புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
5 Posts - 14%
heezulia
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
3 Posts - 8%
Raji@123
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
8 Posts - 2%
prajai
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
திருப்பாவை Poll_c10திருப்பாவை Poll_m10திருப்பாவை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பாவை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 11:08 pm

திருப்பாவை: கார்மேனிச் செங்கண்ணே!!!

திருப்பாவை Bb39fe10

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
!நீராடப்போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கம் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்!
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்!
நாராயணனே, நமக்கே பறைதருவான்!
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்
!

விளக்கம்:

திருமாலின் திருமேனி ஒத்த கார்மேகங்கள் மண்ணிலே தவழும் மார்கழி மாதம்! முழுமதியான தண்மதி விண்ணிலே தவழ்ந்து தண்மையும் மென்மையும் பொழியும் திருநாள்! பாவை நோன்பிற்காக நீராடச் செல்ல விருப்பமுள்ள பாவையர்களே! போதும், போதும்... உங்கள உறக்கம்! பேரெழில் பெற்ற அணிமணிகளை புனைந்த, சீரும் சிறப்பும் செல்லமும், பருவமும் நல்லுருவமும் திரு உருவான மங்கையர்ச் செல்வங்களே! வாருங்கள்!

கொடும் பகைவர்களை, ஏந்திய கூர்மாயான வேலால் அழித்தொழித்து வளமும் நலமும் அளிக்கும் ஸ்ரீநந்தகோபனை அறிவீர்கள்! அல்லவா...

அவரது திருக்குமாரன் யார்-?... யாரா? ஸ்ரீகண்ணபிரான்தான்! பேரழகு அனைத்தும் ஒன்றாகி உருவாகி ஈர்க்கும் கண்களையுடைய மரகத அன்னை யசோதையின் செல்வன் அவன்! இளஞ்சிங்கம் போன்றவன்!

கார்காலக் கருமேகம் போன்ற திருமேனி! செஞ்ஞாயிறு கண்டு மலர்ந்த செந்தாமரைப் புஷ்பம் போன்ற மலர்ந்த அவனது திருவிழிகள்! செங்கதிரவனாய்ப் பிரகாசிக்கும் அவனது திருமுகம்! செங்கதிரவன் என்பதால் அவன் முகத்தில் உஷ்ணமும் அனலும் வெப்பமும் வீசுமோ? என்றால் அதுதான் இல்லை.

மாறாக முழு நிலவின் குளிர்ந்த குளிர்ச்சியே கருணையே தவழும்! எப்பொழுதும்! எந்நாளும்! எந்நேரமும்!

இப்பாரோர் புகழும் வண்ணம் பேரருளை நல்குவான், அவன்!

*******

பனி கொட்டும் வைகறையில், குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்வதால், அறிவியல் தத்துவப்படி, உடலில் நரம்புகள் சதைகள் ரத்த நாளங்கள் யாவும் புத்துணர்ச்சிப் பெறுகின்றன.

தாமரைத்திருவின் திருத்தாள் போற்றி! போற்றி!



திருப்பாவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 11:10 pm

திருப்பாவை: பாற்கடல் பரமனே!

திருப்பாவை 2b916810

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளிரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்!


திருமாலினை தியானித்து நோன்பு இருப்பவர்கள் என்னென்ன அறநெறிகளைப் பின்பற்ற வேண்டும்?- விளக்குகிறாள் ஸ்ரீகோதை

இவ்வைகயத்தில் வாழுகின்ற வளம் நிறைந்தவர்களே! நாம் நம் பாவை நோன்பிற்குச் செய்யக்கூடிய கடமைகளைக் கேட்பீர்களாக! திருவருள் புரிய, திருப்பாற் கடலில்& ஆதிகேஷனில் திருப்பள்ளி கொண்டிருக்கும் திருமாலின் திருவடிகளைப் போற்றுவோம்! வைகறையிலே நீள்புனலில் நீராடுவோம்!

வயிற்றுக்கு ஈயப்படக்கூடிய சிறு உணவில் நறுமண நெய்யினையும், தீஞ்சுவைப் பாலினையும் சேர்த்துக் கொள்ளமாட்டோம்! ஆடவரைக் கவரக்கூடிய-விழிகளுக்கு மையினை எழுதமாட்டோம்! கார்குழலை வாரி, நறுமண மலர்களை அக்கூந்தலில் சூடியமாட்டோம்! நேர்மை, தர்ம நெறிகளில் அல்லாத தீமையை செய்யமாட்டோம்! அவ்வாறே தீமையைப் பயக்கக்கூடிய சொற்களை கூறமாட்டோம். ஏழை எளிய வறியவர்கள் வாழுமாறு மன மகிழ்ந்து, மனமுவந்து பொருளை அள்ளித் தந்து, எம்பாவையே, நோன்பினில் ஈடுபடுவோம்.

உலகில் உணர்ச்சிகள் இருவகை. இன்று மன அமைதியைக் கொடுக்கக்கூடியது. மன்றொன்று மன சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடியது நோன்பு இருக்கும்பொழுது தூயமனமும் தூய உணவும் தேவை. கோபதாப உணர்ச்சிகளுக்கு இடம் தரக்கூடாது. இவை மன அமைதியைக் கெடுக்கும்.

மலர் மங்கை மலர்த்தாள் போற்றி! போற்றி!!




திருப்பாவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 11:12 pm


திருப்பாவை:ஓங்கி உலகளந்த உத்தமனே!


திருப்பாவை B70c0f12-5b56-4d7e-927b-60845653015d_S_secvpf

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஒங்கு பெருஞ்செந்நெ லூடு கயல்உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் மக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரொம்பாவாய்!


விளக்கம்:

திருமால், இந்திரனின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து, வாமன திருவவதாரம் புரிந்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் அணுகி மூன்றடி மண்ணளக்க, வானளாவி வளர்ந்து ஈரடியால் மூன்று உலகங்களையும் அளந்த உத்தமனான ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களைப் போற்றிப் போற்றித் தியானித்து நாங்கள் அனைவரும் திருப்பாவை நோன்பிற்கு அதனையே கருவாகக் கொண்டு சங்கற்பித்து ஸ்நானம் செய்வோம்.

அவ்வாறு, உத்தமனின் பேர் பாடிப்பாடி நீராடுவதால், நாடு முழுவதும் ஒரு தீங்கும், துயரமும் இல்லாமல் மாதந்தோறும் மூன்று முறை மாமழை பெய்யும், பெய்த மாமழையால் நீர்வளம் பெற்ற நிலவளத்தில், உயர்ந்து தழைத்து வளர்ந்த பெரும் நெல் மணிகளை உடைய நெற்பயிர்களின் ஊடே, கயல் மீன்கள் துள்ளித் துள்ளி நீந்தி மகிழவும், அழகிய குவளை மலர்களில், புள்ளிகளுடன் திகழும் வண்டுகளும் கவலையின்றி உறங்குகின்றன.

தன் கன்றுக்கும் ஈந்து, தன்னைக் கண்ணும் கருத்துமாய் பேணுவோர் நலனிலும் கண்வைத்து, குடம் குடமாயக் கறக்க கறக்க சலிக்காமல் அமுதமன்ன பாலினைச் சொரிந்து கொண்டே அசைவின்றித் தொழுவத்தில் நிற்கும் வள்ளல் பெரும் பசுக்கள் என்றென்றும் நீங்காத நிறைந்த செல்வங்களாகும் வாழ்க்கையில், எம்பாவையே! என்று எடுத்துரைக்கிறாள் ஸ்ரீகோதை.

''ஸ்ரீ கோதையின் திருவடிகளே போற்றி! போற்றி!''



திருப்பாவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 11:14 pm

திருப்பாவை: "ஆழி மழைக்கண்ணா!"

திருப்பாவை 2f652825-4903-4551-b59c-81b098cf2242_S_secvpf

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்;
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்
ஆழிபோல்மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.



விளக்கம்:- கடல் போன்ற பெருமை படைத்த கண்ண பெருமானே! நீ எதையும் மறைத்து வைக்காதே! கடல் நீரை முகந்து மேலே எழுந்து செல். திருமாலின் மேனி போல உருவத்தில் கருமை கொள். எழில் நிறைந்த பத்மநாபன் சக்கரம் போல மின்னி, வலம்புரி சங்கு போல் முழங்கு. பெருமானின் வில்லில் இருந்து எழும் அம்பு மழை போல உலகம் வாழவும் நாங்கள் மகிழ்ந்து மார்கழி நீராடவும் காலம் தாழ்த்தாமல் மழை பொழிவாய்!



திருப்பாவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 11:15 pm

திருப்பாவை: "வடமதுரை மைந்தனை"

திருப்பாவை 28795e0c-c0a6-4e9c-8cc1-f3a925566e6e_S_secvpf

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
பேய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்! செப்பேலோ ரெம்பாவாய்.


விளக்கம்:- மாயக்கண்ணன் வட மதுரையில் தோன்றியவன், தூய்மையும், பெருமையும் கொண்ட யமுனை நதிக்கரையில் வளர்ந்தவன். ஆயர் குலத்தின் அழகிய விளக்கு. அவனை தூய உள்ளத்துடன் மலர்தூவி வணங்குவோம். அவன் புகழ் பாடுவோம். இவ்வாறு செய்தால் முன்பு நாம் செய்த பிழைகளும், இனிமேல் வரவிருக்கும் பிழைகளும் நெருப்பில் இட்ட தூசுபோல அழிந்து விடும்.



திருப்பாவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 11:17 pm

திருப்பாவை: துயிலமர்ந்த வித்தினை

திருப்பாவை 6604f026-7254-49c1-959e-fdc48245c021_S_secvpf

புள்ளும் சிலம்பினகாண்! புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.


விளக்கம்:- கருடனுக்கு தலைவனாகிய நம் இறைவன் எழுந்தருளிய திருக்கோவிலில் இருந்து வெண்சங்கு அழைக்கும் பேரொலி உன் காதில் விழவில்லையா? நம் பெருமான் திருப்பாற்கடலில் பாம்பணையில் பள்ளி கொண்டவன். உலகுக்கெல்லாம் வித்தாக அமைந்தவன். முனிவர்களும், யோகிகளும் அவனை உள்ளத்தே கொண்டு மெல்ல எழுந்து அரி என்று ஓதுகின்ற பேரொலி நம் உள்ளம் புகுந்து குளிர்ந்தது.



திருப்பாவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 11:18 pm

திருப்பாவை: நாராயணன் மூர்த்தி!

திருப்பாவை B6e49e10-f64b-4850-8f7e-4f1caa283f3c_S_secvpf

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழாலாய்ச் சியர் மத்தினால்
ஓசைப் படுத்ததயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
நேச முடையாய் ! திறவேலோ ரெம்பாவாய்!


விளக்கம்:- ஆனைச்சாத்தன் பறவைகள் க்ஷிகீசு கீசுக்ஷீ என்று குரல் எழுப்பி ஒன்றோடு ஒன்று கலந்து பேசும் சத்தம் உனக்கு கேட்கவில்லையா? மனம் மிகுந்த கூந்தலையுடைய இடைச்சியர் தங்கள் கழுத்தில் உள்ள அச்சுத்தாலியும், க்ஷிகல கலக்ஷீ என ஒலிக்கிறது. கைகளை அசைத்து மத்து மூலம் ஓசைப்படுத்தும் தயிரின் ஒலியும் கேட்கவில்லையா? தலைமையுடைய பெண்ணே! நாராயணமூர்த்தியை கேசவனை நாங்கள் பாடுகிறோம். நீ அதை கேட்டுக் கொண்டே இருக்கிறாயோ?



திருப்பாவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 11:21 pm

திருப்பாவை :"தேவாதி தேவனை"

திருப்பாவை 59c36e51-cd38-414e-b2d8-0fd206de7654_S_secvpf

கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்ப் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.


விளக்கம் : கிழக்கே வானம் வெளுத்தது. எருமைகள் மேய்வதற்கு சென்றன. நோன்பு செய்யும் இடத்திற்கு பலர் சென்று விட்டனர். மீதம் உள்ளவர்கள் அங்கு கும்பிட புறப்படுகின்றனர். அவர்களை போக விடாமல் உன்னை அழைக்க வந்துள்ளோம். இறைவன் குதிரை வடிவம் எடுத்து வந்து அசுரன் வாயை பிளந்தவன். தேவர்களுக்கு எல்லாம் பெரியவன். அவனை நாம் வேண்டி வணங்கினால் வா என்றழைத்து நம் வேண்டுதலை ஆராய்ந்து அருள்புரிவான்.



திருப்பாவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Mon Jan 10, 2011 11:21 pm

அருமை அண்ணா. பாடல் தொடரட்டும்.
மகிழ்ச்சி அன்பு மலர் மகிழ்ச்சி அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 11, 2011 12:07 am

திருப்பாவை :"மாதவன் வைகுந்தன்"

திருப்பாவை 7d0e7ff6-06d1-40e7-8f6c-5bd864860d77_S_secvpf
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் னென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.


விளக்கம்:- தூய மாணிக்க மாடத்தை சுற்றி விளக்குகள் எரிய, அகில் மணக்க, தூங்குவதற்கென்றே உள்ள படுக்கையில் கண் உறங்கும் அம்மான் மகளே! மணிக்கதவின் தாழ்ப்பாளை திற! (இப்படியும் எழாததால் மாமியை எழுப்பி) மாமியாரே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் சொல்லாததால் ஊமையாக இருப்பாளோ! அல்லது மந்திரத்தால் கட்டுப்பட்டு கிடக்கிறாளோ?



திருப்பாவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக