புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_m10ஆன்மிகம் காட்டும் வாழ்வு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிகம் காட்டும் வாழ்வு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jan 17, 2011 5:40 am

“ஆன்மிகத்துக்கு ஏற்ற வயது எது?” என்று கேட்டார் ஒருவர். “நலமாக வாழ்வதற்கு ஏற்ற வயது எது என்று நீங்கள் கருதுகிaர்களோ, அதுவே ஆன்மிகத்துக்கு ஏற்ற வயது” என்று பதில் கூறினேன்.

ஆன்மிகத்தை நரைத்த தலை, தள்ளாத வயது ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துவது வழக்கமாகிவிட்டது. இதற்கு ஆன்மிகத்தின் அடிப்படையை சரிவர அறியாததே காரணம். ஆன்மிக வாழ்வு என்பது அக வாழ்க்கைத் தரத்தைச் சார்ந்தது. சிறு வயது முதலே நலமாக வாழ விரும்புகிறோம்தானே? இதேபோல் ஆன்மிக வாழ்வையும் சிறு வயதிலேயே தொடங்குவது உத்தமம். ஆன்மிக வாழ்வை... வாழ்வதன் மூலம் சொல்லிக் கொடுக்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு.

எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து வாழ்வதே ஆன்மிக வாழ்க்கை. ஆன்மா என்ற சொல்லுக்கு ‘நான்’ என்று பொருள். ஆன்மநலனை போதிப்பது ஆன்மிகம். உடல் நலம், மன நலம், அறிவு நலம், சொல் நலம், செயல் நலம், உறவு நலம், பொருள் நலம் என அனைத்து நலன்களும் இணைந்ததே ஆன்ம நலம். இவற்றைப் பாதுகாக்கும் அறிவுபூர்வ வாழ்வுக்குப் பெயர்... ஆன்மிக வழ்க்கை.

அறுபது வயதுக்குப் பிறகே ஆன்மிகம் என்பவர்கள், இந்த வயதைக் கடந்ததும் இவற்றையெல்லாம் பற்றி கேள்விப்பட்டு பெருமூச்சு விடுவது மட்டுமே சாத்தியம். சொல்லப்போனால் ஒவ்வொரு மனிதனும் சமூகத்துடன் இணைந்து வாழும் போது, ‘எப்படி வாழ வேண்டும்?’ என்ற விழிப்பு உணர்வுடன் இருப்பதே ஆன்மிக வாழ்க்கை.

தான் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று தெரிந்து அந்த நிம்மதிக்காக ஒவ்வொரு நொடியும் உழைப்பதே ஆன்மிக வாழ்க்கை, ‘அறிவையும், மனதையும், சொல்லையும், செயலையும் ஒருங்கிணைக்கும் பயிற்சியே ஆன்மிகம்’ என்றார் காஞ்சி மகா பெரியவர்.

அழகிய தோட்ட வீடு ஒன்றை தன்னுடைய மகனுக்குப் பரிசளித்தார் தந்தை. அந்தத் தோட்டத்தில் தந்தை வியர்வை சிந்தி கடுமையாக உழைத்திருந்தார். அவரது உழைப்பை உறிஞ்சிய அந்தத் தோட்டத்துச் செடி, கொடிகள் இதை அங்கீகரித்து பூக்களைச் சொரிந்தன. உயர்ந்த மரங்களில் பறவைகள் கூடுகட்டி இசை பரப்பின. காய், கனிகளும் எட்டிப்பார்த்தன. நீண்ட நாள் யாத்திரை சென்று வீடு திரும்பிய தந்தை, கவனிப்பாரற்றுக் கிடந்த தோட்டத்தைக் கண்டார். இலைகள் வாடி வதங்கி, ஒரு சொட்டுத் தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருந்தன. இந்தச் செடி ஏன் பூக்கவில்லை? இந்த மரம் நீங்கள் சென்ற பிறகு ஏன் காய்க்கவில்லை? என்று கேள்விகளை அடுக்கினான் மகன்.

தந்தை பதில் கூறினார். மகனே இந்த வீட்டின் மீது உரிமை கொண்டாடுவதில் உனக்கிருந்த அக்கறை இதை பண்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் இல்லை. இப்படித்தான் வீட்டைக் கட்டி முடித்த கையுடன் அப்படியே விட்டு விடுகின்றனர் பலரும். பராமரிக்க வேண்டும் எனும் சிந்தனை இருப்பதே இல்லை.

பரிசு பெறுவதில் பலருக்கும் ஆவல், ஆனால் அதைப் பராமரிப்பதில் இல்லை. கடவுள் நமக்கு உடல், மனம், புத்தி, பேச்சுத் திறன், செயலாற்றும் திறன், உறவுகள், பொருள் என எத்தனையோ பரிசுகளை அளித்துள்ளார்.

அக்கறையுடன் அவற்றைப் பராமரித்து, தன்னைப் பண்படுத்தும் முயற்சியே ஆன்மிகப் பயிற்சி. தூய்மை மற்றும் உறுதியுடன் உடலை வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு உணவு, உடற்பயிற்சி, உழைப்பு, உறக்கம் ஆகிய நான்கையும் உடலுக்கு தர வேண்டும்.

எதற்கு வாழ்கிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து மிருகங்களைப் போல் மடிவதற்காக நமக்கு இந்த அரிய மனித உடல் கொடுக்கப்படவில்லை. இந்த உடலில் வாழும் போதுதான் நாம் நமது உண்மையான இயல்பையும் கடவுளின் உண்மையான இயல்பையும் அறிந்து பிறவிப் பெரும்பயனை எய்த முடியும்.

மனம் குறித்த சரியான விழிப்பு உணர்வு வேண்டும். மனதை முட்காடாக வைத்திருப்பதும், பூஞ்சோலையாக மாற்றுவதும் நம் கையில்தான் இருக்கிறது. உணர்ச்சிப் போராட்டங்களில் இருந்து விடுபட வேண்டும் எனில், இறை நாமத்தால் உள்ளத்தைக் கழுவி அறிவாகிய விளக்கை ஏற்றிவைக்க வேண்டும். சூரியன் உலகை ஒளிர்விப்பது போல் தெளிந்த ஆன்மிக அறிவொளியில் உடல், மனம், சொற்கள், செயல்கள், உறவுகள், பொருள் அனைத்தும் ஒளிர வேண்டும்.

செங்கதிர்தேவன் ஒளியினைத் தேர்கின்றோம் அவன்

எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக

என்று காயத்ரி மந்திரத்தை தமிழில் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார் பாரதியார். ஒளியை வழிபடுவதன் மூலம் நாம் அறிவை வழிபடுகிறோம்.

வேத புராணங்கள், இதிகாசங்கள் திருக் குறள் முதலானவை... நம்மை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கின்றன. அறிவில் தெளிவைப் பெற நல்ல நூல்களை அனுதினமும் படிப்பதே ஆன்மிக வாழ்வின் முதல்படி.

கற்றலுடன் நின்று விடுவதில்லை. ஆன்மிகப் பயிற்சி அதன்படி நிற்றலில்தான் அது நிறைவுறுகிறது. படிப்பதுடன் கடைப்பிடிப்பதும் மிக அவசியம். நூலறிவு, பட்டறிவுடன் இணையும் போது அது நுண்ணிறிவாக மாறுகிறது. உள்ளத்தில் விதைத்த நல்ல எண்ணங்கள் நல்ல சிந்தனைகளாகப் பூத்துக் குலுங்கி, சொற்களிலும், செயல்களிலும் வெளிப்பட வேண்டும். சரியான திசை நோக்கிப் பயணிக்கும் அளவான தரமான எண்ணங்கள் சொல், செயல் என அனைத்தும் நம் வாழ்க்கையை தெய்வ நிலைக்கு உயர்த்துகின்றன.

கர்ம யோகத்தால் தன் வாழ்வை மலரச் செய்கிறான் ஆன்மிகவாதி, செயல்கள் அனைத்தையும் இறைவனின் திருவடியில் மலர்களாக்கி மகிழ்கிறான். இதனால் வரும் பலன்களை இறைப் பிரசாதமாக ஏற்று திருப்தி அடைகிறான். இவனது வாழ்க்கையே நீண்ட தொரு வழிபாடாகத் திகழ்கிறது. இறைவனுடன் தனக்கு இருக்கும் அசைக்க முடியாத தொடர்பை அவன் உணர்ந்து கொள்கிறான். உறவுகளையும் உலகையும் கையாளும் கலை, அவனுக்கு கை வருகிறது. நிம்மதியின் விலாசம் அவனுக்குத் தெரிகிறது. அந்த நிம்மதி தன்னிடமே இருப்பது புரிகிறது. சுருக்கமாகச் சொன்னால், அவன் தன்னை ஆளும் ஆற்றல் உடையவனாகத் திகழ்கிறான்.

இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது? புத்தியை, மனதை, பேச்சை, கைகால், அசைவுகளை, செயல்களை, பணத்தை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? எப்படி வைத்துக் கொள்ளக்கூடாது? என்பது குறித்து இடையறாது சிந்தித்து நடப்பதே ஆன்மிகம்.

ஆன்மிகவாதி அனைத்து உயிர்களிலும் தன்னையே தரிசிக்கிறான். ஆன்மிக வாழ்வு எனில் முகத்தை எப்போதும் சீரியஸாக வைத்திருக்க வேண்டும் என அர்த்தமில்லை. தெளிந்த அறிவு, ஆழ்மன அமைதி, பொங்கித்ததும்பும் உற்சாகம்... இவையே ,}மிக அடையாளங்கள். உலகில் உண்மையிலேயே நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வது தெளிவான அறிவு கொண்ட ஆன்மிகவாதி மட்டுமே. மற்றவர்கள் இன்பமாக இருப்பது போல தோற்றமளிக்கிறார்கள் அவ்வளவுதான்.

இன்பத்தைத் தேடி உலகெங்கும் சுற்றி அலைபவன்... வித விதமான உணவுகளை சுவைத்துப் பார்க்கிறான். புலன்களே மரத்துப் போகும் அளவுக்கு புலனின்பப் பொருட்களை அனுபவிக்கிறான். அனைத்தும் கானல் நீர், போலி என வாழ்வின் கடைசி விளிம்பிலேனும் அறிகிறானா? தெரியவில்லை. ஆனால் இன்பத்துக்காக உலகைச் சார்ந்திருப்பதில்லை. ஆன்மிகவாதி தன்னில்தான் இன்பம் என நிலைத்து நிற்கிறான். நிம்மதி என்பதன் முழு பொருளும் இவனுக்கே விளங்குகிறது. அவன் பூ ஒன்று உதிர்வது போல் சத்தமின்றி வலியின்றி இந்த உலக வாழ்வை நிறைவு செய்கிறான்.


சுவாமி ஓங்காரநந்தர்...





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக