புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
100 Posts - 49%
heezulia
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
24 Posts - 12%
mohamed nizamudeen
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
7 Posts - 3%
prajai
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
cordiac
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
227 Posts - 52%
heezulia
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Barushree
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 9:22 pm

First topic message reminder :

மாலை நேரம். வீட்டு வாயிலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே... முன் அறையில் தாத்தா ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அதிலேயே மூழ்கிப் போயி ருந்த அவரது கவனத்தை, ‘லொட்டு...புட்டு’ என்று ஏதோ சத்தம் திசை திருப்பியது. நிமிர்ந்த தாத்தாவை, முறைத்துப் பார்த்தபடி உள்ளே நுழைந்தான் பேரன்.

புத்தகத்தை மூடி வைத்த தாத்தா, ‘‘காலைக் கழுவிட்டு உள்ளே வா!’’ என்றார் சற்றுக் கறாராக.

‘‘செருப்பு போட்டுக்கிட்டுத்தானே போனேன். வெறுங் காலோடவா போனேன்?’’ என்று முணுமுணுத்தபடியே கால்களைக் கழுவிக் கொண்டு தாத்தாவை நெருங்கினான் பேரன். வெளியில் சுற்றிவிட்டு வந்ததனால் உண்டான வியர்வையும் அடங்கவில்லை; தாத்தாவின் கறார் வார்த்தைகளால் உண்டான வருத்தமும் அடங்கவில்லை அவனுக்கு.

குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு வந்து, மகனிடம் நீட்டினாள் தாயார்.

‘‘கொஞ்ச நேரம் கழிச்சுக் குடி!’’ என்றார் தாத்தா.

கோபம் பொத்துக் கொண்டு வந்தது பேரனுக்கு.

‘‘பிராணனை வாங்கறியே தாத்தா! உன் காலத்து சமாசாரத்தை எல்லாம் இந்தக் காலத்துல யார் சீண்டுறா? விஞ்ஞானம் எங்கேயோ போய்க்கிட்டிருக்கு. இந்தக் காலத்துல போய்.... உதவாததையெல்லாம் சொல்லிக்கிட்டு...’’ என்று வெடித்தான் பேரன்.

சிரித்தார் தாத்தா. ‘‘உதவாதது எதையும் நம்ம முன்னோர்கள் சொல்லிட்டுப் போகலை. என்ன சொன்னே? விஞ்ஞான வளர்ச்சியா, ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ! அணுவைப் பற்றின சிந்தனைகூடத் தோணாத அந்தக் காலத்துலேயே விஞ்ஞான உண்மைகளை சொன்னவங்க நம்ம பெரியவங்க. அதைப் பத்தி விளக்கமா சொன்னா தான் உனக்குப் புரியும். இந்தா, அதுக்கு முன்னாடி இப்ப தண்ணீரைக் குடி!’’ என்றபடி தண்ணீரை பேரனிடம் நீட்டினார் தாத்தா.

‘இந்தத் தாத்தா பொய் சொல்றாரா? அல்லது ஏதாவது உண்மை இருக்குமா?’ என்ற குழப்பத்துடன் தண்ணீரை வாங்கிக் குடித்த பேரன், ‘‘என்ன தாத்தா சொல்றே? நம்ம பெரியவங்க... விஞ்ஞான உண்மை... அது இதுன்னு என்னென்னவோ சொல்றே? இதெல்லாம் உண்மையா?’’ என்றான்.

தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘‘நான் சொல்றேன். நீயே தீர்மானிச்சுக்கோ! அணுவைப் பற்றி மேல் நாட்டுக்காரங்க யாரும் யோசிக்காத அந்தக் காலத்துலேயே அதுபத்தின விஷயங்களை நம்ம பெரியவங்க விளக்கமா சொல்லியிருக்காங்க தெரியுமா? கம்பராமாயணத்துலயும் இதுபத்தி ஒரு தகவல் உண்டு. யுத்த காண்டத்துல, ராவணனுக்கு விபீஷணன் யோசனை சொல்றான். அப்ப அவன் ஹிரண்யகசிபுவை பத்திச் சொல்றதைப் படிக்கிறேன், கேளு...

‘எங்கே இருக்கிறான் உன் இறைவன்?’ என்று தன் மகனைப் பார்த்துச் சீறினான் ஹிரண்யகசிபு. பிரஹ்லாதன் பதில் சொன்னான்: ‘சாணிலும் உளன். ஒரு தன்மை அணுவினை சத கூறு இட்ட கோணிலும் உளன்!’

‘அணுவுக்குள் அணுவாக இறைவன் இருக்கிறான்’ என்பதைச் சொல்ற இந்த இடத்துல, அணுவை நூறு(சத) கூறுகளாகச் செய்து, அதில் ஒரு சதவிகித அணுவை ‘கோண்’ என்று, கம்பராமாயணம் குறிப்பிடுது’’ என்ற தாத்தா சற்று நிறுத்தினார்.

பேரன் ஆச்சரியப்பட்டான்.

ஓரக்கண்ணால் அவனது வியப்பை ரசித்தபடி தாத்தா தொடர்ந்தார்: ‘‘பிளக்க முடியாததுன்னு சொல்லப்பட்ட அணுவைப் பிளந்து, ஒரு சதவிகித அணுவுக்கும் தமிழில் பெயர் வெச்சுட்டாங்க அந்தக் காலத்துலயே! ஆனால், எனக்குத் தெரிஞ்சு இன்னிக்கும் ஒரு சதவிகித அணுவுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படலை. சரி... மேலே சொல்றேன். கம்ப ராமாயணமே, அணுவின் செயல்பாட்டையும் சொல்றது.

போர்க்களத்தில் இந்திரஜித் இறந்து கிடக்கிறான். அவன் தாயார் மண்டோதரி அழுகிறாள். ‘தலை சிறந்த வீரனான உன்னை& இந்திரனையே வென்று இந்திர ஜித் என்று பெயர் பெற்ற உன்னைக் கொன்று விட்டார்களே! அணு ஆயு தத்தை ஏவ, அது ஓடிவந்து வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கியது போல் இருக்கிறது’ என்கிறாள்.

அந்த வரி: உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!

எங்கோ ஓரிடத்தில் சுவிட்சை அழுத்தியதும் அணு ஆயுதம் சீறிக் கிளம்பும். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கறது. இதைத் தான் கம்ப ராமாயணம், ‘உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!’னு சொல்றது!’’ தாத்தா சற்று நிறுத்தினார்.

பேரன் பெருமூச்சு விட்டான்!

தாத்தா தொடர்ந்தார்: ‘‘இப்போ கால் கழுவுற விஷயத்தைச் சொல்றேன். கவனமா கேள்! நின்றாலும் நடந்தாலும் உட்கார்ந்தாலும் நம்ம கால் மட்டும்தான் தரையில் பட்டுக்கிட்டிருக்கும். இப்படிக் கண்ட இடத்துலயும் அலையுற கால்கள்ல ஏராளமான கிருமிகள் ஒட்டிக்கிட்டிருக்கும். கால் கழுவாம இருந்தா அவ்வளவு கிருமிகளும் கால் களில் உள்ள நகக் கண் வழியா உள்ளே புகுந்து வியாதியை உண்டாக்கும். அதனாலதான் நம்ம பெரியவங்க காலைக் கழுவிட்டு உள்ளே வரச் சொன்னாங்க.

என்னதான் கழுவினாலும் ஒன்றிரண்டு கிருமிகள் கால்களில் ஒட்டிக் கிட்டிருந்தா, என்ன செய்யுறது?

அதுக்காகவே வீட்டு வாசப் படியில் மஞ்சள் பொடியைக் குழைத் துப் பூசி வெப்பாங்க. காலைக் கழுவிட்டு மஞ்சள் பூசின வாசப்படி வழியா உள்ளே நுழைஞ்சா, காலில் மிச்ச மீதி இருக்கும் கிருமிகளும் அழிஞ்சு போயிடுமாம். தலை சிறந்த கிருமி நாசினி மஞ்சள் என்பதை தெரிஞ்சதாலதான் நம்ம பெரியவங்க அப்படி செஞ்சாங்க. இதே போல சாப்பிடறதுக்கு முன் னாலயும் சாப்பிட்ட பிறகும் கால் கழுவறதும் நல்லது. இதனால ஜீரண உறுப்புகள் பலப்படும். ஜீரண சக்தி அதிகரிக்கும். புரிஞ்சுதா?’’ என்றார் தாத்தா.

பிரமிப்பில் இருந்த பேரன் வாயைத் திறந்தான். ‘‘புரிஞ்சுது தாத்தா... புரிஞ்சுது! இதையெல்லாம் உணர்ந்து ஃபாலோ பண்றதாலதான், உங்களை மாதிரி பெரியவங்க வயசானாலும் கரும்பைக் கடிச்சு சாப்பிடுறீங்க. நாங்களோ...’’ என்ற பேரனை இடைமறித்த தாத்தா, ‘‘கரும்பையே ஜூஸாகக் கேட்கறீங்க!’’ என்றார் கலகல சிரிப்புடன்.

‘‘அது போகட்டும் தாத்தா! நான் வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும், அம்மா தந்த தண்ணீரைக் குடிக்க விடாம, அப்புறமா குடிக்கலாம்னு சொன்னீங்களே, அது ஏன்? சொல்லுங்க!’’ என்றான்.

‘‘இதற்கு உண்டான பதிலைப் பெரிய புராணம் சொல்றது. அதையும் சொல் றேன்’’ என்றார் தாத்தா.

‘‘சேக்கிழார் எழுதினதுதானே?’’ என் றான் பேரன்.

ஆச்சரியப்பட்டார் தாத்தா. ‘‘அடடே... சேக்கிழார் எழுதினதை எல்லாம் சரியாச் சொல்றியே... பரவாயில்லை!’’ எனப் பாராட்டினார்.

‘‘தாத்தா! இந்தக் காலத்துப் பசங்களான எங்களைப் பத்தி தப்பாவே நினைச்சுக்கிட்டிருக்கீங்க போல! கொஞ்சம் கொஞ்சமாவது எங்களுக்கும் தெரியும். மற்றதைத் தெரிஞ்சுக்கிற ஆர்வமும் இருக்கு! ஏற்கும்படி சொல்ல வேண்டியது அனுபவசாலியான பெரியவங்க கடமை! சரி... சரி! நான் கேட்டதுக்குப் பதிலைச் சொல்லுங்க. பாராட்டெல்லாம் அப்புறமா வெச்சுக்கலாம்’’ என்று ஆர்வத்துடன் கேட்டான் பேரன்.

தாத்தா சொன்ன பதில், அடுத்த விஞ் ஞான ஆச்சரியம்!



சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 23, 2010 8:39 pm

அதனால தான் ஸ்வாமி க்கு நெய் விளக்கு ஏற்றணும். டெய்லி நெய் விளக்கு ஏற்றினால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும், என் சொல்கிறார்கள். அது உண்மையும் கூட.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 24, 2010 12:12 am

அருமை சிவா... நான் நான்கு க்ட்டுரைகள் மட்டுமே வாசித்தேன்... மீதி இரண்டு நாளில் விடுமுறை தொடங்கியதும் வாசிப்பேன்...நன்றி சிவா ... தொடர்ந்து தாருங்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 24, 2010 10:18 pm

பசு விராட்டியின் ‘பவர்’ தெரியுமா?

ஹோமம் மற்றும் யாகங்களின் பலன்களைப் பற்றி சுவாரஸ்ய மாகச் சொல்லிக் கொண்டிருந்த தாத்தாவை இடைமறித்தான் டீன்ஏஜ் பையன்.

‘‘தாத்தா! ஹோமமோ, யாகமோ செய்யும்போது பசு நெய்- பசும் விராட்டிதான் உபயோகப்படுத்தணும்னு சொல்றீங்களே... அது ஏன்? இன்னக்கி அதெல்லாம் கெடைக்குமா, என்ன?’’ என்றான்.

தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘‘அடேய்! இந்தக் காலத்துப் பயலே! முயற்சி செஞ்சா பசும் விராட்டி, பசும் நெய் என்ன... எது வேணாலும் கெடைக்கும். முயற்சியே செய்யாம சும்மா பொலம்பக் கூடாது. முயற்சி செய்யாதவனுக்கு தெய்வம் கூட உதவி செய்யாது. தேவலோக அமிர்தம்னு சொல்றோமே! அந்த அமிர்தத்தோட பலன்கள் என்னவோ, அத்தனையும் பசு நெய்க்கு உண்டு. அக்கினியில பசு நெய்ய விடறதுனால, உடனடியா சில வாயுக்கள் உண்டாவுது. அது அப் பவே காத்துல பரவி, தூய்மையான சுற்றுப்புறச் சூழ் நிலைய உருவாக்குது. இந்த வாயுக்கள் எல்லாம் மூச்சுக் காத்து வழியா எல்லார் உடம்புலேயும் புகுந்து, உடம்ப நல்லா வெச்சுருக்குது. உடம்புல இருக்கிற எக்ஸ்ட்ரா கொலஸ்ட்ரால் எல்லாம் போயி, பக்க விளைவுகள் அதாவது சைட் எஃபெக்ட்ஸ் இல்லாம வேல செய்யும்.

அக்கினியில நெய் கலந்த அரிசியப் போடற பழக்கம் உண்டு. அதோட பலன்கள் உசந்தது! நெய் கலந்த அரிசியை யாகத்துலேயோ, ஹோமத்து லேயோ போடும்போது ஏற்படுற ரசாயன மாற்றத்தால எத்திலீன் ஆக்ஸைடு, ப்ரொப்பிலின் ஆக்ஸைடு, பார் மால்டிஹைடு, ப்யூடா ப்ரோ பியோ லாக்டான், அசெட்டிலின் போன்ற வாயுக்கள் உண்டாவுது. அக்னியில போடறது எல்லாம் ஒட்டுமொத்தமா சாம்பலான அப்பறம் கூட, வெவரம் தெரிஞ்ச கொஞ்சம் பேரு அங்கேயே உக்காந்து பிராணாயாமம், ஜபம், தியானம்னு செய்வாங்க. அப்பிடி செய்யறதுனால மன உளைச்சல், அதன் காரணமா உண்டாகற ரத்த அழுத்தம், ஆஸ்துமா, குடல் புண், தலைவலி போன்றதெல்லாம் வெகுவாகக் குறையும். ரத்தம், மூச்சு, நரம்பு மண்டலங்கள் இதெல்லாம் பலமாகும். ஆல்ஃபா வேவ்ஸ் (அலைகள்) வெளிப்பட்டு, மூளை அழுத்தங்களப் போக்கும். இதெல்லாம் மருந்தே இல் லாத ட்ரீட்மெண்ட். வா! இனிமே பசுஞ்சாண விராட்டியால கெடைக்கிற பலனை தெரிஞ்சுக்குவோம்.

தங்கத்த விடத் தங்கபஸ்பத் துக்குப் பவர் அதிகம். அந்த மாதிரி சூப்பரான கிருமி நாசினியான பசுஞ்சாணத்தவிட அதோட விராட்டி சாம்பலுக்குப் பவர் ஜாஸ்தி. உதாரணமா, செடி கொடிங்கள்ல பூச்சி வந்தா, சாம்பலத் தெளிப்போம். பூச்சிங்கள்லாம் போயிடும். இது உனக்கே தெரியும். அந்த மாதிரிதான் பசுஞ்சாண விராட்டி சாம்பலும். யாகத்துலேயோ ஹோமத்துலேயோ போடற பசுஞ்சாண விராட்டியின் சாம்பல் என்ன என்ன செய்யுதுன்னு ஒண்ணு... ரண்டு சொல்றேன் கேளு! தொடை இடுக்குல ஸ்கின் பங்கஸ்னு வரும். அதுல இந்த சாம்பலத் தடவினா, மூணே நாள். அடிச்சுவடே இல்லாம ஸ்கின் பங்கஸ் போயிடும். உடம்புல இருக்குற புண்களுக்குக்கூட இந்த சாம்பலத் தடவினா கிருமியெல்லாம் போயி, புண்ணு ஆறிடும். இந்த மாதிரி நெறயா இருக்கு. அது எல்லாத்தயும் நீ அங்க போய் சொல்ல வேண்டாம். நாம பாட்டுக்கு அள்ளிக் கொட்டினா, கேக்கறவங்க மனசுல அது முழுசா பதியாது. உதாரணமா கொஞ்ச நேரத்துக்கு முன்னால, நெய் கலந்த அரிசி மூலமா சில வாயுக்கள் வருதுன்னு சொன்னேனில்ல. அந்த வாயுக்களின் பேர்களையும் நீ அங்க பேசும்போது சொல்லிட்டு இருக்க வேண்டாம்’’ என்றார் தாத்தா.

‘‘சரி தாத்தா! இந்த பங்ஷன் கோயில்ல நடக்குது. அதுனால கோயிலுக்கு வர்றவங்க என்ன என்ன செய்யணும் செய்யக் கூடாதுங்கறதக் கொஞ்சம் சொல்லுங்க! பல பேரு சண்டிகேஸ்வரர்கிட்ட நின்னு கையத் தட்டறாங்க; வேட்டிலேர்ந்து இல்லாட்டி, பொடவையிலேர்ந்து நூல் கிழிச்சு சண்டிகேஸ்வரர்மேல போடறாங்க. கேட்டா; இப்பிடி செஞ்சா புது ஆடை கெடைக்குங்கறாங்க. இதப் பத்தி சொல்லுங்க!’’ என்றான் டீன்ஏஜ் பையன்.

‘‘ஏய்! கோயில்ல கும்பலா இருக்கும் போதே இந்தத் தகவலையெல்லாம் அவங்க கிட்ட கொண்டுபோய் சேக்கணும்னு நெனச்ச பாரு! பிரமாதம்டா!

கோயிலுக்குப் போனா, துவஜஸ்தம்பம் அதாவது கொடிமரம்னு சொல்றமே... அதுகிட்ட மட்டும்தான் விழுந்து நமஸ்காரம் செய்யணும். கோயில் உள்ளாற எந்த சந்நிதிலேயும், விழுந்து நமஸ்காரம் செய்யக் கூடாது. ஸ்வாமிக்கும், அதுக்கு முன்னால இருக்குற வாகனத்துக்கும் நடுவுல நாம போவக் கூடாது. கோயில்ல குடுக்கற பிரசாதம் இருக்குதே, அதாம்பா... விபூதி குங்குமம் இதயெல்லாம், வாங்கின உடனே இடக் கைக்கு மாத்திக்கக் கூடாது. ஒரு சின்ன பேப்பரை வெச்சு அதுல போட்டுக்கலாம். ஆம்பளைங்க எல்லாம் ரண்டு கையவும் தலக்கி மேல தூக்கி, கூப்பிக் கும்புடணும். லேடீஸ் எல்லாம் ரண்டு கையவும் நெஞ்சுக்கு நேரா வெச்சுத்தான் கும்புடணும். புள்ளயார் சந்நிதியில ஆம்பளங்க தோப்புக்கரணம் போடு வாங்க. இப்பல்லாம் லேடீஸும் தோப்புக்கரணம் போடறாங்க. அது கூடாது. லேடீஸ்ங்க தலயில மட்டும் குட்டிக்கிட்டா போதும். வலம் வரும்போது நிதானமா, சாமி சிந்தனையோட மட்டும் வலம் வரணும். டிராஃபிக் இல்லாத ரோட்டுல டூ வீலர்ல போற மாதிரி ஸ்பீடா வலம் வரக் கூடாது. முக்கியமானது எந்த சாமியவும் அப்பிரதட்சிணமா வலம் வரவே கூடாது. இப்பிடி மூணு சுத்து, அப்பிடி நாலு சுத்துங்கறதெல்லாம் கூடாது’’ எனத் தாத்தா சொல்லிக் கொண்டிருக்கும்போதே...

‘‘அருமையா சொன்னீங்க தாத்தா! சரி... சண்டிகேஸ்வரர் மேல, வேட்டி, இல்லாட்டி பொடவயிலேர்ந்து நூல் கிழிச்சுப் போடறதைப் பற்றிக் கேட்டேனே!’’ என்றான் டீன்ஏஜ்.

‘‘ஆமாண்டா பையா! ஆமாம். தினந்தோறும் நாம கட்டிக்கற துணியிலேர்ந்து ரெண்டு ரெண்டு நூலாக் கிழிச்சா என்ன ஆவும்? துணி கிழிஞ்சு போயிடும். வேற ஆடை வாங்க வேண்டியதுதான். என்னத்த செய்யறது?’’ என்றார் தாத்தா.

‘‘இந்தப் பழக்கம் எப்பிடி வந்துச்சு? நாம என்ன செய்யணும்னு சொல்லுங்க தாத்தா!’’ எனத் துருவித் துருவிக் கேட்டான் டீன்ஏஜ் பையன்.



சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 24, 2010 10:22 pm

லட்சுமணன் கோடு போட்டானா, இல்லையா?

‘‘நம்ம ஆடையிலேர்ந்து நூலைக் கிழிச்சு சண்டிகேஸ்வரர் மேல போடற பழக்கம் எப்படி வந்துச் சுன்னு சொல்றேன்... கேளு!’’ என விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார் தாத்தா. ஆர்வத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தான் டீன்ஏஜ் பையன். தாத்தா சுறுசுறுப்பாக விவ ரிக்கத் தொடங்கினார்:

‘‘போன தலமுறை வரைக்கும் கோயிலுக் குப் போகும்போது மக்கள், எண்ணெயையும் திரியையும் தனித்தனியாக கொண்டு போயி, சண்டிகேஸ்வரர் சந்நிதியில வெச்சுருவாங்க. அத எடுத்துக் கோயிலுக்கு உபயோகப் படுத்திக்குவாரு குருக்கள். இப்ப என்ன டான்னா... எண்ணெயும் வெக்கறது இல்ல; திரியும் வெக்கறது இல்ல. அதுக்குப் பதிலா ஆடையில இருந்து நூலைக் கிழிச்சுப் போடறோம். ஆகமத்திலியோ, சாஸ்தி ரத்திலியோ இப்பிடி நூலைக் கிழிச்சுப் போடணும்னு இல்ல. இத அழுத்தந்திருத் தமா சொல்லு!’’ என்றார் தாத்தா.

‘‘சொல்றேன் தாத்தா! எனக்கு இன் னும் கொஞ்சம் தகவல் வேணும். ஹோமம் ஆரம்பிக்கறதுக்கு முன்னால, எனக்கு இருபதில் இருந்து முப்பது நிமிஷம் வரைக்கும் டயம் குடுத்துருக்காங்க. இப்ப நீங்க சொன்னதுல இருந்து, பத்து நிமிஷம் வரைக்கும் சமாளிக்கலாம். இன்னும் பத்து நிமிஷத்துக்கு எனக்குத் தகவல் வேணும். எளிமையாவும் இருக்கணும். அதே நேரத்துல, கேக்கறவங்கள நம்ம பக்கமா புடிச்சு இழுக்கற மாதிரியும் இருக்கணும்!’’ எனக் கேட் டான் டீன் ஏஜ் பையன்.

‘‘அப்பிடியா! சரி! உனது சாய்ஸுக்கே சொல்றேன். என்ன வேணும்?’’ என்றார் தாத்தா.

‘‘இப்ப நீங்க பேசும்போது, ‘சண்டிகேஸ்வரர் மேல நூலைக் கிழிச்சுப் போடற பழக்கம், எந்த புஸ்தகத்திலேயும் சொல்லல. நம்ம காலப் பழக்கம் இது’னு சொன்னீங்க. அந்த மாதிரி ஒரிஜினல் புஸ்தகத்துல (மூல நூலில்) இல்லாத தகவல், ஆனா மக்கள் மத்தியில பரவியிருக்குற தப்பான அபிப்ராயம் இதப் பத்தியெல்லாம் சொல்லுங்களேன்!’’ என எடுத்துக் கொடுத்தான் டீன்ஏஜ்.

அவன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட தாத்தா சொல்லத் தொடங்கினார். தகவல்கள் வந்து விழுந்தன. ஆனால், அவை அதிர்ச்சிகரமான உண்மைகளாக இருந்தன. தாத்தா ஆரம்பித்தார்: ‘‘நீ கேட்ட மாதிரி நெறைய இருக்குப்பா. ஒவ்வொண்ணா சொல்றேன். மொதல்ல கொழந்தைங்ககிட்ட இருந்து ஆரம்பிக் கறேன். குசேலருக்கு எவ்வளவு கொழந்தைங்க... தெரியுமா?’’ என்றார்.

டீன்ஏஜ் பரபரத்தான். ‘‘தெரியும் தாத்தா! இருவத்தேழு பசங்க!’’ என்றான்.

‘‘பாத்தியா! உன் தலமுறை வரைக்கும் இந்த அபத்தம் என்னமா கொடிகட்டிப் பறக்குது. ம்... நாராயணீயம், பாகவதம், விஷ்ணு புராணம்னு எந்த நூல்லியும் குசேலருக்கு இருவத்தேழு புள்ளைங்கன்னு இல்ல. பாகவதத்துல சுகாச்சார்யார் சொல்லும்போது, ‘கிருஷ்ணனுக்கு ஒப்பற்ற ஒரு தோழன் இருந்தான். அவன் பொறி புலன்களை வென்றவன்’னு குசேலரப் பத்தி சொல்றாரு. பொறி புலன்கள வென்றவருக்கா இருவத்தேழு பசங்க? உத்தமமான அந்த கிருஷ்ண பக்தனைதோழனை, நாம ‘அவருக்கு இருவத்தேழு கொழந்தைங்க’ன்னு சொல்லி, குடும்பக் கட்டுப்பாடு நிகழ்ச்சியிலகூட குசேலரக் கொண்டாந்து நிறுத்திட்டோம். இது தப்பு இல்லியா?

வா! அடுத்ததப் பாக்கலாம். ராமாயணத்துல மாய மானைப் புடிக்கறதுக்காக ராமர் போன பிறகு லட்சுமணனையும் ஏவினா சீதை. லட்சுமணன் போகும்போது என்ன செஞ்சுட்டுப் போனான்?’’ என நிறுத்தினார் தாத்தா.

‘‘ஹும்! இது ஒரு பெரிய கேள்வியா! லட்சுமணன் கோடு போட்டுட்டுப் போனான். எல்லாருக்குமே தெரியுமே! ‘லட்சுமண் ரேகா’ன்னு சொல்லுவாங்க. அந்தப் பேர்ல இப்பல்லாம் கரப்பான் பூச்சி மருந்து கூட வந்தாச்சு’’ என பதிலளித்தான் டீன்ஏஜ்.

‘‘ரொம்ப சந்தோஷம்ப்பா! குசேலர குடும்பக் கட்டுப்பாடுக்குக் கொண்டு போயாச்சு. லட்சுமணனைக் கரப்பான் பூச்சி மருந்துக் குக் கொண்டு போயாச்சு. இன்னும் என்னல்லாம் செய்யப் போறோமோ தெரியல... நீயாவது அடுத்த தலமுறைக்கு நல்லதைக் கொண்டு போய்ச் சேக்கற வழியப் பாரு!

லட்சுமணன் கோடு போட்டாங்கற சமாசாரம், அதாம்பா... லட்சுமண் ரேகா சமாசா ரம் ராமாயணத்துல கெடயாது. வால்மீகியும் சொல்லல. கம்ப ராமாயணத்துலயும் இல்ல. ஆனா என்ன செய்யிறது? ஜனங்க மத்தியில அப்பிடித்தானே பரவிக் கெடக்குது. இதெல்லாம் போவறத்துக்கு ஒரு வழியை, கடைசியில சொல்றேன். வா! அடுத்ததப் பாக்கலாம்.

இது மகாபாரதத்துல வர்றது. கர்ண னோட கடைசி காலத்துல அவன்கிட்ட போயி, ‘நீ செஞ்ச புண்ணியத்த எல்லாம் குடு’னு சாமி தானம் வாங்கிட்டுப் போனதா சொல்லுவாங்க. ஆனா, வியாச பாரதத்துல வியாசர், இப்படி எழுதவே இல்ல. இதுவும் பிற்காலத்துல வந்த தப்பான தகவல்தான். இப்ப பெரிய புராணம். இதுல நந்த னார் கதையைச் சொல்லும்போது, நந்தனார் ஒரு வேதியர்கிட்ட வேலை செஞ்சுட்டு இருந்தாரு. நந்தனாரைக் கோயிலுக்குப் போக விடாம அவுரு தடுத்தாருன்னு சொல்லி, நந்தனாரும் வேதியரும் பேசினதை வாத பிரதிவாதம் மாதிரி விரிவா சொல்லுவாங்க. இது பொய்! பெரிய புரா ணத்துல இப்பிடி இல்ல. ஆதனூர் வேதியன்னு (நந்தனாரை அடிமையாக வைத்திருந்த பிராமணர்) ஒரு கேரக்டரே கெடையாது. இதுவும் நம்ம காலத்துல வந்த தவறான தகவல் தான்!’’ என்றார் தாத்தா.

‘‘நச்சு’னு இருக்குது தாத்தா... கலக்கிடு றேன். இந்தத் தப்பெல்லாம் போறதுக்கு வழி சொல்றேன்னு சொன்னீங்களே! அத யும் சொல்லுங்க!’’ என்றான் டீன்ஏஜ்.

தாத்தா சொன்னார்: ‘‘கஷ்டமான காரியம் இல்லப்பா அது. சுலபம்தான். ராமாயணமோ, பாரதமோ... எந்த நூலா இருந்தாலும் சரி! இந்தக் காலத்துல எல்லா மூல நூலும் எளிமையான தமிழ்ல கெடைக்குது. அதப் படிச்சாப் போதும். இதப் பத்தியெல்லாம் நீ விரிவா சொல்லு! ஆயிரம் பேர் கேட்டா, அதுல ஒரு பத்துப் பேராவது கடைப்பிடிப்பாங்க, இல்லையா. தைரியமா பேசு!’’ என்றார்.

சந்தோஷத்துடன் எழுந்த டீன்ஏஜ் பையன், முகம் மலரத் தாத்தாவிடம் இருந்து விபூதியை வாங்கி இட்டுக் கொண்டு கிளம்பினான்.



சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 24, 2010 10:26 pm

காரீலை நேரம். தும்பைப்பூப் போல வெண்மையும் மென்மையுமான ஆடை அணிந்து, வெளியே கிளம்பத் தயாரானார் தாத்தா. அப்போது வீட்டு வாயிலில் நிழலாடியது. கையில் ஒரு மஞ்சள் பையை பவ்வியமாகப் பிடித்தபடி ஒருவர் நின்றிருந்தார். மூக்குக் கண்ணாடி வழியாக அவரை உற்றுப் பார்த்தார் தாத்தா. வந்தவரின் தயக்கத்தைப் புரிந்து கொண்டு, ‘‘உள்ள வாங்க!’’ என்றார்.

வந்தவரோ அங்கிருந்தபடியே, ‘‘பட்டாபிங்க றவர் வீடு...’’ என்று இழுத்தார்.

‘‘இதுதான் பட்டாபி வீடு. நான்தான் பட்டாபி. மொதல்ல உள்ள வாங்க!’’ என்றார் தாத்தா.

வந்தவர் மிக உரிமையாக வீட்டுக்குள் புகுந்து அவராகவே உட்கார்ந்தார். கையில் இருந்த மஞ்சள் பையை அப்போதும் கீழே வைக்கவில்லை. மிகவும் பயபக்தியோடு பிடித்துக் கொண்டிருந்தார். தாத்தா, அவரை உற்றுப் பார்த்தார். வந்தவர், ‘‘என்னடா பட்டாபி! திருதிருனு முழிக்கறே. உத்து உத்துப் பாக்கற. என்னைத் தெரியலியா?’’ என்றார். தாத்தாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

‘‘நான்தாண்டா சீனு. உன் பால்ய சிநேகிதன். மும்பையிலேர்ந்து போன மாசந்தான் இங்க வந்தேன். இனிமே நிரந்தரமா இங்கதான் டேரா. போன வாரம் எக்குத்தப்பா உன் பிள்ளையைப் பாத்தேன். அவன்தான் அட்ரஸ் குடுத்து, ‘நேரம் கெடைக்கும்போது வாங்க மாமா’னான். ஆனா, இப்பவே வர்ற மாதிரி ஆகிப்போச்சு!’’ என்றார்.

பால்ய சிநேகிதனைப் புரிந்து கொண்டதும் தாத்தாவின் கண்கள் வியப்பால் விரிந்தன. ‘‘நா(ன்) சந்தேகப்பட்டேன். டேய்! சீனு! என்னடா இது? இப்பிடிக் கெழவனாப் போயிட்டே!’’ என்றபடி சீனுவின் கையைப் பிடித்தார்.

‘‘ஆமா!... உங்கிட்ட மட்டும் அப்பிடியே இளமை தாண்டவமாடுதாக்கும்? வயசாயிடுச்சுன்னா இப்பிடித்தான். வந்த வேலயப் பாக்கறேன். இந்தா! இதப் பிடி! ஆன்மிகம்தான் நல்...லா உனக்குள்ள ஊறிப் போயிருக்கே’’ என்றபடி சீனு, தன் கையிலிருந்த மஞ்சள் பையை நிதானமாகத் திறந்து, ஜாக்கிரதையாக யந்திரம் ஒன்றை எடுத்துத் தாத்தாவின் கையில் கொடுத்தார் (அதன் பிறகு தாத்தாவும், சீனுவும் தங்கள் மலரும் நினைவுகளைப் பேசிக் கொண்டு இருந்தது தனிக் கதை).

பிளாஸ்டிக் கவரில் இருந்த யந்திரத்தை வாங்கிய தாத்தா, அதை முன்னும் பின்னுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு மேஜை மேல் வைத்தார். ‘‘சொல்லு சீனு! உன் பிரச்னை என்ன?’’ என்றார்.

அதுவரை சகஜமாகப் பேசிக் கொண்டிருந்த சீனு முகத்தில் சற்றுக் குழப்பத்துடன், ‘‘யாரோ குடுத்தாங்கன்னு என் சம்சாரம் இதை வாங்கிட்டு வந்தா. இதப் பத்திச் சொல்லேன். இத வெச்சுக்கலாமா?’’ என்றார்.

சாய்வாக உட்கார்ந்திருந்த தாத்தா, கண்ணாடியைக் கழற்றி வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து சொல்லத் தொடங் கினார். ‘‘சீனு! நீ கேட்ட கேள்வி நல்ல கேள்விதான். பதில் சொல்ல நேரம் ஆகுமே... பரவால்லியா?’’ என்றார்.

‘‘அட... நீ வேறப்பா! ரிட்டயர் ஆயாச்சு. இனிமேலாவது கொஞ்சம் நல்லதத் தெரிஞ்சுக்கலாமே. டயம் ஆனாலும் பரவாயில்ல!’’ என ஊக்கப் படுத்தினார் சீனு.

தாத்தா ஆரம்பித்தார். ‘‘இதை வாங்கினா இந்த யந்திரம் இலவசம், அதை வாங்கினா அந்த யந்திரம் இலவசம்னு கெடைக்கிற எல்லா யந்திரத்தையும் வாங்கி வீட்டுல வெச்சுக்கக் கூடாது. ஒவ்வொரு பிரச்னை தீரவும் அல்லது ஒவ்வொரு நன்மையைப் பெறவும் யந்திரங்கள் உண்டு. பூஜைக்கு உரிய அப்படிப்பட்ட யந்திரங்களைக் கையால்தான் எழுத வேண்டும். மானாவாரியா, ஒட்டுமொத்தமா மெஷின்ல அச்சடிச்சுத் தள்ளக் கூடாது. எனக்கு யந்திரம் எழுதத் தெரியும். ஆனா, நான் எழுதக் கூடாது. ஏன்னாக்க, எனக்கு மந்திர ஸித்தி கிடையாது. நாம அணுகுகிற குருவுக்கு மந்திர ஸித்தி கிடைச்சுருக் கணும். நம்மளோட மந்திர ஸித்திக்கு மொதல்ல குரு மூலமா மந்திர உபதேசம் வாங்கணும். அப்பத்தான் நாம வாங்கிக்கற மந்திர உபதேசம் பலன் கொடுக்கும். மந்திர உபதேசம் வாங்கின நாம, முறைப்படி அதை ஜபம் செய்யணும். அப்பத்தான் மந்திரம் ஸித்தியாகும். அதுக்கு அப்பறமாதான் நாம யந்திரம் எழுதலாம்.

யந்திரம் எழுதறவங்களுக்குக் கொஞ்சமாவது ஜோசியம் தெரியணும். நாம யாருக்கு யந்திரம் எழுதறோம்? நம்ம பாட்டுக்கு யந்திரத்தக் குடுக்கறோமே.. இத வாங்கிக்கிட்டுப் போறவனுக்கு இத பூஜை பண்ணி, பலனை அடையற பாக்கியம் இருக்கா? இப்பிடிங்கறதயெல்லாம் ஜாதகத்தப் பாத்துத் தெரிஞ்சுக்கணும். அடுத்தது யந்திரம் எழுதின உடனே அத, அதுக்குன்னு உண்டானவங்ககிட்ட உடனே குடுத்துரக் கூடாது. குறிப்பிட்ட காலம் வரைக்கும் நாம அதை பூஜை பண்ணணும். அதுக்குப் பவரை ஏத்தணும். அதுக்கு அப்பறமா யாருக்காக யந்திரம் செஞ்சோமோ அவரைக் கூப்பிட்டுப் பூஜை முறைகள்லாம் சொல்லி, வழிகாட்டணும். இப்பிடி கெடைக்கிற யந்திரத்த வெச்சு பூஜை பண்ணினா கண்டிப்பா பலன் உண்டு!’’ என்றார் தாத்தா.

‘‘யப்பாடி! இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?’’ சீனு.

மேஜை மேல் சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டில் இருந்த யந்திரத்தை எடுத்து சீனுவிடம் காட்டிய தாத்தா, ‘‘சீனு! இந்த யந்திரம் உள்ள பாக்கெட்டைப் பாத்தியா? நல்லா மொரட்டுத்தனமா ‘மொற மொற’ன்னு இருக்குது. இதுல உரசறதுலியே, யந்திரத்துல கீறல் விழுந்து புதுசு புதுசா கோடுங்க உண்டாயிடும்’’ என்று தாத்தா சொல்லிக் கொண்டிருக்கும்போதே சீனு இடைமறித்தார்: ‘‘ஏன்? அப்பிடி ஆகக் கூடாதா? அதுல என்ன பிரச்னை?’’

‘‘ஆமாம்! அப்பிடி உண்டாகக் கூடாது. அது எப்படிப்பட்ட யந்திரமா இருந்தாலும் சரி! இந்த மாதிரி உதவாத யந்திரமா இருந்தா, அதைத் தூக்கிப் போட்டுறலாம். பிரச்ன ஒண்ணும் இல்ல. ஆனா, நாம ஒழுங்கா பூஜை செய்யற யந்திரத்துல இப்பிடிக் கோடுங்க விழக் கூடாது. விழுந்தா... பலனே மாறிப் போயிடும். நாம எதிர்பாத்ததுக்கு மாறா விபரீதமான பலன்கூட உண்டாகலாம்!’’ என்றார் தாத்தா.

‘‘யப்பாடா! நல்லா தெளிவாவே சொல்றடா பட்டாபி நீ! இப்ப இந்த யந்திரத்த என்ன செய்யலாம் சொல்லு!’’ எனக் கேட்டார் சீனு.

‘‘நீ கொண்டு வந்த யந்திரத்துனால எந்த ஒரு பலனும் கெடையாது. சும்மா அதுபாட்டுல கெடக்கட்டும்னா வேணும்னா வீட்டுல போட்டு வெச்சுக்க! ஏதாவது உறுத்தலா தோணினா கொண்டுபோய் கோயில் உண்டியல்ல போடு!’’ என்றார் தாத்தா.

‘‘அத நீயே செய்டா பட்டாபி! நான் உங்கிட்ட குடுத்த யந்திரத்த நீயே ஏதாவது கோயில் உண்டியல்ல போட்டுரு! நான் வரேன். இந்தா! இதுதான் என்னோட அட்ரஸ். அப்பப்ப வந்து தலையக் காட்டு!’’ என்றபடியே கிளம்பினார் சீனு.



சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 27, 2010 8:11 pm

நன்றி சிவா, மேலும் வார காத்திருக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 28, 2010 8:02 am

ஒரே மூச்சில் யாவற்றையும் படித்து முடித்தேன். ஆஹா எவ்வளவு விஷயங்கள். மிகவும் நன்றி, சிவா சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 154550 சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 4 154550 . இன்னும் இரெண்டு மூன்று முறை நிதானமாக படித்து புரிந்து கொள்ள வேண்டும். மார்கழி சிறப்பு பதிவென மகிழ்ந்தேன்.

ரமணீயன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 28, 2010 8:52 am

மிக மிக அருமையான பதிவு. மக்களின் வாழ்க்கை முறை அவர்களை நெறிப்படுதிஉள்ளது என்பதற்க்கு இந்த கட்டுரைகளே சான்று. ஸ்கேன் பற்றிய தகவல்கள் அருமை. மார்கண்ட புராண செய்திகள் அனைவரும் அறிய வேண்டும்.

இதுபோன்ற பதிவுகள் மானுட சுயம் அறிதலுக்கான பொக்கிஷம் என்றே கூறலாம்.

நன்றி. கா.ந.கல்யாணசுந்தரம்.

senthilmask80
senthilmask80
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Postsenthilmask80 Wed Dec 29, 2010 11:10 am

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

இங்கிருந்து நேரடியாக தரவிறக்கம் செய்யலாம்...

http://www.pkp.in/mydrive/mydrive/Tamil%20E%20Books/Pattapi-Summava%20Sonnanga%20Periyavanga.pdf


பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Dec 29, 2010 12:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக