புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 9:23 pm

First topic message reminder :

முன்னுரை

நான் முதன் முதலாக VERSOS SENCILLOS எனப்படும் எளிய கவிதைகளப் படித்தது நினைவுக்கு வருகிறது.அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். ஆனால் அந்தக் காலத்திலேயே உயர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால் ஒருவர் உயரத்தில் ஏறியாக வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எனவே சிரமப்பட்டு வண்டிக் கொட்டகையில் இருந்த ஏணியில் ஏறினேன். அதன் உச்சியில் உட்கார்ந்து கொண்டு எனக்கு அரிச்சுவடி போலிருந்த மார்த்தியின் கவிதைகளை வாய்விட்டு உரக்கப் படித்தேன்.

எனது பதின் மூன்றாவது வயதில் மார்த்தியை மொழி பெயர்ப்பதில் ஈடுபட்டேன். தொடர்ந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் இந்த முயற்சியில் உழைத்தேன். இறுதியாக நான் மொழி பெயர்ப்பினை முடித்த போது சற்றேறக்குறைய அவர் இந்தக் கவிதைகளை இயற்றிய வயதினை எட்டிவிட்டேன். ஆனால், நான் அது வரை இருந்ததை விட அவரை விட்டு மேலும் விலகியிருந்தேன். ஏனெனில் எந்த ஒரு ஏணியும் அவரை எட்டும் அளவுக்கு உயரம் வாய்ந்ததாக இல்லை– அவரது எல்லையற்ற புகழை எட்டும் அளவு இல்லை. இருந்த போதிலும் இந்த மொழி பெயர்ப்பு உலகின் முக்கியமானவர்களில் ஒருவராய் விளங்கும் ஹொசே மார்த்தியிடம், பலரை நெருக்கமாகக் கொண்டு செல்லும் ஏணியின் முதற்படியாக இருக்கும் என நம்புகிறேன்.

ஹொசே ஜுலியன் மார்த்தி பெரஸ் ( JOSE JULIAN MARTI PEREZ ) கியூபாவின் ஹவானா நகரில் ஜனவரி, 28, 1853ல் பிறந்தார். பின் ஒரு காலத்தில் கியூப தேசிய இனத்தின் வரலாற்று நாயகனாகவும், கலாச்சாரச் சின்னமாகவும் வரப்போகின்ற அவர் MARIANA MARTI NAVARO என்னும் இஸ்பானிய சிப்பாய்க்கு மகனாகப் பிறந்தார். ( எளிய கவிதைகள் : XLI ). கேனாரி தீவினைச் சேர்ந்த Leonar Perez Cabra ( கவிதை XXVII ) அத்தீவின் குடியேற்ற அலையின் கடைசித் தருணத்தில் அங்கு வந்தடைந்தார். எந்தவொரு மனிதரும் தனது சொந்த நாட்டோடு, பிறந்ததிலிருந்தே இந்த அளவு பிடிப்போடு இருந்ததில்லை ; அல்லது, தங்களது இலட்சியம் விடுவித்துக்கொள்ள இயலாத படிக்கு அந்நாட்டுடன் பிணைக்கப் பட்டிருக்கிறது என்பது பற்றி உறுதியாக இருந்ததில்லை. தனக்கென கியூப வேர்கள் இல்லாத போதிலும், இன ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் தனது நாட்டவர்களிடையே துலாம்பரமாகத் தெரிந்த மார்த்தி, கியூபர்களுக்கென பொது அடையாளம் ஒன்றினை வடித்து உருவாக்கினார். இரட்டிப்பு அடிமைத் தளை பூண்டிருந்த இனத்தின் முன்னணி வீரரானார். ( கவிதை (XXX) .
.
கியூபாவில் இஸ்பானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுதியான போராட்டங்களை நடத்தி வந்த முற்றிலும் வேறுபட்ட போராட்டங்களை ஒரணியில் திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டார். கியூபா சுதந்திரம் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்ததன் மூலம், கொலம்பசால் தொடங்கி வைக்கப்பட்ட காலனியாதிக்கத்தையும் – அதற்கு எதிராக பொலிவரால் தொடங்கி வைக்கப்பட்ட அரைக்கண்ட விடுதலைக்கான போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

19, மே,1895 அன்று தனது 42 ஆவது வயதில் விடுதலைப் போரில் அவருக்கு ஏற்பட்ட வீர மரணமானது இலத்தீன் அமெரிக்காவின் புதுயுகத் தொடக்கம் என மதிக்கப்படுகிறது. மிகவும் மதிக்கப்பட்ட அரசியல் சிந்தனையாளரும், இலத்தீன் அமெரிக்க வரலாற்றில் ஜனநாயகத்தை எடுத்தியம்பினவருமான மார்த்தி உண்மையில் அந்நாட்டின் மகத்தான கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.

மார்த்தியின் நாட்டுப்பற்றும் இலக்கியப்பணியும் இரட்டைப் பிறவிகள். தனது பதினைந்தாவது வயதில், 1868 இல் கியூப சுதந்திரத்துக்கான பத்தாண்டுப்போருக்கு சற்று பின்னர், இஸ்பானிய கொடுங்கோன்மையினை முதன் முதலில் எதிர் கொண்டார்.

Volunteer என அழைக்கப்பட்ட உள்ளூர்க் காவலர்கள், Villanuea Theatre இல் சுதந்திர கோஷங்களுக்கு எதிராக, நிராயுதபானியான பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தார்கள் ( கவிதை XXXVII ) இந்த நிகழ்ச்சியின் பின் விளைவாக மார்த்தியின் ஆசிரியரும் வழிகாட்டியுமான கவிஞர் Rafael Maria de mendive புரட்சிகர லட்சியங்களுக்கு ஆதரவாளர் என அறியப்பட்ட அவர் கைது செய்யப்பட்டு இஸ்பெயினுக்கு நாடு கடத்தப் பட்டார். அந்தப் படுகொலைக்கு அடுத்த நாள் La patria libre என்ற தலைமறைவு ரகசியப் பத்திரிக்கையில், ஒரு விடலைக் கதாநாயகன் அந்நியப் படையெடுப்பை எதிர்த்து உயிர் துறப்பதான தனது Abdala என்ற நாடகத்தைப் பதிப்பித்தார். பின்னர் ஒரு மாதத்திற்குள்ளேயே“10 de octubre!”

அவரது பாடல் El Siboney என்ற மாணவர் பத்திரிக்கையில் வெளியாகியது. கியூப சுதந்திரத்துக்கு போராடியதாலும், தனது பள்ளியில் படித்த சக மாணவர் ஒருவர் கொலைகாரப் படையில் தொண்டராகச் சேர்ந்ததைக் கண்டித்து கடிதம் எழுதியதாலும் ,

தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு San Lazaro Quarry யில் கடும் உழைப்பில் ஈடுபட வேண்டும் என இராணுவ நீதி மன்றம் அவருக்குத் தண்டணை வழங்கியது. இடுப்பிலும், கால்களிலும் பூட்டப்பட்ட இரும்புச்சங்கிலித் தளையானது அவரது சிறைக்காலம் முழுமைக்கும் அகற்றப்படவில்லை. அந்த இரும்புத்தளை சதையில் பதிந்த இரத்தக் காயத்தினை அவர் வாழ்நாள் முழுவதும் சகித்துக்கொள்ள நேரிட்டது.

செல்வாக்குள்ள ஒரு நண்பர் மூலமாக மார்த்தியின் பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த தங்களது மகனை பைன்ஸ் தீவுக்கு இடமாற்றம் செய்வித்து இறுதியாக 1871 _ ல் அவரது தண்டனையை ஸ்பெயின் நாட்டுக்கு நாடு கடத்துவதாகக் குறைத்து விட்டனர். அங்கு மார்த்தி சரகோசா மற்றும் மாட்ரிட் பல்கலைக் கழகங்களில் படித்துக்கொண்டே El precidio politico en Cuba (1871) என்ற ,கியூபச் சிறைகளில் அரசியல் கைதிகளுக்கு இழைக்கப் படும் கொடுமைகளைக் கண்டித்து எழுதப்பட்ட நூலினையும், La Republica espanala ante la revolucion cubana (1873) என்ற, இஸ்பானியர்கள் புதிதாக உருவாக்கிய குடியரசில் உள்ளது போன்ற அதே சுய நிர்ணய உரிமை கியூபர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என வீணே வற்புறுத்திய நூலையும் பதிப்பித்தார். இஸ்பானிய காலனிய ஆதிக்கத்தின் எடுபிடிகளால் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் மீறி, இஸ்பெயினில் தான் கழித்த காலத்தை, தன்னை உருவாக்கிய காலம் அது என அன்புடன் நினைவு கூர்ந்தார். அத்தோடு மட்டுமின்றி இஸ்பானியர்களின் பாரம்பரியக் கொள்கையான மூடநம்பிக்கை மற்றும் சகிப்பின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக போராடி உயிர் துறந்த தியாகிகளின் நினைவையும் போற்றினார்.

சட்டம், தத்துவம், மற்றும் இலக்கியத்துறையில் பட்டம் பெறுவதற்காக பரீட்சிக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற பின்னரும், இன்னமும் நாடு கடத்தல் தண்டணைக் காலத்தில் இருந்த மார்த்தி இஸ்பானியக் கண்காணிப்பை மீறி ஏமாற்றி சிறிது காலம் பாரீசில் இருந்தார். அங்கு விக்டர் ஹ்யூகோவைச் சந்தித்ததுடன் அவரது Mes fils என்ற நூலினை மொழி பெயர்த்தார். பாரீசிலிருந்து சவுத் ஆம்ப்டன் மற்றும் நியூயார்க் வழியாக மெக்சிகோவுக்கு கடற்பயணம் மேற்கொண்ட அவர், இறுதியாக, 1875 இல் ஆதரவற்ற தனது குடும்பத்தினருடன் இணைந்தார். Revisita universal பணியாளராக சேர்ந்தார். அவரது Amor con amor se paga (1875) என்ற நாடகம் Teottro principal என்ற அரங்கில் நடத்தப் பட்டது. மெக்சிகோவில் தனது ஏழு சகோதரிகளில் மிகவும் பிரியமான Mariana Matilde வைப் பறிகொடுத்தார். (கவிதை VI) தனக்கு எதிர் காலத்தில் மனைவியாய் அமைந்த ஒரு பணக்காரக் குடியேற்றக்காரரின் மகளான Carmen zayar Bazan உடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. (கவிதை XVIII, XX, XXXV, மற்றும் XXXVII). அங்கு அவர் வழக்கறிஞரான Manuel Mercado வைச் சந்தித்தார். அவரது நெருங்கிய நண்பராகவும் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த அவருக்கும் சேர்த்து ‘எளிய கவிதைகள்’ சமர்ப்பனம் செய்யப்பட்டது.

“ எனது தாய் நாட்டுக்கு அடுத்த படியாக நான் மிகவும் நேசித்தது இந்த நாடுதான்” என்று மெக்சிகோ பற்றிப் பேசுகையில் மார்த்தி குறிப்பிட்டார். அங்கும் கூட தொடர்ந்து வசிக்க அவர் அனுமதிக்கப்படவில்லை. Porfrio Diaz இன் திடீர் எழுச்சி அவரது வெளியேற்றத்தைக் கட்டாயமாக்கியது. கண்டு பிடிக்கப்பட்டால் நிச்சயம் சிறைவாசம் தான் என்ற ஆபத்து இருந்த போதிலும் கூட, 1877 இல் திருட்டுத்தனமாகவும் திடீரெனவும் Julian Prez என்ற பொய்ப் பெயரில் அவர் ஹவானா வந்து சேர்ந்தார். வந்த இரண்டு மாதத்துக்குள்ளேயே அவர் கவுதமாலா சென்று Jose Maria Izaguirre என்ற கியூபர் நடத்திய பொதுப்பள்ளியில் ஆசிரியரானார். பின்னர் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். கவுதமாலாவில் அவர் இருந்த அந்த ஆண்டில் அரசின் வேண்டுகோளினை ஏற்று கவுதமாலாவின் பண்டைய வரலாற்றை எழுதிப் பதிப்பித்தார். ஆனால் அது பயனற்றதாக ஆகிவிட்டது. ஏனெனில் அவரது நண்பர் Iza Guirre பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது தானும் தனது பதவியை விட்டு தன்னிச்சையாக விலகி அந்த நாட்டை விட்டு வெளியேறினார்.

தான் கவுதமாலாவில் தங்கியிருந்தபோது Maria Garcia Granodos உடைய வெகுளித்தனமான காதலை உதறித் தள்ளியது பற்றி எப்போதுமே நினைந்து நினைந்து வாடினார். அவளது இறப்பிற்குப் பின்னர்தான் அவளும் தன்னை உண்மையாக நேசித்தது அவருக்குப் புரிய வந்தது. (கவிதை IX)

இஸ்பெயின் நாட்டில் 1878 இல் பத்தாண்டுப் போரின் முடிவில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பைப் பயன் படுத்திக்கொண்டு மார்த்தி ஹவானாவுக்குத் திரும்பினார். அவரது மனைவி கார்மெனும் உடன் வந்து நவம்பர், 22 அன்று அவரது ஒரே மகனான Jose Francisco Marti Zyaz Bazan ஐ ஈன்றெடுத்தார். (கவிதை 1:10 மற்றும்XXI )

வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்கான உரிமம் மறுக்கப்பட்ட நிலையில் நியூயார்க்கினைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட Comitee Revolucionario cuba என்ற அமைப்பின் வழிகாட்டுதலுக்கேற்ப ஒரு புதிய கிளர்ச்சியை உருவாக்குவதில் உதவிக்கொண்டே ஒரு வக்கீல் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். அந்தத் தீவில் மீண்டும் பகைமைகள் உருவானபோது தனக்கு எதிராக எந்த ஒரு குற்றமும் சாட்டப் படாத நிலையிலேயே, மீண்டும் ஒரு முறை இஸ்பெயினுக்கு நாடு கடத்தப் பட்டார். ஆனால் அவர் மீண்டும் தப்பித்து Pyreness ஐக் கடந்து, தான் மிகவும் நேசித்த மகனையும் ,குடும்பத்துக்கும் அப்பால் வியாபித்திதிருந்ததும் ஆனால் குடும்பத்தை விலக்காததுமான அவரது பரிவுணர்வை, :¢ல சமயங்களில் குடும்பத்தைத் தாண்டியது மட்டுமல்ல அதனை விலக்குவது எனத் தவறாகப் புரிந்து கொண்டு வீணே பிணங்கிய மனவியையும் பிரிந்து ஜனவரி 1880 இல் நியூயார்க் வந்தடைந்தார்.



ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 9:47 pm

XLI -

183
கவுரவமிக்க நான் கொண்டுவரப்பட்டபோது
அன்பான அந்த நிலம் அளிக்கப்பட்டது எனக்கு
நான் நினைத்து போல அது வெளுப்பும் ரோஜாவுமல்ல
எனக்கு உரித்தான சலுகையுமல்ல

184
அப்போது நான் நினைத்தேன் அந்தக் கிழட்டுச் சிப்பாய் பற்றி
தன்னை படைத்தவனுடன் நிசப்தமாய் உறங்கும் அப்பாவி பற்றி
எனது பரிதாபத்துக்குரிய தந்தையாம்அந்த உழைப்பாளி பற்றி
எனது ஏழைத் தந்தையாம் அந்த சிப்பாயின் பெருமை பற்றி !


185
எனக்கு அந்தப் படாடோபமான கடிதம் கிடைத்தபோது
பெருமை மிகு கனவானின் கையெழுத்தைக் கண்ட போது
தனிமையான எனக்குரிய நிலவறையைத்தான் நினைத்தேன்
வெளுப்பையோ ரோசாவையோ அல்ல !


- XLII -

186
கடலோரமாக அண்மையில் இருந்த காதலின்
விசித்திரக் கடைவீதியில் அலைந்தபோது
தாரகை போல் ஜொலிக்கும் துயர முத்து ஒன்று
அதிர்ஷ்ட வசமாய் அகப்பட்டது ‘அகாருக்கு’ !

187
நீண்ட நேரம் அணைத்துக் கொண்டாள் மார்புடன் அதனை
தடவிக் கொடுத்தன கண்கள் முத்தினை நீண்ட நேரம்
விரைவிலேயே வெறுத்தும் விட்டாள்அதனை
எறிந்தும் விட்டாள் அதனைக் கடல் எழும்பும் போது !

188
விஷமத்தனமான ‘அகார் ‘ அழுது கொண்டிருந்தாள்
கோபத்தில் அவள் பறந்து கொண்டிருந்தாள்
கடலில் இருந்த முத்து இடை மறிக்க முயன்றது
குமுறும் கடல் பதில் அளிக்க வந்தது !

189
உலகிலேயே மிக அழகானஅந்த முத்தினை
என்ன செய்தாய் முட்டாளே?- மரியாதை இல்லாமல்
ஆழத்தில் தூக்கி எறிந்தாயே சோகமான அந்த முத்தினை
எப்போதுமே நான் காத்திடுவேன் அதனை என் கண் போல !


XLIII

190
உன் முதுகை மறைக்குந்தப் பொற்கூந்தலை
சீவி முடித்து சிங்காரிக்க ஆவல் மீறுகிறது சீமாட்டியே !
பிடரியின் பின் பக்கம் விசிறி விடு அச்செம்பொன் அருவியை
கோதி விடுவேன் நான் மெல்ல மெல்ல-
முத்தமிடுவேன் ஒவ்வொரு மயிரிழைக்கும் !

191
காந்தள் மலர் போன்ற மென் செவிகள் மீது
ஆடம்பரமாய் விழுகிறது அழகிய உன் கேசம்
கழுத்தின் பின் புறம் சென்று மறைகிறது
நடுவானில் மூடு திரை மறைவது போல !

192
கூந்தலை இணைத்துக் கட்டி அவிழ்க்கும் முடிச்சினைத்தீ£ண்டத்
தைரியம் வேண்டும் வெகுவாக எந்தனுக்கு
பிடரியில் படர விழ வைத்து விட்டால் -
சிக்கெடுத்துக் கோதுவேன் வெகு நேர்த்தியாக
ஒவ்வொரு மயிர்க்காலாய்ப் பிரித்துப் பிரித்து !



ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 9:48 pm


XLIV


193
வரண்டதோர் பழுப்பு நிறக் கானகத்தில் வசிப்பிடமாய்த்
தேர்ந்ததொரு குகையை வேங்கைச் சிறுத்தை
சிறுத்தையின் சின்னக் குகையை விடச் சிறந்ததோர் வசிப்பிடம்
இருக்கிறது எந்தன் இனிய நன்பனுக்கு !

194
கட்டிலும் மெத்தையுமாய்ச் சாய்ந்திருக்கும் Geisha
பெண் போலக் காத்திருக்கிறாள் அவள்
நானும் காத்திருக்கிறேன் -சாய்ந்து இளைப்பாற
மெத்தையை விட மேலானவன் நண்பன் !

195
பிச்சைக்காரனுக்கு விடியல் தரும் நம்பிக்கை போல
காத்திருக்கிறான் கோமான் பரம்பரைப் பெருமையில்
பறவைகளுக்கென சிறகிருப்பதைப் போல
மெக்சிகோவில் இருக்கிறான் எனக்கொரு நண்பன் !

196
மாளிகையாம் குடியரசுத் தலைவருக்கு பூங்காக்களோடும்
நீர் ஊற்றுக்களோடும்-தங்கமும் தானியமும் குவியலாய்
இருக்கிறதாம் அதற்குள்ளே-பீற்றிக்கொள்கிறார்கள் போகட்டும்!
எந்தனுக்கோ மேலும் அதிக வசதி !
நெருங்கியதோர் நண்பன் இருக்கிறான் அல்லவா ?

197
சலவைக்கல் மாளிகைச் சொப்பனம் எனக்கு
தவழுகிறது அங்கே ஆசீர்வதிக்கப் பட்டதோர் மவுனம்
இரவு நேரத்தில் ஆன்மாவின் வெளிச்சத்தில்
ஓய்வெடுக்கினறனர் ஆங்கே முன்னணி வீரர்கள் !
இரவில் தான் நான் பேசுவேன் அவர்களுடன்
அணி வரிசையில் அவர்கள்- அணிகளின் ஊடே நான்!
முத்தமிடுகிறேன் கல்லாய் உறைந்த அவர் தம் கைகளில் -.
அசைக்கிறார்கள் அவர்தம் இறுகிய உதடுகளை-
உதறுகிறார்கள் தம் பனி படர்ந்த தாடிகளை-
உறைந்த வாளினைப் பற்றிக் கொள்கிறார்கள்-
அழுகிறார்கள் பின்னர் …….உறைக்குள் நுழைகின்றன வாட்கள் !
அமைதி கொள் ! .
முத்தமிடுகிறேன் நான் அவர்தம் கரங்களை !

198
இரவில் பேசுகிறேன் நான் அவர்களுடன்
அணி வரிசையில் அவர்கள்- அணிகளின் ஊடே நான் !
நானும் அழுதுகொண்டே தழுவுகிறேன் ஒரு சிலையை.
ஓ…..சிலையே !
உன் பிள்ளைகள் உதிரம் குடிக்கிறார்கள்
தங்களது சொந்த இரத்த நாளங்களில் இருந்து
ஆனாலும் எசமானரின் விஷம் தோய்ந்த கோப்பைகளில்.
பேசுகிறார்கள் முரடர்களின் அசிங்கம் பிடித்த நாவினைப் பற்றி -
உண்ணுகிறார்கள் மானக்கேடான ரொட்டித் துண்டுகளை-
இரத்தம் தோய்ந்த மேசையில் இருந்து .
மூழ்கிப் போகிறார்கள் பயனற்ற வார்த்தைகளில்-சொல்லிக் கொள்கிறார்கள்
உன் பரம்பரை அற்றுப் போய் விட்டதாக – ஓ…சிலையே……..
தமது இறுதி மூட்டத்தில்குளிர் காயும் போது !

XLVI

199
நான் மதித்துப் போற்றிய வீர நாயகன்
எட்டி உதைத்தான் எந்தன் நெஞ்சில்
இழுத்துச் சென்றான் சட்டையைப் பிடித்து
தரை மீது என் தலை உராயும் வண்ணம்
ஆதவன் போன்ற தன் கைகளை உயர்த்தி
பேசுகின்றது அந்தச் சிலை :
” இடுப்புத் தோல் வாரை எட்டுகின்றன
வெள்ளைக் கரங்கள்- பளிங்குக் கல் மனிதன்
பாய்ந்து வருகிறான் அவர்தம் காலடியில் இருந்து ! “

XLVI

200
ஒளித்திடல் வேண்டும் உந்தன் துயரங்களை
எந்தவொரு மனிதனும் அறியவொண்ணா இடத்தில்-
எந்தனது பெருமையை நிலை நாட்டும் விதத்தில்
மற்றொரு சுமையை ஏற்றி விடாதே அவர்தம் தலையில் !

201
நேசிக்கிறேன் நான் உண்மை நண்பனான கவிதையே உன்னை-
கனக்கிறது இதயம் மிகவும்-
துண்டு துண்டாக சிதறிக் கிடக்கையிலே
சுமக்கிறாய் நீயோ கனத்த எனது அனைத்துத் துயரங்களையும் !

202
துயர் படவும் தாங்கவும் செய்கிறாய் எனக்காக
பரந்த உந்தன் மடியில் விட்டுச் செல்கிறேன் எந்தன்
ஒவ்வொரு காயத்தையும் ஒவ்வொரு அடியினையும்
வலி மிகு ஆழ்ந்த அன்பினையும் !

203
அமைதியாய் நான் அனைவரையும் நேசிக்கையில்
இலட்சிய வெறியில் நான் நற்பணி செய்கையில்
மேலும் கீழுமாய் அலைகளை வீசிக் கழுவி விடுகிறாய்
ஆன்மாவை அழுத்தும் அனைத்து அசுத்தங்களையும் !

204
வெறுப்பற்றும் தூய்மையாகவும் கடப்பேனாக
இந்தப் பள்ளத்தாக்கினை! எனது பக்கலில் உடன் வரும்
அருமை நண்பனே! சிரமத்தில் வெளுத்து- இழுத்து
இழுத்து வருகின்றனையே உந்தன் சரீரத்தை!

205
இவ்வாறாகத் தொடரும் என் வாழ்க்கைப் பயணம்
தெய்வீகமானதோர் பொறுமையும் சகிப்புமாய்
சகித்துக் கொள்கிறாய் என் துயரை என்பதோடு
மேற்பார்வை இட்டு வழி நடத்தவும் செய்கிறாய் !

206
எனக்குத் தெரியும் நண்பனே ! என்னை
உன் மீது சுமத்தும் கொடிய இந்தப் பழக்கமானது -
உண்மையில் பாதிக்கும் உனது சமநிலையை என்பதோடுகூட
சோதிக்கும் உந்தன் மென்மைமிகு ஆன்மாவை என்பதுவும்!

207
எந்தனது துயரங்களையும் வேதனைகளையும்
உந்தன் நெஞ்சில் நான் சுமத்தியதினால்
இங்கே வெண்மையும் அங்கே செம்மையுமான
அமைதி தவழும் உனது இயல்பை உலுக்கி விட்டேனே !

208
முழங்கியும் தாக்கியும் மரணம் வருகையில்
வெளுத்து விதிர்விதிர்த்துப் போகிறோம்
தாங்கவொண்ணாச் சுமையாய் வலியாய்த்
தலை மீது விழுந்து நொறுக்கி விடுகிறது !

209
மிகவும் நொந்து நொடித்துப்போன இதயத்தின் புத்திமதியை
ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன நான் ?
மறக்க முடியுமா என்ன ?
எப்போதுமே என்னைக் கைவிடாத உன்னை!

210
மரண வாயிலில் இருப்பவர்கள் மன்றாடும்
அந்த ஒரு படைப்பாளி பற்றிச் சொல்லுவாய்க் கவிதையே !
நாம் சபிக்கப்படுவதும் இரட்சிக்கப் படுவதும் ஒரு சேர நிகழ்கிறது
நமது விதிகள் பிணைக்கப் பட்டிப்பதனால் !
————————————————————————————-

மூலம்: ஹொசே மார்த்தி -கியூப விடுதலைப் போராளி

தமிழாக்கம் :புதுவை ஞானம்.
http://puthuvaignanam.wordpress.com




ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 10:15 pm

மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார்...நன்றி... மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 23, 2016 1:01 pm

ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 103459460 ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் - Page 3 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக