புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_lcapஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_voting_barஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_lcapஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_voting_barஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_lcapஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_voting_barஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_lcapஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_voting_barஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_lcapஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_voting_barஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_lcapஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_voting_barஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_lcapஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_voting_barஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_lcapஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_voting_barஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_lcapஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_voting_barஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_lcapஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_voting_barஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_lcapஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_voting_barஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_lcapஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_voting_barஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_lcapஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_voting_barஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_lcapஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_voting_barஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_lcapஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_voting_barஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_lcapஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_voting_barஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்


   
   

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Thu Feb 03, 2011 5:52 pm

First topic message reminder :

இங்கு ஏழு வித்தியாசமான அலைவரிசைகளில் உலகக்கோப்பை மற்றும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நேரடியாக ஒளிபரப்பாகும்.அதோடு இங்கு அப்போது நடக்கும் ஆட்டம் பற்றி கலந்துரையாடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.தயவு செய்து இந்த பக்கத்தின் இணைப்பை உங்களது அனைத்து நண்பர்களுக்கும் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மற்றும் தாங்களும் புக்மார்க் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.





My Website : ZolaHost

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Tue Mar 01, 2011 1:01 pm

புதுடில்லி : நெதர்லாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், கீமர் ரோச் "ஹாட்ரிக்' சாதனை படைக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 215 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகளில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து அணிகள் மோதின. "டாஸ்' வென்ற நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

சூப்பர் துவக்கம்:

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டேவான் ஸ்மித், கிறிஸ் கெய்ல் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்த போது, ஸ்மித் (53) அவுட்டானார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்ல், ஒருநாள் அரங்கில் தனது 43வது அரைசதம் கடந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டேரன் பிராவோ 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

போலார்டு அதிரடி:

அடுத்து வந்த சர்வானுடன் இணைந்த கெய்ல், 80 ரன்கள் (2 சிக்சர், 7 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் சர்வான், போலார்டு ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த போது சர்வான் (49) அரைசத வாய்ப்பை இழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சமி (6), சந்தர்பால் (4) சோபிக்கவில்லை. மறுமுனையில் அதிரடி காட்டிய போலார்டு 23 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உட்பட அரைசதம் கடந்தார். இவர் 27 பந்தில் 60 ரன்கள் எடுத்து அவுட்டானார். தாமஸ் (13), மில்லர் (11*) ஓரளவு ரன் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து சார்பில் சீலார் 3, புக்காரி 2 விக்கெட் வீழ்த்தினர்.

விக்கெட் "மடமட':

கடின இலக்கை விரட்டி நெதர்லாந்து அணியை பென், கீமர் ரோச் உள்ளிட்ட வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் மிரட்டினர். பென் சுழலில் கெர்வெஜீ (14) சிக்கினார். ரோச் வேகத்தில் பார்ரெசி "டக்-அவுட்' ஆனார். இங்கிலாந்துக்கு எதிராக சதம் கடந்த "ஆல்-ரவுண்டர்' டசாட்டே (7), இம்முறை சோபிக்கவில்லை. ஜுய்டெரன்ட் (1), டி குரூத் (1), கேப்டன் போரன் (10) உள்ளிட்டோரும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இதனால் நெதர்லாந்து அணி 56 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

கூப்பர் ஆறுதல்:

இந்நிலையில் டாம் கூப்பர், புக்காரி ஜோடி இணைந்து அணியை மீட்க போராடியது. பொறுப்பான ஆடிய டாம் கூப்பர், ஒருநாள் அரங்கில் தனது 6வது அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த போது புக்காரி (24) வெளியேறினார்.

"ஹாட்ரிக்' ரோச்:

பின்னர் வந்த சீலார் (1), லுயிட்ஸ் (0), வெஸ்ட்டிஜ்க் (0) உள்ளிட்டோர் கீமர் ரோச் வேகத்தில் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் நெதர்லாந்து அணி 115 ரன்களுக்கு சுருண்டு, தோல்வி அடைந்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோச் 6, பென் 3, சமி ஒரு விக்கெட் கைப்பற்றினர். "ஹாட்ரிக்' சாதனை படைத்த ரோச், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

போலார்டு அதிரடி

நெதர்லாந்து அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் போலார்டு, 23 பந்தில் அரைசதம் கடந்தார். இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், அதிவேக அரைசதம் கடந்த வீரர்கள் வரிசையில், 4வது இடத்தை சகவீரர் லாரா மற்றும் கனடாவின் ஜான் டேவிசனுடன் பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (20 பந்து, எதிர்-கனடா, 2007) உள்ளார்.

இவ்வரிசையில் "டாப்-5' வீரர்கள்:

வீரர் பந்து எதிரணி ஆண்டு

மெக்கலம் (நியூசி.,) 20 கனடா 2007
பவுச்சர் (தெ.ஆ.,) 21 நெதர்லாந்து 2007
பவுச்சர் (தெ.ஆ.,) 22 வெ.இ., 2007
லாரா (வெ.இ.,) 23 கனடா 2003
போலார்டு (வெ.இ.,) 23 நெதர்லாந்து 2011
டேவிசன் (கனடா) 23 நியூசி., 2007

--------

ரசிகர்கள் எங்கே?

நேற்று, டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த, வெஸ்ட் இண்டீஸ்-நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை காண அதிக அளவில் ரசிகர்கள் வரவில்லை. சுமார் 2000 முதல் 2500 வரை மட்டுமே ரசிகர்கள் வந்தனர். இதற்கு வாரத்தின் துவக்க நாள், பள்ளித் தேர்வு உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம். இங்கு கடந்த பிப். 24ம் தேதி நடந்த வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியின் மோது, சுமார் 10,000 ரசிகர்கள் வரை வந்திருந்தனர். தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கே இப்படி என்றால், வரும் 7ம் தேதி இங்கு நடக்கவுள்ள கனடா, கென்யா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ரசிகர்கள் எங்கே என தேட வேண்டிய நிலை வரலாம்.

--------

மூன்றாவது முறை

நெதர்லாந்துக்கு எதிராக 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக கோப்பை அரங்கில் மூன்றாவது முறையாக 300 அல்லது 300க்கு மேல் ரன்கள் குவித்தது. இது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக கடந்த 1987ல் இலங்கை அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 360 ரன்கள் குவித்தது. அதன்பின் கடந்த 2007ல் இங்கிலாந்துக்கு எதிராக 49.5 ஓவரில் 300 ரன்கள் எடுத்தது.

----

முதல் வீரர்

நெதர்லாந்தின் சீலார் (1), லூட்ஸ் (0), வெஸ்ட்டிஜ்க் (0) உள்ளிட்டோரை அடுத்தடுத்து அவுட்டாக்கிய கீமர் ரோச், உலக கோப்பை அரங்கில் "ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார். இதன்மூலம் இச்சாதனை படைத்த ஆறாவது சர்வதேச வீரர் என்ற பெருமை பெற்றார். தவிர இவர், இம்முறை "ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

இதுவரை "ஹாட்ரிக்' சாதனை படைத்தவர்கள்:

வீரர் எதிரணி ஆண்டு

சேட்டன் சர்மா (இந்தியா) நியூசி., 1987
லைன் முஷ்டாக் (பாக்.,) ஜிம்பாப்வே 1999
சமிந்தா வாஸ் (இலங்கை) வங்கதேசம் 2003
பிரட் லீ (ஆஸி.,) கென்யா 2003
லசித் மலிங்கா (இலங்கை) தென் ஆப்ரிக்கா 2007
கீமர் ரோச் (வெ.இ.,) நெதர்லாந்து 2011
* இதில் லசித் மலிங்கா, 4 பந்தில் 4 விக்கெட் கைப்பற்றினார்.

----

பிரமாண்ட வெற்றி

நெதர்லாந்து அணியை 215 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக கோப்பை அரங்கில் தனது பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக கடந்த 1987ல் இலங்கை அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே சிறந்த வெற்றியாக இருந்தது. தவிர இந்த வெற்றி, உலக கோப்பை அரங்கில் பதிவு செய்யப்பட்ட 6வது சிறந்த பிரமாண்ட வெற்றி என்ற பெருமையை, ஆஸ்திரேலிய அணியோடு பகிர்ந்து கொண்டது.

வெஸ்ட் இண்டீசின் "டாப்-3' பிரமாண்ட் வெற்றி:

ரன்கள் எதிரணி ஆண்டு

215 நெதர்லாந்து 2011
191 இலங்கை 1987
142 கென்யா 2003

---

உலக கோப்பை அரங்கில், பிரமாண்ட வெற்றி:

அணி ரன்கள் எதிரணி ஆண்டு

இந்தியா 257 பெர்முடா 2007
ஆஸி., 256 நமீபியா 2003
இலங்கை 243 பெர்முடா 2007
ஆஸி., 229 நெதர்லாந்து 2007
தெ.ஆ., 221 நெதர்லாந்து 2007
ஆஸி., 215 நியூசி., 2007
வெ.இ., 215 நெதர்லாந்து 2011
இலங்கை 210 கனடா 2011
பாக்., 205 கென்யா 2011
ஆஸி., 203 ஸ்காட்லாந்து 2007
இங்கிலாந்து 202 இந்தியா 1975

------------

ஸ்கோர் போர்டு

வெஸ்ட் இண்டீஸ்

ஸ்மித் (கே)பார்ரெசி (ப)லூட்ஸ் 53(51)
கெய்ல் (கே)கெர்வெஜீ (ப)டசாட்டே 80(110)
பிராவோ (கே)கெர்வெஜீ (ப)சீலார் 30(38)
சர்வான் எல்.பி.டபிள்யு.,(ப)வெஸ்ட்டிஜ்க் 49(42)
போலார்டு (கே)டசாட்டே (ப)புக்காரி 60(27)
சமி (கே)கெர்வெஜீ (ப)சீலார் 6(6)
சந்தர்பால் (ப)சீலார் 4(6)
தாமஸ் எல்.பி.டபிள்யு.,(ப)புக்காரி 13(13)
மில்லர் -அவுட் இல்லை- 11(7)
பென் -அவுட் இல்லை- 3(1)

உதிரிகள் 21

மொத்தம் (50 ஓவரில், 8 விக்.,) 330

விக்கெட் வீழ்ச்சி: 1-100(ஸ்மித்), 2-168(பிராவோ), 3-196(கெய்ல்), 4-261(சர்வான்), 5-278(சமி), 6-290(சந்தர்பால்), 7-312(போலார்டு), 8-326(தாமஸ்).

பந்துவீச்சு: புக்காரி 10-1-65-2, வெஸ்ட்டிஜ்க் 7-0-56-1, டசாட்டே 10-0-77-1, லூட்ஸ் 7-0-44-1, கூப்பர் 6-0-37-0, சீலார் 10-1-45-3.

நெதர்லாந்து

கெர்வெஜீ (ஸ்டெம்)தாமஸ் (ப)பென் 14(20)
பார்ரெசி (கே)கெய்ல் (ப)ரோச் 0(5)
கூப்பர் -அவுட் இல்லை- 55(72)
டசாட்டே எல்.பி.டபிள்யு.,(ப)பென் 7(6)
ஜுய்டெரன்ட் (ப)ரோச் 1(4)
டி குரூத் எல்.பி.டபிள்யு.,(ப)பென் 1(5)
போரன் (கே)போலார்டு (ப)சமி 10(28)
புக்காரி (ப)ரோச் 24(42)
சீலார் எல்.பி.டபிள்யு.,(ப)ரோச் 1(5)
லூட்ஸ் எல்.பி.டபிள்யு.,(ப)ரோச் 0(1)
வெஸ்ட்டிஜ்க் (ப)ரோச் 0(1)

உதிரிகள் 2

மொத்தம் (31.3 ஓவரில் "ஆல்-அவுட்') 115

விக்கெட் வீழ்ச்சி: 1-2(பார்ரெசி), 2-26(கெர்வெஜீ), 3-34(டசாட்டே), 4-35(ஜுய்டெரன்ட்), 5-36(டி குரூத்), 6-56(போரன்), 7-113(புக்காரி), 8-115(சீலார்), 9-115(லூட்ஸ்), 10-115(வெஸ்ட்டிஜ்க்).

பந்துவீச்சு: பென் 8-1-28-3, ரோச் 8.3-0-27-6, மில்லர் 7-0-23-0, சமி 7-0-33-1, போலார்டு 1-0-2-0.

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Tue Mar 01, 2011 1:04 pm

இந்தியாவுக்கு எதிரான போட்டியில், 17 ரன் எடுத்த போது "அவுட்' வாய்ப்பில் இருந்து தப்பிய இங்கிலாந்தின் பெல், 69 ரன்கள் எடுத்தார். இது இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆனால் யு.டி.ஆர்.எஸ்., முறைப்படி "ஸ்டம்சில்' இருந்து 2.5 மீ., வெளியே பந்து "பிட்ச்' ஆகி வந்ததால் "அவுட்' தரப்படவில்லையாம். இதுகுறித்து இயான் பெல் கூறியது:

யு.டி.ஆர்.எஸ்., முறையில் என்ன விதி உள்ளது என்று எனக்கு சரியாகத் தெரியாது. "ஹாக் ஐ' முறையில் பந்து "ஸ்டம்சை' தகர்ப்பது நன்றாக தெரிந்தது. எனக்கும் இது நன்றாகத் தெரியும். உண்மையை சொல்வதென்றால் ஆஷஸ் தொடரில் இதுபோன்ற பெரும்பாலான நேரங்களில் "அவுட்' தரப்பட்டது.

ஒருவேளை உலக கோப்பை தொடருக்காக யு.டி.ஆர்.எஸ்., முறையில் ஏதும் மாற்றம் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்நிலையில் மீண்டும் விளையாட நான்காவது அம்பயர் அனுமதித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான்.

இவ்வாறு பெல் கூறினார்.

-----------

சரியாக கணித்த வார்ன்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி "டை' ஆகும் என, ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் வார்ன் சரியாக கணித்துள்ளார். இதுகுறித்து போட்டி துவங்கும் முன் வார்ன் தனது "டுவிட்டர்' செய்தியில், "" இன்றைய போட்டியில் அதிக அதிரடிகள் நிறைந்ததாக இருக்கும். முடிவில் "டை' ஆகும். இதுதான் எனது கணிப்பு,'' என தெரிவித்துள்ளார். இதுகுறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டிராஸ் கூறுகையில்,"" வார்ன் உண்மையில் ஒரு "ஜீனியஸ்' ,'' என பாராட்டியுள்ளார்.

---

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Tue Mar 01, 2011 1:09 pm

நாக்பூர்: உலக கோப்பை லீக் போட்டியில் தைபு, எர்வினின் அபார ஆட்டம் கைகொடுக்க, ஜிம்பாப்வே அணி, கனடாவை 175 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் "ஏ' பிரிவு லீக் போட்டியில் ஜிம்பாப்வே, கனடா அணிகள் மோதின. இரு அணிகளும் முதல் போட்டியில் தோற்று இருந்ததால், வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கின. "டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகும்புரா, பேட்டிங் தேர்வு செய்தார்.

அபார ஆட்டம்:

ஜிம்பாப்வே அணியின் பிரண்டன் டெய்லர், முதல் பந்திலேயே அவுட்டாகி, அதிர்ச்சி கொடுத்தார். இதில் இருந்து மீள்வதற்குள் நட்சத்திர வீரர் சார்லஸ் கவன்ட்ரியும் (4) திரும்பினார். பின் ஜோடி சேர்ந்த தைபு, எர்வின் இருவரும் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களது அபார ஆட்டத்தினால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

தைபு அபாரம்:

அனுபவ வீரரான தைபு, ஹன்ஸ்ராவின் அடுத்தடுத்த ஓவர்களில் தலா 2 பவுண்டரிகள் விளாசினார். ரிஸ்வான் ஓவரிலும் பவுண்டரிகள் அடித்த இவர், ஒருநாள் அரங்கில் 17வது அரைசதம் அடித்தார். மறு முனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த எர்வினும், தன்பங்கிற்கு 2வது அரைசதம் கடந்தார். இந்த ஜோடியை பிரிக்க கனடா கேப்டன் எடுத்த முயற்சிகள் வீணானது.

நல்ல ஸ்கோர்:

மூன்றாவது விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்த நிலையில், எர்வின் (85) பாலாஜி ராவின் சுழலில் சிக்கினார். கேப்டன் சிகும்புரா (5) ஏமாற்றினார். தைபு 98 ரன்னில் அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். பின் வரிசையில் லாம்ப் (11), வில்லியம்ஸ் (30), உட்செயா (22) கைகொடுக்க, ஜிம்பாப்வே அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. பிரைஸ் (10), மபோபு (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
கனடா சார்பில் பாலாஜி ராவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பிரைஸ் அதிர்ச்சி:

கடின இலக்கை துரத்திய கனடா அணிக்கு, ஜிம்பாப்வேயின் ரே பிரைஸ், துவக்கத்திலேயே அதிர்ச்சி தந்தார். இவரது சுழலில் முதலில் டேவிசன் "டக்' அவுட்டானார். அடுத்து தடுமாறிய நிடிஸ் குமார் (1), கேப்டன் ஆஷிஸ் பகாயையும் (0) திருப்பி அனுப்பினார்.

கிரீமர் அபாரம்:

"மிடில் ஆர்டரில்' நீண்ட நேரம் போராடிய குணசேகரா, 24 (64 பந்து) ரன்கள் எடுத்தார். ஹன்ஸ்ரா (20), ரிஜ்வான் (14) இருவரையும் உட்செயா "கவனித்துக்' கொண்டார். பின் வரிசையில் கோர்டான் (7), குர்ரம் (8), பாலாஜி ராவ் (1) ஆகிய மூவரையும் கிரீமர் அவுட்டாக்கினார்.

கனடா அணி 42.1 ஓவரில் 123 ரன்னுக்கு சுருண்டு, 175 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜிம்பாப்வே சார்பில் பிரைஸ், கிரீமர் தலா 3, உட்செயா, லாம்ப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை ஜிம்பாப்வேயின் தைபு தட்டிச் சென்றார்.

--

16வயது வீரர்

உலக கோப்பை தொடரில் அறிமுகமாகி மிக இளவயது (16 வயது, 283 நாட்கள்) வீரர் என்ற பெருமையை கனடாவின் நிடிஸ் குமார தட்டிச்சென்றார். ஜிம்பாப்வேக்கு எதிராக துவக்க வீரராக களமிறங்கிய இவர், 10 பந்துகளில் 1 ரன் தான் எடுத்தார். இதற்கு முன், 2007 தொடரில் வங்கதேசத்தின் டால்கா ஜூபைர், 17 வயது 70 நாட்கள் ஆன போது, வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக களமிறங்கியுள்ளார்.

---

ஸ்கோர்போர்டு

ஜிம்பாப்வே

டெய்லர்-எல்.பி.டபிள்யு.,(ப)குர்ரம் 0(1)
கவன்ட்ரி-எல்.பி.டபிள்யு.,(ப)பெய்டுவான் 4(10)
தைபு(கே)டேவிசன்(ப)பாலாஜி 98(99)
எர்வின்(கே)பகாய்(ப)பாலாஜி 85(81)
சிகும்புரா(கே)பகாய்(ப)ரிஜ்வான் 5(8)
வில்லியம்ஸ்(கே)பகாய்(ப)பாலாஜி 30(25)
லாம்ப்(ப)பாலாஜி 11(13)
உட்செயா(கே)ஹன்ஸ்ரா(ப)குர்ரம் 22(29)
கிரீமர்(ப)பெய்டுவான் 26(23)
பிரைஸ்-அவுட் இல்லை- 10(6)
மபோபு-அவுட் இல்லை- 3(5)

உதிரிகள் 4

மொத்தம் (50 ஓவரில் 9 விக்.,) 298

விக்கெட் வீழ்ச்சி: 1-0(பிரண்டன் டெய்லர்), 2-7(கவன்ட்ரி), 3-188(எர்வின்), 4-193(சிகும்புரா), 5-201(தைபு), 6-219(லாம்ப்), 7-240(வில்லியம்ஸ்), 8-281(உட்செயா), 9-284(கிரீமர்).

பந்து வீச்சு: குர்ரம் 10-0-44-2, பெய்டுவான் 9-0-47-2, ஹன்ஸ்ரா 4-0-41-0, ரிஜ்வான் சீமா 9-0-51-1, பாலாஜி ராவ் 10-0-57-4, டேவிசன் 8-0-56-0.

கனடா

டேவிசன் (ப)பிரைஸ் 0(8)
குமார்(கே)+(ப)பிரைஸ் 1(10)
குணசேகரா(ப)லாம்ப் 24(64)
பகாய்(கே)வில்லியம்ஸ்(ப)பிரைஸ்) 0(1)
ஹன்ஸ்ரா (ஸ்டெம்)தைபு(ப)உட்செயா 20(41)
ரிஜ்வான் (கே)கிரீமர்(ப)உட்செயா 14(10)
சர்காரி(ஸ்டெம்)தைபு(ப)லாம்ப் 26(48)
கோர்டன் -எல்.பி.டபிள்யு.,(ப)கிரீமர் 7(20)
குர்ரம்-எல்.பி.டபிள்யு.,(ப)கிரீமர் 8(22)
பெய்டுவான்-அவுட் இல்லை- 13(23)
பாலாஜி(ப)கிரீமர் 1(6)

உதிரிகள் 9

மொத்தம் (42.1ஓவரில் ஆல்-அவுட்) 123

விக்கெட் வீழ்ச்சி: 1-1(டேவிசன்), 2-7(நிடிஸ் குமார்), 3-7(பகாய்), 4-50(ஹன்ஸ்ரா), 5-50(குணசேகரா), 6-66(ரிஜ்வான்), 7-78(கோர்டன்), 8-97(குர்ரம்), 9-122(சர்காரி), 10-123(பாலாஜி).

பந்து வீச்சு: மபோபு 5-1-12-0, பிரைஸ் 8-4-16-3, உட்செயா 7-0-24-2, லாம்ப் 8-0-29-2, கிரீமர் 9.1-1-31-3, வில்லியம்ஸ் 5-0-11-0.

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Tue Mar 01, 2011 1:11 pm

கொழும்பு: உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய லீக் போட்டியில், வலுவான இலங்கை அணி பலவீனமான கென்யாவை சந்திக்கிறது. 2003 தொடரில் அடைந்த தோல்விக்கு இம்முறை இலங்கை பழிதீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய துணைக்கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 14 அணிகள், இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.

இன்று நடக்கும் 14வது லீக் ("ஏ' பிரிவு) போட்டியில் சங்ககராவின் இலங்கை அணி, கமன்டேவை கேப்டனாக கொண்ட கென்ய அணியுள் மோதுகிறது. இது பகலிரவு போட்டியாக இலங்கையின் கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் நடக்கிறது.

இலங்கை நம்பிக்கை:

முதல் போட்டியில் கனடாவை எளிதாக வீழ்த்திய இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிராக சொதப்பியது. இதனால் இன்றைய போட்டியில் வென்று காலிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கி கொள்வார்கள் என்று தெரிகிறது. இதற்கேற்ப துவக்க வீரர்கள் தில்ஷன், தரங்கா இருவரும் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். "மிடில் ஆர்டரில்' ஜெயவர்தனா, கேப்டன் சங்ககரா மீண்டும் எழுச்சி காணலாம். பின்வரிசையில் சமர சில்வா, சமரவீரா, மாத்யூஸ் ரன்குவிப்புக்கு உதவ வேண்டும்.

மலிங்கா வருவாரா:

முன்னணி பவுலர் மலிங்கா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு "ரெடியாகி' விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், இவர் களமிறங்கவில்லை. இன்று எப்படியும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் கடந்தமுறை சொதப்பிய குலசேகரா ஆறுதல் தரலாம். சுழல் ஜாம்பவான் முரளிதரன், மீண்டும் எழுச்சி கண்டால் இலங்கை அணிக்கு நல்லது. தவிர, மாத்யூஸ், பெரேராவும் அணிக்கு உதவலாம்.

கென்யா எதிர்பார்ப்பு:

இத்தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட "கத்துக்குட்டி' அணிகளில் ஒன்றான கென்யா, முதல் போட்டியில் 69 ரன்னுக்கு சுருண்டது. பின், பாகிஸ்தானுக்கு எதிராக 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த இரு போட்டிகளிலும் மொத்தம் 57 ஓவர்கள் தான், பேட்டிங் செய்துள்ளனர். இதனால் இன்று ஒபுயா, மவுரிஸ், வாட்டர்ஸ், டிக்காலோ, மிஸ்ரா, ராகேப் படேல் உள்ளிட்ட வீரர்கள் ஆறுதல் தந்தால், மீண்டும் இலங்கையை வீழத்தலாம்.

பவுலிங்கில் தாமஸ் ஒடாயோ, நெகேமையா, ஒடியனோ, நிகோகே போன்றவர்கள் இலங்கை அணிக்கு சிக்கல் தரலாம்.

பழி தீர்க்குமா?

கடந்த 2003 உலக கோப்பை தொடரில் கென்யாவிடம் அடைந்த தோல்விக்கு, இம்முறை சொந்தமண்ணில் வைத்து பழிதீர்க்க, இலங்கை அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தவிர, மேலும் ஒரு தோல்வி என்பது காலிறுதி வாய்ப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பதால், இலங்கை வெற்றி பெற தீவிரமாக போராடும்.
தவிர, இரண்டு தோல்வியடைந்த கென்ய அணியும், மூன்றாவது தோல்வியை தவிர்க்க முயற்சிக்கும் என்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.
---

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Tue Mar 01, 2011 1:14 pm

இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில், ஒரு ஓவர் தாமதமாக பந்துவீசிய இங்கிலாந்து அணியினருக்கு, ஐ.சி.சி., "மேட்ச் ரெப்ரி' ரோசன் மகானமா அபராதம் விதித்துள்ளார். ஐ.சி.சி., 2.5.1 விதியின் படி, தாமதமாக பந்துவீசும் அணிக்கு அபராதம் விதிக்கப்படும். இதன்படி இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராசுக்கு 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் போட்டி சம்பளத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டது.

---

பிரசனனுக்கு எச்சரிக்கை

இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில், பியுஸ் சாவ்லா வீசிய 48வது ஓவரின் கடைசி பந்தில், இங்கிலாந்தின் டிம் பிரசனன் "கிளீன்' போல்டானார். இதனால் ஆத்திரமடைந்த பிரசனன், தனது பேட்டால், ஸ்டைம்சை தாக்கினார். ஐ.சி.சி., 2.1.2 விதியின் படி, போட்டியின் போது கிரிக்கெட் சாதனங்கள், உடை, மைதானம் மற்றும் அதன் சாதனங்களை சேதப்படுத்துவது குற்றமாகும். முதன்முறையாக பிரஸ்னன், இதுபோன்ற செயலில் ஈடுபட்டதால், எச்சரிக்கையோடு தப்பினார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் அரங்கேறினால், தண்டனைக்கு ஆளாவார்.

---

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Tue Mar 01, 2011 1:17 pm

பெங்களூரு: பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய உலக கோப்பை லீக் போட்டி பெங்களூருவில் நடந்தது. அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரித்ததில், இதில் தொடர்புடைய மேலும் நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ. 7 லட்சம், லேப் டாப், மொபைல் போன்கள், "டிவி', கம்ப்யூட்டர் என ஒட்டுமொத்தமாக 17 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 1:17 pm

கிரிக்கெட் குறித்த அனைத்துத் தகவல்களின் தொகுப்பிற்கு நன்றி விஸ்வா!



உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 4:02 pm

கென்யா 150 ரன்களைக் கடக்குமா? 50 ஓவர்களை முடிக்குமா?

20.2 ஓவர்களுக்கு 64/2



உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 4:38 pm

30.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு கென்யா 100 ரன்கள் எடுத்துள்ளது!



உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Mar 01, 2011 4:41 pm

உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 678642 உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 678642




உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள் - Page 8 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக