புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடமானம் Poll_c10அடமானம் Poll_m10அடமானம் Poll_c10 
44 Posts - 59%
heezulia
அடமானம் Poll_c10அடமானம் Poll_m10அடமானம் Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
அடமானம் Poll_c10அடமானம் Poll_m10அடமானம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அடமானம் Poll_c10அடமானம் Poll_m10அடமானம் Poll_c10 
3 Posts - 4%
viyasan
அடமானம் Poll_c10அடமானம் Poll_m10அடமானம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடமானம் Poll_c10அடமானம் Poll_m10அடமானம் Poll_c10 
236 Posts - 42%
heezulia
அடமானம் Poll_c10அடமானம் Poll_m10அடமானம் Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
அடமானம் Poll_c10அடமானம் Poll_m10அடமானம் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அடமானம் Poll_c10அடமானம் Poll_m10அடமானம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அடமானம் Poll_c10அடமானம் Poll_m10அடமானம் Poll_c10 
13 Posts - 2%
prajai
அடமானம் Poll_c10அடமானம் Poll_m10அடமானம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அடமானம் Poll_c10அடமானம் Poll_m10அடமானம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அடமானம் Poll_c10அடமானம் Poll_m10அடமானம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அடமானம் Poll_c10அடமானம் Poll_m10அடமானம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அடமானம் Poll_c10அடமானம் Poll_m10அடமானம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடமானம்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 3:14 am

-அறிவுமதி


சட்டென விழித்துக் கொண்டாள் செடிசேம்பு. பட்டிக்குள் அடைந்து கிடக்கும் பன்றிகள் சண்டையிட்டுக் கொண்டு சாமத்தில் உறுமத் தொடங்குகிற நேரமெல்லாம் இப்படி ஆகும். விரிந்த விழிகள் கனக்க இருள். உடம்பு நெடுக வலி, கொத்தாய்த் தலைமயிரைச் சுருட்டிப் பிடித்துக் கொண்டு மாசாணம் உதைத்த உதை, அடித்த அடி, கீழ் வெளியில் களை பறித்தவர்கள்... ஏர் ஓட்டியவர்கள் எல்லோருமாய் வந்து அதட்டியும் கூட அடங்காத ஆக்ரோஷத்தில் புரட்டி எடுத்தான்.

மரமாய் நின்ற செங்கானை அப்போதைக்கப் போது ஓடிப் போய் நெட்டி நெட்டித் தள்ளி விட்டு வந்து செடிசேம்பை அடித்தான்.

ஏலே கிறுக்கா.. வெட்டப் போற பன்னிய வெறட்டி வெறட்டி மல்லு கட்றாப் போல இப்படிப் போட்டு இவள தொலைக்கிறய... கிறுக்குப் புடிச்சுப் போச்சா ஒனக்கு. என்றபடியே பூசாவி வீட்டுக் கிழவர் அவனைப் பிடித்து விசிறித் தள்ளவும், புழுதியில் போய் விழுந்தான் மாசாணம். புழுதியை உதறிவிட்டு கோவணத்தை இறுக்கிய படியே வந்து புலம்பினான்.

எத்தனைப் பன்னிய வித்து.. எவ்வளவு சிரமப்பட்டு இவங்கிட்டேருந்து இவள மூட்டிருக்கேன் தெரியுமா சாமி... மூட்டுன பொறவு என்னெ வுட்டுட்டு வந்து இங்க ஆமக்கறி குழம்போட குந்திகிட்டு இவனோட கும்மாளம் போடுறான்னா... இவள என்னா செஞ்சா தகும் சாமி... நீங்களே சொல்லுங்க.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 3:14 am

சரிடா...மாசாணம... ஏதோ ஒரு மொடைக்கு அங்க இங்க பொரட்ட முடியாம செங்காங்கிட்ட ஓம் பொண்டாட்டிய அடமானம் வச்சுட்ட, பத்து நாளு பதினைஞ்சு நாளுல மூட்டியிருந்தின்னா பிரச்சன இல்ல... பத்து மாசம் விட்டுட்டு இப்பத்தான் தீத்திருக்க... பத்து மாசமா பழகுன பழக்கம் ஒடனே ஒதறிட முடியுமா?

புரள முயன்றாள். மார்பு நசுக்கி நீண்டு கிடந்தது மாசாணத்தின் கை. எத்தனை உடும்புகள்... எத்தனை அணில்கள்... எத்தனை விளாமரத்துக் குட்டை ஆமைகள்... எல்லாமுமாய்த் தின்று சீரணித்த கொழுப்பின் கிளை.

பட்டிப்படலை முட்டி மோதும் பன்றிகளின் தூண்டுதலில் கிறுக்கேறி நெட்டி முறிப்பதாய் ஒடிந்தான். கையின் நசுங்கலில் பிசகிய மெத்தின் சூட்டில் விழித்தவன் புரண்டான்.

கறம்பின் கெட்டித்த மண்ணில் முட்டி முட்டிக் கிளறிச் சீய்த்துக் கோரைக் கிழங்குகள் தின்னும் பன்றி கள்கூட மிதிக்க மிதிக்கச் சாராயம் கிளறிய பாடல்கள் யாவும் பெருமூச்சிகளின் வழியே கசிந்துப் பிசுபிசுத்தன.

அசைவற்று மல்லாந்த செடி சேம்பின் மேல்... கூரையின் ஓட்டை வழியே இறங்கும் நிலாக்கயிறு பிடித்து மெல்ல இறங்கினான் செங்கான். அவள்மேல் எடையற்றுப் படர்ந்தான். அவள் அவனை மூச்சாய் உள் வாங்கிக் குடித்தாள்.

அடமானம் வைத்த புதுசு. மேலப் பாலையூர் வெளிக்குப் பன்றியோட்டிப் போனவன் சாயந்தரம் திரும்புகையில் தோள் கனக்க ரெண்டு மூன்று உடும்புகளைப் போட்டுக் கொண்டு வந்தான்.

கூட மாட அவனும் ஒத்தாசை செய்ய குழம்பு வைத்து முடித்துச் சாப்பிடக் கூப்பிட்டாள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 3:14 am

இடதுகாலைக் குத்திட்டுக் கொண்டு உட்கார்ந்தான். சாப்பாட்டில் குழம்பை ஊற்றவும், கறித் துண்டு களை ஒதுக்கிவிட்டு பிசையப் பிசையப் பிதுங்கும் ஆவியிலேயே மீசை பூத்தான். ஒரு வாய் அள்ளி வைத்தான். ருசி ஏறியச் சருக்கில் அப்படியே சொம்பில் இருந்தத் தண்ணியை எடுத்துப் பக்கத்தில் இருந்த சட்டியில் கை கழுவினான்.

என்னய்யா, குழம்பு புடிக்கலியா?

இல்ல...சேம்பு, இவ்வளவு சமைக்கிறியே இப்படிச் சாப்புட்டுப் பழக்கப்பட்ட ஒம்புருஷன் இந்த ஒரு மாசமா நாக்கு செத்துக் கெடப்பால்ல, முதல்ல அவனுக்குக் குழம்பயும், சோத்தயும் எடுத்துட்டுப் போயி குடுத்துட்டுவா. இருந்து சாப்பிட வச்சு நெதானமா வா. நா ஆத்தங்கரையில் நிக்கறேன்.

போறன் நீ சாப்புடு

போயி குடுத்துட்டு வா மொதல்ல

நாய்க்குட்டியும் புறப்பட்டது. தடுத்து மடியில் வைத்துக் கொண்டான் செங்கான்.

2

மாசாணத்திற்குத் திக் கென்றது.

என்னடி இந்த நேரத்துல

இல்ல... உடும்புக்கறி கொழம்பு... அதா எடுத்துட்டு வந்தேன்.

அவனுக்குத் தெரிஞ்சுதானா... இல்ல

அந்த ஆள்தான்யா கொண்டு போயி குடுத்துட்டு வான்னாரு, வா... சாப்புடு...

உட்காரச் சொல்லி ஆசை தீரச் சாப்பிட வைத்தாள்.

கை கழுவி வந்து அமர்ந்ததும் அழுதாள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 3:14 am

என்னெ சீக்கிரம் மூட்டுக்கய்யா... பத்து நாள்ன்னு சொல்லிட்டு மாசம் ஒண்ணு ஆயிடுச்சு

கவலப்படாத …சேம்பு பன்னிங்க பெருக்கட்டும். புடிச்சி கொஞ்சத்த வித்துட்டு வந்து உன்னே மூட்டுக்கறேன், சரி புறப்படு அவன் காத்திட்டிருப்பான்.

பரவால்ல... நெதானமாதா வரச் சொல்லிச்சி

நெதானமான்னா?

அமர்ந்திருந்தவனைத் தள்ளி விட்டாள். சட்டென விழுந்த வேகத்திலேயே எழுந்து கொண்டான் மாசாணம்.

சேம்பு... அடமானம் வச்ச பொருள மூக்காம ஆளுறது அழகில்ல, சீக்கிரமா மூட்டுக்கறேன், புறப்படு.

ஆ;றைத்தாண்டி கரையேறுகிற போது செங்கான் காத்திருந்து அழைத்துப் போனான்.

பட்டியில் பன்றிகளின் அழிச்சாட்டியம். புரண்டு படுத்த மாசாணத்தின் மார்பு நடுவே கொசகொசவெனச் சுருண்டு கிடந்த மயிர்க் கோரைகளில் விரல்கள் பரப்பிப் பிடுங்கினாள். மிருதுவாய் விரல் நகர்த்திக் கெண்டைக் காலில் நிமிண்டினாள்.

திமிறினான். ஒருக்களித்தான். முதுகு காட்டிப் படுத்தான். பாம்பாய் இழைந்தாள். பற்களால் நடு முதுகில் கொத்தாய்ச் சதையள்ளி இழுத்தாள். செடிசேம்புக்குள்ளிருந்து உடும்புகள் சிம்பின. கோரை நைப்பு திரண்டு இரவு அதிர்ந்தது. பிழிந்த மூர்க்கத்தில் மாசாணம் தக்கையானான். குறட்டை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 3:15 am

நிலா வெளிச்சத்தின் வழியே மறுபடியும் இறங்கி வந்த செங்கான் கை கொடுத்துத் தூக்கவும் எழுந்தாள்.

சீலையைச் சுற்றிக் கொண்டு மெல்ல படலைத் திறந்தாள். கோழிக்கூட்டிற்குப் பக்கத்தில் பன்னிவெட்டைப் பொறுக்கும் கூடைக்குள் கவிழ்த்து வைத்திருந்த ஆமைக்கறி குழம்பை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

பாழ்வாய்க்கால் தாண்டி... காட்டுக் கருவைகளின் ஒத்தாசையோடு பதுங்கிப் பதுங்கிப் போய் ஆற்றுக்குள் இறங்கி சீலையை முச்சூடுமாய் அவிழ்த்துச் சுருட்டி குழம்புச் சட்டியோடு தூக்கிப் பிடித்துக் கொண்டு கழுத்தளவு தண்ணியை மீறுகிற இடத்திலும் ஒத்தக்கை நீச்சலாய்க் கரையேறி குழம்புச் சட்டியை வைத்து விட்டு வந்து மீண்டும் தண்ணீரில் இறங்கிக் குளித்தாள்.

அங்கங்கே அடிபட்ட இடங்களின் சதைச் சிராய்ப்புகளில் மீன்கள் கடிக்கக் கடிக்க ஒணைக்கையாய்ப் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றவள் கரையேறி நடந்தாள்.

3
தொழூர் இலுப்பைத் தோப்பு.
மரத்துக்கு மரம் பதுங்கிப் பதுங்கி அரவான் பலிகொடுக்கும் இடத்தையும் தாண்டி வந்து செங்கானின் பனை ஓலைக் குடிசையின் படலைத் திறந்ததும் தான் தாமதம், சட்டென மோப்பங் கண்ட நாய் மடிச்சீலையில் தவ்விக் கொஞ்ச ஆரம்பித்து விட்டது. பத்து மாசமாய் வளர்த்து விட்டுப் போன பாசம்.

இரண்டு கைகளாலும் குழம்புச் சட்டியை மேலே தூக்கியவள் மெல்ல ஒரு கையில் மாற்றிக் கொண்டு குழம்புச் சட்டியில் கை விட்டு இரண்டு மூன்று கறித் துண்டுகளை எடுத்துக் கீழே போட்டாள். நாய் அதைச் சட்டை செய்ய வில்லை. அவளையே தொற்றிக் கிடந்தது. குனிந்து வருடி முத்தமிட்டு அணைத்துச் சமாதானம் செய்தாள்.
நிலா வெளிச்சத்தின் வழியே மறுபடியும் இறங்கி வந்த செங்கான் கை கொடுத்துத் தூக்கவும் எழுந்தாள்.

சீலையைச் சுற்றிக் கொண்டு மெல்ல படலைத் திறந்தாள். கோழிக்கூட்டிற்குப் பக்கத்தில் பன்னிவெட்டைப் பொறுக்கும் கூடைக்குள் கவிழ்த்து வைத்திருந்த ஆமைக்கறி குழம்பை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

பாழ்வாய்க்கால் தாண்டி... காட்டுக் கருவைகளின் ஒத்தாசையோடு பதுங்கிப் பதுங்கிப் போய் ஆற்றுக்குள் இறங்கி சீலையை முச்சூடுமாய் அவிழ்த்துச் சுருட்டி குழம்புச் சட்டியோடு தூக்கிப் பிடித்துக் கொண்டு கழுத்தளவு தண்ணியை மீறுகிற இடத்திலும் ஒத்தக்கை நீச்சலாய்க் கரையேறி குழம்புச் சட்டியை வைத்து விட்டு வந்து மீண்டும் தண்ணீரில் இறங்கிக் குளித்தாள்.

அங்கங்கே அடிபட்ட இடங்களின் சதைச் சிராய்ப்புகளில் மீன்கள் கடிக்கக் கடிக்க ஒணைக்கையாய்ப் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றவள் கரையேறி நடந்தாள்.

3
தொழூர் இலுப்பைத் தோப்பு.
மரத்துக்கு மரம் பதுங்கிப் பதுங்கி அரவான் பலிகொடுக்கும் இடத்தையும் தாண்டி வந்து செங்கானின் பனை ஓலைக் குடிசையின் படலைத் திறந்ததும் தான் தாமதம், சட்டென மோப்பங் கண்ட நாய் மடிச்சீலையில் தவ்விக் கொஞ்ச ஆரம்பித்து விட்டது. பத்து மாசமாய் வளர்த்து விட்டுப் போன பாசம்.

இரண்டு கைகளாலும் குழம்புச் சட்டியை மேலே தூக்கியவள் மெல்ல ஒரு கையில் மாற்றிக் கொண்டு குழம்புச் சட்டியில் கை விட்டு இரண்டு மூன்று கறித் துண்டுகளை எடுத்துக் கீழே போட்டாள். நாய் அதைச் சட்டை செய்ய வில்லை. அவளையே தொற்றிக் கிடந்தது. குனிந்து வருடி முத்தமிட்டு அணைத்துச் சமாதானம் செய்தாள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 3:15 am

மெல்லக் கதவு திறந்து போனாள். குழம்புச்சட்டியை இருளில் துழாவி உறியில் வைத்துவிட்டு வாசல் வழியே வந்த நிலா வெளிச்ச நெகாவில் செங்கான் படுத்திருக்கும் இடத்தில் அமர்ந் தாள்.

இருளில் வெளிச்சம் பிழிந்து, செங்கானின் முகம் தேடி நெடு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அகன்ற மார்பு மூச்சுக்கு மூச்சு விரிந்து, விரிந்து படுத்தது.

சட்டென அழுகை வந்து அவன் மீது படர்ந்தாள்.

சேம்பு...

ம்...

இந்த நேரத்துலயா...

முடியலய்யா... உன்னெ இப்படி ஒத்தையில படுக்க வச்சுட்டு அங்கப் போயி படுக்க முடியல. மனசு அறுக்குது.

சேம்பு... புரிஞ்சுக்காமப் பேசாத... சாதாரணமா குழம்பு கொடுக்க வந்ததுக்கே... உன்னெ என்ன பாடு படுத்திட்டான் அவன். என்ன செய்ய முடிஞ்சது என்னால... அவ மூட்டுக்கிட்டப் பொறவு நான் என்ன செய்ய முடியும்.

பணம் வேணுங்கறப்ப அடமானம் வைக்க... பணம் கெடச்சப்ப மூட்டுக்க இதென்ன அண்டா குண்டானாய்யா... பத்து மாசமா ஒங்கூடவே காடு கறம்பு வயலு வாய்க்கான்னு அலைஞ்சிட்டு... இப்படி ஒன்னெப் பிரிஞ்சு கெடக்க இந்தக் கட்டைக்கு முடியலய்யா

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 3:15 am

அவன் மார்பில் விம்மினாள்.

இரு கைகளாலும் உள்வாங்கி மிருதுவாய் வருடினான். கைநெகாவில் காயம் உணர்ந்து அவளைப் பாயில் கிடத்தி எழுந்தான். அவள் அவனை இழுத்து மார்பில் அழுத்தினாள். அவன் அவளது கைகளைப் பிய்த்து எடுத்தான்.

சேம்பு வேணாம்... நெடுக ரணம் பட்டுக் கெடக்குற ஒடம்புல போயி... எப்படி... முடியாது... இரு

எழுந்தான். சிம்னி கொளுத்தி மூலையில் இருந்த சீசாவைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து காயங்களில் பன்னி நெய்யைப் பறவையின் இற கால் நனைத்து எடுத்து நீவி விட்டான். சீசாவை வைத்துவிட்டு வந்து அமர்ந்து அவள் உடல் நெடுக... காய்ப்பேறிய கைகளால் மிருதுவாய்ப் பிடித்து விட்டான்.

சேம்பு... எழுந்திரு... அங்க முழிப்புத்தட்டித் தேடுனான்னா கதையே வேற.... பஞ்சாயத்துக்குச் சாராயம் வாங்கிக் கொடுத்தே எம்பட்டியும் போயிடும். அவம்பட்டியும் போயிடும்.

அப்புறம்...

கூட கட்லியோ... மொறம் கட்லியோ ...ன்னு கிழக்குச் சீமைப் பூராவும் அலைய வேண்டியதுதான்.

எழுந்துரு.

எழுந்தாள். படலை மூடிக் கொண்டு... வெளியே வந்ததும் நாய் தொடர ஆற்றங்கரைக்கு வந்தனர். இருவரையும் யாரோ குறுக்காகக் கிழிப்பதுபோல் உணர்ந்து அவனை இறுக்க அணைத்துக் கொண்டாள். சிறிது நேரம் மௌனத்துக்குப் பிறகு... அவளே விடுவித்துக் கொண்டு குனிந்தாள். நாயை மெல்ல வருடி அணைத்து முத்தமிட்டு ஆற்றில் இறங்கினாள். பாதி தூரம் சென்று திரும்ப.. நாயும் நீச்சலிட்டு வருவது தெரிந்தது.

திரும்பி விரட்டினாள். அருகில் நீச்சலிட்டு வந்தது போ... போ... வர்றேன்... போ... போ... என்று தள்ளி விட்டாள். கரையேறியவள் சீலை சுற்றித் திரும்பிப் பார்த்தாள். நிலா வெளிச்சத்தில் செங்கான் நின்று கொண்டிருந்தான். பக்கத்தில் நின்ற நாய் சிலுப்பவும் நிலாத்துளிகள் தெறித்துச் சிதறின.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக