புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கழுத்தை அறுத்த ஏர்டெல்... - Page 2 Poll_c10கழுத்தை அறுத்த ஏர்டெல்... - Page 2 Poll_m10கழுத்தை அறுத்த ஏர்டெல்... - Page 2 Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
கழுத்தை அறுத்த ஏர்டெல்... - Page 2 Poll_c10கழுத்தை அறுத்த ஏர்டெல்... - Page 2 Poll_m10கழுத்தை அறுத்த ஏர்டெல்... - Page 2 Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கழுத்தை அறுத்த ஏர்டெல்... - Page 2 Poll_c10கழுத்தை அறுத்த ஏர்டெல்... - Page 2 Poll_m10கழுத்தை அறுத்த ஏர்டெல்... - Page 2 Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
கழுத்தை அறுத்த ஏர்டெல்... - Page 2 Poll_c10கழுத்தை அறுத்த ஏர்டெல்... - Page 2 Poll_m10கழுத்தை அறுத்த ஏர்டெல்... - Page 2 Poll_c10 
2 Posts - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுத்தை அறுத்த ஏர்டெல்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Fri 26 Nov 2010 - 22:29

First topic message reminder :

கழுத்தை அறுத்த ஏர்டெல்...

இதற்கு முன்பு ஒரு பதிவில், "ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா?" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவை படித்து விட்டு, "நீ மட்டும் என்ன ஒழுங்கா? ஏர்டெல் பிராட்பேண்ட் சேவையை வைத்து அவர்களை திட்டியே ஒரு பதிவிடுகிறாயே?" என்று யாரும் கேட்க கூடாது. இந்த சேவைக்கும் நான் பணம் கட்டுகிறேன். சரி இனி நடந்தது என்னவென்று பார்ப்போம். முதலிலேயே சொல்லி விட்டேன் இது சொந்த கதை. கொஞ்சம் போர் அடிக்கும். நீளமாக வேறு இருக்கும். எனக்கு வேறு யார் இருக்க புலம்பரதுக்கு?
இப்போ புதுசா இந்த லோகோ மாத்திருக்காங்களாம்


நான் என் வீட்டில் இண்டர்நெட் இணைப்பு பெற்று சுமார் ஒண்ணரை ஆண்டுகள் ஆகின்றன. நமக்கு எப்பவுமே இந்த பேலன்ஸ் பார்த்து கால் பண்ற வேலையே ஆகாது. அதனால்தான் மொபைலில் கூட போஸ்ட் பெய்டு இணைப்புத்தான் வைத்திருக்கிறேன். எனவே இணைப்பு வாங்கும்போதே ஏர்டெல்லில் 256 kbps வேகம் கொண்ட அன் லிமிட்டட் இணைப்பு பெற்றேன். எல்லாம் நன்றாகத்தான் போயி கொண்டிருந்தது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன் ஒரு பெண் ஏர்டெல்லில் இருந்து தொடர்பு கொண்டாள். நீங்கள் இணையத்தை நிறைய பயன்படுத்துவதால் உங்களுக்கு ஒரு புது ஆஃபர் . அதாவது உங்கள் வேகம் 1 mbps ஆக (நான்கு மடங்காக) அதிகரித்து கொள்ளலாம். கட்டணம் முன்னூறு ரூபாய்தான் அதிகம். தற்போது நீங்கள் அனுபவிக்கும் வசதிகள் அனைத்தும் உங்களுக்கு உண்டு என்று கூறினார். நான் அவரிடம் சுமார் ஒரு அரைமணிநேரம் உரையாடி தெளிவு பெற்றபின் என் இணைய வேகத்தை அதிகரித்து கொண்டேன்.

இந்த புது வேகம் எனக்கு மிகவும் பிடித்து போனது. என் இணைய பயன்பாடும் அதிகரித்தது. மூன்று மாதங்கள் கழித்து திடீரென இணைப்பின் வேகம் பாதியாகி போனது. உடனே கஸ்டமர் கேரில் தொடர்பு கொண்டு பேசிய போது, "நீங்கள் 100 ஜிபிக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளீர்கள். இது டிராய் சட்டப்படி கூடாது. ஆகவே உங்கள் இணைப்பு பாதியாக குறைந்து விடும், அடுத்த மாத தொடக்கத்தில் வேகம் கூடி விடும்!" என்றார்கள். இந்த ம...ரை அந்த பெண் என்னிடம் கூறவே இல்லை. சரி 100 ஜிபி கொஞ்சம் ஓவர்தான் என்று அதற்கடுத்த மாதங்களில் உபயோகத்தை குறைத்து கொண்டேன். கடந்த மாதம் என் இணையத்தின் வேகம் பாதியாகி விட்டது. கேட்டால், "நீங்கள் இருக்கும் பிளானில் 25 ஜிபி டவுன்லோட் செய்தால் வேகம் பாதியாகி விடும்!!" என்றார்கள். "இது என்னடா புதுக்கதை?" என்று நான் வெகு நேரம் விவாதம் செய்த பிறகு, பெங்களூரில் இருக்கும் ஒரு அலுவலகத்துக்கு புகாரை அனுப்பினார்கள். நான் கல்லூரியில் இருக்கும் போது மதிய நேரம் ஒரு அதிகாரி என்னுடன் பேசினார். "எங்கள் பக்கம் தவறு நேர்ந்து விட்டது. இதை உங்களிடம் சொல்லாமல் விட்டது தவறுதான்." என்று கூறினார். "உங்களுக்கு 25 ஜிபிதான் வரையறை." என்றும் கூறினார். அவரிடம் நான் கேட்ட கேள்விகள்

1. ஒரு புது பிளானை அறிமுகபடுத்தும்போது, கஸ்டமரிடம் இம்மாதிரி விஷயங்களை மறைப்பது நியாயமா?

2. அப்படியே 25 ஜிபி வரையறை இருந்தாலும், முதல் நான்கு மாதங்கள் எனக்கு இப்படி நடக்க வில்லையே?

3. 25ஜிபி தான் வரையறை என்றால், என்னால் முன்பு நூறு ஜிபி வரை எப்படி டவுன்லோட் செய்ய முடிந்தது?

3. முன்பு நூறு ஜிபி வரை நான் டவுன்லோட் செய்தபோது கூட எனக்கு 25 ஜிபி வரையறை இருப்பது தெரிவிக்க படவில்லையே? தவறு என்றால் ஒரு முறைதானே நடக்கும்?

இந்த கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை. நான் இணைப்பை துண்டிக்க போகிறேன் என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டேன். மாலை வீட்டிற்கு சென்று வேகத்தை சோதனை செய்தால், முழு வேகத்தோடு இருக்கிறது. இது சரியாக இரண்டு நாளைக்குத்தான். மறுபடியும் பழைய குருடி கதவை திறடி என்றாகி விட்டது. மறுபடியும் கஸ்டமர் கேரில் பேசினேன். அப்போது அவருக்கும் எனக்கும் விவாதம் வர, திடீரென இணைப்பு கட்டானது. கோபமுற்ற நான் மறுபடியும் தொடர்பு கொண்டேன். வேறு ஒருவர் பேசினார். அவரிடம் நான் பேசிக்கொண்டிருக்கும் போது இணைப்பை தூண்டித்ததை சொல்ல வில்லை. ஏனென்றால் ஒவ்வொரு முறை கால் செய்யும் போது, பெயர், போன் நம்பர், மொபைல் நம்பர், ஈமெல் ஐடி, நாம் வைத்திருக்கும் பிளான் எல்லாம் ஒரு முறை ஒப்பிக்க வேண்டும். இதுவரை நான் பேசியவரை சுமார் 25தடவை ஒப்பித்து விட்டேன்.(கொடுமைடா சாமி) அவரிடம் நேரடியாக விஷ்யத்தை சொல்ல, உடனே அவர் ஒரு தொலைபேசி எண் கொடுத்தார். அதாவது இது பில்லிங் சம்பந்தமான புகாராம். பில்லிங் டீபார்ட்மெண்ட்டில் பேச வேண்டுமாம். உடனே நானும் தொடர்பு கொண்டேன்.

பில்லிங் டிப்பார்ட்மெண்டில் இருப்பவன் எல்லாம் பெரிய புடுங்கிகள் போலிருக்கிறது. அவர்களிடம் பேச வேண்டுமானால் நிமிடத்துக்கு 50 பைசா பிச்சை போடவேண்டுமாம். மறுபடியும் ஒரு பெண் பேசினார். மீண்டும் போன் நம்பர் எல்லாம் ஒருமுறை ஒப்பித்த பிறகு உங்கள் பிரச்சனை என்ன என்று கேட்டார். சிவாஜி படத்தில் வருவது போல வசனம்தான் வந்தது, "எத்தனை பேர்தாண்டா இதே கேள்விய கேப்பீங்க?" என்று கேட்க நினைத்து, கேட்காமல், நடந்த எல்லாவற்றையும் நூற்று ஓராவது தடவையாக கூறினேன். அவர் சிறிது நேரம் கழித்து கூப்பிடுகிறேன் என்று போனை வைத்து விட்டாள். சிறிது நேரம் கழித்து அழைப்பு வந்தது. இப்போது அந்த பெண் குழைவான தோனியில் பேச தொடங்கினார். "சார் அது வந்து இங்க தப்பு நடந்துடுச்சு, எல்லாருக்குமே இதுதான் பிளான். உங்களுக்கு இதில் நிறைய வசதி இருக்கு..." என்று கூற ஆரம்பித்தார். நான் இடையில் மறித்து, "இதை எல்லாம் நான் கேட்டாகி விட்டது. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்." என்று கேட்டேன். அவர், "சார் உங்களுக்கு நியாயமா இணைப்பு வேகம் கால் பங்காக குறைந்திருக்க வேண்டும், ஆனால் பாதிதான் குறைந்திருக்கிறது. வந்தவரை லாபம்தான்." என்று கூறினார். நான் கடுப்பில் போனை வைத்து விட்டேன்.

இதற்குள் அந்த மாத பில்லிங் சைக்கிள் முடிந்து விட்டது. என் இணைப்பு பழைய வேகத்துக்கே வந்து விட்டது. சரியாக ஒரு வாரம் கழித்து மறுபடியும் வேகம் பாதியாகி விட்டது. இது நடக்க வேண்டும் என்றுதான் நான் எதிர் பார்த்தேன். கண்டபடி தீட்டி ஷாக் கொடுக்கலாம் என்று கஸ்டமர் கேருக்கு போன் செய்து (எல்லாவற்றையும் ஒப்பித்து விட்டு) பேச ஆரம்பித்தேன். அவர், "சார் உங்கள் பிளான் படி 15 ஜிபிக்கு மேல் டவுன்லோட் செய்தால் வேகம் பாதியாகி விடும்." என்று எனக்கு ஷாக் கொடுத்தார். நான் நேராக இணைப்பு வாங்கிய அலுவலகத்துக்கே சென்று விட்டேன். "ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ரூல் சொல்கிறார்கள், முதலில் 100ஜிபி, பின்னர் 25 ஜிபி, தற்போது 15 ஜிபி என்கிறார்கள். எனக்கு இணைப்பு வேண்டாம் துண்டித்து விடுங்கள்!" என்று கூறினேன். உடனே அங்கிருந்தவர் பதறிக்கொண்டு, "நீங்கள் கவலைப்படாதீர்கள் நான் பார்த்து கொள்கிறேன்." என்று அனுப்பி வைத்தார். இரண்டு நாள் கழித்து இணைப்பு முழு வேகம் வந்துவிட்டது. இருந்தாலும் எங்கோ தவறு நடப்பதாக என் துப்பறியும் மூளை சொன்னது.

இரண்டு நாள் ஆராய்ச்சி செய்ததில் நான் ஸ்பீட் செக் செய்யும் போது முழு வேகத்தில் இருப்பதாக காட்டுகிறது. ஆனால் டவுன்லோட் செய்யும் போது பாதி வேகத்தில் வருகிறது. உடனே கஸ்டமர் கேருக்கு கூப்பிட்டு,(ஒப்பித்து விட்டு) விஷயத்தை கூறினேன். உடனே அவர், "உங்கள் கம்யூட்டரில் வைரஸ் இருக்கலாம், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது." என்று கூறி விட்டார். நான் இணைப்பு வாங்கிய அலுவலகத்தில், மேல சொன்னவற்றை எல்லாம் ஒரே மூச்சில் சொல்லி முடித்து, சில கேள்விகளையும் கேட்டேன். நம்ம உருவத்த பார்த்து படிக்காதவன் போலிருக்கு என்று பேசியவர், நான் சொன்ன விஷ்யங்களை கேட்டவுடன், விவரம் தெரிந்த ஆசாமி போலிருக்கு என்று, டெக்னீசியனை வீட்டுக்கு அனுப்பி வைப்பதாக சொன்னார். கூடவே அவரது மொபைல் எண்ணும் கொடுத்தார். இது நடந்தது, நவம்பர் 16. ஆனால் அவர் வருவதற்கு முன்னரே இணைப்பு தானாக முழு வேகத்தில் செயல் பட தொடங்கி விட்டது. இன்று வரை எந்த பிரச்சனையும் இல்லை.

அவ்வளவுதாங்க கதை. இதில் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.

சம்பந்த பட்ட அந்த பெண் வேண்டுமென்றே என்னிடம் தெரிவிக்க மறந்திருந்தாலும், அடுத்த மாதமே என்னுடைய இணைப்பின் வேகம் பாதியாக குறைந்திருக்க வேண்டும். நடக்கவில்லை. ஆகவே ஏர்டெல்லே திட்டமிட்டு, என்னை முழு வேகத்தையும் உபயோகபடுத்த பழக்கி, பின் மெதுவாக தான் வேலையை காட்ட துவங்கி விட்டார்களோ?

பெங்களூரு ஆசாமியிடம் நான் பேசியவுடன் இணைப்பு வேகம் அதிகரித்தது தற்காலிகமாக என் வாயை மூடவா?

ஒவ்வொரு தடவை நான் போன் செய்யும் போதும் ஒவ்வொரு விதமான டீட்டைல் தரப்படுகிறதே எப்படி? வாய்ப்பே இல்லை என்று சொன்னவர்கள் இப்போது இணைப்பை தூண்டிக்கிறேன் என்று சொன்னதும், முழு வேக இணைப்பை வழங்கியது எப்படி?

வைரஸ் தாக்கி இருந்தால் இன்று வரை எனக்கு வேகம் பாதியாகத்தான் வந்திருக்க வேண்டும். மேலும் வைரஸ் தாக்கி இருந்தால் அச்சு பிசகாமல் பாதி வேகம் மட்டும் வருமா? நான் புகார் செய்ததும் முழு வேகம் வந்தது எப்படி? அந்த வைரசுக்கு எப்படி தெரிந்தது? ஏர்டெல்லில் போன் செய்து சொல்லி இருப்பார்களோ?

கம்யூட்டர் இன்ஜினியரிங் படித்த என்னையே இப்படி புரியாத வார்த்தைகள் எல்லாம் சொல்லி ஏமாற்ற பார்க்கிறார்கள் என்றால், இந்த விவரம் தெரியாதவர்களை எல்லாம் எப்படி ஏமாற்றுவார்கள்?

எனக்கு தெரியும் இதுவும் அடுத்த பில்லிங் சைக்கிள் வரைதான். அதன் பின்...

-தொடரும்......

டிஸ்க்:அவனவன் இரண்டு லட்சம் கோடி அடிச்சுட்டு போய்ட்டான், அவன கேக்க துப்பில்லை என்று யாரும் கமெண்ட் போடாதீர்கள்.


SPKO6
SPKO6
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 21/12/2011

PostSPKO6 Thu 22 Dec 2011 - 0:25

மிகவும் மோசமான கஸ்டமர் கேர் என்றால் அது ஏர்டெல் தான்
வடிக்கையாளர்களை ஏமாற்றுவதில் ஏர்டெல் தான் முதலிடம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu 22 Dec 2011 - 3:47

SPKO6 wrote:மிகவும் மோசமான கஸ்டமர் கேர் என்றால் அது ஏர்டெல் தான்
வடிக்கையாளர்களை ஏமாற்றுவதில் ஏர்டெல் தான் முதலிடம்

அனைவரும் ஏமாற்றுபவர்கள் தான் ஏமாறும் வரை என்ன கொடுமை சார் இது

avatar
kmsshajahan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 19/04/2009

Postkmsshajahan Thu 22 Dec 2011 - 17:21

நானும் இதே தொல்லையில் தான் இருக்கிறேன். கவலை படாதீங்க உங்கள மாதிரி என்ன மாதிரி இன்னும் நிறைய பேரு இருக்காங்க...... ஏர்டெல் மாதிரி ஆலுகளா எல்லாம் அந்நியன் விட்டு தான் கேட்கணும்.. இல்லாட்டி திருந்தவே மாட்டாங்க!!!!!!!!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 22 Dec 2011 - 17:34

அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
gilmakvp
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008

Postgilmakvp Fri 23 Dec 2011 - 4:08

என்ன கொடுமை சார் இது

SubbulakshmiVinayagam
SubbulakshmiVinayagam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 28/04/2012
http://subhangl@rediffmail.com

PostSubbulakshmiVinayagam Sat 28 Apr 2012 - 11:59

என் அனுபவத்தில் மிகவும் மோசமான கஸ்டமர் கேர் என்றால் அது ஏர்டெல் தான்
வடிக்கையாளர்களை ஏமாற்றுவதில் ஏர்டெல் தான் முதலிடம் .

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக