புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
383 Posts - 49%
heezulia
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கம் வளர்த்த தமிழ்!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:02 pm

First topic message reminder :


"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்!


.....................................................................


"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா"


"வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!"




இவ்வாறு தமிழ் மொழியின் வண்மையையும் தண்மையையும் பாரதியார் மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மேலும்



"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்வள்ளுவர் போல் இளங்கோ வைப் போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை"



என்று மகாகவி பாரதியார் பெருமிதத்தோடு பாடியிருக்கிறார்.



மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு பல மொழிகளில் புலமை இருந்தது. அவரது தாய் மொழியான தமிழைத் தமிழ் பண்டிதர்களிடம் கற்றார். காசி சர்வகலாசாலையில் (1898-1902) இந்தியும் வடமொழியும் கற்றார், புதுவையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததால் பிரன்சுமொழி அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. ஆங்கில மொழியிலும் அவருக்குப் புலமை இருந்தது.



எனவே தமிழ்மொழியை ஏனைய மொழிகளோடு ஒப்பீடு செய்து "யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தீர்ப்பு வழங்கினார். "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே" என்றும் "வானமளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!" அறுதியிட்டுக் கூறினார்.



உண்மையில் பாரதியார் பிறப்பால் பிராமணர். ஆன காரணத்தால் "தேவபாஷை" என்று அழைக்கப்பட்ட வடமொழியை அவர் உயர்த்திச் சொல்லியிருக்கலாம். இன்றுகூட நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காட்டுத் தமிழ் நாட்டுப் பிராமணர் வடமொழியைத் தங்கள் "தந்தை மொழி" எனக் கூறிக் கொள்கிறார்கள். திருக்கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்படுவதற்கு எதிராக அர்ச்சகர்களே போர்க் கொடி தூக்குகிறார்கள். ஆனால் கவிச் சக்கரவர்த்தி பாரதியார் தமிழையே இனிமையான மொழி, உயர்வான மொழி, செழுமையான மொழி என நெஞ்சாரப் போற்றியிருக்கிறார்.



பாரதியார் இந்த மண்ணலகத்தில் 39 (1882-1921) அகவையே வாழ்ந்து மறைந்தவர். அவர் வாழ்ந்த காலம் குறுகியது என்றாலும் பாரதியாரே உச்சி மீது வைத்துப் பாராட்டிய கல்வியில் பெரிய கம்பன், நெஞ்சை அள்ளும் சிலம்பு படைத்த இளங்கோ, வானுயர் வள்ளுவர் இவர்களோடு அரியாசனத்தில் சரியாசனம்; இருக்கக் கூடியவர். தமிழ் மொழிக்கும், தமிழினத்துக்கும் ஒரு புதிய நீர்மையையும், சீர்மையையும் ஏற்படுத்தியவர். தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதிய எழுச்சியையும் மொழிப் புரட்சியையும் செய்தவர். தனது பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலிக்கச் செய்ததோடு தமிழ் தேசியத்துக்கு லாலி பாடியவர். அவரது சொல்லாட்சியும் பொருள் நயமும் எம்மைத் திகைக்க வைக்கிறது.



"...............................................பெண்ணரசின்

மேனி நலத்தினையும் வெட்டினையுங் கட்டினையும்
தேனி னினியாள் திருத்த நலத்தினையும்,
மற்றவர்க்குச் சொல்ல வசமோ? ஓர் வார்த்தை
கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான் கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்"




வேறு மொழியில் உலகக் கவிஞன் யாராவது பெண்ணின் மேனி நலத்தினையும், வெட்டினையும், கட்டினையும் இவ்வாறு வர்ணித்திருப்பார்கள் என்பது ஐயமே!



"காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும், - அங்கு

தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்

துய்ய நிறத்தினவாய் -அந்தக்

காணி நிலத்திடையே - ஓர் மாளிகை

கட்டித் தரவேண்டும் - அங்குக்

கேணியருகினிலே -தென்னைமரம்

கீற்று மிள நீரும்,

பத்துப் பன்னிரண்டு -தென்னைமரம்

பக்கத்திலே வேணும் - நல்ல

முத்துச் சுடர்போல -நிலாவொளி

முன்பு வரவேணும் - அங்கு

............................................................

பாட்டுக் கலந்திடவே -அங்கேயொரு

பத்தினிப் பெண் வேணும் -

எங்கள் கூட்டுக் களியினிலே-கவிதைகள்

கொண்டுதர வேணும் ........"




தமிழகம் கைவிட்ட நிலையில் வாழ்நாளெல்லாம் பட்டினியோடு போரிட்ட ஒரு கவிஞனின் ஆசை எப்படியெல்லாம் சிறகடித்துப் பறக்கிறது? தனது இறுதி யாத்திரையை பத்துப் பன்னிரண்டு பேரோடு நடாத்திய பாரதியா இப்படிப் பாடினார்? அதனை நம்ப முடிகிறதா?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:21 pm

அபயக்குரல் எழுப்பிய போது கஜேந்திராழ்வார் ஆதி மூலத்தை ஸம்ஸ்கிருதத்திலா அழைத்தார்?"


"ஓய் நாதமுனி! போதும் நிறுத்தும். இது ஸம்ஸ்கிருத சமிதி அல்ல. நீர் திராவிட பாஷா மான்மியம் பற்றி வழக்காட. வேதங்களுக்கு ஆழ்வார்களின் பாடல்கள் எப்படிச் சமமாகு மென்பதே நம் முன் உள்ள பிரச்சனை" - ஸ்ரீகார்யத் தலைவர் சுட்டிக் காட்டினார்.


"நான் மூன்று பிரச்சனைகளைகள் பற்றிக் குறிப்பிட்டேன் அல்லவா? அவற்றுள் இது இரண்டாவது. முதல் பிரச்சனையைப் பற்றி நான் முடிக்கு முன்பே பாஷை வெறும் வாகனம் மட்டும் தான், விஷயமே முக்கியமானது - என்பதை நீங்கள் உணர்ந்து விட்டதை இப்போது நீங்கள் இரண்டாவது பிரச்சனைக்கு தாவி விட்டது காட்டுகின்றது. சந்தோஷம். உங்கள் விருப்பப்படி இந்த இரண்டாம் பிரச்சனைக்கு வருவோம்."


ஏற்கனவே நான் சொல்லியதுபோல ஆரியம் தமிழ் இரண்டுக்கும் இடையில் ஒரு பனிப்போர் நீண்டகாலமாக நிலவி வருகிறது என்பதை நாதமுனிகளுக்கும் ஸ்ரீகார்யத் தவைவர் இடைக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் அல்லது தர்க்கம் எண்பிக்கிறது.


தமிழ் மொழிக்கு ஏற்றம் கொடுப்பதை பிராமணீயம், நாதமுனிகள், இராமனுசர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆழ்வார்கள். பாரதி, கல்கி, உ.வே. சுவாமிநாதையர் போன்றவர்கள் நீங்கலாக, ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. .


நாயன்மார்களில் தமிழை மிகவும் ஏற்றிப் போற்றியவர் திருஞானசம்பந்தர். பிறப்பால் அந்தணர். உள்ளத்தால் தமிழர். "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்" என்று சுந்தரர் இவரைப் பாராட்டுவார். தமிழ்மொழிக்குள்ள அடைமொழிகளில் பாதிக்குமேல் ஞானசம்பந்தரின் அன்பளிப்புக்கள். இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் அவரது பெயரை வைத்துக் கொள்வதே "நீசம்" என்று தள்ளிவிட்டார்கள்!


அந்தமிழ்
அருந்தமிழ்
ஆரா அருந்தமிழ்
இசைமலி தமிழ்
இன்தமிழ்
ஒண்தமிழ்
நற்றமிழ்
நின்றதமிழ்
சங்கமலி செந்தமிழ்
சந்தமார் தமிழ்
சந்தமாலைத் தமிழ்
செந்தண்டமிழ்
செந்தமிழ்
செய்தமிழ்
தண்தமிழ்
முத்தமிழ்
மூன்றுதமிழ்
ஞானத்தமிழ்
குன்றாத்தமிழ்
குற்றமில்
செந்தமிழ்



(இந்தப் பட்டியல் நிறைவானதல்ல. இன்னும் இருக்கின்றன. இடக்குறைவு காரணத்தால் தரமுடியவில்லை)


ஆளுடைப்பிள்ளையாரின் தமிழ்ப் பற்றுக்கு அவரது தேவாரங்கள் சான்று பகருகின்றன. ஒவ்வொரு திருக்கோவிலைபற்றிப் பாடிய பதிகத்தின் கடைசிப் பாடலில் ஞானசம்பந்தன் என்ற பெயரோடு தமிழ் என்ற சொல்லையும் பயன்படுத்த அவர் ஒருபோதும் தவறுவதில்லை. தன்னையே தமிழ்ஞானசம்பந்தன், நற்றமிழ்ஞானசம்பந்தன் என வாய் ஓயாது அழைக்கிறார்.


"தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிதனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான்பெரியப் புகுவாரே"
(இரண்டாம் திருமுறை 11-11)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:25 pm

"தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்"


மேலும் தமிழ்ஞான சம்பந்தர் தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல முழவமொந்தை மல்குபாடல் செய்ய வேண்டும் என்கிறார்.


"தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணை பண்ணிநல்ல
முழவமொந்தை மல்குபாடல் செய்கை யிடமோவார்
குமிழின்மேனி தந்துகோல நீர்மை யது கொண்டார்
கமழுஞ்சோலைக் கானூர்மேய பவள வண்ணரே."



(தலாம் திருமுறை 47-
மீண்டும் சந்திப்போம்


தமிழ் நாட்;டில் சைவ சமய குரவர்களான அப்பரும், சுந்தரரும், ஆளுடைப் பிள்ளையாரும், வைணவ ஆழ்வார்களான பெரியாழ்வார் தொடங்கி திருமங்கை ஆழ்வார் ஈறாகப் பன்னிருவரும் தொடக்கிய பக்தி இயக்கம் (கடவுளை அறிவுத் தளத்தில் இல்லாது உணர்வுத் தளத்தில் இருந்து வழிபடல்) வெற்றி பெற்றதற்கு இரண்டு காரணங்களை முக்கியமாக எடுத்துச் சொல்லலாம்.


முதலாவது பிராமணர்களின் மேலாதிக்க ஆளுமைக்கு உட்பட்டதாக சமயம் வேதகாலத்தில் இருந்தது. இதற்கு மாறாக யாரையும் விட்டு விடாது, எல்லோரையும் அரவணைத்துச்செல்வதாக பக்தி இயக்கம் இருந்தது.


இரண்டாவதாக இறை வழிபாட்டில் மக்கள் மொழியான தமிழுக்கும் தமிழிசைக்கும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் கொடுத்த முன்னுரிமை. இவர்களது பணியால் தமிழ் மொழிக்கும் தமிழிசைக்கும் ஒரு புதுப் பொலிவும், வனப்பும், வண்ணமும், வளர்ச்சியும் ஏற்பட்டன. வேறு மொழிகளில் காணப்படாதவாறு சமய இலக்கியம் தமிழ் மொழியை வளப்படுத்தியது.


அப்பர், ஆளுடைப் பிள்ளையார் இருவருக்கும் பிற்காலத்தவரான சுந்தரமூர்த்தி நாயனார் இறைவன் அப்பருக்கும் ஆளுடைப் பிள்ளையாருக்கும் காசுகள் கொடுத்து தமிழிசை பாடுமாறு கேட்டதாக பாடல் அருளியிருக்கிறார்.


"தெரிந்த நான்மறையோர்க் கிடமாய திருமிழலை
இருந்து நீர் தமிழோடிசை கேட்கும்
இச்சையால் காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே"



(ஏழாம் திருமுறை 899)


பிற்காலத்தவரான தாயுமானசுவாமிகள் (19ம் நூற்றாண்டு) அப்பரும், சுந்தரரும், ஆளுடைப்பிள்ளையாரும் மொழிக்கு மொழி தித்திக்கும் மூவர் சொலும் தேவாரத் தமிழ்மொழியை இறைவன் ஏற்றருளினான், அப்படிப்பட்ட இறைவன் தன்மொழியையும் ஏற்றுக் கொள்வாரா என்று ஏங்குகிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:27 pm


"தேவரெல்லாம் தொழச் சிவந்த செந்தாள் முக்கட்
செங்கரும்பே மொழிக்கு மொழி தித்திப்பாக
மூவர் சொலும் தமிழ்மொழி கேட்கும் திருச் செவிக்கே
மூடனேன் புலம்பிய சொல் முற்று மோதான்"



அப்பரும், சுந்தரரும், ஆளுடைப்பிள்ளையாரும், அருமணிவாசகரும் தமிழை ஏற்றிப் போற்றுவதில் ஒருவரையொருவர் விஞ்சுகிறார்கள்.


நாவுக்கரசர் ஞானசம்பந்தரது சமகாலத்தவர். எண்பது அகவைகள் நிறைவாழ்வு வாழ்ந்தவர்.சைவத்தில் மருள்நீக்கியாராகப் பிறந்து சமணத்துக்குச் சென்று தருமசேனர் ஆகி மீண்டும் சைவத்துக்கு வந்து திருநாவுக்கரசர் ஆகியவர். நாவுக்கரசர் தமது தமக்கையார் திலகவதியாரால் திருநீறு பெற்றுச் சைவராகித் திருவதிகைப் பெருமானைப் போற்றிப் பாடியபோதுதான் திருநாவுக்கரசு என்ற பெயர் உண்டாயிற்று.


"பாவற்றலர் செந்தமிழ் இன்சொல்வளப்
பதிகத்தொடை பாடிய பான்மையினால்
நாவுக்கரசு என்று உலகேழினும்; நின்
நாமம் நயப்புற மன்னுக என்று
யாவர்க்கும் வியப்புற மஞ்சுறைவான்
இடையே ஒருவாய்மை எழுந்ததுவே"



என்று பெரியபுராணம் பாடிய சேக்கிளார் செந்தமிழ் இன்சொல்வளப் பதிகத்தொடை பாடியபான்மையினால் நாவுக்கரசு என்ற பெயர் பெற்றார் என்கிறார்.


திருநாவுக்கரசர் நாயன்மார்களிலேயே பெரிய புரட்சிவாதி. மறுமலர்சியாளர். அவர் "காயமே இது பொய்யடா காற்றடைந்த பையடா" என்று புலம்பி அழுத கூட்டத்தைச் சார்ந்தவர் அல்ல.


யாருக்கும் அஞ்சவேண்டாம், யாருக்கும் அடிமையாக வாழவேண்டாம். நம் ஆற்றலைப் பெருக்கிச் கொண்டு இறைவனை நம்பி நேர் வழியில் நடத்தால் நாம் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. யாருக்கும் அடிமை செய்ய வேண்டியதில்லை. இதனை நாவுக்கரசர் இறுமாப்புடன் இப்படிச் சொல்லுவார்.


"நாம் யார்க்கும் குடிஅல்லோம், நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
நாமார்க்கும் குடிஅல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழைஓர் காதிற்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே"
(மறுமாற்றத் திருத்தாண்டகம் 1)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:28 pm

பிறிதோரிடத்தில் சொல்கிறார்-


"திண்ணன் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை"



மேலும் செல்வந்தர்களது செல்வச் செழிப்பை மதிக்க மாட்டோம் என முழங்குகிறார்:


"சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வான்ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்"



திருநாவுக்கரசரின் மேற்கூறப்பட்ட பாடல்களுக்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் இருப்பதாகச்சொல்லப்படுகிறது.


பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 610-630) நாவுக்கரசரின் சமகாலத்தவன்.சமணம் தமிழகத்தில் வளரப் பல்லவர்கள் பேராதரவு நல்கியிருக்கிறார்கள். மகேந்திரவர்மன் சமண சமயத்தவனாக ஆரம்பத்தில் இருந்தவன். இதனால் சைவ சமயத்துக்கு பகையாக இருந்தான்.


வயிற்றுவலியால் வாடிய நாவுக்கரசர் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாறியபோது சமணர்கள் ஆத்திரம் அடைந்தார்கள். அவர்களின் தூண்டுதலின் பேரில் மகேந்திரவர்மன் நாவுக்கரசரை கைது செய்து பிடித்து வருமாறு தனது காவலர்களை ஏவினான். காவலர்கள் மன்னன் பணிப்பில் விரைந்து ஏகி நாவுக்கரசரைக் கைதுசெய்ய வந்திருப்பதாகக் கூறியபோதே நாவுக்கரசர் இந்தப் பாடலைப் பாடியதாகச் சொல்லப்படுகிறது.


நாவுக்கரசரை கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சியும், நீற்றறையிலே இட்டும் தோல்விகண்ட மகேந்திரவர்மனே மனம்மாறி சைவ சமயத்தைத் தழுவிக் கொண்டான் என்பது வரலாறு.


உள்ளத்தில் உள்ளொளி இல்லாமல் புறச் சடங்குகள் மூலம் இறைவனைக் காணலாம் என எண்ணிக் கங்கையில், காவிரியில் மூழ்கி எழுந்து வேதம் ஓதி வேள்விகள் செய்து காலத்தைக் கழிப்பவரைப் பார்த்து அவற்றால் எந்தப் பயனும் இல்லை என நாவுக்கரசர் இடித்துரைக்கிறார்.


"கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஓங்கு மாகட லோத நீ ராடிலென்
எங்கும் ஈசனெ னாதவர்க் கில்லையே!"




"வேத மோதிலென் வேள்விகள் செய்கினென்
நீதி நூல்பல நித்தம் பயிற்றிவென்
ஓதி அங்கமோ ராறு முணரிலென்
ஈச னையுள்கு வார்க்கன்றி யில்லையே!"
(தனித்திருக் குறுந்தொகை)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:30 pm

இந்த நாவுக்கரசர்தான் "தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்" என்று இறைவனிடம் தன்னை வருத்திய பொல்லா சூலநோயை குணமாக்குமாறு கேட்கும்போது சொல்கிறார்.


"சலம்பூவோடு தூபமறந் தறியேன்
தமிழோ டிசைபாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலு முன்னை மறந்தறியேன்
உன்னாம மென்னாவின் மறந்தறியேன்
உலந்தார் தலையிற் பலிகொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்
அலந்தே னடியே னதிகைக்கெடில
வீரட்டானத் துறையம் மானே!
(திருமுறை)


தமிழ் உட்பட இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் தாய்மொழி சமஸ்கிருதம் என்ற மாயை நீண்ட காலமாக நிலவி வந்ததையும் அதனை முறியடித்து தமிழ் மொழிக்கும் ஆரியத்திற்கும் தொடர்பில்லை என்ற பேருண்மையை கல்டுவெலார் ஆராய்ந்து நிலைநிறுத்தினார் என்பதை முன்னர் கூறினோம்.


தமிழ் ஆரியத்திற்கு முற்பட்ட மொழி என்பது தமிழ்விடுதூது முதலிய நூல்களாலும் அறிந்து கொள்ளலாம்.


"செயற்கைப் பொருள்கள் செய்வான் வேண்டின்
இயற்கைப் பொருளின் றியக்கல் வேண்டும்
இயற்கைப்பொருள்க ளிலவேல்
செயற்கைப்பொருள்களு மிலவேயாகும்
படம் வேண்டின் பஞ்சுவேண்டும்
பஞ்சின்றேற் படமில்லை. அதுபோல்
செயற்கை யோசையினின் றியக்கல் வேண்டும்
இயற்கை யோசையிலவேல்
செயற்கையோசையு மிலவேயாகும்"


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:39 pm

"முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே"

ஒரு மொழியிலுள்ள சொற்களின் ஒலிகளை வரிவடிவில் எழுதுவதற்கு இன்றியமையாத கருவி எழுத்து. தமிழில் எழுத்துக்கும் ஒலிக்கும் ஒற்றுமை உண்டு. வேறு பல மொழிகளில் ஒலிக்கும் எழுத்துக்கும் ஒற்றுமையில்லாது இருக்கிறது.

இன்று உலக மொழி என்ற பெருமைக்குரிய ஆங்கில மொழியில் இந்த எழுத்து ஒலி ஒற்றுமை காணப்படவில்லை. இந்த ஒற்றுமையின்மை காரணமாக ஆங்கில மொழியைப் பேசுவதிலும் எழுதுவதிலும் அதில் புலமை எய்துவதிலும் பெரிய இடர்ப்பாடு நிலவுகிறது.

தென்னிலங்கையில் ஓர் ஆண்டு வாழ்ந்தால் சிங்கள மொழியைப் பேசக் கற்றுக் கொள்ளலாம். தில்லியில் ஓர் ஆண்டு வாழ்ந்தால் இந்தியைப் பேசக் கற்றுக் கொள்ளலாம். தமிழும் அவ்வாறே. ஆனால் ஆங்கிலம் பேசப்படும்; அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் ஆறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் ஆங்கில மொழியை சரியான உச்சரிப்போடு யாரும் பேச முடியாது. ஆங்கில மொழியை இளமையில் கல்லாது இடையில் கற்கத் தொடங்கியவர் அந்த மொழியை எத்தனை ஆண்டுகள் சென்றாலும் சரியான உச்சரிப்போடும் பேச முடியாது.

ஆங்கிலத்தில் எழுத்துக்கும் ஒலிப்புக்கும் வேறுபாடு இருப்பதுபோல (Colonel என்ற சொல் கேணல் என்று ஒலிப்பது) வடமொழியில் து:க்கம் என்றெழுதி துஹ்க்கம் என்று ஒலிக்கப்படுகிறது. அவ்வாறே அத:பரம் அதகபரம் என்றும், அந்த:கரணம் அந்தஹ்கரணம் என்றும் ஒலிக்கப்படுகின்றன,

மேலும் ப்ரஹ்ம என்றெழுதி ப்ரம்ஹ என்றொலிக்கப்படுகிறது. அவ்வாறே சிஹ்ம சிம்ஹ என்றும், வஹ்நி: வந்ஹி: என்றும் விஜ்ஞானம் விக்ஞானம் என்றும் ஒலிக்கப்படுகிறது.

இலக்கணத்தை எடுத்துக் கொண்டால் தமிழ்மொழியில் எல்லாப் பொருள்களும் இரண்டு திணைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன.

பகுத்தறிவுடைய உயிர்கள் யாவும் உயர்திணையாகப் பகுக்கப்பட்டு, உயர்திணையில் ஆணுக்கு ஆண்பாலும் பெண்ணுக்கு பெண்பாலும். பலருக்கு பலர்பாலும் சூட்டப்பட்டுள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:40 pm

(1)

பகுத்தறிவற்ற விலங்கு, பறவை, நீர் வாழ்வன முதலிய உயிர்களையும், மரம், செடி, கொடி, கல், மண் முதலிய சடப்பொருள்களையும் அஃறிணையாகப் பகுத்து அவற்றுள் ஒன்றுக்கு ஒன்றன்பாலும், பலவற்றுக்குப் பலவின்பாலும் கூறப்பட்டுள்ளன.

தமிழில் விலங்கு. பறவை, ஊர்வன இவற்றின் ஆண் பெண்களுக்கு வெவ்வேறு பெயர் கூறப்படினும், அவைகள் பகுத்தறிவற்ற "சாதி"யிற் பட்டனவாதலால் அஃறிணையாகவே கூறப்படுகின்றன.

ஆங்கிலம் போன்ற மொழிகளில் உயர்திணை அஃறிணை என்ற வேற்றுமை பாராட்டப்படுவதில்லை. உயிருள்ளவை பகுத்தறிவு, பகுத்தறிவற்ற பாகுபாடு காட்டப்படாது ஆண் பெண் பால் வேற்றுமை மட்டும் காட்டப்படுகிறது. உயிரல்லாத பொருள்களுக்கு பால் கிடையாது. பிரன்சுமொழி இதற்கு விதிவிலக்கு. பிரன்சு மொழியில் சடப்பொருள்களுக்கும் ஆண்பால் பெண்பால் வகுக்கப்பட்டுள்ளது.

ஆங்கில மொழியில் பெயர்கள் மூன்று பால்களாக வகுக்கப்படுகிறது. அரசன், மனிதன், எருது, சேவல் ஆண்பால் (Masculine gender).

பகுத்தறிவின் அடிப்படையில் உயர்திணை அஃறிணை வேறுபாடு ஆங்கிலத்தில் இல்லாததால் "மனிதன் வந்தான்" "மாடு வந்தது" என்பதற்குப் பதில் மனிதன் வந்தது, மாடு வந்தது என்று எழுதப்படும்.

அரசி, பெண், பசுமாடு, பெட்டைக் கோழி பெண்பால் (Feminine gender) மரம், செடி, கொடி, புத்தகம், வீடு அஃறிணைப் பால் (Nueter gender).

சில சொற்கள் ஆண்பாலாகவும் பெண்பாலாகவும் வழக்கில் இருக்கும். அவற்றை பொதுப் பால் (Common gender) என வகைப்படுத்தப்படும்.

வடமொழியில் பால் வரம்பின்றிப் பலவாறு கூறப்படுகிறது. எடுத்துக்காட்டு மனைவி பெயர் பார்யா- பெண்பால் (ஒருமை). தாரா - ஆண்பால் (என்றும் பன்மை) களத்தரம் - ஒன்றன்பால்.

கல்லின் பெயர் பாஷாண - ஆண்பால். சிலா - பெண்பால். உபலம் - ஒன்றன்பால்.

தமிழ்மொழியில் வினைச் சொல் ஒருவன், ஒருத்தி, ஒன்றன் செயல்களைக் குறிக்குஞ் சொல் தெளிவாகக் குறிக்கப்படுகிறது.


ஒரு வாக்கியம் என்பது எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்பன கூடி ஒரு கருத்தை விளக்குவது. பெயர் வினைகளின் இயலை உரிச்சொற்களாலும், பல பெயர்களை இடைச் சொற்களாலும், பல வினைகளை எச்சத்தானும், பெயர்க்கும் வினைக்கும் உள்ள சம்பந்தத்தை வேற்றுமை உருபாலும் புணர்த்தி தமிழில் விளக்கப்படுகிறது. ஆங்கிலத்திலும் தமிழ் போலவே சொற்றொடர் அமைந்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:41 pm

ஆனால் வடமொழி, இலத்தீன், கிரேக்க முதிலிய மொழிகளில் இந்த ஒழுங்கு இல்லை. பெயர்களின் வேற்றுமைப் பால்களை ஏற்றல், இடைச்சொல் இன்றிக் கூறல் முதலிய அழகின்மை காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு-

தமிழ் - கரிய பெரிய குயிலை வஞ்சகமுடைய காக்கையாக எண்ணினான்.

வடமொழி - "க்ருஷ்ணம் ப்ரஹந்தம் வஞ்சகி நம் காகம் பேனோ"
கரியதை பெரியதை குயிலை வஞ்சகமுடையதை காக்கையை எண்ணினான்.

இதுகாறும் கூறியவற்றால் "வடமொழியிலும் தமிழ்மொழி வியாபகமுடைய தென்பதும், ஆரியம் வருமுன் சகமுழுதும் தமிழிருந்தெதென்பதும், ஆரியத்திற்கு முன்னேயே தமிழ்திருத்துபாடுள்ள தென்பதும், தமிழ்ச் சொல்லில் பொருட்பொதிவுள்ளது என்பதும், தமிழ் திணை பால் முதலியவற்றால் சிறந்ததென்பதும், தமிழ் ஒலியும் எழுத்தும் ஒன்றுபட்டுள்ளது என்பதும், வடமொழி முதலியவற்றினும் தமிழ்ச் சொற்றொடர் அழகுடையது என்பதும், பிறவும் பெறப்பட்டன" எனத் தமிழ்ப் பண்டிதர் மாகறல். கார்த்திகேய (முதலியார்) தாம் இயற்றிய "மொழிநூல்" என்ற நூலில் விளக்கியுள்ளார்.

தமிழ்மொழியின் சிறப்பு இனிமை மட்டுமல்ல தொன்மையும் அதன் சிறப்பாகும். தொல்காப்பியர் இதனை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

(2)

"இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்
பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும்
தோல் என மொழிப தொன்மொழிப்புலவர்"


(தொல். பொருள் அதிகாரம். செய்யுளியல் 236)


(பொருள்) ஓசை மிகுந்த சொற்களால் வாழ்க்கைக்குரிய உண்மைப் பொருள்களை, ஆசிரியப்பா போன்ற பாக்களாலும் இணைத்துக் கூறுவது தோல் என்று கூறப்படும் எனப் பழைமையை உணர்ந்த புலவர்கள் கூறுவர்.


தொல்காப்பியருக்கு முன்னும் செந்தமிழில் தோலென்னும் பழமை அழகு இருந்தது என்பது இச் சூத்திரத்தால் புலனாகிறது. இஃது தமிழ்மொழியின் தொன்மைக்கு சான்றாகும், அதாவது தமிழ்மொழியின் பழமை தொல்காப்பியத்திற்கும், அகத்தியத்துக்கும் முந்தியதாகும்.


சந்தத் தமிழில் வாய் மணக்க மணக்கத் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் முருகக் கடவுளிடம் "சும்மாஇரு சொல்லற" என்ற மவுன மந்திர உபதேசம் பெற்று நிறுவிகற்ப சமாதியில் வீற்றிருந்த போது முழு முதற்கடவுள் மயில்மிசை தோன்றி "நம் புகழைப் பாடுதி" என்று கேட்க "பெருமானே! மறைகளாலும் சாற்றுதற்கரிய தேவரீரது புகழை "ஏடெழுதா முழு ஏழை" யாகிய அடியேன் எங்ஙனம் பாடுவேன்" என்னலும் சுந்தரருக்கு "பித்தா பிறைசூடி" என்று முக்கண்ணன் முதலடி எடுத்துக் கொடுத்து "பாடுக" என்று அருளியதுபோல செந்தமிழ் செவ்வேட் குமரன் தனது "ஞானமூறு செங்கனிவாய்" மலர்ந்து கனத்த செந்தமிழால் "முத்தைத் தரு" என்ற மதுர மிகுந்த சொற்றொடர் எடுத்துக் கொடுக்க அருணகிரிநாதர்-

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:42 pm

(3)

"முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்திக் குருபரன் எனவோதும்

.........................................................................."



எனத் தொடங்கி தனது முதற் திருப்புகழைப் பாடி முடித்தார் எனத் திருமுருக கிருபானனந்தவாரியார் உரை கூறுவார். திருப்புகழ் கடவுள் வாழ்த்தில் அருணகிரிநாதர்-


"முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடி செய்த ............


எனக் குறிப்பிடுகிறார். முத்தமிழடைவு என்பது எல்லா மொழிகளுக்கும் முற்படுமாறு இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை அகத்தியர் கூற விநாயகர் எழுதினார் என்பது கர்னபரம்பரை.

"முத்தமி ழடவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே" என்பதால் ஆரியத்துக்கு முன்னமேயே தமிழுண்டென்பது அருணகிரிநாதர் முடிவாகும். மேலும்-

"பரிவுடன ழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சிலவகை - பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதியகணபதி - யிளையோனே"


(திருப்புகழ் 223)

"அறத்தை வளர்த்திடு பரசிவைகுலவதி
திறத்தமிழைத்தரு பழையவளருளிய - சிறியோனே"




"அமரு மிடனனலெனு மொருவடிவுடை
யவனிலுரையவன் முதுதமிழுடையவன்
அரியொடயனுல கரியவனடநவில் - சிவன் வாழ்வே"


(திருப்புகழ் 278)

"முதியமாதமி ழிசையதாகவே - மொழிசெய்தே
நினைந் திடுமாறு"

(திருப்புகழ் 536)

என அருணகிரிநாதர் அருளியிருக்கிறார். அருணகிரிநாதர் "முற்பட எழுதிய முதல்வோன், பழமொழி, பழையவள், முதுதமிழ்,, முதியமாதமிழ்" என அருள்வதால் தமிழ் வடமொழிக்கும் முற்பட்டதெனத் தெளியப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:49 pm

"முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி"

வடமொழி தேவபாஷை, தமிழ் மொழி நீஷபாசை எனவே தமிழ் அர்ச்சனை மொழியாக இருக்கத் தகுதியற்றது என்று தமிழ்ப் பகைவர்கள் மொழிகின்றனர். இந்தத் தமிழ்ப் பகைவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. சனாதன தர்மத்தின் (இந்து) பாதுகாவலர் என்று கருதப்படும் காஞ்சி காமகோடிபீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் "மதியம் பன்னிரண்டெரை மணிக்கு சந்திர மவுலீஸ்வரர் பூசை நடக்கிறது. அதுவரை சுவாமிகள் நீஷையில் பேசமாட்டார்" என்கிறார் அவரது உதவியாளர்.

ஆனால் தமிழ் மணக்கும் திருப்புகழை வாய் மணக்கப் பாடிய அருணகிரிநாதர்-

"கொன்றைச் சடையார்க் கொன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழாற் பகர்வோனே"
(திருப்புகழ் 137)

என கொன்றைப் பூவை சடையில் சூட்டிக் கொள்ளும் சிவபெருமானுக்கு கொஞ்சித் தமிழால் முருகன் பகர்வதால் தமிழ்தான் கடவுண்மொழி என்கிறார்.

கடவுதல் - செலுத்துதல், உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் இறைவனும் நின்று செலுத்துவதனால் இறைவன் கடவுள் எனப்பட்டனன்.

"செலுத்துதல் என்னுஞ் சொல்லே கடவுதல் எனச்செந் நூல்கள்
பலத்துடன் உரைக்கு மாற்றால் பசுக்களின் உளத்தே நின்று
செலுத்துள மாங்குகற்குக் கடவுளென் திருப்பேர் ஒன்றெத்
தலத்தரும் இறும்பூ தெய்தத் தமிழினில் ஏய்ந்ததாமே"
(பாம்பன் சுவாமிகள்)

தமிழ் மிகச் சிறந்த கடவுள் மொழியாகும். தோன்றித் தோன்றி மறையும் ஏனைய மொழிகள் போன்றதன்று. என்றைக்கும் இளமையாகவே விளங்கி எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் உவட்டா இன்பத்தை ஊட்டவல்லது.

"ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிழமைத் திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே"


எனத் தமிழன் பள்ளியெழுச்சிப் பாடகர் பேராசிரியர் சுந்தரனார் தாம் பாடிய மனோன்மணீயத் தமிழ்த் தெய்வ வணக்கத்தில் தமிழின் சீரிழைமைத் திறத்தை வியந்துரைக்கிறார்.

பாண்டி நாட்டின் தலைநகரான தென்மதுரையில் முதல் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டது. அதில் "அகத்தியனாரும், குன்றமெரித்த விரிசடைக் கடவுளும், கூர்மையுடைய வேலினால் கிரவுஞ்சமலையைப் பிளந்த முருகவேளும், முரஞ்சியூர் முடி நாகராயரும் நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐந்னூற்று நாற்பத்தொன்பர் பாடினர், அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பது புலவர்கள் தமிழராய்ந்தனர் என இறையனார் களவியல் உரையாசிரியர் நக்கீரனார் (பெரும்பாலும் 11 அல்லது 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்) தெரிவிக்கின்றார்.

இஃது செவி வழிக் கதையென்றாலும் முப்புரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகனும் உடனிருந்து தமிழ் ஆராய்ந்தனர் என்று சொல்லப்படுவது தமிழ் கடவுண்மொழி என்று சிறப்பித்துக் கூறதல் வேண்டியே. தமிழ்ச் சங்கம் பற்றிய வரலாற்றைப் பின்னர் விரிவாக எழுதுவோம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக