புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்பவர்களின் உயிர் குடிக்கும் சிகரெட் உற்பத்தியாளர்கள் : எச்சரிக்கை படங்களில் ஏமாற்று வேலை


   
   
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Thu Nov 25, 2010 8:21 am











சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி, இனிமேல் புதிதாக யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. மத்திய, மாநில அரசுகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மாங்கு மாங்கென்று பிரசாரம் மேற்கொண்டும், புகைப்பவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.


கைது செய்தாலும் குற்றம் செய்கின்றனர் என்பதற்காக, குற்றவாளிகளைக் கைது செய்யாமலே விட முடியுமா? அதுபோல, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் பிரசாரத்தை தொடர்கின்றன.


நீண்ட நாட்களாகவே, சிகரெட் அட்டைகளின் முகப்பில், "புகை பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கு' என்ற வாசகம் அச்சிடப்பட்டு வந்தது. எழுதப் படிக்கத் தவறியவர்களும் புகை பிடிக்கத் தவறுவதில்லை என்பதால், எழுத்தால் மட்டுமின்றி, படத்தாலும் அதன் அபாயங்களை விளக்க முடிவு செய்யப்பட்டது.


2003ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம், "சிகரெட் அட்டைகளின் முகப்பில், புகைப்பதனால் ஏற்படும் தீமைகள் பற்றிய படங்களை வெளியிட வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றியது. இது, 2005ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதுவரை 171 நாடுகள், இத்தீர்மானத்தில் கையெழுத்திட்டு, அமல்படுத்தியுள்ளன.


உலகத்திலேயே கெட்டிக்காரர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா தான், இல்லையா? அதனால், 2008ம் ஆண்டு வரை இத்தீர்மானம் இங்கு அமல்படுத்தப்படவில்லை. ஒரு வழியாக ஒப்புக்கொண்ட பிறகும், அதில் எத்தனை ஏமாற்று வேலைகளை செய்ய முடியுமோ, அத்தனையும் செய்யப்பட்டுள்ளது.


"சிகரெட் பெட்டிகளின் முகப்பில், நோய் பிடித்த நுரையீரலின் படமும், எச்சரிக்கை வாசகமும் இடம் பெற வேண்டும். மொத்த பெட்டியின் அளவில் 40 சதவீதத்துக்கு குறையாமல் அந்த படம் இருக்க வேண்டும்' என, மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளில் படம் எப்படி போடப்பட்டுள்ளது என்பதையும், உள்ளூர் உற்பத்தியாளர்கள் என்ன செய்திருக்கின்றனர் என்பதையும், அருகில் அச்சாகியிருக்கும் படத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.


இந்திய சிகரெட் உற்பத்தியாளர்கள், அட்டைப் பெட்டிகளில் 40 சதவீதம் அளவுக்கு படம் போடுவதில்லை. அவ்வாறு போடும் படத்தையும், கறுப்பு - வெள்ளை அல்லது ஒற்றை நிறத்தில் ஒப்புக்கு போடுகின்றனர். அதையே, வெளிநாட்டு சிகரெட் உற்பத்தியாளர்கள், பாக்கெட்டின் 60 சதவீதம் அளவுக்கு, புகைப்பதால் ஏற்படும் கோரப் படங்களையும், வாசகங்களையும் அச்சிட்டுள்ளனர்.


பல வண்ணங்களில் உள்ள அந்தப் படங்களைப் பார்த்ததுமே, சிகரெட்டை எடுக்கும் கை ஒரு வினாடி தயங்கும். அத்தகைய படங்களை வெளியிடுவதன் நோக்கமே அது தான் என்பது, பார்ப்பவர்களுக்கு விளங்கும்.


இந்திய சிகரெட் உற்பத்தியாளர்களின் இந்த நடவடிக்கை பற்றி, இந்த திட்டத்தை அமலாக்குவதில் இறுதி வரை உறுதியாக இருந்த, அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: பாசமாக சொல்வதை விட, பயமுறுத்தும் வகையில் சொன்னால் தான் நாலு பேராவது கேட்பர். "புகை பிடித்தால் புற்றுநோய் வரும்' என்று சொன்னால் அலட்டிக் கொள்ளாத இளைஞர்கள் கூட, "ஆண்மை போய்விடும்' என்ற உண்மையைச் சொன்னால் அடக்கி வாசிப்பர். அபாய எச்சரிக்கை படங்களை அச்சிடுவதன் நோக்கமும் அது தான்.


புகையிலை பாக்கெட்களின் முகப்பில் படம் போட வேண்டும் என்றதும், அதன் உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்; அரசியல்வாதிகளைத் தூண்டிவிட்டனர்; பீடி தொழிலாளர்களைப் போராட்டத்தில் இறக்கினர். புகையிலை உற்பத்தியாளர்களின் வருமானம் பற்றி கவலைப்பட்ட அரசியல்வாதிகள், புகை பிடிப்பவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படவில்லை.


"இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது' என, தமிழக முதல்வர் கருணாநிதி உட்பட, ஆந்திரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநில முதல்வர்கள் எனக்கு கடிதம் எழுதினர். அதிகரித்த நெருக்கடி காரணமாக, அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஜெய்பால் ரெட்டி, கமல்நாத், ஆனந்த் சர்மா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், நான் உள்ளிட்ட அமைச்சரவைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.


இந்தக் குழுவிலும், எவருமே படங்களை வெளியிடுவதில் அக்கறை காட்டவில்லை. நான் தேர்வு செய்து வைத்திருந்த 150க்கும் மேற்பட்ட கோர படங்களை நிராகரித்து, சுமாரான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்தனர். இதற்கு மேல் நெருக்கடி கொடுத்தால், இந்த படங்களையும் நிராகரித்து விடுவார்களோ என பயந்து, வேண்டா வெறுப்பாக சம்மதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். இவ்வாறு விரக்தியுடன் கூறினார் அன்புமணி ராமதாஸ்.


அதுசரி, சிகரெட் பெட்டியை விட, பணப்பெட்டி கனமானது தானே!


- ஆர்.ரங்கராஜ் பாண்டே -

நன்றி-தினமலர்[img][/img]புகைப்பவர்களின் உயிர் குடிக்கும் சிகரெட் உற்பத்தியாளர்கள் : எச்சரிக்கை படங்களில் ஏமாற்று வேலை C:\Documents and Settings\sri rani\Desktopஷlarge_133425

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Nov 25, 2010 10:02 am

நல்லதொரு முயற்சி புகைப்பவர்களின் உயிர் குடிக்கும் சிகரெட் உற்பத்தியாளர்கள் : எச்சரிக்கை படங்களில் ஏமாற்று வேலை 677196

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 25, 2010 11:29 am

வரவேற்க்க த்க்க விடயம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக