புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
2 Posts - 1%
prajai
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
435 Posts - 47%
heezulia
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
30 Posts - 3%
prajai
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_m10பாசத்துக்கு ஒரு பரீட்சை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசத்துக்கு ஒரு பரீட்சை


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 29, 2010 10:59 pm

'இலைகள் சருகாக
ஒரு காலம் இருக்கிறது...
மலர்கள் உதிர
ஒரு காலம் இருக்கிறது...
அப்படியே
முதுமையும்...
அது இயல்பானது!'

- ஜான் மில்டனின் வரிகள்!

எல்லோரும் கடவுளின் குழந்தைகள்தான். ஆனால், அனைத்து இடங்களிலும் கடவுள் இருக்க முடியாது என்பதால்தான், தாயைப் படைத்தான் என்பார்கள் நம்மவர்கள். தாயை 'பரிசாக வந்த தெய்வம்' என்று போற்றுவார்கள். ஆனால், 'அன்னை இல்லம்' என்ற பெயரிலேயே இங்கு எத்தனை முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றன தெரியுமா?

இளைஞர்களை மட்டும் அல்ல; அதிக அளவில் முதியவர்களையும் கொண்டுள்ள நாடுகள் பட்டியலிலும் இந்தியாவுக்கு முன்னணி இடம்தான். மக்கள் தொகையில் பெரும்பங்கு வகிக்கும் இவர்களின் மகிழ்ச்சியான மனநிலை, வீட்டுச் சூழலில் துவங்கி, தேச நிர்வாகம் வரை அனைத்திலும் பிரதிபலிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மைதானே! வயதாகிவிட்டதா லேயே ஒருவரை ஒதுக்கிவைப்பது என்பது வேதனையான விஷயம். பாராட்டி, சீராட்டி, படிக்கவைத்து, ஆளாக்கும் பெற்றோர், அதை எல்லாம் உங்கள் முதல் மாத சம்பளத்துக்குத் தான் செய்கிறார்கள் என்று நினைப்பது, வேதனை. உங்கள் வயதில் நீங்கள் சம்பளத்தை எதிர்பார்க்கிறீர்கள், அவர்களோ அன்பான சில வார்த்தைகளை ஏக்கத்துடன் எதிர்பார்த்து நிற்கி றார்கள். அதற்கு என்ன செய்யலாம்... வழி காட்டுகிறார்கள் சில நெறியாளர்கள்...

"இளைஞர்கள் 'வாட் இஸ் நெக்ஸ்ட்?' என்று எதிர்பார்க்க, முதியவர்களோ 'வாட் வாஸ் பாஸ்ட்?' என்று நடந்து முடிந்ததை நினைக்கிறார் கள். பணம் சம்பாதிக்கும் 24 மணி நேரத்தில் 10 நிமிடங்கள் செலவழித்து பெற்றவர்களுடன், முதியவர்களுடன் மனம்விட்டுப் பேசுவதா கஷ்டம்?" என்று கேள்வி எழுப்புகிறார் 'உதவும் கரங்கள்' அமைப்பின் வித்யாகர். "தங்களால் கவனித்துக்கொள்ள முடியாது என்பதால், பல பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்காக முதியோர் இல்லங்களை நாடுகிறார்கள். அந்தக் குற்ற உணர்வை மறைக்க ஏதாவது ஒரு வகையில் சமாதானம் சொல்லிக்கொள்ள சேவை என்கிற பெயரில் பணத்தை வாரி இறைக்கிறார்கள். பணம் கொடுப்பது மட்டுமே சேவை அல்ல என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டால், அவர்கள் நிம்மதியாக இருப் பார்கள் என்ற கருத்து தவறானது. உலகின் மிகக் கொடு மையான தனிமையில் வாடுபவர்கள் முதியோர் இல்ல வாசிகளே! அதே சமயம், முழுக்கவும் இளைஞர்களை மட்டுமே குற்றம் சாட்டவும் கூடாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் முன்பு செலுத்திய அன்புதான் வட்டியும் முதலுமாகத் திரும்பக் கிடைக்கும். தன்னிடம் எல்லோரும் அன்பு காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், தவிர்க்காமல் பிறரிடம் தனது நேசத்தை வெளிப்படுத்த வேண்டும். எனவே, இளைஞர்களே... எந்தக் காரணம் கொண்டும் பெற்றவர்களைப் புறக்கணிக்காதீர்கள். ஏனென்றால், பல வீடுகளுக்குள் அநாதைகளாக இருப்பவர்கள் முதியவர்களே!" என்று முடிக்கிறார் வித்யாகர்.

மனரீதியாகப் பல உளைச்சல்களுக்கு ஆளாகும் முதியவர்கள், தங்களுக்கு உடல்ரீதியாக ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டால், மிகவும் தளர்ந்துவிடுவார்கள். கூனிக் குறுகி ஒரு மூலையில்கிடந்து வருந்தும் முதியோர்களை அந்தச் சமயங்களில் எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும்? ஆலோசனை தருகிறார் சென்னை மருத்துவக் கல்லூரி முதியோர் மருத்துவப் பிரிவின் பேராசிரியை டாக்டர் உஷா.

"மேலைநாடுகளில் 65 வயதுக்கு மேலானவர்களையே முதியவர்கள் என அடையாளப்படுத்துகிறார்கள். ஆனால், இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை 'முதியவர்' என்று அடையாளப்படுத்துகிறோம். சமூகவியல், உளவியல் மற்றும் மறுவாழ்வியல் ஆகியவை இணைந்தது முதியோர் மருத்துவம். அதிக அளவில் முதியோர்கள் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். அவர்களுள் வயதான பெண்கள் நீண்ட காலம் வாழ்வதாகப் புள்ளி விவரம் சொல்கிறது.

கூட்டுக் குடும்ப முறை வழக்கொழிந்து போய்க்கொண்டு இருக்கும் சூழ லில், முதியவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை இளைஞர்களுக்கு இருக்கிறது. பொதுவான உடல் பிரச்னைகளான ரத்த அழுத்தம், நீரிழிவு, பார்வைக் குறைபாடு, தள்ளாட்டம் போன்றவை ஏற்படக்கூடியவைதான். சத் தான உணவுகள், அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் நோய்களை ஓரளவு கட்டுப்பாட்டில்வைத்திருக் கலாம்.

நல்ல வெளிச்சம் உள்ள அறைகள், சுகாதாரமான இருப்பிடம், சொரசொரப்பான தரை அமைப்புகள், பாசி படியாத கழிவறைகள், டேபிள், சேர் போன்ற பொருட்களை நெருக்கியடித்து வைத்திருக்காமல் நடப்பதற்கு வசதி யாகவும், காற்றோட்டமான அறைகள் ஆகியவற்றை நல்ல முறையில் செய்து தர வேண்டும்.

'கொடுமையில் கொடுமை முதுமையில் தனிமை' என்பார்கள். வயது ஆக ஆக... பெற்றோர்களை நாமும், நம்மைப் பெற்றோர்களும் விட்டு விலகுவது தவிர்க்க முடியாது என ஆகிவிட்ட இந்த உலகமயமாக்கல் வாழ்க்கைச் சக்கரத்தில், ஒரு நாளில் சில மணி நேரங்களையாவது உங்கள் பெற்றோர்கள், முதியவர்களுக்காகச் செலவிடுங்கள். வேறு எந்த மருத்துவத்தையும்விட, நீங்கள் அவர்களிடம் காட்டும் பரிவு வலிமையானதாக இருக்கும்!" என்கிறார் உஷா.

சமீப காலமாக, பிள்ளைகள் தங்களைச் சரியாகக் கவனித்துக்கொள்வது இல்லை என்று பல பெற்றோர் நீதிமன்றத்தை அணுகுவதாகச் செய்திகள். முதியவர்கள், பெற்றோர்களைக் கை விடுதல்பற்றி சட்டம் என்ன சொல்கிறது? தன் பார்வையைப் பதிவு செய்கிறார் வழக்கறிஞர் ராமலிங்கம்.

"பெற்றவர்களைப் பராமரிப்பது தொடர்பான சட்டம் முன்பு இருந்தே இருக்கிறது. எனினும், அதை அவ்வள வாக யாரும் அணுகவில்லை. காரணம், எந்தப் பெற்றோரும் தங்களின் பிள்ளை கள் மீது புகார் தர விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு மனம் வராது. 18 வயது வரை பிள்ளைகளை பெற்றோர் பராம ரிக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கும் நிலையில், பிள்ளைகளும் பெற்றோர் களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகச் சட்டம் இருந்தால், அதை அதிசயமாகப் பார்க்கத் தேவை இல்லை.

2007-ம் ஆண்டில் 'பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம்' அமல்படுத்தப்பட்டது. பெற் றோரை மட்டுமல்ல; பெற்றோர் இல் லாமல் சில வீடுகளில் தாத்தா, பாட்டி களும் இருப்பார்கள். அவர்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், தன்னால் தன் குழந் தைகள் நீதிமன்றத்தின் படி ஏறக் கூடாது என்று நினைக்கும் பெற்றோரின் பாசத்தால், இந்தச் சட்டத்தையும் அவ்வளவா கப் பயன்படுத்துவது இல்லை.

முதியோர் இல்லங்களில் பெற்றோரைச் சேர்ப்பது தவறு என எந்தச் சட்டமும் சொல்லவில்லை. சட்டத்தால், இதைச் சரிப் படுத்தவே முடியாது. மேலை நாடுகளில் முதியவர்களுக்கு என சோஷியல் செக்யூரிட்டி திட்டங்கள் பல இருக்கின்றன. ஆனால், இங்கு அப்படி எதுவும் இல்லை. வாழ்வின் கடைசிக் காலத்தில் பணம் இல்லை என்பதற்காக, முதியோர்கள், பெற்றோர்களைப் புறம் தள்ளுவது வருத்தத்தைத் தரக்கூடிய விஷயம்!" என்கிறார் ராமலிங்கம்.

'முதுமையை அழுகிய பழமாக நினைக்க வேண்டாம். கனிந்த பழமாகப் பாருங்கள்' என்பார் எழுத்தாளர் பாலகுமாரன். ஆண்டுகள் ஆக ஆக, வயது ஏறிக்கொண்டேதான் இருக்கும். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் முதுமையை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். குழந்தைகள் எதையும் பெற்றோரைப் பார்த்துதான் கற்றுக்கொள்கிறார்கள் என்கிறது உளவியல். இன்று உங்கள் பெற்றோரை நடத்தும் விதத்தைப் பார்த்துதான் நாளை உங்கள் குழந் தையும் உங்களை நடத்தும். வயது என்பது உடலுக்குத்தான். உள்ளத்துக்கு அல்ல. அன்பு செலுத்தும் கள்ளம் கபடமற்ற குழந்தை மனசு இருந்தால், வயது என்ன பெரிய வயது?
பெற்றோர்/முதியவர்கள் கவனத்துக்குச் சில...

படிப்பது, உங்கள் வயதுடைய நண்பர்களுடன் உரையாடுவது, ஆன்மிக நிகழ்வு களில் கலந்துகொள்வது என எதிலேனும் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.அது உங்கள் தனிமையை வெகுவாகப் போக்கும்!

பிள்ளைகளின் பணிச் சூழலைப் புரிந்துகொள்ளுங்கள். துணிகளை மடித்து வைப்பது, சமையலுக்கு உதவுவது, பேரக் குழந்தைகளுடன் விளையாடுவது... என வீட்டில் இருக்கும் வேலைகளைப் பகிர்ந்துகொள்வது, உங்கள் சோர்வையும் கவலை களையும் நீக்கும்!

புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். பாட்டோ, கதாகாலட்சேபமோ, மாதம் 30 வகை சமையல்களை முயற்சிப்பதோ இப்படி எதுவாகவும் அது இருக்கலாம். புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்வது உங்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்!

வேலைகளைச் செய்கிறேன் என்று கடினமான வேலைகளைச் செய்துவிட்டு, பின்னால் 'உடம்புக்கு முடியலையே' என வருந்தாதீர்கள்!

மருத்துவர்கள் பரிந்துரைப்படி பரிசோதனைகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள்!

பிள்ளைகளுக்குச் சில குறிப்புகள்...

பெற்றோர்கள், வீட்டில் இருக்கும் முதியவர்கள் மனம் புண்படும்படி எப்போ தும் நடந்துகொள்ளாதீர்கள்!

முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு முன் பெற்றோர்களையும் கலந்து ஆலோசியுங்கள். இது அவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதைப் உணரவைக்கும்!

பெற்றோர்களின் பிறந்த நாள், மண நாள் ஆகியவற்றைக் கொண்டாடுவது அவர்களின் சந்தோஷத்தை அதிகரிக்கும்!

சமச்சீர் உணவு, காற்றோட்டமான அறைகள், அவர்களைத் தொந்தரவு செய் யும்செயல்களைத் தவிர்ப்பது, நல்ல வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அமைத்துக் கொடுப்பது உங்களின் கடமை!

பெற்றோரின் பொருளாதார சுதந்திரத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பதும் நல்லது!

தாங்க்ஸ்:ந.வினோத்குமார் லிங்க் : http://youthful.vikatan.com/youth/nyouth/energy2411_18112010_2.php

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 11:29 am

பயனுள்ள கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி உதுமான்!



பாசத்துக்கு ஒரு பரீட்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 17, 2011 1:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக