புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_m10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_m10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_m10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_m10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_m10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_m10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_m10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_m10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_m10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_m10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_m10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_m10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_m10தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்!


   
   
avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Sun Nov 28, 2010 3:59 pm




பொதுத்துறை வங்கிகள், அரசு நிதி நிறுவனங்கள் இவற்றின்மீதுதான் மக்களுக்கு அதிக நம்பிக்கை. இந்தியாவின் ஜனாதிபதி யாகக்கூட ஒரு குடிமகன் வந்துவிடமுடியும். ஆனால், அரசு வங்கியிலே நியாயமான காரணங் களுக்குக்கூடக் கடன் கிடைக்காது என்பதுதான் யதார்த்த நிலைமை.
இதனால்தான் தனியார் நிதிநிறுவனங்களை நாடவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படு கிறார்கள். இன்றைக்குச் சுயதொழில் தொடங் கவும் பொருளாதார ரீதியாக முன்னேறவும் விரும்பும் இளைஞர்களின் பணத் தேவையை அறிந்து கடன் என்ற வலையை வீசி, தமிழக இளைஞர் களின் எதிர்காலத்தைத் தம் பிடிக்குள் சிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன பன்னாட்டு நிதி நிறுவனங்கள்.
இரண்டு பகாசுரர்கள்

1. ஜி.இ. மணி என்ற பெயரில் தற்போது இயங்கிவரும் ஜி.இ. கண்ட்ரிவைடு நிறுவனம்.

2. சிட்டி ஃபைனான்ஸ் எனப்படும் சிட்டி பேங்க்கின் அங்கமான நிதி நிறுவனம்.

சென்னை மற்றும் புறநகர்களில் மட்டும் 28 கிளைகளுடன் இயங்கி வரும் இவர்கள்தான் முதன்மையான பகாசுரர்கள். `பணம் வேண்டுமா, வாங்க காபி சாப்பிடலாம்' என்றுதான் விளம்பரம் வைத் திருக்கிறார்கள். அதாவது, காபி சாப்பிடும் நேரத்திற்குள் நமக்குக் கடன் உதவி செய்து விடுவார்களாம். பணத்தேவை மிகுந்துள்ள சென்னைவாசிகளைக் காந்தம் போல ஈர்க்கிறது இந்த விளம்பரம். உள்ளே நுழைந்து பார்த்தால் தான் விஷம் போல அது நமது உயிருக்குள் ஏறுவதை உணர முடியும்.

வட்டிக் கொடுமை
உங்கள் அடையாள அட்டை, குடும்ப அட்டை இவை இருந்தாலே கடன் கொடுத்து விடுவோம் என்பார்கள். பொதுத்துறை வங்கிகளில் இவ்வளவு எளிதாகக் கடன்பெற முடியாது என்பதால் இந்த நிறுவனங்களை நோக்கி மக்கள் படையெடுக்கிறார்கள். நாம் அவர்களை நாடினால், வட்டி மூலமாகவே தண்டல்காரர்களை விட மோசமாக நம்மைச் சுரண்டிவிடுவார்கள். வட்டியில் இருவகை உண்டு. டிமினிஷிங் ரேட் வட்டி. அதாவது நாம் வாங்கிய கடன்தொகையின் அசல் குறையக் குறைய அதற்கேற்ற மாதிரி வட்டியும் குறையும். இன்னொன்று ஃப்ளாட் ரேட் வட்டி. 10ஆயிரம் ரூபாய்க்கு 3 வட்டி என்ற கணக்கில் மாதம் 300 ரூபாய் கட்டுகிறோம் என்றால், 9 ஆயிரம் ரூபாய் அசல் தொகை அடைந்துவிட்டாலும் 300 ரூபாய் வட்டிக் கட்டித்தான் ஆகவேண்டும். அதாவது, அசல் தொகையின் கடைசிப் பகுதி அடையும் வரை ஒரே வட்டிதான்.

வலை விரிக்கும் முறை
நம் காதுக்கு நெருக்கமாக இருக்கும் நமது செல்போன்தான் நமது கழுத்துக்குக் குறி வைக்கும் கயிறாகவும் நம்மைச் சிக்க வைக்கும் வலையாகவும் இருக்கிறது. ஏர்டெல், ஏர்செல், ஹட்ச் செல்போன் நிறுவனத்துடன் இந்த நிதிநிறுவனங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு, செல்போன் வாடிக்கையாளர்களின் எண்களையும் முகவரிகளையும் வாங்கிக் கொள்கின்றன. நமது செல்போனுக்கு ஒரு பெண்குரல் தொடர்பு கொள்ளும். குழையும் குரலில் பேசி, நமக்குக் கடன் கொடுக்கப் போவதாகவும் நேரில் அலுவலகத்துக்கு வரும் படியும் கூறும். கிடைக்காத கடனுக்கே பல முறை அலையும்போது, கூப்பிட்டுக் கடன் கொடுக்கிறார்கள் என்றால் தமிழன் வாங்காமல் இருப்பானா? வலையில் எளிதாக விழுந்து விடுவான்.
இத்தனைக்கும் நம்முடன் பேசுகிற பெண் குரல் அந்த நிதிநிறுவனத்தில் வேலை பார்ப்பவராக இருக்கமாட்டார். ஏதாவது ஒரு கால் சென்டரிலிருந்து பேசுவார். ஆள்பிடித்துத் தருவதுதான் கால் சென்டர்களின் வேலை. அவர்களிடம் நம்மை முதலில் விற்பவர்கள் நாம் சிம் கார்டு போட்டிருக்கும் செல்போன் நிறுவனத்தார்!

ஆளை அடகு வைத்துக் கடன்
குறிப்பிட்ட நிதி நிறுவனத்துக்கு நாம் சென்றால், வாசலில் உள்ள காவலர் முதற் கொண்டு எல்லோரும் நாம் ஏதோ பிச்சை வாங்க வந்திருக்கிறோம் என்பது போலத்தான் பார்ப் பார்கள். அப்படித்தான் நடத்துவார்கள். நாம் எப்போது அங்கு சென்றாலும் நம்மைப் போலவே 150 பேர் காத்திருப்பார்கள். அதில் ஒரு வடஇந்தியனையோ, பிராமணனையோ பார்க்க முடியாது. காரணம் அவர்கள் தாம் இந்த நிறு வனங்களின் முதலாளிகள் மற்றும் நிர்வாகிகள். 100 சதவீதம் அக்மார்க் தமிழர்கள்தான் தங்களை அடகுவைத்துக் கடன் வாங்குவதற்காகப் பிச்சைக்காரர்களைப் போலக் காத்திருப்பார்கள்.

எப்போது கூப்பிடுவார்கள் என்றே தெரியாது. மணிக்கணக்கில் குடிதண்ணீர்கூடக் கிடைக் காமல் உட்கார்ந்திருக்க வேண்டும். திடீரெனப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார்கள். உங்க ளுக்கு 20ஆயிரம் சேங்ஷன் ஆகியிருக்கு, 50ஆயிரம் சேங்ஷன் ஆகியிருக்கு என்று சொல்லி, முதலில் நம்மிடமிருந்து அடையாள அட்டையையும், காசோலைகளையும் வாங்கிக் கொள்வார்கள். ஏற்கனவே ஏமாந்தவராக இருந்தால் கொஞ்சம் கவனமாகக் காசோ லையை நிரப்பித் தருவார். புதிய ஏமாளி என்றால் அப்படியே வெற்றுக்காசோலையாகக் கையெ ழுத்து மட்டும் போட்டுக் கொடுத்துவிடுவார். அதுமட்டுமல்ல, ஏராளமான வெள்ளைத் தாள்களில் கையெழுத்தும் வாங்குவார்கள்.

இந்த முறை 3 சதவீதவட்டி, நீங்க சரியாகக் கடனை அடைத்துவிட்டால் அடுத்த முறை வட்டிக் குறையும். கடைசியில், ஜீரோ பர்சன்ட் வட்டிக்குக் கடன் தருவோம் எனத் தேனொழுகப் பேசுவார்கள். நாம் காசோலைகளைக் கொடுத்து விட்டு வந்தபிறகு, நமது வீட்டு முகவரிக்கு ஆளனுப்பி உறுதிப்படுத்திக்கொண்டு கடன் தொகைக்கான காசோலையை அந்த நிறுவனம் தரும். ஆனால், அவர்கள் சொன்னபடி அதில் 20ஆயிரம் ரூபாய் இருக்காது. நடைமுறைச் செலவுகள் என 1000 ரூபாய்ப் பிடித்தம் செய்யப் பட்டிருக்கும்.

மீதமுள்ள 19 ஆயிரம் ரூபாய்க்கு 20ஆயிரத்துக் கான வட்டிப் போடப் படும். அதை 36 மாதங்களில் கட்டச் சொல்வார்கள். வட்டி அதிகமாகிறதே, தவணையைக் குறைத்துக் கொள்ளலாம் என நினைத்தால், அதெல்லாம் முடியாது, இப்படித் தான் உங்களுக்குப் பாம்பே ஆபீசிலிருந்து சேங்ஷன் ஆகியிருக்கு. அதன்படி நீங்கள் கட்டித்தான் ஆகவேண்டும் என்பார்கள். மறுக்க முடியாது. ஏனென்றால் நாம்தான் ஏற்கனவே 36 மாதங்களுக்கான காசோலைகளை அவர்களிடம் கொடுத்துவிட்டோமே... அத்துடன் வெள் ளைத் தாள்களிலும் கையெழுத்துப் போட்டுவிட்டோமே.. அப்புறம் என்ன பேசுவது?
19 ஆயிரம் ரூபாயைக் கையில் வாங்கிக் கொண்டு, வட்டிக்கு மேல் வட்டியாக 36 மாதங்களில் கட்டப்படும் தொகையைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் 40ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக வரும். தண்டலைவிட, கந்துவட்டியைவிட மோசமான இந்தச் செயலைத்தான் இந்திய அரசின் அங்கீகாரத் துடனும் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்துடனும் பன்னாட்டு நிதிநிறுவனங்கள் செய்து வருகின்றன.

மிரட்டும் குண்டர்படை
நமது தொழிலில் கிடைத்த இலாபத்தின் மூலமாகவோ, அல்லது வேறுவகையான நிதியுதவிகளின் மூலமாகவோ இந்த நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை அடைத்து விடலாம் என்று சென்றால், கடனை அடைக்க விடமாட்டார்கள். "36 மாதம் கட்டித்தான் ஆகணும். உங்க செக் எங்ககிட்டேதான் இருக்கு. நீங்க கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிற தாள்களை மறந்துடாதீங்க. உங்களுக்குப் பணம் வந்தால் அதை பேங்க்கிலே போட்டு வச்சிட்டு, எங்களுக்கு மாசாமாசம் பணம் கட்டுங்க. இல்லைன்னா வீட்டுக்கு அடியாளுங்க வரு வாங்க" என மிரட்டுவதுதான் ஜி.இ. கண்ட்ரிவைடு, சிட்டி ஃபைனான்ஸ் ஆகிய வற்றின் பாலிசி.

ஒவ்வொரு மாதமும் தவணைத் தேதியன்று காலையில் நாம் போய் பேங்க்கில் பணம் கட்டுவோம். 9 மணி அல்லது 10 மணிக்குப் பணம் கட்டுவதுதான் வழக்கம். ஆனால், 8 மணிக்கே இந்த நிதி நிறுவனங்களுக்கு நாம் கொடுத்த செக் உஇகு முறையில் க்ளியரன்ஸ் ஆகவேண்டும். அந்த நேரத்தில், நம் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றால் செக் ரிட்டனாகிவிடும். இந்த விவரமெல்லாம், கடன் வாங்குகிற பல பேருக்குத் தெரிவதில்லை.

செக் ரிட்டன் ஆகிவிட்டால், உடனே நம் வீட்டுக்கு நாம் இல்லாத நேரமாகப் பார்த்து போன் வரும். மனைவி, மகள், தங்கை எனப் பெண்கள் போனை எடுத்தால், எதிர்முனை யிலிருந்து அசிங்கமாகத் திட்டுவார்கள். இல்லை யென்றால், வீட்டுக்கே நேரடியாகக் குண்டர் படைகளை அனுப்புவார்கள். அக்கம் பக்கத்து வீடுகளுக்குக் கேட்கும்படி அந்த அடியாள்படை நம்மையும் நமது வீட்டாரையும் மிரட்டும். சினிமா வில்லன்களைவிட மோசமாகச் செயல்படும். மானத்திற்குப் பயந்தவர்களா யிற்றே அப்பாவித் தமிழர்கள். உடனடியாகப் பணத்தைப் புரட்டித் தவணையைக் கட்டுவார்கள்.

அப்படிக் கட்டியபிறகும் கூடப் பல நேரங்களில் மிரட்டல் குரல் வரும். மனைவி தன் தாலியை அடகுவைத்து தவணைத் தொகையைக் கொடுத்தனுப்பியிருப்பார். அப்படியும் மிரட்டல் வருவதால், தன் கணவன் மீது சந்தேகம் வரும். உடனே கணவன் ஓடிப்போய் அந்த நிதிநிறுவனத்திடம் விசாரித்தால், `இப்பதானே கட்டியிருக்கீங்க. கம்ப்யூட்டரில் அப்டேட்டாக இன்னும் இரண்டு நாளாகும்' என்று அலட்சியமாகப் பதில் வரும். பணத்தைக் கடனாக வாங்கியதால் மானம், வெட்கம் எல்லா வற்றையும் அடகுவைக்கிற நிலைமைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகிறார்கள்.

அநியாய அபராதத் தொகை
ஒரு முறை நமது செக் ரிட்டன் ஆனால் அதற்குக் குறைந்தபட்ச அபராதம் 250 ரூபாய். சில நிதி நிறுவனங்கள் 400 ரூபாய், 500 ரூபாய்கூட அபராதமாக வசூலிக்கின்றன. அத்துடன், அடி யாள்கள் மூலமாக மிரட்டல்களும் தொடரும். அபராதத்துடன் தவணையைக் கட்டிவிட்டு, `இந்த மாத செக்தான் ரிட்டன் ஆகிவிட்டதே, அதைத் திருப்பிக் கொடுங்கள்' என்று நிதிநிறுவனத்தினரிடம் கேட்டால், `அதெல்லாம் பாம்பே ஆபீசில் இருக்கு. இப்ப கிடைக்காது. எல்லாத் தவணையும் முடிந்தபிறகுதான் செக் தருவோம். வெயிட் பண்ணுங்க' என்று அலட் சியமாகப் பதில் வரும். தொகையைக் கட்டிய பிறகும் அதற்குரிய காசோலையைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ளும் இந்த மோசடிக்கும் அநீதிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவ தில்லை. எது கேட்டாலும் மிரட்டல்தான். சில நிறுவனங்களில் அபராதத் தொகையை நம்மிடம் நேரடியாக வசூலிக்காமல் அதைக் கணக்கில் மட்டும் ஏற்றிக்கொண்டு, அதற்கும் வட்டி போட்டு, கடைசியில் அந்தச் சுமையையும் நம் தலையில் ஏற்றி மொத்தமாக வசூலிக்கின்ற கொடுமையும் உண்டு.

டாப்-அப் எனும் ஆப்பு!
ஜி.இ.மணி, சிட்டி ஃபைனான்ஸ் போன்ற நிதி நிறுவனப் பகாசுரர்கள்தான் இந்த டாப்-அப் என்ற வார்த்தையையே கண்டுபிடித்தவர்கள். வாடிக்கையாளர்களை டாப்லெஸ் ஆக்கத்தான் இந்த டாப்அப்! இதுவும் குழைந்து பேசி, விஷம் தோய்ந்த தேனை நாக்கில் தடவும் வேலைதான். 36 மாத தவனையில் நாம் ஏற்கனவே வாங்கிய கடனைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது, 9-ஆவது மாதத்தில் திடீரென ஒரு போனோ லெட்டரோ வரும். டியர் வேல்யூவபல் கஸ்டமர் என ஒரு பக்கம் ஆங்கிலத்திலும் இன்னொரு பக்கம் தமிழிலுமாக இரு முனை ஆப்பு தயாராக இருக்கும்.

நீங்க உங்க தவணையைச் சரியாக் கட்டி வருவதால், உங்கள் சேவையைப் பாராட்டி, இன்னொரு 20ஆயிரம் ரூபாய்க் கடன் உங்களுக்கு சேங்ஷன் ஆகியிருக்கிறது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும். ஏதோ ஒரு வகையில் பணம் பயன்படும் என்பதால் உடனே நிதிநிறுவன அலுவலகத்திற்குச் சென்றால், மறுபடியும் 36 காசோலைகள் வாங்கிக் கொண்டு, மறுபடியும் பிராசஸிங் பீஸ் என்கிற நடைமுறைச்செலவுக்காக 1000 அல்லது 1500 ரூபாய்ப் பிடுங்கிக்கொண்டு, மீதித் தொகைக்கு 20ஆயிரம் ரூபாய்க்கான வட்டியைப் போட்டு வசூலிக்கும் நடவடிக்கை தொடங்கிவிடும். ஏற்கனவே பெற்ற 20,000க்கு நாம் 36 காசோலைகள் அதாவது வட்டியோடு சேர்த்து 40,000 க்கு காசோலைகள் வழங்கியிருப்போம். டாப்அப் என்ற பெயரில் 9மாதம் தவணைபோக மீதமுள்ளப் பழைய கடன் பாக்கிகளை பிடித்துக் கொண்டு வெறும் ரூ-8,000த்தை உங்களுக்கு வழங்குவார்கள். உங்களுக்கு டாப்அப் வழங்குவதாகச் சொன்னது 20,000 ஆனால் கொடுப்பது வெறும் 8,000. பகல் கொள்ளை என்று சொல்வார்களே அது இதுதான். ஆனால் மீண்டும் நீங்கள் 40,000க்கு காசோலை வழங்க வேண்டும். டாப்-அப் எனும் இந்தக் கொடுமை, வெறும் ஆயிரங்களில் மட்டுமில்லை. இலட்சக் கணக்கில் கடன் கொடுத்து இரத்தத்தை உறிஞ்சும் கொடுமையும் நடக்கிறது. இந்தியப் பொருளா தாரம் ஒரு சிலரை டாட்டா பிர்லாக்களாகவும் பலபேரை பிளாட்பார பிச்சைக்காரர்களாகவும் வைத்திருப்பதால் பணத்தேவை பலருக்கும் இருக்கிறது. அதனைப் பயன்படுத்திக்கொண்டு டாப்-அப் கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றன ஜி.இ.மணி, சிட்டி பைனான்ஸ் நிறுவனங்கள்.

போதைக்கு அடிமையானவனை அந்தப் போதைத் தெளிய விடாமலேயே இருக்கச் செய்து அவனிடமிருந்து கறப்பதுபோலத்தான், மது போதைக்குப்பதில் நிதி போதையை ஊட்டி இந்தப் பகாசுர நிறுவனங்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. அரசின் அங்கீகாரம் பெற்ற இந்தத் தண்டல்காரர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்பதுதான் விடை தெரியாத கேள்வி.

கைகட்டிச் சேவை செய்யும் காவல்துறை
அமைந்தகரையில் ஜி.இ.மணி நிறுவனத்தின் அலுவலகம் இருக்கிறது. அங்கே வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்தி முடித்த நண்பர் ஒருவர், நடுவில் செக் ரிட்டனாகி, நேரடியாகத் தொகை செலுத்திய தவணைகளுக்குரிய காசோலைகளைத் திரும்பக் கேட்டார். அது வேற டிபார்ட்மெண்ட். இதுவேற டிபார்ட் மெண்ட். ஏதாவது விளக்கம் வேணும்னா பாம்பே ஆபிசில் கேட்டுக்குங்க என அங்கிருந்த பெண் ஊழியர் அலட்சியமாகப் பதில் சொன்னார். நண்பர் விடாப்பிடியாகத் தன் காசோ லைகளைக் கேட்க, அங்கிருந்த செக்யூரிட்டி தரதரவென வெளியே இழுத்துத் தள்ளினார். இதுகுறித்துக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

"நீ ஏன் கடன் வாங்கினே... கையெழுத்துப் போட்டுக் கொடுத்தே என்று சட்டம் பேசுகிறது காவல்துறை. இதுவரை இந்தப் பகாசுர நிறுவனங்கள் குறித்து எந்தப் புகாரையும் காவல்துறை பதிவு செய்ததில்லை. அதனால், அடியாள் படையைத் தாராளமாகக் களத்தில் இறக்கிவிடுகின்றன நிதி நிறுவனங்கள். கடன் தொகை வசூலுக்காக அடியாள்களை அனுப்பக் கூடாது என அண்மையில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. அதன்பிறகும் அடியாள் கள் வருகிறார்கள். காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

புறக்கணிக்கப்படும் ஜனநாயகக் தூண்கள்
காவல்துறையினர் கைகட்டிச் சேவை செய்வதால் அவர்களுக்குக் கமிஷன் கிடைக் கலாமே தவிர, ஒருபோதும் இத்தகைய நிறுவனங்களிடம் கடன் தொகை வாங்கிவிட முடியாது. காவல்துறையினர் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தூண்கள் எனப்படுகின்ற நீதித்துறையைச் சார்ந்த வழக்கறிஞர்கள், ஆட்சியைப் பிடிக்கத் தகுதியுள்ள அரசியல் வாதிகள், நான்காவது தூண் எனப்படும் பத்திரிகையாளர்கள் இவர்கள் யாருக்குமே இந்த நிறுவனங்கள் கடன் கொடுப்பதில்லை. அவர்களைச் செக் மோசடி செய்யமுடியாது, அபராத வட்டிப் போடமுடியாது, சட்டம் பேசுவார்கள் என்பதால் விவரம் தெரிந்தவர் களைப் புறக்கணித்துவிட்டு, அப்பாவிகளை மட்டும் குறிவைக்கின்றன இந்த நிறுவனங்கள். இப்படியொரு பொருளாதாரத் தீண்டாமையை அரசுகளும் அனுமதித்துக்கொண்டிருக்கின்றன.

தனியார் நிதிநிறுவனங்களின் தாத்தாக் களான பன்னாட்டு வங்கிகள்
ஜி.இ.மணி, சிட்டி பைனான்ஸ் போன்ற வற்றை மிஞ்சி நிற்கின்றன ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.எஸ்.பி.சி., ஹெச்.டி.எப்.சி, செஞ் சூரியன் உள்ளிட்ட வங்கிகள். இங்கே இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கடன் கொடுத்துக் கழுத்தை நெரிக்கும் வேலைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஃப்ளாட் ரேட் வட்டியில் இந்த வங்கிகளும் கொள்ளை அடிக்கின்றன. முன்கூட்டியே கடன்தொகையை அடைத்தால் அதற்கும் 5 சதவீதம் அபராதம் விதிக்கின்ற கொடுமை இந்த வங்கிகளில் நிலவுகிறது. நாம் எவ்வளவு தொகை கட்டி யிருக்கிறோம் என்கிற விவரத்தைக் கேட்டால் அதற்கும் ஒரு கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால், காசோலைகளைத் திருப்பிக் கொடுப்ப தில்லை. முழு தொகையை அடைத்தபிறகும் கூட அடுத்த மாத காசோலைக்கு அதற்குரிய தவணைத் தேதியில் பணம் எடுக்கப்படுகிறது. இந்த நிதிநிறுவனங்கள், வங்கிகளின் பிடியில் சிக்கியவர்கள் மீள்வதற்கே வழியின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தனியார்மயம், உலகமயம், பொருளாதார மயம் இவற்றில் இந்தியக் குடிமகன் மீள முடியாத கடனாளியாகியிருக்கிறான் என்பதைப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் யாராவது எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும். இந்தக் கடனாளிகளின் கடைசி முடிவு தற்கொலை. மன்னிக்கவும், பன்னாட்டு நிதிநிறுவனங்கள் செய்யும் அப்பட்டமான கொலை. இந்தக் கொலைகளைத் தடுத்து, குடிமக்களின் உயிரைக் காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றன?

செல்போன் மற்றும் நிதிநிறுவனங்களால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? தாகம் இதழுக்கு எழுதி அனுப்புங்கள்.

ஏர்டெல்லின் மக்கள் நீதிமன்றம்!
மக்களை மோசடி செய்வதிலும் அவர்களைப் பைத்தியக்காரார்களாக மாற்றுவதிலும் பன்னாட்டு நிதிநிறுவனங்களும், செல்போன் நிறுவனங்களும் இரட்டைப் பிறவிகள். செல்போன் என்பது தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறது. அதிலும் இரண்டு மூன்று செல்போன்களுடன் ஆண்களும் பெண்களும் சுற்றுகின்ற காலம் இது. குறைந்த செலவில் பேச பி.எஸ்.என்.எல்., காடுமேடு போன்ற பகுதிகளிலும் டவர் கிடைக்க ரிலை யன்ஸ். மற்ற நேரங்களுக்கு ஏர்டெல் என்று நகர்ப்புறத்து மக்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. அதனைப் பயன்படுத்தி, மக்களை வஞ்சிக்கும் கலையை மிகச் சரியாகச் செய்துவருகின்றன செல்போன் நிறுவனங்கள்.
சென்னையைப் பொறுத்தவரை முன்னணி நிறுவனம் ஏர்டெல். அதிக வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்திற்குத்தான் இருக்கிறார்கள். கட்டணம் அதிகமாக இருந்தாலும் வசதிகள் கூடுதலாக இருப்பதால் மக்கள் இதனை விரும்புகிறார்கள். பார்தி செல்லுலார் நிறுவனம் என்கிற இந்த ஏர்டெல் நிறுவனம் எப்படியெல்லாம் மோசடி செய்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

கட்டணமாகும் இலவச கால்கள்
ஒரு நிறுவனம் நான்கைந்து சிம் கார்டுகளை ஏர்டெல்லில் வாங்கினால் அவர்களுக்குள் பேசிக் கொள்ளக் கட்டணம் இல்லை என்பதாக இ.க்.எ என்ற முறையை அறிமுகப்படுத்தினார்கள். இதன்படி ஒரு குழுவாக சிம் கார்டு வாங்கியவர்கள் தங்களுக்குள் வியாபாரரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ நீண்டநேரம் பேசுவது வழக்கம். இலவசம்தானே என்று பேசினால், மாதம் முடிந்ததும் அதற்கும் சேர்த்து பில் வரும். என்னவென்று விசாரித்தால், 600 நிமிடம்தான் இலவசம். அதற்குப்பிறகு பேசினால் கட்டணம். நேற்றுதான் இந்த முறை அமலுக்கு வந்துள்ளது. உங்களுக்கெல்லாம் இன்றைக்கு எஸ்.எம்.எஸ்.வரும் என்று பதில் சொல்வார்கள். கட்டணத்தை வசூலிக்காமல் விடமாட்டார்கள்.

எழுத்துப்பூர்வ அத்தாட்சியே கிடையாது
இதுபோன்ற குளறுபடிகள் குறித்து நாம் அவர்களிடம் புகார் செய்தால், கம்ப்யூட்டரில் அப்டேட் செய்து கொள்கிறோம் என்று மட்டும் சொல்வார்கள். ஆனால் செய்ய மாட்டார்கள். 999 ரூபாய்த் திட்டத்தில் இடம்பெற்றிருப்பவர், 500 ரூபாய்த் திட்டத்திற்கு மாற்றச் சொல்லித் தெரிவித்திருந்தால் மாற்றியிருக்க மாட்டார்கள். மறுபடியும் நேரில் போய்க் கேட்டால், உங்களிடம் பேசியவர் மாறிவிட்டார் என்பார்கள். சரி இப்போது புகார் எழுதித்தருகிறோம் அதற்கு அக்னாலட்ஜ் மெண்ட் கொடுங்கள் என்றால், அக்னாலஜ் மெண்ட்டில் சீல், தேதி எதுவும் போடமாட்டார்கள். அந்த வரவேற்பறை பெண்ணின் கிறுக்கல் கையெழுத்து மட்டுமே இருக்கும்.

தொலைந்த செல்போனுக்கும் கட்டண வசூல்
முன்பெல்லாம் செல்போன் தொலைந்துவிட்டால் போலீசில் பெயருக்கு ஒரு எஃப்.ஐ.ஆர். போடு வார்கள். ஆனால், செல்போனைக் கண்டுபிடிக்க மாட்டார்கள். அதனைக் கண்டுபிடிப்பது நடைமுறை சாத்தியமுமில்லை. அதனால் இப்போது யாரும் போலீசில் புகார் கொடுக்காமல் செல்போன் நிறுவனத்திடமே புகார் தெரிவிக்கிறார்கள். தொலைந்துபோன செல்போனின் சிம்கார்டை டீ-ஆக்டிவேட் செய்துவிடுங்கள் என்று தெரிவித் தாலும் அதனைச் செய்யாமல், அடுத்தமாதம் அதற்குரிய பில்தொகையை நம் தலையில் கட்டு கிறார்கள். திருடிச் சென்றவன் பேசியவற்றுக் கெல்லாம் பறிகொடுத்தவன் பணம் கட்ட வேண்டி யிருக்கிறது. கட்ட மறுத்தால், பணம் வசூலிப்பதற் கென்றே அவர்கள் வைத்திருக்கும் கலெக்ஷன் ஆட்கள் வந்துவிடுவார்கள். உழைக்காமல், முதலீடு செய்யாமல் சம்பாதிக்கும் ரியல் எஸ்டேட் துறை போல இப்போது இந்தக் கலெக்ஷன் ஆட்கள் கிளம்பியிருக்கிறார்கள். முழுக்க முழுக்க அடி யாட்களைக் கொண்டுதான் இது நடைபெறுகிறது. பல கலெக்ஷன் சென்டர்களை இயக்குபவர்கள் ஓய்வுபெற்ற காவல்துறையினர். அவர்களுக்குத் தானே அடியாள்களைச் சரியாக அடையாளம் தெரியும்.

சட்டம் படும்பாடு
காவல்துறையையே தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு செயல்படும் நிறுவனங்கள், நீதித்துறையையா மதிக்கப் போகின்றன? நமது நண்பர் ஒருவரைத் தனது மோசடித் திட்டங்களால் வஞ்சித்திருந்தது ஏர்டெல் நிறுவனம். அவரும் போராடிப்பார்த்தார். உன்னால் முடிந்ததைப் பார் என்றும் சொல்லிவிட்டார். செல்பில் கட்டவில்லை என்று அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விட்டார்கள். `லோக் அதாலத்' என்கிற மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு. வழக்கறிஞருக்குப் பணம் கொடுக்க முடியாமல், வழக்குச் செலவை எதிர் கொள்ள முடியாமல் இருக்கும் ஏழை மக்களுக் கானதுதான் லோக் அதாலத். இப்போது ஏர்டெல் போன்ற பரம ஏழை நிறுவனங்கள் இந்த நீதிமன்றத்தை மிகச்சரியாக பயன்படுத்தி வரு கின்றன. இங்கே பலப் பிரச்சினைகள் தீர்க்கப் படுகின்றன. வரவேற்கப்படவேண்டிய விஷயம். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற 3 நீதிபதிகள் இந்த லோக் அதாலத்தில் பலப் பிரச்சினைகளை அக்கறையுடன் கேட்டுத் தீர்த்து வைக்கிறார்கள்.

நமது நண்பர் அங்கே சென்ற போது, நீதிமன்றத்தின் வாசலில் ஒரு பெரிய பேனர். அது ஏர்டெல் நிறுவனத்தின் பேனர். அதாவது, மக்கள் நீதிமன்றத்துக்கான பெயர்ப்பலகையை எழுதிக் கொடுத்து, அதைவிடப் பெரிதாகத் தன் பெயரைப் போட்டு விளம்பரம் செய்திருக்கிறது ஏர்டெல் என்கிற தனியார் நிறுவனம். நீதிமன்றத்தில் தனியார் ஒருவர் ஒரு பொருளை அன்பளிப்பாகத் தர வேண்டுமென்றால் கூட உயர்நீதிமன்றப் பதிவாளரின் அனுமதி பெறவேண்டும். ஆனால், உயர்நீதிமன்றத்திலேயே தனியார் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது விளம்பரத்தை எப்படி வைத்தது என்பது புரியவில்லை. அதுவும் ஏர்டெல்லின் மக்கள் நீதிமன்றம் என்று.
நண்பர் தனது பிரச்சினையை நீதிபதிகளிடம் சொன்னார். கார்ப்பரேட் முறையில் வாங்கப்பட்ட செல்போன்களில் ஒன்று தொலைந்துபோய், அதுகுறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டபிறகும் அதற்கான பில்லை அனுப்புகிறார்கள் என்பதையும், மற்ற பில் தொகை சரியான தேதிகளில் தொடர்ந்து கட்டப்பட்டுவருகின்றன எனவும் ஆண்டிற்குச் சுமார் 50,000 ரூபாய் ஏர்டெல் நிறுவனத்திற்குத் தன் நிறுவனம் கட்டிவரும் சூழலில் தன் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்கிறார்கள் என்பதையும் விரிவாக விளக்கியிருக்கிறார். தான் குடியிருக்கும் பகுதியில் சரியாகத் தொடர்பு கிடைப்பதில்லை என்பதை ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரியே வந்து உறுதி செய்துவிட்டுச் சென்றிருப் பதையும் நண்பர் தெரிவித்து, இப்படிப்பட்ட நிலையில் அதிக தொகைக்கான பில் கட்டமுடியுமா? என்னென்ன அழைப்புகள் பேசப்பட்டிருக்கின்றன என்ற விவரத்தைத் தரட்டும் (ஐœஞுட்டிண்ஞுஞீ ஞடிடூடூ). சரிபார்த்துக் கட்டுகிறோம் என நீதிபதிகள் முன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதெல்லாம் தரமுடியாத அவரைப் பணத்தைக் கட்டச்சொல்லுங்கள் என ஏர்டெல் நிறுவனத்தார் நீதிபதிகளுக்குக் கட்டளையிட, அதையே நீதிபதிகளும் வழிமொழிந்தனர். வெளியிலே தங்கள் பேனரை வைத்துவிட்டு, உள்ளே தங்கள் ஆளுமையைக் காட்டும் வேலையை ஏர்டெல் நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது. பணத்தைக் கட்டு என்பது மட்டுமே நீதிமன்றத்துக்குள் நடைபெறும் விவாதத்தின் சாரம்சமாக இருக்கிறது. இது மக்கள் நீதிமன்றமா? ஏர்டெல் நீதிமன்றமா? என்பது அங்கு சென்ற நமது நண்பர் போன்ற பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குப் புரியவில்லை.
பூனைக்கு மணி கட்ட நினைக்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள். இந்த மோசடி நிறுவனப் பூனைகளுக்கு எப்போது கட்டப் போகிறார்கள்?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 28, 2010 4:58 pm

நாட்டுல இப்படியெல்லாம் ஏமாத்துறாங்களா.நீங்க சொல்லி இருக்கற இந்த விசயம் பாதி பேருக்கு தெரியாது.தெளிவா சொல்லி இருக்கீங்க.நன்றி.அது சரி ஏர்டெல் நிறுவனத்தில் மட்டும்தான் இதெல்லாம் நடக்குதா?




தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Uதமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Dதமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Aதமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Yதமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Aதமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Sதமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Uதமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Dதமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Hதமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Nov 28, 2010 4:59 pm

தகவலுக்கு நன்றி நண்பாரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Nov 28, 2010 5:09 pm

உண்மைதான் அணைத்து வங்கிகளிலும் இதே நிலைதான்

முன்கூட்டியே கடன்தொகையை அடைத்தால் அதற்கும் 5 சதவீதம் அபராதம் விதிக்கின்ற கொடுமை இந்த வங்கிகளில் நிலவுகிறது. நாம் எவ்வளவு தொகை கட்டி யிருக்கிறோம் என்கிற விவரத்தைக் கேட்டால் அதற்கும் ஒரு கட்டணம் வசூலிக்கிறார்கள்.முன்கூட்டியே கடன்தொகையை அடைத்தால் அதற்கும் 5 சதவீதம் அபராதம் விதிக்கின்ற கொடுமை இந்த வங்கிகளில் நிலவுகிறது. நாம் எவ்வளவு தொகை கட்டி யிருக்கிறோம் என்கிற விவரத்தைக் கேட்டால் அதற்கும் ஒரு கட்டணம் வசூலிக்கிறார்கள்.




தமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Mதமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Oதமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Hதமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! Aதமிழகத்தை தற்கொலை பூமியாக்கும் தனியார் நிறுவனங்கள்! N
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sun Nov 28, 2010 5:35 pm

தனியார் வங்கிகளின் மறுமுகத்தை தெளிவாக காட்டியமைக்கு நன்றி

avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Mon Nov 29, 2010 6:15 pm

இல்லை உதயசுதா அனைத்து மொபைல் போன் நிறுவனங்களிலும் நடக்கிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 29, 2010 6:38 pm

இது உங்களுடைய சொந்த பதிவா vmanirajan ?

avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Mon Nov 29, 2010 6:53 pm

சொந்த அனுபவம்

avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Mon Nov 29, 2010 6:56 pm

நான் ஒரு வருடம் HBL global ltd (HDFC bank's sister cocern)
ல் வேலை பார்த்த அனுபவம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 29, 2010 7:41 pm

http://thaagam.com/MarNews_008.html

இந்த தளத்தில் சேரன் என்பவர் இதே பதிவை போட்டுருக்கார் , அதுவும் உங்கள் பெயர் தானா ?, இல்லையென்றால் அவர் மணிராஜன் என்னுடைய பதிவை திருடி போட்டுருக்கார் என்று சொன்னால் என்ன பதில் சொல்வது?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக