புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
6 Posts - 46%
heezulia
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
372 Posts - 49%
heezulia
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
25 Posts - 3%
prajai
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 11:49 pm

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Murung10
முருங்கைக் கீரை

மனித உடலுக்கு ஆரோக்கியத்தையும், தேவையான புரதச் சத்துகளையும் அளிப்பதில் காய்கறிகளும், பச்சைக் கீரைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன.

கீரையைப் பச்சைப் பசேல் என்று அதன் நிறத்திலேயே சமைப்பதுதான் மிகவும் சிறந்தது.

எந்த கீரையானாலும், அவற்றைக் கழுவிய பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது சர்க்கரையைச் சேர்த்து அதில் கீரையைப் போட்டு அரைமணி நேரம் மூடி வைத்து விடவேண்டும்.

பின்பு கீரையை எடுத்து உப்பு, சீரகம் மட்டும் சேர்த்து வேகவைத்து மசித்து கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் ஆகியவற்றைத் தாளித்துச் சாப்பிடவும்.

பருப்பு வேகவைத்து கீரையுடன் சேர்த்து மசித்துக் கொள்ள சுவைகூடும்.

முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். முருங்கைக் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும், உறுதியும் கிடைக்கிறது.

முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.

மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக் கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும்போது, ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமாகும்.

முருங்கைக் கீரை உண்பதால், தாதுபலம் பெருகுவதுடன், இரத்த அழுத்தமும் குணமாகும்.

கொழுப்புச் சத்து குறைவதுடன், நீரிழிவு நோயும் குணமாகிறது.

முருங்கை கீரை சாப்பிடுவதால் காமாலை குறையும். கண்பார்வை தெளிவாகும்.ஆனால், மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

சிறுகீரையுடன் சீரகம், மிளகு, சோம்பு, வெங்காயம், இஞ்சி, தக்காளி, உப்பு சேர்த்து வேக வைத்து சூப் வைத்துச் சாப்பிடலாம். கீரையைக் கடைந்து சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகள் சிறுகீரை சூப் தினமும் சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் இயல்பாகச் சுரக்கும்.

போதை மருந்து, மது அருந்துதல் பழக்கத்தை கைவிட நினைப்பவர்கள் சிறு கீரை சூப் செய்து 90 நாட்கள் தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் கிட்டும்.

காச நோய், கண் நோய்கள், நீர்க்கடுப்பு, வீக்கம், பித்த நோய்கள், உடலில் சேரும் நச்சுத்தன்மை போன்றவை சிறுகீரை உண்பதால் நீங்கும்.

சிறுகீரை உடலுக்கு எழில் தருவதோடு மூளை, இதயம், குடல், ரத்தம் இவற்றிற்கு வலிமையையும் தருகிறது.

ஆயுர்வேத மருந்து சாப்பிடுபவர்கள் சிறுகீரையைக் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது.

கூடிய வரை கீரை வகைகளைச் சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியமாக இருங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 11:51 pm

முருங்கையில் தவசு முருங்கை, கொடி முருங்கை, நன்முருங்கை, காட்டு முருங்கை, கொடிக்கால் முருங்கை என்று பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் வீடுகளில் மரமாக இருக்கும் முருங்கையை நன்முருங்களை என்று நம் முன்னோர்கள் அழைத்து வந்துள்ளனர்.

முருங்கை மரத்தின் இலை, பூ, காய் ஆகியவை சிறந்த உணவாகப் பயன்படுகின்றன. இவை சிறந்த பத்திய உணவாகவும் கருதப்படுகின்றன. அதோடு முருங்கை மரத்தின் அடி முதல் முடி வரை அனைத்துப் பகுதிகளும் சிறந்த மருந்தாகவும் பயன்படுகின்றன.

முற்றிய விதைகளை நட்டோ அல்லது முற்றிய கிளைகளை வெட்டி நட்டோ முருங்கை மரத்தை இனவிருத்தி சய்யலாம். முருங்கை மரம் சுமார் 9 மீட்டர் வரை வளரும்.

காற்றடித்தால் எளிதில் ஒடிந்துவிடும். முருங்கை மரம் வளர அதிக தண்ணீர் தேவையில்லை.

முருங்கை இலையில் வைட்டமின் “ஏ”, வைட்டமின் “சி”, இரும்பு சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன. முருங்கைக் கீரையை பல முறைகளில் சமைத்துச் சாப்பிடலாம். முருங்கை இலையை சாம்பாராகவும், பொரியலாகவும், துவட்டலாகவும் செய்து சாப்பிடலாம்.

முருங்கைப் பூவையும் பருப்புடன் சேர்த்துச் சமைத்து உண்ணலாம். அது போலவே, முருங்கைப் பிஞ்சு, காய் ஆகியவற்றையும், சாம்பாராகவும் ரசமாகவும், அவியலாகவும், பொரியலாகவும், புளிக்குழம்பாகவும் பல வகைகளில் சமைத்துச் சாப்பிடலாம்.

முருங்கை இலையைப் பழுப்பு நீக்கி நன்கு ஆய்ந்து பொரியல் செய்து சாப்பிடலாம். முருங்கை இலைப் பொரியலுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறினால் அது சத்துள்ள உணவாகும். இந்த முருங்கை இலைப் பொரியலை 40 தினங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல வலிமை பெறும். தாது புஷ்டி உண்டாகும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும். உடலுக்கு அழகையும் மதர்ப்பையும் கொடுக்கும்.

பாலூட்டும் தாய்மார்கள் முருங்கைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். முருங்கை இலைச் சாற்றைப் பாலுடன் கலந்து கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். எலும்புகள் உறுதி அடையும். இரத்தம் சுத்தமாகும்.

முருங்கைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வைட்டமின் “ஏ” பற்றாக்குறை தொடர்பான கண்நாய்கள் நீங்கும். கண்கள் குளிர்ச்சியடையும். பார்வை தெளிவடையும். பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகை, காமாலை போன்ற நோய்கள் குணமாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 11:59 pm

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Murukai

பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.

முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.

முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.

முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.

விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்

அழிவிந் துவும்புஷ்டி யாகும் - எழிலார்

ஒருங்கையக லாககற் புடைவா ணகையே

முருங்கையின் பூவை மொழி

- அகத்தியர் குணபாடம்


வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.

கண்களைப் பாதுகாக்க

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

ஞாபக சக்தியைத் தூண்ட

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தம் குறைய

மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க

அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.

முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.

நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று

நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு

சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

தாது புஷ்டிக்கு

ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.

இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 23, 2009 12:02 am

முருங்கை யாழ்ப்பாண உணவுகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையதாகும். முருங்கைக் காய்ப் பிரட்டல் கறி, முருங்கைக் காய் பொரிச்ச குழம்பு, அதில் அவியல் குழம்பு,முருங்கை இலை வறை, முருங்கைப் பிஞ்சு பத்தியக் கறி. முருங்கைக் காய் சரக்குக் கறி என்பன யாழ்ப்பாண உணவுகளில் முக்கியமானவை.

முருங்கை பல பயன்பாடுள்ள ஒரு மரமாகும். இதன் மரப் பட்டை, பிசின், இலை, பூ, காய், பிஞ்சு, கொட்டை என முருங்கையின் எல்லாப் பாகங்களுமே பயனுள்ளவை ஆகும்.முருங்கை “ரோக நிவாரணி” என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால், பல நோய்களுக்கு கைகண்ட மருந்து.

முருங்கை பல பயன்பாடுள்ள ஒரு மரமாகும். இதன் மரப் பட்டை, பிசின், இலை, பூ, காய், பிஞ்சு, கொட்டை என முருங்கையின் எல்லாப் பாகங்களுமே பயனுள்ளவை ஆகும்.முருங்கை “ரோக நிவாரணி” என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால், பல நோய்களுக்கு கைகண்ட மருந்து.


“வீட்டுக்குச் செல்வம் மாடு; தோட்டத்துக்குச் செல்வம் முருங்கை” எனப் பேசப் படுவதுண்டு. இந்த இரண்டும் இருந்தால் வறுமையே இருக்காது. அநேகமான வீடுகளின் கோடியில்(பின்புறம்) அல்லது எங்கோ ஓரிடத்தில் முருங்கை மரத்தைக் காணலாம்.

முருங்கை மரத்தை விதையிலிருந்தும் அதன் கிளைகளை வெட்டி நட்டும் வளர்க்கலாம். இதில் ஒட்டு வகைச் செடிகூட உண்டு. அந்த ஒட்டு வகையில் நீண்ட நல்ல சதைப்பற்றான காய்கள் காய்க்கக் கூடியதாக வளரும் உதாரணமாக, இந்தியாவில் விருத்தியாக்கப்பட்ட பிகே1 என்ற இன முருங்கை நீண்ட நல்ல சதைப்பற்றான காய்களையும், பெரிய உருசியான இலைகளையும் கொண்டதாகும். . அதிசய மரம் முருங்கை என்ற கட்டுரை கூறுகிறது.


முருங்கை இலை (கீரை):


முருங்கை இலைகளில் இரும்புச் சத்து, கல்சியம் என்பன உண்டு.

இந்த இலைகளை எங்கள் வீட்டில் நல்லெண்ணையில் வறுத்துச் சாப்பிடுவோம்.. இவ்வாறு வறை செய்யலாம்; சலட்டுக்கு போடலாம்; சூப்புக்கும் போடலாம்.

முருங்கை இலையில்

தோடம் பழங்களிலும் பார்க்க 7 மடங்கு வைற்றமின் சீ

பாலைவிட 4 மடங்கு கல்சியம்

கரட்டை விட 4 மடங்கு வைற்றமின் ஏ

வாழைப்பழங்களிலும் பார்க்க 3 மடங்கு பொற்றாசியம்

பாலைவிட 2 மடங்கு புரதமும் உள்ளதாம்
என அரிசோனாப்பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று விளக்குகிறது.

முருங்கை இலைகளை அரைத்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு முகப் பருக்களில் பூசினால் பருக்களும், அதனால் ஏற்பட்ட கறுப்பு புள்ளிகளும் மறைந்துவிடுமாம் என அழகுக் குறிப்பு ஒன்று சொல்கிறது

குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை ‘விந்து கட்டி’ எனப் பேசுகிறது.

முருங்கை இலையிலும், காயிலும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் சக்தி இருக்கிறது என இந்தான் மைசுறா, றேச்சல் பிலிப் (INTAN MAIZURA and RACHAEL PHILIP) என்பவர்களுடைய கட்டுரை குறிப்பிடுகிறது. முருங்கைப் பூவும், காயும் ஆண்மை நரம்புகளை முறுகேற்றும் என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

இதனால்தான் பாக்கியராஜின் “முந்தானை முடிச்சு” வில் இவை முக்கிய இடம் பெற்றிருக்கிறது போலும்.

காய்ந்த முருங்கை இலையில் நிறைய வைற்றமின் ஏ உண்டு என நம்பியார் வனிஷாவின் ஆராய்ச்சி சொல்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 23, 2009 12:06 am

நூறு கிராம் காய்ந்த முருங்கை இலையில்

27 கி புரதம்

2,000 மி.கி் கல்சியம்

20.5 மி.கி் றைபோபிலவின்((Riboflavin)

17 மி.கி் வைற்றமின் C, V வைற்றமின் B, ஏ

அத்துடன் பலவித அமினோ அமிலங்களும் இருக்கின்றன
என "அதிசய முருங்கை" என்ற கட்டுரை குறிப்பிட்டுள்ளது.


முருங்கைப் பூவில் நல்ல சத்துகள் இருப்பினும், யாழ்ப்பாணதில் யாரும் சமைப்பதாக நான் அறியவில்லை. பூக்களைப் பறித்தால் காய்களைப் பெறமுடியாது என்பதுதான் காரணமாயிருக்கலாம்.

முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை சரக்குக் கறியாக புளி சேர்த்து சமைப்பபார்கள். காய்ச்சல் வந்தால், அல்லது மகப்பேற்றின் பின் உடனடியான பத்தியக் கறியாக அந்தத் தாய்க்கு கொடுப்பார்கள். தாய்க்குக் கொடுத்தால் பால் கூடச் சுரக்குமாம் . எங்கள் ஊரில் யாருக்காவது குழந்தை பிறந்தால் பிஞ்சு முருங்கைக்காய் வாங்க தேடித் திரிவார்கள். அதுவும் மாரி (மழை) காலம் என்றால் முருங்கைக் காய் கிடைப்பது குதிரைக் கொம்பாய்த்தான் இருக்கும். பொதுவாக மரக்கறி (சைவம்) சாப்பிடுவோர்தான் முருங்கைப் பிஞ்சு பத்தியகறி வைத்து பாலூட்டுந் தாய்க்கு கொடுப்பார்கள்.

முருங்கைக் காயில் பொஸ்பரஸ் , இரும்புச் சத்து, வைற்றமின் ஏ, சி, கல்சியம் என்பன உண்டு.முருங்கைக் காய் பிரட்டல் கறி, குழம்பு, சரக்குக் கறி எனக்கு ந்ன்றாகப் பிடிக்கும். இந்த சரக்குக் கறி பசியைத் தூண்டும்; மகப்பேறு காலங்களில தாய்க்கு கொடுத்தால் பால் கூடச் சுரக்கும் என "அதிசய முருங்கை" என்ற கட்டுரை குறிபிடுகிறது . முருங்கைக் கயக் கறியைச் சாப்பிடும்போது சதைப் பற்றைக் கைவிரலால் காந்தி (காந்தல்) எடுத்தபின் சக்கையை மென்று அதன் சாற்றை உறிஞ்சும்போது நல்ல உருசியாக இருக்கும். பொதுப் பந்தியில் இப்படிச் சாப்பிடுவது அநாகரீகமாகத் தோன்றலாம், ஆனால் அதில் ஒரு தனி உருசி இருக்கிறது. அப்படி உண்டவர்க்குத்தான் அந்த உருசி எப்படி என்று தெரியும்.

முற்றிய முருங்கை காயை கரண்டியால் சுரண்டி எடுத்து வறை செய்து சாப்பிடலாம். வடகமும் செய்யலாம். இது மூளைக்கு நல்ல பலத்தைத் தரும். ஆனால் வயிற்றைக்கட்டும் (மலச்சிக்கல்) தன்மை இருப்பதால் எங்கள் வீட்டில் கத்தரிக்காயைச் சேர்த்துச் சமைப்பது வழக்கம்.

முருங்கைக் கொட்டைகளை மாவாக்கி(பொடியாக்கி) குடிநீரில் கலந்து வைத்தால் அந்த நீர் சுத்தமாகுமாம் என அருணாச்சலம் குமார் (professor of anatomy ) தன்னுடைய ஆராய்ச்சி ஒன்றில் குறிப்பிடுகிறார்.

முருங்கைக் கொட்டைகளிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதன் பெயர் "பென்" எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய் சமையலுக்கும், வாசனைத்திரவியம் செய்யவும் பயன்படுகிறது. மணிக்கூடு செய்வோரும் இதைப் பாவிக்கிறார்கள் என பலடா- சாங் (M.C. Palada and L.C. Chang1) என்பவர்களுடைய ஆய்வு கூறுகிறது..

முருங்கை பட்டையிலிருந்து நீல நிறச் சாயம் எடுக்கப்படுவாகவும் கூறப்படுகிறது . அரிசோனாப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று விளக்குகிறது.

முருங்கை இலை, காய் என்பன " டயற் (diet)" இருப்போருக்கு மிகவும் பயனுள்ளவை என்பது என் கருத்தாகும்.



முக்கிய குறிப்பு: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 23, 2009 12:13 am

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Murungai4


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 23, 2009 12:14 am

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Murungai5


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 23, 2009 12:15 am

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Murungai1

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 23, 2009 12:16 am

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Murungai3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 27, 2018 1:46 am

மீண்டும் படிக்க..... ஐ லவ் யூ



முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக