புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
2 Posts - 1%
prajai
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
432 Posts - 48%
heezulia
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
29 Posts - 3%
prajai
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஏர்டெல் கொள்ளை Poll_c10ஏர்டெல் கொள்ளை Poll_m10ஏர்டெல் கொள்ளை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர்டெல் கொள்ளை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Fri Nov 26, 2010 9:35 pm

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பல நூதன முறையில் ஏமாற்றபடுகிறார்கள், அவர்கள் விழிப்புணர்வாக மட்டுமே இங்கு பதிவு செய்கிறோம். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து புகார்கலும் ஏர்டெல்-ல் பதிவு செய்யப்பட்ட புகார்களே…!
ஏர்டெல் பூஸ்டர் பேக் கொள்ளை:

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மாதம் தோரும் 125 ரூபாய் பூஸ்டர் பேக் போட்டால்.. ஒரு நிமிடத்திற்கு ஏர்டெல் TO ஏர்டெல் 10 பைசா, மற்ற மொபைலுக்கு 50 பைசா, லேன்டு லைனுக்கு 1 ரூபாய், குறுஞ் செய்திக்கு 5 பைசா அல்லது அவர் பிளான் படி இருக்கும். இது 30 நாட்கள் வேலிடிட்டி. 245 ரூபாய் பூஸ்டர் பேக்கிலும் இதே கால் கட்டணம்தான் ஆனால் 90 நாட்கள் வேலிடிட்டி என்பது ஏர்டெல் நிறுவனத்தின் அறிவிப்பு.
125 ரூபாய் அல்லது 245 ரூபாய் செலுத்தி பூஸ்டர் பேக்கிலுள்ள வாடிக்கையாலர்கள் பணத்தை திருட ஏர்டெல் பின்பற்றும் நூதன களவு முறைகள்.. (ஏர்டெல், வாடிக்கையாளர்களின் பணத்தை திருடுவது சில நேரங்களில் வாடிக்கையார்க்கே தெரிவதில்லை என்பது கூடுதல் தகவல்)

(1). நூதன் திருட்டு :
வாடிக்கையாளர்கள் பூஸ்டர் பேக்கில் இருக்கும்போதே, ஏதாவது பண்டிகை….. புதுவருடம், பொங்கள், தீபாவளி, அம்மாவாசை, பொளர்னமி, அஷ்டமி, நவமி, பிறந்தநாள், இறந்தநாள் என்று ஏதாவது வருகிறது என்றால் அதற்கு முன்னறே ஒரு குறுஞ்செய்தி வாடிக்கையாளர் மொபைலுக்கு வரும். எடுத்துக்காட்டாக “ புது வருடத்தை முன்னிட்டு டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாலும் குறுஞ்செய்தி ஒன்றிற்கு 50 பைசா வசூலிக்கப்படும் ” என்ற செய்தி.
நாடு முழுவதும் ஏர்டெல் ரீடெய்லர்கள் உள்ளனர். எந்த கடையிலாவது போய் இன்று ஏர்டெல் ஆபர் என்ன உள்ளது என கேட்டுப்பாருங்கள்….. ஒரு தெளிவான பதிலே கிடைக்காது.

(2). கால் போகும் ஆனால் போகாது:
வாடிக்கையாளர்களை கொள்ளையடிக்க ரூம் போட்டு யோசிக்கும் ஏர்டெல்…..
ஏர்டெல் பொபைலில் இருந்து மற்றொருவரை தொடர்புகொள்ளும்போது…. ரிங் போகும், கால் அட்டன் பன்னுவார்கள்… ஆனால் ஒருவருக்கொருவர் பேசுவது கேக்காது. உடனே அழைப்பு கட்டணத்தை எடுத்துவிடுவார்கள். சில வாடிக்கையாளர்கள் இந்த பிரச்சனைக்கு போன் பிராபலம் அல்லது டவர் பிராபலம் என்று என்னிகொண்டு அப்படியே விட்டு விடுவார்கள். ஆனால் இதை ஒரு பொழப்பாகவே நடத்திவருகிறது நூதன கொள்ளையில் ஈடுபட்டு வரும் பிரபல ஏர்டெல் நிறுவனம்.

(3). 40 வினாடி = ஒரு நிமிடம் - ஏர்டெல் சட்டம்:
125 அல்லது 245 பூஸ்ட்டர் பேக்கில் இருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் பேலன்ஸ் 20 பைசாவிற்கு குறைவாக இருக்கும் போது, அதாவது ஒரு கால் பேசும் அலவிற்கு பேலன்ஸ் இருக்கும்போது அந்த கடைசி கால் 40 வினாடிகளில் ஏர்டெல் நெட்வொர்க்கால் துண்டிக்கப்படுகிறது.

(4). ஏர்டெல் – காலர் டியூன் மோசடி:
எனது கிராமத்து பாட்டியை ஏமாற்றிய ஏர்டெல்……….
2 மாதங்களுக்கு முன், கிராமத்தில் இருக்கும் எனது பாட்டிக்கு ஒரு ஏர்டெல் சிம் போட்டு ஒரு போன் வாங்கி கொடுத்து, அவசரத்திற்கு பயன்படுத்த 100 ரூபாய் டாப் அப் செய்து கொடுத்து விட்டு பணி ரீதியாக வெளியூர் சென்று விட்டேன். சென்ற மாதம் பாட்டியை பார்க்க கிராமத்திற்கு சென்றிருக்கையில் பாட்டியின் போன் பேலன்ஸில் 30 ரூபாய் அப்பட்டமாக குறைந்திருந்தது. ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு விளக்கம் கேட்கையில் அவர்கள் அளித்த விளக்கம் பின்வருமாறு ” ஏர்டெல் உங்களுக்கு 1 மாத காலர் டியூன் இலவசமாக பயன்படுத்த தானாகவே ஆக்டிவேட் செய்தது. ஒரு மாதம் முடிந்த உடன் நாங்கள் 30 ரூபாய் அடுத்த மாதத்ற்காக எடுத்து கொண்டோம் ” இந்த பதிலை கேட்ட உடன் நீங்களே புரிந்துகொள்ளுங்கள் ஏர்டெல் எனது பாட்டியை ஏமாற்றிய விதத்தை.

(5). காலர் டியூனாக ஒலிப்பது பாடலா…? ஏர்டெல் விளம்பரமா…?
ஒருவர் காலர் டியூன் ஆக்டிவேட் செய்திருந்தால், அவரை தொடர்புகொள்பவருக்கு …டிரிங்….டிரிங் என்ற ஒலிக்கு பதிலாக அவர் ஆக்டிவேட் செய்துள்ள பாடல் கேட்கும். இங்கும் ஏமாற்று வேலையை துவங்கிவிட்டது ஏர்டெல்.
ஏர்டெல் காலர் டியூன் ஆக்டிவேட் செய்துள்ள ஒருவரை நீங்கள் தொடர்பு கொண்டால் அவரின் காலர் டியூன் ஒலி கேட்பதில்லை. மாறாக, “ இந்த பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த எண்ணை அழுத்துங்கள். டவுன்லோடு சார்ஜ் ரூபாய்.15 மட்டும்தான், மாதவாடகை ரூபாய்.30 மட்டும் தான் “ என்ற விளம்பரம் தான் ஒலிக்கும். இந்த விளம்பரம் முடிவதற்குள் நீங்கள் தொடர்பு கொண்டவர் உங்கள் காலை அட்டன் செய்து விடுவார். அவர் என்ன பாடல் காலர் டியூனாக வைத்துள்ளார் என்பது கூட உங்களுக்கு தெரியாது. பின் எதற்கு அவர் மாதம் மாதம் ரூபாய்.30 ஏர்டெலிற்கு மொய் எழுத வேண்டும்………?
(மிஸ்டு கால் கொடுத்து பேசும் வாடிக்கையாளர்கள் இந்த விளம்பரத்தால் தன்னிடம் உள்ள குறைந்தபட்ச பேலன்சையும் இழக்க நேரிடும். காரணம், தொடர்பு கொள்பவருக்கு ரிங் சத்தமோ, காலர் டியூனோ ஒலிக்காது. மாறாக ஏர்டெல் காலர் டியூன் விளம்பரம் மட்டுமே கேட்க்கும். இவர்கள் காலர் டியூன் அல்லது ரிங் ஒலி கேட்ட பிறகு கட் செய்யலாம் என நினைப்பது பலிக்காது! )

(6). குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடு்ம் ஏர்டெல்:
சற்று அதிகமாக மொபைல் பேலன்ஸை வைத்திருப்பவர்கள் பணம், ஏர்டெல்-லால் திருடப்படும் வழிமுறை:
புஷ் மெசேஜ்(push sms) என்ற பெயரில் கன்ட கன்ட (SMS) குறுஞ்செய்திகளை வாடிக்கையாளர்கல் மொபைல் போனுக்கு ஏர்டெல்-லிருந்து வரும். அதை ஓப்பன் செய்தாலே போதும் 99 ரூபாய் வாடிக்கையாளர் பேலன்ஸில் இருந்து எடுக்கப்படும். இந்த பிரச்சனையில் சிக்கிய நாங்கள், இது தொடர்பாக ஏர்டெல் வாடிக்கையார் சேவை மையத்தை தொடர்புகொண்டு கேட்டதற்கு அவர்கள் அளித்த விளக்கம் “ நாங்கள் அனுப்பிய SMS-ஐ ஓப்பன் செய்ததன் மூலம் ஜாவா கேம் என்ற விளையாட்டை டவுன்லோடு செய்துளீர்கள். அதற்காக 99 ரூபாய் எடுத்துள்ளோம் என்றார்கள் “ என்றார்கள். ஏர்டெல் கூறிய பதில் ஏற்கப்படும் விதத்தி்ல் இல்லை. எனவே மீண்டும மீண்டும கடும் வாக்கு வாதத்திற்கு பிறகு பல முறை ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு மீண்டும் அந்த 99 ரூபாயை திரும்ப பெற்றோம்.
தோழர்களே சற்று சிந்தித்து பாருங்கள்.. இவர்களை(ஏர்டெல்) யார் புஷ் (SMS) குறுஞ்செய்தி அனுப்ப சொன்னது, அதை ஓப்பன் செய்த உடனே 99 ரூபாயை எடுத்துகொள்கிறார்களே… அந்த ஜாவா கேம் முழுவதும் டவுன்லோடு ஆனதா…? ஆகவில்லையா….? என்று ஏர்டெல்-லிற்கு தேரியுமா…?, பணத்தை திருடுவதிலே தமது நோக்கத்தை செலுத்தும் ஏர்டெல் தாம் எடுத்த பணத்திற்காக பயன் வாடிக்கையாளரை சென்றதா என இவர்கள் ஏன் யோசிப்பதில்லை..?

(7). ஏர்டெல் – தாய் வீட்டு சீதனம்…?
புதிதாக வாங்கும் எந்த ஒரு பிரிபெய்டு ஏர்டெல் சிம் கார்டுகலிலும் சில எண்கள் அதிலே பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த எண்ணை தெரிந்தோ….. தெரியாமலோ கால் செய்து ஒரு வினாடியில் கட் செய்து விட்டால் கூட உடனே ஏர்டெல் பணம் பறிக்கும் சேவைகள் ஆக்டிவேட் செய்துவிடுகிறது. இதற்கு ஏர்டெல் கூறும் காரணம்.., “ நீங்கள் இந்த எண்ணை கால் செய்ததன் மூலம் ரேடியோ சர்வீஸை ஆக்டிவேட் செய்துள்ளீர்கள். இதற்க்காக நாங்கள் 10 வினாடிக்கு ரூபாய்.10 எடுத்துக் கொண்டோம். “ என்கிறார்கள்.


(8). முடிவுரை:
மேலே பதிவு செய்யப்பட்டுள இது போன்ற நூதன திருட்டிலிருந்து நமது நாட்டு மக்களை விடுவிக்க ஒரே வழி, அனைவருக்கும் கல்வி மட்டுமே..!!!!! இந்தியாவில் எழுத்தரிவு 100 % எட்டும் வரை நம் நாட்டு மக்கள் பணம் திருடப்பட்டுக்கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
Thanks : Mr.Rafeek Knr. Dammam

avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Fri Nov 26, 2010 9:38 pm


இரண்டு கம்பெனி, மூன்று கம்பெனி என்று இப்போது, ஏர்டெல், ஏர்செல், வோடோபோன், ரிலையன்ஸ், டோகோமோ, எம்.டி.எஸ், யுனிநார், என்று ஜி.எஸ்.எம்மிலும், சிடி.எம்.ஏ டெக்னாலஜியிலும் நிறைய மொபைல் சர்வீஸ் கொடுக்கும் கம்பெனிகள் வந்தாலும் நமக்குதான் விடிய மாட்டென் என்கிறது.


அளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு அந்த ஸ்கீம், இந்த ஸ்கீம் என்று அறிவித்தாலும் எல்லோரும் பேசி வைத்துக் கொண்டு ஒரே கணக்கை மாற்றி மாற்றி காட்டுகிறார்கள் அவ்வளவுதான் அது போஸ்ட்பெய்ட்டாக இருந்தாலும் சரி. ப்ரிபெய்ட்டாக இருந்தாலும் சரி. எல்லாம் ஒரே கணக்குத்தான். சரி பண விஷயத்தை விடுவோம்.
ஆனால் கஸ்டமர் சர்வீஸ் விஷயத்தில் மட்டும் ஒரு சில நிறுவனங்கள் பரவாயில்லாமல் இருந்தது. அதில் ஒன்று ஏர்டெல் அதுவும் கூட என்னை பொருத்த வரையில் என்று தான் சொல்வேன். ஏனென்றால் சில பேருக்கு ஏர்டெல்லில் கூட பிரச்சனையிருப்பதாய் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
இவர்களின் சர்வீஸை பற்றி புகழ் பாடிக் கொண்டிருந்த எனக்கு அவர்கள் செய்திருந்த ஒரு விஷயம் கடும் கோபத்தை ஏற்றிவிட்டது. என்னுடய போனில் மொபைல் இண்டெர்நெட் வேலை செய்ய வில்லை அதற்காக, அவர்களுடய கஸ்டமர் கேர் நம்பரான 121க்கு போன் செய்தேன் வழக்கமான ஆட்டோமேட்டட்வாய்ஸில் ஒன்னை அழுத்து, இரண்டை அழுத்து என்று எலலாவற்றையும் ஒரு இரண்டு நிமிடங்களுக்கு அழுத்தி விட்டு கடைசியாய் கஸ்டமர் கேர் ஆளிடம் பேச வேண்டும் என்று 9 ஐ அழுத்தினால், ஒரு அறிவிப்பு வ்ந்தது. இனி பேசும் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கு 50 பைசா கணக்கில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்புதான்.


ஒரு கஸ்டமருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால்தான் போன் செய்யப்போகிறான் அப்படி பிரச்சனையை சொல்லவே காசு பிடுங்க ஆரம்பித்தால் என்ன அநியாயம்?. பகல் கொள்ளையாக அல்லவா இருக்கிறது. இதை விடக்கூடாது என்று மேற்கொண்ட காலை தொடர்ந்தேன். ஒரு சில நிமிடங்களுக்கு பின் ஒரு கஸ்டமர் கேர் ஆள் லைனில் வர, எப்படி நீங்கள் சர்வீஸ் கால்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் அதுவும் உங்கள் நெட்வொர்க் போனிலிருந்து கூப்பிடும் போதே? என்று கேட்ட போது கொஞ்சமும் பதட்டப்படாமல் “ஆமாம் மாற்றி ஒரு மாதமாகிவிட்டது. “ என்றார் தெரிமுனை. “யாரை கேட்டு செய்தீர்கள். இது பற்றி நீங்கள் எங்களுக்கு அறிவித்தீர்களா..? கண்ட கருமாந்திரத்துக்கெல்லாம் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறீர்களே.. இதையும் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி தொலைத்திருக்கலாமில்லையா..?” என்றேன் கோபத்தோடு. எதிர்முனை இன்னமும் அமைதியாய் “அறிவித்தாகிவிட்டது சார். பேப்பரில் சின்ன விளம்பரம் போட்டோமே..?” என்றார். எனக்கு இன்னும் கோபம் ஏறிவிட்டது “ஏன்யா புது ஆபர்.. விலை ஏறுகிறது என்றால் பத்து தடவை அனுப்புகிறீர்கள். இம்மாதிரியான விஷயஙக்ளுக்கு மகக்ளிடம் எதிர்ப்பு வரும் என்பதால் பேப்பரில் சின்ன விளம்பரமா..?” என்றதும் “சார். நாங்க டிராய் கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் செய்யறோம்.” என்றார்.
எனக்கு இன்னும் பிரஷர் எகிறியது. டிராயின் ரூல்ஸ் என்ன தெரியுமா.? வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடய சர்வீஸிலோ, அல்லது அதற்கான பண விஷயமோ எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக ஒவ்வொரு வாடிக்கையளர்களுக்கு தெரிய படுத்த வேண்டும் என்ற ரூல்ஸ் இருக்கிறது என்று சொன்னதும். “இருங்க காலை என் ஆபீஸருக்கு மாற்றுகிறேன்” என்று என் லைனை ஹோல்ட் செய்யும் முன், “சார்.. 198 என்று ஒரு நம்பருக்கு போன் செய்தால் அதற்கு டோல் ப்ரீதான் என்றார்.

டிரான்ஸ்பர் செய்த கால் கட் செய்யப்பட்டது. இது வரை 28 நிமிடங்கள் நான் பேசியிருகிறேன். இவர்களுடய சர்வீசை குறை சொல்ல எனக்கு செலவு. அடுத்து 198க்கு போன் செய்தால் எடுத்தவுடன் அவர்களும் ஆட்டோமேட்டட் வாய்ஸில் நம்பர் அழுத்த சொல்லி மேலும் விவரஙக்ளுக்கு 121 ஐ காண்டேக்ட் செய்ய சொல்கிறார்கள். மறைமுகமாய் மீண்டும் அதே நம்பருக்கு அழைக்கச் சொல்லி பணம் பிடுங்கவே முயல்கிறார்கள். அதையும் தாண்டி வெயிட் செய்து கஸ்டமர் கேர் ஆளிடம் பேசிய போது இது டோல் ப்ரீதான் சார். அந்த நம்பரை பற்றி பேச நீஙக் அந்த நம்பரில் போன் செய்து கம்ப்ளெயிண்ட் செய்யுங்க்ள் என்றார். இங்கு பேசிய பிரகஸ்பதி.
எப்படியெலலாம் மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களை கேட்க ஆளேயில்லையா..? ஏற்கனவே இருக்கும் ஸ்கிமை விட இன்னும் குறைந்த விலையில் ஸ்கீம் மாற்றினாலும் நாமாக கேட்டாலே ஒழிய அவர்கள் சொலல் மாட்டார்கள். வந்த வரைக்கும் லாபம் தானே. இப்படி கொள்ளையடிப்பதையே வழக்கமாய் கொண்டவர்களூக்கு கஸ்டமர் கேருக்கு போன் செய்பவர்களுக்கு சார்ஜ் செய்துவிட்டால் பிறகு எவனும் போனே செய்ய மாட்டான். கேள்வி எதுவும் கேட்க மாட்டான், அப்படியே கேட்டாலும் காசு கட்ட வேண்டும் என்று திரும்ப திரும்ப போன் செய்ய மாட்டான் என்று நினைக்கிறார்கள் போலும். இதை பற்றி ட்ராயும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.

என்னால் முடிந்த்து அதே ஏர்டெல் 121க்கு STOP CHARGING FOR CUSTOMER CARE என்று ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறேன். இதுவரை ஒரு பத்து மெசேஜ் அனுப்பியுள்ளேன். நீங்களும் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளராய் இருந்தால் உடனே 121க்கு SMS அனுப்புங்கள். இது டோல் ஃப்ரி நம்பர் தான். இவர்களுக்கு காட்டும் எதிர்ப்பு மற்றவர்களுக்கு ஒரு பாடமாய் அமையும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 26, 2010 9:53 pm

கோடிக்கணக்கில் வாடிக்கையாளர்கள் இருப்பதால் இவர்களுக்கு இந்த திமிர் வந்துவிடுகிறது! ஒருவர் புறக்கணித்தால் ஒன்றும் நட்டமில்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள்! அனைவரும் ஒன்று சேர வேண்டும். அப்பொழுதுதான் திருந்துவார்கள்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



ஏர்டெல் கொள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Fri Nov 26, 2010 10:04 pm

முற்றிலும் உண்மை சிவா சார்!!!
ஆனால் யாரும் அதை செய்வதில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 26, 2010 10:12 pm

vmanirajan wrote:முற்றிலும் உண்மை சிவா சார்!!!
ஆனால் யாரும் அதை செய்வதில்லை.

எனக்கென்ன என்று அனைவரும் ஒதுங்கிக் கொள்வதுதான் இதற்குக் காரணம்! ஒற்றுமையாகக் குரல் கொடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்று எப்பொழுதுதான் நம் மக்கள் அறிவார்களோ?



ஏர்டெல் கொள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Nov 26, 2010 10:13 pm

நான் ஏர்செல் அனாலும் அதிலும் இது போன்ற நிலைமை தான்... அடிக்கடி balance இருபது முப்பது என்று காணமல் போய்விடுகிறது... customer care கேட்டால்.. activation இல்லாத ஒரு சேவையை பயன்படுதவதாய் சொல்லி விடுகிறார்கள்.. பின்பு நாம் check செய்து பார்த்தல் அப்படி ஒரு சேவையின் பெயரை நாம் கேள்விபட்டதகவே இருக்காது.. இதற்க்கு என்ன செய்ய மீண்டும் கால் செய்து திட்ட வேண்டியது தான்... (இதற்க்கு தான் நங்கள் balance வேசுக்கறதே இல்லை)




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 26, 2010 10:16 pm

ஏர்டெல்லை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவீங்க போலிருக்கு... ஆனா ஒருவிடயம் கவனிக்கலை நீங்க... வேப்ப மரத்துப்பேய் நல்லதா இல்லை முருங்கை மரப்பேய் நல்லதா என்னும் கதை தான்... எந்த நெட்வர்க் போனாலும் எங்கேயும் இதே கதை தான்...

ஆனால் இருப்பதில் ஏர்டெல் கொஞ்சம் தேவலாம்னு தான் என் அனுபவம் சொல்லுது.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 26, 2010 10:18 pm

நாம ஒரு காம்ப்பெய்ன் தொடங்கினால் என்ன..? அதாவது இருப்பதில் எந்த நெட்வர்க் பெஸ்டுன்னு ஒரு வாக்கெடுப்பு நடத்தி ஒட்டு மொத்த ஈகரையும் அந்த நெட்வர்க்குக்கு குடி போனால் என்ன...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Fri Nov 26, 2010 10:23 pm

அப்படி இல்லை கலை சார். ஏர்டெல் ஆரம்ப காலத்தில் நன்றாக தான் இருந்தது ஆனால் இப்போது அது தான் மிகவும் மோசமாக உள்ளது.

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Nov 26, 2010 10:25 pm

நல்ல முயற்சி கலை அண்ணா.. முயன்று பார்ப்போம்..




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக