ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Today at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Today at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Today at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Today at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Today at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Today at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Today at 6:54 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 09/08/2022
by mohamed nizamudeen Today at 6:36 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Today at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Today at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Today at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Today at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Today at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Today at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Today at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Today at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Today at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Today at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Today at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Today at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Today at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Today at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Today at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Today at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Today at 9:24 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 9:23 am

» கருடாழ்வாரைப் பற்றி சில தகவல்கள்
by ayyasamy ram Today at 9:23 am

» காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
by ayyasamy ram Today at 6:51 am

» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Yesterday at 9:37 pm

» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Yesterday at 7:32 pm

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 6:54 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Yesterday at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Yesterday at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Yesterday at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 5:55 am

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:47 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


thaayumaanavar dr.pro.s.chandra

thaayumaanavar  dr.pro.s.chandra Empty thaayumaanavar dr.pro.s.chandra

Post by eraeravi Fri Dec 17, 2010 9:20 pm

தாயுமானவரின் பரிபூரணானந்தத்தில் பிரபஞ்சக்கோட்பாடு

( ஆய்வு : முனைவர் ச.சந்திரா )

முகவுரை :

அண்டத்தின்கண் ஞானிகள் பலர் அவதரித்து நல்மார்க்கங்களைப் போதித்துச்
சென்றிருக்கின்றனர்.அவர்களுள் ஒருவரே பிரபஞ்சத் தத்துவத்தை ஆன்மீகத்தின்
வழி தெளிவுறச் செய்த ஞான பண்டிதரான தாயுமான சுவாமிகள் ஆவார்.ஆன்மீக உணர்வை
வெகுவாக விரவிக் கலக்காமல், அறிவாற்றலின் அடிப்படையில் படைக்கப்பட்ட நூலே
பரிபூரணானந்தம் ஆகும்.பிரபஞ்சக்கோட்பாடு தாயுமானவரால்
விரித்துரைக்கப்படும் தன்மையை ஆய்வுக்கட்டுரை பகர்கின்றது.

பிரபஞ்சக்கோட்பாடு :

இயற்கையின் கூறுகளான நிலம் ,நீர் ,தீ ,காற்று ,வான் ஐந்திற்கும் அப்பால்
அவற்றை ஆட்டுவிக்கும் ஒன்றே கடவுள்.இந்தக் கொள்கைக்கு நிலைக்களனாக அமைவது
பிரபஞ்சமும் அதில் வசிக்கும் ஜீவன்களும் ஆகும்.உயிர்வாழ் ஜீவன்களும்
பிரபஞ்சமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. பிரபஞ்சம் பல்வேறு நட்சத்திரக்
குடும்பங்களாக இருப்பினும் அதன் தலைமையான சூரியன் தனித்தியங்குவதோடு
மட்டுமல்லாமல் , இதர கோள்களுடனும் இணைந்து இயங்கிவருகிறது.இதைப்போலவே
மனிதனும் தனித்தும் கூட்டாகவும் இயங்கிவருகின்றான்.பிரபஞ்சம் -மனிதகுல
ஒற்றுமைச் செயல்பாடு இவ்விதமாய் தாயுமானவரால் உணர்த்தப்படுகிறது.

ஆத்ம சொரூபமும் பிரகாசமும் :

ஆழியிலிருந்து, நீர் கண்ணுக்கு தெரியாத நிலையில் ஆவியாகி ,பின் மேகமாக
உருமாறுகின்றது.பகலில் சூரியனையும் இரவில் சந்திரன் மற்றும்
நட்சத்திரங்களையும் மறைத்துவிடுகிற இயல்பு அந்த மேகத்திற்கு
வந்துவிடுகின்றது.நீர் தூய ஆவியாக இருந்த வேளையில் சூரிய சந்திரரை
மறைக்கவில்லை.மேகமாக உருவெடுத்த போதுதான் பிரகாசம் நிறைந்த
கோள்களையெல்லாம் மறைக்கின்றது.இந்த மேகத்திற்கு ஒப்பானதுதான் விருப்பு
வெறுப்பு மிகுந்த மானிட மனம்.ஆத்ம சொரூபத்தில் தோன்றுகின்ற இம்மனித மனம்
ஆத்மபிரகசத்தை அழித்துவிடுகின்றது.மனிதமனத்தையும் பிரபஞ்சத்தையும்
ஒப்பிட்டு ' மனதற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் ' (பரி.10: 7) என்று
பாடுகின்றார் தாயுமானவர். பஞ்சபூதங்களுள் ஒன்றான ஆகாயத்தையும் மனித
ஜீவனையும் ஒப்பிட்டு இக்கருத்து அமைந்துள்ளது.

வெப்பமும் வேதனையும் :

உயிர்வாழ் ஜீவன்களுக்கு வெப்பம் இன்றியமையாதது என்பது வெளிப்படை.உயிரை
ஓம்புதலும் உடல் வெப்பத்தைக் காத்தலும் இணைபிரியா ஒன்றாகவே இருந்து
வருகின்றது.மிகைப்பட்ட வெப்பம் காய்ச்சலாக உருமாறி மனித உயிரையே
போக்கிவிடும்.அதுபோலவே மிகைப்பட்ட ஆசைகளை மானிடர் கொள்ளின் வெப்ப
நோயைப்பொல அவை பொருந்தாததாகி அவனைச்சீரழித்துவிடும்.இதனையே ' ஆசைக்கோர்
அளவில்லை ' (பரி.10:1) என தாயுமானவர் உரைக்கின்றார்.பஞ்ச பூதங்களுள்
ஒன்றான நெருப்பையும் மனிதனையும் இணைத்து இக்கருத்து
சொல்லப்பட்டிருக்கின்றது.

வளர்ச்சியும் ஒடுக்கமும் :

உலகச் செயல்பாடுகள் அனைத்தும் ஆதர்ஷண சக்தியே !இப்பிரபஞ்சத்தில் வீசுகின்ற
காற்றானது நெருப்பை வளர்க்கின்றது ;ஒடுக்கவும் செய்கின்றது.பிரபஞ்சத்தில்
வசிக்கும் ஜீவன்களும் . ஜடப்பொருட்களும் இயங்குவதும் ஒடுங்குவதும்
கடவுளின் செயல்பாட்டினாலேயாகும் .உயிர்கள் அறிந்து செய்கின்ற செயலும்
,அறியாமல் செய்கின்ற செயலும் முறையே வளர்ச்சிக்கும் ,ஒடுக்கத்திற்கும்
காரணமாக அமைகின்றது.இதனையே ‘சந்ததமும் எனது செயல்’ (பரி .5:1 ) என்று
பாடுகின்றார் தாயுமானவர்.இதில் பஞ்ச பூதங்க

ளுள் ஒன்றான காற்றையும் மனித செயல்பாடுகளையும் ஒப்புமைப்படுத்தி தாயுமானவர் உரைக்கின்றார்.

இயற்கையும் ஓசையும் :

இயற்கையினின்று இடைவிடாது ஓசை உருவாகிக் கொண்டேயிருக்கின்றது.ஓயாமல்
இயங்குவதற்கே இயற்கை எனப் பெயர். ஓசையும் இயற்கையும் ஒருபொழுதும் பிரிக்க
இயலாத அளவிற்கு ஒற்றுமையினையுடையவை.பிரபஞ்சம் முழுமைக்கும் அடிப்படையாய்
இருக்கின்ற ஓசைக்கு ' நாதப் பிரம்மம் ' என்ற பெயருள்ளது.ஜடப்பொருட்கள்
எல்லாம் சப்த சொரூபமே ! மனித ஜீவன்களின் செயல்பாடுகள் அனைத்தும் ஓசையுடனே
நடக்கின்றன.உயிர்வாழ் மனித ஜீவன்கள் 'தெய்வ நாமா ' போன்ற நாதங்களை
உச்சரித்து அவரவர் ஆத்ம சொரூபங்களை புதுப்பித்துக் கொள்கின்றனர்.இதனையே
தாயுமானவர்

' நாதவடிவென்பர் ' ( பரி.6:3 ) என்கின்றார்.இதில்
பஞ்ச பூதங்களுள் ஒன்றான நிலத்தையும் ஜீவன்களையும் இயைபுப்படுத்திக்
கூறுகின்றார் தாயுமானவர்.

சிற்றலையும் பேரலையும் :

பிரபஞ்சத்தின் மேற்பரப்பில் நிலத்தைவிட நீர் மிகுதியாக உள்ளது.மேலும்
அதிஆழமான பகுதியும் நீரிலுண்டு.இந்த விரிந்த நீர்ப்பரப்பு பேரலையாக
உருவெடுத்து நிலத்தின்மீது , நெடுந்தூரத்திலிருந்து பயணிக்கத் தொடங்கி
நிலத்தின்மீது வந்து விளையாட இயலும்.ஆயினும் அது பேரலையாக உருவெடுத்தும்
சிரமம் அளிக்காது சிற்றலையாக கரையோடு விளையாடிக்
கொண்டிருக்கின்றது.இறைவனும் இதைப்போல் ஆத்ம பக்தர்களுடன் சிறு
சிறுவிளையாடல்களை வைத்துக் கொள்கின்றான்.இதனையே தாயுமானவர் 'ஆழாழி
கரையின்றி நிற்கவில்லையோ ?' ( பரி.9 ; 1 ) என வினவுகின்றார்.இதில்
பஞ்சபூதங்களுள் ஒன்றான நீரையும் மனிதகுலத்தையும் இணைத்துப் பாடுகின்றார்
தாயுமானவர்.

ஜனனமும் மரணமும் :

பிரபஞ்ச நிகழ்வை 'ஒரு
நாள் ' என்று குறிக்கின்ற வேளையில் அதில் பகலும் இரவும்
அடங்கியிருக்கின்றன. அதேபோல் மனித உயிர்களின் 'ஜென்மம்' என்று சொல்லுகின்ற
வேளையில் அதில் ஜனனமும் மரணமும் அடங்கிக் கிடக்கின்றன.எந்த ஜீவன் கர்மம்
செய்யாமல் வாழ்வை நடத்துகின்றதோ அதற்கு அடுத்த ஜென்மம் என்பதில்லை.எந்த
ஜீவனுக்கு 'கர்மா' இருக்கிறதோ அதற்கு ஜனன மரணம் இடைவிடாது நிகழ்ந்து
கொண்டேயிருக்கும்.இந்நிகழ்வு பகல்-இரவு மாறி மாறி தொடர்வதைப் போன்றது
என்கிறார் தாயுமானவர்.இதையே 'தொடு வழக்காய் ஜென்மம் வருமோ' ( பரி .5 ;-6 )
என்னும் அடிகள் உணர்த்துகின்றன.இதில் பிரபஞ்சத்தின் தொடர் நிகழ்வும் மனித
வாழ்வின் இருவேறு பெரு நிலைகளும் இணைத்துப் பேசப்படுகின்றது.

அண்டமும் பகிரண்டமும் :

நமக்கு கட்புலனாகும் சூரியன் ,சந்திரன் ,பூமி போன்ற இயற்கை உருவாக்கங்கள் அகன்று பரந்து விரிந்துள்ளன.ஓர் உள்ளங்கை அளவு

நீர்
போன்றது பிரபஞ்சம்.நம் அறிவுக்கு எட்டாத பகுதி கடல்நீர்
அளவானதாகும்.உள்ளங்கை நீரைத் தெரிந்து கொண்டால் கடல்நீர் முழுமையும்
தெரிந்து கொண்டதற்கு ஒப்பானதாகும்.அதேபோல் பிரபஞ்சத்திற்கு கட்புலனாகும்
பகுதியெல்லாம் தெரிந்து கொண்டால் ,நமக்கு கட்புலனாகாத பெருந்தொகுதி பற்றி
அறிந்து கொள்ள இயலும்.பிரபஞ்சத்தின் தொகைக்கு 'அண்டம்' என்று பெயர்.இதற்கு
அப்பாலிருக்கின்ற அனந்தகோடி பகுதிகள் கணக்கிட இயலா நிலையில்
உள்ளன.இவற்றிற்கு 'பகிரண்டம் ' எனப் பெயர்.இவையனைத்தும் மாயா விகாரமே
என்பதனையே 'அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே ' (பரி.4;1 ) என்னும் அடி
விளக்குகின்றது.ஒருசிலவற்றை தெரிந்து கொள்வதன் மூலம் மனித குலம் பலவற்றை
அறிய இயலும் என்பதனை பிரபஞ்சத்தோடு ஒப்புமைப் படுத்திப் பாடியுள்ளார்
தாயுமானவர்.

ஸ்தூலமும் சூட்சுமமும் :

பிரபஞ்சத்திலிருக்கும் ஐம்பூதஙகளும் ஒன்று மற்றொன்றை
பரிணமிக்கவல்லது.அவ்விதம் பரிணமித்தபின் மீண்டும் தன் முந்திய நிலைக்கு
ஒடுங்கிப் போவதுண்டு. பூதங்களுள் மிக சூட்சுமமமான ஆகாயவெளி எங்கும்
வியாபகமாயிருக்கின்றது ; அந்த வெளியிலிருந்து வாயு உருவாகின்றது ;
நெருப்பானது வாயுவிலிருந்து வருகின்றது ; நீர் உண்டாக நெருப்பு
துணையாகின்றது.இவையனைத்தும் நிலத்திலே நிகழ்கின்றது.சூரியனிடத்திலிருந்து
சிதறிய பூமி நீராகவும் ,நிலமாகவும் அமைகின்றது. அது விரிந்தபின்
வெப்பத்தில் ஒடுங்குகின்றது.வெப்பம் காற்றில் ஒடுங்குகின்றது.காற்று
வெட்டவெளியில் மறைகின்றது.ஸ்தூலமாயிருக்கும் பூதம் இவ்வாறு சூட்சுமமாக
மாறுகின்றது.மனித வாழ்வும் இது போன்றதுதான்.நிலையானது என்று எண்ணுகின்ற
மனித வாழ்க்கை நிலையற்றதாக மாறிவிடுகின்றது.இதனையே தாயுமானவர்
'பூதலயமாகின்ற மாயை ' (பரி.6 ; 1 ) எனக்கூறுகின்றார்.ஐம்பூதங்கள்
ஒன்றுக்குள் ஒன்று அடங்கி ஒடுங்குவது போல்தான் மனித வாழ்வும்
அடங்கியொடுங்கும் என்ற கருத்தே இதன்வழி உரைக்கப்பட்டுள்ளது.

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் :

பஞ்சபூதங்கள் பரம்பொருளிடத்து தோன்றி வந்தவைகளே ! ஜீவன் தன்னை , அறிவுப்
பொருளாக உணர அவனுடைய அறிவுக்கு மூலமாயிருப்பது பரம்பொருளின் பேரறிவாகும்.
ஓருயிர் மற்றோர் உயிருக்கு அந்நியமானது என மனிதன் எண்ணுகின்றான்.அந்த
எண்ணத்திற்கு மாறாக 'எந்த நிலையிலும் ஜீவன் பரமாத்மாவிற்கு அந்நியமானவன்
அல்லன் ' என்பது குறித்தே தாயுமானவரின் பரிபூரணாந்தத்தில்
சொல்லப்பட்டுள்ளது.தாயுமானவர் தான் சொல்லவந்த கருத்தை பிரபஞ்சத்தோடு
ஒப்பிட்டு சொன்ன தன்மை சிறப்புடையதாகும். 'யான் எனும் தன்மை நின்னையன்றி
இல்லாத தன்மையால் வேறு அல்லேன். ' (பரி.5;1 -2 ) என்னும் அடிகள்
மேற்குறிப்பிட்டனவற்றை விளக்குகின்றன.

நிறைவுரை :

பிரபஞ்சம் எவ்விதமாக சமநிலையில் இயங்கி ஒன்றுக்கொன்று மாறுபடாமல்
எப்பொழுதும் செயல்பாட்டு நிலையில் உலகை இயக்குகின்றதோ அதுபோல் மானிட
ஜீவன்கள் வாழ்வில் நேரிடும் இன்பதுன்பங்களை ஒன்றாக பாவித்து சமமாக வாழக்
கற்றுக் கொள்ள வேண்டும்.பிரபஞ்சத்தையும் மனிதகுல வாழ்வையும் ஒப்பிட்டு
பரிபூரணானந்தத்தை அருளிய தாயுமான சுவாமிகளின் மார்க்கத்தை பின்பற்றிச்
செல்லும் வேளையில் நம்மோடு நம் சார்ந்தோரும் நலம் பெறுவர் என்பதில்
ஏதேனும் ஐயமுண்டோ ?
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1737
இணைந்தது : 08/07/2010
மதிப்பீடுகள் : 177

http://www.kavimalar.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை