புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
74 Posts - 47%
heezulia
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
5 Posts - 3%
prajai
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
4 Posts - 3%
Jenila
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
2 Posts - 1%
jairam
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
2 Posts - 1%
kargan86
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
9 Posts - 4%
prajai
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
6 Posts - 3%
Jenila
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
2 Posts - 1%
jairam
பிரம்ம ராட்சஷன் Poll_c10பிரம்ம ராட்சஷன் Poll_m10பிரம்ம ராட்சஷன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரம்ம ராட்சஷன்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 26, 2010 9:48 pm

பிரம்ம ராட்சஷன்!




பிரம்ம ராட்சஷன் Piramaratchasan

ஒரு ஊரில் ஆலமரம் ஒன்று இருந்தது. அது நல்ல சுவையுடைய நீரைக் கொண்ட ஒரு குளக்கரையில் இருந்தது. அந்த ஆலமரம் முதிர்ந்த வயதை உடையது.

அதன் நிழல் எப்பொழுதும் "குளுகுளு'வென இருக்கும். ஆலமரத்தடியில் ஒரு பெரிய மேடை இருந்தது.

ஊருக்குச் செல்லும் பிரதான சாலை அந்த ஆலமரத்தை ஒட்டியே சென்றது. நான்கு
பக்கமுள்ள சிற்றுõர்களுக்கும், பேரூர்களுக்கும் அந்த சாலை வழியாகத் தான்
சென்றாக வேண்டும்; திரும்பி வந்தாக வேண்டும். அதனால் அந்த சாலை மக்கள்
பெருக்கம் நிறைந்து காணப்பட்டது.

வெயிலில் வருகிறவர்களுக்கு ஆலமரமும் அதன் "குளுகுளு' நிழலும் அருகில்
குளத்தில் கிடைக்கும் கற்கண்டு போன்ற தன்மையிலான நீரும் பாலைவனத்து
பசுஞ்சோலை போலிருந்தன.

வெயிலில் வந்து களைப்புத் தீர குளத்து நீரை பருகி, முகம் கழுவி, கல்
மேடையில் ஆலமரத்து நிழலில் அமர்ந்து கொள்வர். நல்ல ஓய்வு கிடைக்கும் வரை
அப்படி உட்கார்ந்து கொள்வர். சிலர் துண்டை விரித்து போட்டு படுப்பதும்
உண்டு.


அங்கே மக்கள் கூட்டம் எப்போதும், "ஜேஜே' என்றிருக்கும். ஆனால், சிறிது
நாட்களாக ஆலமரத்தடியில் வந்து தங்கி இளைப்பாறும் மக்கள் தொகை குறைய
ஆரம்பித்தது.

ஆலமர நிழலுக்கு ஓடோடி வரும் அவர்கள் இப்போது அதன் அருகில் வரவே அஞ்சத் தொடங்கினர். தொலைவிலே நடந்து சென்றனர்.

ஆலமரத்தை அருகில் கடந்து செல்ல வேண்டி வந்தால் ஓட்டமாக ஓடினர். ஆலமரத்தை
திரும்பிக் கூட பார்க்காது சென்றனர். அதற்கு காரணம் அந்த ஆலமரத்துக்கு
புதிதாக வந்து சேர்ந்த ஒரு பிரம்ம ராட்சஷன் தான்.

நீர் அருந்த இளைப்பாற அவர்கள் உட்காருவதற்கு முன் மரத்தின் நீண்ட கிளைகளை
ஆட்டி பயமுறுத்தும். அவர்களிடம் மூன்று கேள்விகள் கேட்கும். அதற்கு அவர்கள்
என்ன பதில் சொல்கின்றனர் என்று பார்க்கும். அவர்கள் சரியான பதிலை
சொல்லாவிட்டால் அதற்கு கடும் கோபம் வரும்.

அவர்கள் தலையை கிள்ளி எடுத்து விடும். கிள்ளி எடுத்த தலையை ஆலமரக்
கிளைகளில் தொங்கவிடும். அப்படி அகப்பட்ட தலைகள் ஆலமரத்தில் தொங்கிக்
கொண்டிருந்தன.

அதனாலேயே யாத்ரீகர்கள், வழிபோக்கர்கள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் ஆலமர நிழலில் தங்க அஞ்சி அதன் அருகிலேயேவரயோசித்தனர்.

ஒரு மாமன்னன் தன் படைகளுடன் வந்து இறங்கத்தக்க அளவுக்கு ஆலமரம்
பெரிதாகவும், அதை விட அதன் நிழல் பெரிதாக இருந்தும் எவருக்கும் பயன்படாமல்
வீணாகிக் கொண்டிருந்தது.

குளத்து நீர் எவரும் பருகப்படாமல் பாசிப்படிந்து அதில் அல்லி, தாமரைப்பூக்கள் பூக்க ஆரம்பித்தன.

அந்த ஆலமரத்தின் அருகில் சற்று தள்ளி ஒரு கிராமம் இருந்தது. அதன் பெயர்
சிங்கப்பட்டி. அக்கிராமத்தில் ராமாயி என்ற பாட்டி இருந்தாள். அறுபது வயது
இருக்கும். அவளுக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் வசந்தா. அவளுக்கு
திருமணம் ஆகி ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவன் பெயர் சுடலை. அவனுக்கு
ஆறு வயது நடந்து கொண்டிருக்கும் போது அவன் அம்மாவும், அப்பாவும் சென்ற படகு
ஆற்றில் கவிழவே இருவரும் இறந்து போயினர். பேரனை வளர்க்கிற பொறுப்பு
பாட்டியை சேர்ந்தது.

குழந்தை பிற்காலத்தில் பேரறிஞனாகவும், கவிஞனாகவும் வருவான் என்பது அவன்
படிப்பில் காட்டிய ஆர்வமும் கேட்கத் தொடங்கிய கேள்விகளுமே தெள்ளத்
தெளிவாகக் காட்டின.

எதையும் ஏன், எதற்கு என்று அவன் கேட்கத் தொடங்கி தன் அறிவை வளர்த்துக்
கொள்வதில் அக்கரை காட்டினான். தன் பேரன் புத்திசாலியாக இருப்பதை அறிந்து
பாட்டி மகிழ்ந்தாள்.

அப்படி ஒரு முறை அருகில் உள்ள ஊரில் நடந்த ஒரு திருவிழாவிற்கு பேரனை
அழைத்துச் சென்றாள் பாட்டி. அப்படி போகும் போது பிரம்மராட்சஷன் வாழும்
ஆலமரத்தை ஒட்டிய சாலை வழியாக அவர்கள் செல்ல வேண்டி வந்தது.

அந்த ஆலமரத்தில் வாழும் பிரம்ம ராட்சஷனைப் பற்றி பாட்டி நன்கு அறிந்திருந்ததால் பேரனை ஆலமரத்தை விட்டு ஒதுக்கி அழைத்துச் சென்றாள்.

பெரியதும் நிழல் கொடுக்கக்கூடியதுமான ஆலமரத்தடியில் சிறிது நேரம் விளையாடி
விட்டு பிறகு குளத்தின் குளிர்ந்த நீரையும் பருகிவிட்டுச் செல்ல
விரும்பினான் சிறுவன்.

""சுடலை! ஆலமரத்தில் வாழும் பிரம்மராட்சஷன் பொல்லாதது... அது ஆலமர நிழலில்
தங்குகிறவர்களிடம் மூன்று கேள்விகள் கேட்கும். அந்த கேள்விகளுக்கு சரியான
பதிலை கூறாவிட்டால் அவர்கள் தலையை கொய்து ஆலமரத்தடியில் கட்டித்
தொங்கவிட்டு விடும். அதனால் இப்போது ஆலமரத்து அருகே செல்லவே அஞ்சுகின்றனர்.
வா நாம் போய்விடலாம்!'' என்றாள் பாட்டி.

""பாட்டி! அப்படி என்ன மூன்று கேள்விகளை கேட்கிறது அந்த பிரம்மராட்சஷன்? அதற்கு இவர்கள் என்ன பதில் சொன்னார்கள்?'' என்று கேட்டான்.

""முதல் கேள்வியாக உலகில் எது பெரியது?'' என்று கேட்கும்.

""சரி! அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்களாம் பாட்டி!''

""இமயமலை என்பார்களாம்!''

""அது சரியான பதில் இல்லையா?''

""ஆம்... பிரம்மராட்சஷன் அடுத்ததாக இரண்டாவது கேள்வியான நல்லதை விட தீமையே அதிகம் செய்யும் சிறிய வஸ்து எது?'' என்று கேட்கும்.

""பாம்பின் விஷம் சிறிதாக மருந்துக்கு பயன்படுகிறது. ஆனால், மரணம் விளைவிக்கவே அதிகமாக பயன்படுகிறது!'' என்பர்.

""அந்த பதிலும் சரியில்லை என்று சொல்லிவிடுமா?''

""ஆமாம்... மூன்றாவது கேள்வியாக உருண்டு வேகமாக ஓடுவது எது?'' என்று கேட்கும்.

""அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?''

""வண்டிச்சக்கரம், பணம் என்று சொல்வர். இந்த பதில்கள் பிரம்ம ராட்சஷனுக்கு
திருப்தியை அளிக்காது. உடனே அவர்கள் தலையை கிள்ளி எடுத்து மரத்தில்
தொங்கவிட்டு விடும். சுடலை... நாம் இங்கிருப்பது ஆபத்தை விளைவிக்கும்.
வா... போய் விடலாம்,'' என்று அவனது கையை பிடித்தாள் பாட்டி ராமாயி.

ஆலமரம் அருகில் சென்றான் பேரன். கால்களை அகல விரிந்து பலமாக ஊன்றி
இடுப்பின் இருபுறமும் கைகளை பதித்து பெருங்குரலில், ""ஏ...
பிரம்மராட்சஷா... உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல வந்திருக்கிறேன். வா...
வெளியே... கேள் உன் கேள்விகளை!'' என்று கூறினான்.

""யாரடா சிறுவன் என் கேள்விகளுக்கு பதில் சொல்ல தோள்தட்டி வந்திருப்பது?''
என்றபடி ஆலமரத்தில் இருந்து வெளி வந்த பிரம்மராட்சஷன், சிறுவன்
பயப்படட்டும் என்று தலைகள் தொங்கும் ஆலமரக் கிளைகளை உக்கிரமாக ஆட்டிற்று.
அது புயல் வீசுவது போல பயங்கரமாக இருந்தது.

அதை கண்டு அஞ்சவில்லை. ""ஏ... பிரம்மராட்சஷா... உன் உருவம் கண்டு எள்ளி நகையாடாதே... கேள் உன் கேள்விகளை?'' என்றான்.

""சாவதென்று வந்து விட்டாய்... உன் விதியை யாரால் மாற்ற முடியும்? என்
முதல் கேள்வி இதுதான். உலகிலேயே பெரியது எது?'' என்று ஆலமரத்து கிளைகளை
பயங்கரமாக ஆட்டியபடி கேட்டது.

""உலகில் பெரியது அன்பு,'' என்றான்.

அதைக் கேட்டதும் பிரம்மராட்சஷனின் கண்கள் கலங்கின. "சரியான பதிலை சொல்லிவிட்டாயே?' என்பது போல சுடலையை பார்த்தது.

""அடுத்த கேள்வியைக் கேள்!'' என்றான் சுடலை.

""நன்மையை விட தீமையே செய்கிற சிறிய வஸ்து எது?''

""மனிதனின் நாவு!'' என்றான்.

தான் நினைத்திருந்த பதிலையே தங்கு தடையின்றி சொன்னதும் பிரம்மராட்சஷன்
அசந்து போயிற்று. மூன்றாவதாக தான் கேட்கப் போகிற கேள்விக்கு அவன் என்ன
பதில் சொல்லப் போகிறான் என்றெண்ணி, ""உருண்டு வேகமாக ஓடுவது எது?'' என்று
கேட்டது.

""காலம்!'' என்றான்.

அடுத்த கணம், ""சிறுவனே! என் கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்லிவிட்ட நீ
சிறந்த அறிவாளி தான். நான் தாயன்பை புரிந்து கொள்ளாமல் என் அன்னையை சிறிய
வஸ்துவான என் நாவால் திட்டி வதைத்தேன். அவளை கொடுமைப்படுத்தினேன்.

""என்னை பத்து மாதம் சுமந்து பெற்ற அவள் மணி வயிற்றை எட்டி உதைத்தேன்.
பெற்ற மனம் துடித்தது. நான் என் தாய்க்கிழைத்த கொடுமைகளை பார்த்த ஒரு
முனிவர் "நீ பிரம்மராட்சனாகக் கடவாய்' என்று சபித்துவிட்டார். அது
போலாகிவிட்டது.

""நான் தவறுகளை உணர்ந்து"எனக்கு எப்போது சாபவிமோசனம்?' என்று கேட்டேன்.
காலம் வரும் பொழுது என்று சொல்லி விட்டு போய்விட்டார் அம்முனிவர். அதற்குத்
தான் நான் இவ்வளவு நாட்களாக காத்திருந்தேன்.

""உருண்டு வேகமாக ஓடும் காலம் உன் வடிவில் வந்து என்னை சாபத்தில் இருந்து
விமோசனமடைய செய்து விட்டது...'' என்று சொல்லி சுடலையை வணங்கி எழுந்த போது
பிரம்மராட்சஷன் மறைந்து அழகான ஒரு இளைஞன் அங்கிருந்தான்.

அந்த இளைஞன் ஆலமரத்தில் தொங்கிய தலைகளை எல்லாம் எடுத்து மண் தோண்டி
புதைத்தான். ஆலமரத்தடியில் இருந்த மேடையையும் பிற பகுதிகளையும்
சுத்தப்படுத்தினான். குளக்கரையை சுற்றி வளர்ந்து புதிராக மண்டிக் கிடந்த
செடி, கொடிகளை நீக்கி குளக்கரையை அழகாக்கினான்.

பிரம்மராட்சஷனின் கொடிய மூச்சுப்பட்டு வாடியும் கருகியும் போய் இருந்த
ஆலமரம் இப்போது பச்சை பசேலென்ற இலைகளோடு காணப்பட்டது. மரத்தை விட்டுச்
சென்ற பறவைகள் எல்லாம் திரும்பி ஆலமரத்தில் தங்கின.

அவைகளில் விதவிதமான குரலொலிகள் இனிமையாக கேட்டன. வழிப் போக்கர்களும்,
யாத்ரீகர்களும் ஆலமரத்தடியில் உள்ள மேடையில் தங்கி ஓய்வெடுத்து குளத்து
நீரை பருகி மகிழ்ந்தனர். இவ்வளவுக்கும் காரணமான சுடலையை எல்லாரும்
பாராட்டினர்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக