புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
1 Post - 1%
bala_t
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
1 Post - 1%
prajai
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
293 Posts - 42%
heezulia
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
6 Posts - 1%
prajai
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
பூலோக வைகுண்டம் Poll_c10பூலோக வைகுண்டம் Poll_m10பூலோக வைகுண்டம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூலோக வைகுண்டம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 01, 2010 3:12 am

பூலோக வைகுண்டம் Img1101119021_1_1

ஸ்ரீரங்கம் விண்ணகரம்.

""என் அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே'' என்று திருப்பாணாழ்வாராலும் ""இச்சுவைத் தவிர இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்'' என்று தொண்டரடிப் பொடியாழ்வாராலும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்பைத் தாங்கியுள்ளது திருவரங்கம். கிருதயுகம் தொடங்கி இன்று கலியுகம் இந்நாள் வரை இந்தக் கோவிலுக்கென்று நீண்ட வரலாறு உண்டு கலாச்சாரக் கருவூலம் நம் திருவரங்கம் திருக்கோயில். கோயிலும் திருவரங்கப் பெருநகரும் பாரதத்தின் பண்பாட்டு மையமென திகழ்கின்றன.


பூலோக வைகுண்டம் Images?q=tbn:ANd9GcSILvc5mbbMfj-s3UDWfp5-Wk9cnDwJcSafA9HNL2GHOHA7VW3u

ஸ்ரீரங்க நாதர் பள்ளி கொண்ட கோலம்.

பூலோக வைகுண்டம் DSC02959
உற்சவர்.


வெகு காலத்திற்கு முன்பு பிரம்மாவினாலும், சூரியனாலும் சத்யலோகத்தில் ஆராதிக்கப்பட்டு பின்பு வைவஸ்வத மனுவின் மூலமாக இந்த பூவுலகில் ராமனின் முன்னோன் இஷ்வாக சக்ரவர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்கி அவன் அரண்மனைக்கு எழுந்தருளி தசரதகுமாரன் ஸ்ரீராமன் வரை சூரியகுல பேரரசர்களால் ஆராதிக்கப்பட்டு இறுதியில் ஸ்ரீராமனால் ""இஷ்வாகு குலதனம்'' என்ற இப்பெருமான் ராமரது பட்டாபிஷேக காலத்தில் தன்னையே சரண் என்று அடைந்த விபீஷண ஆழ்வானுக்கு அளிக்கப்பட்டு, இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் சோழகுல அரசன் தர்மவர்மாவின் தவத்திற்கு அருள்புரிய எண்ணி, காவேரி மத்தியில் மிக ரமணீயமான சோலைகளின் நடுவில் எழுந்தருளி அங்கிருந்தபடியே தென்னிலங்கை நோக்கி அருள் கூர்ந்து பள்ளிகொண்டார் எனப் புராணங்கள் கூறுகின்றனர். ஸ்ரீவைஷ்ணவ கொள்கைப்படி கோயில் என்றாலே திருவரங்கத்தைத் தான் குறிக்கும். இதன் பெருமையையும் மகத்துவத்தையும் ஸ்வாமி தேசிகன் தன் அதிகார ஸ்ங்கரஹத்தில் கூறுகிறார்.

பரமசிவன் நாரதருக்க ஸ்ரீரங்க மஹாத்மியத்தைப் பற்றிச் சொல்லும்போது காவிரி நடுவே சந்த்ரபுஷ்கரணி கரையிலுள்ள ஸ்ரீரங்கம் செல்பவர்களுக்கு நரகமோ, ஞானக் குறைவோ கிட்டாது என்று சொல்கிறார். அந்த இடம்தான் ஸ்ரீரங்கம், ரங்கம் என வழங்கப்படுகிறது.

சத்ய லோகத்தில் இருந்த பிரம்மாவால் ஆராதிக்கப்பட்ட லக்ஷ்மிநாராயணன், ஸ்ரீரங்கம் சேர்ந்த பிறகுதான் ரங்கனாதன் என அழைக்கப்படலானார். தர்மவர்மா காலத்திற்குப் பிறகு அநேக ஆண்டுகள் காலவசத்தால் தற்போது உள்ள இடம் மணற்காடாகக் காட்சியளித்தது. தர்மவர்மா பரம்பரையில் வந்த சோழ மன்னன் வேட்டையாடி களைப்படைந்து ஒரு மர நிழலில் தங்கியிருக்கையில் மரத்தின் மேலே அமர்ந்திருந்த கிளி,

""காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ்வாஸீதேவோ ரங்கேச வேதச்ருங்கம் பரமம் பதம்
விமாநம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக


என்ற வசனம் சொல்லக் கேட்டு வியப்படைந்து பார்க்கையில் அந்தக் கிளி அதே ஸ்லோகத்தைப் பல தடவை சொல்லக் கேட்டான். பகவானே அவன் கனவில் வந்து ""யாம் இம்மரத்தின் கீழ்தான் இருக்கிறோம்'' என்று சொல்லவும் அரசன் மணற்மேட்டைத் திருத்தி, ஸ்ரீரங்க விமானத்தை வெளிப்படுத்தினான் என்பது வரலாறு. ஆகவே கிளிச்சோழன் எனப் பெயர் பெற்ற அவ்வரசன் கிளி மண்டபம் உட்பட பல திருப்பணிகளைச் செய்தான். இங்கு பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாள் வேதஸ்வரூபன் என்னும் விமானத்தை ப்ரணவாகார விமானம் என்றும், கலசங்களை வேதச்ருங்கக்ளெனவும் அழைப்பர். காவிரியும் கொள்ளிடமும் ரங்கநாதனுக்கு மாலை போல் அமைந்துளளன. காயத்ரி மண்டபத்தில் காணப்படும் 24 தூண்கள் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களைக் குறிப்பிடுகின்றன.

வைணவ திவ்ய தேசங்கள் 108 ஆகும். அவற்றுள் முதன்மையானது திருவரங்கம் இந்த அரங்களை வழிபட்டால் மற்றைய திவ்யதேங்களின் மூர்த்திகளை வழிபட்டதற்க ஒப்பாகும் என்றும், ஒவ்வொரு இரவிலும் திவ்யதேச மூர்த்திகள் இங்கு வந்து ஒன்றாக இருந்து பின்பு தமது திவ்யதேசத்திற்குப் புறப்பட்டுச் செல்வதாக ஓர் ஐதீகம் உண்டு.

பூலோக வைகுண்டம் Srgold

ஸ்ரீரங்கம் தங்க கோபுரம்.

கோயிலும் பெரிய கோயில், சயனக்கோலத்தில் காட்சியளிக்கும் பெருமாள் பெரிய பெருமாள், தனிக் கோயில் கொண்டிருக்கும் அரங்கநாயகி பெரிய பிராட்டியார் எனவும் தளிகைக்குப் பெரிய தளிகை என்றும், மேளத்திற்கு பெரிய மேளம் என்றும் திருவரங்கத்தின் பெருமையை "பெரிய' என்று அடைமொழி இட்டு வழங்குகிறார்கள்.

வைகுண்டம் வேறு, திருவரங்கம் வேறல்ல. காவிரி நதியே விரஜா நதி. அரங்கனே பரம்பொருள் என்பது வைணவ மக்களின் துணிவு.

இந்த ஒரு வைணவக் கோயிலில்தான் கருடாழ்வான் மிகப்பெரிய திருமேனியுடன் கைக்கூப்பிய நிலையில் காட்சி தருகிறார். சுற்றுப்பிரகாரங்களில் ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், மற்றும் விஷ்ணுவின் பல அவதாரங்கட்கு எனத் தனிச் சிறு கோயில்கள் உண்டு ஒவ்வொரு சிறு கோயிலுக்கும் அதற்கென்று தனித்தனியே கிணற்றுடன் கூடிய நந்தவனம் மற்றும் மடப்பள்ளி அமைந்துள்ளன. பெரிய கோயிலுக்கு சற்று வெளியே தள்ளி கிழக்கில் காட்டழகியசிங்கர் கோயில் , மேற்கே ஆண்டாள் கோயில், தெற்கில் திருக்குறளப்பன் சன்னதியும், வடக்கில் தசாவதார சந்நிதியும் அமைந்துள்ளன.

மூலஸ்தானத்திற்கு அருகே உள்ள முதல் திருச்சுற்று விமான ப்ரதக்ஷிணம் எனப்படும் தர்மவர்மா திருச்சுற்று என்று பெயர். தற்போது இதில் யாரையும் அனுமதிப்பதில்லை. இதற்கு வெளியே காயத்ரி மண்டபம் இருக்கிறது. இங்கு பெரிய பெருமாள், உபய நாச்சிமாருடன் கூடிய உத்ஸவர் நம்பெருமாளைத் தரிசிக்கலாம்.

2வது திருச்சுற்று ராஜ மகேந்திரன் திருச்சுற்று எனப்படும். இங்க முக்கியமாக ரேவதி மண்டபம், அர்ச்சுன மண்டபம், கிளி மண்டபம், சந்தன மண்டபம், யாக சாலை, கோயில் கருவூலம், தெக்கலறை (பெருமாளுக்கும், தயாருக்கும் அணிவிக்கப்படும் ஆபரணங்கள் வைக்குமிடம்) ஆகியவற்றை காணலாம்.

3வது திருச்சுற்றின் பெயர் குலசேகரன் திருவீதி என்பதாகும். இங்க பவித்ரோத்ஸவ மண்டபம், ஹயக்ரீவர் சரஸ்வதி சந்நிதிகள், வராகப்பெருமாள் சந்நிதி, வேத விண்ணப்ப கோஷ்டி மண்டபம், ஆஞ்சநேயர் சந்நிதி, ஊஞ்சல் மண்டபம், த்வஜஸ்தம்பம், பலிபீடம், பரமபதவாசல் ஆகியவையும் துரை மண்டபம் அரவிந்த நாச்சியார் திருமடப்பள்ளியும் காணலாம்.

நான்காவது திருச்சுற்று ஆலிநாடன் திருவீதி என வழங்கப்படுகிறது. இதற்குக் கார்த்திகை கோபுரவாசல் என்ற பெயரும் உண்டு. இதில் நம்மாழ்வார், மதுரகவி, திருநங்கையாழ்வார் சன்னதி, கொட்டாரம், மேலபட்டாபிராமர் சந்நிதி, முதலாழ்வார் மூவர் சந்நிதி, தீர்க்கக்கரை வாசுதேவ பெருமாள் சந்நிதி, தன்வந்திரி பெருமாள் சந்நிதி, 5 குழி 3 வாசல் சந்த்ரபுஷ்கரணி, கோதண்டராமர் சந்நிதி, பரமபதநாதன் சந்நிதி, கீழபட்டாபிராமன் சந்நிதி, பூச்சாத்து மண்டபம், திருமழிசையாழ்வார் சந்நிதி, பிரசாதங்கள் விற்பக்கப்படும் ஸ்ரீ பண்டாரம், கண்ணன் சந்நிதி, வாகன மண்டபம், சூர்யபுஷ்கரிணி, திருக்கச்சி நம்பி, ஆளவந்தார் சந்நிதி, தேவராஜன் கொறகு ஆகியவற்றைக் காணலாம்.



பூலோக வைகுண்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 01, 2010 3:13 am

ஐந்தாவது திருச்சுற்று அகளங்கன் திருவீதி எனப்படும். இங்கு திவ்யப்ரபந்தத்தைக் கொணர்ந்த ஸ்ரீமந்நாதமுனிகள், ஸ்ரீஆண்டாள், வேணுகோபாலன், சக்ரத்தாழ்வார் சந்நிதிகள், வஸந்த மண்டபம், ரங்கநாச்சியார், தேசிகர், அழகியசிங்க பெருமாள் சந்நிதிகள் ஆயிரங்கால் மண்டபம், மணல்வெளி, சேஷராயர் மண்டபம், பிள்ளை லோகாச்சாரியார், பார்த்தசாரதி, உடையவர் சந்நிதிகள், அரும்பொருள் காட்சியகம், கோயில் அலுவலகம், திருப்பணாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், கூரத்தாழ்வான், விட்டல கிருஷ்ணன் சந்நிதிகள், ரங்கவிலாச மண்டபம், திருவந்திக் காப்பு மண்டபம், யானை வாகனத்திற்கான வட்டமணை என்னும் இடங்கள் காணப்படும்.

6வது திருசுற்று திருவிக்ரமன் திருவீதி எனப்படும். இதை உள்திருவீதி (உத்தரவீதி) என்றும் அழைப்பர். ஒருபுறம் மதிலும் எதிர்பக்கத்தில் கட்டிடங்களும் காணப்படுகின்றன. இங்கு யானை கட்டும் இடம், அரையர் திருமாளிகைகள், தைத்தேர், ஆண்டவன் ஸ்ந்நிதி, அகோபிலமடம், கோயில் ஜீயர் சுவாமி மடம், மணவாளமாமுனிகள் சந்நிதி, மார்வாரி சத்திரம் ஆகியவை உள்ளன.

7ஆம் திருச்சுற்று மாடமாளிகை சூழ் திருவீதி எனப்படும். சித்திரைத்தேர், சில ஆச்சாரியார்களின் திருமாளிகைகள், விளைவித்தகர் மாளிகை, சில மடங்கள் , பாடசாலைகள், கோரதம் ஆகியவை உள்ளன.

ரங்கநாயகித் தாயார் சந்நிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில்தான் கம்பர் தனது ராமகாதையை அரங்கேற்றினார்.

பிள்ளைலோகச்சார்யார், பெரியவாச்சான் பிள்ளை, கூரத்தாழ்வான் நிகமாந்த மகாதேசிகன், பராசரபட்டர், மணவாள மாமுனிகள் போன்ற பல ஆச்சார்யார்கள் ரங்கநாதனைப் பற்றி பாடியுள்ளார்கள். பிறகு பிள்ளைபெருமாள் அய்யங்கார், தியாகராஜர், முத்து சுவாமி தீக்ஷிதர், ஸ்யாம சாஸ்திரிகள், அருணாசலக் கவிராயர் போன்ற அருளாளர்கள் பெருமாளைப் போற்றிப் பாடியுள்ளார்கள்.

காவேரி இரு பிரிவாகப் பிரிந்து வடதிருக்காவேரி, தென்திருக்காவேரி என்று அரங்கன் திருவடிகளை எப்போதும் ஸ்பரித்துக் கொண்ட இருக்கிறது.

ஒன்பது வகையான புண்ய தீர்த்தங்கள் உண்டு என்று ஸ்ரீரங்கமகக்தமயம் கூறுகிறது. அவை சந்த்ர புஷ்கரணி, விஸ்வதீர்த்தம், நாவல் தீர்த்தம், அரசு தீர்த்தம், புன்னை தீர்த்தம், மகிழ தீர்த்தம், பொரசு தீர்த்தம், மாதீர்த்தம் கடம்ப தீர்த்தம் என்பன. இவைகளில் தற்போது நன்கு பராமரிக்கப்படுகிறது சந்த்ர புஷ்கரணி ஒன்றுதான்.

கோயில் நிர்வாகத்தை ராமானுஜர் என்று ஏற்றுக் கொண்டாரோ அன்றிலிருந்து இன்று வரை அவரது கட்டளைப்படியே விழாக்காணும் நித்ய ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.

பெரிய பிராட்டியாரைத் தவிர பாண்டிய நாட்டுப் பெண் ஆண்டாள், சேர நாட்டு சேரகுலவல்லி, சோழ தேசத்து ராஜகுமாரி கமலவல்லி ரங்கநாதனையே மணாளனாக வரித்து அவன் திருவடி அடைந்தார்கள்.

பின் தொடர்ந்த வல்லி : முஸ்லீம் படையெடுப்பின்போது அவர்களால் கவர்ந்து செல்லப்பட்ட பல விக்ரகங்களுள் அழகிய மணவாளன் இருந்தாகவும், பெருமாளைத் திருப்பித்தருமாறு டில்லி வரை சென்று சுல்தானை கேட்டபொழுது அவைகளெல்லாம் அந்தப்புரத்தில் உள்ளன என்று சொல்லிவிட்டார். அழகிய மணவாளன் மீது எல்லையில்லா பக்தியும் காதலும் கொண்ட சுல்தானின் மகள் அவரைத் திருப்பித் தர மறுத்துவிட்டாள். பெருமாளின் திருமேனிக்கு எந்த ஆபத்தும் இல்லையென்று எல்லோரும் மகிழ்ந்தனர்.

பின்பு திருவரங்கத்தைச் சேர்ந்த பலர் ""உங்கள் புதல்வி எங்கள் பெருமாளை வைத்துக் கொண்டிருக்கிறாள்'' என்று சொல்ல, அவனும் முடியுமானால் "" உங்கள் தெய்வத்தை நீங்களே அழைப்பித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டார். கோயிலில் பாடும் அரையர்கள் என்கின்ற செந்தமிழ் ஒதுவார் தங்கள் தேவ கானத்தினாலே பெருமாளை ஆகர்ஷித்து எடுத்து வந்தனர். மயக்கத்தில் இருந்த சுல்தான் மகள் விழித்தெழுத்து பெருமாளைக் காணாமல் பதறினாள். அதிக பிரிவாற்றாமையால் தன் உயிரை விட்டாள் என்று கூறப்படுகிறது.

பெருமாளின் இந்தப் பக்தைக்குப் ""பின்தொடர்ந்த வல்லி'' என்ற பெயர் இடப்பட்டது. இன்றும் அர்ச்சுனா மண்டபத்தின் கிழக்கு மூலையில் ""துலக்க நாச்சியார்'' என சித்திர வடிவில் இவரைத் தரிசிக்கலாம். இந்த சம்பந்ததால் பெருமாளுக்கு இன்றும் காலையில் ரொட்டி. பால்நிவேதனம் செய்கிறார்கள். திருமஞ்சன காலங்களில் உத்ஸவ மூர்த்திக்கு கைலி அணிவிக்கப்படுகிறது.

-பேராசிரியர் தி.ப.வானமாமலை



பூலோக வைகுண்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 01, 2010 2:24 pm

அரிய செய்திகள்..பகிர்ந்தமைக்கு நன்றி. பூலோக வைகுண்டம் 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 01, 2010 4:13 pm

திருச்சில பிறந்த எனக்கு ஸ்ரீ ரங்கம் கோயிலை பத்தி இத்தனை விஷயங்கள் தெரியாது சிவா. உங்களால் இன்று பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி




பூலோக வைகுண்டம் Uபூலோக வைகுண்டம் Dபூலோக வைகுண்டம் Aபூலோக வைகுண்டம் Yபூலோக வைகுண்டம் Aபூலோக வைகுண்டம் Sபூலோக வைகுண்டம் Uபூலோக வைகுண்டம் Dபூலோக வைகுண்டம் Hபூலோக வைகுண்டம் A
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Dec 01, 2010 9:53 pm

வணக்கம்
தாங்கள் பதிவு செய்திருந்த பூலோக வைகுண்டம்தொடர்பாகக் கம்பராமாயணத்தில் வரும் காட்சியினை இங்கு வைக்கிறேன்
கம்ப ராமாயணம் – பால காண்டம் – கடிமணப் படலம்

1208
கோது அறுதவத்துத் தம் குலத்துளோர் தொழும்
ஆதி அம் சோதியைஅடி வணங்கினான்
காது இயல் கயல்விழிக் கன்னிமார்களை
வேதியர்க்குஅருமறை விதியின் நல்கியே.

காது இயல் கயல் விழிக் கன்னிமார்களை = காதளவோடிய கயல் போன்றகண்ணியர்களாகிய கன்னிப் பெண்டிரை; வேதியர்க்கு அருமறை விதியின் நல்கி = வேதம் வல்லார்க்குஅரிய வேதத்தில் விதித்த வண்ணம் ஈந்து; கோது அறு தவத்து =குற்றமற்ற தவமுடைமையினாலே; தம் குலத்துளோர் தொழும் = தமது குலத்தே உதித்த அரசர்கள்எல்லோரும் வணங்கி வருகிற (தனது குல தெய்வமான) ஆதி அம் சோதியை அடி வணங்கினான் =ஆதியாய் நிற்கும் அழகிய ஒளி வடிவமான திருவரங்க நாதனைத் திருவடி தொழுது வணங்கினான்.

நான்முகனது ஆராதன மூர்த்தியாக இருந்த பாற்கடலில் பள்ளிகொண்ட திருவுருவாகிய திருவரங்க நாதனை இட்சுவாகு வேந்தன் வரத்தால் பெற்று திருஅயோத்தியில் வைத்துத் தன் குலத்துதித்தோர் எல்லோரும் வணங்கும் தெய்வமாக்கினான்.ஆதலின் தம் குலத்துளோர் தொழும் ஆதியஞ்சோதியை என்றார். இதனை பிணி அரங்க வினை அகலப்பெருங்காலம் தவம் பேணி, மணியரங்குநெடு முடியாய்! மலர் அயனே வழிபட்டு, பணி அரங்கப் பெரும் பாயல் பரஞ்சுடரை யாம் காண, அணி அரங்கம் தந்தான் (கம்ப 638)எனக் குலமுறை கிளத்தும்போதும் கூறியுள்ளமை காண்க,. ஆதியஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன்(திருவாய் 3:5:3)என்பர்நம்மாழ்வார். உலகனைத்தும் விளங்கும் சோதி வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண் முழுதும் உய்யக் கொண்டவீரன் (பெருமாள் திரு.10:1) என்பார், குலசேகரப் பெருமானும். அரசர்களும் சமயக் குரவர்களும்வேற்றிடம் செல்லுங்கால் தாம் வழி படும் தெய்வ வடிவங்களை உடன் கொண்டு செல்லுதல்மரபாதலால் அயோத்தி வேந்தர்கள் வழிபடும் இட்சுவாகு குலதனமாகிய மூர்த்தமேமிதிலைக்குக் கொண்டு வரப்பட்டு வழிபடப் பட்டது எனலாம். அரசர்கள் கன்னிகாதானமாக ஒருமணமகளை அடையுமுன் மணமாகா அந்தணர்க்குக் கன்னிகைகளைத் தானமாக ஈதல் மரபு ஆதல்,’காது இயல் விழிக் கன்னிமார்களைவேதியர்க்கு அருமறை விதியின் நல்கிஎன்பதனால் தெரிகிறது. 49

குலமுற கிளத்துப் படலம்
638
பிணி அரங்கவினை அகல பெருங் காலம் தவம் பேணி
மணி அரங்கு அம்நெடு முடியாய்! மலர் அயனை வழிபட்டு
பணிஅரங்கப் பெரும் பாயற் பரஞ் சுடரை யாம் காண
அணி அரங்கம்தந்தானை அறியாதார் அறியாதார்.

மணி நவரத்தினங்களும்; அரங்கு அழுத்திப் பதித்த, அம் நெடு முடியாய் அழகிய பொன் முடியுடைய சனக மன்னனே!; பிணி அரங்க நோய் நீங்கவும்; வினை அகல –(அவற்றிற்குக் காரணமாகிய) தீவினைகள் ஒழியவும்; பெருங்காலம் அநேக ஆண்டுகள்; தவம் பேணி தவத்தை விருப்பத்தோடு செய்து; மலர் அயனை தாமரைப் பூவில் தோன்றிய பிரமனை; வழிபட்டு வணங்கி வழிபட்டு; பணி அரங்கம் –(அவன் அருளால்) ஆதி சேடனாகிய பாம்பின் உடலை; பெரும்பாயல் பெரிய பள்ளி மெத்தையாக; பரஞ் சுடரை கொண்டுள்ள ஒளி வடிவமான திருமாலை; யாம் காண எம்மைப் போன்றவரும் கண்டு உய்யுமாறு; அணி அரங்கம் அழகிய திருவரங்க விமானத்தோடு; தந்தானை – (சத்தியஉலகிலிருந்து பூமிக்கு) கொண்டு வந்த இந்த வம்சத்தவனான இட்சுவாகு மன்னனை; அறியாதார் அறியாதவர்; அறியாதார் அறிவில்லாதவரே ஆவர்.

திருவரங்கம்; வைகுண்டம், திருப்பாற்கடல் யோகியரின் உள்ளத் தாமரை என்னும் இவற்றைக்காட்டிலும் திருமால் மனம் உவந்து எழுந்தருளி இருக்கும் இடமாதல் பற்றிஇவ்விமானத்திற்கு ரங்கம் (அரங்கம்) எனப் பெயர் அமைந்தது. இட்வாகு மன்னன்.வைவச்சுவத மனுவின் மகனாகிய இட்சுவாகு மன்னன் பிரமனை நோக்கிப் பலகாலம் தவம்புரிந்து அவர் அருளால் திருமாலைப் பெற்றுத் திருவயோத்திக்கு எழுந்தருளச் செய்துபிரதிட்டை செய்து வழிபாடு செய்தான். அந்த அரங்க நாதனே இரவி குல மன்னவர்க்குக்குலதெய்வமாக விளங்கினான். பரஞ்சுடர்- கதிரவன், சந்திரன், நெருப்புஎன்னும் முச்சுடர்களிலும் மேம்பட்ட ஒளியுருவம். 2
.
ஈகரை அன்பர்கள் இலக்கிய நயம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் பதிவு

நன்றி; கம்பன் அற நிலை
கோவை
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Dec 01, 2010 9:56 pm

வணக்கம்
இதயம் கலந்த நன்றி
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 01, 2010 10:00 pm

தங்களின் இலக்கியத் திறனுக்கு வாழ்த்துகள் அக்கா! பூலோக வைகுண்டம் 154550



பூலோக வைகுண்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 01, 2010 10:31 pm

சில படங்கள் இணைத்து அழகு பார்த்தேன் சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 01, 2010 10:33 pm

இதோ இங்கே ஸ்ரீவைகுண்டம் சுற்றிப்பார்க்கலாம் வாருங்கள்..!






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 01, 2010 10:34 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பூலோக வைகுண்டம் Mபூலோக வைகுண்டம் Oபூலோக வைகுண்டம் Hபூலோக வைகுண்டம் Aபூலோக வைகுண்டம் N
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக