புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
142 Posts - 78%
heezulia
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Pampu
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
307 Posts - 78%
heezulia
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 9:52 am

First topic message reminder :

கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் பணியாற்றிய போது எழுதிய தொடர் நாவல் 'கள்வனின் காதலி'. இது ஒரு சமூக நாவலாகும். உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு. தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல் என்ற கருத்தினை இந் நாவல் விளக்குகிறது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 11:18 am

40.ராயவரம் ஜங்ஷன்


சாதாரணமாகவே ஒரு ரயில்வே ஜங்ஷனைப் போல கலகலப்பான இடம் வேறு கிடையாது என்று சொல்லலாம். அதிலும், ராயவரம் ஜங்ஷனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அங்கே நாலு முக்கியமான இடங்களுக்குப் போகும் நாலு ரயில் பாதைகள் வந்து சேர்கின்றன. ஆகவே பகல், இரவு இருபத்திநான்கு மணி நேரமும் ஸ்டேஷன் கலகலவென்றுதான் இருக்கும்.

ஆஹா! அங்கே எத்தனை விதமான வாசனைகள் தான் கலந்து வருகின்றன? தாழம்பூ, ரோஜாப்பூ, வெட்டி வேர், மருக்கொழுந்து வாசனை; மசால்வடை, காராபூந்தி வாசனை; சாம்பார் சாதம், தயிர் சாதம் வாசனை; ரொட்டி-பன் பிஸ்கோத்து வாசனை; புகையிலை வாசனை; சுருட்டுப் புகை வாசனை; அழுகிய ஆரஞ்சுத் தோல், வாழைப் பழத்தோல் வாசனை; மனுஷர்கள் மேலிருந்து வரும் ஸெண்டு, ஜவ்வாது, வேப்பெண்ணெய் வாசனை; கங்கையிலே முழுகிய பின், ராமேசுவரத்தில் தான் குளிப்பது என்ற திட சங்கல்பத்துடன் வரும் வடக்கத்தியர்களுடைய அழுக்கடைந்த துணிகளிலிருந்து வரும் வாசனை; அம்மம்மா! அந்த வாசனைகளையெல்லாம் தனித்தனியாகப் பிரித்து எடுத்து எண்ணினால் குறைந்தது முப்பதினாயிரம் வாசனை இராதா?

அப்புறம் எத்தனை தினுசான மனிதர்களை நாம் அங்கே பார்க்கிறோம்! பட்டிக்காட்டு குடியானவர்கள்; பட்டணத்து நாகரிக புருஷர்கள்; உச்சிக்குடுமி மனிதர்கள்; கிராப்புத் தலைக்காரர்கள்; குல்லா அணிந்தவர்கள்; தொப்பி தரித்தவர்கள்; பட்டை நாமங்கள்; சந்தனப் பொட்டுக்கள்; முறுக்கு மீசைகள்; முகக்ஷவரங்கள்; நீண்ட தாடிகள்!

ஸ்திரீகளிலேதான் எத்தனை விதம்? கொரநாட்டுப் புடவை தரித்தவர்கள்; புதுச்சேரி ஸில்க் அணிந்தவர்கள்; நெற்றி நிறையும்படி குங்குமப் பொட்டு இட்டவர்கள்; கண்ணுக்குத் தெரியாதபடி சிறு சாந்துப் பொட்டு வைத்தவர்கள்; தலை பின்னித் தொங்கவிட்டவர்கள்; பின்னலை எடுத்துக் கட்டியவர்கள்; பின்னாமல் கொண்டை போட்டுக் கொண்டவர்கள்; வைரக் கம்மல்கள், தொங்குகிற டோ லக்குகள்!

அங்கே கிளம்புகிற சப்தங்கல் எத்தனை வகை! ரயில் ஊதும் சப்தம்; எஞ்சின் புகைவிடும் சப்தம்; மணி அடிக்கும் சப்தம்; "மசால்வடை முந்திரிப்பருப்பு" என்று விற்கும் சப்தம்; குழந்தைகள் கூக்குரலிடும் சப்தம்; ஸ்டேஷனுக்கு வெளியே ஜட்கா வண்டிகள் கடகடவென்று ஓடும் சப்தம்; மோட்டார் ஹாரன்களின் சப்தம்; எல்லாவற்றிற்கும் மேலாக ஜனங்கள் பேசுகிற கலகல சப்தம்.

ஒரு ரயில் பிளாட்பாரத்தில் நம்முடைய காதில் விழுகிற பேச்சுக்களைப் போல சுவாரஸ்யமானது வேறொன்றுமே கிடையாது என்று சொல்ல வேண்டும்.

"கொஞ்சமாவது மூளையே இல்லாதவர்கள் ராஜ்யத்தை ஆண்டால், வேறென்ன தான் நடக்கும்?" என்று ஓர் அரசியல்வாதி சொல்லிக் கொண்டு போகிறார்.

"அய்யர்வாள்! என்ன தீட்சை வளர்க்கிறாப் போலிருக்கே! ஆத்திலே எத்தனை மாதம்?" என்று கேட்கிறார் ஒரு கர்நாடகப் பேர்வழி.

"அம்மா! எனக்கு ஒரு லயிலு வண்டி வாங்கிக் கொடு! என்று மூக்கால் அழுகிறது ஒரு சின்னக் குழந்தை. (அது வாங்கிக் கொடுக்கச் சொல்லுவது பொம்மை ரயிலைத்தான்; நிஜ ரயிலையல்ல.)

"ஏன, ஸார்! இன்றைக்குப் பேப்பரில் என்ன ஒரு இழவும் இல்லையே!" என்று சொல்லிக்கொண்டு போகிறார் ஒரு பத்திரிகைப் பிரியர்.

"அடே ராமு! பரீட்சையில் 'கோட்' அடிச்சுட்டயாமே? இப்படிக் கொடு கையை" என்று ஒரு வாலிபன் இன்னொரு வாலிபனுடைய கையைப் பிடித்துக் குலுக்குகிறான்.

ராயவரம் ஜங்ஷன் இப்படி கலகலப்பாக இருந்து கொண்டிருந்தது. சென்னைக்குப் போகும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் வண்டி வருகிற நேரம் நெருங்கிவிட்டபடியால், ஜனங்கள் பெட்டி படுக்கைகளுடனும், மூட்டை முடிச்சுகளுடனும், குழந்தை குட்டிகளுடனும் கூட்டம் கூட்டமாக வந்து பிளாட்பாரத்தில் சேர்ந்து கொண்டிருந்தார்கள். இப்படி வந்தவர்களில் திருச்சிற்றம்பலம் பிள்ளையையும் அவரது குடும்பத்தாரையும் நாம் பார்க்கிறோம்.


*****

மேற்பாலத்துக்குப் போகும் படிக்கட்டின் அடியில் விழுந்திருந்த நிழலில் ஒரு பெட்டியின் மேல் உட்கார்ந்திருந்தாள் கல்யாணி. அத்தை அவள் பக்கத்தில் நின்றாள். திருச்சிற்றம்பலம் பிள்ளையும் அவருடைய மனைவியும் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடாமல் தடுத்து நிறுத்தும் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். வண்டிக்காரர்கள் இரண்டு பேர் கையில் தார்க்குச்சியுடன் பயபக்தியோடு சற்றுத் தூரத்தில் நின்றார்கள்.

அந்தப் பிளாட்பாரத்தில் கூடியிருந்த அவ்வளவு ஸ்திரீகளுக்குள்ளும் கல்யாணி தான் அழகும் வசீகரமும் பொருந்தி விளங்கினாள். அவ்வழியே போன ஸ்திரீகள் அவளைப் பொறாமை பொங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டு போனார்கள். புருஷர்கள் எங்கேயோ பார்க்கிற பாவனையுடன் அவளைப் பார்த்துக் கொண்டு சென்றார்கள். பட்டு உருமாலையும் ஜவ்வாதுப் பொட்டும் தரித்த ஓர் இளைஞன் அவ்வழியாகக் குறுக்கே நெடுக்கே ஐந்தாறு தடவை போய்விட்டான்.

முதலில் இரண்டொரு நிமிஷம் கல்யாணி பிளாட்பாரத்தின் நாலாபுறமும் பார்த்துப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தாள். அப்புறம் பட்டென்று அவள் முகத்தில் ஒரு மாறுதல் உண்டாயிற்று. கவனத்துடன் எதையோ கேட்பவள் போன்ற பாவனை தோன்றிற்று. ஐந்து நிமிஷத்திற்குள் அவளுடைய முகத்தில் ஆயிரம் விதமான பாவங்கள் காணப்பட்டு மறைந்தன. வியப்பு, கோபம், ஆவல், ஆத்திரம், சந்தேகம், பரபரப்பு இவ்வளவு பாவங்களும் மாறி மாறித் தோன்றின.

அவளுக்குக் கொஞ்ச தூரத்தில் சிலர் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்தது அவளுடைய காதில் விழுந்தது தான் இதற்குக் காரணமாகும்.

கூட்டத்தில் ஒருவர் சொல்கிறார்: "அதை ஏன் கேட்கிறீர்கள்? சென்னைப் பட்டணமெல்லாம் ஒரே 'கொல்'லென்று போயிருக்கு! அடாடா! அந்தத் திருடனுடைய சாமர்த்தியத்தைச் சொல்லுகிறார்கள் சொல்லுகிறார்கள் அப்படியே சொல்லுகிறார்கள்..."

கூட்டத்திலே இன்னொருவர்: "ஏன் ஸார்! அது எப்படி பெரிய கூட்டத்திலே அத்தனை போலீஸ்காரனுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு அவன் தப்பித்துக் கொண்டான்? நம்ப முடியாத அதிசயமாயிருக்கிறதே!"

முதல் மனிதர்: "பாருங்கள்! ஸ்டேஜ் மேலேயிருந்து அப்படியே அலாக்கா ஒரு தாவு தாவினானாம். நாடகம் பார்க்க வந்திருந்தவர்கள் தலைமேலேயே நடந்து இரண்டு எட்டிலே போய்விட்டானாம். இன்னும் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? அவனை அரஸ்ட் செய்ய வந்திருந்த போலீஸ் டிபுடி கமிஷனரின் மோட்டார் வண்டி வாசலிலே நின்று கொண்டிருந்ததாம். அந்த வண்டியைத்தான் அவன் விட்டுக் கொண்டு போய் விட்டானாம்!"

வேறொருவர்: "அவன் எங்கேதான் போயிருப்பான் என்று ஏதாவது தெரிந்ததா?"

"எங்கே போயிருப்பான்? பழையபடி கொள்ளிடக்கரைக்குத்தான் வந்து சேர்ந்திருப்பான். நாணற்காட்டிலே புகுந்து விட்டால், அப்புறம் யாராலே கண்டுபிடிக்க முடியும்! ஆயிரம் போலீஸ்காரர்கள் தான் வரட்டுமே?"

"ஆமாம்; நாணற் காட்டிலே புகுந்துவிட்டால், சாப்பாட்டுக்கு என்ன வழி?"

"அது தெரியாதா உங்களுக்கு? கொள்ளிடக் கரையில் ஏதோ ஒரு கிராமத்தில் அவனுக்கு...(மெதுவான குரலில்) யாரோ ஒரு பெண்பிள்ளை இருக்காளாம்!"

"இதற்கு என்ன ஸார், இவ்வளவு இரகசியம்! முத்தையன் போகிற ஊரெல்லாந்தான் அவனுக்கு ஒரு பெண்டாட்டி இருக்கிறாள் என்று சொல்கிறார்களே!"

"சீச்சீ! ஏன் இப்படிக் கன்னா பின்னா வென்று பேசுகிறீர்கள்? நம்முடைய வழக்கமே இப்படித்தான்; ஒன்று என்பதைப் பத்து என்கிறது!"

"உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? பட்டணத்திலே பெண் பிள்ளைகள் எல்லாம் ஒரேயடியாக அவனுடைய மோகத்திலே முழுகிக் கிடந்தார்களாம். அதென்னமோ அவனிடத்திலே ஒரு வசீகரண சக்தி இருப்பதாகச் சொல்கிறார்கள். நாடக மேடையில் அவன் முகத்தைத் திறந்து காட்டினானோ இல்லையோ, எத்தனையோ பெண் பிள்ளைகள் மூர்ச்சைப் போட்டு விழுந்து விடுவார்களாம்! பாருங்கள்; கடைசி நாள் நாடகத்தன்று கூட அப்படி ஒருத்தி மூர்ச்சைப் போட்டு விழுந்து விட்டாளாம்!"

"அதென்னமோ, ஸ்வாமி! இந்தப் பக்கமெல்லாம் அவனுக்கு அது விஷயத்தில் ரொம்ப நல்ல பெயர். என்னதான் கொள்ளைக்காரனாயிருந்தாலும், இது வரையில் ஒரு ஸ்திரீக்காவது அவன் கெடுதல் செய்ததில்லையென்று சொல்கிறார்கள்."

"ஒரு நாளைக்கு அவன் அகப்படப்போகிறான்! அப்போது எல்லாப் பொய் நிஜமும் தெரிந்து போகிறது."

கல்யாணி இவ்வளவுதான் கேட்டாள். உடனே ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். திருச்சிற்றம்பலம் பிள்ளையைக் கூப்பிட்டு, "அப்பா! எனக்கு உடம்பு ஒரு மாதிரியாய் இருக்கிறது. நான் திருப்பதிக்கு வரவில்லை. நீங்கள் போய் வாருங்கள். நானும் அத்தையும் திரும்பிப் பூங்குளத்துக்கே போய்விடுகிறோம்" என்றாள்.

திருச்சிற்றம்பலம் பிள்ளை திடுக்கிட்டு, "என்ன அம்மா! இப்படிச் சொல்கிறாய்? டிக்கட் கூட வாங்கியாய்விட்டதே!" என்று கேட்டார். அவர் என்ன சொல்லியும் பிரயோஜனப் படவில்லை. கல்யாணி பிடிவாதமாகத் திரும்பித்தான் போவேனென்று சொன்னாள்.

இதற்குள் ரயில் வந்துவிடவே, திருச்சிற்றம்பலம் பிள்ளை வேறு வழியில்லாமல், "சரி, அம்மா! நல்ல வேளையாய் வண்டிக்காரர்களும் இருக்கிறார்கள். திரும்பி ஜாக்கிரதையாய்ப் போய்ச் சேர். வீட்டிலும் ஜாக்கிரதையாய் இரு" என்று நூறு தடவை ஜாக்கிரதைப் படுத்திவிட்டு, மனைவி மக்களுடன் ரயில் ஏறினார்.

ஸ்டேஷனை விட்டு ரயில் நகர்ந்ததும், கல்யாணியும் அத்தையும் வெளியே வந்து மாட்டு வண்டியில் ஏறிப் பூங்குளத்துக்குப் பிரயாணமானார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 11:20 am

41.மறைந்த சுழல்



ஆடி மாதம். மேலக்காற்று விர்விர் என்று அடித்துக் கொண்டிருந்தது. மரங்களின் கிளைகள் அந்தக் காற்றில் பட்ட பாட்டைச் சொல்லி முடியாது. நாலா பக்கமிருந்தும் 'ஹோ' என்ற இரைச்சல் சத்தம் எழுந்தது.

பூங்குளம் கிராமம் ஜலத்திலே மிதந்து கொண்டிருப்பது போல் காணப்பட்டது. ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் புதுவெள்ளம் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு சுழிகள் நுரைகளுடன் அதிகவேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது. வயல்கள் எல்லாம் தண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்தன. நாற்றங்கால்களில் இளம் நாற்றுக்கள் கொழு கொழுவென்று பசுமையாய்ப் படர்ந்து இருந்தன. அப்பயிரின் மீது சில சமயம் காற்று வேகமாய்ச் சுழன்று அடித்த போது, விதவிதமான சுழிகளும் கோலங்களும் தோன்றி மறைந்தன.

தடாகங்கள் நீர் நிறைந்து அலைமோதிக் கொண்டிருந்தன. தாமரையும் அல்லியும் புத்துயிர் பெற்று, தளதளதளவென்று விளங்கிய புதிய இலைகளையும் மொட்டுகளையும் விட்டுக் கொண்டிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக மலர்ந்திருந்த தாமரைப் பூக்களை மேலக்காற்று படாதபாடு படுத்திற்று.

மிருகங்களும் பட்சிகளுக்கும் கூடப் புது வெள்ளம் வாழ்க்கையில் புதிய உற்சாகத்தை ஊட்டியிருப்பது போல் காணப்பட்டது. எருமை மாடுகள் தளர்ந்த நடையுடன் வந்து கொண்டிருந்தவை, நீர் நிரம்பிய தடாகத்தைப் பார்த்ததும் அதிவேகமாய்ப் பாய்ந்து வந்து தண்ணீரில் அமிழ்ந்தன. கொக்குகள் கூட்டங்கூட்டமாகப் பறந்து வந்து, குளக்கரைகளில் புதிதாய் முளைத்து வரும் கோரைகளுக்கு மத்தியில் உட்கார்ந்து மௌனானந்தத்தில் ஆழ்ந்துவிட்டன. பசுமையான கோரைகளுக்கிடையில் அந்தத் தூய வெண்ணிறக் கொக்குகள் நின்ற நிலையும், அவற்றின் நிழல் கீழே தண்ணீரில் பிரதிபலித்த தோற்றமும், ஆகா! எப்பேர்ப்பட்ட கைதேர்ந்த சித்திரக்காரன் எழுதிய சித்திரமோ இது என்று நம்மை அதிசயிக்கச் செய்தன.


*****

கல்யாணி பூங்குளத்துக்கு வந்து, வண்டியை விட்டு, இறங்கி, வீட்டுக்குள் போனாளோ இல்லையோ, உடனே குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு, "அத்தை! நான் ஆற்றங்கரைக்குப் போய்க் குளித்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள். "என்னடி, அம்மா, இது? நாளைக்குப் போய் ஆற்றில் குளித்தால் போதாதா? இன்றைக்கே அவசரமா? மேலக்காற்றோ இப்படிச் சூறாவளியாய் அடித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் காற்றில் போனால் உடம்புக்குத் தான் ஆகுமா? நான் தனியாயிருக்கும் போது நீ ஏதாவது உடம்புக்கு வருவித்துக் கொண்டு படுத்துக் கொண்டு விடாதே! என்னால் ஆகாது" என்றாள் அத்தை.

"நன்றாயிருக்கிறது. ஆற்றிலே புதுவெள்ளம் வந்திருக்கும் போது யாராவது வீட்டில் வெந்நீரில் குளிப்பார்களா? நான் மாட்டேன்" என்று சொல்லிவிட்டுக் கல்யாணி கிளம்பிச் சென்றாள்.

நேரே அவள் பாழடைந்த கோவிலுக்குத்தான் சென்றாள் என்று சொல்லவும் வேண்டுமா? இந்தத் தடவை அவள் ஏமாற்றமடையவில்லை. மரத்தடியில் மேடை மீது முத்தையன் தலையில் கட்டிய முண்டாசுடன் உட்கார்ந்திருந்தான். அவனுடைய முகத்தில் குதூகலம் குடிகொண்டிருந்தது. கல்யாணியைப் பார்த்ததும் அவன், "ஸ்ரீமதி கல்யாணி அம்மாள், வரவேணும்! தங்களை எதிர் நோக்கிக் கொண்டுதான் இன்று காலை ஆறுமணியிலிருந்து காத்திருக்கிறேன்" என்றான்.

கல்யாணி ஆனந்த பரவசமானாள். திடீரென்று தனக்கு இறகுகள் முளைத்து ஆகாசத்தில் பறப்பது போன்ற உணர்ச்சியடைந்தாள். சென்ற நாலு வருஷகாலத்தில் முத்தையன் ஒரு தடவையாவது இவ்வளவு சந்தோஷமாக அவளை வரவேற்றது கிடையாது. கல்யாணியின் கல்யாணப் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து அவர்களுக்குள் கோபமும் தாபமும் தான் அதிகமாயிருந்தன அல்லவா!

"நான் இன்று உன்னை பார்ப்பது அதிர்ஷ்டவசந்தான்! இத்தனை நேரம் திருப்பதிக்குக் கிட்டத்தட்ட நான் போயிருக்க வேண்டியது" என்றாள் கல்யாணி.

"ஓகோ! அதென்ன சமாச்சாரம்? இதோ இந்த அக்கிராசன பீடத்தில் அமர்ந்து எல்லாம் விவரமாகச் சொல்லவேணும்" என்றான் முத்தையன். அவளுடைய குடத்தை வாங்கிக் கீழே வைத்து, அவளையும் அந்த மேடையில் உட்காரச் செய்தான்.


*****

கல்யாணி, அன்று நடந்ததையெல்லாம் ஒருவாறு சொன்னாள். ராயவரம் ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தபோது, முத்தையனைப் பற்றிய பேச்சு காதில் விழுந்ததையும், "கொள்ளிடக்கரைக்குத் தான் வந்திருப்பான்" என்ற வார்த்தையைக் கேட்டவுடனே தான் திருப்பதிக்குப் போகாமல் திரும்பி வந்துவிட்டதையும் கூறினான்.

"கல்யாணி! உன்னுடைய இப்பேர்ப்பட்ட அன்புக்கு நான் எந்த வகையில் தகுந்தவன் என்று தான் தெரியவில்லை. உன்னுடைய அன்பைக் கூட ஒரு சமயம் நான் சந்தேகித்தேனே? அதை நினைத்தால் ஆச்சரியமாயிருக்கிறது" என்றான் முத்தையன்.

கல்யாணிக்கு அப்போது ரயில்வே ஸ்டேஷனில் காதில் விழுந்த இன்னும் சில விஷயங்கள் ஞாபகம் வந்தன. அவள் முகத்தில் உடனே துன்பக் குறி தோன்றிற்று.

"அதெல்லாம் சரிதான்; ஆனால்..." என்று கேட்க ஆரம்பித்தவள், தயக்கமடைந்து நிறுத்திவிட்டாள்.

"என்ன? என்ன?" என்று முத்தையன் கேட்டான்.

கல்யாணி பேச்சை மாற்றி, "ரயிலேறுகிற சமயத்தில் நான் வரவில்லையென்று சொல்லிவிட்டேனல்லவா? அப்பாவும் சின்னம்மாவும் என்ன நினைத்தார்களோ தெரியாது. என்னைப் பைத்தியம் என்றே முடிவு கட்டியிருப்பார்கள். ஸ்டேஷனில் இருந்தவர்கள் கூட என்னைப் பார்த்துச் சிரித்திருப்பார்கள்" என்றான்.

"இவ்வளவுதானே கல்யாணி! நாம் இரண்டு பேரும் பைத்தியங்கள் தான். பைத்தியங்களாகவே இருப்போம். சிரிக்கிறவர்களெல்லாம் சிரித்துக் கொள்ளட்டும். இன்னும் கொஞ்ச நாள் தானே சிரிப்பார்கள்? நாம் இருவரும் கப்பலேறி ஆனந்தமாகக் கடல் பிரயாணம் செய்யும் போது அவர்களுடைய சிரிப்பு நம்மைத் தொடர்ந்து வரப் போகிறதா? அக்கரைச் சீமைக்குப் போய் ஆனந்தமாய்க் காலங் கழிக்கும் போது தான் அவர்களுடைய பரிகாசம் நம் காதில் விழப்போகிறதா!...கல்யாணி! என்னுடைய வேலையெல்லாம் ஆகிவிட்டது. அபிராமியைப் பார்த்து விட்டேன். அவள் சௌக்யமாயிருக்கிறாள். அவளை பாதுகாப்பதற்கு ஓர் ஆசாமியும் ஏற்பட்டு விட்டான். இனிமேல் நாம் எங்கே வேணுமானாலும் போகலாம். இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கே போலீஸ் ஆர்ப்பாட்டம் அதிகமாயிருக்கும். அந்தக் கலவரம் அடங்கும் வரையில் நான் ஜாக்கிரதையாயிருக்கவேணும். அப்புறம், நாம் கப்பலேறிக் கிளம்பி விட்டோ மானால், பிறகு எது எப்படிப் போனால் நமக்கு என்ன? சொர்க்க வாழ்வை அடைந்தவர்களுக்கு மண்ணுலகத்தைப் பற்றிக் கவலை ஏன்?" என்றான்.


*****

பிறகு சில தினங்கள் கல்யாணிக்கும் முத்தையனுக்கும் சொர்க்க வாழ்வாகவே சென்று வந்தன. அவர்கள் ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள் என்றே சொல்லலாம். ஆனால் அந்த வெள்ளத்தின் அடியில் ஒரு பெருஞ்சுழல் வட்டமிட்டுச் சுழன்று கொண்டிருந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 11:21 am

42.தண்டோரா


ராயவரம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் பிரமாத அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. சென்னைப் பட்டணத்திலிருந்து சாட்ஷாத் டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் துரையே வந்திருந்தார். இன்னும் ஜில்லா சூபரின்டென்டெண்டு துரையும், இரண்டு டிபுடி சூபரின்டென்டெண்டுகளும், அரைடஜன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸப்-இன்ஸ்பெக்டர்களும், முப்பது கான்ஸ்டபிள்களும் ஆஜராகியிருந்தார்கள்.

ஜில்லா சூபரின்டென்டெண்டு துரை மேஜையிலே ஓங்கிக் குத்திவிட்டுச் சொல்கிறார்: "நம்முடைய ஜில்லா போலீஸ் படைக்கு இதைவிட அவமானம் வேண்டியதில்லை. நம்முடைய மானம் போயே போய் விட்டது. சென்னையிலிருந்து டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் துரை வந்திருப்பதைப் பார்க்கிறீர்கள் அல்லவா? இன்று 20ஆம் தேதி. இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் திருடனை நாம் பிடித்தேயாக வேண்டும். தெரிகின்றதா?..."

டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் சொல்கிறார்: "திருடன் எடுத்து வந்த மோட்டார் கொள்ளிடம் பாலத்துக்குப் பக்கத்தில் மடுவில் கிடந்து அகப்பட்டு விட்டது. ஆகையால் அவன் இந்தக் கொள்ளிடக்கரையில் தான் எங்கேயோ ஒளிந்திருக்கிறான். கொள்ளிடக்கரை காடுகளைச் சல்லடைபோட்டு சலித்து விடுங்கள். அவனுக்கு யாராவது உதவி செய்பவர்கள் இருக்கத்தான் வேண்டும். யார் மேல் சந்தேகம் ஏற்பட்டாலும் உடனே அரெஸ்ட் செய்து விடுங்கள். கொஞ்சங்கூடத் தயங்க வேண்டாம். தெரிகின்றதா?"

பிறகு, டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் துரை, ஜில்லா சூபரின்டென்டெண்டைப் பார்த்து, "இந்தத் திருடனை உள்ளூரில் துப்பு வைக்காமல் கண்டுபிடிப்பது கஷ்டம். 'துப்புச் சொல்கிறவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும்' என்று 'டாம் டாம்' போடச் சொல்லுங்கள்" என்றார்.


*****

முத்தையன் கொள்ளிடக்கரைக்கு வந்து பத்து நாளைக்கு மேல் ஆகிவிட்டது. அன்று காலையில் கல்யாணி சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் முகத்திலே குதூகலம் குடிகொண்டிருந்தது. சில சமயம் தனக்குத்தானே புன்னகை புரிந்து கொள்வாள். சில சமயம் தனக்குள்ளேயும் சில சமயம் வாய்விட்டும் பாட்டுப் பாடுவாள். முத்தையனுக்காக நாம் சமையல் செய்கிறோம் என்ற எண்ணமே அவளுக்கு அத்தகைய உற்சாகத்தையும் மகிழ்ச்சியும் அளித்தது.

சமையல் செய்த பிறகு கொஞ்ச சாப்பாட்டைப் பக்குவமாய்ப் பிசைந்து இலையில் கட்டிக் குடத்துக்குள் வைத்துக் கொண்டு, அத்தையிடம் குளிக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டுக் கல்யாணி ஆற்றுக்குக் கிளம்புவது வழக்கம். அத்தைக்குக் கண் பார்வை கொஞ்சம் மங்கல். அது இப்போது கல்யாணிக்கு ரொம்பவும் சௌகரியமாயிருந்தது.

சில சமயம் ஆற்றங்கரைக்குக் கிளம்பும்போது கல்யாணிக்குச் சங்கடம் ஏற்பட்டுவிடும். அக்கம் பக்கத்து வீடுகளில் யாராவது வந்து, "நாங்களும் உன்னுடன் குளிக்க வருகிறோம்" என்பார்கள். அப்போது திடீரென்று அவள் தன் மனத்தை மாற்றிக் கொண்டு, "இல்லை, அம்மா! நான் இன்று குளிக்க வரவில்லை" என்று சொல்லிவிடுவாள். அப்புறம் மத்தியானத்துக்கு மேல் தனியாகப் போவாள். அப்படிக் கிளம்புவது தடைபட்டபோதெல்லாம், "ஐயோ! முத்தையன் காத்திருப்பானே! பசியோடிருப்பானே?" என்று அவளுடைய உள்ளம் துடிதுடித்துக் கொண்டிருக்கும்.

அன்றைய தினம் அவள் சாப்பாட்டைக் குடத்துக்குள் எடுத்து வைத்துக்கொண்டிருந்த போது வாசலில் தண்டோ ரா போடும் சத்தம் கேட்டது. கிராம வெட்டியான் பின்வருமாறு கூவினான்: "கொள்ளைக்கார முத்தையா பிள்ளையைப் பிடிக்கத் துப்புச் சொல்றவங்களுக்கு சர்க்காரிலே ஆயிரம் ரூபா சம்மானம் அளிப்பாங்க. (டம் டம் டம் டம்) மேற்படி முத்தையா பிள்ளைக்குச் சாப்பாடு போடறது, தங்க இடங்கொடுக்கிறது, பேசறது, பழகுகிறது எல்லாம் பெரிய குத்தங்களாகும். அப்படிச் செய்றவங்களைச் சர்க்காரிலே கடுமையா தண்டிச்சுப்புடுவாங்க. சாக்கிரதை, சாக்கிரதை, சாக்கிரதை!" (டம் டம் டம் டம்)


*****

கல்யாணி வழக்கம் போல் அன்றும் இடுப்பில் குடத்துடன் கொள்ளிடத்திற்குக் குளிக்கக் கிளம்பினாள். போகும்போது அவளுடைய உள்ளத்தில் பற்பல எண்ணங்கள் தோன்றி அலைந்தன. விர்ரென்று வீசிய மேலக் காற்றினால் அவளுடைய சேலையின் தலைப்பு அலைந்ததைக் காட்டிலும் அதிவேகமாகவே அவளுடைய உள்ளம் அலைந்தது. எவ்வளவு எவ்வளவோ ஆபத்துகளுக்குத் துணிந்து நாம் முத்தையனுக்கு உதவி செய்கிறோம் என்ற எண்ணம் அவளுக்கு எல்லையில்லாத பூரிப்பை அளித்தது. இந்த ஆபத்தெல்லாம் விலகி, முத்தையனும் தானும் கப்பலேறிச் சென்று நிர்பயமாயும் சந்தோஷமாயும் வாழும் காலம் வருமா என்று எண்ணியபோது, அவளுடைய இருதயம் பெரும் புயலில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல் கலங்கியது.

ஆனால் எல்லாவற்றையும் விட, அவளை அதிகமாய்க் கலங்கச் செய்து வந்த எண்ணம் வேறொன்றாகும். தன்னுடைய இத்தனை அன்புக்கும் முத்தையன் பாத்திரந்தானா? - இந்த நினைவு சில சமயம் தோன்றும் போது அவள் சொல்ல முடியாத வேதனை அடைவாள். அன்று ரயில்வே ஸ்டேஷனில், முத்தையனுடைய ஸ்திரீ சகவாசத்தைப் பற்றி அவள் காதில் விழுந்த பேச்சு 'தெள்ளிய பாலில் ஒரு சிறிது நஞ்சைக் கலந்தது' போல் அவளுடைய தூய உள்ளத்தில் விஷத்தின் விதையைப் போட்டு விட்டது. "நம்முடைய முத்தையனா அப்படியெல்லாம் செய்வான்? ஒரு நாளும் இல்லை!" என்று ஒரு நிமிஷம் எண்ணுவாள். மறுநிமிஷம் "பேதைப் பெண்ணாகிய எனக்கு என்ன தெரியும்! புருஷர்கள் எல்லாரும் அப்படித்தானோ, என்னமோ? என்னை மோசந்தான் செய்கிறானோ, என்னமோ?" என்று கலங்குவாள். சென்ற பத்து நாளாகவே, இது விஷயமாக முத்தையனிடம் பிரஸ்தாபித்து, அவனிடம் உறுதி பெற வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் அதற்குத் தைரியம் வராமல், நா எழாமல், நாட்கள் கழிந்து வந்தன. இன்றைக்கு எப்படியாவது அந்தப் பேச்சை எடுத்து முத்தையனிடம் உறுதி பெற்றுக் கொள்ள வேண்டுமென்று வழியில் கல்யாணி தீர்மானம் செய்து கொண்டாள்.

ஆனால், ஐயோ! அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற அவளுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. அன்று அவள் பாழடைந்த கோவிலுக்குக் கொஞ்ச தூரத்தில் வந்து கொண்டிருந்தபோது காட்டின் உள்ளிருந்து பேச்சுக் குரல் வருவது கேட்டுத் திடுக்கிட்டாள். இந்த ஆபத்தான நிலைமையில் முத்தையனுடன் யார் வந்து பேச முடியும்? அந்த இடத்திலேயே நின்று மரங்களின் இடைவெளி வழியாக உற்றுப் பார்த்தாள். ஐயோ! இது என்ன காட்சி! பார்க்க சகிக்கவில்லையே! முத்தையனுக்கு அருகில் ஒரு ஸ்திரீயல்லவா உட்கார்ந்திருக்கிறாள்? அவளுடைய தளுக்கும் குலுக்கும்! சிரிப்பைப் பார் சிரிப்பை! அழகு சொட்டுகிறது! சீ! முத்தையனுடைய முதுகில் அவள் தட்டிக் கொடுக்கிறாளே? ஐயோ! இது என்ன கோரம்? முத்தையன் திரும்பி அவளைத் தழுவிக் கொள்கிறானே?

கல்யாணிக்கு அந்த நிமிஷத்தில் சித்த பிரமையே உண்டாகிவிட்டது போலிருந்தது. பார்த்தது பார்த்தபடி சில நிமிஷம் அங்கேயே நின்றாள். பிறகு அங்கே நிற்க முடியாதவளாய், இடுப்பில் குடத்துடன் வந்த வழியே திரும்பிச் செல்லலானாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 11:22 am

43."எங்கே பார்த்தேன்?"


"கண்ணால் கண்டதும் பொய்; காதால் கேட்டதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்;" என்று ஒரு முதுமொழி வழங்குகின்றது. மக்கள் இதன் உண்மையை உணர்ந்து நடக்காத காரணத்தினால் உலகத்தில் எத்தனையோ தவறுகள் நேரிட்டு விடுகின்றன. பேதை கல்யாணி இப்போது அப்படிப்பட்ட தவறுதான் செய்தாள். கண்ணால் கண்டதை நம்பிவிட்டாள். நம்பினால் தான் என்ன? அதற்காக அப்படிப் பைத்தியம் பிடித்துவிட வேண்டுமா? ஐயோ, கல்யாணி! என்ன காரியம் செய்து விட்டாய்? என்ன விபரீதத்துக்குக் காரணம் ஆனாய்? - ஆனால் உன்னைச் சொல்லித்தான் என்ன பயன்? விதியின் சதியாலோசனைக்கு நீ என்ன செய்வாய்?

கல்யாணி செய்த தவறு எத்தகையது என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கு, சற்றுப் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. கொஞ்சம் சென்னை வரையில் பிரயாணம் செய்து அங்கே நடந்தவற்றைக் கவனித்தல் அவசியமாயிருக்கிறது.


*****

"சங்கீத சதாரம்" எதிர்பாராத காரணத்தினால் நடுவில் தடைப்பட்டு நின்ற இரவுக்குப் பிறகு இரண்டு மூன்று தினங்கள் வரையில், அந்த நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் போலீஸ் கண்காணிப்புக்கும் விசாரணைக்கும் உட்பட்டிருந்தார்கள். ஆனால் என்ன விசாரணை செய்துங்கூட அவர்களிடமிருந்து எவ்விதத் தகவலும் தெரிந்து கொள்ள முடியவில்லை. தாங்கள் சென்னைக்கு வரும் வழியில் தற்செயலாக ரயிலில் வந்து சேர்ந்தவன் முத்தையன் என்றும், தங்களிடம் "பலராம்" என்று பெயர் கொடுத்திருந்தான் என்றும், சிறந்த நடிப்புத் திறமை அவனிடம் இருந்தபடியால் தங்கள் கம்பெனியில் சேர்த்துக் கொண்டதாகவும் மற்றபடி அவனைப் பற்றித் தங்களுக்கு ஒன்றுமே தெரியாதென்றும் சொல்லிவிட்டார்கள். உண்மையிலேயே, அவர்களில் ஒருவனைத் தவிர மற்றவர்களுக்குத் தெரிந்திருந்ததே அவ்வளவுதான் அல்லவா?

ஆகவே கமலபதி ஒருவன் தான் விசாரணையின் போது பொய் சொல்ல வேண்டியதாயிருந்தது. அது விஷயத்தில் அவன் கொஞ்சங்கூடத் தயக்கம் காட்டாமல் அழுத்தமான பொய்யாகவே சொல்லிச் சமாளித்துக் கொண்டான். அவன் விஷயத்தில் விசேஷ கவனம் செலுத்துவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லாதபடியால் சந்தேகமும் ஏற்படவில்லை.

இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு, போலீஸார் நாடகக் கம்பெனியின் கண்காணிப்பை நிறுத்திவிட்டார்கள். அதில் ஒன்றும் பிரயோஜனமில்லையென்று அவர்களுக்கு நிச்சயமாகி விட்டது. அவ்வாறே அவர்கள் அபிராமியையும் ஒரு நாள் விசாரணை செய்து விட்டு அவளிடமிருந்து ஓடிப்போனவனைப் பற்றி எவ்விதத் தகவலும் தெரிந்து கொள்ள வழியில்லையென்று விட்டு விட்டார்கள். அந்த அநாதைப் பெண்ணிடம் சகோதரி சாரதாமணிதேவி முன்னைவிடப் பதின்மடங்கு விசுவாசம் காட்டித் தேறுதல் கூறி வந்தார். ஆனாலும் அபிராமியின் உள்ளத்தில் ஒரு கணமேனும் அமைதி ஏற்படவேயில்லை. சில சமயம் தன்னுடைய அண்ணனின் சாமர்த்தியத்தை நினைத்து அவள் வியப்படைவாள்; அப்போது அவளுக்கு மிகவும் பெருமையாய்க்கூட இருக்கும். அவன் உண்மையிலேயே கள்ளனாயிருந்து, நாடகத்திலும் கள்ளன் வேஷம் போட்டதை நினைத்துப் புன்னகை கொள்வாள். அவனுடைய நடிப்பை நினைக்கும்போது அவளுக்குச் சிரிப்புக் கூட வரும். ஆனால் இரண்டு மாதமாக அவன் சென்னை நகரில் தங்கியிருந்தும் தன்னை வந்து பார்க்கவில்லையென்பதை எண்ணி உள்ளம் நைவாள். பிறகு, தான் மூர்ச்சையடைந்து விழுந்தபடியால் தான் அவன் இன்னான் எனத் தெரிந்ததென்பதையும், அதனால் தான் அவன் ஓட வேண்டியிருந்த தென்பதையும் எண்ணும் போது, அவளுடைய நெஞ்சு வெடித்து விடும் போலிருக்கும். "ஐயோ! இந்தப் பாவியினால் முத்தையனுக்கு எப்போதும் துன்பந்தானா?" என்று எண்ணி உருகுவாள். அவன் மறுபடி தப்பித்துக் கொண்டு போனதை நினைக்கும் போது அவளுக்கு உற்சாகம் உண்டாகிவிடும்.


*****

இப்படியிருக்கும்போது ஒரு நாள் அவளை யாரோ பார்க்க வந்திருப்பதாகவும், வித்யாலயத்தின் தலைவி அழைத்து வரச்சொன்னதாகவும் ஒரு மாணவி வந்து கூறினாள். நாசமாய்ப் போகிற போலீஸ்காரன் தான் யாராவது வந்திருக்க வேணுமென்ற நினைவுடன் அபிராமி, சகோதரி சாரதாமணியின் அறைக்குள் வந்ததும், அங்கே அந்த அம்மாளுடன் ஒரு வாலிபன் இருப்பதைக் கண்டாள்.

"அபிராமி! இந்தப் பையன் உன்னுடைய அண்ணனின் சிநேகிதன் என்று சொல்கிறான். முகத்தைப் பார்த்தால் பொய் சொல்லப்பட்டவனாகத் தோன்றவில்லை. உன் அண்ணன் உனக்கு ஏதோ சமாசாரம் சொல்லியிருக்கிறானாம். இதோ பக்கத்து அறையில் உட்கார்ந்து பேசுங்கள். சரியாகப் பதினைந்து நிமிஷம் கொடுத்திருக்கிறேன்" என்று சகோதரி சாரதாமணி கூறினார்.

இப்படி அவர் சொல்லி வரும்போதே அபிராமி ஆவல் ததும்பும் கண்களால் கமலபதியை நோக்கினாள். அடுத்த அறைக்குள் சென்றதும், "அம்மாள், சொன்னது நிஜந்தானா? நீங்கள் என் அண்ணனின் சிநேகிதரா? எனக்குக் கூட உங்களை எங்கேயோ பார்த்த நினைவாயிருக்கிறதே!" என்றாள்.

"ஆமாம்; பத்து நாளைக்கு முன்பு என்னுடைய விதவைத் தங்கைக்கு இந்த வித்யாலயத்தில் ஒரு இடம் கிடைக்குமா? என்று பார்ப்பதற்காக வந்தேன். அது உங்களுடைய தலைவிக்கு ஞாபகம் இல்லை. உனக்கு நினைவு இருப்பதாகத் தோன்றுகிறது" என்றான் கமலபதி.

"ஐயோ பாவம், அப்படி ஒரு தங்கை உங்களுக்கு இருக்கிறாளா? அவளை வித்யாலயத்தில் சேர்த்து விட்டீர்களா?"

"இல்லை; வித்யாலயத்தில் சேர்ப்பதற்குள் அவள் செத்துப் போனாள். நானே கொன்றுவிட்டேன்" என்று சொல்லிவிட்டு கமலபதி சிரித்தான்.

"இந்த ஆசாமிக்குப் பைத்தியம் போல அல்லவா இருக்கிறது?" என்று அபிராமி எண்ணி, அவனை வெருண்ட கண்களுடன் நோக்கினாள்.

"இல்லை அம்மா! எனக்குப் பைத்தியமில்லை. உண்மையில் என்னுடைய தங்கையைப் பத்து நாளைக்கு முன்பு தான் நான் சிருஷ்டித்தேன். உடனே அவளை விதவையாக்கினேன். அவளால் ஆகவேண்டிய காரியம் முடிந்ததும், கொன்றே விட்டேன். அப்படி அவளை நான் சிருஷ்டித்தது, என்னுடைய ஆத்ம சிநேகிதன் ஒருவனுடைய தங்கையைத் தேடுவதற்காகத்தான். உன்னை இங்கே கண்டு பிடித்ததும்..."

"நிஜமாகவா சொல்கிறீர்கள்? என்னைத் தேடும்படி என் அண்ணன் உங்களை அனுப்பினானா? என் ஞாபகம் அவனுக்கு இருந்ததா?"

"உன் ஞாபகத்தைத் தவிர வேறு ஞாபகமே அவனுக்குக் கிடையாது, அம்மா! உண்மையில், உன்னைத் தேடிக் கொண்டு தான் அவன் சென்னைப் பட்டணத்துக்கு வந்தது. வந்த இடத்திலே நாடகக் கம்பெனியில் சேர்ந்தான்..."

"என்ன யோசிக்கிறாய்?" என்று கமலபதி கேட்டான்.

"உங்களைப் பார்த்ததிலிருந்து, ஏதோ ஞாபகம் தொண்டையிலிருக்கிறது, மனத்திற்கு வர மாட்டேனென்கிறது. அன்று இந்த வித்யாலயத்தில் உங்களைப் பார்த்த ஞாபகமே எனக்கில்லை. வேறு எங்கேயோ பார்த்தது போலிருக்கிறது. உங்களுக்கு நினைவில்லையா?"

"ஆமாம்; இன்னும் ஒரு இடத்தில் பார்த்திருக்கிறாய். அதுவும் சமீபத்தில் தான்...நான் தான் சதாரம்" என்றான் கமலபதி.

"ஓஹோ?" என்று சொல்லி அபிராமி சிரித்தாள். பளிச்சென்று அவளுக்கு ஞாபகம் வந்து விட்டது. அவனுடைய ஸ்திரீ வேஷத்தை நினைத்த போது அவளுக்குத் தாங்கமுடியாமல் சிரிப்பு வந்தது. பக்கத்து அறையில் இருந்த சாரதாமணி கோபித்துக் கொள்ளப் போகிறாரே என்று பயந்து வாயை மூடிக்கொண்டாள்.


*****

பிறகு அபிராமி கேள்விமேல் கேள்வியாய்ப் போட்டு, கமலபதிக்கும் முத்தையனுக்கும் சிநேகம் ஏற்பட்ட வரலாற்றையெல்லாம் அறிந்து கொண்டாள். முத்தையன் மதில் சுவர் ஓரம் நின்று அபிராமியைப் பார்த்ததையும் அவளுடைய பாட்டைக் கேட்டதையும் கமலபதி சொன்ன போது அவள் கண்ணீர் பெருக்கினாள். பிறகு, முத்தையன் நாடகக் கம்பெனியுடனே மலாய் நாட்டுக்குப் போக உத்தேசித்திருந்ததைச் சொன்னதும் அபிராமி, "ஐயோ! அதெல்லாம் இந்தப் பாவியினாலேதானே வீணாய்ப் போயிற்று? நான் பெண்ணாய்ப் பிறந்ததே என் அண்ணனுடைய துன்பத்துக்காகத்தான்" என்று சொல்லி விம்மி அழத் தொடங்கிவிட்டாள்.

கமலபதி அவளுக்கு ஆறுதல் கூறி தைரியம் சொன்னான். "இப்போது ஒன்றும் மோசம் போய்விடவில்லை, அபிராமி! உன் அண்ணனை தப்புவிக்கும் பொறுப்பு என்னுடையது. இந்த நிமிஷத்தில் அவன் எங்கேயிருக்கிறான் என்று எனக்குத் தெரியும். இன்னும் இரண்டு நாளில் அவ்விடத்துக்குக் கிளம்பப் போகிறேன். எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். அடுத்த மாதம் இந்த நாளில் உன் அண்ணன் இந்த நாட்டிலேயே இருக்க மாட்டான். அதற்கு நான் ஆயிற்று! நீ கவலைப்படாதே!" என்றான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 11:24 am

44.கோஷா ஸ்திரீ

மதுரை ஒரிஜனல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் நாடகக் கம்பெனியில் தபலா வாசிக்கும் சாயபு ஒருவர் இருந்தார். அவருக்கு முகமது ஷெரிப் என்று பெயர். சில நாடகக் கம்பெனிகளில் ஹார்மோனியக்காரரையும் தபலாக்காரரையும் மேடையில் நட்ட நடுவில் உட்கார வைப்பது போல் அந்தக் கம்பெனியில் உட்கார வைக்கும் வழக்கம் கிடையாது. பக்க வாத்தியக்காரர்கள் மேடையின் ஓரத்தில் மறைவான இடத்தில் தான் இருப்பார்கள். அவர்களை அதிகம் பேர் பார்த்திருக்கவே முடியாது.

மேற்படி ஜனாப் முகமது ஷெரிப் சாயபு ஒரு நாள் ராத்திரி எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு கோஷா ஸ்திரீயுடன் வந்து சேர்ந்தார். கோஷா என்றால், புடவைத் தலைப்பைச் சிறிது இழுத்துவிட்டுப் பாதி முகத்தை மூடும் அரை குறை கோஷா அல்ல. உயர்ந்த முஸ்லிம் குடும்பத்து மாதரைப்போல் தலையிலிருந்து பாதம் வரையில் ஒரு பெரிய அங்கியால் மூடி, கண்களுக்கு மட்டும் துவாரம் வைத்திருக்கும் சம்பூரண கோஷா. அந்த கோஷா ஸ்திரீயை அவர் பெண்கள் வண்டியில் ஏற்றி விட்டு தாம் வேறு வண்டியில் ஏறி உட்கார்ந்தார்.

மறுநாள் அதிகாலையில் இவர்கள் கொள்ளிடத்துக்கு அடுத்த புரசூர் ஸ்டேஷனில் இறங்கி, ஒரு மாட்டு வண்டி பிடித்துக் கொண்டு, மேற்கு நோக்கிப் பிரயாணமானார்கள். கொஞ்ச தூரம் போன பிற்பாடு அவர்கள் பிரயாணம் செய்த சாலை, கொள்ளிடக்கரை லயன்கரைச் சாலையோடு சேர்ந்தது. அந்தச் சாலையோடு ஏழெட்டு மைல் சென்றதும் அங்கு பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழும் ஒரு கிராமம் இருந்தது. வண்டியை அவ்விடத்திலேயே நிறுத்தி விட்டு, "நாங்கள் திரும்பி வரும் வரை காத்திரு" என்று வண்டிக்காரனிடம் சொல்லிவிட்டு, சாயபுவும் கோஷா ஸ்திரீயும் கொள்ளிடத்துப் படுகையில் இறங்கிச் சென்றார்கள்.


*****

முத்தையன் பாழடைந்த கோயிலுக்கு அருகில் நாவல் மரத்தின் வேரில் தலையை வைத்துப் படுத்த வண்ணமாக, கல்யாணிக்கு கோபம் வரும்போது அவளுடைய புருவங்கள் எப்படி வளைகின்றன என்பதைத் தன் மனக்கண்ணின் முன்னால் கொண்டுவரப் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தான். எவ்வளவோ முயற்சி செய்தும் அது முடியாமல் போகவே, அவள் சிரிக்கும்போது அவளுடைய பல் வரிசைகள் எப்படியிருக்கின்றன என்பதை உருவகப்படுத்திப் பார்த்தான். பிறகு, இன்று அவள் வருவதற்கு இன்னும் எத்தனை நேரம் ஆகும் என்று எண்ணமிட்டவனாய், ஆகாயத்தில் சூரியன் எங்கே வந்திருக்கிறது என்று அண்ணாந்து நோக்கினான்.

முத்தையனுடைய உள்ளத்தில் நாளுக்கு நாள் அமைதி குன்றி வந்தது. ஒரே இடத்தில் தங்கி ஒரு வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருப்பது அவனுடைய இயல்புக்கே விரோதமல்லவா? சாலையில் மாட்டு வண்டி போகும் சத்தம் கேட்கும் போதெல்லாம் அவனுக்குப் பரபரப்பு உண்டாகும். அந்த க்ஷணம் சாலைக்குப் போய் வண்டிக்காரனை இறங்கிவிட்டுத் தான் மூக்கணையில் உட்கார்ந்து கொண்டு வண்டி ஓட்ட வேண்டுமென்ற ஆசை பொங்கிக் கொண்டு வரும். இராஜன் வாய்க்காலில் வரும் புதுவெள்ளத்தில் குதித்துத்துளைந்து நீந்த வேண்டுமென்ற ஆவலினால் அவன் மனம் துடிதுடிக்கும். எங்கேயாவது மாடு "அம்ஹா!" என்று கத்துவது காதில் விழுந்தால், ஓடிப்போய் அதைப் பிடித்துக் குளத்தில் கொண்டு போய்க் குளிப்பாட்டவேண்டுமென்று தோன்றும். இன்னும் பூங்குளத்தின் தெரு வீதிக்குப் போகவும், தன்னுடைய வீட்டைப் பார்க்கவும், ஆசை உண்டாகும். காலை நேரத்தில், கோவில் பிரகாரத்தில் உள்ள பவளமல்லி மரத்தின் அடியில் புஷ்பப் பாவாடை விரித்திருக்குமே அதைப் போய் இப்போதே பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் பொங்கிக் கொண்டு கிளம்பும்.

இவ்வளவு ஆவல்களையும் அடக்கிக் கொண்டு, முத்தையன் பொறுமையுடனிருப்பதை சாத்தியமாகச் செய்தவள் கல்யாணிதான். அவள் மட்டும் தினம் ஒரு தடவை வந்து கொண்டிராவிட்டால் அவனால் அங்கு இத்தனை நாள் இருந்திருக்கவே முடியாது. "ஆயிற்று, இன்னும் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கல்யாணி வந்து விடுவாள்" என்ற நினைப்பில் அவனுக்குக் காலை நேரமெல்லாம் போய்விடும். அவளும் தானுமாய்க் கப்பல் பிரயாணம் செய்யப் போவதையும் மலாய் நாட்டில் ஆனந்தமாய் வாழ்க்கை நடந்தப் போவதையும் பற்றி மனோராஜ்யம் செய்வதில் மாலை நேரத்தின் பெரும் பகுதியைக் கழிப்பான்.


*****

அன்று முத்தையன் மரக்கிளைகளின் இடைவெளி வழியாக ஆகாயத்தில் சூரியன் வந்திருக்கும் இடத்தைப் பார்த்துவிட்டு, "கல்யாணி வருவதற்கு இன்னும் இரண்டு நாழிகை பிடிக்கும்" என்று எண்ணமிட்டான். அவள் வரும்போது தான் எங்கேயோவது ஒளிந்துகொண்டு அவள் என்ன செய்கிறாள் என்று வேடிக்கை பார்க்கலாமா என்பதாக ஒரு யோசனை அவன் மனத்தில் தோன்றிற்று. "அப்படி நான் ஒளிந்து கொண்டால் அவள் பயத்துடன் அப்புறமும் இப்புறமும் கண்களைச் சுழற்றிப் பார்ப்பாள் அல்லவா? அவளுடைய புருவங்கள் நெறிந்து வளையுமல்லவா? அந்தத் தோற்றம் எவ்வளவு அழகாயிருக்கும்!" என்று அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போதே, சலசலவென்று செடிகள் அலையும் சப்தம் கேட்க திடுக்கிட்டுச் சப்தம் வந்த திசையை நோக்கினான். அவனுக்கு எதிரே தலை முதல் கால் வரை கோஷா அங்கி, தரித்த உருவம் ஒன்று வரவே, ஒரு கணநேரம் அவன் பதறிப் போனான். சட்டென்று கீழே பக்கத்தில் கிடந்த ரிவால்வரை எடுத்துக் கொண்டு துள்ளி எழுந்தான்.

"யார் அது?" என்று அதட்டிய குரலில் கேட்டு, கைத்துப்பாக்கியை நீட்டிப் பிடித்தான்.

கோஷா அங்கியின் உள்ளிருந்து கிண் கிணி சப்திப்பது போன்ற சிரிப்புச் சத்தம் கேட்டது. அடுத்த நிமிஷம் அங்கி எடுத்தெறியப்பட, உள்ளிருந்து திவ்ய சௌந்தரியம் பொருந்திய மோஹன ஸ்திரீ உருவம் ஒன்று வெளிப்பட்டது.

"நீதானா, கமலபதி! ஒரு நிமிஷத்தில் என்னை இப்படி மிரட்டி விட்டாயே? நிஜமாகவே பயந்து போனேன்!" என்றான் முத்தையன்.

ஆம், அந்தக் கோஷா ஸ்திரீ உண்மையில் பெண் உருவத்தில் இருந்த கமலபதிதான். கொள்ளிடக்கரை பிரதேசத்தில் முத்தையனைப் பிடிப்பதற்குப் பலமான போலீஸ் ஏற்பாடுகள் நடக்கின்றன என்பதை அறிந்து, இம்மாதிரி வேஷத்தில் வந்தால்தான் சந்தேகம் ஏற்படாமல் அவனைப் பார்க்க முடியுமென்று தீர்மானித்துத்தான் அவன் அப்படிப் பெண் வேஷம் தரித்துக் கோஷாவாக மாறி இங்கே வந்தது. அபிராமியிடம் அன்று "நான் தான் சதாரம்" என்று அவன் சொன்னபோது இந்த யோசனை அவன் மனத்தில் உதயமாயிற்று.

ஐயோ! துரதிர்ஷ்டவசமாக அவனுக்குப் பெண் வேஷம் அவ்வளவு நன்றாகப் பலித்தல்லவா இருந்து விட்டது? நாடகத்தில் அவனைப் பார்த்திருக்கும் நாமே ஒரு நிமிஷம் மயங்கிப் போய் விட்டோ மென்றால், பேதை கல்யாணி என்ன கண்டாள்? அவனை ஓர் இளமங்கை என்றே அவள் கருதி விட்டதில் வியப்பில்லையல்லவா? ஆஹா? அதனுடைய பலன் தான் எவ்வளவு விபரீதமாகப் போய்விட்டது!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 11:24 am

45.சாஸ்திரியின் வியப்பு!

நாடகம் பார்த்த அன்றிரவு ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரியின் மீது அவருடைய மனைவிக்கு வந்த கோபம் தணியவேயில்லை. திரும்பி ஊருக்குப் போகும் வழியெல்லாம், "நல்ல உத்தியோகம்; நல்ல வயிற்றுப் பிழைப்பு! ஒன்று மறியாத பெண் பிள்ளைகளைச் சந்தியில் இழுத்துத்தானா உங்கள் உத்தியோகம் நடக்க வேண்டும்? நன்றாயிருக்கிறது, நீங்கள் திருடனைப் பிடிக்கிற அழகு!" என்று ஸ்ரீமதி மீனாட்சி அம்மாள் சாஸ்திரியாரை வெகுவாகச் சண்டை பிடித்ததோடு, சில தடவை கண்ணீர் கூடப் பெருக்கிவிட்டாள். அபிராமியையும் தன்னையும் சாஸ்திரியார் அந்த மாதிரி உள்நோக்கம் ஒன்றை வைத்துக் கொண்டு நாடகத்துக்கு அழைத்துப் போனதை நினைக்க நினைக்க அவளுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.

சாஸ்திரியாருடைய மனோ நிலையோ இதற்கு நேர் விரோதமாயிருந்தது. திருடனைப் பிடிக்காவிட்டாலும், அவன் இத்தனை நாளும் இருந்த இடத்தைச் சாமார்த்தியமாய்க் கண்டுபிடித்து விட்டாரல்லவா? அதனால் போலீஸ் இலாகாவில் அவர் மீதிருந்த சந்தேகமும் அடிபட்டுப் போயிற்று. இதனாலெல்லாம் அவருடைய மனத்தில் முன்னைவிட அதிக உற்சாகமிருந்தது. ஆனால் இதைத் தம் மனைவியிடம் காட்டிக் கொள்ளாமல், மன்னிப்புக் கேட்பது போல் பாவனை செய்து அவளை ஒருவாறு சமாதானம் பண்ணி, திருப்பரங்கோவிலில் கொண்டு போய்ச் சேர்த்தார். பிறகு அவர், "இந்த முத்தையன் விஷயம் பைஸலாகும் வரையில் நமக்கு வீட்டில் இனிமேல் அமைதி இராது. ஆகையால் அவனைப் பிடித்துவிட்டுத் தான் வீட்டுக்கு வருகிறது" என்று மனத்திற்குள் தீர்மானித்துக் கொண்டு வெளிக் கிளம்பினார்.

மேற்கே கல்லணை முதல், கிழக்கே சமுத்திரம் வரையில் ஆங்காங்கு எல்லை வகுத்துக் கொண்டு கொள்ளிடக் கரைப் பிரதேசத்தைப் போலீஸார் சல்லடை போட்டுச் சலித்துக் கொண்டிருந்தார்கள். ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரிக்கும் அவருடைய தலைமையில் இருந்த போலீஸ் படைக்கும் புரசூர் ஸ்டேஷன் முதல் பூங்குளம் வரையில் உள்ள பிரதேசம் விழுந்திருந்தது. கொள்ளிடப் படுகையில், காடு அதிகமுள்ள பிரதேசம் இதுதான். சேர்ந்தாற்போல் ஊர்கள் அதிகமுள்ள இடமும் இதுதான். முத்தையனுடைய சொந்த ஊர் பூங்குளம் ஆகையால், அந்த ஊருக்குச் சமீபமாக அவன் வந்திருக்க மாட்டான் என்று முதலில் கருதப்பட்டது. ஆனாலும் அப்படி அலட்சியம் செய்யக் கூடாதென்று சாஸ்திரியார் கருதி அந்த ஊருக்குப் பக்கத்திலும் நன்றாய்த் தேடிவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தார். இப்படி அவர் தீர்மானம் செய்வதற்கு ஒரு காரணமும் இருந்தது.

சாஸ்திரியும் அவருடைய போலீஸ் படையும் காம்ப் செய்திருந்தது புரசூரில். அங்கிருந்து அவர் போலீஸ் சேவகர்களை இரண்டு மூன்று பகுதியாய்ப் பிரித்துப் படுகையில் தேடிவர அனுப்பிவிட்டு, தாம் ஸைக்கிளில் லயன்கரைச் சாலையோடு போவது வழக்கம். ஒரு நாள் அப்படி அவர் போய்க் கொண்டிருந்தபோது, பூங்குளத்துக்கு அருகில் ஒரு வேளாளப் பெண் மத்தியானம் பன்னிரண்டு மணிக்குக் கொள்ளிடத்தில் குளித்து விட்டு இடுப்பில் குடத்துடன் தன்னந்தனியாக லயன் கரைச் சாலையைக் கடந்து ஊருக்குள் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்தார். "இந்தப் பெண்தான் எவ்வளவு அழகாயிருக்கிறாள்?" என்ற எண்ணம் அவரறியாமலே அவர் மனத்தில் தோன்றியது. பிறகு, "அபிராமிக்கும் இந்தப் பூங்குளந்தானே; ஒரு வேளை இந்தப் பெண் அபிராமிக்கு ஏதாவது உறவாயிருந்தாலும் இருப்பாள்" என்று நினைத்தார். அப்புறம் இன்னொரு வியப்பு அவர் உள்ளத்தில் ஏற்பட்டது. "பக்கத்தில் இராஜன் வாய்க்காலில் தண்ணீர் அலைமோதிய வண்ணம் போய்க் கொண்டிருக்கும் போது, இந்தப் பெண் எதற்காக இந்த உச்சி வேளையில் கொள்ளிடத்துக்குப் போய்க் குளித்துவிட்டு வருகிறாள்?" என்று ஆச்சரியப்பட்டார்.

இப்படி அவர் எண்ணமிட்டுக் கொண்டே போன போது, கொஞ்ச தூரத்தில், நாம் முதல் அத்தியாயத்தில் சந்தித்த தர்மகர்த்தாப் பிள்ளை எதிர்ப்பட்டார். உழவு தலைக்குப் போய் விட்டு அவர் திரும்பி வந்து கொண்டிருந்தார். ஸப்-இன்ஸ்பெக்டர் அவரிடம் பேச்சுக் கொடுத்து விசாரித்து, குளித்துவிட்டுப் போகிற பெண்ணின் பெயர் கல்யாணி என்றும் அவளை இப்போது பிரசித்தி பெற்ற கொள்ளைக்காரனாக விளங்கும் முத்தையனுக்குக் கல்யாணம் செய்து கொடுப்பதாக ஒரு காலத்தில் பேச்சு இருந்ததென்றும் தெரிந்து கொண்டார். இப்போது கல்யாணி பெரிய சொத்துக்காரி என்பதையும் அறிந்தார். இதைக் கேட்டது முதல் அவர் மனத்தில் இன்னதென்று விவரம் தெரியாத ஒரு குழப்பம் குடி கொண்டது. நம்முடைய தேட்டத்துக்கும் இந்தப் பெண்ணுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று அவருடைய உள்ளுணர்வு சொல்லிற்று. ஆனால் என்னமாய் அதைக் கண்டு பிடிப்பது? பகிரங்கமாய் விசாரித்துப் பலன் இல்லாமற் போனால் பைத்தியக்காரத்தனமாக முடியுமே?

அன்று சாஸ்திரி இரவு 11 மணிக்குத்தான் வந்து காம்பில் படுத்தாரானாலும் தூக்கம் என்னமோ வரவில்லை. பூங்குளம், கல்யாணி, முத்தையன், அபிராமி - இப்படியே அவருடைய எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தன. மறுநாள் எப்படியும் பூங்குளத்துக்குப் பக்கத்திலுள்ள காடுகளை நன்றாய்ச் சோதனை போடுவது என்று அவர் தீர்மானித்தார்.

மறுநாள் காலையில், அவர் போலீஸ்காரர்களைப் பிரித்துவிட்டு, அவர்கள் இங்கிங்கே போக வேண்டும், இன்னின்ன செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்த போது புரசூர் ரயில்வே ஸ்டேஷனில் சாதாரண உடுப்புடன் ('மப்டி'யில்) இருந்து, இறங்கி ஏறுபவர்களைக் கவனிக்கும்படி உத்தரவு பெற்றிருந்த போலீஸ்காரன் அவரிடம் வந்து அன்று காலை பாஸஞ்சரில் சாயபு ஒருவர் ஒரு கோஷா ஸ்திரீயுடன் வந்து இறங்கிப் பாச்சாபுரம் என்ற ஊருக்கு வண்டி பேசிக்கொண்டு சென்றதாகத் தெரிவித்தான். அதைக் கேட்ட ஸப்-இன்ஸ்பெக்டர் பலமாகச் சிரித்தார். "ஓஹோ! அப்படியா? திருடன் மறுபடி மதராஸுக்குப் போய் அங்கே கோஷா வேஷம் போட்டுக் கொண்டு ஒரு சாயபுவையும் கூட அழைத்துக் கொண்டு நம்மிடம் அகப்பட்டுக் கொள்வதற்காகத் திரும்பி வந்திருக்கிறானோ?" என்றார்.

இப்போதெல்லாம் சாஸ்திரிக்கு மற்றவர்கள் கொண்டு வரும் துப்பு எதிலும் நம்பிக்கை ஏற்படுவதில்லை. முத்தையனைப் பற்றிய தகவல் வேறு யாராலும் கண்டு பிடிக்க முடியாதென்றும் தம் ஒருவரால் தான் அவனைக் கண்டுபிடிக்க முடியுமென்றும் ஓர் எண்ணம் அவர் மனத்தில் வேரூன்றி இருந்தது.

ஆகவே மேற்படி துப்பில் அவருக்கு அதிகச் சிரத்தை ஏற்படவில்லை. ஆனாலும் அதை அடியோடு அலட்சியம் செய்து விடுவதாகவும் அவருக்கு உத்தேசமில்லை. மேற்கண்டவாறு அவர் கேலியாய்ப் பேசிக்கொண்டிருந்தபோதே, மனத்திற்குள், "பாச்சாபுரம், பூங்குளத்துக்குப் பக்கத்தில்தானே இருக்கிறது? அங்கே இந்த கோஷா ஸ்திரீ மர்மத்தையும் விசாரித்து விட்டால் போகிறது!" என்று எண்ணிக்கொண்டார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 11:27 am

46.குடம் உருண்டது!

பாச்சாபுரம் கடைத் தெருவில் உண்மையாகவே ஒரு மாட்டு வண்டி கிடக்கத்தான் செய்தது. அதை லயன் கரையிலிருந்தே பார்த்த சர்வோத்தம சாஸ்திரி தம் பின்னோடு வந்த உடுப்பணியாத போலீஸ்காரனை அனுப்பி அதில் யார் வந்தது என்று விசாரித்து வரச் சொன்னார். வண்டிக்காரன் கடைத் தெருவிலிருந்த மிட்டாய்க் கடையில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனைக் கேட்டதற்கு, "ஆமாம்; ஒரு சாயபுவும் அவர் சம்சாரமுந்தான் வந்தார்கள். மத்தியானமாய் ஸ்டேஷனுக்குத் திரும்பி விடுகிறோம் என்று என்னை இருக்கச் சொல்லியிருக்கிறார்கள்" என்றான். போலீஸ்காரன் ஊருக்குள் போய் இரண்டொரு முஸ்லிம்களை, "ஒரு சாயபுவும் ஒரு கோஷா ஸ்திரீயும் இங்கே வந்தார்களா?" என்று விசாரித்தான். அவர்கள், "வந்தார்கள், வரவில்லை; நீ என்னத்திற்கு விசாரிக்கிறாய்?" என்று சண்டைக்கு வந்துவிட்டார்கள். போலீஸ்காரன் திரும்பி வந்து சாஸ்திரியிடம் சொன்னான். அவருடைய பழைய நம்பிக்கை உறுதிப்பட்டது. இருந்த போதிலும், "நீ இங்கேயே இருந்து அந்த வண்டியில் ஒரு கண் வைத்திரு. பின்னால் வரும் போலிஸ்காரர்களை மேலே அனுப்பி விடு. நான் முன்னால் போகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். அவரும் இந்த 'மப்டி' போலீஸ்காரனும் மட்டும் சைக்கிளில் வந்தார்கள். மற்றவர்கள் பின்னால் நடந்து வந்தார்கள். இருபுறத்திலுமுள்ள காடுகளைத் துழாவிக் கொண்டு வந்தபடியால் அவர்கள் வருவதற்கு நேரமாயிற்று.

ஸர்வோத்தம சாஸ்திரியின் எண்ணமெல்லாம் பூங்குளத்திலேயே இருந்தது. பூங்குளத்திலும் கல்யாணியின் மீதே இருந்தது. இரகசியங்களையும் மர்மங்களையும் கண்டுபிடிப்பதிலேயே ஈடுபட்டிருப்பவர்களுக்கு வேட்டை நாயிடம் உள்ள முகரும் சக்தியைப் போல், ஒருவித சக்தி உண்டாகிவிடுகிறது. ரயிலில் பாருங்களேன், வண்டியிலே முப்பத்திரண்டு பேர் உட்கார்ந்திருக்கும் போது, டிக்கட் பரிசோதகர் ஓர் ஆசாமியிடம் குறிப்பாகப் போய் டிக்கட் கேட்கிறார்! அந்த ஆசாமியிடம் டிக்கட் இருப்பதில்லை!

இம்மாதிரிதான் ஸர்வோத்தம் சாஸ்திரிக்கும் முத்தையனுடைய இரகசியம் இந்தக் கல்யாணியிடம் இருக்கிறது என்ற எண்ணம் தோன்றிவிட்டது. எனவே பரபரப்புடன் விரைந்து ஸைக்கிளை விட்டுக் கொண்டு சென்றார். அவர் பூங்குளத்தை நெருங்கிய போது, கல்யாணி கொள்ளிடப் படுகையிலிருந்து இடுப்பிலே குடத்துடன் குளிக்காமலும் தலைவிரி கோலமாயும் வருவதைக் கண்டார். "ஐயோ! இந்தப் பெண்ணுக்குச் சித்தப் பிரமையா? அல்லது பேய் பிடித்திருக்கிறதா?" என்று அவர் திடுக்கிட்டுப் போனார். அப்போது அவளுடைய தோற்றம் அவ்வளவு பயங்கரமாயிருந்தது.

அவ்விடத்தில் லயன்கரைச் சாலையை ஒட்டி இராஜன் வாய்க்கால் ஓடிக் கொண்டிருந்தபடியால், கொள்ளிடத்தில் இருந்து வருகிறவர்கள் லயன் கரைச் சாலையைத் தாண்டியதும் கொஞ்ச தூரம் கீழே இறங்கிப் போய், வாய்க்காலின் மீது போடப்பட்டிருக்கும் மூங்கில் பாலத்தின் வழியாக அக்கரை செல்ல வேண்டும். அப்புறம் சாதாரண கால்நடைப் பாதை வழியாக சுமார் கால் மைல் தூரம் போனால் தான் பூங்குளத்தை அடையலாம்.


*****

கல்யாணி இப்போது லயன் கரைச் சாலையைத் தாண்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அவள் என்ன சொல்கிறாள் என்பது சாஸ்திரியின் காதில் விழா விட்டாலும், அவை ஏதோ காரமான வசைச்சொற்கள் என்று மட்டும், ஊகிக்க முடிந்தது. அவ்வளவு சமீபத்தில் வந்திருந்த சாஸ்திரியை அவள் கவனிக்கவில்லை. உண்மையில், அவளுக்கு எதிரில் உள்ளவை கூட அவள் கண்ணுக்குத் தெரியவில்லையென்று தோன்றிற்று. அப்படித் தட்டுத் தடுமாறி நடந்தாள். சாலையைத் தாண்டியதும், பள்ளத்தில் இறங்க வேண்டுமல்லவா? அந்த இடத்தில் பள்ளம் என்பதைக் கவனிக்காமலே அவள் காலை எடுத்து வைத்தாள். திடீரென்று கீழே விழுந்தாள். இடுப்பிலிருந்த குடம் தவறி விழுந்து, 'டணார், டணார்' என்று சப்தித்துக் கொண்டே உருண்டு இராஜன் வாய்க்காலின் பிரவாகத்துக்கருகில் போய்த் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு நின்றது. குடம் உருண்ட வேகத்தில் அதற்குள்ளிருந்த பொட்டலம் வெளியே வந்து தண்ணீரில் விழுந்தது. விழும்போதே அந்தப் பொட்டலம் அவிழ்ந்தும் போயிற்று. மீன்கள் திரண்டு வந்து முத்தையனுடைய மத்தியானச் சாப்பாட்டை ருசி பார்த்துச் சாப்பிடத் தொடங்கின.

இவ்வளவும் நடந்தது அரை நிமிஷ நேரத்தில். கல்யாணி லயன் கரைச் சரிவில் நிமிர்ந்து உட்கார்ந்தபடி சுற்றுமுற்றும் பார்த்தாள். இதற்குள் சாஸ்திரி கீழே ஓடிச் சென்று குடமும் பிரவாகத்தில் போய்விடாமல் எடுத்தார். குடத்தை அவர் ஒரு கையால் எடுக்கும்போது இன்னொரு கையால் தண்ணீரில் கிடந்த சோற்றுப் பொட்டலத்தை நன்றாய்ப் பிரவாகத்தில் இழுத்துவிட்டு விட்டார்.

குடத்தை எடுத்துக் கொண்டு வந்து கல்யாணியின் பக்கத்தில் வைத்த சாஸ்திரி, "என்ன, அம்மா, இது? ஏன் இப்படி விழுந்துவிட்டாய்?" என்று கேட்டார். கல்யாணி பதில் சொல்லாமல் திருதிருவென்று அவரைப் பார்த்து விழித்தாள்.

"குடத்திலிருந்த சாப்பாடு ஆற்றோடே போய் விட்டதே? யாருக்காக அம்மா, சாப்பாடு கொண்டு வந்தாய்?" என்று கேட்டார் சாஸ்திரியார்.

அதைக் கேட்ட கல்யாணி ஒரு விநாடி அவரை உற்றுப் பார்த்துவிட்டு, "ஹ ஹ் ஹ ஹ் ஹ ஹா" என்று சிரித்தாள். அவ்வளவு பயங்கரமும் சோகமும் கலந்த சிரிப்பை அதற்கு முன் சாஸ்திரி கேட்டதே கிடையாது. அவருக்கு மயிர்க் கூச்செறிந்தது. "யாருக்காகவா? சாப்பாடு யாருக்காகவா?" என்று கல்யாணி முணுமுணுத்தது அவருடைய உடம்பைப் பதறச் செய்தது.

ஆனாலும் அவர் விடவில்லை. நெஞ்சை வயிரமாக்கிக் கொண்டு மேலும் சொன்னார்: "உன்னைப் போன்ற சிறு பெண்கள் உச்சி வேளையில் இங்கெல்லாம் வரக்கூடாது, அம்மா! படுகைக் காட்டிலே திருடன் முத்தையன் ஒளிந்து கொண்டிருப்பது தெரியாதா உனக்கு? அவனுக்கு இந்தப் பக்கத்திலேதான் யாரோ காதலி ஒருத்தி இருக்காளாம். அவள் தான் அவனுக்குச் சாப்பாடு போடுகிறாளாம்! முதலிலே நீதான் அந்தக் கள்வனின் காதலியோ என்று கூட நான் சந்தேகப்பட்டுவிட்டேன்..."

சாஸ்திரி இம்மாதிரி கூறியதைக் காட்டிலும் கல்யாணியின் நெஞ்சில் கூரிய ஈட்டியைச் செருகியிருக்கலாம்! ஆனால் ஈவிரக்கம் பார்த்தால் இந்தக் காலத்தில் சரிப்படுமா? உத்தியோகத்தில் தான் பிரமோஷன் கிடைக்குமா? அவர் உத்தேசித்த பலன் கைமேல் கிடைத்து விட்டது. கல்யாணி எழுந்து நின்றாள். ஆவேசம் வந்தவள் போல் பேசினாள்: "நானா கள்வனின் காதலி? இல்லவே இல்லை! சத்தியமாய் இல்லை! அவனுடைய காதலி வேறொருத்தி இருக்கிறாள். அதோ அந்தக் காட்டுக்குள்ளேயே இருக்கிற பாழும் கோவிலுக்குப் போனால் தெரியும். காதலனும் காதலியும் அங்கே கட்டித் தழுவிக் கொண்டிருக்கிறார்கள்..."

இப்படிச் சொன்ன கல்யாணிக்கு உடனே, "ஐயோ! என்ன காரியம் செய்தோம்?" என்று தோன்றியிருக்க வேண்டும். உதடுகளைக் கடித்துக் கொண்டாள். ஒரு நிமிஷம் பொறுத்து, "ஐயா! நீங்கள் யார்?" என்று கேட்டாள்.

சாஸ்திரியின் முகத்தில் ஒரு சிறு மாறுதலும் ஏற்படவில்லை? "ஏனம்மா? என்னைத் தெரியாதா? நான் இந்தக் கொள்ளிடக்கரை மேஸ்திரி. எனக்கென்னத்திற்கு இந்தத் தொல்லையெல்லாம்? உனக்கு உடம்பு சரியில்லை போலிருக்கிறது. மூங்கில் பாலத்தைத் தாண்டி ஜாக்கிரதையாகப் போய்ச் சேர். நானும் என் வழியே போகிறேன்" என்றார்.

கல்யாணி, "ஐயா! நிஜமாய்ச் சொல்லுங்கள், நீங்கள் போலீஸ்காரர் இல்லையே?" என்று கேட்டாள்.

"என்னைப் பார்த்தால் போலீஸ்காரன் மாதிரி இருக்கிறதா?" என்றார் சாஸ்திரி.

கல்யாணி குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு மூங்கில் பாலத்தைத் தாண்டி ஊரை நோக்கிச் சென்றாள். அவளுக்குத் தெரியும்படியாக சாஸ்திரியும் லயன் கரைச் சாலையோடு கொஞ்ச தூரம் போனார்.

முத்தையன் இருக்குமிடம் இதுதான் என்று சாஸ்திரிக்கு நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது. ஆனால் கல்யாணியின் மர்மம் இன்னதென்று முழுவதும் விளங்கவில்லை. அதைப் பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அந்தப் பெண் இங்கே இருந்தால் காரியத்துக்கு ஏதாவது இடையூறு ஏற்படுமென்று எண்ணித்தான் அவளைப் போகச் செய்தார்.

அவள் இராஜன் வாய்க்காலைத் தாண்டி அக்கரையில் முடுக்குத் திரும்புவதும், இங்கே சாலையில் போலீஸ்காரர்கள் வந்து சேர்வதும் சரியாயிருந்தது. சாஸ்திரி சட்டென்று ஒரு சீட்டு எழுதி, அந்தப் போலீஸ்காரர்களில் ஒருவனிடம் கொடுத்து, "ஓடு! என் சைக்கிளை எடுத்துப் போ! பாச்சாபுரத்தில் இருப்பவனிடம் கொடுத்து, உடனே போய் ராயவரம் போலீஸ் ஸ்டேஷனில் இந்தச் சீட்டைக் கொடுத்துவிட்டு வரச்சொல்லு. அவன் கோஷா ஸ்திரீயைத் தேடியது போதும். கோஷாவும் ஆயிற்று. நாசமாய்ப் போனதும் ஆயிற்று" என்றார். அவன் அப்படியே சைக்கிளில் விரைந்து சென்றான். பாக்கியிருந்த ஐந்து கான்ஸ்டபிள்களையும் பார்த்த சாஸ்திரி, "துப்பாக்கிகளில் மருந்து கெட்டித்துத் தயாராய் வைத்திருக்கிறீர்களா? வேட்டை நெருங்கி விட்டது" என்றார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 11:29 am

47.பூமி சிவந்தது


"முத்தையா! நல்ல இடம் பார்த்துக் கொண்டு வந்து உட்கார்ந்திருக்கிறாய்! நீ எவ்வளவோ சரியாக அடையாளம் சொல்லியிருந்தும் கண்டு பிடிப்பதற்குத் திண்டாடிப் போய் விட்டேன். எவ்வளவு அடர்த்தியான காடு! இதில் புகுந்து வருவதற்கு ரொம்பக் கஷ்டப்பட்டுப் போய்விட்டேன்..." என்றான் கமலபதி. பிறகு, "இதற்குப் பொருத்தமாக ஏதோ ஒரு பாட்டு இருக்கிறதே! அது என்ன?..." என்று சொல்லி ஒரு நிமிஷம் சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு, "ஆமாம் பாரதியின் பாட்டுத்தான்" என்று கூறிப் பாட ஆரம்பித்தான்:

திக்குத் தெரியாத காட்டில் - உன்னைத்
தேடித் தேடி இளைத்தேனே! (திக்கு)

மிக்க நலமுடைய மரங்கள் - பல
விந்தை சுவையுடைய கனிகள் - எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள் - அங்கு
பாடி நகர்ந்து வரும் நதிகள் - ஒரு (திக்கு)

"மலைகளைத் தவிர பாக்கி வர்ணனை யெல்லாம் மிகவும் பொருத்தமாயிருக்கிறதல்லவா!" என்றான் கமலபதி.

அப்போது முத்தையன் சொன்னான்: "அந்தப் பாட்டில் இதையெல்லாம் விட அதிகப் பொருத்தமாயிருக்கும் அடி வேறொன்றிருக்கிறதே!

"பெண்ணே உனதழகைக் கண்டு - மனம்
பித்தம் கொள்ளதென்று நகைத்தான் - அடி
கண்ணே என திருகண்மணியே உனைக்
கட்டித் தழுவ மனங் கொண்டேன்!"

இவ்வாறு பாடிவிட்டு முத்தையன் கமலபதியைச் சுற்றிச் சுற்றி வந்து நாடக மேடையில் திருடன் ஆடுவதைப் போல் ஆடத் தொடங்கினான்.

"உங்களுக்கு என்ன 'கிராக்' புடிச்சுப்போச்சா?" என்ற குரலைக் கேட்டு இரண்டு பேரும் திடுக்கிட்டுப் பார்த்தார்கள். முகமது ஷெரிப் சாயபுவின் கண்களில் தீப்பொறி பறந்து கொண்டிருந்தது. "அரே! உங்களுக்குப் பிழைச்சுப் போக இஷ்டமில்லையென்று தோணுகிறது. தூக்கு மேடையிலே சாகத்தான் இஷ்டமா? இந்த லயன் கரைச்சாலையிலே இன்றைக்குக் கிழக்கேயிருந்து மேற்கே நூறு சிவப்புத் தலைப்பாகையும், மேற்கேயிருந்து கிழக்கே நூறு சிவப்புத் தலைப்பாகையும் போயிருக்கு. இங்கே நீங்கள் பாட்டுப் படிச்சுக் கொண்டு கூத்தடிக்கிறீங்க!" என்றார் சாயபு.

கமலபதி அவரிடம் நெருங்கி வந்து, "பாயி! கோபம் வேண்டாம். நாங்கள் செய்தது தப்புத்தான். நீங்க போங்க. இதோ உங்கள் பின்னாலேயே நான் வந்து விடுகிறேன்!" என்றான்.

"ஆமாம்! நான் போகத்தான் போகிறேன். நீங்கள் தான் சாகத் துணிஞ்சிருந்தால், நான் ஏன் மாட்டிக்க வேணும்! இதோ நான் போகிறேன். ஐந்து நிமிஷத்தில் நீ என் பின்னோடு வந்து சேர்ந்து கொண்டாலாச்சு! இல்லாட்டா இந்தப் பொம்பிளை எனக்கு வேண்டாம் என்று 'தலாக்' சொல்லிவிட்டுப் போய்விடுவேன்" என்றார் சாயபு. பிறகு முத்தையன் முதுகில் தட்டிக் கொடுத்து, "தேகோ! உஜார்!" என்று ஜாக்கிரதைப் படுத்தி விட்டு காட்டுக்குள் புகுந்து போகத் தொடங்கினார்.

கமலபதி, "முத்தையா! நானும் போக வேண்டியது தான். எனக்கென்னமோ போக இஷ்டமேயில்லை. உன்னுடன் இந்தக் காட்டில் இப்படியே இருந்து காலங்கழித்து விடலாமென்று தோன்றுகிறது. ஆனால் முடியாத காரியத்தைப் பற்றி யோசித்து என்ன பிரயோஜனம்? நான் போகிறேன். நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்" என்றான்.

"கமலி! ஒருவேளை நம்முடைய 'பிளா'னெல்லாம் தவறிப்போய் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், நீ தான் அபிராமியைக் காப்பாற்றவேணும்" என்று தழுதழுத்த குரலில் சொன்னான் முத்தையன்.

"சரிதான், போ! நம்முடைய 'பிளான்' எதற்காகத் தவறிப் போகவேணும்? எல்லாம் சரியாய் நடக்கும், பார்! இன்னும் பத்து நாளில் நீ ஷெரிப் சாயபுடன் போய்க் காரைக்காலில் கப்பல் ஏறிவிடப் போகிறாய். நாங்கள் உன்னைச் சென்னைத் துறைமுகத்தில் சந்திக்கப் போகிறோம். அங்கே, அபிராமியைப் பார்க்கும்போது மட்டும், 'எங்கப்பா குதிருக்குள் இல்லை' என்று ஏதாவது அழுது கிழுது வைக்காதே! சரி, நான் போய் வருகிறேன்" என்று கமலபதி கிளம்பினான். கிளம்பினவனை முத்தையன் கையைப் பிடித்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கட்டித் தழுவிக் கொண்டான். "நீ என்னமோ சொல்கிறாய்; ஆனால் எனக்கு மட்டும் நம்பிக்கை ஏற்படவில்லை. உன்னை நான் பார்ப்பது கடைசி தடவையோ என்னமோ, யார் கண்டது?" என்று முத்தையன் சொன்ன போது அவனுடைய கண்களில் நீர் துளிர்த்தது.

அப்போது கமலபதி தன் முகத்தில் புன்னகை வருவித்துக்கொண்டு, "அதிருக்கட்டும், முத்தையா; இப்போது ஸ்ரீமதி கல்யாணி தேவியார் நம்மைப் பார்த்தால் என்ன நினைத்துக் கொள்வார்கள்?" என்றான். முத்தையன் கலகலவென்று நகைத்தான், "நினைத்துக் கொள்வது என்ன? ஆபத்துதான்! சரி, நேரமாய்விட்டது. போய் வா!" என்றான். "ஓகோ! கல்யாணி வரும் நேரமாய்விட்டது என்கிறாயா? நான் அவளைப் பார்த்து விட்டுத்தான் போகிறேனே? ஒரு சக்களத்திச் சண்டை போட்டுப் பார்க்கலாம்" என்றான் கமலபதி.

"ஐயோ! வேண்டாம்! நீ போய் வா" என்றான் முத்தையன். கமலபதி கோஷா அங்கியைக் கையில் சுருட்டி எடுத்துக் கொண்டு, திரும்பித் திரும்பிப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சென்று காட்டுக்குள் மறைந்தான்.


*****

கமலபதி போய் சுமார் அரைமணி இருக்கும். முத்தையன் வழக்கம்போல் மரத்தின் வேரில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டிருந்தான். "இன்றைக்கு ஏன் கல்யாணி இன்னும் வரவில்லை?" என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். நிஜமாகவே கமலபதி சொன்னது போல் நேர்ந்திருந்தால் - அதாவது கமலபதி தன்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது கல்யாணி வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணியபோது அவன் முகத்தில் புன்னகை உண்டாயிற்று. "தன் மேல் அவளுக்குச் சந்தேகம் உண்டாகியிருக்குமா? கோபித்துக் கொள்வாளா அல்லது அழுவாளா? சாதாரண விஷயங்களிலேயே அவளுக்கு ஆத்திரம் வந்துவிட்டால் ரகளைதானே? இந்த சமாசாரத்தில் கேட்க வேண்டுமா? அப்புறம் நிஜம் வெளியாகும்போது என்ன செய்வாள்? கோபம் எல்லாம் பறந்து போய்ச் சிரிப்பாள் அல்லவா? நல்ல வேடிக்கை!" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் முத்தையன்.

'ஆ! அது என்ன, அந்தப் புதர்களுக்கிடையில் சிவப்பாய்த் தெரிகிறது?' - முத்தையனுடைய நெஞ்சு கோயில் நகராவைப் போல் அப்போது அடித்துக் கொண்டது. 'இதோ இந்த மரத்தின் மறைவில்? அதோ, அதோ, அதோ அவ்வளவும் சிவப்புத் தலைப்பாக்கள்? இது நிஜமா, சித்தப் பிரமையா அல்லது கனவா? முத்தையன் கண்ணைக் கசக்கி விட்டுப் பார்த்தான். கனவில்லை, பிரமையுமில்லை, - நிஜந்தான். போலீஸ்காரர்கள் தன்னை நாலாபுறமும், சூழ்ந்து கொண்டிருப்பதை முத்தையன் உணர்ந்தான்.

இது சந்தேகமறத் தெரிந்தவுடனே முத்தையனுடைய உள்ளமும் தெளிந்துவிட்டது. அந்த உள்ளத்தில் இப்போது அணுவளவும் குழப்பம் இல்லை. சென்ற இரண்டு மூன்று வருஷ காலமாய் எதிர்பார்த்த விஷயந்தானே? முத்தையனுடைய உடம்பு ஒரு தடவை சிலிர்த்தது. அன்றைய தினம் இரண்டாவது தடவையாக அவன் கையில் ரிவால்வருடன் துள்ளிக் குதித்து எழுந்தான். ஆனால் இந்தத் தடவை ரிவால்வரைக் கீழே போடவில்லை. அதிலிருந்து வேட்டுக்கள் கிளம்பி, அந்த வனப்பிரதேச மெல்லாம் எதிரொலி செய்தன.

அதே சமயத்தில் போலீஸ்காரர்களும் சுட்டார்கள். திருடனுடைய முழங்காலுக்குக் கீழே சுடும்படிதான் அவர்களுக்கு உத்தரவு. அதன்படியே அவர்கள் சுட்டார்கள். முதலில் பல குண்டுகல் அவன் மேலே படாமலே சிதறி விழுந்தன. கடைசியாக ஒரு குண்டு முத்தையனுடைய காலில்பட்டது. அதனால் அவன் கீழே விழுந்த சமயத்தில் இன்னும் நாலு குண்டுகள் அவன் மீது பாய்ந்தன. ஒன்று தோளின் மேல், ஒன்று விலாவில், ஒன்று தொடையில் - இப்படி. முத்தையனுடைய தேகத்தில் இரத்தம் பீறிட்டு அடித்தது. அவன் விழுந்த இடத்தில் பூமி நெடுந்தூரம் இரத்தத்தினால் சிவந்தது!

அடுத்த கணத்தில் பத்துப் பன்னிரண்டு போலீஸ்காரர்கள் சேர்ந்தாற்போல் ஓடிவந்து முத்தையனைப் பிடித்துக் கட்டினார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 11:30 am

48.நெஞ்சு பிளந்தது!


இராஜன் வாய்க்காலின் மூங்கில் பாலத்தைத் தாண்டிச் சென்ற கல்யாணி தயங்கித் தயங்கி நடந்தாள். ஏனோ அவளுக்கு வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனம் வரவில்லை. அவளுடைய கால்கள் பூங்குளம் கிராமத்தை நோக்கிச் சென்றனவாயினும் அவளுடைய இதயம் அந்தப் பாழடைந்த கோயிலிலிருந்து வரவே மாட்டேனென்று பிடிவாதம் பிடித்தது.

அந்த நாவல் மரத்தடியில் தான் கண்ட காட்சியை நினைக்க நினைக்க அவளுடைய இரத்தம் கொதிப்படைந்தது. அவளுடைய நெஞ்சு பிளந்து இரண்டாகி விடுவது போன்ற ஒரு வேதனை உணர்ச்சி அவளைச் சித்திரவதை செய்தது. அப்படிப் பிளந்து விடாமலிருக்கும் பொருட்டு நெஞ்சை ஒரு கையினால் அமுக்கிப் பிடித்துக் கொண்டு நடந்தாள். பல வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் அதே நாவல் மரத்தடியில் நடந்த ஒரு சம்பவம் அவள் நினைவுக்கு வந்தது. முத்தையன் அப்போது ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தான். அவன் ஊருக்கு வந்து விட்ட செய்தி தெரிந்து கல்யாணி குதூகலமடைந்திருந்தாள். வழக்கம் போல் அவனை எதிர்பார்த்து அவள் அப்பாழடைந்த கோயிலுக்குப் போனாள். முன்னாலேயே அவன் அங்கு வந்து இவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். இன்றைய தினம் அவன் உட்கார்ந்திருந்த இடத்திலேயே அன்றும் உட்கார்ந்திருந்தான். கல்யாணி அருகில் சென்றதும், இன்று அந்தத் தேவடியாளைக் கட்டித் தழுவிக் கொண்டானே, பாவி, அதே மாதிரி இவளைக் கட்டித் தழுவிக் கொண்டான்!

அன்று நடந்த பேச்சு முழுவதும் அப்படியே கல்யாணிக்கு நினைவு வந்தது. அந்தப் பாழடைந்த கோயிலுக்குள் ஸ்வாமி ஒன்றும் இல்லையல்லவா? இவர்கள் பெரியவர்களான பிறகு, அந்தக் கோவிலைப் புதுப்பித்துக் கட்டி அதற்குள்ளே ஸ்வாமி பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று இரண்டு பேரும் சேர்ந்து முடிவு செய்தார்கள். ஆனால் கோவிலுக்குள் என்ன ஸ்வாமி வைப்பது? முத்தையன் ஒவ்வொரு சுவாமியாகச் சொல்லிக் கொண்டு வந்தான். "கிருஷ்ண விக்கிரகம் வைப்போம்" என்றான். "கூடாவே கூடாது" என்றாள் கல்யாணி. "கிருஷ்ணன் மேல் உனக்கு என்ன கோபம்? போனால் போகட்டும், சுப்ரமண்ய சுவாமி வைப்போமா?" என்றான் முத்தையன். "அதுவும் வேண்டாம்!" என்றாள் கல்யாணி. இப்படி ஒவ்வொரு சுவாமியாகத் தள்ளிக் கொண்டு வந்து கடைசியில், முத்தையன், "எல்லா சுவாமியும் வேண்டாமென்று நீ சொல்லிவிட்டால், நாம் இரண்டு பேருமே சுவாமியும் அம்மனுமாய் உட்கார்ந்துவிட வேண்டியதுதான்" என்றான். "இராமரை நான் வேண்டாமென்று சொல்லவில்லை; இராமரையே வைக்கலாம்" என்றாள் கல்யாணி. 'மற்ற சுவாமியையெல்லாம் வேண்டாமென்று சொல்லி, இராமரை வைக்க மட்டும் சம்மதித்ததிற்கு என்ன காரணம்' என்று முத்தையன் விசாரித்தான். கல்யாணி முதலில் இதற்குச் சரியான பதில் சொல்லவில்லை. கடைசியாக வறுபுறுத்திக் கேட்டதன் பேரில், "இராமருக்குத்தான் ஒரே பெண்டாட்டி; ஆகையால்தான் அவரை எனக்குப் பிடிக்கிறது. மற்ற சுவாமிகளுக்கு எல்லாம் இரண்டு பேரும், அதற்கு மேலுங் கூட இருக்கிறார்கள். அவர்களை எனக்குப் பிடிக்கவில்லை" என்றாள் கல்யாணி. உடனே முத்தையன் கல்யாணியைத் தூக்கித் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டு, "என் கண்ணே! நான் இராமரைப் போலிருப்பேன், உன்னைத் தவிர வேறு ஸ்திரீயை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டேன்" என்றான்.

அன்று அப்படி வாக்குறுதி செய்த முத்தையன் இன்றைக்கு எப்படியாகி விட்டான்! அடபாவி! ரயில்வே ஸ்டேஷனில் உன்னைப் பற்றி ஜனங்கள் பேசிக் கொண்டதெல்லாம் நிஜந்தானா? ஐயோ! மோசமல்லவா போய் விட்டேன்? நான் இருக்கிறேனே, உன்னைத் தவிர உலகில் வேறு நினைவே இல்லாமல் - அப்படியும் நீயும் இருப்பாயென்றல்லவா எண்ணிவிட்டேன்? உனக்காகவா நான் இந்தச் சொத்து, சுதந்திரம், வீடு, வாசல் எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கப்பலேறி வர தயாராயிருந்தேன்? ஐயோ! என்ன அசடாய்ப் போனேன்? - ஆகா! இது என்ன உலகம்? சூதும் வாதும் பொய்யும் புனைசுருட்டும் நிறைந்த உலகம் - இதையெல்லாம் நினைக்கும் போது, இறந்து போனாரே, அவர் எப்பேர்ப்பட்ட உத்தமர்? அவர் புண்ணிய புருஷரான படியால் இந்தப் பாவியுடன் எத்தனை நான் வாழ்வது என்று போய்விட்டார் போலிருக்கிறது!...


*****

இப்படி எண்ணமிட்டுக்கொண்டே போன கல்யாணிக்குக் காலிலே ஒரு கல் தடுக்கிவிட்டது. கட்டை விரலில் இரத்தம் வந்தது. தலை கிறு கிறு வென்று சுற்றுவது போலிருந்தது. பாதை ஓரத்தில் சற்று உட்கார்ந்தாள். அவள் உட்கார்ந்த இடத்தில் ஒரு தும்பைச் செடி பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. கல்யாணி ஒரு தும்பைப் பூவைப் பறித்தாள். "என்னுடைய அன்பு இந்தத் தும்பைப் பூவைப் போல் அவ்வளவு பரிசுத்தமாயிருந்தது. அதை இப்படிக் கசக்கி எறிந்து விட்டானே, பாவி!" என்று எண்ணிய வண்ணம் அந்தப் பூவைக் கசக்கினாள்.

திடீரென்று, அவளுடைய உள்ளத்தின் எந்த மூலையிலிருந்தோ ஒரு எண்ணம் உதயமாயிற்று. "ஒரு வேளை நாம் பார்த்தது பொய்யோ? வெறும் பிரமையாயிருக்குமோ?" என்ற சந்தேகம் ஏற்பட்டு வினாடிக்கு வினாடி அதிகமாயிற்று. "அந்த ஸ்திரீ யார்? அவள் எப்படி அங்கே வந்திருப்பாள்? - என்ன தப்பு பண்ணி விட்டோ ம்? மளமளவென்று அருகில் போய் உண்மையைக் கண்டு பிடிக்காமல் தூர இருந்தபடியே வந்து விட்டோ மே?" என்று எண்ணிக் கல்யாணி தவித்தாள். "மோகினிப் பிசாசு என்கிறார்களே? அது நிஜந்தானோ, என்னவோ? பிசாசு அப்படி உருவம் எடுத்து வந்தாலும் வந்திருக்குமல்லவா? அதை நான் தானாக்கும் என்றே முத்தையன் எண்ணி மோசம் போயிருக்கலாமல்லவா? இல்லாவிட்டால், அப்படித் தளுக்கும் குலுக்குமான ஒரு பெண் பிள்ளை அந்தக் காட்டில் எப்படி வந்தாள்? எங்கிருந்து வந்தாள்?..." இம்மாதிரி விபரீதமான சந்தேகங்கள் எல்லாம் கல்யாணிக்குத் தோன்றின. அப்படியிருந்தால், முத்தையனைப் பற்றித் தான் எண்ணியதெல்லாம் அநியாயமல்லவா? அநியாயத்தோடேயா? ஐயோ! அந்தப் பிராமணன்! அவன் யாரோ என்னமோ தெரியவில்லையே? பார்த்தால் போலீஸ்காரன் மாதிரி இருந்ததே? அவனிடம் முத்தையன் இருக்குமிடம் சொல்லிவிட்டோ மே? என்ன நேருமோ என்னமோ? ஸ்வாமி பகவானே!

உடனே திரும்பி முத்தையன் இருக்குமிடம் போக வேண்டும் என்ற அடங்காத தாபம் அப்போது கல்யாணிக்கு உண்டாயிற்று. அவன் தனக்குத் துரோகம் செய்திருந்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அவனை அந்த இடத்தில் இனிமேல் இருக்க வேண்டாம் என்று எச்சரிப்பது தன்னுடைய கடமை என்று கல்யாணி கருதினாள். எனவே, திரும்பிக் கொள்ளிடக்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அவள் ஐந்தாறு அடிதான் நடந்திருப்பாள். 'டுமீல்' 'டுமீல்' என்று துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டது. ஒன்றன் பின் ஒன்றாகச் சுமார் மூன்று நிமிஷ நேரம் வெடிகள் தீர்ந்த வண்ணமிருந்தன. அந்தச் சத்தம் திக்குத் திகாந்தங்களில் எல்லாம் பரவி எதிரொலி செய்து முழங்கிற்று.

வெடி தீர்ந்து கொண்டிருந்தவரையில், கல்யாணி ஸ்தம்பித்துப் போய் நின்றாள். சத்தம் நின்றதும் அவளுடைய வாழ்க்கையிலேயே என்றும் அறியாத பதைபதைப்புடன் லயன்கரைச் சாலையை நோக்கி நடந்தாள்.


*****

துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு, அங்கங்கே வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த குடியானவர்களும் குடியானவ ஸ்திரீகளும் வேலையை அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தார்கள். ஆகவே, கல்யாணி மூங்கில் பாலத்தை அடைந்தபோது, லயன்கரைச் சாலையில் ஏகக்கூட்டம் கூடியிருந்தது. எல்லாரும் அவரவர்களுக்குத் தோன்றியபடி பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, கிழக்கே நூறு கஜ தூரத்தில் படுகைக் காட்டிலிருந்து பத்துப் பன்னிரண்டு போலீஸ்காரர்கள் சாலையில் ஏறுவது தெரிந்தது. ஜனங்கள் அந்தப் பக்கம் நோக்கி ஓடினார்கள். ஆனால் போலீஸ்காரர்கள் இரண்டு பேர் கையில் பிடித்த துப்பாக்கியுடன் நடுச்சாலையில் நின்று அவர்களைச் சுட்டுவிடுவதாகப் பயமுறுத்தவே ஜனங்கள் தயங்கி நின்றுவிட்டனர். பெரும்பாலான போலீஸ்காரர்கள் விரைந்து கிழக்கு நோக்கிச் சென்றார்கள். கும்பலாகச் சென்ற அவர்களுக்கு மத்தியில் நாலு சேவகர்கள் காயம் பட்ட மனிதன் ஒருவனைத் தூக்கிக் கொண்டு போவது தெரிந்தது.

கல்யாணி இதையெல்லாம் பார்த்தாள். "செத்துப் போய்விட்டான்" என்று சிலரும்; "இல்லை, சாகவில்லை காயம் மட்டும் பலம்" என்று சிலரும் பேசியதெல்லாம் அவள் காதில் அரைகுறையாய் விழுந்தது. குடியானவ ஸ்திரீகள் சிலர் வந்து கல்யாணியைச் சூழ்ந்து கொண்டனர். "ஆச்சி! இந்தக் கொள்ளிடக் கரையிலே நீங்கள் பாட்டுக்குத் தினம் போய்க் கொண்டிருந்தீர்களே! இங்கேயே இத்தனை நாளும் திருடன் இருந்திருக்கிறானே, ஆச்சி! ஏதோ உங்க பெரியவங்க பண்ணிய புண்ணியந்தான் உங்களுக்கு ஒன்றும் நேரவில்லை" என்றார்கள்.

கல்யாணி அவர்களுக்கு பதில் ஒன்றும் சொல்லாமலும் குனிந்த தலை நிமிராமலும் வீட்டை நோக்கி நடக்கலானாள். அவளுடைய முகத்தை மட்டும் அந்தச் சமயம் மற்றவர்கள் பார்த்திருந்தால், ஐயோ! எவ்வளவு கலவரம் அடைந்திருப்பார்கள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 11:31 am

49.பட்டணப் பிரவேசம்



அன்று ராயவரம் டவுனில் அல்லோல கல்லோலமாயிருந்தது. அந்தப் பட்டணத்தின் சரித்திரத்திலேயே அம்மாதிரியான காட்சிகளைக் கண்டதில்லையென்று எல்லாரும் ஒருமுகமாகச் சொன்னார்கள். இரண்டு மாதத்திற்கு முன்பு தான் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருந்த சப்ஜட்ஜ் சத்தியநாதபிள்ளை கூட, "இந்த ராயவரம் இம்மாதிரிக் காட்சிகளை என்றைக்கும் பார்த்ததில்லை" என்று சத்தியம் செய்யத் தயாராயிருந்தார்.

அந்தப் பட்டணத்தில் வசித்த சகல ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அன்று காலை முதல் தெரு வீதிகளிலேயே நின்றார்கள். எங்கே பார்த்தாலும் ஒரே விதமான பேச்சுதான். "முத்தையன் பிடிபட்டு விட்டானாம்! அவனை இங்கே கொண்டு வருகிறார்களாம்! ஆச்சு; சுங்கான் கேட் கிட்டத்தட்ட வந்தாச்சு! உடம்பிலே 32 குண்டு பாய்ந்திருக்காம்! அறுபது போலீஸ்காரர்கள் சூழ்ந்து பிடித்தார்களாம்! அவ்வளவு பேரையும் திமிறிக் கொண்டு போகப் பார்த்தானாம்! வீரன் என்றால், அவனல்லவா வீரன்!..."

இப்படிப் பலவிதமாய்ப் பேசியவர்கள் எல்லாரும் ஒரேயடியாக முத்தையனிடம் அனுதாபம் காட்டியது தான் மிகவும் ஆச்சரியமான விஷயம். அவனிடம் இருந்த கோபம் பயம் எல்லாம் போயே போய்விட்டன. அவனுடைய துணிச்சலையும், தீரத்தையும் பற்றிய வியப்பும், அவனுக்கு நேர்ந்த கதியைப் பற்றி இரக்கமுந்தான் மிஞ்சி நின்றன. உலகத்தில் ஒரு மனிதனுக்கு நேரக்கூடிய அதிர்ஷ்டங்களில் கஷ்டம் வருவதைப் போன்ற அதிர்ஷ்டம் வேறொன்றுமில்லை! அப்போதல்லவா அவனைச் சூழ்ந்திருப்பவர்களின் தயாள சுபாவம் நன்கு பிரகாசிக்கின்றது? அப்போதெல்லவா அவன் மற்றவர்களின் அன்புக்கும் அனுதாபத்துக்கும் பாத்திரமாகிறான்? அப்போதேயன்றோ அவனுடைய குறைகளையெல்லாம் ஜனங்கள் மறந்து, அவனுடைய குணங்களை மட்டும் நினைத்துப் பாராட்டுகிறார்கள்? இதைவிட ஒருவனுக்கு வரக்கூடிய அதிர்ஷ்டம் வேறென்ன இருக்கிறது!


*****

நேரம் ஆக, ஆக, வீதிகளில் நின்ற ஜனங்களின் பரபரப்பு அதிகமாயிற்று. அவர்கள் பொறுமையிழந்தார்கள். இளம்பிள்ளைகள் வீதிகளில் குட்டிக்கரணம் அடித்தார்கள். கைக்குழந்தைகளுடன் வந்து நின்ற பெண்மணிகள் அகாரணமாய்ப் பிள்ளைகளை அடித்தார்கள். வேலையைப் போட்டுவிட்டு வந்த ஆண்பிள்ளைகளுக்குக் கோபம் கோபமாய் வந்தது. அந்தக் கோபமெல்லாம் போலீஸ்காரர்கள் மேல் சென்றது.

அன்று, ராயவரத்தில் இருந்த ஒவ்வொரு போலீஸ்காரனும் சிறிது மார்பைப் பார்த்துக் கொண்டுதான் நடந்தான். சென்ற இரண்டு வருஷமாய் மூன்று தாலுகாக்களுக்குப் பீதியளித்து வந்த பெயர்பெற்றத் திருடனைப் பிடித்த விட்டோ மென்ற பெருமையை ஒவ்வொரு போலீஸ்காரனும் நன்கு ருசி பார்த்து அனுபவித்தான். அன்று அவ்வூரில் போலீஸ்காரர்கள் நடந்த நடையே ஒரு ஜோராகத்தான் இருந்தது.

இது மற்ற ஜனங்களுக்குப் பொறுக்கவில்லை. ஒரு சவடால் பேர்வழி ஒரு போலீஸ்காரனிடம் அணுகி, "ஸார்! பீடி பற்ற வைக்க வேணும், ஒரு நெருப்புக்குச்சி இருந்தால் தருகிறீர்களா?" என்று கேட்டான். போலீஸ்காரன் அவனை முறைத்துப் பார்த்தான். கூட்டத்திலிருந்த ஒருவன், "அடே! போலீஸ் புலி முறைக்கிறதடா!" என்றான். "புலியைப் பார் புலியை! ஒரு திருடனைப் பிடிக்க நாற்பது புலிகள் வேண்டியிருந்தது" என்றான் இன்னொருவன். "புலியா, பூனையா? நன்றாய்ப் பாரடா" என்றான் மற்றொரு ஹாஸ்யப்பிரியன். "சிவப்புத் தலைப்பாவைத்தட்டி எறியுங்கடா!" என்றான் வேறொருவன். "அவன் தலையிலே இரண்டு மலைப்பிஞ்சை வீசுங்கடா" என்று இன்னொரு குரல் கேட்டது. இதே சமயத்தில் இரண்டு மலைப்பிஞ்சுகள் எங்கிருந்தோ வந்து விழுந்தன.


*****

இந்தச் செய்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு எட்டவும், அங்கிருந்து போலீஸ் படைகள் அணியணியாகக் கிளம்பிப் பட்டணத்தின் முக்கிய வீதிகளில் 'மார்ச்' பண்ணலாயின. போலீஸ் படை வரும்போது ஜனங்கள் பக்கத்துச் சந்துகளிலே புகுந்து கொள்வார்கள். போலீஸ் படைபோனதும் உடனே பழையபடி தெரு வீதிகளில் வந்து கூட்டம் போடுவார்கள்.

இப்படி ரகளைப்பட்டுக் கொண்டிருக்கும்போது, முத்தையனுடைய ஊர்கோலமும் வந்து விட்டது. பூங்குளத்திலிருந்து அவனைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் ராயவரத்தை நெருங்கிய போது, இங்கிருந்து ரிஸர்வ் போலீஸ்படை போய் அவர்களுடன் சேர்ந்து கொண்டது. ஆகவே நாற்பது ஐம்பது போலீஸ்காரர்கள் புடைசூழ் முத்தையன் - இன்னும் ஸ்மரணையற்றிருந்த முத்தையன் - ராயவரத்தில் பிரவேசித்தான். இந்த ஊர்கோலம், ஸப்-ஜெயிலை நெருங்க நெருங்க ஜனக் கூட்டமும் அதிகமாகி வந்தது. இதற்குள்ளே சுற்றுப்புறத்துக் கிராமங்களிலிருந்தும் ஜனங்கள் வந்து சேர்ந்துவிடவே, கூட்டம் இருபதினாயிரம் முப்பதினாயிரம் என்று ஆகிவிட்டது. எல்லாரும் முத்தையனைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்ட காரணத்தினால், ஜனக்கூட்டம் போலீஸாரை மேலே போக முடியாமல் நெருக்கிற்று. போலீஸார் அவர்களை அதட்டி உருட்டி விலக்க வேண்டியிருந்தது. இந்தச் சமயத்தில் மறுபடியும் எங்கிருந்தோ எழெட்டுக் கற்கள் வந்து விழுந்தன. இதனால் போலீஸ்காரர்கள் ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கி பிரயோகம் செய்ய வேண்டியது அவசியமாயிற்று.

அவ்வளவுதான்! துப்பாக்கிச் சத்தம் கேட்டதோ இல்லையோ, ஜனங்கள் நாலாபுறமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள். குழந்தைகள் வீறிட்டன. ஸ்திரீகள் அலறினார்கள். ஆனால் பத்தே நிமிஷத்தில் அவ்வளவு கூட்டமும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது, முத்தையனுக்கு சிறிது உணர்வு வந்தது. அவன் உடனே, பக்கத்திலே கிடப்பதாக அவன் எண்ணிய ரிவால்வரை எடுக்கக்கையை நீட்டினான். ஆனால் கையை நீட்ட முடியவில்லையென்பதைக் கண்டான். கைகால் ஒன்றையும் அசைக்கமுடியாதபடி ஏதோ பாரத்தை வைத்து அமுக்கினாற் போல் இருந்தது. கண்ணைச் சிறிது திறந்து பார்த்தான். தன்னுடைய கைகளையும் கால்களையும் கட்டியிருப்பதாகத் தெரிந்தது. "இது என்ன ஆச்சரியம்?" என்று அவன் எண்ணமிடுவதற்குள்ளே மறுபடியும் ஸ்மரணையிழந்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக