புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசியல் தீர்வை மௌனப்படுத்த முன்னெடுக்கப்படும் நாடகமே ஆணைக்குழு விசாரணைகள் Poll_c10அரசியல் தீர்வை மௌனப்படுத்த முன்னெடுக்கப்படும் நாடகமே ஆணைக்குழு விசாரணைகள் Poll_m10அரசியல் தீர்வை மௌனப்படுத்த முன்னெடுக்கப்படும் நாடகமே ஆணைக்குழு விசாரணைகள் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசியல் தீர்வை மௌனப்படுத்த முன்னெடுக்கப்படும் நாடகமே ஆணைக்குழு விசாரணைகள் Poll_c10அரசியல் தீர்வை மௌனப்படுத்த முன்னெடுக்கப்படும் நாடகமே ஆணைக்குழு விசாரணைகள் Poll_m10அரசியல் தீர்வை மௌனப்படுத்த முன்னெடுக்கப்படும் நாடகமே ஆணைக்குழு விசாரணைகள் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அரசியல் தீர்வை மௌனப்படுத்த முன்னெடுக்கப்படும் நாடகமே ஆணைக்குழு விசாரணைகள் Poll_c10அரசியல் தீர்வை மௌனப்படுத்த முன்னெடுக்கப்படும் நாடகமே ஆணைக்குழு விசாரணைகள் Poll_m10அரசியல் தீர்வை மௌனப்படுத்த முன்னெடுக்கப்படும் நாடகமே ஆணைக்குழு விசாரணைகள் Poll_c10 
77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
T.N.Balasubramanian
அரசியல் தீர்வை மௌனப்படுத்த முன்னெடுக்கப்படும் நாடகமே ஆணைக்குழு விசாரணைகள் Poll_c10அரசியல் தீர்வை மௌனப்படுத்த முன்னெடுக்கப்படும் நாடகமே ஆணைக்குழு விசாரணைகள் Poll_m10அரசியல் தீர்வை மௌனப்படுத்த முன்னெடுக்கப்படும் நாடகமே ஆணைக்குழு விசாரணைகள் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் தீர்வை மௌனப்படுத்த முன்னெடுக்கப்படும் நாடகமே ஆணைக்குழு விசாரணைகள்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat 20 Nov 2010 - 5:47

2002 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுவரையான பட்டறிவிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களை, பலதரப்பிலிருந்தும் பதிவு செய்ய, நல்லிணக்க ஆணைக்குழுவொன்று விரைந்து செயற்படுகிறது. இக்குழுவில், தாம் கேள்விப்பட்ட விடயங்களை, சாட்சியாக முன்வைக்கும் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த மக்களுக்கான வாழ்வாதாரத் தேவையான உணவு மற்றும் மருந்து போன்றவற்றை அனுப்ப அரசு மறுத்த விவகாரத்தை மறைத்து விட்டார்.

பொது மக்களின் அழிவினை தடுக்கப்இ போரை நிறுத்துமாறு, அங்கு அடைப்பட்டு கிடந்த மக்களும் உலகத் தமிழர்களும் எழுப்பிய கூக்குரலை, தமது சாட்சியப் பதிவுகளை மிக நாசூக்காக தவிர்த்து விட்டார். அரச அதிகாரிகள், அரசியல்வாதிகளைவிட, பாதிப்புற்ற மக்களிடமிருந்து நேரடியான வாக்கு மூலங்களைப் பெறுவதே நேர்மையான ஜனநாயகமாகும். அதேவேளை பேரினவாதம் முன்னெடுக்கும் இத்தகைய நல்லிணக்க நாடகங்களைப் பெரிதுபடுத்துவது பொருத்தமானதல்ல. இறுதிப் போரில் வெள்ளை கொடியுடன் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் நீதிமன்ற விவகாரமாகியுள்ள ஒரு விடயத்தையிட்டு அரசாங்க அதிபர் ஒருவர், கேள்விப்பட்டதை வைத்து கருத்துக் கூறுவது, நீதிமன்றச் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமைந்துவிடாதா?

இவை தவிர பாதுகாப்பு வலயங்களென்று அரசால் சுட்டிக் காட்டப்பட்ட இடங்களுக்குச் சென்ற பொது மக்கள் மீது, எறிகணைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்ட சான்றுகள், புகைப்பட ஆதாரங்களோடு சர்வதேச பத்திரிகைகள் வெளியிட்டன. இந்நிலையில் கண்துடைப்பு ஆணைக்குழு நாடகங்கள், உண்மையான யதார்த்த நிலையை வெளிக் கொண்டு வராது என்பதனை புரிந்து கொள்வது கடினமான விடயமல்ல. சிறுபான்மை இனமென்று ஒன்று இல்லை, எல்லோரும் ஒரு தாய் ஈன்றெடுத்த மக்களென அரசு தரப்பு கூறும்போது, தேசிய இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது என்கிற நியாயமான கேள்வி எழுகின்றது. வட, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள், பூர்வீக தேசிய இனம் (NATIVE NATION) என்பதை, இதுவரை ஏற்றுக் கொள்ளாத பேரினவாத அரசியலாளர்கள், இன அடையாளங்களை அழித்தொழிக்கும் வகையில், திட்டமிட்ட குடியேற்றங்களை யாழ்.குடாவில் தீவிரப்படுத்தும் நோக்கங்களை புரிந்து கொள்வது கடினமானதல்ல.

வடக்கிலுள்ள காணிகள் அரசுக்குரியவையென்றும், எந்த இனத்திற்கும் உரிமையானதல்லவென்று கூறும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, பெரும்பான்மையின மக்களின் கரங்களில் ஆட்சியதிகாரம் இருக்கும் போது, நிலங்களின் சொந்தக்காரர் யார் என்பதை தெளிவாகவே உணர்த்துகின்றார். தொல் பொருள் திணைக்களம் பொறுப்பேற்றுள்ள, திருமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் பாதுகாப்புக் கடமையில் இராணுவம் ஈடுபடுவதோடு, அருகிலுள்ள சைவக் கோயில் மற்றும் முஸ்லிம் துறவி ஒருவரின் அடக்கத்தலம் போன்றவற்றில் வழிபாடு செய்யும் மத உரிமைகள், மக்களுக்கு மறுக்கப்படுவது, ஒருவகையில் கலாசார இன அழிப்பின் (CULTURAL GENOCIDE) புதிய பரிமாணமாகக் கொள்ள வேண்டும். அத்தோடு ஒரு தேசிய இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்கு முறைகள், தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் தனது கரங்களை நீட்டிச் செல்லும் என்பதை, கடந்த 3 ஆம் திகதி அனைத்துலக தொழிலாளர் சங்க சம்மேளனம் (THE INTERNATIONAL TRADE UNION FEDERATION) விடுத்த அறிக்கையிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை ஒன்றுக்கொன்று அதில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை அரசு, அதனை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது என அச்சம்மேளனத்தின் (ITUC) செயலாளர் நாயகமும், முன்னாள் அவுஸ்திரேலியா தொழிற்சங்க பேரவையின் தலைவருமான சரன் பரோ (SHARAN BURROW) தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வமைப்பின் அறிக்கையானது இலங்கை பொருளாதாரத்தில், புதுவகை அழுத்தங்களை உருவாக்கப் போகிறது என்கிற விடயத்தை அவதானிக்க வேண்டும். வழமை போன்று, இந்த அனைத்துலக தொழிலாளர் சங்க சம்மேளனத்துக்கு எதிராக, காட்டமான எச்சரிக்கையை, அரசில் உள்ள சில அமைச்சர்கள் விடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆனாலும் பின் கதவு வழியாக, சில சமரச முயற்சிகளை ராஜதந்திர வழியில் அரசு மேற்கொள்ளுமென்பதை ஊகித்துக் கொள்ளலாம். இந்த தொழிலாளர் நலன், குறித்த விடயத்துக்கும் 1976 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் வரிச் சலுகைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.

அண்மையில் அமெரிக்க தொழிற்சங்கங்கள் மற்றும் அமெரிக்கத் தொழிலாளர் அமைப்பும் (AFL-CIO) இணைந்து, இலங்கைக்கு எதிராக ஒரு மனுவினை, அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திடம் சமர்ப்பித்திருந்தன. இந்த மனு குறித்த நேரடியான தகவல்களைப் பெறுவதற்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் அளவில், அமெரிக்க நிபுணர் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்தது. இலங்øகயில் தொழிலாளர்களின் உரிமைகள் சர்வதேசத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத் திட்டத்திற்கு அமைவாக இருக்கின்றதா? அல்லது மீறப்படுகின்றதாவென்பது குறித்து, அமெரிக்க தொழிற்சங்கப் பிரதிநிதிகள் புலன் விசாரணைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது.

தொழிலாளர் உரிமை மீறப்படுவது நிரூபிக்கப்படுமாயின் அமெரிக்கா வழங்கும் ஜி.எஸ்.பி. ஏற்றுமதி வரிச் சலுகையை இலங்கை அரசு இழக்க நேரிடலாம்.

அதேவேளை, மனித உரிமைமீறல் விவகாரத்தை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஜி.எஸ்.பி. பிளஸ் (GENERALISED SYSTEMS OF PREFERENCES) ஏற்றுமதி வரிச் சலுகை, கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து நீக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. உலகளாவிய ரீதியில் அமெரிக்கா வழங்கும் வரிச் சலுகையால் 130 நாடுகள் நன்மையடைகின்றன. அதில் 3400 பொருட்களுக்கு தீர்வையற்ற (DUTY FREE) வரிச் சலுகை வழங்கப்படுகின்றது.

அமெரிக்காவின் வரிச் சலுகை முறைமையின் கீழ், 150 மில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதி சலுகையை இலங்கை பெறுவதை நோக்க வேண்டும்.

இச் சலுகை நிறுத்தப்படுமாயின், ஏற்றுமதித் துறையில் பணிபுரியும் 30,000 தொழிலாளர்கள் தமது வேலைகளை இழக்கும் துன்பியல் நிகழ்வுகள் இலங்கையில் நடக்கக்கூடிய வாய்ப்புண்டு.

ஆகவே அதிகரித்துச் செல்லும் இலங்கை- மேற்குலக முரண்பாடுகளை தணிப்பதற்கு, அமெரிக்கா நம்பிக்கைக் கொண்டுள்ள, அனுசரணையாளர் ஒருவரை கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று இலங்கை அரசுக்கு ஏற்பட்டிருப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். விடுதலைப் புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் இடையே சமாதான தூதுவராகவும், அனுசரணையாளராகவும் விளங்கிய, நோர்வேயின் சர்வதேச அமைச்சர் எரிக் சொல்ஹெயிமை, புதிய இராஜதந்திர அனுசரணையாளராகக் கையாள, இலங்கை அரசு தமது தூதுவர்களை களமிறக்கி இருப்பதனை காணக்கூடியதாகவுள்ளது.

ஆனாலும், புவிசார் அரசியலில் இதற்கான நடைமுறைச் சாத்தியப்பாடுகள் மிக அரிதாகவே தென்படுகிறது.
சாங்காய் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்விற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட சீன விஜயமும், இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவின் பயணமும், மேற்குலகத்தின் உடனான முரண்பாடுகளை தீர்ப்பதற்கு, எரிக் சொல்ஹெயிமை பயன்படுத்த, புதிய பாதையொன்றை திறக்க முற்படும் இலங்கை அரசின் காய் நகர்த்தல்களை ஓரங்கட்டிவிடும். அதேவேளை இந்த வாரம் வெளியிடப்பட்ட ஐ.நா. சபையின் மனித வள அபிவிருத்தி அறிக்கையில், 37 நடுத்தர அபிவிருத்தியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை, மனித அபிவிருத்தி சுட்டெண்ணில் (HUMAN DEVELOPMENT INDEX), மொத்தமுள்ள 161 நாடுகளில், 91 இடத்தை அது பிடித்திருக்கிறது. கடந்த இரு தசாப்த காலத்தில் மிகச் சிறியவீதமே, இந்த வளர்ச்சி இலங்கையில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை மீறல்கள் அதிகளவு அகதிகளை உருவாக்கியுள்ள நிலையில், மனித வள அபிவிருத்தி என்பது சாத்தியமானதல்ல என்பது தான் இவ்வறிக்கையை நுணுக்கமாக ஆராய்வு செய்யும்போது பெறக்கூடிய தகவல்களாக இருக்கிறது.

பூர்வீக தேசிய இனங்களின் மீது, ஏனைய பரந்து வாழும் சிறுபான்மை தேசிய இனங்களின் மீதும், பெரும் தேசிய இனவாத ஆட்சியாளர்கள் பிரயோகிக்கும் ஒடுக்குமுறைகளை வெறுமனே மனித உரிமை மீறல்களாகச் சித்தரிக்கும் போக்கு, ஒடுக்குமுறையாளர்களின் பேரினவாத சிந்தனைப் போக்கிற்கு பலம் சேர்ப்பதாகவே இறுதியில் மாறி விடும். அபிவிருத்தி என்கிற போர்வையில், சுரங்க பாதை அமைத்த மேல் கொத்மலை திட்டமானது, நூறாண்டு காலமாக அம்மண்ணை வளமாக்கி அந்நிய செலவாணிக்கு உரம் சேர்த்த மலையக தமிழ் தேசிய இனத்தின் வாழ் நிலையை, தலைகீழாக புரட்டி விடக்கூடிய அபாயம் உருவாக்கியுள்ளதை மறுக்க முடியாது.

இவை தவிர, பிரகடனப்படுத்தப்படாத இராணுவ நிர்வாகம், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில்

உறுதிப்படுத்தப்படுவதோடு, நாடெங்கிலும் நகரங்கள் தோறும், அதிரடிப்படை முகாம்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நிறுவன மயப்படுத்தப்படும் அரசியல்- இராணுவம் இணைந்த ஆட்சி முறைமையின் சொந்தக்காரர்கள், தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து உரையாட, அரங்கங்களை உருவாக்கலாம். ஒன்றுபட்டு வாருங்கள் என்று அறைகூவல் விடுக்கலாம்.

ஆனால் அது தீர்வினை முன்வைக்காது என்பதுதான் கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்கள் கூறும் வரலாற்றுச் செய்தி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக