புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பமும் துன்பமும் Poll_c10இன்பமும் துன்பமும் Poll_m10இன்பமும் துன்பமும் Poll_c10 
73 Posts - 77%
heezulia
இன்பமும் துன்பமும் Poll_c10இன்பமும் துன்பமும் Poll_m10இன்பமும் துன்பமும் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இன்பமும் துன்பமும் Poll_c10இன்பமும் துன்பமும் Poll_m10இன்பமும் துன்பமும் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இன்பமும் துன்பமும் Poll_c10இன்பமும் துன்பமும் Poll_m10இன்பமும் துன்பமும் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பமும் துன்பமும் Poll_c10இன்பமும் துன்பமும் Poll_m10இன்பமும் துன்பமும் Poll_c10 
238 Posts - 76%
heezulia
இன்பமும் துன்பமும் Poll_c10இன்பமும் துன்பமும் Poll_m10இன்பமும் துன்பமும் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இன்பமும் துன்பமும் Poll_c10இன்பமும் துன்பமும் Poll_m10இன்பமும் துன்பமும் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்பமும் துன்பமும் Poll_c10இன்பமும் துன்பமும் Poll_m10இன்பமும் துன்பமும் Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்பமும் துன்பமும் Poll_c10இன்பமும் துன்பமும் Poll_m10இன்பமும் துன்பமும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்பமும் துன்பமும் Poll_c10இன்பமும் துன்பமும் Poll_m10இன்பமும் துன்பமும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்பமும் துன்பமும் Poll_c10இன்பமும் துன்பமும் Poll_m10இன்பமும் துன்பமும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்பமும் துன்பமும் Poll_c10இன்பமும் துன்பமும் Poll_m10இன்பமும் துன்பமும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்பமும் துன்பமும் Poll_c10இன்பமும் துன்பமும் Poll_m10இன்பமும் துன்பமும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்பமும் துன்பமும் Poll_c10இன்பமும் துன்பமும் Poll_m10இன்பமும் துன்பமும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்பமும் துன்பமும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 05, 2011 6:05 pm

மகத நாட்டில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். அவரிடம் ஒரு வெள்ளை நிறக் குதிரை இருந்தது. பேரழகு மிக்கது அந்தக் குதிரை. அது அழகான பிடரி ரோமங்களையும், நீண்ட வாலையும் கொண்டிருந்தது. அந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் அந்தக் குதிரையைச் சொந்தமாக்கிக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் முதியவர் அந்தக் குதிரையை மிகவும் நேசித்து வளர்த்து வந்தார். எனவே அவர் யாருக்கும் குதிரையை விற்க மறுத்துவிட்டார்.

ஒரு நாள் அந்த நாட்டின் மன்னன் அந்த ஊருக்கு வந்தான். அந்த முதியவரின் வீட்டு வாசலில் மிகுந்த அழகான ஒரு குதிரை கட்டிக் கிடப்பதைக் கண்டான். எப்படியாவது அந்தக் குதிரையை விலைக்கு வாங்கிவிட வேண்டும் என்று பேராவல் கொண்டான் அவன். முதியவரை அரண்மனைக்கு வரவழைத்துப் பேசினான்:

"முதியவரே உங்கள் குதிரையை என்னிடம் விற்றுவிடுங்கள். நான் நான்காயிரம் பொற்காசுகளை குதிரைக்கு விலையாகத் தருகிறேன்.''

முதியவர் பணிவுடன் மறுத்தார்:

"அரசே நான் இந்தக் குதிரையை அன்புடன் வளர்த்து வருகிறேன். விற்பதற்கு எனக்கு மனம் இல்லை. என்னை மன்னிக்க வேண்டும்.''

அவரின் முதுமையின் காரணமாகவும், பணிவின் காரணமாகவும் மன்னன் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டான்.

சில நாட்கள் கடந்தன. ஒரு நாள், எதிர்பாராதவிதமாக அந்தக் குதிரை தொலைந்துவிட்டது.

குதிரை காணாமல்போன செய்தி காட்டுத் தீயைப்போல அதிவிரைவில் ஊரெங்கும் பரவியது. மக்கள் அனைவரும் முதியவரின் வீட்டு முன்னால் கூடினார்கள். முதியவர், தான் வழக்கமாக அமரும் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார். கூட்டத்தில் நின்றிருந்த ஒருவன் சொன்னான்:

"தாத்தா, நம் மன்னர்தான் அப்போதே அந்தக் குதிரையை நான்காயிரம் பொற்காசுகளுக்குக் கேட்டாரே. அன்றே அவரிடம் குதிரையை விற்றிருந்தால் உன் இந்த முதுமைக் காலத்தில் சிரமம் ஏதுமின்றி நிம்மதியாக இருக்கலாம் அல்லவா? இப்போது உனக்குப் பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டதே! ஏன் இப்படி முட்டாளாக நடந்துகொள்கிறாய்?''

அங்கே கூடியிருந்தவர்கள் எல்லோரும் அவன் சொன்னதைக் கேட்டுச் சிரித்தார்கள். ஆனால் அப்போதும் அந்த முதியவர் அமைதியாக இருந்தார். மெதுவாக எழுந்து நின்று சொன்னார்:

"முன்பு என்னிடம் ஒரு குதிரை இருந்தது. இப்போது அது தொலைந்துவிட்டது. அவ்வளவுதான் விஷயம்.''

பிறகு அவர் தன் வீட்டின் உள்ளே சென்றார். அந்த வயதான மனிதரின் முட்டாள்தனத்தைக் குறித்துக் கேலி பேசிச் சிரித்தபடியே மக்கள் கலைந்து சென்றனர்.

தொலைந்துபோன குதிரை இரண்டு நாட்களுக்குப் பிறகு தன்னுடன் பன்னிரெண்டு காட்டுக் குதிரைகளை அழைத்துக்கொண்டு வந்துவிட்டது. இந்தச் செய்தியும் அதிவிரைவில் ஊர் முழுதும் பரவியது. மக்கள் முதியவரின் வீட்டு முன்னால் திரண்டனர். அங்கே வாசலில் பதின்மூன்று குதிரைகளும் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அப்போது முதியவர் காலை உணவு அருந்திவிட்டு தன் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார். கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி சொன்னாள்:

"தாத்தா நீ மிகவும் அதிர்ஷ்டசாலிதான்! முன்பு உன்னிடம் ஒரே ஒரு குதிரைதான் இருந்தது. இப்போதோ நீ பதின்மூன்று குதிரைகளுக்குச் சொந்தக்காரனாகிவிட்டாய்! ஆச்சரியம்தான்...''

தன் வீட்டு வாசலில் கூடியிருக்கும் மக்களை நோக்கி முதியவர் அதே அமைதியுடன் சொன்னார்:

"முன்பு என்னிடம் ஒரு குதிரை இருந்தது. இப்போது பதின்மூன்று குதிரைகள் இருக்கின்றன. அவ்வளவுதான் விஷயம்!''

என்ன இந்தக் கிழவர் அதிர்ஷ்டம் வரும்போது சந்தோஷப்படத் தெரியாத மனிதராக இருக்கிறாரே என்று முணுமுணுத்துக்கொண்டே மக்கள் கலைந்து சென்றார்கள்.

மறு நாள் அந்த முதியவரின் ஒரே மகன், காட்டுக் குதிரைகளை வேலைகளுக்குப் பழக்கப்படுத்தினான். அப்போது சினம்கொண்ட ஒரு குதிரை அவனைத் தூக்கி வீசியது. அடிபட்டு அவனுடைய கால் எலும்புகள் உடைந்துபோயின.

வழக்கம்போல இந்தச் செய்தியும் விரைவாக ஊர் முழுதும் பரவியது. மக்கள் முதியவரின் வீட்டு வாசலில் திரண்டனர்.

முதியவர், மாவுக் கட்டுப் போடப்பட்டு கட்டிலில் படுத்திருக்கும் தன் மகனுக்கு அருகில் அமைதியாக அமர்ந்திருந்தார். கூட்டத்தில் நின்றிருந்த இளைஞன் ஒருவன் உரத்த குரலில் சொன்னான்:

"ஏ தாத்தா! உனக்குத்தான் எவ்வளவு பேராசை! அந்தக் காட்டுக் குதிரைகளை உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நினைத்தாயே, இப்போது பார்த்தாயா உன் மகனுக்குக் கால் உடைந்ததுதான் மிச்சம்!''

முதியவர் சற்றும் பதற்றம் இல்லாமல் எழுந்தார்:

"என் மகனுக்கு இப்போது கால் உடைந்துவிட்டது. அவ்வளவுதான் விஷயம். அதற்குமேல் ஒன்றும் இல்லை.'' என்று சொல்லிவிட்டு, உணவு சமைப்பதற்காக உள்ளே சென்றார். "என்ன இந்தக் கிழவர் மகன் அடிபட்டிருப்பதை நினைத்து அழாமல் அப்படியே அமர்ந்திருக்கிறாரே!' என்று முதியவரை விமர்சித்துக்கொண்டே மக்கள் கலைந்து சென்றார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு பக்கத்து நாட்டு அரசன், மகத நாட்டின் மீது போர் தொடுக்கப்போவதாக செய்தி அனுப்பினான். உடனே மகத நாட்டு அரசன் ஒரு அறிவிப்புச் செய்தான்:

"எந்த நேரத்திலும் பக்கத்து நாட்டு அரசன் நம் நாட்டின் மீது படையெடுக்கலாம். நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம் நாட்டின் படையை வலுப்படுத்தும் பொருட்டு ஆண்கள் அனைவரும் படையில் இணைய வேண்டும். முடமானவர்களையும் முதியவர்களையும் சிறுவர்களையும் தவிர மற்றவர்கள் அனைவரும் படையில் இணைந்து பயிற்சி பெறவேண்டும். இந்த அறிவிப்பை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.'' என்று முரசு அறிவிப்பு ஊர் முழுவதும் ஒலித்தது.

மீண்டும் மக்கள் முதியவரின் வீட்டு வாசலில் கூடினர். முதியவர் தன் காய்கறித் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் மகன், நடக்க முடியாத காரணத்தால் கட்டிலில் படுத்திருந்தான். கூட்டத்திலிருந்த ஒருவன் முதியவரிடம் சொன்னான்:

"தாத்தா! என்ன இருந்தாலும் நீ பெரிய அதிர்ஷ்டசாலிதான்! முதியவர்களும் உடல் ஊனமுற்றவர்களையும் தவிர இந்த நாட்டில் உள்ள எல்லா ஆண்களும் படையில் சேரவேண்டுமாம். நீ வயதானவன் அதனால் படையில் சேர வேண்டியது இல்லை. உன் மகனால் நடக்க முடியாது. அதனால் அவனும் படையில் சேர வேண்டியது இல்லை. உன்னைப்போல் அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இல்லை. ஆனால் நாங்கள் எல்லோரும் படையில் சேர்ந்து போருக்குச் செல்ல வேண்டும். போரில் என்ன நடக்குமோ! நாங்கள் உயிருடன் திரும்பி வருவதே சந்தேகம்தான்.''

அப்போது முதியர் அந்தக் கூட்டத்தை உற்றுப் பார்த்தார். அனைவரின் முகமும் துயரத்துடன் இருந்தன. பலர், நடக்க இருக்கும் போரை நினைத்து அழுதுகொண்டிருந்தனர். அமைதியான குரலில் முதியவர் சொன்னார் முதியவர்:

"நடந்து முடிந்த சம்பவத்தை மாற்ற முடியாது. அதனை நினைத்து வருந்துவது வீண். அதேபோல, வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும். எனவே நாம் எது வந்தாலும் மிகவும் உணர்ச்சிவசப்படாமல் நடுநிலையாக இருக்கவேண்டும். துன்பம் வரும்போது அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியதும் இல்லை. இன்பம் வரும்போது ஆனந்தக் கூத்தாட வேண்டிய அவசியமும் இல்லை. எதிலும் சமத்தன்மையுடன் இருப்பதுதான் சிறந்தது.''

பின்பு அவர் தன் தோட்டப் பணியைத் தொடருவதற்காகச் சென்றார்.

திலகம்



இன்பமும் துன்பமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 05, 2011 6:08 pm

நல்ல கதை sivaa.
inbam வந்தாலும் துன்பம் வந்தாலும் ஒரே மாதிரி எடுத்துகிட்ட இந்த உலகத்துல சண்டை சச்சரவே வராதே




இன்பமும் துன்பமும் Uஇன்பமும் துன்பமும் Dஇன்பமும் துன்பமும் Aஇன்பமும் துன்பமும் Yஇன்பமும் துன்பமும் Aஇன்பமும் துன்பமும் Sஇன்பமும் துன்பமும் Uஇன்பமும் துன்பமும் Dஇன்பமும் துன்பமும் Hஇன்பமும் துன்பமும் A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jan 05, 2011 6:19 pm

சிவா தல.... கதை அருமையாக இருந்துச்சு இன்பமும் துன்பமும் 678642 இன்பமும் துன்பமும் 678642




இன்பமும் துன்பமும் Power-Star-Srinivasan
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Wed Jan 05, 2011 6:56 pm

நன்றி அண்ணா. இன்பமும் துன்பமும் 678642



அகீல் இன்பமும் துன்பமும் 154550
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jan 05, 2011 7:10 pm

இன்பம் துன்பம் எதுவாகிலும் சம தன்மை உடயன என்பதை மிக மிக அழகாக எடுத்துச் சொல்லப்பட்ட கதை. கதை அல்ல நிஜம் ஏன்றே சொல்லலாம். நன்றி சிவா அவர்களே.
அலைக்கழிக்கப் படாத மனம் என்றும் அமைதி பெரும்.

...கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக