புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
142 Posts - 78%
heezulia
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
3 Posts - 2%
Pampu
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
307 Posts - 78%
heezulia
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
8 Posts - 2%
prajai
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கள்ளர் சரித்திரம் Poll_c10கள்ளர் சரித்திரம் Poll_m10கள்ளர் சரித்திரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளர் சரித்திரம்


   
   

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:27 am

சென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்குமுன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்தார் பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் .

12-04-1884ல் பிறந்தார்கள் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் ஆய்வுக்கட்டுரையை நான் இங்குரைக்க விளைகிறேன்.

கள்ளர் சரித்திரம் என அய்யா அவர்கள் எழுதினாலும் மற்ற இனத்தவரை தாழ்த்தாமலும் , தான் சொல்ல வந்த இனத்தை மிகைபடுத்தாமலும் உள்ளதை உள்ளபடியே மற்றைய ஆராய்சியாளர்கள் சொல்லியதை மேற்கோள் காட்டி இக்கால நமக்களுக்கு அக்காலத்து தெரியாத பல செய்திகளை விளக்கமாக அவரது இயல்பான உரையிலே கூறியவற்றை நான் சில வற்றை மட்டும் மாற்றி எழுதியுள்ளேன்.

நாட்டார் ஐயா அவர்கள் மற்ற பட்டபெயர்களை செவ்வனே செப்பினாலும் நாட்டாரைப் பற்றி அதிகம் சொல்லாதது அவரது தன்னடக்கத்தைக் காட்டுகிறது.

அவரது ஆய்வுக்கு ஆதாரமாக உறையூர் புராணம், பழைய திருவானைக்காவப் புராணம், செவ்வந்திப் பராணம், கணசபைப்பிள்ளையவர்களின் ஆய்வறிக்கை, சர் வால்டர் எலியட், வின்சன் ஏ. ஸ்மித் மற்றும் சிலவற்றைக் கைக்கொண்டார்.

எதையுமே தான் இட்டுக்கட்டி கூறாமல் ஒவ்வொரு செய்திக்கும் ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியவர்கள் தம்முடைய ‘தென்பாண்டிச் சிங்கம் ‘ எனனும் வரலாற்று கதை எழுத இக்கள்ளர் சரித்திரத்தை த் துணைகொண்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:29 am

கள்ளர் சரித்திரம்


முதல் அதிகாரம்

பழந் தமிழ் மக்கள்

இரண்டாம் பதிப்பின் முகவுரையாக இதன் ஆசிரியர் எழுதியது

குடி செய்வ லென்னு மொருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான் முந் துறும்


திருவள்ளுவர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:29 am

உலகத்தில் எவ்வகையான நற்செயலுக்கும் ஊக்கமும், உணர்ச்சியும் இன்றியமையாதன. மக்கள் அவற்றை அடைதற்குரிய சாதனங்கள் பலவற்றிலும் அவர்களது முன்னோரைப் பற்றிய அறிவும், நினைவும் சிறந்தவை . ஆக, அந்நோக்கத்தினைஅடிப்படையாகக் கொண்டு எழுதப்பெறும் தேச சரித்திரங்கள் பெரிதும் பயன் படுவனவாம். ஒரு சாதி அல்லது வகுப்பினைக் குறித்து எழுதப்படும் சரித்திரம் அவ்வகுப்பினர்க்குள் உணர்ச்சியுண்டாக்கும் அளவாவது பயனளித்தல் கூடும். அன்றி, தேச சரித்திரத்திற்கு அஃது ஓர் உறுப்பாதலும் அமையும். இக்கருத்தால் பற்பல நாட்டிலும் பல வகுப்பினர் தங்கள் சாதி சம்பந்தமாப் புத்தகங்கள்எழுதி வைத்திருக்கின்றனர். ஆனால், தமிழ் நாட்டு மக்களில் தொகையாலும், நிலவுரிமை முதலியவற்றாலும் பெரிதும் கருதப்படவேண்டியோரான கள்ளர், மறவர், அகம்படியார் என்பவர்களைப்பற்றி யாதொரு சரித்தரமும் வெளிவந்த தில்லை. சில ‘ஜில்லா மான்யுவல்’ ஜில்லாக் கெசட்டியர்களிலும், வேறிடங்களிலும் இவர்களைக் குறித்துச் சிறுபான்மையாக எழுதப் பட்டிருக்கின்றன. எனினும் அவை முற்றிலும் உண்மையறிந் தவர்களால் எழுதப்பட்டவையல்ல. அது மாத்திரமன்றி, எழுதினோரிற் சிலர் குறுகிய நோக்கமும் அசூயையும் கொண்டுளோர் எனவும் கருதவேண்டியிருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:30 am

கள்ளர்கள் தொன்று தொட்டு ஆட்சி நடாத்தி வந்த வகுப்பினர் என்பதை எவரும் மறுத்தற்கில்லை. இற்றைக்கும் இவ்வகுப்பினரில் ஒரே தமிழ் வேந்தராகிய புதுக்கோட்டை மன்னர் அரசாண்டு வருகின்றனர். ஜமீன்தாரும், பெருநிலக்காரரும் மிகுதியாக இருக்கின்றனர். சென்னை அரசாங்கத்தினரால் ஏற்படுத்தப் பெற்றுள்ள ஓர்சட்டத்திலிருந்தே இவ்வுண்மை அறியலாகும். சென்னை இராஜதானியைச் சேர்ந்த ஜமீன் நிலங்களைக் கூடியவரையில் பாதுகாக்க வேண்டுமென்னும் நோக்கத்துடன் சென்னை அரசாங்கத்தினரால் 1903-ஆம் வருடத்தில் ஓர் சட்டம் இயற்றப்பட்டது. இக்கொள்கையை நிலை நறுத்துதற்காகப் பின்பு சென்னபட்டினத்து 1903-ஆம் வருடத்து4-வது மசோதா சட்டமும் தோன்றிற்று. இச்சட்டத்தின் பெயர் ‘பங்கிடக்கூடாத நிலச் சொத்துக்களைக் குறித்த சென்னபட்டினம் 1903-ஆம் வருடத்து மசோதா சட்டம்’ (The Madras Impartible Estates Bill, 1903) என்பது. இதன் எல்லைக்குள் (ஷெடியூலுக்குள்) அகப்பட்ட ஜமீன்களில் தஞ்சையில் உள்ளவை: கண்டர்கோட்டை, கல்லாக்கோட்டை, கோனூர், சில்லத்தூர், பாலையவனம், பாப்பாநாடு, சிங்கவனம், மதுக்கூர், நெடுவாசல், சேந்தங்குடி, அத்திவெட்டி என்னும் பதினொன்றுமாம். இவற்றுள் கோனூர், அத்திவெட்டி என்னும் இரண்டு தவிர மற்றையவெல்லாம் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவை. அவ்விரண்டுங்கூட ஆதியில்கள்ளர் ஜமீன்களைச் சேர்ந்திருந்தனவே. மற்றும் பாளையக் காரர்களைப்போன்றோ சிறிது ஏற்றத் தாழ்வாகவோ செல்லமும், செல்வாக்குமுடையோர் பலர் இவ்வகுப்பில் இருந்திருக்கின்றனர்.

இவ்வகுப்பினைக்குறித்துஎழுதினோர் யாரும் இவைகளைச் சிறிதும் ஓர்ந்தவரெனக் காணப்படவில்லை. இக்காரணத்தாலேயே கள்ளர் சரித்திரம் என்னம் இவ்வுரை நூல் எழுதுமாறு நேர்ந்தது.

இதனைப் படிக்கும் அறிஞர்கள் சில கற்பனைக் கதைபோலன்றி உண்மையாராச்சியுடன் கூடிய சரித்திரமாக எழுதுதற்குப்பொரிதும் முயன்றுளேன் என்பதனையும், ஒருவகுப்பினைப் பெருமைப் படுத்துதற்காக ஏனை வகுப்புக்களை இழித்துரைக்கும் குறுகிய மனப்பான்மையடையாரக்கு இஃது அறிவு கொள்ளத்தக் உடையதாம் என்பதனயும் இதிலுள்ள செய்திகள் பெரும்பாலனவும் தமிழ் மக்கள் அனைவரும் படித்தறிய வேண்டியனவாம். தமிழ் நாட்டின் வரலாற்றில இதுவரை யாராலும் வெளிவராத பல அரிய செய்திகளை இந்நூலின் ஐந்தாம் அதிகாரத்திற் காணலாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:30 am

இந்நூல் 1923-ஆம் ஆண்டில் வெளியான பொழுது பல சிறந்த புலவர்களின் மதிபுரையையும், பல பத்திரிகைகளின் பாராட்டுரையையும் பெறுவதாயிற்று, சங்க இலக்கியங்களும், இலக்கணங்களும், புராணங்களும், பிரபந்தங்களுமாக அளவில்லாத தமிழ்நூல்களை ஆராய்ந்து வெளிப்படுத்தி வரும் சான்றோராகிய மகா மகோபாத்தியாயர் ஸ்ரீமத் உ.வே. சாமிநாதையரவர்கள் தாம் இதனை முழுதும் படித்துப் பார்த்ததாகவும், கலாசாலை மாணக்கர்கள் படித்துப் பயநெய்துமாறு இது பாடமாக வைக்கத் தகுந்தது எனத் தாம் கருதுவாதாகவும் அன்புடன் தெரிவித்தார்கள் என்பதனை இங்கே குறிப்பிடுகின்றேன்.

இப் பதிப்பிலே பல அரிய புதிய செய்திகள் சேர்க்கப் பெற்றுள்ளன; மிகையாகத்தோன்றிய சில குறைக்கப் பெற்றும், சில திருத்தப்பெற்றும் இருக்கின்றன; பாண்டி நாட்டிலுள்ள கள்ளர் நாடுகளின் வரலாறு முழுதும் செவ்வையாக ஆராய்ந்து எழுதப் பட்டிருத்தலை இப்பதிப்பிற் காணலாகும். கள்ளருடைய நாட்டின் பெயர்களிலும், பட்டப்பெயர்களிலும் பல வழக்கத்தில் உருச் சிதைந்து உண்மையறியக் கூடாதனவாகவுள்ளன. ஆராய்ச்சியில் உண்மை வெளியான பெயர்கள் மாத்திரம் செப்பஞ் செய்யப் பெற்றும், ஏனையவை வழங்குகிறபடியும் இதில் எழுதப் பெற்றுள்ளன. மற்றும் கள்ளருடைய நாட்டு விவரங்களும், பழக்க வழக்கங்களும் முதலியவற்றில் இன்னும் ஆராய்ந்து காண வேணடியவை பல இருந்தல் கூடும். என் அறிவு ஆராய்ச்சிக்குறைவால் பல பிழைகள் நேர்ந்திருத்தலும் கூடும். அவைகளைக் காண்கின்ற அறிவுடையோர்கள் அருள் கூர்ந்து அவற்றைத் தெரிவிப்பரேல் அடுத்த பதிப்பிலே இதனைப் பின்னும் செப்பஞ் செய்த வெளியிட இடனுண்டாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:31 am

கள்ளர் வகுப்பினர் சிற்சில இடங்களில் செல்வம், கல்வி முதலியவற்றிலும், பழக்க வழக்கங்களிலும் மிகவும் கீழ்நிலை யடைந்தவர்களாய்க் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர் என்பது உண்மை. அத்தகையோர் சிறிதேனும் நன்மையடைதற்குத் துணைபுரிதலே இஃது எழுதியதன் முதல் நோக்கமாகும், அந்நோக்கம் இந்நூல் வெளியான நாலைந்து ஆண்டுகளுக்குள்ளாக ஓரளவு நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. இந்தியாவிலன்றி, இலங்கை, பர்மா, மலேயா நாடுகள், சுமத்திரா முதலிய தீவுகள் ஆகியபல இடங்களிலுள்ளோர் இதனை ஆர்வத்துடன் வரவழைத்துப் படிப்பாராயினர். இவ்வகுப்பினர்க்குள் ஒருவகையான ஊக்கமும், கல்வி விருப்பமும் இதனால் உண்டாயிருக்கின்றன வென்பது நிதரிசனமாகின்றது.

கும்பகோணம் வாணாதுறை ஹைஸ்கூல் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகிய திருவாளர்.T.V.சதாசிவப் பண்டாரத்தாரவர்கள் முதலிய அன்பர்கள் இந்நூல் எழுதுதற்குச் செய்த உதவிகள் முதற்பதிப்பிலே காட்டப்பெற்றன. பாண்டிநாட்டிலே உயர்குடும்ப மொன்றில் பிறந்தாரும், செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த சந்தநலந்திகழும் பாக்களை நினைத்தமாத்திரையில் பாடும் ஆற்றல் கைவரப்பெற்றாரும், துறவு புண்டு திருத்தொண்டியற்றி வருவாரும் என்பாற் பேரன்புடையாரும் ஆகிய திருமிகு. கல்லல் குக. மணிவாசக சரணாலய சுவாமிகள் பாண்டி நாட்டுக் கள்ளர் நாடுகளின் விவரமனைத்தையும் செவ்வனே ஆராய்ந்து தெரிவித்து இப்பதிப்பானது திருத்தமெய்தும்படி செய்தார்கள். அவர்கள் புரிந்த இவ்வுதவியும், மற்றும் பலவாற்றானுஞ் செய்து வரும் உதவிகளும் என்னால் எப்பொழுதும் பாராட்டப் பெறுவனவாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:31 am

தமிழகத்திலே தஞ்சை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் கள்ளர் என வழங்கப்படுகிறது. இப்பொழுது இக்குழுவினரில் நீதி மன்றங்கள் பலவும் அமைத்துத் தமது நாட்டினை ஆட்சிபுரிந்து வருகின்ற ஓர் மன்னரும், குறுநில மன்னராய் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். இன்னவரின் முன்னோர் பழைய நாளில் எவ்விடத்தில் எந்நிலைமையில் இருந்தனர்; இடைக்காலத்தில் அவரது நிலைமை யாது?; இப் பொழுது எப்படியிருக்கின்றனர்? ;என்பன போன்றவை இந்நூலில் ஆராய்ந்து காட்டப்படும் . அதற்குமுன் இந்திய நாட்டிலும், ஈழம், கடாரம் முதலிய நாடுகளிலும் பண்டைநாளில் வந்திருந்து மக்களைக் குறித்துப் பொதுவாக ஒரு சிறிது ஆராய்வது இன்றியமையாதது.

மிகப் பழைய நாளிலே நாகர் என்ற ஓர் வகையினர் இந்திய நாடு முழுதும் பரவியிருந்தனர் என்றும், பின்பு இந்தியாவிற்குப் புறம்பே வடக்கிலுள்ள நாடுகளிலிருந்து திராவிடர் என்பார் இந்தியாவிற்குல் புகுந்து சிறிது சிறிதாக இந்நாடு முழுதும் பரவினர் என்றும், அதன்பின் ஆரியர் என்ற கூட்டத்தார் அவ்வாறே இந்நாட்டில் புகுந்து பரவலுற்றனர் என்றும் சரித்திரக்காரர் கூறுகின்றனர். இதுபற்றி எத்தனையோ வகையான கொள்கைகள் உண்டு; ‘ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளில் முந்தகைய தமிழர் ‘ என்னும் நூலினை ஆங்கிலத்தில் எழுதிய அறிஞர் வி . கனகசகைபப் பிள்ளை அவர்கள் இந்தியாவிலிருந்து பழைய மக்களைப்பற்றிப் பெரிதும் ஆராய்ச்சி செய்திருக்கின்றனர். முன் சொன்ன முத்திறத்தாரையுங் குறித்து அவரும் அப்படியே குறிப்பிடுகின்றார். எனினும், திராவிடர்க்கும் ஆரியர்க்கும் நடுவே தமிழர் என்ற வகுப்பினை அவர் புகுத்துஉரைக்கின்றர். அவரது கொள்கைப்படி நாகர், திராவிடர் , தமிழர், ஆரியர் என்ற நான்கு பிரிவுகள் ஏற்படுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:32 am

ஆனால் அவர் எழுதியதிலிருந்தாவது, மற்றவர்கள் எழுதியிருந்ததிலாவது இப்பொழுது காணப்படும் மக்களில் இன்னவரே நாகர், இன்னவரே திராவிடர் என்று இவ்வாறு திடமாக வகுத்தரைக்கக் கூடவில்லை, உரைப்பது அத்துணையெளிதன்று. எனினும் மறைந்து கிடக்கும் உண்மைகளைக் காண அவாவுதலும், அது குறித்து ஆராய்தலும் இயல்பே யாகலின், பழைய தமிழ் இலக்கிய, இலக்கணங்களையும், புராண, இதிகாசங்களையும், கல்வெட்டு, பட்டயம், பிற்காலத்தோர் எழுதிய சரித்திரங்கள் என்பவைகளையும் பற்றாகக் கொண்டு, இக்காலத்து மக்களியல் புளில் பொருந்துவனவற்றை அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒருவாறு உண்மையெனத் தோன்றுமவைகளை வெளிப்படுத்தலே இவ்வாரய்ச்சியின் நோக்கமாம்.

தொல்லை நாளில் நகார் என்ற வகுப்பினர் பல இடங்களில் மேன்மை யுற்றிருந்தனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஒரு காலத்தில் பவுநேயர் எனப்படும், ஆறுகோடி கந்தருவர் பாதாலத்திலிருந்த நாகருடைய தலைசிறந்த மணிகளையும், அன்னவராட்சியையும் வெளவிக் கொண்டனரென்றும், நாகர் திருமாலிடத்திற் சென்று முறையிட, அப்பெருமான் அவர்களை நோக்கி, ‘மாந்தாதா என்னும் சக்கரவர்திதியன் மைந்தனான புருகுச்சன் என்பானிடத்தில்டயாம் ஆவேசித்து நுங்கள் பகைவரை அடக்குதும்’ என அருளிச்செய்தன ரென்றும், நாகர் அது கேட்டு வணங்கி விடை பெற்றுப் பாதலம்புக்கு, தங்கள் உடன் பிறந்த நருமதையென்பாளைப் புருகுச்ச மன்னனுக்கு மனைவியாம்படி அனுப்பினரென்றும், அவளும் அவ்வேந்துடன் சேர்ந்து அவனைப் பாதலத்திற்குக் கொண்டு வந்து விட அம்மன்னவன் மாயோனின் பேரொளியால் ஆவேசிக்கப் பட்டு, அக்கந்தருவர் யாவரையும் அழித்து விட்டுத் தன் பட்டணம் அடைந்தனன் என்றும், புருகுச்சனுக்கு நருமதை வயிற்றில் திரசதஸ்யு என்பான் தோன்றினன் என்றும், அத் திரசதஸ்யுவின் வழியிலே சத்தியவிரதன், திரிசங்கு, அரிச்சந்திரன் முதலிய அரசர்கள் தோன்றினரென்றும் விட்டுணுபுரானம் (விஷ்ணுபுரானம்), நாலம் அமிசம், மூன்றாம் அத்தியாயத்திற் சொல்லியிருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:33 am

இனி, வியாச பாரதம், சாந்திபருவத்தின் இறுதியிலுள்ள பன்னிரண்டு அத்தியாயங்களில் பதுமன் என்னும் பெயருள்ள ஓர் நாகனைப்பற்றிய செய்திகள் சொல்லப் பெற்றுள்ளன.

அவற்றின் சுருக்கம்:-

“கங்காநதியின் தென் கரையிலுள்ள மகாபதுமம் என்னும் பட்டணத்திலே அத்திரி வமிசத்தவரான ஓர் பிராமணர் இருந்தார், ஐம்பொறிகளையும் வென்று தவத்தில் மேம்பட்டவரான அப்பிராமணர் எந்தக் கருமம் செய்யத்தக்கது? எல்லாவற்றினும் மேலான இடம் எது? அதனை அடையும் நெறியாது? என்பன வற்றை இடைவிடாது ஆராய்ந்து வந்து விடைகிடைக்காதவராயிருந்தார். அப்படி இருக்கும் நாளில் சமாதி நிலையடைந்த பெரியவரான ஒரு அதிதி அவரிடம் வந்தார். அவர் மகிழ்ச்சியுற்று அப்பெரியாரைப் பூசித்துத் தமது ஐயத்தைத் தீர்த்தருளும்படி வேண்டிக்கொள்ள, அதிதியானவர் ‘யானும் இவற்றில் மயக்கமுடையனாகவேயிருக்கிறேன்: எனக்கும்உண்மை தெரிந்து கொள்ள வேண்டுமெனும் விருப்பமுண்டு. உலகிலே சிலர் முத்திப்பேற்றைப் புகழ்கின்றனர் ; சில வேதியர் யாகத்தின் பயனைக் கொண்டாடுகின்றனர்; சிலர் இல்லறத்தைச் சார்ந்திருக்கின்றனர்;

சிலர் அரச தர்மத்தைப் பொருந்தியுள்ளார்; குருவின் பணிவிடை மேற்கொண்டவர் சிலர்; தாய் தந்தையர்களுக்கு ஊழியம் செய்வார்கள் சிலர்; சிலர் அஹிம்சையினையும், சிலர் சத்தியத்தையம் மேற்கொண்டிருக் கின்றனர்;

சிலர் போர் புரிந்து மாள்கின்றனர்; சிலர் உஞ்சவிருத்தி செய்கின்றனர். இவ்வாறாக மேலுலகத்தை அடையம் விருப்பமுடையவர்கள்பல்வேறு வகைளில் நடப்பவராகின்றனர். அதனால் என் மனமும் கலக்க மடைந்திருக்கிறது எனினும் என் குருவினால் உபதேசிக்கப்பட்ட ஓர் செய்தியை உனக்குக் கூறுகிறேன். கோமதி நதி தீரத்தில் நைமிசம் என்ற வனம் உள்ளது. அது முன் படைப்பில் தரும வடிவமான சக்கரம் தங்கப்பெற்றதாகும். அங்கு நாகபுரம் ஒன்றுள்ளது. பதுமன் என்னும் பெயருள்ளவனும் புகழ்மிக்கவனுமான நாகன் ஒருவன் அங்கிருக்கிருக்கின்றனன். அவன் கர்மம் உபாசனை, ஞானம் என்னும் மூன்று நெறியிலும் நிலை பெற்றவன்; தன் மனம் மொழி மெய்களினாலே எவ்வுயிர்க்கும் இன்பம் விளைப்பவன்; வாய்மை நெறி தவறாதவன். அவன் உண்மையை அறிவுறுத்துபவன். அன்னவன் கங்கை நீரில் வசிக்கின்றனன்’ என்று கூறினர். அது கேட்ட பிராமணர் மிகவும் மகிழ்ந்து, வழி வினாவிக்கொண்டு அந்நாகன் இருப்பிடம் அடைந்து. பல நாள் காத்திருந்து நோன்பியற்றி, முடிவில் அந்நாகர் பெருமானைக் கண்டு ஐயந்தெளிந்து மீண்டனர்” என்பது.

இங்கே காட்டிய இவ்விரு கதைகளிலிருந்தும் நாகர் என்பார் செல்வத்திலும் ஞானத்திலும் மேம்பட்டவராவர் எனக் கொள்ளக்கிடக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:34 am

நாகர்களைப்பற்றிக் கனகசபைப்பிள்ளையவர்கள் கூறுமாறு:- “தொகையிற் பெருக்க மடைந்து நாகரிகம் வாய்ந்த ஒரு சாதியார் இந்தியா, கடாரம் (பர்மா) இலங்கையென்னும் தேயங்களில் பெரும் பகுதிகளை ஓரொரு காலத்தில் ஆண்டிருக்கின்றனர். இராமாயணத்து நாடவிட்ட படலம் இவர்கள் பெயரைக் குறிப்பதன்றித் தென்னாட்டின் நடுவணிருந்த இவர்களது அரச நகரைப் பின்வருமாறு விரித்துக் கூறுகின்றது. ‘போகவதிக் கருகே நாகர் வாழும் பதி யொன்றுள்ளது; அது பெரிய தெருக்களையும் மதிற்காப்பினையும் உடையது; தம் நச்சுப் பற்களால் மிகவும் கொடுமை வாயந்துள்ள நாகர் மைந்தரின் சேனைக்கூடம் அதனை காவல் புறிந்திருக்கும் ; மணி மண்டபத்தில் அரியனை வீற்றிருந்து அவர்களை ஆளும் அரசன் வாசுகி என்பான். அந்நகரையும் நகர்ப்புறத்தையும் நன்கு தேடுமின்”

“கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் கங்கை, யமுனை ஆறுகளுக்கு இடையில் நாகராண்ட நாடுகள் இருந்ததாக மகாபாரதம் விளக்குகிறது. திங்கள் மரபிற்தோன்றிய ஆரிய வரசர்கள் இப்பொழுது தில்லி(டெல்லி) இருக்கிமிடத்திற்கு அருகில் ஒரு நகரமைக்க ஆங்கிருந்த நாகரை வென்று அப்புறப் படுத்தியதாக அந்நூல் கூறுகிறது. கதாநாயகனான அருச்சுனன் தீர்த்தயாத்திரை சென்ற பொழுது உலூபி என்ற நாக கன்னியொருத்தியையும், மணிபுரத்தையாண்ட நாக வரசனாகிய சித்திர வாகனன் மகள் சித்திராங்கதையையும் மணந்து கொண்டான்.இவன் பெயரன் தட்சகன் என்ற நாகவரசனால் கொல்லப்பட்டன் , கொலையுண்ட பரீட்சித்தின் மகன் சனமேசயன் நாகருடன் பெரும்போர் விளைத்து அவர்களை ஆயிரக் கணக்காக மடிவித்தான். மற்றும் கி.மு. ஆறாவது நூற்றாண்டில் மகத நாடு நாகரது ஆட்சியிலிருந்ததாகச் சரித்திர ஆராய்ச்சியால் விளங்குகிறது. இவ் வமிசத்து ஆறாம் அரசனாகிய அசாத சத்துருவின் காலத்தில் தான் கெளதம புத்தர் தம் புதுக்கோட்பாடுகளைப் போதித்து, நாகர் பெரும்பாலும் அவற்றையே தழுவும்படி செய்தது”.

Sponsored content

PostSponsored content



Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக