் பெற்றவர்கள் பலர் உண்டு தமிழகத்தில். அதிலே ஒருவர்தான் இசைஞானி இளையராஜா அவர்கள் என்று சொன்னால், அது மிகையாது. காரைக்குடியில் நடைபெற்ற ஒரு விழாவில் இளையராஜாவிற்கு - “இசைஞானி” என்று இந்தப் பட்டத்தை வழங்குவதற்காக, சென்னையிலேயிருந்து, 300 கீ.மீ. தூரத்திற்கும் அதிகமாக நான் காரிலே பயணம் செய்து, காரைக்குடியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் - “இசைஞானி” என்ற இந்த விருதினை - பட்டத்தை அவருக்கு வழங்கினேன். அது இன்றும் நிலைத்து நின்று - வளர்ந்து வருகிற பட்டமாக ஆகியிருக்கின்றது.

பாலசரசுவதி அம்மையார் அவர்கள் நாட்டியக் கலையை எந்தளவிற்குச் சிறப்புற இந்தியத் திருநாட்டில் முத்திரைப் பதிக்கின்ற வகையில் நிலைநாட்டினார் என்பதையும், அவர் மறைந்த பிறகு - அவருக்கு ஈடாக ஒருவர் தோன்றக்கூடுமோ தமிழகத்தில் என்று எண்ணியிருந்த எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் - எங்களது எண்ணத்தை மாற்றி - “இதோ, பாலசரசுவதியினுடைய உருவத்தில் நான் இருக்கிறேன்” என்று நம்முடைய பத்மா சுப்பிரமணியம் அவர்கள் அந்தக் கவலையைப் போக்கியிருக்கிறார்கள். எனவேதான், அந்த விருது இன்றையதினம் பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

எனவே, பாரதி விருதானாலும், எம்.எஸ். சுப்புலட்சுமி விருதானாலும், பாலசரசுவதி விருதானாலும் - எதை ஒப்பிட்டு நீங்கள் அவருக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது வழங்கினீர்கள் என்று கேட்டால், சங்கீத ஞானத்தை ஒப்பிட்டு; குரலை ஒப்பிட்டு அல்ல. இசைஞானியினுடைய குரலுக்கும், எம்.எஸ். சுப்புலட்சுமியினுடைய குரலுக்கும் உள்ள வேறுபாட்டை நானும் அறிவேன் - நீங்களும் அறிவீர்கள் - ஏன், அவரும்கூட அறிவார்.

ஆனால், எம்.எஸ். சுப்புலட்சுமியினுடைய இசை ஞானம் - அந்த இசை ஞானத்தை அப்பழுக்கில்லாமல் அப்படியே பெற்றவர் நம்முடைய இளையராஜா என்பதிலே (கைதட்டல்) எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை. அவருக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது கொடுத்ததிலே நான் பெருமையடைகின்றேன் - மகிழ்ச்சியடைகின்றேன். அவருடைய தொண்டு மேலும் சிறக்க, இசை மேலும் புகழ் பெற, இந்த நாள் - விருது வழங்கிய இந்த நாள் - பயன்படும் என்று நான் நம்புகிறேன்.

ஜெயகாந்தன் அவர்களுக்கு - இனிமேல் அவர் எழுதி - அவர் எழுத்தாளர் என்று யாரும் ஒத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஜெயகாந்தன் என்றாலே, அவர் எழுத்தாளர்தான்; புரட்சிகரமான எழுத்தாளர்தான் என்று நாடு நன்கறியும். நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

ஒரு காலத்தில் எங்களைப் போன்றவர்கள் எழுதத் தொடங்கி - அவைகளெல்லாம் எங்கள் இயக்கத் தோழர்களால் படிக்கப் பெற்றபோது, ஜெயகாந்தன் எங்களை ஏற்றுக் கொண்டவரல்ல; எங்களை ஏற்றுக் கொள்ளாதவர்; எங்களுடைய எழுத்துக்களை அன்றையதினம் பாராட்டாதவர்; இன்றைக்குப் பாராட்டுகிறார் என்றால், நாங்கள் அப்படிப்பட்ட பாராட்டைப் பெறுவதற்கு குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்கின்ற அளவிற்கு அவர் எங்களைத் தாக்கி, மறுத்து எழுதியபோதெல்லாம் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றோம்.

ஏனென்றால் அவருடைய விமர்சனத்தில் பொருள் இருக்கும். அவருடைய விமர்சனத்தில் உண்மை இருக்கும். அவருடைய விமர்சனத்தில் தேவையற்ற வெறுப்பு இருக்காது, உண்மையை உள்ளவாறு எடுத்துக்காட்டி அதை விளக்கக் கூடியவர். இவருடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு நான் எழுத வேண்டுமே என்று ஒரு காலத்தில் நான் நினைத்தது உண்டு.

இப்போது ஜெயகாந்தனே ஒப்புக் கொள்கிற அளவுக்கு என்னுடைய எழுத்து இருக்கிறதென்றால், நான் கொடுத்து வைத்தவன் - நான் என்னையே பாராட்டிக் கொள்ளக் கூடிய அளவிற்கு அவர் இன்றைக்கு இந்த விழாவிலே இது பொற்காலம் என்று குறிப்பிட்டார்.

பொற்காலத்தைக் கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகின்ற சில பேர் இன்று நாட்டிலே இருக்கிறார்கள். இதைப் பொற்காலமாகவே ஆக்குவதற்கு ஜெயகாந்தனைப் போன்றவர்களுடைய எழுத்து பயன்படுமேயானால், இது பொற்காலமாகவும் இருக்க வேண்டாம்; கற்காலமாகவும் இருக்க வேண்டாம்; இது தமிழர்களுக்கு நற்காலமாக இருந்தால் போதும் (கைதட்டல்) என்பதைச் சொல்லி, அதற்கு ஜெயகாந்தன் அவர்களுடைய தமிழ்ப் பணி பயன்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

பத்மா சுப்பிரமணியம் அவர்கள் கலை மேதை - நாட்டிய மேதை - அவர்களுடைய நடன பாவங்களை - நாட்டிய பாவங்களை நான் பல மேடைகளில் கண்டு ரசித்திருக்கிறேன்; நீங்களும் ரசித்திருக்கின்றீர்கள். அப்படிப்பட்டருடைய அருமையான புகழுக்கும் - அவருடைய பெருமைக்கும் ஏற்றவாறு இந்த இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு ஏறத்தாழ 120 விருதுகள் - சின்னத்திரை கலைஞர்கள் உட்பட அத்தனை பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதில் கலைமாமணி விருதுகள் 75 பேருக்கு மேல் வழங்கப்பட்டிருக்கின்றன. காலையிலே ஒரு பத்திரிகையிலே பார்த்தேன்.

“இலவசங்களை வாரி இறைப்பதைப் போல் கருணாநிதி விருதுகளை வாரி இறைத்திருக்கிறார்” என்று ஒரு பத்திரிகையிலே கிண்டலாகப் போட்டிருந்தார்கள். இது ஒரு ஆண்டிற்கான விருதுகள் அல்ல; இரண்டு மூன்று ஆண்டுகளுக்கான விருதுகள் சேர்த்து வழங்கப்பட்டுள்ளன.

இலவசங்கள் என்று சொல்வதின் மூலமாக இந்த விருதுகளை அவர்கள் இழிவுபடுத்தியிருக்கிறார்கள். ஆனால், இலவசம் ஒரு ஏழைக்குக் கிடைத்தால், பசியோடு இருப்பவனுக்குக் கிடைத்தால், இல்லாதவனுக்குக் கிடைத்தால் என்ன மகிழ்ச்சி அடைவானோ, அந்த மகிழ்ச்சியை இந்த விருதுகளைப் பெறுகிறவர்கள் அடைவதை விட - இந்த விருதுகளை வழங்கிய நான் பெறுகிறேன் என்று நான் அவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்கிறேன்.

நான் அவர்களுக்கு பதில் அளிக்க விரும்புகிறேன். இந்த ஆண்டு 125 விருதுகள் தரப்பட்டிருக்கின்றன. அந்தப் பத்திரிகையின் கேலி, கிண்டலுக்குப் பிறகு - நான் அறிவிக்கிறேன் - நீங்கள் எல்லாம் அனுமதித்து, ஆறாவது முறை நான் பொறுப்புக்கு வந்தால் - 125 அல்ல, 225 விருதுகள் (கைதட்டல்) வழங்கப்படும்.

இந்த இனிய தருணத்தில் உங்களையெல்லாம் இந்த விழா மேடையிலே சந்திக்கவும், விழா நிகழ்ச்சியிலே கலந்து கொள்ளவும், நம்முடைய தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்றத்தினுடைய நண்பர்களும், கலைஞர்களும் உதவியதற் காக அவர்களுக்கெல்லாம் என்னுடைய வாழ்த்துகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இனிய விழாவிலே இது யாரோ புதியவர்களுக்குத் தரப்படு கின்ற விருதுகள் தானே, நமக்கென்ன வேலை என்றில்லாமல் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். போன்றவர்கள் எல்லாம் கூட - இவர்களுக்கு வாழ்த்து வழங்க வேண்டுமென்ற எண்ணத்தோடு இங்கே வந்திருப்பதற்காக அவர்களுக்கும் நான் என்னுடைய நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து இது மற்றவர்களும் பின் பற்ற வேண்டிய முறை என்பதையும் எடுத்துச் சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்’’ என்று உரையாற்றினார்.

நக்கீரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக