புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அர்ஷின் நிழலில் Poll_c10அர்ஷின் நிழலில் Poll_m10அர்ஷின் நிழலில் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அர்ஷின் நிழலில் Poll_c10அர்ஷின் நிழலில் Poll_m10அர்ஷின் நிழலில் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அர்ஷின் நிழலில் Poll_c10அர்ஷின் நிழலில் Poll_m10அர்ஷின் நிழலில் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அர்ஷின் நிழலில் Poll_c10அர்ஷின் நிழலில் Poll_m10அர்ஷின் நிழலில் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அர்ஷின் நிழலில் Poll_c10அர்ஷின் நிழலில் Poll_m10அர்ஷின் நிழலில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அர்ஷின் நிழலில் Poll_c10அர்ஷின் நிழலில் Poll_m10அர்ஷின் நிழலில் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அர்ஷின் நிழலில் Poll_c10அர்ஷின் நிழலில் Poll_m10அர்ஷின் நிழலில் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அர்ஷின் நிழலில் Poll_c10அர்ஷின் நிழலில் Poll_m10அர்ஷின் நிழலில் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அர்ஷின் நிழலில் Poll_c10அர்ஷின் நிழலில் Poll_m10அர்ஷின் நிழலில் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அர்ஷின் நிழலில் Poll_c10அர்ஷின் நிழலில் Poll_m10அர்ஷின் நிழலில் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்ஷின் நிழலில்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Nov 22, 2010 11:33 am

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ {34} وَأُمِّهِ وَأَبِيهِ {35} وَصَاحِبَتِهِ وَبَنِيهِ {36} لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ {37}

அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தனது தாயையும், தனது தந்தையையும், தனது மனைவியையும், தனது பிள்ளைகளையும் விட்டு ஓடுவான். 80:33, 34




அர்ஷின் நிழலில்.

இதற்கு முந்தைய தொழுகை சம்மந்தமான கட்டுரைகளில் தொழுவதினால் ஏற்படும் இம்மை மறுமை நன்மைகளை நமக்குத் தெரிந்தவரை பட்டியலிட்டோம் இன்னும் நமக்குத் தெரியாமல் ஏராளமான நன்மைகள் அல்லாஹ்வின் வார்த்தைகள் அடங்கிய அருள்மறைக்குர்ஆனிலும், அண்ணல் நபி(ஸல்)அவர்களின் அறிவுப்புகளின் அறிவுச் சுரங்கத்திலும் குவிந்து கிடக்கின்றன.

முதல் அந்தஸ்து
ஒரு நாள் இவ்வுலகம் முழுவதும் உலகில் உள்ள அனைத்து வஸ்த்துகளும் அழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிப் போனவர்கள் அனைவரும் மீண்டும் எழுப்பப்பட்டு விசாரனை தொடங்கப் படுவதற்கு முன் நிழலில்லாத வெட்ட வெளியில் நிருத்தப்படும் பொழுது தகிக்கும் வெயிலிலும், கொதிக்கும் மணலிலும், பாதங்களை பூமியில் அழுத்தி நிற்க முடியாமல் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருப்பார்கள் அப்பொழுது உலகில் வாழ்ந்த காலத்தில் இறைவனுக்கு மிகவும் விருப்பமான நற்செயல்களில் ஈடுபட்டு வந்த ஏழு பேருக்கு அவன் தன்னுடைய பிரம்மான்டமான அர்ஷின் கீழுள்ள நிலழைக் கொடுத்து அமரச் செய்வான்.

இறைவனின் மிகவும் விருப்பமான அந்த ஏழு நற்செயல்கள்.

1. நீதியை நிலை நாட்டும் தலைவர்,
2. அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர்,
3. பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திக் கொண்டவர்,
4. அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்,
5. உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, அல்லாஹ்வை அஞ்சுகிறேன் என்றுக் கூறி விலகிக் கொள்பவர்,
6. தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர்,
7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்¡ர் சிந்துபவர். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஆதார நூல், புகாரி 660.

இறைவனுக்கு மிகவும் விருப்பமான மேற்காணும் ஏழு நற்செயல்களில் இளமையில் இறைவணக்கத்தில் ஈடுபடுவதும், பள்ளிவாசல்களுடன் உள்ளத்தைத் தொடர்பு படுத்திக் கொள்வதும் போன்ற இரண்டு நற்செயல்கள் தொழுகை சார்ந்தவைகளாக இருப்பதை கவனிக்க வேண்டும்.

இளமைக் குன்றி முதுமைத் தோன்றி.
இளங்கன்று பயமறியாது என்பதுபோல் அதிகமானோர் இளமையில் தான் தன்னையும், தன் சமுதாயத்தையும் அழிவில் ஆழ்த்தும் ஆரோக்கியமற்ற செயல்களில் மூழ்கி அற்ப ஆனந்தமடைவார்கள் படைத்தோனை நினைத்து பள்ளிவாசல் பக்கமே போக மாட்டார்கள். இளமைத் தேய்ந்து முதுமைத் தோன்றியதும் கைத்தடியின் துணையுடன் தட்டுத் தடுமாறி பள்ளிவாசலை நோக்கி நடப்பார்கள். அன்று பள்ளிவாசல்களைப் பார்த்தால் முதியோர் இல்லமா ? பள்ளிவாசலா ? என்று நினைக்கத் தோன்றும்.

இப்படிப்பட்டவர்களின் மத்தியில் மிகச்சில இளைஞர்களின் முகத்தில் முடிகளின் அரும்பு மலர்வதற்கு முன் உள்ளத்தில் படைத்தோனின் அச்சம் மலர்ந்திருக்கும்.

இப்படிப்பட்ட இறையச்சமுடைய இளைஞர்களே தானும் ஒழுக்கம் பேண வேண்டும், தன்னைப் பார்த்து பிறரும் நல்லொழுக்கம் பேண வேண்டும் என்ற நற்சிந்தனையுடன் நல்லொழுக்கத்திற்கு முன்மாதிரியாகி விடுவார்கள்.

தங்களின் வாழ்க்கைக்குத் தேவையானதை மட்டும் உலக வளங்களில் கவனம் செலுத்துவார்கள், தங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு மீதமுள்ளதை தேவையுடையோருக்கு கொடுத்துதவி மணம் மகிழ்வார்கள்.

வேலை நேரம் போக ஓய்வு நேரத்தில் இறைவனுக்கு குறைவின்றி இறைவணக்கம் செலுத்துவதுடன், சமுதாயப் பணிகள் புரிவார்கள்.

என்டர்டெயின்மென்ட் என்று இரவுப் பகலாக மூழ்கி இளமையைத் தொழைத்து பல்லையும், சொல்லையும் இழந்து, நரம்புகள் நாட்டியமாடத் தொடங்கியப் பின் பள்ளிவாசலை நோக்கி நடப்பவர்கள் மத்தியில் இதுப் போன்ற இறையச்சமுடைய இளைஞர்களின் இறைவணக்கத்துடன் கூடிய நற்செயல்களே யாரும், யாருக்கும் உதவ முடியாத, தன்னைத் தானேக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத அந்த கடினமான நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் கீழுள்ள நிழலுக்கு இழுத்துச் செல்கிறது.

பள்ளிவாசலுடனான தொடர்பு
இதுப் போன்ற இறையச்சமுடையவர்களே தொழுது முடித்து பள்ளிவாசலை விட்டு வெளியேறியதும் அடுத்த தொழுகைக்காக பள்ளிவாசலுக்குள் நுழையும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள்.

ஒருத் தொழுகையிலிருந்து அடுத்த தொழுகையை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாலும், ஒரு தொழுகையிலிருந்து அடுத்த தொழுகைக்கு மத்தியில் சிறிது கால இடைவெளியே இருப்பதாலும் இவர்களை பாவகாரியங்களில் தள்ளுவதற்கான கால அவகாசம் ஷைத்தானுக்கு போதுவதில்லை. ஷைத்தானை தூரப் படுத்துவதற்கும் மேற்காணும் இளமையிலான இறையச்சமும், பள்ளிவாசலுடனானத் தொடர்பும் வேலியாக அமைகிறது.

இதுப்போன்ற இறையச்சமுடையவர்கள் பள்ளிவாசலுடன் உள்ளத்தை தொடர்பு படுத்திக்கொள்பவர்கள் மனிதநேயமிக்கவர்களாக இருப்பார்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி செலுத்த தவறுவதில்லை, அப்பாவிகளை பாதிப்புக்குள்ளாக்குவதில்லை, ...நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! 5:8 என்ற அல்லாஹ்வின் வாக்கு அநீதி செலுத்துவதிலிருந்து அவர்களை தடுத்து விடுகிறது,

ஷைத்தானின் தோழர்களை தங்களின் நன்பர்களாக்கிக் கொள்ளத் துணிவதில்லை, ஏற்கனவே இருந்தாலும் தாமதமின்றி அல்லாஹ்வுடைய மார்க்கத்தை குறைவின்றி பின்பற்றுவதற்காகவும், அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காகவும் உற்ற நண்பர்களாக இருந்தோரில் (இறைவனை) அஞ்சி, நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருந்தோரைத் தவிர (மற்றவர்கள்) அந்நாளில் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருப்பார்கள். 43:67 என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கை காரணமாக அவர்கள் பிரிந்து விடுவார்கள்.

ஒழுக்கங்கெட்டப் பெண்கள் விரிக்கும் விரச வலையில் வீழ்ந்து விட மாட்டார்கள், வீழ்த்தவும் துணிய மாட்டார்கள் இளமை காலத்தில் இறையச்சத்துடன் இறைவணக்கம் செலுத்துபவர்களை விபச்சாரம் போன்ற கொடிய தீமையிலிருந்து இறைவன் தடுத்து விடுகிறான். அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்) இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார். 12:24. என்று இறைவன் கூறுவது இறையச்சமுள்ள இளைஞர் யூசுப் (அலை) அவர்களைப் பற்றியதாகும் யூசுப் (அலை) அவர்கள் அழகின் பொக்கிஷம் அவர்களின் அழகில் மயங்கிய ராஜகுமாரி விரித்த விரச வலையில் விழாமல் ஓடினாலும் அவள் அவரை விடாமல் விரட்டியதில் விழப் போன யூசுப் (அலை) அவர்களை விழ விடாமல் இறைவன் தாங்கிப்பிடித்தான்.

இதுப்போன்ற இறையச்சமுடையவர்களே பிறருக்கு உதவும் பணிக்காக உலகில் பாராட்டுதலை எதிர்பாராமல் மறுமையின் கூலியை மட்டும் எதிர்பார்த்து அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். 2:262. எனும் அல்லாஹ்வின் வாக்கை மதித்து வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் செய்திடுவார்கள்.

தன்னையும் ஏனைய உயிரினங்களையும் உரிய வடிவம் கொடுத்து படைத்து இந்த பூமி என்றக் கோளை வாழ்வதற்கு தேவையான வசதிகளுடன் வடிவமைத்துக் கொடுத்த வல்லோன் அல்லாஹ்வின் பேராற்றலை தனிமையிலும் நினைத்து கண்ணீர் மல்க நன்றி செலுத்துவார்கள். வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன. 2:164

அர்ஷின் நிலலை பெற்றுத் தரும் ஏழு நற்செயல்களில் இரண்டு நற்செயல்கள் தொழுகை சார்ந்ததாக இருப்பதால் தொழுகையின் அந்த இரண்டு நற்செயல்கள் மற்ற ஐந்து நற்செயல்களின் பால் இழுத்துச் செல்கிறது இதுவே யாரும் யாருக்கும் உதவ முன் வரமுடியாத அந்த கடினமான வெப்பத்தில் அல்லாஹ்வின் அர்ஷின் கீழுள்ள நிழலுக்கு தகுதி உடையவர்களாக ஆக்குகிறது. அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தனது தாயையும், தனது தந்தையையும், தனது மனைவியையும், தனது பிள்ளைகளையும் விட்டு ஓடுவான். 80:33, 34

ஒரு காலத்தில் முதியோர்களாக முதல் ஒரு வரிசையில் மட்டும் நின்று தொழுத காலம் மாறி இன்று அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் இளைஞர்களால் பள்ளிவாசல்கள் நிறைந்து, பள்ளிவாசலுக்கு வெளியிலும் தொழும் நிலை காணப்படுகிறது அல்லாஹ்விற்கேப் புகழ் அனைத்தும்.

தொழுகையைப் பேணுதலுடன் தொழுதும், ஒருத் தொழுகையிலிருந்து அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்திருந்தும், அதன் மூலமாக ஏராளமான தீமைகள் தடுக்கப்படவும், அதன் மூலமாக அல்லாஹ்வின் அர்ஷின் நிழலுக்குப் பாக்கியமிக்கவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக !





وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 22, 2010 12:54 pm

மிகவும் அருமையான இடுகை. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் அர்ஷின் நிழலில் 154550 அர்ஷின் நிழலில் 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக