புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 9:22 pm

First topic message reminder :

மாலை நேரம். வீட்டு வாயிலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே... முன் அறையில் தாத்தா ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அதிலேயே மூழ்கிப் போயி ருந்த அவரது கவனத்தை, ‘லொட்டு...புட்டு’ என்று ஏதோ சத்தம் திசை திருப்பியது. நிமிர்ந்த தாத்தாவை, முறைத்துப் பார்த்தபடி உள்ளே நுழைந்தான் பேரன்.

புத்தகத்தை மூடி வைத்த தாத்தா, ‘‘காலைக் கழுவிட்டு உள்ளே வா!’’ என்றார் சற்றுக் கறாராக.

‘‘செருப்பு போட்டுக்கிட்டுத்தானே போனேன். வெறுங் காலோடவா போனேன்?’’ என்று முணுமுணுத்தபடியே கால்களைக் கழுவிக் கொண்டு தாத்தாவை நெருங்கினான் பேரன். வெளியில் சுற்றிவிட்டு வந்ததனால் உண்டான வியர்வையும் அடங்கவில்லை; தாத்தாவின் கறார் வார்த்தைகளால் உண்டான வருத்தமும் அடங்கவில்லை அவனுக்கு.

குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு வந்து, மகனிடம் நீட்டினாள் தாயார்.

‘‘கொஞ்ச நேரம் கழிச்சுக் குடி!’’ என்றார் தாத்தா.

கோபம் பொத்துக் கொண்டு வந்தது பேரனுக்கு.

‘‘பிராணனை வாங்கறியே தாத்தா! உன் காலத்து சமாசாரத்தை எல்லாம் இந்தக் காலத்துல யார் சீண்டுறா? விஞ்ஞானம் எங்கேயோ போய்க்கிட்டிருக்கு. இந்தக் காலத்துல போய்.... உதவாததையெல்லாம் சொல்லிக்கிட்டு...’’ என்று வெடித்தான் பேரன்.

சிரித்தார் தாத்தா. ‘‘உதவாதது எதையும் நம்ம முன்னோர்கள் சொல்லிட்டுப் போகலை. என்ன சொன்னே? விஞ்ஞான வளர்ச்சியா, ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ! அணுவைப் பற்றின சிந்தனைகூடத் தோணாத அந்தக் காலத்துலேயே விஞ்ஞான உண்மைகளை சொன்னவங்க நம்ம பெரியவங்க. அதைப் பத்தி விளக்கமா சொன்னா தான் உனக்குப் புரியும். இந்தா, அதுக்கு முன்னாடி இப்ப தண்ணீரைக் குடி!’’ என்றபடி தண்ணீரை பேரனிடம் நீட்டினார் தாத்தா.

‘இந்தத் தாத்தா பொய் சொல்றாரா? அல்லது ஏதாவது உண்மை இருக்குமா?’ என்ற குழப்பத்துடன் தண்ணீரை வாங்கிக் குடித்த பேரன், ‘‘என்ன தாத்தா சொல்றே? நம்ம பெரியவங்க... விஞ்ஞான உண்மை... அது இதுன்னு என்னென்னவோ சொல்றே? இதெல்லாம் உண்மையா?’’ என்றான்.

தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘‘நான் சொல்றேன். நீயே தீர்மானிச்சுக்கோ! அணுவைப் பற்றி மேல் நாட்டுக்காரங்க யாரும் யோசிக்காத அந்தக் காலத்துலேயே அதுபத்தின விஷயங்களை நம்ம பெரியவங்க விளக்கமா சொல்லியிருக்காங்க தெரியுமா? கம்பராமாயணத்துலயும் இதுபத்தி ஒரு தகவல் உண்டு. யுத்த காண்டத்துல, ராவணனுக்கு விபீஷணன் யோசனை சொல்றான். அப்ப அவன் ஹிரண்யகசிபுவை பத்திச் சொல்றதைப் படிக்கிறேன், கேளு...

‘எங்கே இருக்கிறான் உன் இறைவன்?’ என்று தன் மகனைப் பார்த்துச் சீறினான் ஹிரண்யகசிபு. பிரஹ்லாதன் பதில் சொன்னான்: ‘சாணிலும் உளன். ஒரு தன்மை அணுவினை சத கூறு இட்ட கோணிலும் உளன்!’

‘அணுவுக்குள் அணுவாக இறைவன் இருக்கிறான்’ என்பதைச் சொல்ற இந்த இடத்துல, அணுவை நூறு(சத) கூறுகளாகச் செய்து, அதில் ஒரு சதவிகித அணுவை ‘கோண்’ என்று, கம்பராமாயணம் குறிப்பிடுது’’ என்ற தாத்தா சற்று நிறுத்தினார்.

பேரன் ஆச்சரியப்பட்டான்.

ஓரக்கண்ணால் அவனது வியப்பை ரசித்தபடி தாத்தா தொடர்ந்தார்: ‘‘பிளக்க முடியாததுன்னு சொல்லப்பட்ட அணுவைப் பிளந்து, ஒரு சதவிகித அணுவுக்கும் தமிழில் பெயர் வெச்சுட்டாங்க அந்தக் காலத்துலயே! ஆனால், எனக்குத் தெரிஞ்சு இன்னிக்கும் ஒரு சதவிகித அணுவுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படலை. சரி... மேலே சொல்றேன். கம்ப ராமாயணமே, அணுவின் செயல்பாட்டையும் சொல்றது.

போர்க்களத்தில் இந்திரஜித் இறந்து கிடக்கிறான். அவன் தாயார் மண்டோதரி அழுகிறாள். ‘தலை சிறந்த வீரனான உன்னை& இந்திரனையே வென்று இந்திர ஜித் என்று பெயர் பெற்ற உன்னைக் கொன்று விட்டார்களே! அணு ஆயு தத்தை ஏவ, அது ஓடிவந்து வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கியது போல் இருக்கிறது’ என்கிறாள்.

அந்த வரி: உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!

எங்கோ ஓரிடத்தில் சுவிட்சை அழுத்தியதும் அணு ஆயுதம் சீறிக் கிளம்பும். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கறது. இதைத் தான் கம்ப ராமாயணம், ‘உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!’னு சொல்றது!’’ தாத்தா சற்று நிறுத்தினார்.

பேரன் பெருமூச்சு விட்டான்!

தாத்தா தொடர்ந்தார்: ‘‘இப்போ கால் கழுவுற விஷயத்தைச் சொல்றேன். கவனமா கேள்! நின்றாலும் நடந்தாலும் உட்கார்ந்தாலும் நம்ம கால் மட்டும்தான் தரையில் பட்டுக்கிட்டிருக்கும். இப்படிக் கண்ட இடத்துலயும் அலையுற கால்கள்ல ஏராளமான கிருமிகள் ஒட்டிக்கிட்டிருக்கும். கால் கழுவாம இருந்தா அவ்வளவு கிருமிகளும் கால் களில் உள்ள நகக் கண் வழியா உள்ளே புகுந்து வியாதியை உண்டாக்கும். அதனாலதான் நம்ம பெரியவங்க காலைக் கழுவிட்டு உள்ளே வரச் சொன்னாங்க.

என்னதான் கழுவினாலும் ஒன்றிரண்டு கிருமிகள் கால்களில் ஒட்டிக் கிட்டிருந்தா, என்ன செய்யுறது?

அதுக்காகவே வீட்டு வாசப் படியில் மஞ்சள் பொடியைக் குழைத் துப் பூசி வெப்பாங்க. காலைக் கழுவிட்டு மஞ்சள் பூசின வாசப்படி வழியா உள்ளே நுழைஞ்சா, காலில் மிச்ச மீதி இருக்கும் கிருமிகளும் அழிஞ்சு போயிடுமாம். தலை சிறந்த கிருமி நாசினி மஞ்சள் என்பதை தெரிஞ்சதாலதான் நம்ம பெரியவங்க அப்படி செஞ்சாங்க. இதே போல சாப்பிடறதுக்கு முன் னாலயும் சாப்பிட்ட பிறகும் கால் கழுவறதும் நல்லது. இதனால ஜீரண உறுப்புகள் பலப்படும். ஜீரண சக்தி அதிகரிக்கும். புரிஞ்சுதா?’’ என்றார் தாத்தா.

பிரமிப்பில் இருந்த பேரன் வாயைத் திறந்தான். ‘‘புரிஞ்சுது தாத்தா... புரிஞ்சுது! இதையெல்லாம் உணர்ந்து ஃபாலோ பண்றதாலதான், உங்களை மாதிரி பெரியவங்க வயசானாலும் கரும்பைக் கடிச்சு சாப்பிடுறீங்க. நாங்களோ...’’ என்ற பேரனை இடைமறித்த தாத்தா, ‘‘கரும்பையே ஜூஸாகக் கேட்கறீங்க!’’ என்றார் கலகல சிரிப்புடன்.

‘‘அது போகட்டும் தாத்தா! நான் வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும், அம்மா தந்த தண்ணீரைக் குடிக்க விடாம, அப்புறமா குடிக்கலாம்னு சொன்னீங்களே, அது ஏன்? சொல்லுங்க!’’ என்றான்.

‘‘இதற்கு உண்டான பதிலைப் பெரிய புராணம் சொல்றது. அதையும் சொல் றேன்’’ என்றார் தாத்தா.

‘‘சேக்கிழார் எழுதினதுதானே?’’ என் றான் பேரன்.

ஆச்சரியப்பட்டார் தாத்தா. ‘‘அடடே... சேக்கிழார் எழுதினதை எல்லாம் சரியாச் சொல்றியே... பரவாயில்லை!’’ எனப் பாராட்டினார்.

‘‘தாத்தா! இந்தக் காலத்துப் பசங்களான எங்களைப் பத்தி தப்பாவே நினைச்சுக்கிட்டிருக்கீங்க போல! கொஞ்சம் கொஞ்சமாவது எங்களுக்கும் தெரியும். மற்றதைத் தெரிஞ்சுக்கிற ஆர்வமும் இருக்கு! ஏற்கும்படி சொல்ல வேண்டியது அனுபவசாலியான பெரியவங்க கடமை! சரி... சரி! நான் கேட்டதுக்குப் பதிலைச் சொல்லுங்க. பாராட்டெல்லாம் அப்புறமா வெச்சுக்கலாம்’’ என்று ஆர்வத்துடன் கேட்டான் பேரன்.

தாத்தா சொன்ன பதில், அடுத்த விஞ் ஞான ஆச்சரியம்!



சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 20, 2010 10:07 am

சிவா இதெல்லாம் படிக்கும்போது அசந்து போய்ட்டேன்.எத்தனையோ முறை சுகி.சிவத்தோட புத்தகங்களை படிக்கனும்ன்னு முயற்சி செய்து இருக்கேன். ஆனா என்னால முடியல. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சிவா




சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Uசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Dசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Aசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Yசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Aசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Sசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Uசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Dசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Hசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 20, 2010 1:57 pm

‘மார்கழி மட்டும் என்ன உசத்தி?’

அன்று வீடு முழுதும் ஒரே ரகளை. கண்டது கண்டபடி இறைந்து கிடந்தன. பரண்மேல் இருந்த இரண்டு, மூன்று புத்தகக் கட்டுகள் கீழே இறக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டன. ‘என்ன தேடுகிறோம்’ என்று யாரும் சொல்லாததால், இந்த ரகளையில் தாத்தா பங்கேற்கவில்லை. சற்று நேரத்தில் பேரன் பேத்திகளும், பிள்ளையும், மருமகளும் ஓய்ந்து போய் உட்கார்ந்தார்கள்.

படித்துக் கொண்டிருந்த பேப்பரை மடித்து வைத்த தாத்தா, ‘‘என்ன? எல்லாரும் தேடியாச்சா?

கிடைச்சுதா? கிடைக்காதே!’’ என்றார் சிரிப்போடு. அனைவரும் ஒரே குரலில், ‘‘நாங்க என்ன தேடறோம்னு தெரியுமா?’’ எனக் கேட்டார்கள்.

‘‘திருப்பாவை, திருவெம்பாவை புத்தகத்தைத்தானே தேடுகிறீர்கள்?’’ என்றார் தாத்தா.

‘‘ஆமாம்’’ என ஆச்சரியத்தோடு குரல்கள் வந்தன.

‘‘மார்கழி மாசம் வந்தா, இந்த மாதிரி தேடுவீங்கனு தெரிஞ்சுதான் ஏற்கெனவே எடுத்து வெச்சுட்டேன்’’ என்றார் தாத்தா.

‘‘அதான் நாங்க தேடினப்ப கெடக் கலியா?’’ என்றபடியே அனைவரும் தாத்தா வைச் சூழ்ந்து கொண்டார்கள். ‘‘ஏன் புத்த கத்தை எடுத்து வெச்சுக்கிட்டீங்க? நாங்க இன்னிக்கு மானாவாரியா கேள்வி கேக்கப் போறோம்!’’ என்றனர்.

மடித்து வைத்த பேப்பரைக் கையில் எடுத்தார் தாத்தா. ‘‘அவங்க அவங்க வேலயப் பாருங்க! நான் பேப்பரை முடிக்கிறேன்’’ என்றார்.

‘‘இன்னிக்கி லீவு. ஞாயித்துக்கிழமை. அதனால தான் உங்ககிட்டே ஆற அமர பேசலாம்னு. பேப்பரைக் கொண்டாங்க!’’ என்று சொல்லி, தாத்தாவின் கையில் இருந்த பேப்பரைப் பிடுங்கிக் கீழே வைத்தார்கள் சுற்றியிருந்தவர்கள்.

‘‘ஓ! வேற வேலை இல்லேனுதான் என்னச் சுத்திக் கோலாட்டம் போடறீங்களா? சரி... சரி வாங்க! நீங்களா கேக்கறப்ப நான் சொல்லாம இருக்கக் கூடாது. ஒவ்வொருத்தரா கேளுங்க’’

‘‘மார்கழி மாசம் மட்டும் என்ன ஒசத்தி?’’ முதல் கேள்வியை கேட்டாள் மருமகள்.

‘‘நமக்கு ஒரு வருஷம்கறது, தேவர்களுக்கு ஒரு நாள்னு கணக்கு. அந்தக் கணக்குப்படி மார்கழி மாசம்ங்கறது தேவர்களுக்கு அதிகாலை நேரம். அதனாலதான், அந்த நேரத்துல அதாவது மார்கழி மாசம் முழுதும் தெய்வ வழிபாடு செய்ய றோம். ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’னு கிருஷ்ண பரமாத்மாவே கீதையில சொல்லியிருக்கார்.’’

பதில் சொன்ன தாத்தாவை இடைமறித்தான் பேரன்: ‘‘தாத்தா... மார்கழி மாசப் பனியில இழுத்துப் போத்திக்கிட்டுத் தூங்கினா, என்னமா ஒரு சந்தோஷம். அதுவும் விடியக் காலை வேளையில...’’

அவன் கன்னத்தை செல்லமாகத் தட்டிய தாத்தா தொடர்ந்தார்: ‘‘மார்கழி மாசத்துலதான் நமக்கு ஆரோக்கியத்தக் குடுக்கற ஓசோன் அதிகமா இருக்கு, அதுவும் அதிகாலை நேரத்துல நிறையவே இருக்குன்னு விஞ்ஞானமும் சொல்லுது. அத முழுமையா நாம அனுபவிக்கணுங்கிறதுக்காகத்தான் விடிகாலையில வீதி வீதியா பஜன பாடிட்டுப் போவாங்க. உன்னை மாதிரி போர்த்திக்கிட்டு தூங்க மாட்டாங்க... புரிஞ்சுதா?’’

இப்போது மகன் கேட்டான்: ‘‘சரிப்பா... மார்கழி மாசத்துல திருப்பாவை, திருவெம்பாவைக்கு மட்டும் அப்படி என்ன முக்கியத்துவம்?’’

தாத்தா விளக்கினார். ‘‘திருப்பாவை திருவெம்பாவைங்கற ரண்டும் உருவானது மார்கழி மாசத்துலதான். அதுனால இதை மக்கள் மத்தியில சின்னஞ் சிறு வயசுல இருந்து பழக்கப்படுத்திடணும்னு காஞ்சி மகா ஸ்வாமிகள் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடெல்லாம் நடத்தி, அந்தப் பாட்டுகளைப் பாக்காம ஒப்பிக்கறவங்களுக்குத் தங்கக் காசு வெள்ளிக் காசெல்லாம் குடுத்தாரு. ரண்டு பாவை நூல்களையும் படிக்கணும். திருப்பாவையில மொதல் பாட்டே, மாணிக்கவாசகர நெனச்சு ஆரம் பிச்ச மாதிரி ‘மா’ர்கழித் திங்கள்னு ஆரம்பிக்குது. திருவெம்பாவையில மொதல் பாட்டோ, ஆண்டாள நெனச்சு ஆரம்பிச்ச மாதிரி ‘ஆ’தியும் அந்தமும்னு ஆரம்பிக்குது.” _ ஆர்வத்தோடு தாத்தா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த பேத்தி, ‘‘தாத்தா... எனக்கு ஒரு சந்தேகம். மார்கழில மட்டும் ஸ்பெஷலா கோலம் போட்டு, அதுமேல பறங்கிப் பூவோ, பூசணிப் பூவோ வெக்கிறோமே, அது எதுக்கு?’’ என்றாள்.

‘‘இப்ப இருக்கற மாதிரி அந்தக் காலத்துல, கல்யாணத்துக்கு ஜோடி பார்க்கிற மேட்ரிமோனியல் பகுதியெல்லாம் கெடையாது. அதுனால, எந்தெந்த வீட்டுல கல்யாணத்துக்குப் பொண்ணோ பிள்ளையோ தயாரா இருக்காங்களோ... அந்த வீட்டு வாசல்ல கோலத்துல பூ வெப்பாங்க. காலையில வீதி வீதியா பஜன பாடிட்டு வர்றவங்க கண்ணுல அந்தப் பூ தென்படும். தை மாசம் பொறந்த உடனே பேசி, கல்யாணத்த முடிச்சுடுவாங்க!

மார்கழி மாசம் மட்டும் பெருசு பெருசா கோலம் போடணும்ங்கறது இல்ல. தினந்தோறும் போடணும். அதுவும் மொக்கு மாவு (கல் தூள்) மாதிரி இருக்கிற மாவுங்கள்ல கோலம் போடக் கூடாது. இதப் பத்தி காஞ்சி மகா ஸ்வாமிகள் அற்புதமா சொன்னாரு. ஒரு முறை நான் பெரியவரை தரிசனம் பண்றதுக்காகத் தேனம்பாக்கம் போயிருந்தேன். ராத்திரி நேரம். பெரியவரு படுத்துக்கப் போயிட்டாரு. அங்கியே தங்கிட்டேன். மறு நாள் அதிகாலை நேரம். பெரியவரு, வரதராஜ பெருமாள் கோயில வலம் வரக் கௌம்பிட்டாரு. ஸ்ரீகண்டன், பாலு, நான் இன்னும் ரண்டு மூணு பேரும் கூடப் போனோம். வலம் வரும்போது ஒரு வீட்டு வாசல்ல சின்னக் கொழந்த ஒண்ணு கோலம் போட்டுக்கிட்டு இருந்துச்சு. அத உத்துப் பாத்த பெரியவரு, ‘நீ போட்டியா (கோலத்தை)? நன்னா இருக்கே. ஆனா கோலம் போடறபோது, மொக்கு மாவுலல்லாம் போடக் கூடாது. அரிசி மாவுலதான் போடணும். பண்ணுவியா?’னு கேட்டாரு. கொழந்த தலய ஆட்டுச்சு. அரிசி மாவுல கோலம் போட்டா, எறும்புங்கள்லாம் வந்து அதத் திங்கும். அதை விட்டுட்டு சாக்பீஸத் தண்ணில நனைச்சு, தலையில் மஃப்ளர் கட்டிகிட்டு, ராத்திரியே கோலம் போட்டுட்டு காலையில நல்லாத் தூங்கினா, என்னத்தச் சொல்றது!’’ தாத்தா வருத்தப்பட்டார்.

‘‘வருத்தப்படாத தாத்தா! இனிமேல்லாம் நாங்க அப்படிப் பண்ண மாட்டோம். சரி... சரி... திருப் பாவை திருவெம்பாவை புத்தகத்தக் கொண்டா. ஸ்கூல் போட்டியில சொல்லணும்; பிரைஸ் வாங்கணும்!’’ என்றாள் பேத்தி.

சிரித்தபடியே பக்கத்தில் இருந்த சிறிய அலமாரியைத் திறந்து, திருப்பாவை திருவெம்பாவை நூல்களை எடுத்துக் கொடுத்தார் தாத்தா.



சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 2:05 pm

அனைத்தும் மிக மிக அருமை மார்கழி மாதத்திற்கு இதனை பெருமைகளா வியப்பாக உள்ளது



ஈகரை தமிழ் களஞ்சியம் சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 20, 2010 2:12 pm

அன்று வீடே அமைதியாக இருந்தது. தாத்தா பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். பேரனும் பேத்தியும் வீட்டில் இல்லை; பள்ளிக்கூடம் போய் விட்டார்கள் போலிருக்கிறது. இனம் புரியாத ஒரு சந்தோஷச் சூழல் நிலவியது தெரிந்தது.

தாத்தாவின் மகனும், மருமகளும் அவர் எதிரில் வந்து நின்றார்கள். தாத்தா நிமிர்ந்து பார்த்தார். மருமகள் தன் கணவனுக்கு ஏதோ ஜாடை செய்துவிட்டு, வெட்கத்தோடு குனிந்து கொண்டாள். கணவனோ, ‘நீயே சொல்!’ என்பது போல் ஜாடை செய்துவிட்டு அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.

‘ஏதோ நடந்திருக்கிறது’ எனத் தீர்மானித்த தாத்தா, பேப்பரை மடித்து வைத்துவிட்டு, ‘‘என்னடா? ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாக்கறீங்க! என்ன ஆச்சு? கொழந்த அழுதுதா?’’ என்றார்.

‘‘புள்ளயா பொண்ணானு தெரியல. ஆனா கொழந்தேனு கன்ஃபார்ம் ஆயிடுச்சு!’’ என்றான் மகன்.

‘‘அட்ரா சக்கை! டாக்டரப் போய்ப் பாத்தியா?’’ என்று கண்களில் மலர்ச்சியைக் காட்டினார் தாத்தா.

‘‘நேத்து ராத்திரியே போய்ப் பார்த்தோம். கன்ஃபார்ம் பண்ணிட்டு, ‘எதையாவது நெனச்சு மனசப் படுத்திக்காதம்மா! அது வயத்துல இருக்கற உன் கொழந்தய பாதிக்கும். மைண்ட ஃப்ரீயா வெச்சுக்கிட்டு ரிலாக்ஸா இரு! மேல, நெறைய உங்க மாம னார் சொல்லுவார். அவர்கிட்ட கேட்டுக்க!

அவருக்கு என் நமஸ்காரங்களயும் சொல்லும்மா!’ அப்பிடினு சொன்னார். ராத்திரி நாங்க வந்தபோது நீங்க தூங்கிட்டு இருந்தீங்க. அதான் இப்ப சொல்லிட்டோம்’’ என்றான் பிள்ளை.

தாத்தாவுக்கு வாயெல்லாம் பல். ‘‘நல்ல கை ராசிக் காரண்டா அந்த டாக்டர். அவன் பேசற பேச்சிலியே பாதி வியாதி சரியாப் போயிடும். அவன், அவங்க அப்பா அம்மாகிட்ட இருந்ததைவிட, என் தோள் மேலயும், கைகள்லயும் இருந்தது அதிகம், அனுபவசாலி. மருமகளே! வாம்மா! உட்காரு!’’ என்றார்.

மருமகளும் அருகில் வந்து அமர்ந்தாள். தாத்தா சொல்லத் தொடங்கினார்: ‘‘எதுக்கும் கவலைப் படாதம்மா! நார்மலா நீ செய்யற வேலயெல்லாம் வழக்கம் போல செஞ்சுட்டு வா! வெட்டு, கொல, குத்துங்கற மாதிரில்லாம் வர்ற நிகழ்ச்சிகள டி.வில கூடப் பாக்காத!’’ என்றார்.

மருமகள் தலை குனிந்தபடியே, ‘‘இதுக்கு முன்னாடி பிரசவம் எல்லாம் எம் பொறந்த வீட்டுல நடந்துச்சு. நம்ம வீட்டுல நடக்கற மொதப் பிரசவம் இது. இந்த மாதிரி நேரத்துல, நடந்துக்க வேண்டியதப் பத்தி சொல்லுங்க மாமா! குறிப்பா இன்னிக்கிப் புள்ளைங்களுக்குக்கூட அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடுது. ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டியதா இருக்கு!’’ என்று அங்கலாய்த்தாள்.

தாத்தா சிரித்தார். ‘‘அம்மா! இதுக்கு நான் பதில் சொல்றத விட, கிருபானந்த வாரியார் சொன்னதைச் சொல்றேன். ‘இந்தக் காலத்துல பொறக்கற புள்ளைங்க அடிக்கடி ஏன் ஆஸ்பத்திரிக்குப் போவுதுங்க? காரணம் வேற ஒண்ணுமில்ல... அந்தக் காலத்துல எல்லாம் புள்ளைங்க, பாட்டி வீட்ல பொறக்கும். அடிக்கடி பாட்டி வீட்டுக்குப் போயிட்டு வரும். எல்லாம் பொறந்த எடத்துப் பாசம்தான். அதுனாலதான் பாட்டி வீட்டுக்குப் போயிட்டு வந்துட்டு இருந்துச்சு. இப்ப எல்லாம் பாட்டி வீட்லயா புள்ளைங்க பொறக்குது? ஆஸ்பத்திரியில இல்ல பொறக்குது. அதுனால தான் பொறந்த இடமான ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி போயிட்டு வந்துட்டு இருக்குது புள்ளைங்க. யோசிக்க வேண்டிய விஷயம் இது!’ என்பார் வாரியார். இன்னிக்குப் பொண்ணுங்களும் வேலைக்குப் போவுதுங்க. வேலையில டென்ஷன், அதிகாரிங்க மற்றும் கூட வேலை செய்யறவங்களால டென்ஷன், வீட்டுல ஆயிரத்தெட்டு டென்ஷன். இப்பிடி எப்பவும் டென்ஷனாப் போச்சு வாழ்க்கை. இதுல புத்திசாலிங்க அமைதியா இருந்து வாழ்க்கையை நல்ல விதமா நடத்திட்டு இருக்காங்க.

வழியைப் பாப்போம் வா! இந்த மாதிரி வாயும், வயிறுமா இருக்கும்போது, ஏற்கெனவே சொன்ன மாதிரி கண்டதையும் படிச்சுப் பாத்து, புத்தியக் கொழப்பிக்கக் கூடாது. அது வயத்துக்குள்ள இருக்கற கொழந்தய பாதிக்கும்னு இன்னிக்கு சயின்ஸ் சொல்லுது. இதத்தான் நமக்கு சுலபமா புரியும்படியா மகாபாரதமும், பாகவதமும் சொல்லுது’’ என்றார் தாத்தா.

‘‘என்னது? இதப் பத்தி பாரதத்திலேயும், பாகவதத்திலேயும் சொல்லி இருக்கா?’’ என்று ஆச்சரியம் காட்டினாள் மருமகள்.

‘‘கர்போப நிடதம்னு உபநிடதமே உண்டும்மா! எல்லாருக்கும் புரியும்படியா எளிமையா பாக்கலாம் வா! மகாபாரதத்துல, அர்ஜுனன் மனைவி சுபத்திரை உன்னை மாதிரிதான், கொழந்த உண்டாகி இருக்கா. தங்கச்சியப் பாக்க வந்த கிருஷ்ண பரமாத்மா, பேச்சோடு பேச்சா, போர்க்களத்துல படைகளை அமைக்கும் முறை, வியூகங்களை வகுக்கும் முறை, எதிராளியின் வியூகத்தை, அதாவது படை அமைப்பை உடைத்து, உள்ளே நுழையும் முறைனு விவரிச்சுக் கிட்டுப் போறாரு. கேட்டுக்கிட்டே வந்த சுபத்திரை தூங்கிட்டா. ஆனா, அவ வயத்துல இருந்த அபிமன்யு, ‘உம்! உம்!’னு கிருஷ்ணன் சொல்றதக் கேட்டுக்கிட்டே இருந்தான். கிருஷ்ணன் சொன்னது எல்லாம் அவன் மனசுல பதிஞ்சுச்சு. பிறந்ததுக்கு அப்பறமா, தலைசிறந்த வீரனா தயாரானான். தர்மர், பீமன்னு அவங்களால கூடப் பிளக்க முடியாத வியூகத்தை இந்த அபிமன்யுதான் பிளந்தான். கருவிலேயே திரு சேர்த்துக் கொண்டவன்.’’

‘‘பாகவதத்துல எப்பிடி சொல்லி இருக்குதுன்னு பாக்கலாம். ‘இரணியகசிபு வின் மனைவி, பிள்ளை உண்டாகியி ருந்தபோது, தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நன்மைக்காக நாரதருக்குப் பணிவிடை செய்தாள். நாரதர் அற்புதமான தகவல்களைச் சொன்னார். பிற்காலத்தில் அது அவளுக்கு மறந்து போய்விட்டது. ஆனால், அவள் வயிற்றில் இருந்தபடி கேட்டுக் கொண்டிருந்த பிரகலாதன் மனதில் அது பதிந்தது. பிரகலாதன் தலைசிறந்த பக்தனாக மாறினான்’னு பாகவதம் சொல்லுது. அர்ஜுனன் பேரனான பரீட்சித்தும், இதே மாதிரிதான். இதெல்லாம் பாத்துட்டுத்தான் அயல் நாட்டுக்காரங்க, இந்த மாதிரி பிள்ளை உண்டாகி இருக்கவளுக்கு பாட்டு கேட்கச் செய்யறது, மியூஸிக் கேட்கச் செய்யறதுன்னு எல்லாம் செஞ்சு, நம் ஞான நூல்கள் சொன்னது உண்மைனு ஒப்புக்கறாங்க. அதுனால, நல்ல நல்ல புஸ்தகமா படி! வெட்டு, கொலை, குத்துன்னு டி.வியில பாக்காத! எதயாச்சும் நெனச்சு, மனசக் கொழப்பிக்காத! எம் புள்ள, அதாம்மா உங்க வூட்டுக்காரன் ஏதாச்சும் திட்டினாக்கூட எங்கிட்ட சொல்லு!’’ என்றார் தாத்தா சிரிப்போடு.

‘‘நான் ஏம்ப்பா திட்டப் போறேன்...’’ என்று மகன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குருக்கள் ஒருவர் ஏதோ பேப்பரோடு வந்தார்.



சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 20, 2010 2:15 pm

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 676261 சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 676261 சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 676261 சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 676261 சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 676261 சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 676261 சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 676261

அருமையான பதிவுகள்.. சிவா சார்...

மின்னூல் ல இருந்து ....

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Dec 20, 2010 2:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மிகவும் அருமை சிவா மகிழ்ச்சி மகிழ்ச்சி



சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Mசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Oசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Hசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Aசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 20, 2010 5:37 pm

அருமை சிவா புன்னகை அன்பு மலர் பகிர்வுக்கு நன்றி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Mon Dec 20, 2010 9:10 pm

மிக மிக அருமையான பதிவு. பாராட்டுக்கள் சிவா!

Raju_007
Raju_007
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 25/11/2010

PostRaju_007 Mon Dec 20, 2010 9:47 pm

சு கி சிவத்தின் சிரிப்பு வெடிகள் இணைப்பை சரி செய்யவும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 4:58 pm

கையில் ஒரு நோட்டீஸோடு, தாத்தாவின் எதிரில் வந்து நின்றார் கோயில் குருக்கள். அவருடன் டீன்ஏஜ் பையன் ஒருவனும் இருந்தான்.

நோட்டீஸை தாத்தாவிடம் நீட்டிய குருக்கள், ‘‘உலக நலனுக்காகக் கோயில்ல ஹோமம், யாகம்னு பண்ணப் போறோம். பப்ளிக் ரெஸ்பான்ஸ் நெறயா இருக்கும். ஏற்பாடுகளையெல்லாம் நான் கவனிக்கும்போது, இந்தப் பையனை விட்டு, ‘இதெல்லாம் எதுக்குச் செய்யறோம்’னு சொல்லச் சொல்லலாம்னு ஆசை. நல்லா ஆர்வம் உள்ள பையன். உச்சரிப் பும் தெளிவா இருக்கும். ஒரே ஒரு பிரச்னை இவங்கிட்ட என்னன்னா... இந்தக் காலத்துப் பையனா இருக்கறதால, கொஞ்சம் எடக்கு மடக்காப் பேசுவான். அதனால தப்பா நெனச்சுக்காம இவனுக்கு, என்ன பேசணும்னு சொல்லிக் குடுத்தீங்கன்னா உதவியா இருக்கும்!’’ என்றார். கூடவே, ‘‘இந்த விசேஷத்தன்னிக்கு நீங்க வெளியூர் போறீங்கன்னு தெரிஞ்சுதான் இப்படி மாத்து ஏற்பாடு. பாத்துக்கங்க! பையன் கொஞ்சம் எடக்கு மடக்கு. நா வரேன்!’’ என்ற குருக்கள் கிளம்ப முயற்சித்தார்.

‘‘குருக்கள் ஐயா! கொஞ்சம் இருங்க... அஞ்சு நிமிஷம் கழிச்சுப் போவலாம். பையன் எடக்கு மடக்குன்னு அடிக்கடி சொன்னீங்களே. அப்பிடியெல்லாம் சொல்லாதீங்க. இந்தக் காலத்துப் புள்ளைங்கள்ல ஒண்ணுகூட சோடை இல்ல. எல்லாத்துக்கும் சூப்பர் அறிவு. தமாஷா ஒண்ணு சொல்றேன். கேட்டுட்டுப் போங்க!’’ என்றார் தாத்தா.

‘‘அப்பிடி சொல்லுங்க தாத்தா! இந்தக் காலத்துப் புள்ளைங்கள எப்பப் பாத்தாலும் திட்டிட்டு இருக்கற இவங்கள மாதிரி ஆளுங்களுக்கு நல்லா புரியும்படி சொல்லுங்க தாத்தா!’’ என்று குதித்தான் டீன்ஏஜ்.

குருக்கள் உட்கார்ந்தார். தாத்தா தமாஷைத் தொடங் கினார். ‘‘ஒரு கஞ்சன். எச்சக் கையால காக்கா ஓட்ட மாட்டான். எங்கியாவது கல்யாணத்துக்குப் போவணும்னா கூட, மொத நாளே எதுவும் திங்காம காயக் காயப் போவான். அப்பத்தான கல்யாண வீட்டுல நெறயா சாப்பிடலாம். அவன் ஒரு தடவை ஒரு கல்யாண வீட்டுக்கு சாப்பிடக் கிளம்பினான். அவன் பிள்ளையும் கூடப் போனான். ‘மவனே! நம்ம வழக்கப்படி நேத்திக்கி முச்சூடும் சாப்பிடாம இருந்துட்டோம். இன்னக்கிக் கல்யாண வூட்டுல நல்லா ஒரு கட்டு கட்டிட வேண்டியதுதான். என்ன? அதுனால, கல்யாண வூட்டுல கை கொண்ட மட்டும் சோத்த எடுத்து, நல்லா, ஃபுல்லா கட்டிடு. தண்ணிய மட்டும் குடிக்கவே குடிக்காத. தண்ணிய எங்க வேணாலும் சும்மாவே குடிச் சுக்கலாம்!’ என்று தன் பிள்ளைக்கு உபதேசம் செய்தான் தந்தை. ரெண்டு பேருமா கல்யாண வூட்டுல சாப்பிட உக்காந்தாங்க. அப்பன் சோத்த மட்டும் தின்னுட்டு இருந்தான். புள்ளையோ அப்பப்ப தண்ணி குடிச்சுக்கிட்டே சாப்பிட்டான். அதப் பார்த்த அப்பனுக்கு எரிச்சல். வீட்டுக்கு வந்ததும் புள்ளயப் போட்டு மொத்து மொத்துனு மொத்தி எடுத்துட்டான். பையன் கத்தினான். ‘என்னய அடிக்காத! உள்ளே போய் ஒரு மரக்கால் ஃபுல்லா நெல்லு கொண்டா!’னான். கொண்டு வந்தான் தந்தை. ‘இதுல இனிமே நெல்லு போட முடியுமா?’ என்பது பையன் கேள்வி. ‘முடியாது’னு பதில் சொன்னான் கஞ்சன். பையன் ஒரு சொம்பு தண்ணிய எடுத்து, மரக்கால் நெல்லுல ஊத்தினான். மரக்கால்ல இருந்த நெல்லு அப்பிடியே உள்ள எறங்கிச்சு. இன்னும் நெல்லு போடற அள வுக்கு அதுல எடம் இருந்துச்சு.

‘பாத்தி யாப்பா! இப்பத் தெரியுதா? தண்ணி உள்ள போவப் போவ இன்னும் கொஞ்சம் சோறு எறங்கும்’னான் பையன்.

‘அடப் பாவிப்பய புள்ள! இதை நீ அங்கனயே சொல்லி இருந்தீன்னா நானும் உன்னய மாதிரியே, இன்னும்கூட சேத்து, சோத்தக் கட் டிருப்பேன்ல?’னு கத்திக்கிட்டே பையன மறு படியும் அடிக்க ஆரம்பிச்சான் கஞ்சன்.

அந்த மாதிரி இப்பப் பசங்கள்லாம் புத்திசாலிங்க. அதுங்க என்ன செஞ்சாலும் குத்தம் சொல்லிக்கிட்டே இருந்தா அதுங்க என்னதான் செய்யும்?’’ என்றார் தாத்தா.

‘‘சரி... சரி! நா ஒண்ணும் சொல்லல. இந்தப் பயல, உங்களை மாதிரியே தயாரிச்சு வுட்ருங்க’’ என்ற குருக்கள் கிளம்பினார்.

டீன்ஏஜ் பையனுக்கு ஏக குஷி. ‘‘சொல்லுங்க தாத்தா! இந்த ஹோமம், யாகம்னு செய்யறோமே, இதெல்லாம் எதுக்கு? என்ன பலன்...?’’ என்றான். சற்றுச் சாய்வாக உட்கார்ந்த தாத்தா விவரிக்கத் தொடங்கினார்.

‘‘நம்ம ஞான நூல்கள்ல எல்லாம், இப்ப நீ கேட்டதப் பத்தி விரிவா சொல்லிருக்கு. அதெல்லாம் இன்னிக்கும் பல பேருக்குப் பலனத் தந்திருக்குது. ஒவ்வொண்ணா சொல்றேன். வாங்கி மனசுல பதிய வெச்சுக்க. இதிகாச, புராணங்கள்ல குழந்த வேண்டி யாகம் பண்ணாங்க... மழை வேண்டி யாகம் பண்ணாங்க... பலன் கெடச்சிச்சுன்னு விரிவா எழுதி வெச்சுருக்காங்க. இன்ன பிரச்ன தீர இன்ன ஹோமம், இன்ன யாகம்னெல்லாம் சொல்லியிருக்கு.

இப்ப நடந்தது ஒண்ணு சொல்றேன். என் ரெண்டாவது பையன் பரத்துக்கு ஆண்டு நெறவு நடந்தபோது, அவுனுக்கு ரொம்ப உடம்பு சரியில்ல. கிழிசல் துணிய நனச்சுப் போட்ட மாதிரி படுத்துக் கெடந்தான். அப்ப ஹோமத்தையெல்லாம் நடத்துனவரு, காஞ்சிப் பெரியவாகிட்ட பாராட்டு வாங்கின வேத வித்து, கம்பரசன்பேட்ட ரங்கா சாஸ்திரிகள்ங்றவர். அவர் திடீர்னு, ‘ஏய்! உடம்பு சரியில்லாம கெடக்கற உன் பிள்ளய, உன் சம்சாரத்து மடில எடுத்துவிடு. ஹோமம் முடியட்டும். எல்லாம் சரியாயிடும் பாரு!’னாரு. அப்பிடியே பண்ணுச்சு. ஹோமம் முடிஞ்சுது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அந்தப் பய பரத் எழுந்து வெளயாட ஆரம்பிச்சுட்டான். இது நேரிடையா நா(ன்) அனுபவிச்ச பலன்.

அடுத்ததா, எல்லாருக்கும் தெரிஞ்சத சொல்றேன். போபால் விஷ வாயு விபத்து. ஏராளமான பேர் போயிட்டாங்க. அளவில்லாத பேருக்குப் பல விதமான பாதிப்பு. ஆனா இதுல ஒரு குடும்பம் எந்த வித பாதிப்பும் இல்லாம தப்பிச்சுட்டாங்க. காரணம்? அவங்க தினந்தோறும் ஹோமம் செஞ்சுக்கிட்டு வந்ததுதான். அவங்கள போட்டோ பிடிச்சு, எல்லா பத்திரிகையிலும் போட்டு, இந்தத் தகவலையும் விரிவா எழுதி இருந்தாங்க. வர வேண்டிய கெட்டது பாதிப்பு அந்த ஹோமத்தால ஸ்டாப் ஆச்சு.

ஹோமப் புகை பரவற எடத்துல, உடம்புக்கு பாதிப்ப ஏற்படுத்துற எந்த விதமான கெட்ட கிருமிகளும் இருக்காது; இருந்ததும் அழிந்துவிடும். இந்த மாதிரியான இடத்துக்கெல்லாம் கூப்பிட்டா தவறாம போவணும். ஹோமப் புகை நம் மீது பரவி ஆரோக்கியம் கிடைக்கும். பசும் நெய்யில் எரியற விளக்கு தனது சுத்துவட்டார (அறையை) காற்றை ரொம்பத் தூய்மையா வெச்சுருக்கும். அதுனாலதான் இந்த மாதிரில்லாம் செய்யும்போது பசும் நெய்யை யூஸ் பண்றாங்க!’’ என்றார் தாத்தா.



சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக