புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
156 Posts - 79%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Pampu
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
321 Posts - 78%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 5 of 32 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 18 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 2:16 am

`பார்த்தது' அக்காவை... `மணந்தது' தங்கையை..!

வெளியூரில் சொந்தத் தொழில் செய்யும் என் உறவினர் மகனுக்கு பெண் பார்க்க சென்றிருந்தோம். ஏற்கனவே இரு வீட்டாரும் பேசி முடிவாகி இருந்ததால் அன்றே திருமண நிச்சயதார்த்தத்தையும் நடத்த முடிவு செய்தோம். அதற்கான உறுதிப் பத்திரம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

உறவினருக்கு 27 வயதிலும், 23 வயதிலுமாக இரு மகள்கள். இளைய மகள் கால் ஊனமானவர். வீட்டிற்குள்ளேதான் அதிகம் இருப்பார். வெளியூர் செல்லும் போது மூன்று சக்கர சைக்கிளில் செல் வார். மூத்த மகள் எக் குறையும் இல்லாதவர். இளைய மகள் மாற்றுத்திறனாளி எனத் தெரிந்தால் மாப்பிள்ளை வீட்டார் மூத்தவளை பார்க்க வரமாட் டார்கள் என நினைத்து இவ்விஷயத்தை பெண் வீட்டார் மறைத்து விட்டனர்.

இந்த உண்மையை மாப்பிள்ளை எப்படியோ தெரிந்து கொண்டார். சபையில் பெரியோர்கள் உறுதி வாங் கும் போது எழுந்து, `எனக்கு மூத்த பெண் வேண் டாம். இளையவளை கொடுத்தால் திருமணம் செய்து கொள்கிறேன்' என அதிர்ச்சி குண்டை வீசினார்.

இதை கொஞ்சமும் எதிர்பாராத பெண் வீட்டார் தடுமாறினார்கள். மாப்பிள்ளை வீட்டில் இருந்து போனவர்களும் இதை எதிர்பாராததால் அதிர்ந்து தான் போனார்கள். இருதரப்புக்கும் தன்னிலை விளக்கம் அளிக்கும் விதத்தில் மாப்பிள்ளைப்பையன் இப்படிச்சொன்னார். "பெரிய மகளுக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. ஊனம் என்பதால் சின்னவளைத் திருமணம் செய்யத்தான் பலரும் தயங்குவர். என்றாலும் மூத்த பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு இளைய மகளை பெண் கேட்பதும் முறையல்ல. அதற்கும் ஒரு யோசனை வைத்திருக்கிறேன். மூத்த மகள் திருமணம் பேசி முடித்தபிறகு இரண்டு திருமணத்தையும் ஒரே மேடையில் வைத்துக் கொள்ளலாம். அதுவரை நான் காத்திருக்கிறேன்'' என்றார்.

மாப்பிள்ளை பையன் இப்படிச்சொன்னதும் பலித்தது. ஒரு மாதத்திலேயே மூத்த மகளுக்கும் மாப்பிள்ளை நிச்சயமானது. இரண்டு ஜோடிகளுக்கும் ஒரே நாளில் கோவில் ஒன்றில் திருமணம் நடந்தது. குடும்பத்தோடு சென்று மணமக்களை வாழ்த்தி ஆசீர்வாதம் செய்த போது அந்த மாப்பிள்ளைப் பையன் என் மனதில் ரொம்பவே உயர்ந்து நின்றார்.

எஸ்.பரிமளா, கோபிசெட்டிபாளையம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 2:17 am

சங்கடப்படுத்திய `ஸ்டவ் விளையாட்டு'

என் வீட்டில் கியாஸ் ஸ்டவ் சரியாக எரியாமல் `பட் பட்'டென்ற சத்தத்துடன் எரிந்தது. என் தோழி சொன்னபடி பணியாரம் குத்தும் கம்பியை வைத்து பர்னரின் துளைகளைக் குத்தியதுடன் சில பகுதிகளைக் கழட்டி என் வித்தைகளைச் செய்து பிறகு மாட்டினேன்.

மறுபடி ஸ்டவ்வைப் பற்ற வைத்ததும் கேஸ் வாடை வந்ததுடன், அதிக தீச்சுடருடன் கொழுந்து விட்டும் எரிந்தது. இதைப் பார்த்ததும் பதறிய என் கணவர், சட்டென ஒடிவந்து ஸ்டவ்வை அணைத்தார். என் தான்தோன்றித்தனமான செயல்பாட்டை தெரிந்துகொண்டு திட்டினார். `இதுபோல் கியாஸ் ஸ்டவ்வை தவறாக கையாண்டால் அது வெடித்துச் சிதறி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். முறையாக அதைப் பற்றித் தெரிந்தவர்களை அழைத்து சரி செய்வதே சரியான வழி' என்று எச்சரித்தார்.

யோசித்துப் பார்த்தபோதுதான் `நான் எத்தனை பெரிய முட்டாள்தனமான செயலை செய்திருக்கி றேன்' என்று புரிந்தது. முதல் வேலையாக மெக் கானிக்குக்கு போன் செய்து வரவழைத்து ஸ்டவ்வில் இருந்த குறைபாட்டை சரி செய்தேன். கண்டதுக் கெல்லாம் தோழிகளிடம் ஆலோசனைகேட்டு நம்ம வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளக்கூடாது என்பதை தெரிந்துகொண்டேன்.

எஸ்.சந்திரா, சென்னை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 2:17 am

கால் பிழைத்தது! பணம் பழுத்தது!

என் தோழி திருமணமாகி கரூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் தன் இரண்டு பெண்கள், ஒரு பையனுடன் வசிக்கிறாள்.

சில மாதங்களுக்கு முன்பு பிளஸ்-1 படிக்கும் தன்னுடைய பெரிய பெண்ணிற்கு கால்வலி என்று கூறினாள். நான் அவளிடம் `திருச்சிக்கு அழைத்து வா. ஸ்பெஷலிஸ்டிடம் காண்பிக்கலாம்` என்றேன். அவள் அம்மா வீடும் திருச்சியில் தான் இருக்கிறது. அதனால் அங்குள்ள டாக்டரிடம் காட்டலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் தோழியின் பெண்ணோ, தன்னால் ஸ்கூலுக்கு லீவு போட முடியாது என்று சொல்லி விட்டாள்.

இப்படியே 2 மாதம் கடந்து விட்ட நிலையில் தோழியின் மகளுக்கு திடீரென்று வலி அதிக மாக, பதறிப்போன தோழி மகளை அழைத்துக் கொண்டு திருச்சி வந்தாள். மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர் `எலும்பில் அடிபட்டிருக்கிறது. உடனே கவனிக்க வேண் டும். இல்லையென்றால் ஆபத்தாகி விடும்' என்றவர், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரைப் பார்க்கச் சொன்னார்.

அவர் பரிசோதித்து விட்டு `என்னம்மா இவ் வளவு அலட்சியமாய் இருந்திருக்கிறீர்கள்? எலும்புக்குள் சீழ்பிடித்து விட்டது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும். இதற்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். பணத்திற்கு ஏற்பாடு செய்து விடுங்கள். நாளையே ஆபரேஷன்' என்று கூறி விட்டார்.

எங்களைப் போன்று தெரிந்தவர்களிடம் பணத்தைப் பெற்று அந்தப்பெண் தன் மகளை மருத்துவமனையில் சேர்த்து விட்டாள். மிகவும் ஏழ்மையான குடும்பம் வேறு. மருத்துவர் அந்தப் பெண்ணின் காலைக் காப்பாற்றி, நடக்கும் அளவுக்கு செய்து விட்டார்.

அந்தப்பெண் சாதாரணமாக சைக்கிளில் செல்லும்போது கீழே விழுந்ததை வீட்டிற்கு சொல்லாமல் மறைத்திருக்கிறாள். வலிக்கும்போதெல்லாம் வலி நிவாரணியைத் தடவி, சமாளித்திருக்கிறாள். முதலிலேயே சிகிச்சைக்கு உடன்பட்டிருந்தால் இத்தனை அவஸ்தை யும் இல்லை. இவ்வளவு செலவும் இல்லை.

சந்திரா சிவபாலன், திருச்சி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 2:20 am


நகரும் படிக்கட்டில் விழுந்த பாட்டி


சில நாட்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நான் பார்த்து அதிர்ச்சி நிகழ்ச்சி இது.

ஆறுபேர் அடங்கிய ஒரு குடும்பத்தினர் லக்கேஜுடன் ரெயில் ஏற வந்தார்கள். அவர் கள் போகவேண்டிய ரெயில் அடுத்த பிளாட் பாரத்தில் நின்றதால் படியேறி போக வேண்டிய நிலை. அவர்கள் குடும்பத்தில் ஒரு மூதாட்டியும் இருந்தார். அவர் படியேறி போக சிரமம் என்ப தால் எல்லோரும் நகரும் படிக்கட்டு எனப்படும் எஸ்கலேட்டரில் ஏறினார்கள். அந்த மூதாட்டி இதற்கு முன் அத்தகைய படிக்கட்டுகளில் ஏறி யதே இல்லையாம். அதைப் பார்த்தது கூட இல்லையாம்.

நகரும் படிக்கட்டில் அவர் கால் வைத்ததும் அது நகர்ந்தபடி, போகவேண்டிய இடத்தில் கொண்டுசேர்க்கும் என்பதை அறியாதவராய் சாதாரணப் படிக்கட்டுகள் போல் ஏற ஆரம் பித்தார். அவ்வளவுதான் அப்படியே நகரும் படிக்கட்டில் விழுந்து விட்டார். படிக்கட்டுகள் நகர்ந்து கொண்டே இருந்தது. நல்லவேளை யாக யாரோ ஒருவர் நகர்ந்து கொண்டிருந்த படிக்கட்டுகளை நிறுத்தி விட்டார்.

மூதாட்டிக்கு கைகளிலும் முகத்திலும் சிறு காயங்கள்தான். ஆனால் மனத்தளவில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தார்.

பெரியவர்களை அழைத்து வரும்பொழுது அவர்களுக்கு எஸ்கலேட்டரை பயன்படுத்துவது பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களால் அதில் ஏற முடியவில்லை என்றால் சாதாரணப் படிக்கட்டுகளில் அழைத்துச் செல்ல வேண்டும். நம் அவசரத்திற்காக அவர்களை சிக்கலில் மாட்டி விடக் கூடாது.

எம்.எஸ்.தமிழ்மணி, சென்னை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 06, 2011 12:58 pm

காலம் மாறியது.. கவலை வந்தது..

திருமணமான என் உறவினர் ஒருவர், `நாமும் பிறர் போல வசதியாக வாழவேண்டும்' என்ற மனைவியின் ஆசையை கருத்தில் கொண்டு வெளிநாட்டுக்கு சென்றார். பணம் மட்டுமே அவருக்கு குறிக்கோளாக இருந்ததால் நீண்ட நாட்கள் ஊருக்கு வராமல் பணத்தை மட்டுமே அனுப்பிக் கொண்டிருந்தார்.

அந்த பணத்தில் அவரது மனைவி வீடு, தோட்டங்களை வாங்கினார். வசதி பெருகவே மனைவியின் உறவினர்களும் வந்து சேர்ந்து கொண்டார்கள். அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி மனைவி எல்லா சொத்துக்களையும் தனது பெயரிலேயே வாங்கினார்.

சொத்து சம்பாதிப்பதே குறிக்கோளாகிப் போனதால் கணவர் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையே நாடு திரும்பினார். அதை ஒரு பிரச்சினையாக்கி, அவருக்கு அங்கு வேறு பெண்களோடு தொடர்பு இருக்கும் என்று மனைவியின் உறவினர்கள் பேசினார்கள். அதை கேட்டுக்கேட்டு மனைவியும், கணவரை வெறுக்கத் தொடங்கினாள்.

சில வருடங்கள் கழித்து கணவர் நாடு திரும்ப, அவரை மனைவி சந்தேகக் கண்ணோடு பார்த்தாள். அவரை அலட்சியப்படுத்தவும் செய்தாள். பொறுத்துக்கொள்ள முடியாத கணவர் ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். `உன் சந்தேகம் அதுவானால் நான் வெளிநாட்டிலேயே இருந்து விடுகிறேன்' என்றுகூறிவிட்டு வெளிநாட்டுக்கு மீண்டும் போய் விட்டார்.

தன்னை மனைவி சந்தேகப்பட்ட ஆதங்கம், தான் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை அனுபவிக்க முடியாத கவலை எல்லாம் சேர்ந்து அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு காலப்போக்கில் மனநோயாளிபோல் ஆகிவிட்டார். உடல்நிலையும் கெட்டது. அதனால் அவருக்கு வேலை கொடுத்த நிர்வாகமே அவரை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பிவிட்டது.

இங்கோ மனைவி எந்நேரமும் தேள் கொட்டுவது போல் வார்த்தைகளால் கொட்டிக்கொண்டே இருந்தாள். இதனால் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டார்.

அதுவரை பொறுமையாக இருந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் பின்பு ஆளுக்கொரு சொத்தாக அபகரித்தனர். இப்போது அந்தப் பெண் கண்ணீரில் தத்தளிக்கிறாள்.

என்.சிவா, சென்னை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 06, 2011 12:58 pm


அடித்தது உடுக்கை... போனது உயிர்...


எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரவு பேய் விரட்டுவது போல உடுக்கு அடித்து பூஜை செய்யும் சத்தம் கேட்டது. மறுநாள் காலை என் கணவர் அவர்களிடம் சென்று, `நேற்று இரவு உங்கள் வீட்டில் உடுக்கு சத்தம் கேட்டதே?' என்று விவரம் கேட்டார். அவர்களோ `எங்க குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் உடுக்கு அடிப்பவரை அழைத்து வந்து பூஜை செய்தோம்' என்றார்.

அந்த நபரின் மகளும், என் மகளும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். சில நாட்களாக அந்த சிறுமி சளியினால் மூச்சு விடக்கூட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். இதனால் பள்ளியில் இருந்து தகவல் வர, பெற்றோர் போய் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அவர்கள் ஆஸ்பத்திரிக்குச் செல்ல தயாராக இருந்த நேரத்தில் விஷயத்தை கேள்விப்பட்டு நெருங்கிய உறவினர் ஒருவர் வந்திருக்கிறார். அவர்தான் தனக்கு தெரிந்த உடுக்கை ஆசாமியை கொண்டுவந்து பூஜை செய்தால் நோய் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார்.

அவர்கள் தவறான வழியில் சென்று கொண்டிருப்பதை அறிந்து நானும் சிலரும் சென்று, `குழந்தைக்கு மருத்துவம் பாருங்கள். உடுக்கை பூஜை எல்லாம் உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தாது' என்று சொன்னோம். அவர்களோ பிடிவாதமாக `உடுக்கை பூசாரி கொடுத்த தாயத்தால் குணமாகி விடும்' என்று எங்களை சமாதானம் செய்து அனுப்பி விட்டார்கள்.

2 நாட்கள் குழந்தை மூச்சுத்திணறலால் மிகவும் சிரமப்பட்டு அழுது கொண்டே இருந்தது. 3-ம் நாள் காலை குழந்தையின் அழுகை நின்று பெற்றோரின் அழுகை கேட்க, பதறிப்போய் பார்த்தோம். குழந்தை இறந்து போயிருந்தது.

ப.ரம்யா, கும்பகோணம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 06, 2011 12:59 pm

இதுதாண்டா போலீஸ்!

திருச்சி மத்திய பஸ் நிலையத்தின் அருகே அன்று பெருங்கூட்டம். அன்று வயலூர் முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு செல்ல நிறைய பக்தர்கள் காத்திருந்தார்கள். நிறைய ஷேர் ஆட்டோக்களும் நின்றிருந்தன. நாங்கள் வீட்டிற்கு செல்ல ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறினோம்.

அப்போது இரட்டைப்பிறவிகள் போல் காணப்பட்ட அழகான இரு குண்டு சகோதரிகள் ஒவ்வொரு ஷேர்-ஆட்டோ வாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் குறைந்தது 100 கிலோ எடையாவது இருப்பார்கள். அவர்கள் உருவத்தைப் பார்த்த டிரைவர்கள் அத்தனைபேருமே அவர்களை ஏற்றிக் கொள்ள மறுத்து விட்டார்கள். `ஆட்டோவில் ஏறிச் செல்லுங்கள். நீங்கள் இருவரும் இருந்தால் ஒரு ஆட்டோவே நிறைந்துவிடும்' என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

அந்த சகோதரிகள் முதலில் அங்கிருந்த ஆட்டோக்காரரை அணுகி, எவ்வளவு கட்டணம் என்று கேட்டிருக்கிறார்கள். அவர் அதிரடியாக ரூ.200 கேட்டதால், ஷேர்-ஆட்டோவில் ஒருவருக்கு ரூ.5 தானே கட்டணம் என்று இங்கு வந்திருக்கிறார்கள். ஆனால் இங்கோ அவர்கள் உடலைப் பார்த்து அவமரியாதை செய்துகொண்டிருந்தார்கள். வெயில் வேறு மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு பைக் அங்கே வந்து நின்றது. அதிலிருந்து, முறுக்கி விட்ட மீசையுடன் கம்பீர உருவமாக ஒரு டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் இறங்கினார். இரட்டை சகோதரிகள் ஷேர் ஆட்டோக்காரர்களால் புறக்கணிக்கப்பட்டதை தெரிந்துகொண்டு ஷேர்-ஆட்டோ டிரைவரை கடுமையாக எச்சரித்து ஆட்டோவில் அந்த சகோதரிகளை ஏற்றச் செய்தார். அதோடு, தன்னுடைய விசிட்டிங் கார்டையும் அவர்களிடம் கொடுத்து, ``உங்கள் இடத்தில் நீங்கள் போய் இறங்கும் வரை ஏதாவது பிரச்சினை என்றால் என்னுடைய நம்பருக்குக் கூப்பிட்டுச் சொல்லுங்கள்'' என்று சொல்லவும் செய்தார். நாங்கள் அவருக்கு ஒரு சல்ïட் அடித்தோம்.

கண்ணம்மா ராமசாமி, திருச்சி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 06, 2011 12:59 pm

நகையை தந்த நல்ல நடத்துனர்

நான் சென்னையில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். நான் வருடாவருடம் எங்கள் ஊர் திருவிழாவின்போது ஊருக்கு செல்வேன்.

அன்றும் திருவிழாவுக்கு சென்று விட்டு சென்னைக்கு திரும்புவதற்காக திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் நின்றேன். எல்லா பஸ்களிலும் பெருங்கூட்டமாக இருந்தது.

ஒரே ஒரு குளிர்சாதன பேருந்தில் மட்டும் இடம் இருந்தது. அதுவும் திருச்சி வரை மட்டுமே செல்லும் என்றார்கள். திருச்சியில் இறங்கி வேறு பஸ் ஏறி சென்னை செல்லலாம் என்று நினைத்து ஏறினேன். பஸ் புறப்பட்டதும் எனக்கு தூக்கம் வந்துவிட்டது.

திருச்சி பேருந்து நிலையம் வந்ததும் பயணிகளை உஷார் செய்வதற்காக ஒலிபெருக்கியில் `திருடர்கள் ஜாக்கிரதை' என்று அறிவித்துக்கொண்டிருந்தார்கள். நான் தூக்க கலக்கத்தில் பெட்டியை தூக்கிக்கொண்டு இறங்கினேன். கழிப்பறையை நோக்கிச் சென்றேன்.

அப்போது திடுக்கிட்டு என் கையை பார்த்தேன். இடது கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட்டைக் காணவில்லை. உடனே பதட்டத்தில் நான் வந்த பேருந்தை நோக்கி ஓடினேன். பேருந்தில் ஏறி முழு பஸ்சிலுமாக தேடினேன். கிடைக்கவில்லை.

வேதனையுடன் பஸ்சில் இருந்து இறங்கும்போது நடத்துனர் என்னை நோக்கி வந்தார். `என்ன தம்பி?' என்று கேட்டார். அவரிடம், `எனது கைசெயினை காணவில்லை' என்று கூறினேன். அதற்கு அவர் `எத்தனை பவுன்?' என்று கேட்டார். `நான்கு பவுன்' என்று சொன்னேன். `தம்பி இதுவா பார்' என்றபடி அவர் கையில் வைத்திருந்த கைசெயினை காட்டினார்.

அது எனது கைசெயினே தான். அதைப்பார்த்ததும் நான் பரவசமாகி, அந்த நல்ல கண்டக்டருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வாங்கிக்கொண்டேன்.

ஜி.தங்கபாண்டி, சென்னை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 11:42 pm

ஆண் `பேசி'னார்! பெண் நிறுத்தினாள்!

எனது உறவுப் பெண்ணொருத்தி சென்னை அலுவலகம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டு, அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்தாள். அவளுக்கு திருமணம் முடிவாயிற்று. மாப்பிள்ளையும் சென்னையில் வேலைபார்த்து வந்தார். இருவரின் சொந்த ஊரும் திண்டுக்கல்.

இரு வீட்டாரும் கலந்துபேசி திருமண தேதி முடிவு செய்ய, அதே வேகத்தில் பெண் வீட்டார் திருமண மண்டபத்திற்கு முன்பணம் தந்து விட்டனர். திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடந்துகொண்டிருந்தன.

திருமணம் முடிவான நாளில் இருந்தே மாப்பிள்ளை, பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசத்தொடங்கினார். மேலும் சினிமா, பீச், ஹோட்டல் என தன்னுடன் வரும்படி அழைத்தார். மணப்பெண்ணிற்கு இவையெல்லாம் வரம்பு மீறிய செயல்களாக தெரிந்தன. மேலும் இரவு 1 மணிக்கெல்லாம் பேசும்படி செல்போனில் அழைத்துள்ளார். அந்த நேரத்தில் பேசுவது உடன் தங்கியிருக்கும் பெண்களுக்கெல்லாம் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை அவள், தன் வருங்கால கணவரிடம் எடுத்துரைத்தாள்.

எத்தனையோ முறை அவள் நாசூக்காக கூறியும், பின்பு நேரடியாகவே எடுத்துரைத்தும் அவர் கேட்பதாக இல்லை. எந்த நள்ளிரவு நேரமானாலும், யார் அருகில் இருந்தாலும், தான் நினைக்கும் போதெல்லாம் தன்னிடம் பேசவேண்டும்- தான் அழைக்கும் போதெல்லாம் தன்னோடு வரவேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார். `இப்போதே இப்படி பொறுப்பின்றி கட்டாயப்படுத்துகிறவர், திருமணத்திற்குப் பிறகு எந்த நேரத்தில் எதுஎதற்கெல்லாம் கட்டாயப்படுத்துவாரோ' என நினைத்த அவள், பெற்றோரிடம் வந்து திருமணத்தை நிறுத்தும்படி கூறிவிட்டாள்.

பெற்றோர் மகளுக்கு புத்திமதி சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவள் கேட்கவில்லை. வருங்கால மாப்பிள்ளையின் எதிர்பார்ப்புகளால் அவள் அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தாள். திருமணத்தை நிறுத்தாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டிய பின்பு, உண்மைநிலையினை அறிந்து, திருமணத்தை அவளது பெற்றோர் நிறுத்திவிட்டார்கள்.

-கே.மகாலட்சுமி, திண்டுக்கல்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 11:43 pm


அண்ணனை ஏமாற்றினான்.. தானும் ஏமாந்தான்..!


எனது நண்பனும் நானும் வெளியூரில் இருந்து சென்னைக்கு படிக்க வந்தோம். ஒரே கல்லூரியில் மூன்று ஆண்டுகளாக படித்தோம். இப்போது இருவருமே ஆளுக்கொரு வேலையில் இருக்கிறோம்.

நாங்கள் கல்லூரியில் படித்த நாட்களில் மாத செலவுக்கு வீட்டில் இருந்து பணம் அனுப்புவார்கள். நண்பனின் குடும்பம் ஏழ்மையானது. அப்பா விவசாயி. அண்ணன் மேஸ்திரி வேலை செய்து கொண்டிருக்கிறார். அண்ணன் வருமானத்தில் தான் குடும்பமே நடந்து கொண்டிருந்தது. நண்பரின் அண்ணனுக்கு திருமணமாகி ஒரு பெண், ஒரு ஆண் என இரு குழந்தைகள் உண்டு. அந்த ஒரு நபரின் வருமானத்தில்தான் ஒட்டுமொத்த குடும்பமும் வாழ்ந்து கொண்டிருந்தது.

இதுதெரிந்தும் என் நண்பன் நிறைய பொய் சொல்லி செலவுக்கு பெருந் தொகையை அனுப்புமாறு கேட்பான். அவன் அண்ணனோ படிப்பறிவில்லாதவர் என்பதால் தன் தம்பி படித்து பெரிய ஆளாய் வருவான் என்று நம்பினார். அதனால் தம்பி கேட்கிற தொகையை கடன் வாங்கியாவது அனுப்புவார்.

ஆனால் என் நண்பனோ ஒழுங்காக படிக்காமல் படிப்பில் தோல்வியடைந்து விட்டான். அண்ணன் அனுப்பிய பணத்தில் குடிக்கப் பழகியவன் நாளடைவில் குடிக்கு அடிமையாகி, எங்களிடம் கடன் வாங்கி குடிக்கும் அளவுக்குப் போய் விட்டான்.

இப்போது என்ன நிலை தெரியுமா? அவனும், நானும் வேலைபார்க்கிறோம். ஆனால் அவன் வாங்கும் சம்பளம், குடிப்பதற்கே போதாத நிலை. தம்பி குடிகாரன் என்பது தெரிந்து, அந்த பாசமிகு அண்ணன் இடிந்துபோனார்.

என் நண்பனின் அண்ணன் தனது பெற்றோர் மற்றும் மனைவி, பிள்ளை என்று வாழ்ந்திருந்தால் இன்று நிச்சயம் அவர் நல்ல நிலையில் இருந்திருப்பார். தம்பியை முழுக்க நம்பியதால் இன்று அவரும் போராட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

-கே.விஜயன், பூந்தமல்லி,




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 32 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 18 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக