புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Poll_c10சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Poll_m10சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Poll_c10 
5 Posts - 63%
Barushree

1 Post - 13%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Poll_c10சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Poll_m10சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Poll_c10 
59 Posts - 82%

4 Posts - 6%
Balaurushya
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Poll_c10சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Poll_m10சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை??

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 21, 2010 6:41 pm

First topic message reminder :

சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை??

காசி என்பது புண்ணிய தலம் என்று கேட்டு இருக்கிறோம். படித்து இருக்கிறோம்.அதற்கு மற்றுமொரு வரலாற்றுப் பதிவும் உண்டு. பாரதியைப் பற்றி எழுதும் அனைத்து இலக்கியவரலாறு படைத்த எழுத்தாளர்களும் எழுதுவது பாரதி காசியில் இருக்கும்போது மீசை வைத்துக்கொண்டார். மீசை வைத்துக் கொள்வத்ற்காகவா பாரதி காசி சென்றிருப்பார்.புலம் பெயர்ந்த சோகம். அங்கும் போலிகளின் பொய் புரட்டு இவை பாரதியை மீசை வைத்துக்கொண்டு எவருக்கும் அடங்காத காளையாகத் திரிய வைத்திருக்கும். பிற்காலத்தில் இது ஒரு வரலாறாகப் பதிவாகியது.

காசி பலரைத் தோற்றத்தில் மாற்றிய இடமாகும். துறவு பூண்டு வடதிசைச் சென்ற ஈரோட்டுப் பெரியாரின் தாடி வளரவும் காசியே போதி மரமாக இருந்ததுள்ளது. ஏனென்றால் இந்தமீசையும் தாடியும் வரலாற்றுப் பதிவு ஆகியுள்ளதே. இவற்றைப் பற்றி எண்ணும் போது திருவள்ளுவர்கூறிய,
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
என்ற குறள் நினைவுக்கு வராவிடில் நாம் தமிழராக இருக்க முடியாது.
தமிழகத்தைப் பொர்றுத்தமட்டில் மீசை எனறால் இருவருக்கு மட்டுமே என்றுநினைக்கும் நிலை. ஒன்று திருடனுக்கு. மற்றொன்று காவலருக்கு. இவர்களின் மீசை வரலாறுபடைத்து உள்ளது என்றால் அது மிகையாகாது. சரி மீசையைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை என்று நினைத்து விடாதீர்கள். மீசை என்றவுடன் நம் கண்களில் பளிச்சிடும் ஒரு நபர் வீரப்பன்.வீரப்பன் என்றவுடன் நம் நாசிகளில் வீசிடும் ஒரு மணம் சந்தனம். அதைப் பற்றி எழுதவே இத்தனை சுற்றி வளைப்பு.ஆமாம் பக்திமான் என்று தன்னை அடயாளப் படுத்திக் கொள்ள பலர் போடும் வேஷங்களின் முக்கிய இடம்பிடிப்பது சந்தனம். உடல் முழுவதும் சந்தனம் பூசிக்கொள்வதுஉடலுக்கும் நல்லது. பிறரிடம் நன் மதிப்பையும் பெற முடியுமே. சிலர் தன்னை சந்தனப்பொட்டுக்........என்று சொல்லிக்கொள்வது... திரைப்படங்களால் நாம் அறிந்ததே. பொதுவாகக் கேரள நாட்டிளம் பெண்கள் மிகவும் அழகாக இருப்பர். காரணம் அவர்களின் முகத்தில் சந்தனம் நின்று நிலவுவதாலோ என்றும் எண்ணத் தோன்றும். விழாக்களில் நம்மை மணத்தோடு வரவேற்கும் சந்தனத்தை இந்த பதிவில் நாம்வரவேற்போமா

இது விலை உயர்ந்தது என்பது நாம் அறிந்தது. ஆனால் எந்த அளவு பயன் உடையது? மருத்துவ குணம் உடையது, என்பது நம்மில் பலரும் அறியாதது. இந்தியாவில் காணப்படும் மரங்களில் மிகவும் விலை உயர்ந்தது சந்தன மரம். இதன் தாயகம் இந்தியாதான்.இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் இவை அதிகமாக காணப் படுகின்றன. நன்கு வளர்ச்சியடைந்த சந்தன மரமே வாசனை நிரம்பியது.
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Images?q=tbn:ANd9GcQzeZa4gdPQh3hZp6i9BeUDdU9ezR95Kr1kghVt1OFEdOvUnSmYFA
சந்தன மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து கொண்டது.இதில் இருந்து எடுக்கப்படும் அகர் என்னும் எண்ணெய் மருத்துவ குணம் கொண்டது. சருமத்திற்குக் குளிர்ச்சி தரக்கூடியது. சிவப்பு வெண்மை என்று மூன்று நிறத்தின் அடிப்படையில் சந்தன மரக்கட்டைகள் தரம் பிரிக்கப் படுகின்றன. நிறம் இவ்வாறு வேறுபட்டு இருந்தாலும் மருத்துவக் குணம் ஒன்று தான்.எனினும் செஞ்சந்தனம் சில சிறப்பு குணங்களைக் கொண்டு காணப்படுகிறது.

தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது.. தமிழகத்தில் தனிப் பெரும் மரமாகும். மாற்றடுக்கில் அமைந்த இலைகளையுடைய மரம். இலைகளின் மேற்பகுதி கரும்பச்சை நிறமாயும் அடிப் பகுதி வெளிறியும் காணப்படும். கணுப் பகுதியிலும் நுனிப் பகுதியிலும் மலர்கள் காணப்படும். உலர்ந்த நடுக் கட்டைதான் நறுமணம் உடையது. மருத்துவப் பயனுடையது. இதை காடில்லாத மற்ற இடங்களில் வளர்த்தால் அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்டவேண்டும். இதன் விலை மிகவும் அதிகம். இது நன்கு வளர்வதற்கு பக்கத்தில் ஒரு மரம் துணையாக இருக்க வேண்டும். 2-3 ஆண்டுகளில் பழம் விட ஆரம்பிக்கும். இந்தப் பழத்தைப் பறவைகள் உட்கொண்டு அதன் எச்சம் விழும் இடத்தில் விதை மூலம் நாற்றுக்கள் பரவும்.விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுப்பலன் கிடைக்கும்.

லேசான துவர்ப்பு சுவையும்குளிர்ச்சித் தன்மையும்கொண்டவை சந்தனக்கட்டைகள். உடலை தேற்றுதல் சிறுநீர் பெருக்குதல் வியர்வையை உண்டாக்குதல் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. சந்தனத்தைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். உடல் பலம் பெறும். ஆண்மைத்தன்மை அதிகரிக்கும். அறிவும் மன மகிழ்ச்சியும் உடல் அழகும் அதிகமாகும்.

மருத்துவ பயன்கள்:
சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச் சாற்றில் உரைத்து பசையாக செய்து ]பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவந்தால் படர்தாமரை வெண்குஷ்டம் முகப்பரு ஆகியவை குணமாகும். முகத்தில் இதை பயன்படுத்துவதால் அதில் வசீகரமும் அழகும் உண்டாகும். பன்னெடுங்காலமாக நம் நாட்டில் மைசூர் சாண்டில் சோப்புபயன்பாட்டில் உள்ளது இதனால் தானே.

ஒரு தேக்கரண்டி சந்தனத் தூளை அரை லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

சந்தனத்தை பசும்பாலில் உரைத்து சுண்டைக்காய் அளவுகாலை மாலை வேளைகளில் தொடர்ந்து 10 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடு தணியும்.

2 தேக்கரண்டி சந்தனத்தூளை அரை லிட்டர் குடிநீரில் இட்டு காய்ச்சி குடித்துவந்தால் காய்ச்சல் குணமாகும்

அதிகமாக சைட் அடிக்கும் ஆசாமிகளுக்கு கண்களில் கட்டி வருவது உண்டு.இந்த ஆசாமிகள் சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச்சாற்றில் நன்கு அரைத்து பசை போல் செய்து கண் கட்டிகள் மீது பற்று போட வேண்டும். இரவில் படுக்கைக்கு செல்வதற்குமுன்னர் இவ்வாறு செய்து காலையில் கழுவிவிட வேண்டும். 5 நாட்கள் தொடர்ச்சியாக இப்படிசெய்து வந்தால் கண் கட்டி குணமாகும். மீண்டும் விட்ட பணியைத் தொடரலாம்.

இன்னொரு பிரிவினர் எப்போதும் மதுவில் மோகம் கொண்டு ஃபுல்லில் தள்ளாடிக்கொண்டே இருப்பர். இவர்களுக்கு போதை இல்லை என்றால் வாழ்க்கையே இல்லாதது போல. இவர்களைஇப்பழக்கத்தில் இருந்து மாற்ற நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லிஎடுத்துக்கொண்டு அதில் சுண்டைக்காய் அளவு சந்தனவிழுதை கலந்து 40 நாட்கள் குடித்து வந்தால் மது மோகம் தீரும்.

சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Images?q=tbn:ANd9GcTXiE_w_i2xsrnAC510kVRl22xaec5hk_ifbnrC4SS8GW44n_ly

சந்தனத்தூள் 20 கிராம் எடுத்துக்கொண்டுஅதை 300 மில்லிலிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி 150 மில்லி லிட்டராகவடிகட்டி3 வேளையாக 50 மில்லி வீதம் குடித்து வர நீர்க்கோவை காய்ச்சல் சீரற்ற மார்புத் துடிப்பு மந்தம் இதய வலி ஆகியவை தீரும். இதயம் வலிவுறும்.

பலரைச் சங்கடப்படுத்தி வரும் பொது நோய் நீரிழிவு. இதற்கும் சந்தனம் தீர்வு தருகிறதாம்.. நெல்லிக்காய்ச் சாறு அல்லது கசாயம் மி.லி. யுடன் அரைத்த சந்தனம் கிராம் கலந்து நாள் காலைமாலை குடிக்க நீரிழிவு குணமாகும்.
பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை மாலை உட்கொண்டு வர சூடு,மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம் அழற்சி ஆகியவை தீரும்

பசும்பாலில் சந்தனக்கட்டையை உரைத்து புளியங்கொட்டை அளவு காலை மாலை சாப்பிட்டு வர வெட்டை சூடுமேக அனல் சிறுநீர் பாதையில் உள்ள ரணம் அழற்சி குணமாகும்..

மன ஆரோக்கியத்திற்கான பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் சந்தனத்தில் இருந்து தயாரிக்கப் படுகின்றன. கூந்தல் தைலங்கள் சோப்புகள், நறுமணப் பொருட்கள் தயாரிப்பில் சந்தனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

சரும பாதுகாப்புக்கு ஒன் அண்ட் ஒன்லி மருந்து சந்தனம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. உடலில் வரும் சிறிய வேர்க்குரு தொடர்ங்கி பெரிய கட்டிகள் வரை சந்தனத்தைக் கண்டால் அஞ்சி ஓடிடும். சந்தனக்கட்டையை பழச்சாற்றில் உரைத்து சொறி சிரங்கு தேமல் போன்ற தோல் வியாதிகளுக்குப் பூசலாம். சந்தனத்தை உடலில் பூசி வந்தால் சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தவிர்க்கலாம். தோலைக் குளிர வைத்து நோயை ஓட வைக்கும் காரணிகளில் சந்தனத்திற்கு நிகர்அதுவே.
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Images?q=tbn:ANd9GcRlNIwtLTxkD4nSllIjVwMGbswFG_o2dhcNH36nGlqJJeFFsXyPsA

சந்தனாதித் தைலத்தை தேய்த்து தலை முழுகி வந்தால் உடல் சூடு தணியும்.சந்தன எண்ணெய்-தைலம் எசன்ஸ் துளி பாலில் கலந்து குடிக்கஉடல் குளிர்ச்சிபெறும். சந்தன விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

சந்தனத்தை தலையில் அரைத்துபூசி வந்தால் சுரத் தலைவலி கோடைக்கட்டிகள் அதன் தழும்புகள் குணமாகும். மூளைக்கும் இதயத்துக்கும் உள்ள பலவீனம் சரியாகும். மொட்டைத் தலைக்கும் சந்தனத்திற்கும் உள்ள தொடர்பு நாம் அறிந்ததே.

இது ரொம்ப ரொம்ப முக்கியமானது. சந்தனத் துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் நாள் தோறும் உட்கொள்ள பால் வினை நோய் தந்திபேகம் பிரமேகம் கனோரியா பெண் நோய் என்று பலபெயர் பெறும் இவை யாவும் குணமாகி உடல் தேறி நோய் தீரும்.

ஏதோ சந்தனம் நோய்க்கு மட்டும் மருந்து என்று நினைக்கக் கூடாது.பொதுவாக
நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் சந்தனத்தை உடலில் பூசி அது நன்கு உலர்ந்த பின் குளித்து வரலாம். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் உடலில் பார்ப்பவர்களின் நெஞ்சினிக்கும் வசீகரமும் மினுமினுப்பும் வரும். மேலும் உடல் குளிர்ச்சி தன்மையைப் பெறும்
.

இன்னொரு ஜீம்பூம்பாவும் இதில் உள்ளது என்கிறார்கள். மருதாணி விதை சந்தனத்தூள் கலந்துசாம்பிராணிப் புகைபோல் போட பேய் பிசாசு விலகும் இது கேக்கவே அதிசயமாக உள்ளதா? அது விலகுதோ இலையோ நல்ல கிருமி நாசினி. அதனால்தான் பத்திகள் பெரும்பாலும் சந்தனத்தால் தயாரிக்கப் படுகின்றன.

இதையும் சொல்ல வேண்டியது என் கடமை. இப்போது பெரும்பான்மையான கடைகளில் கிடைக்கும் சந்தனப் பவுடரில் உலர்ந்த பட்டாணியை அரைத்துக் கலக்கிறார்களாம்.. அது உடலுக்குமேலும் அறிப்பு போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதாம். (தகவலுக்கு நன்றி திரு இராமகிருஷ்ணர்ன்).

ஒரு காலத்தில் சந்தனத்தை அரைக்கும் கல்லை வடநாட்டில் இருந்து கொண்டு வந்து சந்தனத்தை அரைத்துப் பயன்படுத்தினர் என்று சங்கப்பாடல் நெடுநல்வாடை கூறுகிறது.
”வடவர் தந்த வான்கேழ்வட்டம
தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்ப”

எனவே திரு இராமகிருஷ்ணனின்தகவலையும் மனத்தில் கொண்டு சந்தனத்தைக் கடையில் வாங்கிப் பயன் படுத்தாமல் வீட்டில்சந்தனக் கட்டையை வாங்கி வைத்துக் கொண்டு, கல்லில் அரைத்துப் பயன் படுத்தவும். அரைச்ச சந்தனம் மணக்கும் ரெடிமேட் வகையை விட. சிறந்தது.

பிறப்பு முதல் இறப்பு வரை இந்தச் சந்தனம் நம் வாழ்வில் இடம் பெறுகின்றது. செல்வந்தர்களைச் சந்தனக்கட்டையில் எரிக்கும்வ்ழக்கம் இருந்து வந்துள்ளது என்றால் சந்தனத்தின் உயர்வைச் சொல்லவும் வேண்டுமோ!!

நன்றி குமுதம் ஹெல்த்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 22, 2010 6:48 pm

Aathira wrote:இன்னொரு பிரிவினர் எப்போதும் மதுவில் மோகம் கொண்டு ஃபுல்லில் தள்ளாடிக்கொண்டே இருப்பர். இவர்களுக்கு போதை இல்லை என்றால் வாழ்க்கையே இல்லாதது போல. இவர்களைஇப்பழக்கத்தில் இருந்து மாற்ற நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லிஎடுத்துக்கொண்டு அதில் சுண்டைக்காய் அளவு சந்தனவிழுதை கலந்து 40 நாட்கள் குடித்து வந்தால் மது மோகம் தீரும்.
அருமையான பதிவு மிக்க நன்றி அக்கா , எனக்கு தெரிந்த ஒருவர் சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 182891 இருக்கிறார் , அவரை படிக்க சொல்கிறேன் சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 678642 சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 26, 2010 7:04 pm

சிவா wrote:தங்கத்தில் முகம் எடுத்து சந்தனத்தில் உடல் எடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ ...!!!

சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Sandal

சந்தனத்தின் மருத்துவக் குறிப்புகள், விளக்கங்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவைகள் அக்கா!
அது எனக்கு மிகவும் பிடித்த பாடல்..நன்றி சிவா. சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 26, 2010 7:23 pm

கலை wrote:சந்தனத்துக்கு இத்தனை மருத்துவக்குணங்களா என்று வியக்கவைக்கும் அருமையான பதிவு... நன்றி ஆதிரா..!
நன்றி கலை. சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Nov 27, 2010 1:04 am

எங்கிருந்தோ சந்தனத்தின் வாசம் உங்கள் எழுத்துகளின் வழியே எங்களை சுற்றி மணக்கிறது...

மிக்க மகிழ்ச்சி தங்களின் இந்த பயனுள்ள கட்டுரைக்கும்....

இன்னும் உங்களிடமிருந்து நிறைய கருத்துகளை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு...

மிக்க நன்றி...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 01, 2010 6:16 pm

ரபீக் wrote:தகவலுக்கு நன்றி அக்கா
நன்றி ரபீக். சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 154550

சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Aசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Aசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Tசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Hசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Iசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Rசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Aசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 01, 2010 6:17 pm

Thanjaavooraan wrote:அருமையான, பயனுள்ள இடுகை. சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 677196
நன்றி தஞ்சாவூரன் சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 154550

சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Aசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Aசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Tசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Hசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Iசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Rசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Aசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 01, 2010 6:18 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:நன்றி அக்கா....
நன்றி தமிழ்ஃப்ரியன் சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 154550

சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Aசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Aசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Tசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Hசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Iசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Rசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Aசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 01, 2010 6:19 pm

உதயசுதா wrote:சந்தனத்தை பற்றிய குறிப்புகள் அத்தனையும் அருமை அக்கா.
நன்றி.
நன்றி சுதா... சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 154550

சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Aசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Aசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Tசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Hசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Iசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Rசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Aசந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை?? - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக