புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_m10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10 
106 Posts - 49%
heezulia
தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_m10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10 
87 Posts - 40%
mohamed nizamudeen
தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_m10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_m10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_m10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_m10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10 
2 Posts - 1%
prajai

Ratha Vetrivel
தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_m10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10 
1 Post - 0%
eraeravi

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_m10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10 
44 Posts - 49%

36 Posts - 40%

3 Posts - 3%
சுகவனேஷ்
தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_m10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10 
2 Posts - 2%
prajai
தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_m10தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 07, 2011 8:59 am

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! ஆந்திரா, ஒரே மாநிலமாக இருப்பது தான் நல்லது' என்றும் கருத்து

தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Ms05

தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி 6 வகையான யோசனைகளை தெரிவித்து உள்ளது. என்றாலும், `ஆந்திரா ஒரே மாநிலமாக இருப்பதுதான் நல்லது' என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறது.

ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராட்டம் நடந்து வருகிறது.

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை

எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி அமைத்தது. அந்த கமிட்டி ஆந்திரா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 11 மாதங்களாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு ஆய்வு நடத்தி, 2 பகுதிகள் கொண்ட 461 பக்க அறிக்கையை கடந்த டிசம்பர் 30-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரத்திடம் தாக்கல் செய்தது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை நேற்று கூட்டி அந்த அறிக்கையை வெளியிட முடிவு செய்த ப.சிதம்பரம், அதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

வெளியிடப்பட்டது

அதன்படி நேற்று அவர் டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் ஆந்திர மாநில முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி மற்றும் காங்கிரஸ், பிரஜா ராஜ்ஜியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மஜ்லிஸ் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தெலுங்கு தேசம், தெலுங் கானா ராஷ்டிர சமிதி, பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.

கூட்டத்தில் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கையை உள்துறை மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், தெலுங் கானா தனி மாநில பிரச்சினை தொடர்பாக ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி 6 யோசனைகளை தெரிவித்து உள்ளது.

6 யோசனைகள்

அதில் முக்கியமாக ஒன்றுபட்ட ஆந்திரா மாநிலம் நீடிக்க வேண்டும் என்றும், தெலுங்கானா பகுதிக்கு உரிய அதிகாரங்கள் கிடைக்கவும், அந்த பகுதியின் மேம்பாட்டுக்கு அரசியல் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளது.

பிரச்சினைக்கு தீர்வு காண இதுதான் மிகச் சிறந்த யோசனை என்று கூறியுள்ள ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி, இது முடியாத பட்சத்தில் தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளது. இதை இரண்டாவது சிறந்த யோசனையாக குறிப்பிட்டு இருக்கிறது.

தெரிவிக்கப்பட்டுள்ள 6 யோசனைகளில் 3 யோசனைகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதவை என்றும் அந்த கமிட்டி கூறி இருக்கிறது.

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தெரிவித்துள்ள யோசனைகள் விவரம் வருமாறு:-

பிரிக்கலாம்

1. தற்போதுள்ள ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் அப்படியே நீடிக்க வேண்டும்.

ஆனால் மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை வைத்துப் பார்த்தால், இப்போது இருப்பது போன்றே நீடிப்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்று இந்த கமிட்டி ஒருமனதாக கருது
கிறது. இதனால் தற்போதுள்ள நிலை நீடிக்க சில நடவடிக்கைகள் தேவைப்படும்.

2. ஆந்திராவை சீமாந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களாக பிரித்து ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கலாம். பிரிக்கப்பட்ட சீமாந்திராவும் தெலுங் கானாவும் தங்களுக்கு தனித்தனி தலைநகரங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த யோசனைக்கு தெலுங் கானா பகுதியில் பலத்த எதிர்ப்பு கிளம்பும் என்பதால், இதுவும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என கமிட்டி கருதுகிறது.

ராயல-தெலுங்கானா மாநிலம்

3. இரு மாநிலங்களாக பிரித்தால் ராயலசீமா பகுதியை தெலுங்கானாவுடன் சேர்த்து ராயல-தெலுங்கானா என்ற மாநிலத்தையும், கடலோர ஆந்திரா என்ற மற்றொரு மாநிலத்தையும் உருவாக்கலாம். தலைநகர் ஐதராபாத்தை ராயல-தெலுங்கானா மாநிலத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த யோசனை தெலுங்கானா ஆதரவாளர்களாலும், ஒன்றுபட்ட ஆந்திரா ஆந்திர மாநிலத்தை விரும்புகிறவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை உள்ளது. பொருளாதார ரீதியை கருத்தில் கொண்டு பார்த்தால் இந்த யோசனை நியாயமானதாக இருந்த போதிலும் 3 பிராந்திய மக்களும் ஏற்றுக் கொள்ளும் தீர்வை இந்த யோசனை வழங்காது என்று இந்த கமிட்டி கருதுகிறது.

ஐதராபாத் யூனியன் பிரதேசம்

4. ஆந்திராவை இரண்டாக பிரித்து சீமாந்திரா, தெலுங்கானா ஆகிய இரு தனித்தனி மாநிலங்களை உருவாக்கிவிட்டு, ஐதராபாத் பெருநகரை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கலாம். பூகோள ரீதியாக ஐதராபாத் யூனியன் பிரதேசம் நல்கொண்டா மாவட்டம் வழியாக தென்கிழக்கில் கடலோர ஆந்திராவில் உள்ள குண்டூர் மாவட்டத்துடனும் மகபூப்நகர் மாவட்டம் வழியாக தெற்கில் ராயலசீமா பகுதியில் உள்ள கர்னூல் மாவட்டத்துடனும் தொடர்புடையதாக இருக்கும்.

இந்த யோசனைக்கு தெலுங்கானா ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்பதால், அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதில் ஒருமித்த அரசியல் கருத்தை ஏற்படுத்துவது சிரமம் ஆகும்.

கோரிக்கை நியாயமற்றது அல்ல

5. ஏற்கனவே உள்ள எல்லை வரையறைகளின்படி, தெலுங்கானா, சீமாந்திரா என்ற இரு மாநிலங்களாக பிரிக்கலாம். தெலுங்கானாவுக்கு ஐதராபாத்தை தலைநகர் ஆக்கலாம். சீமாந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டும். சீமாந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்கும் வரை ஐதராபாத் இரு மாநிலங்களுக்கும் தலைநகராக நீடிக்கலாம். புதிய தலைநகரை உருவாக்குவதற்கு அதிக நிதி தேவைப்படும் என்பதால், அதை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

இந்த யோசனையை பரிசீலிக்க வேண்டும் என்று இந்த குழு கருதுகிறது. தனி தெலுங்கானா கோரிக்கை முற்றிலும் நியாயமற்றது என்று ஒதுக்கிவிட முடியாது. அந்த கோரிக்கையில் சில நியாயங்கள் இருப்பதாக இந்த கமிட்டி கருதுகிறது.

அச்ச உணர்வு

இந்த யோசனை செயலாக்கத்துக்கு வரும் பட்சத்தில் ஐதராபாத்திலும் தெலுங்கானாவில் உள்ள மற்ற பகுதிகளிலும் வசிக்கும் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தங்களுடைய வாழ்க்கை பாதுகாப்பு, சொத்துக்கள், முதலீடுகள், வேலைவாய்ப்புகள் அச்ச உணர்வுகள் ஏற்படும். அந்த பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தான் அந்த பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். ஆனால் சில தீவிரமான பிரச்சினைகளின் அடிப்படையில் சாதக-பாதகங்களையும் ஆராய்ந்து பார்க்கும் போது இதை சிறந்த யோசனையாக கருத முடியாது என்ற போதிலும், இரண்டாவது நல்ல யோசனையாக எடுத்துக் கொள்ளலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் மாநில பிரிவினைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த விஷயத்தில் அனைத்து மூன்று பிராந்திய மக்களிடமும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டால் முடிவு எடுக்க முடியும்.

ஆனால் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தியும் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் போராட்டம் வெடிக்கலாம். அந்த பகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ராஜினாமா செய்து நெருக்கடி கொடுக்கக்கூடும்.

ஒன்றுபட்ட ஆந்திரா

6. ஆந்திரா ஒன்றுபட்ட மாநிலமாக நீடிக்க வேண்டும். அப்படி நீடிக்கும் வகையில் தெலுங்கானா பகுதியில் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, அங்குள்ள மக்களுக்கு உரிய அரசியல் அதிகாரங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். தெலுங்கானா பகுதியின் வளர்ச்சிக்காக சட்ட ரீதியிலான அதிகாரம் கொண்ட தெலுங்கானா பிராந்திய கவுன்சிலை ஏற்படுத்தலாம்.

தெலுங்கானா சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய பகுதியாக இருப்பதால் அந்த முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காணவும், அந்த பகுதி மேம்பாடு காணவும், ஆந்திரா தொடர்ந்து ஒரே மாநிலமாக இருக்கவும் இந்த யோசனை உதவும்.

மேலும் ஆந்திராவின் 3 பிராந்தியங்களும் வளர்ச்சி காணவும், அந்த பிராந்தியங்களில் உள்ள மக்களின் நலனுக்கும் இந்த யோசனை மிகவும் உகந்ததாக இருக்கும் என்று கருதுகிறோம். இந்த யோசனை பெரும்பாலான மக்களுக்கு திருப்தி அளிப்பதாகவும் இருக்கும்.

முதல்-மந்திரி பதவி

தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் கிடைக்கும் வகையில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முதல்-மந்திரி அல்லது துணை முதல்-மந்திரி மற்றும் முக்கிய மந்திரி பதவிகளை வழங்கலாம்.

கல்வி, தொழில், மென்பொருள் துறை ஆகியவற்றில் ஐதராபாத் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால் அங்கு வசதிகளை மேற்படுத்துவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். மேலும் தெலுங்கானா பகுதியில் குடிநீர் மேலாண்மை, நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி நிர்வாகம் போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் அந்த பகுதி மக்களை திருப்திப்படுத்த முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ப.சிதம்பரம் பேச்சு

அறிக்கையை வெளியிட்டு உள்துறை மந்திரி ப.சிதம்பரம் பேசுகையில் கூறியதாவது:-

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி 6 யோசனைகளை தெரிவித்து அவற்றின் சாதக, பாதகங்களையும் கூறி இருக்கிறது. 3 யோசனைகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதவை என்று கூறி அவற்றை நிராகரித்தும் உள்ளது.

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தீவிரமாக ஆய்வு நடத்தி தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும், குழுக்களும், தனிப்பட்ட நபர்களும் மதிப்பு அளிக்க வேண்டும். இந்த அறிக்கையை கவனமாக படித்து விரைவில் உரிய முடிவு எடுக்க வேண்டும். இந்த கூட்டத்தில் சில கட்சிகள் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. அந்த கட்சிகளுக்கு இந்த அறிக்கையின் பிரதிகள் அனுப்பி வைக்கப்படும். மேலும் இந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்திலும் வெளியிடப்படும். இந்த மாத இறுதியில் மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Jan 07, 2011 11:21 am

இது சாத்தியமல்ல. தனித் தெலுங்கானா தான் தீர்வாக இருக்கும். ஆனால் மாணவர்கள் ஒரு தவறை செய்துவிட்டனர். தனி மாநிலத்திற்கு பதிலாக தனி நாட்டு கோரிக்கைக்காக போராடி இருந்தால் நன்றாக் இருந்திருக்கும். மற்ற மாநிலங்களுக்கும் ஒரு புது உத்வேகத்தை அளித்திருக்கும். தமிழகத்திலும் போராட்டங்கள் துவங்கியிருக்கும்...

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 07, 2011 12:14 pm

நிஷாந்தன் தமிழ் நாடு தமிழர்கள் போராடுவாங்களா... போங்க அண்ணே காமெடி பண்ணாதீங்க.... சீமான் போன்ற வார்களாயே காசுக்காக பேசுராணு சொன்ன மற தமிழர்கள் வாழும் தமிழகம் இது...

என்ன கொடுமை சார் இது

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Jan 07, 2011 10:50 pm

தமிழனுக்கு தான் இந்தியாவால் சுரண்டப்படுகிறோம் என்று உணர வைக்கவேண்டும். இந்தியாவிற்கு எதிராக ஒரு சுதந்திரப் போராட்டம் உறுவாக வேண்டும் என்றால் அது முதலில் தமிழ்நாட்டில் தான் உறுவாகும் என்பது இந்திய அரசியல் நோக்கர்களின் கருத்து. தமிழன் என்றைக்கும் இலவசங்களுக்கு அடிமையாக கிடக்கமாட்டான்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 08, 2011 10:42 am

நிசாந்தன் wrote:தமிழனுக்கு தான் இந்தியாவால் சுரண்டப்படுகிறோம் என்று உணர வைக்கவேண்டும். இந்தியாவிற்கு எதிராக ஒரு சுதந்திரப் போராட்டம் உறுவாக வேண்டும் என்றால் அது முதலில் தமிழ்நாட்டில் தான் உறுவாகும் என்பது இந்திய அரசியல் நோக்கர்களின் கருத்து. தமிழன் என்றைக்கும் இலவசங்களுக்கு அடிமையாக கிடக்கமாட்டான்.

எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு அண்ணே...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக