புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...
Page 1 of 1 •
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...
சென்றஇதழில் எட்டு ஒன்பதாம் நூற்றாண்டான சோழர் ஆட்சி காலத்தில், மகப்பேறு அறுவைசிகிச்சை ஒரு துறையாகவே இருந்து வந்துள்ளது என்று பார்த்தோம். இதற்கும்சற்று முந்தைய கி.பி. 600 முதல் 850 வரையிலான காலத்தைப் பக்தி இலக்கியகாலம் என்பர். இதுவும் சோழர்களின் ஆட்சி காலமே. இக்காலத்தில் அறுவைச்சிகிச்சை, படிநிலை வளர்ச்சி அடைந்த நான்கு நிலையில் இருந்து வந்துள்ளது.
உடலில்ஏற்படும் கட்டிகளுக்கு இந்த நான்கு முறைகளைக் கையாண்டு அறுவை சிகிச்சைசெய்துள்ளனர். திசுக்களில் நுன்கிருமிகள் பரவுவதால் அழற்சி ஏற்படுகிறது.அதனால் பக்கத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் இரத்த உறைவு ஏற்பட்டுஅப்பகுதியைச் சுற்றி வீக்கமும் அதனால் தாங்க முடியாத வலியும ஏற்படுகின்றன.அவ்வீக்கத்தில் இருக்கும் நுண்மங்கள், வெள்ளை அணுக்களின் ஒரு பாலிமார்ப்அணுக்கள் அவ்விடத்தில் உள்ள புரதப் பொருள்களை நொதிகளாக மாற்றி, அழுகும்திசுக்களை நீர்மமாக்குகிறது. இதுவே சீழ் எனப்படுகிறது.
உடலில் கட்டிகள் தோன்றினால், கட்டிகளை அறுத்தல், அதனுள் தேங்கிய இரத்தத்தைஅகற்றுதல், அப்பகுதியை நன்கு சுத்தப் படுத்துதல், பின்னர் மருந்தை இட்டுக்கட்டுதல் என்ற நான்கு நிலையில் மருத்துவம் செய்யப்படும்.
இந்த நான்கு நிலைகள் அக்காலத்தும் இருந்து வந்திருக்கிறது. இதனை பின்வரும் கம்பராமாணப் பாடலால் அறியலாம்.
“உடலிடைத் தோன்றிற்று ஒன்றை
அறுத்து அதன் உதிரம் ஊற்றிச்
சுடலுறச் சுட்டு வேறோர்
மருந்தினால் துயரம் தீர்ப்பர்”
ஆனால்இன்றைய காலத்தில் சுத்தப்படுத்துவதற்கு டிங்சர். சாவ்லான், அல்லதுடெட்டால் பயன் படுத்துவது போன்றல்லாமல் அக்காலத்தில் நெருப்பால்சுட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. இம்மருத்துவம், முறையான சித்த மருத்துவமருத்துவர்களால் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதற்கும் இலக்கியச் சான்றுகள் காணப்படுகின்றன.
இக்காலத்தில்நோயாளி மருத்துவர் மீதும், மருத்துவர் நோட்டின் மீதும் காதல்கொண்டிருப்பதைப் போல் அல்லாது அக்காலத்தில் மருத்துவர் மீது நோயாளியும்,நோயாளி மீது மருத்துவரும் காதல் கொண்டிருந்தனர். இன்னும் சொல்லப்போனால்நோயாளிகள் மருத்துவன் மீது பக்தியே கொண்டிருந்தனர் எனலாம்.
பக்திப் பணுவல்களை இயற்றிய வைணவ ஆழ்வார்களில் ஒருவரான குலசேகராழ்வார், இறைவன்எத்துனை துன்பன்களைத் தந்தாலும் அவனிடம் தனக்கு அன்பு குறையாமல்இருக்கிறது என்பதைக் கூறும் போது, அதற்கு உவமையாக ”மருத்துவன் வாளால்அறுத்து, சுட்டு மருத்துவம் செய்தாலும், அவன்மீது அன்பு குறையாத நோயாளிபோல” என்ற உவமையைப் பயன்படுத்துகிறார். பாடல் இதோ.
“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாக் காதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் வித்துவக்கோட் டம்மானேநீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே”
புண்ணுக்கு மருந்திட்டு அதனைப் பஞ்சால் சுற்றும் வழக்கமும் சங்கம் முதலேஇருந்து வந்துள்ளது. போர்மேல் கொண்ட ஆசையால் போர்க்களத்தில் ஏற்பட்டபுண்ணுக்கு மருந்திட்டு கட்டிய பஞ்சினைக் கூடக் களையாது ஆயுதங்களை ஏந்தித்திரிந்தனராம் வீரர்கள். இதனை
”செருவா யுழக்கி குருதி யோட்டி
கதுவாய் போகிய துதிவா யெ•கமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்”
என்ற பாடல் சுட்டுகிறது.
ஒன்பது மாதக் கர்ப்பினிப்பெண் ஒருத்தி சாலையில் நடந்து கொண்டிருந்தபோதுஎதிர் பாராத விதமாக அங்கு ஓடி வந்த காளை கொம்பால் வயிற்றில்குத்திவிட்டது. வயிற்றில் ஏற்பட்ட துளையின் வழியாக குழந்தையின் கையின்ஆள்காட்டி விரல் வெளியில் வந்து விட்டது. அப்பெண் மருத்துவமனைக்குஅழைத்துச் செல்லப்பட்டாள். வேறு வழியின்றி அறுவை சிகிச்சை செய்துதான் கையைஉள்ளே வைக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். குழந்தையை வெளியில் எடுக்கமுடியாது. எடுத்தால் குறைமாதக் குழந்தையாகிபரிதவிக்கும். என்றெல்லாம் குழம்பிக்கொண்டு மருத்துவர்கள் நிற்க, தலைமைமருத்துவருக்கு ஒரு சிந்தனைப் பொறி கிளம்பியது. செவிலியிடம் ஒருஊதுபத்தியைக் கொளுத்தி எடுத்துவரச் சொன்னார். அந்த பத்தியால் குழந்தையின்விரலை லேசாகச் சுட்டார் (தொட்டார்). உடனே குழந்தை விரலை வெடுக்கென உள்ளேஇழுத்துக் கொண்டது. பிறகு கொம்பு பாய்ந்த தாயின் வயிற்றை தையல் போட்டுமூடினர். இது ஆங்கில மருத்துவ யுகமான இக்காலத்தில் நடந்தது.
ஒருவரின்மூக்கின் வழியாக மூளைக்குள் சென்று அமர்ந்து விட்டது தேரை ஒன்று. எப்படிஎன்று மூக்கின் மீது விரல் வைக்கிறீர்களா? ஒரு வேளைஉறங்கிக்கொண்டிருக்கும் போது சென்றிருக்கும். அவ்வளவு பெரிய மூக்குத்துவாரமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. தேரை குட்டியாக இருந்திருக்கலாம்இல்லையா?
சரி விஷயத்திற்கு வருவோம. தேரை மூளைப்பகுதியைக்கெட்டியாகக் கெளவிப் பிடித்திருந்தது. அகத்தியரின் அறுவை சிகிச்சைதொடங்கியது. மூளைக்குள் இருக்கமாகப் பற்றியிருந்த தேரையை எடுக்க வழி என்னஎன்று சிந்தித்தார். ஏனெனில் மூளை மிகவும் மென்மையான பகுதி மட்டுமல்ல.உடல் உறுப்புகள் அனைத்தையும் இயக்கும் முக்கிய பகுதி. உடனே உடனிருந்ததேரையார் உபாயம் ஒன்று கண்டு சொன்னார்.
ஒரு நீர் நிறைந்த மட்பாண்டத்தை எடுத்து வந்து தேரையின் முன் காட்ட, மூளைக்குள் இருந்த தேரை நீருக்குள் தொப்பென்று குதித்தது.
உன்னைப்போற்றுகிறேனடா என் சீடா என்று கட்டியணைத்து கொண்டாராம் அகத்தியர்தேரையாரை. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த நம் மண்ணின்மருத்துவர்களாகிய சித்தர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன சமயோசிதத்தில்?இந்தப் பாடல் சற்று நீளமானாது. ஆனால் சுவையானது. படித்துப் பாருங்களேன்.
“பொருந்தியே தேரையது மூளைதன்னை
பொலிவான நாசிவழி தன்னில் சென்று
வருந்தியே மூளைதன்னைப் பற்றியல்லோ
வாகுடனே தேரையது பொருந்தி நிற்க
கவனிக்கும் வேளையிலே கத்தி கொண்டு
கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க
மவுனமென்ற மூளைதன்னில் தேரை தானும்
மார்க்கமுடன் கவ்வியல்லோ கொண்டு நிற்க
புவனமென்ற மூளைதன்னில் தேரை தானும்
புகழான தேரையர் முனிவர் தாமும்
சவனமென்ற பாணியினால் எடுக்கத் தந்திரம்
சாற்றினார் தேரையார்தாம் சாற்றினாரே.
சாற்றவே மண்பாண்டம் தன்னில் தானும்
தன்மையுள்ள சலமதனை நிறைய விட்டு
ஆற்றலுடன் தேரைமுன்னே எதிரே காட்ட
அங்கனவே மூளைவிட்டு குதிக்கலாச்சே
நாற்றிசையும் மேவு புகழ் அகத்தியனார்தாம்
நல்லறிவு கண்டுமல்லோ மனமுவந்து
போற்றியே என்சீடா பொன்னரங்கா
பொலிவான தெள்ளமிர்த சிங்கமாமே”
ஒரேகல்லில் இரு மாங்காய். சித்தர் மூளைப்பகுதியைக் கூட அறுவை செய்துள்ளனர்.அத்துடன் இத்தகு சம்யோசித சிந்தனையிலும் சிறந்தே விளங்கிஇருந்திருக்கிறார்கள்.
சரி கத்தியால் மூளையைக் கிழித்தாகள். தைப்பதற்கு எதனைப் பயன்படுத்தியிருப்பார்கள். அடுத்த இதழில் பார்க்கலாமே.
அறுவை தொடரும்.. .. ..
ஆதிரா..
நன்றி குமுதம் ஹெல்த்

- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
அரிய தகவல்கள், அறியவேண்டிய தகவல்கள்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
கொடுப்பாங்க கொடுப்பாங்க ... கடைசியியில் மொத்தமாக ஒரு pdf வடிவில் தயாரித்து கொடுப்பாங்க ... சரியா அக்கா ...
சூப்பர் அக்கா ... நன்றி நன்றி நன்றி
சூப்பர் அக்கா ... நன்றி நன்றி நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1