புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_m10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_m10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_m10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen
புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_m10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10 
4 Posts - 2%
Manimegala
புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_m10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10 
2 Posts - 1%
Balaurushya

Karthikakulanthaivel

prajai

Saravananj
புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_m10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_m10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10 
432 Posts - 48%

305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_m10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_m10புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய மாணவா... ஆன் லைனுக்கு வா! கணினி... கல்லூரி... கல்வி

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 29, 2010 1:12 pm

'இரவு தாமதமாகத் தூங்கி, அலாரம் வைத்து அடித்துப் பிடித்து எழுந்து, அரக்கப் பரக்கக் கல்லூரிக்குச் சென்று 'அட்டென்டன்ஸ்’ போட்டு, நூலகப் புத்தகங்களைப் பக்கம் பக்கமாகப் புரட்டி நோட்ஸ் குறித்து, செமஸ்டர் தேர்வுகளில் தனித் தொகுதிகளாக வெளியிடும் அளவுக்கு 'அடிஷனல் ஷீட்’கள் அடுக்கி விடையளித்து, பெயருக்குப் பின் பட்டத்தைச் சேர்த்துக்கொள்ள நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே... ஹும்ம்... அதெல்லாம் அந்தக் காலம்!’ என்று சொல்கிற காலம் இப்போது!

ஆம்... இப்போது ஒட்டுமொத்தக் கல்லூரி வளாகமும் ஒற்றை கணிப்பொறிக்குள் அடங்கிவிட்டது. கல்லூரி வகுப்பறை ஜன்னல்களில் உலகத்தைப் பார்த்தது போரடித்து, இப்போது கணிப்பொறி 'விண்டோஸ்’ திறந்தால், உலகின் பல கல்லூரிகள் 'பட்டம் பெறலாம்.. வாங்க’ என்று அழைக்கின்றன. இப்படி இணையம் மூலமாகக் கல்வி கற்பது எந்த அளவுக்குச் சிறந்தது? அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன? வாருங்கள்... தெரிந்துகொள்வோம்!

''ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால்கூட இன்று ஒருவர் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் பெற்றுவிடக் கூடிய சூழல்கள் இருக்கும்போது, அரசால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது நம்பகத்தன்மையுள்ள நிறுவனத்தில் இணையம் மூலம் கல்வி கற்பதில் ஒன்றும் தவறில்லை!'' என ஆன் லைன் படிப்புகள்பற்றி பாசிட்டிவ்வாகத் தொடங்குகிறார் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் முனைவர் நக்கீரன்.

''இணையம் மூலம் கல்வி என்பதன் அடிப்படையே இடம், காலம், தூரம், செலவுகள் போன்ற காரணங்களால் நேரடியாகக் கல்லூரிகளுக்கோ பல்கலைக்கழகங்களுக்கோ சென்று படிக்க இயலாதவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்குக் கல்வி வழங்குவதுதான். உதாரணத்துக்கு, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். உலகின் பல பகுதிகளில் இருந்தும்தமிழ் கற்றுக்கொள்வதற்கான ஆர்வத்தோடு இந்தப் பல்கலைக்கழகத்தை ஏராளமானோர் அணுகுகிறார்கள். இலங்கையில் உள்ள தமிழ் மாணவர்கள், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மூலம் படித்துப் பட்டம் பெற்று, நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்.

பாடங்களை வெறும் 'டெக்ஸ்ட்’ ஆக மட்டுமே கொண்டு கல்வி கற்கும் பழக்கம் மலையேறிவிட்டது. இணையத்தில் கூடுதலாக அனிமேஷன் படங்கள், வீடியோ கான்ஃபரன்ஸிங், ஒலி-ஒளி முறைகள் ஆகியவற்றைக்கொண்டு பாடம் நடத்தப்படுவதால், நேரடியாகக் கல்வி கற்பதில் உள்ள புரிதல் தொடர்பான சிக்கல்களைக்கூட அவை நிவர்த்தி செய்துவிடும். உதாரணத் துக்கு, உடம்பில் ரத்த ஓட்டம் எப்படி நிகழ்கிறது என்பதை உடலை அறுத்துத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை. இணையத்தில் அந்தப் பாடத்தை அனிமேஷன் மூலமாகக் காட்டிப் புரியவைத்துவிட முடியும். கற்பதைவிடக் கேட்டல் நன்று, கேட்பதைவிடப் பார்த்தல் நன்று என்பார்கள் அல்லவா... அதுபோல!

மேலும், பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ அல்லது அந்தத் துறை சார்ந்த வேறு நூல்களை 'ரெஃபரன்ஸ்’ ஆகப் பயன் படுத்த வேண்டும் என்றாலோ அதற்குத் தேவையான நூல்கள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் ஆகியவை அடங்கிய நூலகத்தையும் வைத்திருக்க வேண்டும்.

ஆன் லைன் படிப்புகள் என்றவுடனே பலருக்கும் தோன்றும் சந்தேகம், 'தேர்வு எப்படி, எங்கு எழுத வேண்டும்’ என்பதுதான். இணையம் மூலம் கல்வி வழங்குபவர்கள் தேர்வுக்காகப் பெரும்பாலும் எல்லா முக்கிய நகரங்களிலும் தொடர்பு மையங்களை ஏற்படுத்தி இருப்பார்கள். அங்கு தலைமையிடத்தில் இருந்து வரும் கேள்வித் தாள்கள் வழங்கப்படும். தேர்வு மேற்பார்வையாளர் அல்லது தொடர்பு மையத்தின் இயக்குநர் ஆகியோரின் கண்காணிப்பில் அவ் வினாத்தாள்களுக்கு நாம் விடையளிக்க வேண்டும். அந்தவிடைத் தாள்கள் தலைமையிடத்துக்குக் கொண்டு வரப்பட்டு, தகுதியான ஆசிரியர்களைக்கொண்டு திருத்தப்படும். அதன் பின், தகுதிவாய்ந்த மாணவர்களுக்குப் பட்டம் வழங்குவார்கள். இதுதான் நடைமுறை.

சில மாணவர்கள் 'ஆன் லைன் படிப்புகள் என்றால் பிரச்னையே இல்லை. புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதிவிடலாம்’ என்று நினைப்பார்கள். அது தவறு. உண்மையில், 'ஓப்பன் புக் எக்ஸாம்’ எனப்படும் புத்தகத்தை வைத்துக் கொண்டு தேர்வு எழுதும் முறைதான் மிகவும் கடினமான தேர்வு முறை. அந்தப் புத்தகத்தை நீங்கள் ஆழ்ந்து படித்திருந்தால் மட்டுமே, உங்களால் தேர்வு எழுத முடியும். வெளிநாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் இல்லை. மாறாக, புராஜெக்ட் வொர்க் போலவோ, அல்லது ஒரு பிரச்னையைக் கொடுத்து அதற்கான தீர்வு கண்டுபிடிப்பது போலவோ கற்றல் முறைகளை அமைத்திருப்பார்கள். மாணவர்கள் இவற்றில் ஈடுபட்டு, கற்ற அறிவைச் செயல் படுத்திப் பட்டம் பெறுவார்கள். இதே நடை முறையை ஆன் லைன் படிப்புகளிலும் வெளி நாட்டுக் கல்வி நிறுவனங்கள் பின்பற்றுகின்றன.

இன்னொரு முக்கியமான விஷயம், ஆன் லைன் படிப்புகளில் பல போலிகளும் உள்ளன. அவற்றைக் கண்டுபிடித்துத் தவிர்ப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாடுகளிலும் பல கல்வி நிறுவனங்கள் ஆன் லைன் படிப்புகளை வழங்கி வருகின்றன. தற்சமயம் வரை இவற்றை முறைப்படுத்த எந்த ஓர் அதிகார மையமும் இல்லை. இணையம் வழிக் கல்வி என்பது இன்னும் விரிவடையும் சமயத்தில் அதற்கென ஆட்சி மையங்கள் கொண்டுவரப்படலாம். அதுவரை தீர விசாரித்து, நம்பகமான ஆன் லைன் படிப்புகளில் சேர்வது நல்லது!'' என்று எச்சரிக்கையுடன் முடிக்கிறார் நக்கீரன்.

முன்பெல்லாம் படித்ததை விரல் நுனியில் வைத்துள்ளேன் என்று கூறுவர். ஆனால், இன்றோ விரல் நுனியில்தான் பாடமே படிக்கிறார்கள்.

ஆன் லைன் கல்வியின் 'எத்திக்கல் ஹேக்கிங்’ பற்றி ஆன் லைனில் பாடம் நடத்தி வரும் 'ரிலையன்ஸ் வேர்ல்டு’ நிறுவனத்தின் நிலைய மேலாளர் சிவராமகிருஷ்ணன் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார். ''மாணவர்களுக்கு எந்த ஒரு நேரத்தையும் கால அளவையும் ஆன் லைன் கல்வி நிறுவனங்கள் நிர்ணயிப்பது இல்லை. அவர்களது விருப்பப்படி வரலாம், படிக்கலாம். அவர்களுக்கென தனி user name, password வழங்கப்பட்டுவிடும். இதற்கென அவர்கள் தங்களது முழு விலாசமிடப்பட்ட ஏதேனும் ஓர் அடையாள அட்டையின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சில பிரிவுகளைத் தவிர்த்து, மற்ற அனைத்துப் பிரிவுகளுக்கும் வீட்டில் இருந்தபடியே பாடங்களைப் படிக்க முடியும். அதற்கு கணினியும், இணைய வசதியும் இருந்தால் போதும். எத்தனை படிப்புகளை வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் படிக்க முடியும். மாணவர்கள் மட்டும் அல்ல; ஐ.டி. துறையில் பணிபுரிபவர்களும்கூடத் தங்களது பதவி உயர்வுக்காக இந்தக் கல்வி முறையைப் பின்பற்றுகின்றனர். தேவை நிமித்த மாகவும், வேலை நிமித்தமாகவும் இந்தக் கல்வி முறையைப் பின்பற்றுபவர்கள் அதிகம்!'' என்கிறார் சிவராமகிருஷ்ணன்.

ஆன் லைன் கல்வி முறையில் என்ன சிறப்பம்சம் என்று அந்தக் கல்வி முறையில் பயிலும் மாணவரான விஜயனிடம் கேட்டபோது, ''ஆறு மணி நேரம் காலேஜ்ல உட்கார்ந்துக்கிட்டு இருக் கிறதைவிட, இது எனக்கு ரொம்ப வசதியா இருக்கு. எனக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் படிப்பேன். பகுதி நேர வேலை பார்க்கவோ, வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ளவோ மற்ற நேரங்களைப் பயன்படுத்திக் கொள்கிறேன். இந்த சிஸ்டத்தின் ஒரே குறைபாடு, கிராமப்புறங்களில் அகண்ட அலை வரிசை (Broad Band) இணைய வசதி இல்லை. மிக மெதுவான இணைய இணைப்பு வழங்கப்படுவதால், ஆன் லைன் வீடியோக்கள் 'ஸ்ட்ரீம்’ ஆகி ஒளிபரப்பாவதில் சிக்கல் நீடிக்கிறது!'' என்கிறார்.

கல்வி என்பதில் என்ன நல்ல கல்வி, தீய கல்வி... கற்ற கல்வியை எந்த அளவு சிறப்பாக, நல்வழியில் செயல்படுத்துகிறோமோ அதை வைத்துத்தான் ஒருவர் கற்ற கல்வி நல்லதா, கெட்டதா என்பதைத் தீர்மானிக்க முடியும். மரபுரீதியான கல்வியோ அல்லது ஆன் லைன் கல்வியோ... 'கற்ற பின் நிற்க அதற்குத் தக’ என்பதை நினைவில் வைத்துக்கொண்டால் யாவையும் நலமே!

ஆன் லைன் மூலம் என்னென்ன படிப்புகள் படிக்கலாம்?

மருத்துவம், பொறியியல் மற்றும் சில அறிவியல் பாடங்கள் தவிர, மற்ற பெரும்பாலான பாடங்களை இணையத்தின் மூலமே கற்றுக்கொள்ளலாம். பட்டப் படிப்பு முழுவதையும் ஆன் லைனில் படிப்பதைவிட, சான்றிதழ், பட்டயம் போன்ற 'எக்ஸ்ட்ரா’ படிப்புகளை மட்டும் ஆன் லைனில் படிப்பது நல்லது. ஒரு வேளை அந்தச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளாதபோதும் நீங்கள் பெற்ற அறிவு உங்களுக்குத் துணை புரியும்!

கல்விக் கட்டணம் எப்படி?

ஆன் லைன் கல்வியில் கட்டண முறைகள் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மாறும். சில நிறுவனங்கள் ஒரு பாடத்துக்கு இவ்வளவு ரூபாய் கட்டணம் என்று விதிக்கின்றன. சில நிறுவனங்கள் ஒரு செமஸ்டருக்கு இவ்வளவு என்று விதிக்கின்றன. ஆனால், பொதுவாகப் பல ஆன் லைன் கல்வி நிறுவனங்கள் ஒரு கோர்ஸுக்கு இவ்வளவு ரூபாய் எனக் கட்டணம் விதித்திருக்கின்றன.

பல ஆன் லைன் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணத்தை முழுவதுமாகக் கொடுத்தால்தான் உங்களுக்கான பாஸ்வேர்ட், குறிப்பிட்ட தளங்களைப் பயன்படுத்துகிற வசதி எல்லாவற்றையும் அனுமதிப்பார்கள்!

உங்கள் கவனத்துக்கு...

ஆன் லைன் படிப்புகளில் சேரும் முன்னும், சேர்ந்த பின்னும் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடு கிறார் 'கிளிஸ்டர் டெக்னாலஜி’ ஆன் லைன் கல்வி நிறுவனத்தின் பயிற்சியாளர் விஜய்...

ஆன் லைன் கல்விக்குப் பெரும்பாலான வங்கிகள் கல்விக் கடன் வழங்குவது இல்லை. சரியான நேரம் ஒதுக்கி உங்களால் தொடர்ந்து ஆன் லைனில் கல்வி கற்றுப் பட்டம் பெற முடியுமா என்று பாருங்கள். சந்தேகம் இருந்தால் ஆன் லைனில் படிக்கும் எண்ணத்தைக் கை விடுவது நல்லது.

கணிப்பொறியை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்தவராக, இணையதள அறிவைக்கொண்டு இருப்பவராக நீங்கள் இருந்தால் மட்டுமே பல ஆன் லைன் படிப்புகளை நீங்கள் படிக்க முடியும் என்பது நிதர்சனம். ஆன் லைனில் கல்வி கற்கும் முன், கணினி பற்றி அடிப்படைப் பயிற்சியாவது நீங்கள் பெற வேண்டியதும் அவசியம்!

ஆன் லைன் கல்வியில் சேர்பவர்கள் நாளிதழ்கள், தொலைக்காட்சி ஆகியவற்றில் வரும் விளம்பரங்களைப் பார்த்து விண்ணப்பிப்பது இல்லை. 'ரெஃபரன்ஸ்’ மூலமாக மட்டுமே சேர்கிறார்கள். அப்படி 'ரெஃபரன்ஸ்’ இருந்தால் அந்த நிறுவனம் தரமானது என நம்பலாம்.

வலைப்பூக்கள், ஃபோரம்கள் ஆகியவற்றில் நீங்கள் சேரப்போகும் நிறுவனத்தைப்பற்றி நல்லபடியான விமர்சனங்கள் இருக்கின்றனவா என்று பார்க்கவும். நுகர்வோர் குறைகள், புகார்கள் ஏதேனும் இருந்தால், அந்த நிறுவனத்தில் சேராமல் தவிர்ப்பது நல்லது.

எக்காரணத்தைக் கொண்டும் கட்டணத்தை முழுமையாகச் செலுத்திவிட வேண்டாம். உதாரணத்துக்கு, 10,000 கட்டணம் என்றால், முதலில் 1,000 செலுத்திவிட்டு, ஒரு வாரம் கல்வி கற்கலாம். ஓரளவு நம்பிக்கை வந்தவுடன் பாதிக் கட்டணத்தைச் செலுத்தலாம். அதன் பிறகு, 60 சதவிகிதம் பாடம் முடியும் தறுவாயில் மீதமிருக்கும் கட்டணத்தைச் செலுத்தலாம்.

'ப்ளேஸ்மென்ட் அஷ்யூர்ட்’ என்று விளம்பரம் செய்யும் நிறுவனங்களைக் காட்டிலும், வேலைவாய்ப்புக்கு உதவி செய்கிறோம், 'ப்ளேஸ்மென்ட் அசிஸ்டென்ஸ்/சப்போர்ட்’ என்று சொல்லும் நிறுவனங்களை ஓரளவு நம்ப லாம். காரணம், ஆன் லைன் கல்வியைப் பொறுத்த வரையில் யாராலும் 100 சதவிகிதம் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது!

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 29, 2010 2:23 pm

உண்மைதான்
முன்பெல்லாம் படித்ததை விரல் நுனியில் வைத்துள்ளேன் என்று கூறுவர். ஆனால், இன்றோ விரல் நுனியில்தான் பாடமே படிக்கிறார்கள்.
பகிர்வுக்கு நன்றி உதுமான்

[You must be registered and logged in to see this link.]
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 29, 2010 4:04 pm

பயனுள்ள பதிவு

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 29, 2010 6:58 pm

நல்ல தகவல்கள்... நன்றி உதுமான்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Postsamalfasi Wed Dec 29, 2010 8:29 pm

நன்றி உதுமான் காகா

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 29, 2010 10:22 pm

நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக