புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_c10காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_m10காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_c10 
72 Posts - 53%
heezulia
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_c10காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_m10காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_c10காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_m10காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_c10காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_m10காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_c10காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_m10காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_c10காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_m10காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_c10காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_m10காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_c10காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_m10காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Dec 12, 2010 10:23 am

First topic message reminder :

காமநோய்க்குக் கண்கண்ட மருந்து...
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Kagirahoo+1

இன்று வலைத்தளத்தில் கண்ட ஒரு செய்தி. இல்லை.இல்லை.. பரவலாகப் பல வலைத்தளங்களில் பல்வேறு தலைப்பின் கீழ் உலா வந்து கொண்டிருக்கின்ற செய்தி இது. உங்கள் பார்வைக்காக.

சுவிட்சர்லாந்தின் ஜூரிஜ்பல்கலைக் கழகத்தின் டாக்டர் வீட்டிசன் 51 இணையர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவு இது. வாரத்தில் ஒரு சில முறைகளாவது தம் துணையைக் கட்டி அணைப்பது, முத்தமிடுவது, உடலுறவு கொள்வது ஆகிய இவற்றால் மன அழுத்தம் குறைகிறது என்கிறது இவ்வாய்வு.

காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Clip_image001

ஒருவர்ஒருவரை அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மன
அழுத்ததிற்குக் காரணமான கார்டிசல் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரக்கின்றது என்று கண்டறியப் பட்டுள்ளது.

இதைத்தான் நம் நவரச நாயகன் அன்றே படம்போட்டுக் கூறிவிட்டாரே என்று சிந்திப்பது புரிகிறது.

அப்படி என்ன புதிய செய்தியை இவர்கள் கண்டறிந்து விட்டனர்.இதெல்லாம் எங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ரொம்பப்பழசு என்று ஜீரிஜ் பல்கலைக் கழகத்திற்குக் கேட்கின்ற அளவில் கத்த வேண்டும் போல இருக்கிறது. என்றோ தமிழன் கண்டறிந்தவையெல்லாம் இன்று ஆய்வின் முடிவு என்று கூறி எக்காளமிட்டு வரும் இது போன்ற பல்கலைக் கழகங்களுக்கு யார் செப்புவது?

கட்டிப் பிடித்து அகற்ற அப்படி என்ன மனநோய் தம்பதிகளுக்குவருகிறது? அதற்கு என்ன காரணம்? ஒருவரை ஒருவர் விட்டு அகன்று சென்று கொண்டிருப்பதே இந்தமனநோய்க்குக் காரணம் என்கிறது அன்று முதல் இன்று வரை தோன்றி வளர்ந்துள்ள அறத்துடன் மருத்துவமும் பேசும் எங்கள் தமிழ் இலக்கியம்.

சங்க காலத்தில் நிலங்களைக் குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல், பாலை என்று ஐவகையாகப் பிரித்து இருந்தனர். இவை ஒவ்வொன்றிற்கும் முதல்பொருள் என்று நிலத்தையும் காலத்தையும் குறிப்பிட்டு இருந்தனர். அதைல் குறிஞ்சி மலைப்பகுதியையும், முல்லைக் காட்டுப் பகுதியையும், மருதம் வயல் பகுதியையும், நெய்தல் கடல் பகுதியையும், பாலை வறண்ட பாலை நிலத்தையும் குறிக்கும்.

இந்த ஐவகை நிலங்களுக்கு உரிப்பொருள் என்று ஒவ்வொன்றைச்சுட்டி இருந்தனர். உரிப்பொருள் என்பது அந்தந்த நிலத்து மக்களின் வாழ்வியல். குறிஞ்சிக்குகுளிர் பாங்கான மலைப்பகுதியாதலால் அங்கு தலைவனும் தலைவியும் கூடுவர். எனவே புணர்தல் என்றும், முல்லையில் கூடிக்களித்த அவர்கள் திருமணம்புரிந்து நிலையாக குடிபுகுந்து இல்லறம் நடத்துவர்.
ஆதலால் இருத்தல் என்றும், மருதம் அப்படி நிலையாக அன்புடன் இல்லறம் நடத்துகையில் கூடல் சிறக்க ஏதுவான ஊடல் நிகழும். எனவே ஊடல் என்றும், நெய்தல் நிலத்தில் பிழைப்பு கருதி மீன் பிடிக்கவோ, முத்து எடுக்கவோகடலில் சென்ற தலைவன் வருகைக்காக கவலைப் பட்டுக் கொண்டிருப்பாள் தலைவி. அதனால் இரங்கல் என்றும், பாலை நிலம் வறண்ட பூமி. அங்கு பிழைக்க வழியின்றி பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து செல்வான். அதனால் அங்கு பிரிதல் என்றும் உரிப்பொருளை ஆக்கி இருந்தனர்.

பாலைத் திணையில் அமைந்த பாடல்கள்பெரும்பாலும் மனநோயாளியாக மாறிய தலைவி கூற்றுப் பாடல்களாக அமைந்திருப்பதைக் காணலாகிறது.மனவியல் வல்லுநராகத் திகழ்ந்த தமிழ்ர்கள் நோய், நோக்குக் காரணம், அதைத் தீர்க்கும் மருந்து என்னென்ன என்பதை இலக்கியம் படைத்துள்ளனர்.

சங்க இலக்கியத்தில் பசலை நோய் என்று ஒரு நோய் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும். பசலை என்பது உணவு,உறக்கம் செல்லாது காதலனையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படும் நோய். ஏன்நமக்கே கூட சரியான உணவும், போதிய உறக்கமும் இல்லாவிட்டால் நாளடைவில் விழி குழிவெய்தி,மேனி இளைத்து, கருத்துப் போவது இயற்கை. இந்தக் கரிய நிறத்தையே பசலை என்றனர் சங்கத்தமிழர்.நம் மேனி கருத்து இளைப்பதற்கும் காதலரின் மேனி கருப்புக்கும் என்ன வேறுபாடு என்றால்அவர்களது ஆற்றா நோய். அதாவது காதலனைத் தவிர வேறு மருந்தால் குணப்படுத்த முடியாத நோய்.மற்றது உண்டு, உறங்கிக் குணப்படுத்திக் கொள்ளக்கூடிய நோய். இது காதலித்து, பிரிவுத்துயரைஅனுபவத்தவருக்கு நன்கு புரியும். இதற்கு நீர் இறைக்காத கேணியின் நீரின் மீது படர்ந்துஇருக்கும் பாசியைப் போன்று என்று விளக்குகிறது ஒரு சங்கப் பாடல்.

“ஊருண் கேணி யுண்குறைத் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடு வழித் தொடு வழி நீங்கி
விடுவுழி விழுவுழி பரத்த லானே

சரி காதல் என்பது நோயா? என்று புருவங்களைஉயர்த்துவது புரிகிறது. ஆம் நோய்தான். நோயும் மருந்து இரண்டும் ஆவது காதல். அதனால்தான்திருவள்ளுவரும்

நன்கு தேய்த்து வைத்த வெள்ளி, பித்தளைப்பாத்திரங்களின் மீது நாளடைவில் பசுமை ஏறுவது போல தங்கம் போல ஒளிவிடும் மங்கையின் நிறம்மங்கி ஒளி குன்றக் காரணம் காதல் நோய்.இதைத் திருவள்ளுவர் பத்துப் பாக்களில் கூறியுள்ளார். சான்றுக்கு, “காம நோயையும் பசலை நிறத்தையும் கைமாறாக எனக்களித்து, என் அழகையும் நாணத்தையும் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார் என்று தலைவி கூறுவது. குறள் இதோ,

“சாயலும் நாணும அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து“

மற்றொன்று, “ அதோ பார் என் காதலர் பிரிந்துசெல்கின்றார். இதோ பார் என் மேனியில் பசலை நிறம் வந்து படர்கின்றது“ என்று தலைவி பசலைநோய் வந்து கொண்டிருப்பதை படம் பிடிப்பாள். குறள் பின்வருவது.

“உவக்காண்எம் காதலர்செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது“

மற்றொன்று வேண்டுமென்றாலும் இருக்கின்றது. இது இன்னும் சுவையானது. விளக்கு மறைவினைப் பார்த்துக்கவியக் காத்திருக்கிற இருளைப் போல, தலைவனுடைய தழுவதலின் சோர்வைப் பார்த்து என் உடலைத்தழுவ, பசலைக் காத்திருக்கிறது என்று தலைவி வருந்துவது. இந்தக் குறளையும் பார்க்க.
“விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு

அதுமட்டுமா? புள்ளிக்கிடந்த (தழுவிக் கிடந்த)தலைவி சற்று அகன்ற போது பசலை நிறம் அள்ளிக்கொண்டது போல வந்து பரவிவிட்டதே என்றெல்லாம் தலைவியைப் புலம்பவைத்ததென்றால் அது நோய்தானே? இது நாகரிகமாகக் காதலை அதிகம் வெளிக்காட்ட விரும்பாத தலைவியின் புலம்பல். இன்னும் சங்கப்பெண்டீர் பலரின் இந்நோய்க்கான புலம்பலை பாருங்கள். என் உயிர்மிகச்சிறிது காமமோ பெரிது என்று ஒருத்தி “ உயிர்த்தவ சிறிது; காமமோ பெரிது” , “அது கொள் தோழி காம நோயே என்று ஒருத்தி, நோய் தந்தனனே தோழிஎன்று ஒருத்தி, வெண்ணெய் உணங்கல் போல பரந்தன்றுஇந்நோய்என்று ஒருத்தி அதாவதுவெண்ணெய் உருகினால் வழிந்து பரவுவது போல உடல் முழுவதும் பசலையைப் பரவச் செய்ததாம்,

“சொல்லரு கொடுநோய்க் காமக் கனலெரி என்று பெருங்கதைக் கூறும் காமநோய்க்குக் காரணி காதலன்றோ? உள்ள நோய், வசா நோய்’ ‘இன்னா வெந்நோய்’, ’ஆனனா நோய், ஈடும்மை நோய்’, ‘துஞ்சா நோய், என்றெல்லாம் கடுமையாயகச் சுட்டப்படுகிற இந்நோய்க் கண்ட மகளிர் சங்ககாலத்தில் அதிகமாகவே காணப்பட்டுள்ளனர். இவையெல்லாம் நாகரிகமாகக் காதலை அதிகம் வெளிக்காட்ட விரும்பாத தலைவியின் புலம்பல்கள்.

ஒரு சங்கத்தலைவி கிட்டத்தட்ட ஹிஸ்டீரியாபோலவே அலறிக்கொண்டு, தலையில் முட்டிக்கொண்டு, மார்பில் அடித்துக் கொண்டு, ஐயோ! எந்நோயைஅறியாது உலகோர் எல்லாம் நிம்மதியாகத் தூங்குகின்றனரே என்று புலம்பிக்கொண்டு, காட்டு வழிகளிலெல்லாம் அலைந்து திரிகிறாள் என்றால் இந்நோயின் கொடுமையை இதைவிட தத்துரூபமாகக்காட்ட முடியுமா என்று வியக்கத்தான் வேண்டியுள்ளது.

“முட்டுவேன் கொல் தாக்குவேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆசுஒல்லெனக் கடவுவேன் கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவு நோயறியாது துஞ்சும்உளர்க்கே

மெல்ல மெல்ல உயிரைப் போக்கும் மன நோய்இக்காம நோய். இந்நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது எக்காலத்தில்? நோயைக் கூறுவதுடன்தம் கடன் முடிந்து விட்டது என்று எண்ணுபவன் அல்லன் தமிழன். அந்நோய்க்கு மருந்தும் கூறி விடும் நோய்தீர்க்கும் மருத்துவன் அவன்.
இந்நோய்க்கு பிற மருந்தில்லை அவனைத் தவிர என்பதை,
மருந்துபிறி தில்லையவர்மணந்த மார்பே என்று கூறியுள்ளது அன்றே தமிழ் மருத்துவ ஆய்வு அன்றே. இதை இன்றுதான்நிருபித்து உள்ளது ஜூரிஜ் பலகலைக்கழகம்.

உடலில் தோன்றும் வெவ்வேறு நோய்களுக்குவெவ்வேறு மருந்துகள் இருக்க காதல் நோய்க்கு மட்டும் மருந்து காதலனே என்கிறது தமிழ்இலக்கியம். இதோ,

“பிணிக்கு மருந்து பிறமன்அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து

இதைவிடச் சான்று தேவையா? தமிழன் மருத்துவத்தில் கைதேர்ந்தவன் என்பதை அறிய. அம்மருத்துவமும் எவ்வாறு இருக்க வேண்டுமாம்..

பிரிந்தோர் புணர்க்கும்பண்பின்
மருந்தும் உண்டோ

பிரிந்தவர் கூடிப் புணர்வதை விட சிறந்த மருந்து வேறுஉண்டா என்கிறது இச்சங்கப்பாடல். இதனினும் மேலாய் அப்புணர்ச்சியும் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவ மருத்துவன் கூறுவதைப் பார்க்கலாமா?

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Clip_image002

காற்றுக்குகூடஇடம் கொடாது முயங்க வேண்டும் என்று தெய்வப்புலவர் அன்றே கூறியுள்ளதும் இதனால்தான். (வளி - காற்று, முயக்கு - அணைப்பு).

இன்னும் கூறப்போனால் சங்கத்தமிழன் காதலுக்குமுக்கியத்துவம் கொடுத்தது நலமான ஒரு சமுதாயத்தைக் காணவே என்று நாம் உறக்கக் கூறிக் கொள்ளலாம் பெருமையுடன்.. எம் ஆதித்தமிழன் சிறந்த மன நல மருத்துவனே..

இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஹிஸ்டீரியா என்று கூறி மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பணப்பையைக் கரைப்பதை விடுத்து காதல் புரிந்தவரின் மனப்பையை அன்பால் நிறையுங்கள், நம் முன்னோர் கூறியுள்ளதைப் போல... நீங்களும் மகிழலாம்... துணையும் நலம் பெறலாம்.




நன்றி குமுதம் ஹெல்த்.

ஆதிரா.



காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Tகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Hகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Iகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Rகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 09, 2011 7:57 pm

சதாசிவம் wrote:அருமையான அழகு தமிழ் கட்டுரை , இன்றைய காதல் கவிதைகளும், கதைகளும் உடம்பு உணரும் உணர்வை மையமாகவே வைத்து தான் எழுதப்படுகிறது. மென்மையான மன உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் வெகு குறைவு, சங்கத் தமிழில் உள்ள அழகான விஷயங்களை அழகாகக் கூறியுள்ளீர்.

சூப்பருங்க
என் மனமார்ந்த ந்ன்றி திரு சதாசிவம் அவர்களே. இதையெல்லாம் யார் படிக்கிறார்கள்? திருக்குறளும் சங்க இலக்கியமும் இக்கால தலைமுறைகளுக்கு வேம்பும் எட்டியுமாக இனிக்கிறதே...மீண்டும் நன்றி. நன்றி அன்பு மலர்



காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Tகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Hகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Iகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Rகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Empty
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 09, 2011 7:59 pm

நிச்சயம் செய்வோம் ! அந்த அந்த பாடலின் ஒலி ஒளி வடிவங்களை யும் இணைத்து பதிவிட வேண்டும். கண்டிப்பாக இது சுவையான திரியாக இருக்கும் !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 09, 2011 8:01 pm

சதாசிவம் wrote:ஔவை என்பது பாட்டு பாடும் பாணர் இனத்தில் நன்றாக பாடும் ஒருவருக்கு கொடுக்கும் பட்டம் என்று படித்திருக்கிறேன், பாடல்கள் பிரபலமான ஔவைகள் 5,6 பேர், உண்மையில் பல ஔவைகள் இருக்க வாய்ப்பு உண்டு, பதினெண் புராணங்கள் எழுதியதாக கூறும் வியாசர் என்ற பெயரும் ஒரு பட்ட பெயர் தான்..... அனைத்து புராணங்களையும் ஒருவர் எழுதவில்லை.

ஆம் தாங்கள் கூறுவது உண்மை. அதியனின் தோழி ஒளவையும் பாணர் குலத்தவள். இளையவள். அவள் அழகு நிறைந்தவள். என்றெல்லாம் கருத்து உலவுகிறது.



காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Tகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Hகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Iகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Rகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 09, 2011 8:03 pm

சதாசிவம் wrote:தொடருங்கள், இன்றைய பல சினிமா பாடல்கள் சங்கப்பாடல்களின் சாயல் தான்.......... சியர்ஸ்
இனிய சங்கமத்திற்கு நன்றி சதாசிவம் அவர்களே. கண்டிப்பாக செய்வோம்.. நன்றி



காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Tகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Hகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Iகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Rகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 09, 2011 8:08 pm

கே. பாலா wrote:நிச்சயம் செய்வோம் ! அந்த அந்த பாடலின் ஒலி ஒளி வடிவங்களை யும் இணைத்து பதிவிட வேண்டும். கண்டிப்பாக இது சுவையான திரியாக இருக்கும் !

எதையும் அழகாக அமைக்கும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் பாலா. பாடகன் அன்பு மலர் பாடகன்

ஒரு கேள்வி..சரி தனிமடலில் கேட்கிறேன்.



காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Tகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Hகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Iகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Rகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 5 Empty
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக