புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_m10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_m10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10 
77 Posts - 36%
i6appar
மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_m10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_m10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_m10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_m10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_m10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_m10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_m10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_m10மக்கள்நாயகி-அருந்ததிராய்-1 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள்நாயகி-அருந்ததிராய்-1


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Feb 02, 2011 2:38 pm

உலகின் பெரும் மக்களாட்சி நாடு என போற்றப்படும் நம் நாட்டில், குற்றவாளிகள் கூட நிம்மதியாய் இருக்க, குறிவைக்கப்படுவதெல்லாம் சனநாயகவாதிகளே. ‘உன்னைப் பற்றிச் சொல்; உன் நண்பனைப் பற்றிச் சொல்கிறேன்’ என்ற புராணகால பழமொழியை செவி வலி எடுக்குமளவிற்கு கேட்டுப் புளித்துப்போன நமக்கு, இந்த விஞ்ஞான யுகத்திலும் இன்றைய சில விடயங்களை இம்மொழியின் ஒளியிலேயே ஆராய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

அந்த வகையில், கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் அனைத்து நாளிதழ்கள் மற்றும் காட்சி ஊடகங்களுக்குத் தீனியிட்டு, அரசால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும், பெரும்பாலான ஊடகங்களால் ‘துரோகி’ எனவும், காசுமீர் பற்றிய கருத்து கூறலின் மூலம் தேசத்துரோக வழக்கை சந்திக்கவும் தயாரான எழுத்தாளர் மற்றும் சிறந்த் சிந்தனையாளர் அருந்ததி ராயின் நண்பர்களாக ஆதிவாசிகள், பழங்குடியினர், அநீதி இழைக்கப்படும் மக்கள் மற்றும் மனித உரிமைகளுக்காக நாட்டின் பல பகுதிகளிலும் போராடிக் கொண்டிருக்கும் இதர சனநாயகவாதிகள் உள்ளனர்.

அதேநேரம் தன்னை ஏழைப் பங்காளன் எனச் சொல்லும் நம் அரசின் நண்பர்கள் டாட்டாக்கள், மிட்டல்கள், அம்பானிகள், அனில் அகர்வால் மற்றும் வாரன் ஆண்டர்சன்கள். இதில் எந்தக் கூட்டணி, தர்மத்தின் பக்கம் நிற்கிறது என மக்கள் யோசிக்க துவங்கும்போது எத்தகைய கேள்விகளுமின்றி உண்மை தானாகவே விளங்கிவிடும். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பதுதான் சிரமம்.

அத்துயரில் ஊடகங்களின் பங்கு முதன்மையானது. செய்திகளைச் சொல்லுகின்ற ஊடகங்கள் உண்மையைச் சொல்லுகிறதா என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. ஆனால், எதைச் சொல்ல வேண்டும் என ஊடகங்கள் தீர்மானிக்கின்றனவோ, பெருமளவு அதுவே செய்தியாகிறது என்பது சிலருக்கு மட்டுமே புரிந்த ஒன்று. அச்சிலர், பலருக்கு புரியவைக்க முயலும்போதுதான் அரசு இயந்திரங்களும், முதலாளித்துவமும் இந்துத்துவ சக்திகளும் ஒன்றுசேர்ந்து சாதாரண மனிதர்களைக் குற்றவாளிகளாக்கும் போக்கு, இன்றைய நடைமுறையில் உள்ள மற்றொரு விடயம்.

பொதுவாகவே, நாளிதழ்களைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு ஒரு விடயம் புலப்படக்கூடும். இப்போதெல்லாம் ‘இசுலாமியத் தீவிரவாதம்’ என்ற கருத்துருவாக்கம் மறைந்து, ‘மாவோயிட்டு தீவிரவாதம்’ பற்ரிய கருத்துகளே உல்லவுகின்றன. தொடர்ந்து தண்டவாளங்கள் கற்களைப் பிரசவித்தன.

ஆனால், வடகிழக்கு மாகாணங்களில் நடக்கும் அச்சண்டையை(Operation Green Hunt) ‘இந்தியாவின் இதயத்தின் மீது நடக்கும் போர்’ என்கிறார் அருந்ததி ராய். மட்டுமல்ல, ‘இந்த அரசுதான் தாக்குதல் தொடுக்கிறது. உங்களது கண்கள் இம்மக்களுக்காக கண்ணீர் சிந்தட்டும். இந்த அரசை நினைத்து வெட்கப்படுகிறேன்’ என தம் கைகளுக்கான இரும்பு வளையங்கள் தயாராவது குறித்தும் கவலைப்படாமல், மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும் என்ற இலட்சிய வேகத்தில் எது குறித்தும் அவர் அச்சமற்றுப் போகுமளவிற்கு அப்பகுதிகளில் என்னதான் நடக்கிறது? ஏன் ராய் இவ்வளவு கடுமையாகப் பேச வேண்டும்?

Operation Green Hunt என்பதை பசுமை வேட்டை அல்லது காட்டுவேட்டை என்கின்றனர். 2004 இல் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடனே பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட கருத்துகளில் “மாவோயிட்டுகள் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்; என்பதும் ஒன்று. அதனைத் தொடர்ந்து சத்தீசுகர், யார்கண்ட், ஒரிசா மற்றும் மேற்குவங்கத்திலிருந்து சுரங்க நிறுவனங்களுடைய பங்குகளின் விலை திடீரென உயர்ந்தது.

2005, யூன் மாதம், பசுதாரில் டாடாவுடன் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், மளமளவென காரியங்கள் நடைபெறத் துவங்கின. தொடர்ந்த நாட்களில் சிறிய சுரங்க நிறுவனங்கள் முதல் உலகின் மிகப்பெரும் சுரங்க மற்றும் இரும்பு நிறுவனங்களான மிட்டல், வேதாந்தா, யிண்டால், எசார், போசுகோ, ரியோடிண்டோ, பி.எச்.டி.பில்லிடன் வரை அனைத்து நிறுவனங்களுடன் பல நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது நம் இந்திய அரசு. அதாவது, ஏறக்குறைய அப்பகுதி மக்களின் வாழ்விடங்கள் அனைத்தும் இப்போது தனியார்மயம்.

அம்மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய கனிமங்களில் பிரதானப் பங்கு பெறுவது பாக்சைட். ஒரிசாவில் மட்டும் உள்ள பாக்சைட்டின் இன்றைய மதிப்பு, சுமார் 200 இலட்சம் கோடி. இதனுடன் சத்தீசுகர் மற்றும் யார்கண்டில் புதைந்திருக்கும் பலகோடி டன் உயர்தர இரும்புத் தாதுகளின் மதிப்பையும் மற்றும் யூரேனியம், டாலமைட், நிலக்கரி, வெள்ளீயம், கிரானைட், மார்பிள், செம்பு, வைரம், தங்கம், க்வாட்சைட், கோரண்டம், பெரில், சிலிக்கான், புளூரைட், கார்னைட் உள்ளிட்ட 28 அரிய வகை கனிம வளங்களைத் தோண்டியெடுக்க, மேற்சொன்ன நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள மதிப்பீட்டுத் தொகையையும் கூட்டினால் கிடைக்கும் பல நூறு இலட்சங்கோடி ரூபாயைக் கொள்ளையிடத்தான் நம் நாட்டில் அடியெடுத்து வைத்துள்ளன, பன்னாட்டு நிறுவனங்கள்.

மேலும், முதலாளிகளின் நலம் நாடும் நம் அரசும் அவர்கள் உடனே பலன்பெற வேண்டுமென்பதற்காக அம்மண்ணின் பூர்வீக குடிகளான, இன்னும் சரியாகச் சொன்னால், இந்தியா தோன்றுவதற்கு பன்னெடுங்காலம் முன்பிருந்தே இந்த நிலத்தையும், அங்குள்ள ‘நியம்கிரி’ என்ற மலைத்தொடரையும், தாயகம் என்ற உணர்விற்கும் மேலாக, ‘வழிபடுவதற்குரிய நிலம்’ என்ற உணர்வோடு வாழ்ந்து வரும் டோங்கியா, கோண்டு இன மக்களைக் கொன்றேனும் இம்மண்ணைப் பன்னாட்டு நிறுவனங்களிடன் ஒப்படைக்கத் தயாராகிவிட்டது, நம் அரசாங்கம் என்கிறார், ராய்.

இதிலுள்ள மற்றொரு உண்மை என்னவெனில், இப்பெரும் தொகையில் அரசுக்கு ராயல்டியாகக் கிடைப்பது வெறும் 7 சதவீதம் மட்டுமே. மீதமெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களில் வங்கிக் கணக்கிற்கு செய்கூலி சேதாரமில்லாமல் முழுமையாகப் போய்ச் சேர்ந்துவிடும்.

சரி, முதலாளிகள் அந்நிலத்தை நேசிக்கக் காரணம், கனிம வளங்கள். ஆனால், அம்மக்கள் ஏன் தங்களின் உயிரைவிடவும் அந்நிலத்தையும், அம்மலையையும் நேசிக்க வேண்டும்? ஏனெனில், அம்மக்களின் பாரம்பரியமான வாழ்வாதாரமே அந்த மலைகளில் நிறைந்திருக்கும் வற்றாத நீர்ச் சுனைகள்தான். ’யரனா’(jarana) என்றால் அவர்கள் மொழியில் ‘நீர்ச்சுனை’ என்று அர்த்தம். அதன் காரணமாகவே அம்மக்கள் தங்களை ‘யார்னியர்கள்’(jarniyarkal)(நீர்ச்சுனையின் புதல்வர்கள்) என்றும் அழைத்துக்கொள்வதுண்டு.

மேகத்திலிருந்து நீரைப்பெற்று அதனை தம்மில் சேமித்துவைத்து, அதன் காரணமாகவே விளைந்த அடர்காடுகளைக்கொண்டு மீண்டும் மீண்டும் மழையை மண்ணிற்கு இறங்கச் செய்து, வற்றாத அருவிகளையும், நீர்ச் சுனைகளையும் தங்களுக்கு அளித்துக் கொண்டிருக்கும் அம்மலையை, தங்களின் வழிபாட்டிற்குரிய காரணியாகவே காண்கின்றனர் அம்மக்கள். எனவே, அவர்கள் அதனை காக்கத் துடித்ததில் வியப்பேதுமில்லை. ஆனால், அதற்கு அவர்கள் கொடுத்த விலை?

2005இல் டாடா, எசார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானவுடனே, மறுநாள் யூன் 2005இல் ‘சால்வாயூடும்’ என்ற பெயரில் பழங்குடியினரைக் கொண்ட அம்மக்களை ஒடுக்குவதற்காக கூலிப்படையொன்று களமிறக்கப்பட்டது. இத்துடன் பல்வேறு பெயர்களுடன் இயங்கும் சிறப்புக் காவல் படைகள்,(காசுமீர் இராணுவத்தைப் போல் சிறப்பு அதிகாரம் பெற்றவை), சி.ஆர்.பி.ஃப்., பி.எசு.ஃப்., என்ற படைகளும், கொடூரமான செயல்களைக் கட்டவிழ்த்துவிடும் ‘நாகா பட்டாலியன்” என்ற படையும் களமிறக்கப்பட்டன.

இதுவுமில்லாமல், இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையும் ஆயிரக்கணக்கான துணை இராணுவமும் தயாராய் இருக்கின்றன. சல்வாயூடும் தனது நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்தே இதுவரை 700 கிராமங்கள் சுடுகாடாக்கப்பட்டுள்ளன. தாண்டே வாடாவின் காடுகள் நெடுகும் கொலை, பாலியல், வன்முறை, குடியிருப்புகளுக்குத் தீயிடுதல் என… இது வரை 3 இலட்சம் பேர்களைத் தங்கள் வீடுகளை இழந்து ஓடச் செய்திருக்கிறது இந்தக் கூலிப்படை.

இந்தப் படையின் நோக்கமே, எப்படியேனும் இந்த மக்களை அம்மணிலிருந்து விரட்டி, சுரங்க வேலை தொடங்குவதற்கு இடத்தைக் காலி செய்து கொடுப்பதுதான். மேலும், இப்படைக்கு ஆயுதத்தையும், ஆதரவையும் அரசே வழங்குவதுதான் இதன் உச்சகட்ட சோகம்.

2008இல் வால்கரை மீட்டபோது அனாதையான 50 கிராம மக்களை இன்னும் அவர்களின் சொந்த கிராமத்தில் குடியமர்த்தவில்லை. இந்த நிலங்களில் ஏராளமான இராணுவ முகாம்களை நிறுவியுள்ள அரசு, பன்னாட்டு நிறுவனங்களிடம் அதனை ஒப்படைக்க காத்திருக்கிறது.

”காட்டுவேட்டை என்ற பெயரில் ஒரு பாதுகாப்புப் படை ஒரு வீட்டினுள் நுழைந்து, முதியவரையும் அவர் மனைவியையும் மகன் மற்றும் 15 வயதுடைய மகளையும் குத்திக் கொன்றனர். எந்த சண்டையுமற்ற சூழ்நிலையில், ஏன் அவர்கள் எங்கும் ஓடக்கூட முயற்சிக்காத நிலையில், காவல்துறையும், கருநாகப் படையும் அவர்களைக் கொன்றனர். இரண்டு வயதேயான ஒரு குழந்தையைத் துப்பாக்கியின் அடிக்கட்டையால் இடித்து அதன் பல்லை உடைத்தனர். நாக்கை அறுத்தனர். பின் அதன் சின்னஞ்சிறு விரல்களை வெட்டி எறிந்தனர். உயிரெடுப்பதற்கு முன் மூதாட்டியின் மார்பகங்களை அறுத்தெறிந்தார்கள்” என்று கூறுகிறார் இமான்சு குமார். இவர், தாண்டேவாடா மாவட்டத்தில், ‘வனவாசி சேத்னா’ எனும் பெயரில் ஆசிரமம் நிறுவி, ஆதிவாசிகளுக்கு சேவை புரிந்து வருபவர்.

கடந்த சனவரி மாதம் பல்வேறு மனித உரிமை குழுக்கள் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட அருந்ததி ராய், அங்கு பேசியவர்கள், “வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால் அப்புறப்படுத்தப்பட்ட 5 கோடி மக்களில் ஒரு சிறு பகுதியளவு மக்களைக்கூட வேறு இடங்களில் மீள் குடியமர்த்துவதற்கு தன்னால் முடியவில்லை” என கைவிரித்த இந்த அரசால், 300க்கும் மேற்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு மட்டும் 140000 எக்டேர் வளமான நிலத்தை திடீரென எப்படி அத்தொழிலதிபர்களுக்கு வழங்க முடிந்தது” என கேள்வியெழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வெறிக்கொண்டு பொங்கும் இந்த பேராசைக்கு வளைந்து கொடுத்ததன் மூலம், நமது சுற்றுச்சூழலை பலி கொடுத்து, பிற நாடுகளின் பொருளாதாரங்களுக்குத் தான் நாம் வலிமை சேர்க்கிறோம் என்பதுதான் ராயின் கருத்து. அதேநேரம், இந்தப் போர் தம்மை எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை என்று யாரேனும் எண்ணிக்கொண்டிருந்தால் அவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளட்டும். இப்போரின் கோரப்பசி விழுங்கப்போகும் தீனி, நாட்டின் பொருளாதாரத்தையே உறிஞ்சி ஊனமாக்கிவிடும் என்ற ராயின் வாதம், யதார்தத்தை நம் முகத்தில் அறைந்து செல்கிறது.

சுரங்கம் தோண்ட மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள பல நிறுவனங்களின் தனிச் சிறப்பு வாய்ந்தது வேதாந்தா. காரணம், வேதாந்தாவின் தில்லுமுல்லுகளைவிடவும் சுவாரசியமானது, அந்நிறுவனத்திற்கும் நமது ஆட்சி மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்குமிடையேயான ‘வசீகர உறவு’. வேதாந்தா, இலகின் முன்னனி சுரங்க நிறுவனங்களில் ஒன்று. இது, இலண்டனில், முன்னர் ஈரான் மன்னருக்குச் சொந்தமான ஆடம்பர மாளிகையில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாடுவாழ் இந்தியரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமானது.

இன்று காட்டுவேட்டையைத் தலைமையேற்று நடத்துபவரான நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கார்பரேட் வழக்கறிஞராகத் தொழில் செய்தபோது பல்வேறு சுரங்க நிறுவனங்கள் சார்பில் வாதாடியவர். மேலும், மேற்குறிப்பிட்ட வேதாந்தா நிறுவனத்தில் நிர்வாகம் சாரா இயக்குநனராகவும், பதவி வகித்தவர். 2004 இல் மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகுதான், அவர் வேதாந்தா இயக்குனர் பதவியிலிருந்து விலகினார்.

நிதி அமைச்சராகப் பதவியேற்றவுடன், வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு அவர் அளித்த அனுமதியில் முதன்மையானது, Twinstar holdings என்ற மொரிசீயசு நிறுவனத்துக்கு வழங்கிய அனுமதிதான். ஆனால், அந்நிறுவனம் வாங்கிய பங்குகளோ, வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான சிடெர்லைட் நிறுவனத்தின் பங்குகள்தான் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. மாண்புமிக்கவே இப்படியெனில், நீதித்துறை?


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Feb 02, 2011 2:46 pm

ஒரிசாவைச் சேர்ந்த மனித உரிமை செயல் வீரர்கள் வேதாந்தாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கொன்றில், நிறுவனம் அரசின் வழிகாட்டு நெறிகளை மீறியிருப்பதையும், சுற்றுச்சூழலை நாசப்படுத்தியதையும், மனித உரிமை மீறல்களையும் சுட்டிக் காட்டியதுடன், நார்வே நாட்டின் ஓய்வூதிய நிதியம் கூட அந்நிறுவனத்தில் போட்டிருந்த தனது முதலீட்டை திரும்பப் பெற்றுக்கொண்டதையும் சான்றாக எடுத்துக் கூறினார்கள்.

உடனே, அவ்வழக்கை விசாரித்த நீதிபதி கபாடியா’ “அப்படியானால் வேதாந்தாவிற்கு பதிலாக அதன் துணை நிறுவனமான சிடெர்லைட்டுக்கு உரிமத்தை மாற்றிவிடலாம்.” என்றதோடு, “நானும்தான் சிட்ர்லைட்டின் பங்கை வைத்திருக்கிறேன்” என தான் அமர்ந்திருப்பது நீதி வழங்கும் ஆசனம் என்பதைக் கூட மதிக்காமல், சர்வ அலட்சியமாக பதிலளித்தார்.

மேலும் உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுனர் குழுவே காடுகளை அழித்து சுரங்கம் தோண்டினால் சுற்றுச்சூழலில் பேரழிவு நிகழும் என்று எச்சரித்ததையும் கண்டுகொள்ளாமல், காடுகளை அழித்து 200 இலட்சம் மதிப்புள்ள பாக்சைட்டை தன்னகத்தே கொண்டுள்ள சிடெர்லைட்டுக்கு தாராள மனதுடன் அனுமதி அளித்தார். ‘அதன் பங்குகளை வைத்துள்ளேன்’ என்று சொன்ன நீதிபதி கபாடியா.

இப்போது இந்த காட்டுவேட்டையின் உண்மை நோக்கம் என்ன? இதனால் பலனடையப் போகிறவர்கள் யார்? இவ்வளவு உக்கிரமாய்த் தாக்குதல் நடைபெறும் பின்னணி என்ன? இதில் பாதிக்கப்பட்டு நிர்மூலமானவர்கள் யார்? என்ற ஒரு கோட்டுச் சித்திரம் நமக்குக் கிடைத்திருக்குமே? சரி.

இந்த இடத்தில்தான் அருந்ததி ராயின் செயல்பாடுகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. இது குறித்து அவர் அயராது எழுதிய கட்டுரைகளும், கலந்துக்கொண்ட கருத்தரங்குகளும், மனித உரிமைப் போராளிகளின் கூட்டங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளும், அக்காடுகளுக்குச் சென்று அம்மக்களின் நிலையை எழுத்தில் வடித்துக் காட்டியதும், இப்போரில் மறைந்துள்ள மறுபக்கத்தை வெளிகொணர்ந்தன. தொடர்ந்து இப்போர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் ஒரு மறு பிம்பத்தை கட்டமைத்தது.

அமெரிக்க முன்னாள் அதிபரான புசின் எளிய போர்க்கால தத்துவமான “நீ எங்களோடு இல்லையென்றால்; எங்கள் எதிரிகளோடு இருக்கிறாய்” என்ற கூற்றை, நம்மால் புரிந்துகொள்ள முடியுமென்றால் ராயை, நமது அரசு ‘மாவோயிட்டுகளின் கூட்டாளி’ என அழைப்பதற்கான காரணத்தையும் நம்மால் எலிதில் விளங்கிக்கொள்ள இயலும்.

மேலும் யோசிப்போமானால், பழங்குடி மக்களைத் துன்புறுத்தி, விரட்டியடித்து அந்த நிலங்களைக் கப்பற்றுவதற்கு, கார்பரேட் முதலாளிகளின் விருப்பமே காரணம் எனில், சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை நிறுத்திவைத்துள்ளதற்கு, ‘இராமர் பாலம்’ என்று இந்துத்துவா சக்திகளின் விருப்பமே காரணமாகும். அப்படியெனில், இது கார்ப்பரேட் முதலாளிகள் – இந்துத்துவ சக்திகளைச் சுற்றிச் சுழலும் துணைக் கோள் என இந்த அரசை ராய் விமர்சித்தது சரியா தவறா?

அடுத்தது, அருந்ததி ராயைக் கடும் விமர்சனத்திற்குள்ளாக்கிய காசுமீர் விவகாரம் குறித்த பேச்சு, உள்ளூர் எழுத்தாளர் முதல் உலக எழுத்தாளர்கள் வரை காசுமீரில் நடக்கும் இராணுவ அட்டூழியங்களை பக்கம் பக்கமாக எழுதியிருந்தாலும், காசுமீர் குறித்த ராயின் கருப்பொருள் ’காசுமீரை உரிமை கொண்டாட இந்தியாவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை’ என்பதாகும்.

கடந்த மாதம் ‘காசுமீர்: சுதந்திர நாடா, அடிமை நாடா’ என்ற தலைப்பில்நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், “காசுமீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல; காசுமீர் ஒருபோதும் இந்தியாவின் அங்கமாக இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. இந்திய அரசுக்கும் இது தெரியும். இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்றதும் இந்தியாவுக்கு காசுமீர் மீது காலனியாதிக்கம் செலுத்தும் எண்ணம் இருந்ததால்தான், இந்தியாவுடன் காசுமீர் இருக்கிறது” என்றார், அருந்ததி.

அவ்வளவுதான், தேசபக்தி உணர்ச்சியில் துடித்தெழுந்தன, ஊடகங்கள். ராய் பிரிவினையைத் தூண்டுகிறார். இறையாண்மைக்கு எதிராகப் பேசுகிறார்; அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பொங்கின. அதிலும் ஒரு தமிழ் நாளிதழ், “இப்படி ஒரு கருத்தரங்கம் நடத்த அனுமதி கொடுத்துவிட்டு, கைது-வழக்கு என பேசுவதெல்லாம் கேலிகூத்து” என எழுதியது. இது ஒரு சனநாயக நாட்டில் சனநாயகத்தையே மறுக்கும் ஊடக தர்மம். மற்றபடி பா.ச.க. எதிர்ப்பு தெரிவித்தவுடன், அதன் மகளிரணியினர், டெல்லி சாணக்கியபுரியில் உள்ள ராயின் வீட்டிற்கே சென்று சுற்றுச் சுவரை சேதப்படுத்தியும், பூந்தொட்டிகளை உடைத்தும் தங்களின் ‘வழக்கமான சனநாயகத்தை’ நிலைநாட்டினர்.

நக்சல்களிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே வடகிழக்கு மாகாணங்களில் சண்டை நடக்கிறது எனும் அரசின் கூற்றை, காட்டுவேட்டையின் நடவடிக்கைகள் மற்றும் ராயின் வாதங்களோடு உரசிப் பார்ததைப் போல, இந்திய மக்களாட்சியின் தரத்தை உரசிப்பார்க்கும் மற்றொரு உரைகல்லே காசுமீர்.

காசுமீரின் வரலாற்றை எழுத மூன்றே மூன்று வாக்கியங்கள் அல்ல; வார்த்தைகள் போதும். ’ஏமாற்றம்; துரோகம்; நயவஞ்சகம்’.

காசுமீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது அங்கு ஆட்சி செய்துகொண்டிருந்த அரிசிங் என்ற இந்து மன்னருக்கு, மவுண்ட் பேட்டன், காசுமீர் மக்களின் விருப்பத்தைக் கண்டறியும் ஒப்புதல் வாக்கெடுப்பு நடைபெற்ற பிறகே இணைப்பு இறுதி செய்யப்படும் என 27.10.1947ல் கடிதம் எழுதினார். மேலும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக வந்த நேரு, “காசுமீர் மக்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள். ஐ.நா.சபையின் மேர்பார்வையில் அம்மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும்” என உலகநாடுகளிடம் அவர் அளித்த வாக்குறுதியை நினைவுகூற இன்று எவருமே இல்லை. இன்னும் காசுமீர் மக்களுக்கு வரையறுக்கப்பட்ட சுயாட்சி வழங்கப்பட்டு அதற்காக அரசியல் சட்டப்பிரிவில் 370வது பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டது.

ஆனால், அதற்கு அடுத்த வருடத்திலிருந்தே (1953) அம்மக்களை அச்சுறுத்தியும் சூழ்ச்சிகளாலும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டு அதை ஒரு இராணுவ அரசாக மாற்றியபின், 1956இல் காசுமீரில் வாக்கெடுப்பு எனும் பேச்சுக்கே இடமில்லை என நாடாளுமன்றத்திலேயே அறிவித்தாரே நேரு, அன்று தொடங்கிய போராட்டம்தான் இன்று அருந்ததி ராயின் வார்த்தைகளிலும் எதிரொலிக்கிறது.

கடந்த 150 ஆண்டுகளாக அங்கு நடந்துவருவது சுதந்திரப் போராட்டம். “ என்னைப் போன்ற இசுலாமியர் அல்லாதவர்களுக்கு சுதந்திரம் தொடர்பாக அவர்கள் தரும் விளக்கம் புரிந்துகொள்ள கடினமானது. காசுமீருக்கு சுதந்திரம் கிடைத்தாலும், ஒரு பெண்ணான உங்களுக்கு என்ன சுதந்திரம் கிடைத்துவிட முடியும் என ஓர் இளம் பெண்ணிடம் நான் கேட்டேன். அவள் தோளைக் குலுக்கிவிட்டு, ‘இப்போது மட்டும் எங்களுக்கு என்ன சுதந்திரம் கிடைத்திருக்கிறது? இந்திய இரானுவ வீரர்களால் கற்பழிக்கப்படுகிற சுதந்திரத்தை தான் நாங்கள் பெற்றிருக்கிறோம். இல்லையா?’ என்ற அப்பெண்ணின் பதிலில் நான் மௌனமாகி வாயடைத்துப் போனேன்” என்கிறார், ராய்.

தொடர்ந்து, “காசுமீரையும் அம்மக்களையும் தொடர் இரானுவ ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதை எவரும் நியாயப்படுத்த இயலாது. ‘சுதந்திரத்தை அனுபவிக்க இந்தியர்கள் தயாராக இல்லை; அதனால்தான் நாம் சுதந்திரத்தை வழங்கவில்லை’ என இந்தியாவின் மீது காலனியதிக்கம் செலுத்திய வெள்ளையர்களின் வாதத்தையே இது நினைவுபடுத்துகிறது” என்கிறார்.

காசுமீர் பிரச்சனையை சற்று உற்றுநோக்குவோமேயானால் , இராணுவத்தின் கொடுமைகளுக்குச் சற்றும் சளைக்காமல், ஊடகங்கள் அம்மக்களுக்கு செய்யும் துரோகத்தை நாம் உணர முடியும். ‘காசுமீரிகள் பாகித்தானின் கைக்கூலிகள், ஆயுதமேந்தும் பயங்கரவாதிகள், இந்தியாவில் மதக் கலவரத்திற்கு துணை போகக் கூடியவர்கள், மத அடிப்படைவாத செயல்களில் ஈடுபடுபவர்கள்’ என்றெல்லாம் எழுதும் ஊடகங்கள், வருடந்தோறும் அமர்நாத் பனிலிங்க தரிசனத்திற்குச் செல்லும் சுமார் 5 இலட்சத்திற்கும் குறைவில்லாத இந்துக்கள், அந்த இசுலாமிய பயங்கரவாதிகளின் இருப்பிடத்திற்கே சென்று வழிபட்டு ஒரு சின்ன காயம் கூட இல்லாமல், ,மாறாக அப்பயங்கரவாதிகளின் விருந்தோம்பலைப் பெற்றுத் திரும்புகிறார்களே. அதைப் பற்றி எழுத மட்டும் மறந்துபோனதேன்?

பழங்குடி மக்கள் மற்றும் காசுமீர் மக்கள் இருவரது போராட்டத்தையும் ஒருங்கிணைந்து பார்ப்போமேயானால் தாமாகவே நம் மனதிலும் பதியும் பிம்பம் என்னவெனில், இனம், மொழி, மதம், வாழ்விடம், வாழ்வாதாரம், கலாச்சாரம் போன்ற அடிப்படை விடயங்களிலிருந்து அத்துணை விவகாரங்களிலும் சம்பந்தமே இல்லாத வகையில் வேறுபாடு கொண்டிருந்த இந்த இரு குழுக்களுமே, துவக்கத்திலிருந்தே அமைதியான முறையில்தான் போராடிக் கொண்டிருந்தன, இந்த அரசு தங்களை ஏமாற்றுகிறது என்பதை அறிந்தும்கூட.

ஆனால், அவர்களது உயிர்வாழ்தலே கேள்விக்குள்ளான காலகட்டத்தில்தான் அவர்கள் ஆயுதமேந்தினர். இதில் அப்பழங்குடியினரின் ஆயுதம் ஒரு விதமானது என்றால், காசுமீரிகளின் ஆயுதம் கல். பாலத்தீனில் நடந்த ‘இண்டிஃபாதா’ போன்ற கிளர்ச்சியில் அம்மக்கள் ஈடுபடுவதிலிருந்து நமக்கு உண்மை புரியும். அவர்கள் கோரும் சுதந்திரமென்பது, இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மட்டுமல்ல; அது சர்வ சுதந்திரம்.

ஆனால், அருந்ததி ராய் காசுமீர் குறித்து கூறியவுடன், துடித்த ஊடகங்கள், ஏன் மக்களாட்சி முறைப்படி காசுமீரின் உண்மையான வரலாற்றை வெளியிடவில்லை. அவ்வாறு வெளியிட்டால் ராய் போன்றவர்களுக்கு சர்ச்சைக்குரிய விடயங்களை பேசத் தேவையே இருந்திருக்காது. தாமாகவே மக்களுக்கு உண்மை விளங்கிவிடும். ஆனால், ஊடகங்களோ மீண்டும் மீண்டும் ராய் குறித்து ‘தவறானவர்’ என்ற பிம்பத்தை மக்களிடையே தோற்றுவிக்க முயற்சித்து தோல்வியடைகின்றன.

“காசுமீரில் 68,000 பேரைக் கொன்ற நாடு எப்படி ஒரு மக்களாட்சி நாடாக இருக்க முடியும்? குசராத்தில் 2,500 இசுலாமியர்களைக் இனப்படுகொலை செய்த நாடு எப்படி ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க முடியும்?” என்ற ராயின் வாதங்களைப் படித்து புல்லரித்துப் போகும் நாம், நம்மை ஒரு சுயபரிசோதனைக்குட்படுத்தவோ, இலக்கியத் தளத்தில் அறியப்பட்ட இசுலாமிய எழுத்தாளர்களில் ஓரிருவர் இச்சமூகத்தை கொச்சைப்படுத்தி முன்னேறும்போது ஒடுக்கப்பட்ட அனைத்து இன மக்களுக்காகவும் மதம், மொழி கடந்து சர்வதேச அரங்கில் போராடும் ராய் உள்ளிட்டவர்கள் இச்சமூகத்திற்கு இறைவனின் அருள்கொடை.

மேலும் வரிசையாக போபால் தீர்ப்பு, பாபர் மசுசித் தீர்ப்பு, வடகிழக்கு மாகாணப் பிரச்சனை, காசுமீர் நிலவரம் என நாட்டில் தொடர்ந்துவரும் ஒரு பரபரப்பான சூழ்நிலையில், இனியேனும் நாம் உறக்கம் கலைந்து நமது ஒட்டுமொத்த பங்களிப்பையும் இச்சமூகத்திற்கு அளிக்க வேண்டும். இல்லையெனில், வரலாற்றின் பக்கங்கள் நம் சமகால வாழ்க்கையைப் பதிவு செய்யாமல், நம்மைக் கடக்கும் என்பதில் சந்தேகமில்லை.

போகட்டும், விடயத்திற்கு வருவோம். ஊரில் அவனவன் தானுண்டு, தன்வேலையுண்டு என இருக்க, ஏன் இப்பெண்மணி மட்டும் அரசின் தவறுகளை இடித்துரைக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக கருத்தரங்கம், நேர்காணல், மனித உரிமைக் கூட்டங்கள் என பங்கேற்று தன் இருப்பை சிக்கலாக்கிக் கொண்டு,கைது அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு வாழவேண்டும்? யார் இந்த அருந்ததி ராய்?

நமது உள்துறை அமைச்சகம் மாவோயிட்டு அனுதாபிகளை, ‘அவர்களின் கூட்டாளிகள்’ என அழைத்தாலும் ராய் சொல்கிறார்: “நான் எவ்வித சார்புமற்ற சுதந்திர எழுத்தாளர். எதிர்ப்பியக்கத்தின் பக்கம் நின்று கொண்டே கேள்விகள் கேட்கும் உரிமை எனக்கு இருப்பதாக நான் கருதுகிறேன். திட்டவட்டமாக நான் எதிர்ப்பியக்கத்தின் பக்கம்தான் இருக்கிறேன்.”


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Feb 02, 2011 2:53 pm

சற்று பின்னோக்கிப் போவோம். 1998 வாசுபாய் அரசு பொக்ரானில் அணுஆயுத சோதனை நடத்தியது பற்றி, ‘end of imagination’(கற்பனை முடிந்துபோனது) என்ற தனது கட்டுரையில், “இப்போது நான் என்னைச் சுற்றிலும் உள்ள ஒளிவட்டத்திலிருந்து வெளியே வந்து என் மனதில் உள்ளதைச் சொல்லியாக வேண்டும். அணுகுண்டு வைத்திருப்பதை நான் எதிர்க்கிறேன்.

இதற்காக என்னை இந்து எதிர்ப்பாளர், தேசிய எதிர்ப்பாளர் என சொல்வார்களேயானால், நான் தன்னந்தனியே பிரிந்துப்போகத் தயார். நான் தனித்து இயங்கும் குடியரசாக என்னை அறிவித்துக் கொள்கிறேன். நான் இந்த பூமியின் குடிமகள். எனக்கு எல்லை கிடையாது. கொடி கிடையாது. என் கொள்கைகள் எளிமையானவை. எந்த அணுப்பரவல் தடை ஒப்பந்தத்திலும் அல்லது அணுசோதனைப் பரவல் தடை ஒப்பந்தத்திலும் கையெழுத்திட நான் தயார். என்னுடன் இணைய விரும்புகிறவர்களை நான் வரவேற்கிறேன். நம் கொடியை வடிவமைக்க எனக்கு நீங்கள் உதவலாம். என் உலகம் மறைந்துவிட்டது” என்றார்.

மேற்கண்ட வரிகள் ராயின் பாசாங்கற்ற ஓர் அன்புள்ளத்தை நமக்குக் தெரிவிக்கிறது. அவர் வேண்டுவது முற்றிலும் அச்சமற்ற ஓர் உலகம். அக்கட்டுரையின் மற்றோரிடத்தில், “1975 ஆம் ஆண்டு அணுக்கடலில் இந்தியா முதன்முதலில் தன் காலை நனைத்து ஒரு வருடம் கடந்த நிலையில், திருமதி இந்திராகாந்தி அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார். 1999இல் என்ன நிகழப்போகிறது? தேசியத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படுவதாக ஏற்கெனவே பேச்சு அடிபடுகிறது. ‘நோசுட்ராமின்’ கணிப்புகளுக்கு புதிய விளக்கங்கள் வருகின்றன. சர்வ வல்லமை கொண்ட இந்துதேசியம் எழப்போகிறது. புதிதாய் உதித்தெழும் இந்தியா முன்பு தன்னை ஒடுக்கியவர்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் என்றும்,(இசுலாமியர்களை ஒழித்துக்கட்டும்) இப்பயங்கர பழிவாங்கும் படலம், 1999 ஆம் ஆண்டு ஏழாம் மாதம் தொடங்கப்போவதாகச் சொல்கிறது” என எழுதினார்.

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது அப்பழிவாங்கும் படலம், அவர் எழுதிய மூன்று ஆண்டுகள் கழித்து, 2002 இல் குசராத்தில் துவங்கியதி நாம் அலட்சியப்படுத்தவே முடியாது. ஏனெனில், குசராத்தை ‘இந்துத்துவாவின் பரிசோதனைக்கூடம்’ என்று ஆர்.எசு.எசு. சொல்லியது.

தவிர, மாறத் துவக்கிவிட்ட இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்து ராய் கூறும்போது, “அணி சாரா நாடாக இருந்த இந்தியா இன்று முழுக்க முழுக்க அணி சார்ந்த நாடாகிவிட்டது. இசுரேல் போன்ற ஒரு நாட்டிற்கே கூட்டாளி ஆகிவிட்டது. பாலத்தீனை ஆதரித்த இந்தியா, இன்று வெட்கங்கெட்ட முறையில் அமெரிக்காவுக்கும் இசுரேலுக்கும் கூட தன்னை நேச நாடாக காட்டிக்கொள்கிறது” என்கிறார்.

ஆக, அருந்ததி ராயின் விருப்பம், ஓர் அமைதியான, உலகம். அங்கு மதமும், மொழியும் இல்லை. சச்சரவுகளும், தனிமனிதச் சுரண்டல்களும் இல்லை. ஆனால், இன்றைய அரசே பன்னாட்டு முதலாளிகளுக்காக, தன் சொந்த மக்களின் மீது வன்முறையை பிரயோகித்தபோதுதான், ராய் அவர்களின் சார்பாக நின்றார். அதேநேரம், மாவோயிட்டுகளும், அம்மக்களுக்காகவும், இலக்கிற்காகவும், அரசை எதிர்த்து எதிர்வினையாற்றியபோதுதான் ‘மாவோயிட்டுகளின் கூட்டாளி’ என்ற அரசின் குற்றச்சாட்டையே ஊடகங்களும் எதிரொலித்தன.

கடந்த செப்டம்பர் 12ம் தேதி, CNN-IBNஇல் கரண் தாப்பருடனான நெருக்கு நேர் நிகழ்ச்சியில், ராய் தெளிவாகச் சொல்கிறார்: “இந்த அரசை தூக்கியெறியும் மாவோயிட்டுகளின் விருப்பத்தை நான் ஆதரிக்கிறேன் என நான் சொன்னால், நான் என்னை ஒரு மாவோயிட்டு என சொல்லிக்கொள்ள வேண்டும். ஆனால், நான் மாவோயிட்டு அல்ல. மேலும், அனைத்து இயக்கங்களுக்குமே நான் அனுதாபி. நான் இருப்பது கோட்டின் இந்தப் பக்கம். உள்நாட்டில் மட்டுமல்ல, உலகிலேயே கொடும் ஏழையான மக்களின் மீது தனது இராணுவத்தையே ஏவத் துடிக்கும் அரசுதான் இந்த அரசு என இடித்துரைக்கும் மக்களின் பக்கம்தான் நானிருக்கிறேன். அரசின் இச்செயலை என்னால் ஆதரிக்க முடியாது” என்றார்.

அதேநேரத்தில், முழுமையாக மாவோயிட்டுகளின் செயல்களை ஆதரிக்கும் பெண்ணல்ல ராய். அந்த விவாதத்தில் கரண், மாவோயிட்டுகளிடம் பிணைக் கைதியாகயிருந்த 4 காவலர்களில் லூகாசு டிட்டி கொலை செய்யப்பட்டதை எப்படி பார்க்கின்றீர்கள்? என கேட்டபோது, “தனது கட்டுப்பாட்டில் உள்ள ஒருவரை கொலை செய்வதில் புரட்சி ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை” என்றே குறிப்பிட்டார். ஆனால், அதே சமயம் அரசு தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. அதுதான் தாக்குதலைத் தூண்டுகிறது. இந்த அரசை வலுச் சண்டைக்காரனாகவே நான் காண்கிறேன். மேலும் இந்திய அரசு மக்கள் மீதான தனது பொறுப்புணர்ச்சியைக் கை கழுவிவிட்டது என்றே நான் நம்புகின்றேன். சட்டப்படியோ, தர்மத்தின் அடிப்படையிலோ, இந்த அரசே அரசியலைப்புக்கு கட்டுப்படாதபோது நாம் இந்த அரசியலைப்புச் சட்டமுன்னுரையின் மேற்கோளான ‘நாம் இறையாண்மை கொண்ட சனநாயக மதசார்பற்ற குடியரசு’ என்பதை மாற்றிவிட்டு, இது ஒரு கார்பரேட் முதலாளிகள் மற்றும் இந்துத்துவ சக்திகளைச் சுற்றிச் சுழலும் துணைக்கோள் என அழைக்கலாமென்றபோது, கரண் ‘அப்படியானால் எல்லா தவறுகளுமே அரசினுடையதுதானா?” என்றதற்கு ‘ஆம்’ என்றார். ‘இதைத் துணிந்து வெளிப்படையாகச் சொல்கிறீர்களா?’ என கரண் வினவியபோது, ‘நிச்சயமாக’ என்றார் நேர்மையாய்.

தொடர்ந்து ராய் கூறுகையில், “இந்த அரசு வன்முறையற்ற எதிர்ப்புக்கு மதிப்பளிக்காமலிருந்தும்கூட, அம்மக்கள் பல்லாண்டுகள் அமைதியாகவே தான் போராடினார்கள். அவர்களின் அகிம்சை வழியைப் புறக்கணித்ததின் மூலம் அரசுதான் வன்முறையை வளரச் செய்கிறது” என கூறினார். மேலும் கரண் “மாவோயிட்டுகளின் நம்பிக்கைக்குரிய நபராக நீங்கள் இருப்பதால் அவர்கலுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கான நடுவராய்ச் செயல்படத் தயாரா? எனக் கேட்டதற்கு, “நடுவராக செயல்படுவது ஒரு தனி நபராக இருக்கக்கூடாது. ஒரு குழுவாய் அமைய வேண்டும்.” என்ற ராயின் பதிலுக்கு கரண் எதிர் கேள்வியாய்” குழுவில் ஒரு உறுப்பினராக இருப்பீர்களா?” என்று கேட்டபோது, “ நான் அதற்கு பொருத்தமானவள் என்று நினைக்கவில்லை. ஏனெனில், நான் சுதந்திரச் சிந்தனையுடையவள். மேலும் இரு தரப்பும் சண்டை நிறுத்தம் அறிவிக்கும் போது தான் நாம் அதில் முன்னேற்றம் காண முடியும்” என்ற யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டினார்.

கரண் விடவில்லை. மீண்டும், “ஆனால் நடுவராக இருந்தோ, குழுவில் ஒருவராகவோ அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நீங்கள் தயாரில்லை?” என்றதற்கு ‘முயற்சிக்கிறேன்’ என்ற ராயிடம், ‘முயற்சிக்கிறேன். அட உங்களது நிலையில் தலைகீழ் மாற்றமா’ என்ற கரணிடம், ‘அதைப்பற்றி எப்படி யோசிப்பது என தெரியவில்லை” என்றார், மிக வெளிப்படையாய்…

அருந்ததி ராய்க்குள் இருந்த வெகுளிப் பெண்ணை வெளிக்கொணர்ந்த பதில் இது. நாம் சற்று யோசிப்போம். சர்வதேச அறிவாளிகளாலும் சிறந்த சிந்தனையாளர் என போற்றப்படும் ஒரு பெண்மணி, தன்னிடம் பதில் இல்லாத ஒரு கேள்விக்கு அசிங்கமான எதையும் கூறி சமாளிக்காமல், “எப்படி யோசிப்பது எனத் தெரியவில்லை.” என்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட நேர்மைதான் அனைத்து தளங்களிலுமே அன்றிலிருந்து இன்றுவரை அவரை இயக்குகிறது என்பதற்கு ஓர் உதாரணம்.

மட்டுமல்ல; அவரது எழுத்துகளும், உரைகளும் அவரின் மனப் பிம்பமே தவிர, ‘பரபரப்புக்காக’ எதையும் செய்பவரல்ல ராய் என்பதை இதன் மூலம் தெளிவாக நாம் உணர முடியும். அந்த விவாதத்தின் இறுதியில் கரண், “இந்த அரசு குறிப்பாக, உள்துறை அமைச்சர், மாவோயிட்டு அனுதாபிகளை அவர்களின் கூட்டாளி என்கிறார். ஊடகங்களின் ஒரு பிரிவினர் அவர்களைத் துரோகிகள் என்கிறார்கள். அந்த நபர்களில் முதன்மையானவராக அருந்ததி ராய்தான் இருக்கிறாரா? இப்படி முத்திரை குத்தப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மேலும், இந்த அரசு உங்களை ‘ மாவோயிட்டுகளின் கூட்டாளி’ என அழைப்பது ஒரு விதத்தில் நீங்கள் இந்த அரசை நிம்மதி குலையச் செய்திருக்கிறீர்கள் என்பதற்கு நிரூபணம்” எனக் கூறியபோது, “நான் இந்த அரசை நிம்மதி குலையச் செய்திருப்பேன் எனில், அதற்காக நான் பெருமைப்படுகிறேன். ஏனென்றால், அது செய்யும் செயல்களுக்கு அது நிம்மதியற்றுதான் திரிய வேண்டும்” என்று பேட்டியை முடித்தார்.

இப்போது அருந்ததி ராயைப் பற்றி மெலிதாய் ஒரு கோட்டுச்சித்திரம் நம்முன் உருவாகக் கூடும். ராயின் இலக்கு அதிகாரத்தால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்கள், ஆதிவாசிகள், பழங்குடிகள், சிறுபான்மையினர் தவிர, வேறில்லை. ஒருவேளை நாளை மாவோயிட்டுகள் விரும்புகிற அரசே அமைந்து, அப்போது மாவோயிட்டுகளால் அம்மக்கள் தாக்கப்படுவார்களேயானால், அப்போதும் ராயின் ஆதரவு ஏழை மக்களுக்குத்தானே தவிர, மாவோயிட்டுகளுக்காய் இருக்க முடியாது. ஏனெனில் உலகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு கம்யூனிசம் அல்லது முதலாளித்துவக் கற்பனைகளில் இருந்து பிறக்கும் என நான் நம்பவில்லை என்பதுதான் அருந்ததிராயின் கருத்து.

இறுதியாக ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். ஒரு நடிகையின் வீட்டு நாய்க்குட்டியின் விபரத்தைக் கூட விரல் நுனியில் வைத்திருக்கும் தமிழ் கூறும் நல்லுலகமாகிய நாம், போராட்டமே வாழ்வெனக் கொண்டிருக்கும் அருந்ததி ராயை பற்றி ஏதேனும் அறிந்துள்ளோமா?

எங்கெல்லாம் அரசாங்கம் மக்களின் வாழ்வுரிமையை பறிக்குமோ, எங்கெல்லாம் சனநாயகம் மறுக்கப்படுமோ அங்கெல்லாம் நேரடியாகச் சென்று ‘குற்றம் கண்டால் கொதிக்க வேண்டும்’ என்ற ஒற்றையுணர்வுடன், தனது பாதுகாப்பின்மையையும், இன்னும் தனக்கு விடப்பட்டுள்ள அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் போராடிக் கொண்டிருக்கும் இந்த சனநாயகி சரியா? அல்லது எல்லாம் வேடிக்கை தான்; நமக்கு நடக்கும் வரை என்ற பொருளில் எதையும் கண்டுகொள்ளாமல் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் நாம் சரியா?

நான் என்னைக் கேட்டுக்கொள்கிறேன்; நீங்கள் உங்களைக் கேட்கத் துவங்குங்கள்
.


jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed Feb 02, 2011 3:16 pm

வால்க இந்தியா இறையாண்மை (நல்லவனா போல இருபானாம் பரம சண்டாளன் )

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக