புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_m10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10 
7 Posts - 64%
heezulia
பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_m10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_m10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_m10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_m10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_m10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_m10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_m10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10 
8 Posts - 2%
prajai
பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_m10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_m10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_m10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_m10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_m10பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Jan 24, 2011 2:45 pm

அன்றாடம் வான் தாக்குதல், வாரம் சராசரியாக 40 பழங்குடியினர் பலை. 3 இலட்சம் பேர் அகதிகளாக காடுகளில் தஞ்சம்… இதுதான் இன்று மைய இந்திய மாநிலங்களில் உள்ள நிலைமை. இதற்கு ஆட்சியாளர்கள் வைத்துள்ள பெயர், “பச்சை வேட்டை”(Green Hunt) என்பதாகும்.

தடை செய்யப்பட்ட மாவோயிட்டுகளை தேடுகிறோம் என்ற பெயரில் இந்திய அரசின் ஒருங்கிணைப்பில் சட்டீசுகர், யார்கண்ட், பீகார், மேற்குவங்கம், ஒரிசா ஆகிய மாநில அரசுகள் இந்த வேட்டையை நடத்துகின்றன.

இந்திய விமானப்படையின் கருடா என்ற போர் விமானமும் பல்லாயிரம் தரைப்படையினரும் இணைந்த ஏறத்தாழ 80 ஆயிரம் பேர் கொண்ட ஒருங்கிணைந்த இந்திய, மாநிலப்படை இக்கொடுந் தாக்குதலை நடத்தி வருகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலம் அறிவித்து பழங்குடி மக்கள் வாழ்கிற பகுதிகளிலிருந்து அம்மக்களை மன்மோகன் சிங் ஆட்சி வெளியேற்றி வருகிறது. காட்டு வளங்களையும், இரும்பு, தங்கம், வெள்ளி, செம்பு, வைரம், நிலக்கரி, பாக்சைட், சுடெர்லைட் போன்ற கனி வளங்களையும் பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருநிறுவனங்களுக்கு வாரி வழங்கி வருகிறது தில்லி அரசு.

இதனை எதிர்த்து தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தனித்தோ அல்லது மாவோயிட்டுகள் தலைமையிலோ போராடுகின்ற பழங்குடி இன மக்கள் மீது ஈவிரக்கமற்றப் போரை கட்டவிழ்த்துள்ளது இந்திய அரசு. மாவோயிட்டுகள், சோசலிட்டுகள், பழங்குடியினக் காவலர்கள் என்று வேடங்கட்டிய அனைத்து முதலமைச்சர்களும் இந்தப் போரில் இந்திய வல்லரசோடு இணைந்து நிற்கின்றனர்.

சட்டீசுகர் மாநிலத்தில் பாசுடர் மண்டலம் என்றழைக்கப்படும் 40 ஆயிரம் சதுர கிலோமீட்டருக்குள் 26 ஆயிரம் படையாட்கள் குவிக்கப்பட்டு இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

சட்டீசுகர், யார்கண்ட், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள், குழந்தை காப்பகங்கள் ஆகியவை படைமுகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. தங்களது அன்றாட தேவைகளுக்காக காட்டுப் பழவகைகளை சேகரித்து உண்பதற்காக குடியிருப்பை விட்டு வெளியில் வரும் பழங்குடியினர் பச்சை வேட்டையில் பலியாகின்றனர். பெண்களும், குழந்தைகளும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும் கேள்வி முறையின்றித் தொடர்கிறது.

“இப்பகுதிகளில் பழங்குடியினர் அரசு அமைக்கும் கண்காணிப்பு முகாம்களில் தங்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சொந்த வீட்டில் வாழ்வதே தீவிரவாதக் குற்றமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக் கட்டிடங்கள் படையினரின் பாசறையாக மாற்றப்பட்டுள்ளன. பள்ளிக் குழந்தைகள் படிப்பதற்கான மரத்தடிகளில் தான் அங்கு கல்வி கற்பிக்கச் செல்லும் ஆசிரியர்கள் கூட மாவோயிட்டு தீவிரவாதிகளின் ஆதரவாளர்களாக குற்றம் சுமத்தப்படுகிறார்கள். முற்றமுழுதான பொருளியல் முற்றுகையில் அப்பழங்குடி மக்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று எழுத்தாளர் அருந்ததி ராய் குறிப்பிடுவது நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும். (காண்க: Outlook, march 29, 2010)

ஈராக் போரில் யார்சுப் புசு கொக்கரித்தது போல இந்திய வல்லரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “தேடுதலின் போது கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை குறித்து நாங்கள் கணக்கில் பதிவு செய்து கொள்வதில்லை” என்று ஆணவமாய் கொக்கரிக்கிறார்.

ஈழத்தில் தமிழர்களை இனக்கொலை செய்ய சிங்களத்தோடு சேர்ந்து ‘ஆபரேசன் பீக்கன்’ திட்டம் தீட்டியத்தைப் போலவே சாட்சியற்ற படுகொலை செய்ய இங்கேயும் தில்லி ஆட்சியாளர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். ‘மாவோயிட்டு அபாயத்தை 2013க்குள் முற்றிலும் ஒழிப்போம்’ என்று மன்மோகன் சிங் ப.சிதம்பரம் கூட்டணி அறிவித்துள்ளது.

ஈழத்தில் செய்தது போலவே இங்கேயும் பழங்குடியினரிடையே ஆள்காட்டிகளை இந்திய உளவுத்துறை உருவாக்கியது. சால்வாயூடும்(Salvajudum), சிறப்புக் காவல்படை, சாந்தி சேனா, அர்மத் வாகினி போன்ற பல பெயர்களில் இவ்வாறான ஆள்காட்டி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஆயுதம், பணம், வாகனம், பாதுகாப்பு ஆகியவற்றை அரசுகள் வழங்குகின்றன.

இது குறித்து இந்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளன 2009ஆம் ஆண்டு வரையறிக்கை கூறுவது இந்திய வல்லரசின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். சட்டீசுகர் மாநிலத்தில் நிலவும் வேளாண் உறவுகள் மற்றும் நிலச்சீர்திருத்தம் குறித்து நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவின் நான்காம் துணைக்குழு கீழ் வருமாறு கூறுகிறது:

“சல்வாயூடும், சட்டீசுகர் மாநில அரசால் உருவாக்கப்பட்டு ஆயுதபாணியாக வளர்த்தெடுக்கப்பட்டது. இதற்கு நடுவண் அரசின் ஆயுத உதவியும் அமைப்புவகை வழி காட்டலும் அளிக்கப்பட்டது”.

அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பழங்குடியினர், அன்றாட கண்காணிப்புக்கும் சோதனையிடலுக்கும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். படையாட்களின் அத்துமீறலுக்கு இப்பழங்குடியின பெண்களும், குழந்தைகளும் கேள்வி முறையின்றி ஆளாக்கப்படுகின்றனர். இடைவிடாத உளவியல் அச்சுறுத்தலுக்கு இவர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள்.

அல்யீரியாவில் பிரான்சும், வியத்நாமும், அமெரிக்காவும், வன்னியில் சிங்கள இந்தியக் கூட்டணியும் கையாண்ட அதே உத்தி பழங்குடி மக்களிடையேயும் இன்று தொடர்கிறது.

‘வேதாந்தா ரிசோர்சு(Vedandha Resource)’ என்ற சுடெர்லைட் குழுமத்தின்(Sterlite Group) பங்குதாரராக ப.சிதம்பரம் 2004 வரை இருந்தவர். இன்றும் மறைமுகமாக அந்த உறவு தொடர்கிறது. அமைச்சாரவதற்கு முன் அவரும், அதற்குப் பின் அவரது மனைவியும் இந்நிறுவனத்தின் நிரந்தர வழக்கறிஞ்சர்களாக உள்ளனர். TATA, ESSAR,BASCO, Mittal, Jindal, குழுமங்களுடன் சோனியா-மன்மோகன் சிங் கும்பலுக்கு இருக்கும் பண உறவு ஊரறிந்த ஒன்று.
பச்சை வேட்டையை இவர்கள் வேகமாக நடத்துவதற்கு இந்த பண உறவும் ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது.

படையாட்களால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை மக்களுக்கும், தொடர்புடைய குடும்பங்களுக்கும் இந்திய, மாநில அரசுகள் தெரியப்படுத்த வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. மனித உரிமை அமைப்பினர் தாக்கல் செய்த இந்தப் பொதுநல மனு விசாரிக்கப்படாமலேயே 2007ஆம் ஆண்டிலிருந்து உச்சநீதிமன்றத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது.

மேற்கு வங்காளத்தில் லால்கார், கிழக்கு சிங்கூர், மேற்கு சிங்கூர், குந்தி, கும்லா, பொக்காரோ அசாரிபாக் ஆகிய பகுதிகளும் ஒட்டுமொத்தமாக இராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் மட்டும் BASCO, MITTAL, TATA, VEDANTHA முதலான 200 நிறுவனங்களுடன் தில்லி அரசும், மாநில அரசுகளும் தொழில் முனைவு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. கிழக்கிந்திய வெள்ளைக்கார நிறுவனத்துக்கு அடியாட்களாக பிரித்தானிய படைகள் காலனி நாடுகளில் செயல்பட்டத்தைப் போல இந்த கொள்ளைக்கார நிறுவனங்களுக்கு அடியாள் படையாக இந்தியப் படைகள் பச்சை வேட்டையில் ஈடுபடுகின்றன.

எடுத்துக்காட்டாக, சோட்டா நாக்பூர் மண்டலத்தில் கடந்த யூலை 2009லிருந்து நடைபெற்று பச்சை வேட்டையில், பழங்குடியின மக்களும் அவர்களுக்காக போராடும் மாவோயிட்டுகளும் வெளியேற்றிவிடப்பட்டுவிட்டனர் என்று அரசு அறிவித்த உடனேயே பன்னாட்டு எஃகு பகாசுர நிறுவனமான BASCO சோட்டா நாக்பூரில் 54ஆயிரம் கோடி முதலீட்டில் இரும்புத் தொழிற்சாலை தொடங்கப்போவதாக அறிவித்தது.

தங்கள் சொந்த மண்ணில் அமைதியாக வாழ்ந்து வந்த பழங்குடி மக்கள், வளர்ச்சி என்ற பெயரால் வாழ்விடங்களை விட்டு தொகைத் தொகையாக வெளியேற்றப்படுகின்றனர். வாய்பேச வழியில்லாத அரசியல் அநாதைகளான இந்த மக்களுக்கு உற்ற அரணாக மாவோயிட்டுகள் போராடி வருகின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இதனை ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகக் காட்டி தொடர் அடக்குமுறையை இந்திய அரசு கட்டவிழ்த்துவிட்டாலும், மாவோயிட்டுகளை ஒழித்துவிட முடியவில்லை. இது அடிப்படையில் ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சனை அல்ல. மாறாக ஆழமான சமூகப் பொருளியல் பிரச்சனையாகும். மக்களைச் சார்ந்த அரசியல் திசை வழியில் தீர்க்கப்படாமல் போனால் இது மீண்டும் மீண்டும் தலையெடுக்கவே செய்யும்.

எனவே, இந்திய அரசு மாவோயிட்டுகளுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும். அவ்வமைப்பின் மீதான் தடையை நீக்க வேண்டும். சிறையில் வைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் தலைவர்களை விடுதலை செய்து அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். பழங்குடியினரின் அவரவர் வாழ்விடங்களுக்கு செல்ல அனுமதித்து அவர்களின் இயல்பான வாழ்க்கையை அனுமதிக்க வேண்டும். அடக்கு முறையின் மூலமாக இச்சிக்கலைத் தீர்க்க முடியாது என்பதை உணர வேண்டும்.

இறையாண்மை பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு என்று பெயர் சூட்டி மனித வேட்டையில் ஈடுபடும் இந்திய அரசுக்கு இது தெரியாதது அல்ல.

சத்தீசுகர், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகியப் பகுதிகளில் வாழும் கோல்டு, கோயா, தோர்லா ஆகிய பழங்குடி மக்கள் தங்கள் தாய் நிலத்தைப் பாதுகாக்க வெள்ளைக்காரர்கள் முயன்ற போது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே வீரஞ்செறிந்த போராட்டம் நடத்தியவர்கள். அந்த மரபு இன்றும் தொடர்கிறது. இன்று அவர்களுக்கு அரணாக இருந்து மாவோயிட்டுகள் அவர்களது வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.

இப்பகுதிகளில் மாவோயிட்டுகள் தலைமையில் தொடக்க நிலையிலான மாற்று நிர்வாக ஏற்பாடுகள் பழங்குடி மக்களின் மரபுகளை உள்வாங்கி செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 5 கிராமங்களை உள்ளடக்கிய புரட்சிகர மக்கள் குழு உள்ளூர் நிர்வாகமாக செயல்படுகின்றது. இது போன்ற 15 புரட்சிகர மக்கள் குழுக்கள் இணைந்தது பிரதேச புரட்சிகர மக்கள் குழு ஆகும்.

ஆயினும், பல்லாயிரக்கணக்கில் போராளிகளை ஈகம் செய்து கடந்த நாற்பது ஆண்டுகளாக போராட்டத் தீயிலேயே பயணம் செய்து வரும் மாவோயிட்டுகள் தங்கள் இலக்கை இன்னும் அடையமுடியாமல் இருப்பதற்கான காரணத்தை தன்னாய்வுச் செய்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

போர்க்களமாகக் காட்சியளிக்கிற பழங்குடி மலையக பிரதேசங்களைத் தாண்டி அவற்றிற்கு அருகிலுள்ள சமவெளிப் பகுதியில் மக்கள் ஆதரவை அமைப்பு வழியில் திரட்ட முடியாததற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இந்தியா என்ற கட்டமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு அதில் புரட்சிகர மக்கள் போர் மூலம் புதிய சனநாயக அரசை நிறுவி விடலாம் என்று கருதுவது பிழையானது.

இந்தியா என்ற கட்டமைப்பில் பழைய சனநாயகமோ, புதிய சனநாயகமோ எதற்கும் இடமில்லை.

இந்திப் பகுதியில் கூட வெவ்வேறு மொழிகளைக் கொண்ட பழங்குடியினரே பெருமளவில் திரட்டப்படுகின்றனர் என்பது தற்செயலானதல்ல.

இந்தியத் தேசியம் என்ற புதை சேற்றிலிருந்து விடுபட்டு பல்வேறு தேசியப் போராட்டங்களாக மறுவார்ப்பு செய்யப்படுவதே அம்மக்களின் விடுதலைக்கு வழி வகுக்கும். மாவோயிட்டுகளின் ஈகமும் வீணாகாமல் இலக்கை எட்டும்.


avatar
Guest
Guest

PostGuest Mon Jan 24, 2011 5:26 pm

பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை 440806உண்மை தான் அண்ணே..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக