புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10 
66 Posts - 76%
heezulia
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10 
231 Posts - 76%
heezulia
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10 
8 Posts - 3%
prajai
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
nahoor
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 9:22 pm

First topic message reminder :

மாலை நேரம். வீட்டு வாயிலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே... முன் அறையில் தாத்தா ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அதிலேயே மூழ்கிப் போயி ருந்த அவரது கவனத்தை, ‘லொட்டு...புட்டு’ என்று ஏதோ சத்தம் திசை திருப்பியது. நிமிர்ந்த தாத்தாவை, முறைத்துப் பார்த்தபடி உள்ளே நுழைந்தான் பேரன்.

புத்தகத்தை மூடி வைத்த தாத்தா, ‘‘காலைக் கழுவிட்டு உள்ளே வா!’’ என்றார் சற்றுக் கறாராக.

‘‘செருப்பு போட்டுக்கிட்டுத்தானே போனேன். வெறுங் காலோடவா போனேன்?’’ என்று முணுமுணுத்தபடியே கால்களைக் கழுவிக் கொண்டு தாத்தாவை நெருங்கினான் பேரன். வெளியில் சுற்றிவிட்டு வந்ததனால் உண்டான வியர்வையும் அடங்கவில்லை; தாத்தாவின் கறார் வார்த்தைகளால் உண்டான வருத்தமும் அடங்கவில்லை அவனுக்கு.

குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு வந்து, மகனிடம் நீட்டினாள் தாயார்.

‘‘கொஞ்ச நேரம் கழிச்சுக் குடி!’’ என்றார் தாத்தா.

கோபம் பொத்துக் கொண்டு வந்தது பேரனுக்கு.

‘‘பிராணனை வாங்கறியே தாத்தா! உன் காலத்து சமாசாரத்தை எல்லாம் இந்தக் காலத்துல யார் சீண்டுறா? விஞ்ஞானம் எங்கேயோ போய்க்கிட்டிருக்கு. இந்தக் காலத்துல போய்.... உதவாததையெல்லாம் சொல்லிக்கிட்டு...’’ என்று வெடித்தான் பேரன்.

சிரித்தார் தாத்தா. ‘‘உதவாதது எதையும் நம்ம முன்னோர்கள் சொல்லிட்டுப் போகலை. என்ன சொன்னே? விஞ்ஞான வளர்ச்சியா, ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ! அணுவைப் பற்றின சிந்தனைகூடத் தோணாத அந்தக் காலத்துலேயே விஞ்ஞான உண்மைகளை சொன்னவங்க நம்ம பெரியவங்க. அதைப் பத்தி விளக்கமா சொன்னா தான் உனக்குப் புரியும். இந்தா, அதுக்கு முன்னாடி இப்ப தண்ணீரைக் குடி!’’ என்றபடி தண்ணீரை பேரனிடம் நீட்டினார் தாத்தா.

‘இந்தத் தாத்தா பொய் சொல்றாரா? அல்லது ஏதாவது உண்மை இருக்குமா?’ என்ற குழப்பத்துடன் தண்ணீரை வாங்கிக் குடித்த பேரன், ‘‘என்ன தாத்தா சொல்றே? நம்ம பெரியவங்க... விஞ்ஞான உண்மை... அது இதுன்னு என்னென்னவோ சொல்றே? இதெல்லாம் உண்மையா?’’ என்றான்.

தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘‘நான் சொல்றேன். நீயே தீர்மானிச்சுக்கோ! அணுவைப் பற்றி மேல் நாட்டுக்காரங்க யாரும் யோசிக்காத அந்தக் காலத்துலேயே அதுபத்தின விஷயங்களை நம்ம பெரியவங்க விளக்கமா சொல்லியிருக்காங்க தெரியுமா? கம்பராமாயணத்துலயும் இதுபத்தி ஒரு தகவல் உண்டு. யுத்த காண்டத்துல, ராவணனுக்கு விபீஷணன் யோசனை சொல்றான். அப்ப அவன் ஹிரண்யகசிபுவை பத்திச் சொல்றதைப் படிக்கிறேன், கேளு...

‘எங்கே இருக்கிறான் உன் இறைவன்?’ என்று தன் மகனைப் பார்த்துச் சீறினான் ஹிரண்யகசிபு. பிரஹ்லாதன் பதில் சொன்னான்: ‘சாணிலும் உளன். ஒரு தன்மை அணுவினை சத கூறு இட்ட கோணிலும் உளன்!’

‘அணுவுக்குள் அணுவாக இறைவன் இருக்கிறான்’ என்பதைச் சொல்ற இந்த இடத்துல, அணுவை நூறு(சத) கூறுகளாகச் செய்து, அதில் ஒரு சதவிகித அணுவை ‘கோண்’ என்று, கம்பராமாயணம் குறிப்பிடுது’’ என்ற தாத்தா சற்று நிறுத்தினார்.

பேரன் ஆச்சரியப்பட்டான்.

ஓரக்கண்ணால் அவனது வியப்பை ரசித்தபடி தாத்தா தொடர்ந்தார்: ‘‘பிளக்க முடியாததுன்னு சொல்லப்பட்ட அணுவைப் பிளந்து, ஒரு சதவிகித அணுவுக்கும் தமிழில் பெயர் வெச்சுட்டாங்க அந்தக் காலத்துலயே! ஆனால், எனக்குத் தெரிஞ்சு இன்னிக்கும் ஒரு சதவிகித அணுவுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படலை. சரி... மேலே சொல்றேன். கம்ப ராமாயணமே, அணுவின் செயல்பாட்டையும் சொல்றது.

போர்க்களத்தில் இந்திரஜித் இறந்து கிடக்கிறான். அவன் தாயார் மண்டோதரி அழுகிறாள். ‘தலை சிறந்த வீரனான உன்னை& இந்திரனையே வென்று இந்திர ஜித் என்று பெயர் பெற்ற உன்னைக் கொன்று விட்டார்களே! அணு ஆயு தத்தை ஏவ, அது ஓடிவந்து வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கியது போல் இருக்கிறது’ என்கிறாள்.

அந்த வரி: உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!

எங்கோ ஓரிடத்தில் சுவிட்சை அழுத்தியதும் அணு ஆயுதம் சீறிக் கிளம்பும். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கறது. இதைத் தான் கம்ப ராமாயணம், ‘உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!’னு சொல்றது!’’ தாத்தா சற்று நிறுத்தினார்.

பேரன் பெருமூச்சு விட்டான்!

தாத்தா தொடர்ந்தார்: ‘‘இப்போ கால் கழுவுற விஷயத்தைச் சொல்றேன். கவனமா கேள்! நின்றாலும் நடந்தாலும் உட்கார்ந்தாலும் நம்ம கால் மட்டும்தான் தரையில் பட்டுக்கிட்டிருக்கும். இப்படிக் கண்ட இடத்துலயும் அலையுற கால்கள்ல ஏராளமான கிருமிகள் ஒட்டிக்கிட்டிருக்கும். கால் கழுவாம இருந்தா அவ்வளவு கிருமிகளும் கால் களில் உள்ள நகக் கண் வழியா உள்ளே புகுந்து வியாதியை உண்டாக்கும். அதனாலதான் நம்ம பெரியவங்க காலைக் கழுவிட்டு உள்ளே வரச் சொன்னாங்க.

என்னதான் கழுவினாலும் ஒன்றிரண்டு கிருமிகள் கால்களில் ஒட்டிக் கிட்டிருந்தா, என்ன செய்யுறது?

அதுக்காகவே வீட்டு வாசப் படியில் மஞ்சள் பொடியைக் குழைத் துப் பூசி வெப்பாங்க. காலைக் கழுவிட்டு மஞ்சள் பூசின வாசப்படி வழியா உள்ளே நுழைஞ்சா, காலில் மிச்ச மீதி இருக்கும் கிருமிகளும் அழிஞ்சு போயிடுமாம். தலை சிறந்த கிருமி நாசினி மஞ்சள் என்பதை தெரிஞ்சதாலதான் நம்ம பெரியவங்க அப்படி செஞ்சாங்க. இதே போல சாப்பிடறதுக்கு முன் னாலயும் சாப்பிட்ட பிறகும் கால் கழுவறதும் நல்லது. இதனால ஜீரண உறுப்புகள் பலப்படும். ஜீரண சக்தி அதிகரிக்கும். புரிஞ்சுதா?’’ என்றார் தாத்தா.

பிரமிப்பில் இருந்த பேரன் வாயைத் திறந்தான். ‘‘புரிஞ்சுது தாத்தா... புரிஞ்சுது! இதையெல்லாம் உணர்ந்து ஃபாலோ பண்றதாலதான், உங்களை மாதிரி பெரியவங்க வயசானாலும் கரும்பைக் கடிச்சு சாப்பிடுறீங்க. நாங்களோ...’’ என்ற பேரனை இடைமறித்த தாத்தா, ‘‘கரும்பையே ஜூஸாகக் கேட்கறீங்க!’’ என்றார் கலகல சிரிப்புடன்.

‘‘அது போகட்டும் தாத்தா! நான் வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும், அம்மா தந்த தண்ணீரைக் குடிக்க விடாம, அப்புறமா குடிக்கலாம்னு சொன்னீங்களே, அது ஏன்? சொல்லுங்க!’’ என்றான்.

‘‘இதற்கு உண்டான பதிலைப் பெரிய புராணம் சொல்றது. அதையும் சொல் றேன்’’ என்றார் தாத்தா.

‘‘சேக்கிழார் எழுதினதுதானே?’’ என் றான் பேரன்.

ஆச்சரியப்பட்டார் தாத்தா. ‘‘அடடே... சேக்கிழார் எழுதினதை எல்லாம் சரியாச் சொல்றியே... பரவாயில்லை!’’ எனப் பாராட்டினார்.

‘‘தாத்தா! இந்தக் காலத்துப் பசங்களான எங்களைப் பத்தி தப்பாவே நினைச்சுக்கிட்டிருக்கீங்க போல! கொஞ்சம் கொஞ்சமாவது எங்களுக்கும் தெரியும். மற்றதைத் தெரிஞ்சுக்கிற ஆர்வமும் இருக்கு! ஏற்கும்படி சொல்ல வேண்டியது அனுபவசாலியான பெரியவங்க கடமை! சரி... சரி! நான் கேட்டதுக்குப் பதிலைச் சொல்லுங்க. பாராட்டெல்லாம் அப்புறமா வெச்சுக்கலாம்’’ என்று ஆர்வத்துடன் கேட்டான் பேரன்.

தாத்தா சொன்ன பதில், அடுத்த விஞ் ஞான ஆச்சரியம்!



சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்


மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 29, 2010 2:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Mசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Oசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Hசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Aசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 29, 2010 7:12 pm

பத்து நாள் உற்சவம் ஏன்?

கோயிலில் பேசுவதற்காக, தகவல்கள் கேட்டு சென்ற டீன்ஏஜ் பையன், அவசரமாகத் தாத்தாவைத் தேடி வந்தான். ‘‘என்னடா? திருப்பி ஓடியாந்துருக்கே? யாரேனும் ஏதாச்சும் சொன்னாங்களா?’’ என்று கேட்டார் தாத்தா.

‘‘ஆமாம் தாத்தா! கோயில் அதிகாரி புடிச்சுக்கிட்டாரு. ‘நம்ம கோயில்ல பத்து நாள் உற்சவம் நடக்கப் போவுது. உற்சவம் நடத்துறது எதுக்குங்கிறதையெல்லாம் கேட்டுட்டு வந்து, நாளைக்கு நீயே சொல்லு. நேரத்தப் பாக்காத. முன்னப்பின்ன அட்ஜஸ்ட் பண்ணி நேரம் ஒதுக்கறேன்’னு ஏவி விட்டாரு. கோயில் அதிகாரிக்குத் தெரியல போலிருக்கு தாத்தா. அதான், வந்தேன்.’’ என்று சலித்துக் கொண்டான் டீன்ஏஜ் பையன்.

அவனை ஏற இறங்கப் பார்த்தார் தாத்தா. ‘‘ஏண்டா... பொடிப் பயலே! முந்தா நாள் மொளச்ச நீ, கோயில் அதிகாரியைக் கிண்டலடிக்கிறயா? அவ ரைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அந்த மனுஷனுக்கு, ஆகமங்கள் பத்தியும் கோயில்கள் பத்தியும் நல்லாவே தெரியும்!’’ என்றார்.

‘‘அப்புறம் எதுக்கு தாத்தா அவர் அப்பிடிச் சொன்னாரு?’’ என்றான் டீன்ஏஜ் பையன்.

‘‘யாக உற்சவ ஏற்பாடுகள்ல மும்முரமா இருக்கார் அந்த அதிகாரி. அவருக்கு இதுக்கெல்லாம் நேரமில்ல. அதனால உன்னை அனுப்பி வெச்சிருக்கார். நீ நெனக்கற மாதிரி இல்ல. உதாரணமா, பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தும்போது டீச்சரம்மா, ‘நாலும் மூணும் எவ்வளவு?’னு கேப்பாங்க. ‘ஐயே... இதுகூட டீச்சருக்குத் தெரீல. நம்மகிட்ட கேக்கறாங்க பாரு!’னு சொன்னா எப்பிடி? அந்த மாதிரிதான் இதுவும். பிறத் தியார்கிட்ட குத்தம் கண்டுபிடிக்கிறதிலேயே குறியா இருக்கக் கூடாது. தெரியுதா?’’ என்றார் தாத்தா.

‘‘ஸாரி தாத்தா!’’ டீன் ஏஜ் பையன்.

தாத்தா உற்சவத்தைப் பற்றி விளக்க ஆரம்பித் தார்: ‘‘கோயிலுக்கு வர முடியாதவங்க, வயசான வங்க, சின்னக் கொழந்தைங்க, நோயாளிங்க, நெற மாச கர்ப்பிணிகள் இப்படிப்பட்டவங்களுக்கு எல்லாம் தெய்வ அனுக்கிரகம் கெடைக்கணும்கிறதுக் காகவே சாமி திருவீதி உலா வர்றார்’னு சொல்வார் வாரியார் சுவாமிகள்!’’ .

டீன்ஏஜ் பையன் முகம் பிரகாசமானது. ‘‘ரொம்ப எளிமையா சொல்லியிருக்காரு வாரியார் சாமி. இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம்! உற்சவ மூர்த்திய, கல்லுல செய்யாம, செப்புல செஞ்சு வெச்சுருக்காங்களே... ஏன் தாத்தா?’’

தாத்தா சிலிர்த்தார். ‘‘நல்ல கேள்வி. இதுக்கும் வாரி யார் சுவாமி பதில் சொல்லி இருக்காரு. மின்சாரத்தை நாம அனுபவிக்க, ஒயரிங்னு சொல்லி இழுத்துட்டுப் போறோமில்ல. அந்த ஒயருக்குள்ள என்ன கல்லுக் கம்பியா இருக்குது; செப்புக் கம்பிதானே இருக்குது. சுலபமா, சீக்கிரமா மின்சாரம் பாயறதுக்காக செப்புக் கம்பிய வெச்ச மாதிரி, மின்சாரம் கண்டுபிடிக்காத அந்தக் காலத்துலியே சாமியோட சக்திய நாம சுலபமா அடையறதுக்காக செப்பு விக்கிர கமா, உற்சவமூர்த்திய வெச்சாங்கனு சொல்வார் வாரியார். வா! இதயே இப்ப நீ கேட்ட மாதிரி, பத்து நாள் உற்சவமா விரிவா பாக்கலாம். பத்து நாள் மகோத்சவத்துல முதல் நாள் விழா, ஸ்தூல உடம்பான நம்ம உடம்பு மேல இருக்கற பற்றுதலை நீக்கணும்ங்கறதுக்காக. இரண்டாம் நாள் விழா, நம்ம உடம்பு (பிறப்பு) அது உண்டாகக் காரணமாயிருக்குற சூட்சும உடம்பு இந்த ரெண்டுமே போகணும்ங்கறதுக்காக...’’ என்றார் தாத்தா.

‘‘ஸ்தூல உடம்புனா தெரியும். சூட்சும உடம்புனு சொல்றீங்களே, அது எப்படி?’’ பையன் கேட்டான்.

‘‘புரியும்படி சொல்றேன். பஸ், கார்ல எல்லாம் இருக்குமே...டயர்! அது நம்ம பார்வைக்குத் தெரியும். அத ஸ்தூல உடம்புனு வெச்சுக்க. டயருக்குள்ள இருக்கும் டியூபு நம்ம பார்வைக்குத் தெரியாது. அதை சூட்சும உடம்புனு வெச்சுக்க!’’

‘‘பின்னிட்டீங்க தாத்தா!’’ டீன் ஏஜ் பையன்.

‘‘இப்ப மூணாவது நாள் உற்சவத்தப் பாக்கலாம். மனம், வாக்கு, உடம்புங்கற மூணு சமாசாரங்கள்னாலயும் நாம செஞ்ச கெட்டதெல்லாம் போகணுங் கிறதுக்காக. அதாவது ஆசை, கோபம், அறியாமை இந்த மூணும் போகணுங்கிறதுக்காக மூணாவது நாள் உற்சவம். நாலாவது நாள் உற்சவம் மனம், புத்தி, அகங்காரம், சித்தம்ங்கற நாலும் நீங்கறதுக்காக. நாலு வகை பிறவிகள்லயும் நாம மாட்டிக்கக் கூடாதுங்கறதுக்காக!’’

‘‘நாலு வகையான பிறவிங்கிறது என்ன தாத்தா?’’

‘‘முதல் வகை: அண்டஜம். அதாவது முட்டையிலேர்ந்து பிறக்கிறது எல்லாம் ஒரு வகை. பாம்பு, தவளை, முதலை, ஆமை, மீன், பறவை மாதிரியானவை இதுல அடங்கும். இரண்டாவது வகை ச்வேதஜம். இது, வேர்வையில இருந்து உண்டாவது: கிருமி, புழு, பேன், விட்டில் மாதிரி யானவை. மூணாவது வகை உத்பீஜம். விதை, வேர், கிழங்கு இதுல இருந்தெல்லாம் முளைப்பது. மரம், பூண்டு, செடி, கொடி போன்றவை. நாலாவது, ஜரா யுஜம் கருவிலிருந்து பிறப்பது. மனுஷங்க, நாலுகால் விலங்குங்க இதெல்லாம். இவைதான் நாலு வகைப் பிறவி. இது எதுலயும் நாம மாட்டிக்காம பொறக்காம இருக்கிறதுக்காகத்தான் நாலாவது நாள் உற்சவம். அஞ்சாவது நாள் உற்சவம்... ஐம்பொறிகளும் (கண், காது, மூக்கு, நாக்கு, உடம்பு) கண்ட பக்கம் போகும். அதுல நாம மாட்டிக்கக் கூடாதுங்கறதுக்காக. ஆறாவது நாள் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம்ங்கற ஆறு கெட்டதும் நீங்கறதுக்காக. இத நல்லா புரியும்படியா சொல் லணும்னா கண்டது மேல உள்ள ஆசை, கோபம் (பகை), கருமித்தனம், அறியாமை வசப்பட்டு ஆசையில மாட்டிட்டு மயங்கறது, காசு பணம் இதுனால எல்லாம் அகம்பாவம் புடிச்சு அலையிறது, அடுத்தவனக் கண்டு பொறாமை. இந்த ஆறு கெட்ட குணங்களும் போக ஆறாவது நாள் உற்சவம். ஏழாவது நாள் கொஞ்சம் முன்னால பாத் தோமே. நால் வகைப் பிறப்புனு. அதனால உண்டாகக் கூடிய பிறவிகள் ஏழு. தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர்னு ஏழு பிறவி. இந்தப் பிறவிங்கள்ல ஏதாவது ஒண்ணா நாம பிறக்கக் கூடாதுங்கறதுக்காக ஏழாம் நாள் உற்சவம்.

முற்றும் உணர்தல், எல்லையில்லா இன்பம் உடைமை, இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், தன் வயத்தனாதல் (கெட்டவற்றில் ஆசை கொண்டு ஈடுபடாமலிருப்பது), பேரருள் உடைமை, முடிவில்லாத ஆற்றல் உடைமை, இயற்கையாகவே மெய்ஞ்ஞானம் உடைமை, தூய உடம்பு உத்தமமான இந்த எட்டு வித குணங்களையும் நாம அடையணும்ங்கறதுக் காக எட்டாம் நாள் உற்சவம்.

ஒன்பதாம் நாள் உற்சவம்: மூணு உருவம், மூணு தொழில், மூணு எடத்துல இருக்கறது இந்த ஒன்பதும் இல்லாம போவறதுக்காக. மூணு உருவம்: உருவம் அரு உருவம் அருவம். மூணு தொழில்: படைத்தல் காத்தல் அழித்தல். அதாவது உடம்போட இருந்து போகங்களை அனுபவிக்கறது அதுலியே நெலயா நிக்கறது அதுல இருந்து மாறுதல அடையறது. மூணு இடம்: சாலோக, சாமீப, சாரூப என்னும் மூன்று விதமான முக்திகள். இந்த ஒன்பதும் கூடாதுங்கறதுக்காக ஒன்பதாம் நாள் உற்சவம். பத்தாம் நாள் உற்சவம்: அழி வில்லாத, எல்லையில்லாத பரமானந்த வெள்ளத்தில் நாம் முழுகுவதற்காக!’’ என்ற தாத்தா, ‘‘டீன்ஏஜ் பையா! பத்து நாள் உற்சவத்தை, சுருக்கமா சொன்னேன். அந்த தத்துவார்த்தத்தை நிதானமா நிறுத்திச் சொல்லு!

உற்சவ நிறைவு நாள் அன்னிக்கி நா(ன்) ஊர்லேர்ந்து திரும்பிடுவேன். அன்னிக்கு எம்பேச்சு இருக்கும். அதுல, மிச்சத்தையும் பாத் துக்கலாம்!’’ என்றார்.



சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 29, 2010 9:44 pm

நன்றிகள் பலப்பல சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 30, 2010 6:52 am

அருமை அருமை சிவா அண்ணா சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 677196 சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 677196 சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 677196 . எனக்கும் சுகி சிவம் அவருடைய பேச்சும் எழ்த்தும் ரொம்ப பிடிக்கும் சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 154550 .


இதுப்பூல் இன்னும் இர்ந்தாள் குடுங்க்கா அண்ணா புன்னகை சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 359383 .




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 9:20 am

லலிதா சகஸ்ரநாமமும் டேப் ரிக்கார்டரும்!

தாத்தா திருச்சி ரயில் நிலையத்தில் இறங்கி, மகளது வீட்டை அடைந் தார். மகள் வயிற்றுப் பேரனும் பேத்தியும், தாத்தா கையில் இருந்த மூட்டை முடிச்சுகளைப் பிடுங்காத குறையாக வாங்கி, ஓர் ஓரமாக வைத்துவிட்டுத் தாத்தாவை சோபாவில் உட்கார வைத்து, பக்கத்துக்கு ஒருவராக இருவரும் உட்கார்ந்தார்கள்.

மணக்க மணக்க ஃபில்டர் காபியை நீட்டிய மகள், ‘‘அப்பா... இந்தாங்க! இதக் குடிங்க! அலுத்து ஓஞ்சு போய் வந்துருப்பீங்க!’’ என்றாள். கூடவே குழந்தைகளைப் பார்த்து, ‘‘ஏய்! ரெண்டு பேரும் போங்க! தாத்தாவ தொந்தரவு பண்ணக் கூடாது. பள்ளிக்கூடத்துக்குக் கௌம்பற வழியப் பாருங்க!’’ எனக் கத்தினாள்.

குழந்தைகள் கிண்டல் செய்தன. ‘‘யம்மா! உங்க அப்பாவப் பாத்த உடனே ரொம்பத்தான் குதிக்காத! நாளைக்கு எங்க பள்ளிக்கூடத்தோட நாப்பத்தொன்பதாம் ஆண்டு விழா. அதுக்காக இன்னிக்கி லீவு. எங்க ஸ்கூல் கரெஸ்பாண் டெண்ட், பிரின்ஸிபால் எல்லாம் இன்னுங் கொஞ்ச நேரத்துல நம்ம வீட்டுக்கு வரப் போறாங்க. அவங்க எதிர்ல எங்களப் போட்டுக் காச்சாத!’’ என்றனர்.

தாத்தா காபியைக் குடித்து விட்டு டம்ளரை நீட்டினார். அதை வாங்கிய மகள் குழந்தைகளிடம், ‘‘எதுக்காக இப்ப பள்ளிக்கூடத்துல இருந்து பெரிய ஆளுங் கல்லாம் நம்ம வீட்டுக்கு வராங்க? டொனேஷனா?’’ எனக் கேட்டாள்.

‘‘அவங்க வந்தாத்தான் தெரியும்!’’ எனப் பளிச்சென்று பதில் சொன் னார்கள் குழந்தைகள்.

சற்று நேரத்தில் தாத்தா சாப்பிட்டு முடித்தார். அதற்காகவே காத்திருந் ததைப் போல, பள்ளிக்கூடத்தில் இருந்து பெரிய மனிதர்கள் வந்தார்கள். வந்ததும் நேரடியாகத் தாத்தாவிடம் பேசத் தொடங்கி விட்டார்கள்.

‘‘நமஸ்காரம். நேரடியா மேட்டருக்கே வந்துர்றோம். எங்க பள்ளிக்கூடம், நம்ம கலாசாரத்துக்குன்னே நடக்கற பள்ளிக்கூடம்னு உங்களுக்கே தெரியும். நம்ம பள்ளிக்கூடத்தோட பழைய மாணவர் நீங்க. நாளைக்கு ஆண்டு விழா. நீங்கதான் சிறப்புரை. பேரண்ட்ஸும், இளம் தலைமுறையுமா கலந்த மாதிரி இருக்கும். நீங்கதான் அதுக்குச் சரியான ஆளுனு உங்களக் கேக்காம உங்க பேரை சிறப்புரையில போட்டுட்டோம். நீங்க வரப் போற தகவல ஏற்கெனவே உங்க பேத்தி சொன்னது, வசதியா போச்சு!’’ என்றார்கள்.

தாத்தா முகம் மலர்ந்தார். ‘‘நான் படிச்ச பள்ளிக்கூடம். அங்க இருந்து எனக்கு அழைப்புன்னா, சாதாரண விஷயமா? பெருமைப்பட வேணாமா? கண்டிப்பா வர்றேன்!’’ என ஒப்புக் கொண்டார். மறு நாள்... பள்ளியில் ஆண்டு விழா தொடங்கியது. ‘முன்னாள் மாணவர் திரு. பட்டாபி நமது பண்பாட்டின் பெருமை பற்றிச் சிறப்புரை ஆற்றுவார்!’ என ஆங்காங்கே டிஜிட்டல் பேனர்கள் ஜொலித்தன.

தாத்தாவைப் பற்றிய அறிமுகப் படலம் முடிந்ததும் தாத்தா பேசத் தொடங்கினார். தனக்கும் பள்ளிக்கூடத்துக்கும் உள்ள தொடர்பை விவரித்து விட்டு, கலாசாரம் பற்றிப் பேசத் தொடங்கினார்.

‘‘கொழந்தைங்களுக்கு சின்ன வயசுல இருந்தே நல்லத சொல்லிக் குடுக்கணும். வீர சிவாஜி சின்ன வயசுல நம்ம இதிகாச புராணங்களயெல்லாம் கேட்டுக் கேட்டு, பெரிய வீரனா வந்தாருன்னு படிக்கிறோம். அந்த மாதிரி புள்ளைங்களுக்கு நல்லதச் சொல்லித் தரணும். அதுவும் இந்தக் காலத்துல கண்டிப்பா சொல்லிக் குடுத்துத்தான் ஆகணும்கற நெலமை. நல்ல படிப்பு, நல்ல சம்பாத்தியம். ஆனா அப்பா, அம்மா _ முதியோர் இல்லத் துல. இந்த மாதிரி நெலம வரக் கூடாதுனுதான், ராமாயணத் துல ச்ரவணகுமாரன் கதையச் சொல்லி வெச்சாங்க. கண்ணு தெரியாத அப்பா அம்மாவ காவடி மாதிரி கட்டி, தான் போகிற எடமெல்லாம் தூக்கிக் கிட்டுப் போய்த் தொண்டு செஞ்சான் ச்ரவணகுமாரன். பெத்தவங்களுக்குத் தண்ணி எடுத்துக்கிட்டுப் போறதுக்காக வந்த ச்ரவணகுமாரன், தசரத மகாராஜா போட்ட அம்புல அடிபட்டுக் கீழ சாஞ்சான். அப்பக்கூட அந்தப் பையன், ‘இந்தத் தண்ணிய, என்னப் பெத்தவங்க கிட்ட குடு! நான் அவங்களுக்கு நமஸ்காரம் பண்ணினேன்னு சொல்லு!’னு தசரதன்கிட்ட சொல்லி மூச்ச நிறுத்திட்டான். ராமாயணத்துல வர்ற இந்தக் கதை எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். இந்தக் கதைய நம்ம புள்ளங்களுக்குச் சொல்லிட்டு, சில விவரங்களயும் சொல்லணும்.

இந்தக் கதைல வர்ற பையன் பேரு ‘ச்ரவணகுமாரன்’. ‘ச்ரவணம்’ங்கற வார்த்தைக்குக் கேக்கறதுனு அர்த்தம். அப்பாஅம்மாவை தெய்வமா நெனச்சு அவங்க சொன்ன பேச்சக் கேட்டு, அவங்க மனம் கோணாம நடந்துக் கிட்டான் அந்தப் பையன். அதுனால அவன் ‘ச்ரவணன்’.

‘இந்த ச்ரவணகுமாரன் கதை என் வாழ்வில் பெரும் திருப்பத்தை உண்டு பண்ணியது; என்னைக் கவர்ந்தது!’னு மகாத்மா காந்தி சொல்லியிருக்கார். இன்னும் சொல்லப் போனா நம்ம கலாசாரம், பண்பாடு, ஞான நூல்கள்னு சொல்ற இதும்மேல எல்லாம் நம்மளவிட, அயல்நாட்டுக்காரங்களுக்குத்தான் ஆர்வம் அதிகமா இருக்கு. நடந்த நிகழ்ச்சி ஒண்ணு சொல்லப் போறேன்.

அம்பாளப் பத்தி ‘லலிதா சகஸ்ரநாமம்’னு ஒரு நூல். அத முறையான, தெளிவான உச்சரிப்போட இத்தன தடவை சொன்னா, இன்ன பலன்னு உண்டு. ஒரு இங்கிலீஷ்காரர், முறையான தெளிவான உச்சரிப்போட சில பேரை சொல்லச் சொல்லி, டேப் எடுத்தாரு. கேசட் ரிக்கார்டர் வராத காலம் அது. ஸ்பூல் டைப் டேப்புனு சொல்வோமே, பெரீசா வட்டமா இருக்கும். அதுல லலிதா சகஸ்ரநாமத்தை ஃபுல்லா டேப் எடுத்தாரு. அத எத்தனை தடவ சொல்லணுமோ அத்தனை தடவயும் திரும்பத் திரும்பப் போட்டாரு. கடைசி தடவ முடிஞ்சுது. டேப் ரிக்கார்டர் அப்படியே வெடிச்சு தூள் தூளா ஆயிடுச்சு.

கீழ கெடந்த தூளையெல்லாம் பாத்த இங்கிலீஷ்காரர் ஆச்சரியப் பட்டுப் போயிட் டாரு. காரணம்? கீழ கெடந்த தூள் எல்லாம் அப்பிடியே தெளிவா அம்பாள் வடிவத்துல, கையால வரைஞ்ச ஓவியம் மாதிரி இருந்துச்சு. லலிதா சகஸ்ரநாமத்தைச் சொன்ன ஜடப் பொருளான டேப் ரிக்கார்டரே, இப்படி அம்பாள் வடிவமா ஆகியிருக்குனா, மனுஷனான நாம சொன்னா... எப்படினு நெனச்சாரு. அவ்வளவுதான். நம்ம ஞான நூல்கள்ல தீவிரமா ஈடுபட ஆரம்பிச்சார். இப்பல்லாம் இங்கிலீஷ்காரங்கதான் நம்ம நூல்களத் தீவிரமா படிக்கறாங்க; தெரிஞ்சுக் கறாங்க. சரி! இப்ப சில பழக்க வழக்கங்களப் பாக்கலாம்.’’ என்ற தாத்தா, ‘‘சாப்பாட்டு இலய எப்பிடிப் போடணும்?’’ எனக் கேட்டார்.

உடனே, ‘‘நுனி இடக் கை பக்கமா இருக்கும்படியா போடணும்!’’ கூட்டத்தில் இருந்து குரல்கள் ஒலித்தன.

‘‘இது தப்புனு சேக்கிழார் சுவாமிகள் சொல்றார்!’’ என ஒரு விநாடி நிறுத்தினார் தாத்தா



சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 25, 2011 12:02 pm

அருமையான அறிவுரைத் தொடர்... மிக்க நன்றி சிவா.. முழுதும் பிறகு வாசிக்க வேண்டும். ..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jan 25, 2011 3:27 pm

அருமை அருமை சிவா அண்ணா சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 677196 சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 677196 சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 677196




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 25, 2011 4:06 pm

அருமை சிவா, தொடருங்கள்... காத்திருக்கிறோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 8:13 am


மொட்டை அடிப்பது ஏன்?


‘‘சாப்பிடறப்போ வாழை இலைய, நுனி இடக் கைப் பக்கமா இருக்கும் படியா போடணும்!’’ என்று கூட் டத்தில் இருந்து பதில் வந்ததும், தாத்தா அதை மறுத்தார்.

‘‘இது தப்புன்னு சேக்கிழார் ஸ்வாமிகள் சொல்றாரு!’’ என்றார். கூட்டம் முழுவதும் குழப்பத்தை முகத்தில் காட்டியது. அதைப் பார்த்தும், பார்க்காதவர் போலத் தொடர்ந்து பேசினார் தாத்தா: ‘ஈர்வாய் வலம் பெற வைத்து’னு பெரிய புராணத்துல, சேக்கிழார் சொல் றாரு. இப்ப நீங்க சொன்னதைதான் அவரும் சொல்றாரு. ஆனா, வேற விதமா சொல்றாரு. அதாவது நுனி இலய நாம நறுக்கறோமில்லையா, அந்த நறுக்கின பகுதி, வலக் கைப் பக்கமா வரணும்ங்கறாரு. ஏன் அப்படி? இடக்கைப் பக்கம்னு சொல்லக் கூடாது. ‘இடது’ங்கறது அமங்கலமான வார்த்தை. வலம் வர்றதுன்னு சொல்லுவோமே தவிர, இடம் வர்றதுனு சொல்ல மாட்டோம். இடம் வர்றது அமங்கலமான காரியத்துல தான். அமங்கலமான வார்த்தையைச் சொல்லக் கூடாதுங்கறதுனாலதான், நாம சொல்ற மாதிரி ‘நுனிய இடக் கைப் பக்கமா போடணும்’னு சொல்லாம, வேற மாதிரி மாத்திச் சொன்னாரு சேக்கிழார். மறந்து போய்க் கூட அமங்கலமா பேசக் கூடாது!’’ என்று தாத்தா சொல்லிக் கொண்டிருந்தபோதே, முன் வரிசையில் இருந்த ஒருவரின் செல் போன் வீரிட்டது. விழா நிர்வாகி அவசர அவசரமாக மைக்கில், ‘‘தயவுசெய்து அனைவரும் அவரவர் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யும்படி விழா கமிட்டியின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்...’’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

ஒரு சிலர் அப்படியே செய்தார்கள். அதை அனு சரித்தே பேச்சைத் தொடர்ந்தார் தாத்தா: ‘‘இப்ப உங்க செல்போன எடுத்துக்குங்க. அது தானாவா அடிக்குது? உங்க நம்பரை நீங்களா விருப்பப்பட்டுக் குடுத்தீங்க. வாங்கினவங்க உங்களத் தொடர்பு கொள்றாங்க. இதேதான் வாழ்க்கையிலேயும். நாம பண்ணுன நல்லது கெட்டது, ரிஃப்ளெக்ட் ஆகி, நமக்கே திருப்பி வருது. இதுல என்ன விசேஷம்னா... நல்லது- நிதானமா, லேட்டா வரும். கெட்டது அப்பவே, உடனடியா வரும். புரியும்படியா எளிமையா சொல்லணும்னா... ‘நாம குண்டாகணும், நமக்கு நெறய பலம் கெடைக் கணும்’னா டானிக் குடிக்கறோம். உடனே பலன் கெடைக்காது. நிதானமாத்தான் பவர் தெரியும். அதே விஷம்னா, உடனே தன்னோட வேலயக் காட்டிடும். அதனாலதான் அமங்கலமாப் பேசக் கூடாதுங்கறத நம்ம மனசுல பதிய வெக்கறதுக்காக சேக்கிழார் அப்படிச் சொன்னார். அடுத்ததா; துணிங்களத் தோச் சிட்டுப் பிழியும்போது, சில பேர் கால்ல பிழிஞ்சுக்குவாங்க. அப்படி செஞ்சா, துணியில இருக்கற அழுக்குங்க தண்ணியோட சேர்ந்து கால்ல போய், அங்க ஏற்கெனவே இருக்கற அழுக்குங்க கூடக் கூட்டணியா சேர்ந்துக்கும்.

அப்பறம் என்ன? அழுக்கோட அழுக்கு சேர்ந்து, தண்ணியுந்தான் இப்ப ஒத்தாசைக்கு இருக்கே, எல்லாக் கிருமிங்களும் உடம்புல பரவி வியாதியக் கொண்டாந்துடும்.

முக்காவாசி வியாதிங்க வர்றதுக்குக் காரணமே, நம்ம காலுங்களத் தூய்மையா வெச்சுக்காததால தான். அதுனால, துணிங்களத் தோச்சுப் பிழியும்போது, கால்ல வெச்சுப் பிழியக் கூடாதுனு பெரியவங்க சொன்னாங்க. அதோட, ராத்திரி, படுக்கும்போது காலை நல்லாக் கழுவிட்டு, ஈரம் போகத் தொடச்சிட்டுப் படுக்கணும்னாங்க. அதனாலதான் இவ்வளவு மருத்துவ வசதிங்க இல்லாத அந்தக் காலத்திலயும், ஆரோக்கியத்தோட இருந்தாங்க.

அடுத்தது; துணியத் தாண்டக் கூடாதுனு சொல்லி வெச்சுருக்காங்க. காரணம்? இறந்து போனவங்களுக்கு உண்டான காரியங்களச் செய்யும்போதுதான், துணியப் போட்டு மிதிக்கச் சொல்லுவாங்க (தாண்டச் சொல்லுவாங்க). அதுனாலதான், துணியத் தாண்டக் கூடாதுனு சொன்னாங்க. பெரியவங்க சொன்னதையோ அல்லது செஞ்சதையோ கேலி பேசறதுல எந்த லாபமும் இல்ல. முன்னோர்கள்லாம் இடுப்புல ஒரு கயிறு கட்டியிருப்பாங்க. அரணாக்கயிறு, அண்ணாக் கயிறுன்னு எல்லாம் சொல்லிக் கிண்டலடிப்போம். அத ஏன் செஞ்சாங்கன்னு நாம தெரிஞ்சுக்க வாணாமா? இடுப்புல அப்படிக் கயிறு கட்டிக்கிட்டு இருந்ததுனால, கிட்னி ப்ராப்ளம் மூத்திர கோசம்னெல்லாம் சொல்றோமே, அந்த வியாதிங்கள்லாம் அதிகமான அளவு வராம இருந்துச்சு.

அடுத்தது; பல பேரு அதிகமான அளவுல எகத்தாளமா பேசறது முடி இறக்கறதப் பத்தி; அதாவது மொட்ட அடிச்சுக்கறதப் பத்தி. ‘உசுரக் குடுத்த சாமிக்கி, முடியக் குடுக்கறியே, அது மறு படியும் வளரும்னுதானே! பக்தி இருந்தா எங்க உங்க சுண்டு வெரலக் குடுங்கடா! பார்ப்போம்’னு சினிமாவுலயே தமாஷ்ங்கற பேர்ல, குறிப்பா நம்ம கலாசாரத்தைக் கிண்டல் பண்ணி இருக்காங்க.

மொட்டை அடிக்கறதப் பத்திப் பார்க்கலாம். அடுத்தவங்கள மொட்டை அடிக்கறதப் பத்தி இல்ல. நமக்கு அடிச்சுக்கறதப் பத்தி. கூர்மையாக் கேக்கணும். நாம எல்லாரும் அம்மா வயத்துல பத்து மாசம் (கர்ப்பத்தில்) இருக்கோம்; அதாவது முந்நூறு நாள். அங்க அம்மா வயத்துல நாம இருக்கறப்ப நம்மச் சுத்தி என்ன பாலும் தேனுமா இருக்கு? அல்லது ஏ.சி. இருக்கா? நம்மளச் சுத்தி ரத்தம், சதை, மலம், ஜலம் (சிறுநீர்)னு தான் இருக்கு. அதுங்களுக்கு நடுவுலதான் முந்நூறு நாள் இருந்துருக்கோம்.

அதுங்கள்லாம் நம்ம உடம்புல எவ்வளவு ஊறியிருக்கும்? உதாரணத்துக்கு, கடல் தண்ணியில நம்ம சுட்டு வெரல வெச்சு எடுத்துட்டு, துணியால தொடச்சுட்டு, வெரல நாக்குல வெச்சுப் பாத்தா உப்புக் கரிக்கும். ஒரு விநாடி உப்புத் தண்ணியில இருந்த வெரலுக்கே, உப்பு அப்பிடி ஊறியிருக்குதுன்னா... முந்நூறு நாள் அம்மா வயத்துல ரத்தம், சதை, மலம், ஜலம் (சிறுநீர்)னு, நம்ம உடம்புல எத்தனை ஊறி இருக்கும்? அதெல்லாம் நம்ம பொறந்ததுக்கு அப்பறமா, எப்பிடி வெளியேறும்?

உடம்புக்குள்ள இருக்கறது எல்லாம், உடம்புல இருக்கற மயிர்க்கால்கள் மூலமா வெளியில போயிடும். ஆனா தலைக்குள்ளாற இருக்கறது எல்லாம் வெளியில போக என்ன வழி?’’ என்ற தாத்தா அருகில் இருந்த தண்ணீரைப் பருகி விட்டு பேச்சைத் தொடர்ந்தார்.



சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 8:18 am


இடி இடிப்பதற்கும் அர்ஜுனனுக்கும் என்ன சம்பந்தம்?


தலைக்குள்ளாற இருக்கற எல்லாம், தலையில இருக்கற மயிர்க்கால்கள் வழியாத்தான் வெளியில வந்தாக ணும். ஒட்டுமொத்தமா வர்ற அதெல்லாம் தலையிலியே தேங்கிப் போச்சுன்னு வெச்சுப்போம். அவ்வளவுதான். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்ங்கறது மாறிப் போய், எல்லா விதமான வியாதிங்களுக்கும் சிரசே பிரதானம்னு ஆகிப் போயிடும். அது கூடாதுங்கறதுக்காகத்தான், கொழந்தயா இருக்கும்போதே, ‘குலதெய்வத்துக்கு முடி இறக்கறது’னு செஞ்சாங்க. இது இல்லாம...’’ என்று தாத்தா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, நடுத்தர வயதுக்காரர் ஒருவர் எழுந்து, ‘‘குறுக்கால பேசறேன்னு கோவிச்சுக்காதீங்க! குலதெய்வம்னா அது எது? அதை எப்பிடித் தெரிஞ்சுக்கறது? எங்க குலதெய்வம் எதுன்னு தெரியாது. என்ன செய்ய ணும்னு, நீங்கதான் சொல்லணும்!’’ என்றார்.

ஒரு விநாடி நிதானித்த தாத்தா, ‘‘இப்ப சொல்றது, கேள்வி கேட்ட இவருக்கு மட்டுமில்ல. எல்லாருக்காகவும்தான். குலதெய்வ வழிபாட்டை விட்டுட்டு, நாம மத்த என்ன பிரார்த்தன செஞ்சும் பலனில்லைனு பெரியவங்க எல்லாம் விசேஷமா சொல்லுவாங்க. குலதெய்வம்ங்கறது நம்ம இஷ்டத்துக்கு வெச்சுக்கறது இல்ல. நம்ம முன்னோர்கள்ல ஒருத்தர், தனது பக்தி யின் மூலமா தெய்வத்தை நேருக்கு நேரா அல்லது கனவுல பார்த்து இருப்பாங்க. அப்ப அந்த சாமி, ‘நான் இன்ன சாமி. நான்தான் உனக்குக் குலதெய்வம்’னு சொல்லியிருக்கும். இப்படி முன்னோர்கள் மூலமா, அந்த வழியில வந்ததுதான் குலதெய்வம்.

சில குடும்பங்கள்ல முன்னோர்களே, ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’னு வள்ளு வர் சொல்ற மாதிரி, தெய்வ நெலையில இருந்துருப்பாங்க. அப்படிப்பட்ட அந்த முன்னோர்களே, குலதெய்வமா இருக்கறதும் உண்டு.

அப்படிப்பட்ட குலதெய் வத்தைத் தெரிஞ்சுக்கிட்டு, தவறாம வருஷத்துக்கு ஒரு தடவையாவது வழிபாடு செய்யணும். குலதெய்வம் எது? அது எங்க இருக்குனு தெரி யாதவங்க கவலைப்பட வேணாம். திருப்பதி வேங்கடாசலபதியக் குல தெய்வமா வெச்சுக்கலாம். குலதெய்வம் எதுனு காலப்போக்குல தானா தெரிய வரும். இப்ப வாங்க! முடி இறக்கறதப் பத்தி, மேல பார்க்கலாம். இந்த மாதிரி குலதெய்வத்துக்குத்தான், முடி எடுக்கறதுங்கற பழக்கத்த வெச்சு, முன்னோர்கள் செஞ்சாங்க.

அதுக்கு அப்பறமா முடி வளர்ந்த உடனே, இஷ்ட தெய்வப் பிரார்த்தனைங்கற பேர்ல, இன்னொரு தடவை, அதாவது ரண்டாந் தடவ முடி இறக்குவாங்க. இது எதுக்கு? அம்மாவோட வயத்துல இருந்தபோது, தலையில ஊறிக் கெடக்கற அழுக்குல, அநேகமா எல்லாமே மொதத் தடவ மொட்டை போட்டப்பவே போயிருக்கும். மிச்சமீதி இருக்குறது ஒட்டுமொத்தமா, மொதல் மொட்டைக்கு அப்பறமா முடி வளரும்போது வெளியில வந்துருக்கும். அத, இஷ்ட தெய்வப் பிரார்த்தனைங்கற பேர்ல, ரண்டாந் தடவை முடி இறக்குறப்போ ‘க்ளீன்’ செஞ்சுருவாங்க. அவ்வளவுதான்; இனிமே தலைக்கு உள்ள எந்த விதமான கெட்ட ரத்தம், சதை, மலம், ஜலம்னு எதுவுமே இருக்காது. இப்படி முடி இறக்கறதுங்கற பேர்ல, ஆரோக்கியத்தச் சொல்லி வெச்சாங்க நம்ம பாட்டன், பூட்டன்லாம்.

இப்ப வாங்க! இந்தக் காலத்துல நல்லா வெகுவாப் பல இடங்கள்லியும் பரவிக் கெடக்கற ஒரு தப்பைப் பார்க்கலாம். இப்பல்லாம் முக்காவாசி எல்லா வீடுகள்லியும், பாடற மெஷின் ஒண்ணு இருக்கு. நமக்கு வேணுங்கற சாமி நாமாவை அதுபாட்டுல நாள் பூரா சொல்லிக்கிட்டே இருக்கும். இப்ப அந்த மெஷின்லியே புதுசா ஒண்ணு, எல்லார் வீட்லயும் கத்துது. இதுல சாமி நாமா கூட, காயத்ரி மந்திரம் மாதிரியான சில சூட்சுமமான மூல மந்திரங்களயும் சேர்த்து, கத்தும்படியா ஏற்பாடு பண்ணி இருக்காங்க. அதுவும் அந்த மந்திரங்கள எந்த விதமான முறையும் இல்லாம, தபேலா டோலக்கு, கீ போர்டுல ஸ்ருதினு சேர்த்துக் கலந்து ஒரு வழி பண்ணி இருக்காங்க, அது தப்பு. உங்க யார் வீட்லியாவுது அப்படிப்பட்ட மெஷின் இருந்தா, தயவு செஞ்சு காயத்ரி மந்திரம் மாதிரி மூல மந்திரங்களப் பாடும்படியா வெக்காதீங்க. முன்னோர்கள் சொன்னத, நம்ம சௌகரியத்துக்காக நம்ம இஷ்டப்படி மாத்தக் கூடாது.

உதாரணமா, ‘பலமா இடி இடிக்கும்போது ‘அர்ஜுனா! அர்ஜுனா’னு சொல்லு! பயம் போயிடும்’னு சொல்லுவாங்க. உடனே, ‘இது எப்படி? அர்ஜுனனுக்கும் இடிக்கும் என்ன சம்பந்தம்? என்னய்யா காது குத்துறீங்க’னு கேக்கற வாதக்காரர்களும் உண்டு.

காது குத்தல... ஆனா, அது காது சமாசாரம் தான். பலமா இடி இடிக்கும்போது பல பேருக்கு அந்த இடி சத்தத்துல ‘கப்’புனு காது அடைச்சுக்கும். அப்ப ‘அர்ஜுனா, அர்ஜுனா’னு சொன்னா, வாய் திறந்து குவிஞ்சு அப்பறமா பிளக்கும். வேண்ணா சொல்லிப் பாருங்க! அப்படிச் சொல்றதுனால தாடைகள் நல்லா அகன்று போய், காத்து வெளியேறும். அடைச்சிக்கிட்டு இருந்த காது ‘பளிச்’சுனு சரி ஆயிடும். இதத்தான் நாம, கொழந்தையா இருக்கறப்ப, நம்ம பெரிய வங்க, ‘காண்டவ வனத்த அர்ஜுனன் எரிக்க ஆரம்பிச்சான். தேவேந்திரன், மழையயும், இடியையும் அனுப்பி அதத் தடுக்கப் பார்த்தான். ஆனா, அதயும் தாண்டி அர்ஜுனன் ஜெயிச்சான். அதுனால இடி இடிச்சா அர்ஜுனா அர்ஜுனானு சொல்லு! பயம் போயிடும்’னு சொல்லி வெச் சாங்க!’’ என்றார் தாத்தா.

சற்று நிதானித்து விட்டு, ‘‘இங்க இருக்கற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் ஒண்ணு, அதுவும் நம்ம சாஸ்திரங்கள் சொன்னதுல இருந்து சொல்லப் போறேன். இன்னக்கி இருக்கற காலகட்டத்துல இதெல்லாம் எடுபடுமானு தெரியல. இருந்தாலும் சொல்லித்தான் ஆகணும். இருட்டு பரவ ஆரம்பிச்ச உடனே விளக்கைத் தேடி ஏத்தறோமில்லயா, அது போல, தயவு செஞ்சு கூர்மையா கேட்டு மனசுல பதிய வெச்சுக்குங்க!

நம்ம சாஸ்திரங்களும் முன்னோர்களும் சொன்னதுல முக்கியமான ஒண்ணு ஆணும் பெண்ணும் தொட்டுப் பேசிப் பழகக் கூடாது. பெத்த அப்பனா இருந்தாலும், தான் பெத்த பொண்ணை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்பறமா தொட்டுப் பேசக் கூடாது.

‘என்ன சார்! நீங்களும் உங்க சாஸ்திரங்களும். பெத்த அப்பா, தான் பெத்த பொண்ணத் தொட்டுப் பேசக் கூடாதுங்கறீங்களே. இது என்ன நியாயம்?’னு மனசுக்குள்ளயே வாதப் பிரதிவாத வண்டிங்கள ஓட்டாதீங்க!

‘ஆபோசிட் செக்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர்’னு பிற்காலத்துல இங்கிலீஷ்காரன் சொன்னான். அதுக்கு முன்னாலியே அதுனால வர்ற பிரச்னைகள மனோ ரீதியா அலசி ஆராஞ்சு, சாஸ்திரங்கள்ங்கற பேர்ல சொல்லி வெச்சவங்கதான் நம்ம முன்னோர்கள்.

எந்த நேரத்துல மனசு கெட்டுப் போகும்னு எதுவும் சொல்ல முடியாது. பெத்த அப்பாவா இருந்தாலும், தான் பெத்த பொண்ணிடமே முறைகேடா நடக்க முயற்சி பண்ணி, அவங்க கதையையே முடிச்ச தகவல்கள் சமீப காலமா பத்திரிகைகள் பலதுலயும் வந்தத, நீங்கள்லாம் படிச்சு இருப்பீங்க. அதுனால வாதப் பிரதிவாதம் பண்ணி எதையாவது பேசறவங்க பேசட்டும்... இந்த மாதிரி நல்லதையெல்லாம் உங்க கொழந்தைங்களுக்கு, பெத்தவங்களான நீங்க சொல்லிக் குடுங்க. அது உங்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. இப்ப, கொழந்தைங்களுக்கு எல்லாம், அதாவது படிக்கற பசங்களுக்கு முக்கியமா ஒண்ணு சொல்லப் போறேன்...’’



சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக