புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
59 Posts - 55%
heezulia
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
54 Posts - 55%
heezulia
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_m10அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 8:43 am

கடல் என்றாலே மனதுக்குள் இனம் புரியாத ஒரு ஆச்சரியம் அல்லது பய உணர்வு ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் ஏற்படும். 1070 கி.மீ. நீளமுள்ள தமிழக கடற்கரையில் ஒவ்வொரு தமிழரும் ஏதாவதொரு காரணத்திற்காக சில முறையாவது செல்கிறோம். கால் நனைக்கவோ, பீச்சில் குடும்பத்துடன் அமர்ந்து குதூகலமாக பேசி மகிழவோ, குளிக்கவோ என எதற்கு சென்றாலும் சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் உங்களுள் ஒருவரை கடலின் அலைகளுக்கு எளிதாக பலியாக்கிவிட்டு வீடு திரும்ப வேண்டியிருக்கும்.

ஒரு சாதாரண நிகழ்வாக ஒவ்வொரு பண்டிகை தினத்திலும் எங்காவது ஒரு கடற் கரையில் ஒரு உயிர் பறிபோய்க் கொண்டே இருக்கிறது. இந்தச் செய்தி தொகுப்புகளை ஆராய்ந்து பார்த்தால் அப்படி இறந்துபோகும் சராசரி வயதினர் பெரும்பாலும் குழந்தை களோ பெரியவர்களோ பெண்களோ அல்ல. அடுத்த கட்ட கனவை மனதில் சுமந்து தன் குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாய் விளங்கும் இளைஞர்களே அந்த சில நிமிட அமிழ்தலில் ஒட்டுமொத்த வாழ்க்கையையும், தன் பெற்றோரின் கனவையும், அலைகளில் கரைத்து விடுகிறார்கள்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை எந்த கடற்கரையில் வேண்டுமானாலும் சென்று பாருங்கள். ஏதாவது ஒரு இளைஞர்கள் கூட்டம் கடலில் உற்சாகத்துடன் குளித்து கொண்டு இருக்கும். காணும் பொங்கல், புத்தாண்டு, தீபாவளி, ஆடிப்பெருக்கு என எந்த பண்டிகை தினமானாலும் சரி, புகழ்பெற்ற புனித தலங்களான ராமேஸ்வரம், வேளாங் கண்ணி மற்றும் திருச்செந்தூர் போன்ற இடங்களில் நடைபெறும் திருவிழாக்களாக இருந்தாலும் சரி தமிழரின் ஒவ்வொரு முக்கிய விசேஷங்களிலும் கடற்கரைகளில்தான் பெரும் கூட்டம் கூடுகிறது.

சுற்றுலாவில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் கடலில் குளிக்கும்போது இன்னும் சற்று ஆழமாய் சென்றால் ஏற்படும் சாகச உணர்வுக்காக அலையில் விழுந்து சிலர் உயிரை தொலைக்கிறார்கள். சில மணி நேரங் களுக்குப் பிறகு அதே இடத்திற்கு வருபவர்கள் முந்தைய பலியைப் பற்றி அறியாமல் மீண்டும் இந்த பாதுகாப்பற்ற ஆபத்தான விடுமுறை கொண்டாட்டத்தை தொடர் கிறார்கள். கடல் அலைகளில் சென்று விளையாடும் ஆர்வம் உள்ள அளவுக்கு அதில் உள்ள ஆபத்துகளை தெரிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்கவும் தெரிந்து கொள்வது அவசியமாகும். எனவே தமிழக கடல் அலைகளின் தன்மையை பற்றியும் உயிர்காக்கும் சில பாதுகாப்பு முறைகளை பற்றியும் பார்ப்போம்.

பொதுவாக கடலில் தொடர்ந்து அடித்துக் கொண்டு இருக்கும் அலைகளின் காரணமாக கடல் நீர் கரைக்கு தள்ளப்பட்டு மீண்டும் இழுக்கப்படுகிறது. இந்த தொடர்ச்சியான நிகழ்வால் மேற்பரப்பில் உள்ள கடல் நீர் கரை நோக்கியும், அடிப்பரப்பில் உள்ள கடல்நீர் கடல் நோக்கியும் ஓடிக்கொண்டு இருக்கும். கடற்கரையில் உங்களை நோக்கி வரும் அலைகளை ரசித்து கொண்டு இருக்கும்போது காலடியில் உள்ள மணல் வேகமாக அரித்து செல்லப்பட்டு கால் மண்ணுக்குள் புதைவதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். அதற்கு காரணம் இந்த அடிப்பரப்பு நீரோட்டமே ஆகும். இதற்கு ஆங்கிலத்தில் அண்டர்டோ கரண்ட்ன்ட்ஸ் (undertow currents) என்று பெயர்.

மேற்பரப்பில் வரும் அலைகளின் சக்தியோடு ஒப்பிடும்போது இந்த அடிப்பரப்பு நீரோட்டம் சக்தி குறைந்தது. எனவே கடற்கரையில் நின்று கொண்டு இருக்கும் ஒருவரை நீண்ட தூரம் ஆழத்திற்கு இழுத்து செல்லும் அளவுக்கு இதற்கு பொதுவாக பலம் இருப்பதில்லை. ஆழம் குறைவான இடத்தில் நிற்கும் நீச்சல் தெரியாத ஒருவரை பெரிய அலை கீழே தள்ளுகிறது என வைத்துக் கொள்வோம். மேற்பரப்பில் தொடர்ந்து வரும் அலைகள் அவரை மீண்டும் எழவிடாமல் தள்ளிவிட்டுக் கொண்டே இருக்கும். அப்போது ஏற்படும் பய உணர்வில் வாய் மற்றும் மூக்கு வழியாக கடல்நீர் விழுங்கப்படுவதால் மயக்கம் ஏற்பட்டு இறக்க நேரிடுகிறது.

பெரும்பாலும் கடலில் மூழ்கி இறப்பவர்கள் நல்ல ஆரோக்கியமான இளைஞர்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். கடல் அலைகளின் இயல்பை புரிந்து கொள்ளாமல் அதில் சிக்கி கொள்வதாலேயே நன்றாக நீச்சல் தெரிந்த இளைஞர்கள் கூட உயிரை விடுகின்ற னர் என்பதுதான் உண்மை. எனவே அலைகளின் சில அடிப்படை இயல்புகளை பற்றி பார்ப்போம்.

சாதாரணமாக பார்த்தால் அலைகள் தொடர்ந்து கரையில் அடித்துக்கொண்டு இருப்பது போல்தான் தோன்றும். ஆனால் அலைகள் ஒரு குழுவாகவே எப்போதும் கரைக்கு வரு கின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஆறு முதல் எட்டு அலைகள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக கரையில் வந்து அடிக்கின்றன. பிறகு ஏறத்தாழ ஒரு நிமிடத்திற்கு அலைகளின்றி இருக்கும் அமைதியைத் தொடர்ந்து அடுத்த அலை கரையில் வந்து மோதும். அடுத்த முறை நீங்கள் கடற்கரைக்கு செல்லும்போது இதை கூர்ந்து கவனித்து பார்த்தால் அலை களின் இந்த குழு அமைப்பு உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். கடலில் குளிக்கும் போது இந்த அலைக்குழுவின் சிறு அலைகளை பார்த்து சற்று ஆழத்திற்கு செல்லும்போது இந்த பெரிய அலைதான் பலமாக அறைகிறது.

இரு அலைக்குழுக்களுக்கு இடைப்பட்ட குறுகிய அமைதியான நிலையை நம் மீனவர்கள் அற்புதமாக கண்டுபிடிப்பார்கள். இந்த துல்லிய கணக்கீட்டு திறனால் அடுத்த அலைக்குழு கரையில் மோதுவதற்குள் வேகமாக படகை தள்ளிக்கொண்டு கடலுக்குள் சென்றுவிடு வார்கள். அதே முறையை பயன்படுத்திதான் கரைக்கும் திரும்புவார்கள். அதனால்தான் ரொம்ப தூரம் கடலில் இருந்து திரும்பி வரும் மீனவர்கள் அலைகள் மோதும் கரைப் பகுதிக்கு வந்தவுடன் சிறிது நேரம் காத்திருந்து லாவகமாக கரையேறுவார்கள். இது இயற்கை அன்னையிடம் அவர்கள் கற்ற நுணுக்கமான பாடங்களில் ஒன்றாகும். அந்த சில சாகச நொடிகளில் சிறிய பிழை நேர்ந்தால்கூட படகும், மீன்பிடி வலையும் அலை களால் தூக்கிவீசப் பட்டுவிடும்.


இந்த அலைக்குழு இடைவெளியை கடக்க முயலும்போது நான் உயிர் தப்பிய சம்பவத்தை பற்றி இங்கு சொல்ல விரும்புகிறேன். கடலின் மீது இருந்த ஈடுபாட்டால் 2007-ம் ஆண்டு ராமேசுவரத்தில் இருந்து சென்னை வரை ஒரு சிறு பிளாஸ்டிக் துடுப்பு படகில் தனியாக பயணம் மேற்கொண்டேன். தமிழக கடல் முழுவதையும் நேரில் உணர வேண்டும் என்ற உள்ளுணர்வால் துவங்கிய இந்த பயணம். எனக்கு தெரிந்த சில கடற்சூழல் விஷயங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டு கடற் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு பயணமாக அமைந்தது. ஒரு நாளைக்கு பதினைந்து முதல் இருபது கிலோமீட்டர் பயணம் செய்து கடலோர கிராமங்களில் இரவு தங்கி மக்களிடம் பேசி அடுத்த நாள் பயணத்தை தொடர்ந்தவாறு பயணம் செய்து கொண்டு இருந்தேன்.

கோடியக்கரை வரை அமைதியாக இருந்த இந்த பயணம். அதற்கு பிறகு மிக கடினமாக மாறத் தொடங்கியது. அன்றைய பயணத்தின் முடிவில் நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த கிராம கடற்பகுதியில் சுமார் 500 மீட்டர் தூரத்தில் கரைக்கு வருவதற்காக படகை செலுத்திக் கொண்டிருந்தேன். அன்று கடலும் இயல்பைவிட மிக சீற்றமாகவே இருந்தது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல நான் புத்தகங்களில் படித்து இருந்ததைவிட அலைகள் மிக பிரமாண்டமாக வந்துகொண்டு இருந்தன. சரியான அலைக்குழு இடைவெளியை கணித்து கரையோரத்தில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் வரச்சொல்லி சமிக்கை செய்தனர். துடுப்பை வேகமாக தள்ளி கரையை நோக்கி வந்துகொண்டு இருந்தபோது திடீரென ஒரு உயரமான அலை எனக்குப் பின்னால் துரத்த தொடங்கியது. அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் அந்த அலை படகை தலைகீழாக தூக்கத் தொடங்கியது. படகு என் கட்டுப்பாட்டை இழந்தபோது அந்த பெரிய அலை தலைகீழாக என்னை படகுடன் கடலுக்குள் அழுத்தியது. படகையும் என்னையும் பிணைத்து வைத்திருந்த கயிறு என் இடுப்பை நன்றாக சுற்றிக் கொண்டது. வாயிலும் மூக்கிலும் வேகமாக மணல் கலந்த தண்ணீர் ஏறிக்கொண்டு இருக்க கவிழ்ந்த படகின் அடியில் தலைகீழாக தொங்கி கொண்டு இருந்தேன்.

நல்ல வேளையாக அடுத்த அலை தாக்கியவுடன் கயிறை அறுத்துக் கொண்டு படகு என்னை விட்டு விலகி சென்றது. சில நிமிடங்களுக்குப் பிறகு கரையை நோக்கி நீந்தி வந்து சேர்ந்தேன். உயிரை காக்கும் லைப் ஜக்கேட் (மிதவை உடை) அணிந்து இருந்ததால் என்னால் சுலபமாக பிழைக்க முடிந்தது. இதுபோன்று முன்னறிவிப்பு இன்றி திடீரென வரும் பெரிய அலைகள் எந்த ஒரு அலைக்குழுவிலும் சேர்வதில்லை. இவற்றை ஆங்கிலத் தில் ஸ்லீப்பர் வேவ்ஸ் என்று சொல்வார்கள். இந்த பெரிய முரட்டு அலை சாதாரண அலைக்குழுக்களைவிட வேகமாக கரையைத்தாக்கும். அந்த சமயத்தில் குளிக்கும் அப்பாவிகளின் பாதுகாப்பிற்கு இந்த முரட்டு அலை எந்த உத்திரவாதமும் தருவதில்லை. மெரினா கடற்கரை, மகாபலிபுரம், புதுச்சேரி மற்றும் கன்னியாகுமரி கடற்கரைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் இந்த வகை அலையில் சிக்கி இறந்துள்ள சம்பவங் களும் நடந்துள்ளன.

தமிழகத்தின் கடலோரங்களில் உள்ள முக்கியமான சுற்றுலா மையங்களில் அலைகளின் அமைப்பு எல்லா இடங்களிலும் எல்லா மாதங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கரையின் அமைப்பை பொருத்தும் கால நிலைகளை பொருத்தும் இது மாறக்கூடியது. மிகவும் சரிவாக கரைகள் இருந்தால் பெரிய அலைகள் நேரடியாக கடற்கரை வரை வரும். எனவே இவை ஒற்றை அலை கடற்கரைகள் ஆகும். மீனவர்கள் இதை புனுவுக்கடல் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு மெரினா மற்றும் பாண்டிச்சேரி கடற்கரைகளை சொல்லலாம்.

ஆனால் தமிழகத்தின் வேறு சில இடங்களில் கடற்கரை மிதமான சரிவுடன் காணப்படும். இந்த பகுதிகளில் பெரிய அலைகள் தூரத்திலேயே நின்றுவிடுவதால் கரையை நோக்கி சிறிய மற்றும் நடுத்தர அலைகள் மட்டுமே வரும். மீனவர்களை இதை தரைக்கடல் என அழைப்பார்கள். உதாரணத்திற்கு வேளாங்கண்ணி மற்றும் வேதாரண்யம் கடற்கரையை சொல்லலாம்.


தகவல் - டாக்டர் வே.பாலாஜி, கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர், தஞ்சாவூர்.



அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 14, 2010 2:47 pm

பொதுவாக அலைகளை மீனவர்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். வட மற்றும் மத்திய தமிழக மீனவர்கள் இதை வாவட்டம் அல்லது மோத்தா என்று அழைக்கிறார்கள். இதில் வாவட்டம் என்பது அலைவாயின் வட்ட அளவை குறிக்கின்றது. பெரிய வாவட்டமாக இருக்கின்றது என மீனவர்கள் குறிப்பிட்டால் அன்று கடல் சீற்றத்துடன் இருக்கிறது என்று அர்த்தம். எனவே கடலில் குளிக்க செல்லும்முன் அங்குள்ள மீனவர்களிடம் கேட்டுவிட்டு செல்வதே பாதுகாப்பான தாகும்.

தென்மேற்கு பருவக்காற்று வீசும் ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் கன்னியாகுமரி முதல் தனுஷ்கோடியின் தென்கடற்பகுதி வரையிலான கடற்கரைகளில் குளிக்கச் செல்லாமல் இருப்பது நல்லது. இந்த காலங்களில் வீசும் பலத்த கடல் காற்றினால் கடல் அலைகள் ஆபத்தானவையாக இருக்கும். மீனவர்கள் இதை தென்னங்காற்று என அழைக்கிறார்கள்.

அதேபோல் தமிழகத்தின் சென்னை முதல் கோடியக்ககரை வரையிலான கடற்பகுதி வடகிழக்கு பருவக்காற்று வாடைக் காற்று வீசும் காலங்களில் மிகவும் சீற்றத்துடன் இருக்கும். எனவே அக்டோபர் முதல் ஜனவரி வரை சென்னை, மகாபலிபுரம், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மற்றும் கோடியக்கரை வரை உள்ள கடற்பகுதிகள் குளிக்க ஏற்றவை அல்ல. இதை தவிர்த்து மற்ற மாதங்களில் குளிக்க சென்றாலும் சில அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினால் கடல் குளியல் ஒரு நல்ல பொழுதுபோக்கு மகிழ்ச்சியைத் தரும்.

காலை பொழுதில் நீங்கள் கடற்கரைக்கு குளிக்க செல்கின்றீர்கள் என வைத்து கொள்வோம். நீங்கள் நின்று கொண்டிருக்கும் மேடான பகுதியில் இருந்து பார்க்கும்போது அலைகள் அடித்து கொண்டு இருப்பது நன்றாக உங்களுக்கு தெரியும். எனவே அலைகள் குறைவாக உள்ள பகுதிக்கு சென்று குளிக்கலாம் என பார்வையை சுற்றிலும் வீசினால் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியே கடற்கரையில் ஒரு இடத்தில் மட்டும் சுமார் 50 மீட்டர் அகலத்திற்கு அலைகள் இன்றி அமைதியாக இருக்கும். இந்த அமைதியான பகுதியின் இரண்டு புறமும் வழக்கம்போல அலைகள் அடித்துக்கொண்டு இருக்கும். அந்த அமைதிப்பகுதியில்தான் ஆபத்து ஒளிந்திருக்கும்.

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தபடி சாதாரணமாக அலைகளால் கரைக்கு அடித்து வரும் தண்ணீர் அடிப்பரப்பு நீரோட்டமாக மாறி மீண்டும் கடலுக்குள் செல்கிறது. ஆனால் சில நேரங்களில் கடலின் அருகருகே ஒரு இடத் தில் பெரிய அலைகளும் மற்றொரு இடத்தில் சாதாரண அலைகளும் ஏற்பட்ட போதும் கடல் காற்று இயல்பைவிட வேகமாக இருக்கும் போதும் அதிக அளவிலான கடல்நீர் கரையை நோக்கி தள்ளப்படுகிறது.

இதனால் கரைபகுதியில் சேரும் கடல்நீரின் அழுத்தம் அதிகரிக்கிறது. எனவே இந்த கடல்நீர், அலைகளை கிழித்து கொண்டு ஒரு அதிவேக நீரோட்டமாக மாறி கடலுக்குள் திரும்ப ஓடுகிறது. இதற்கு அலைவெட்டு நீரோட்டம் (அலையை குறுக்காக வெட்டி செல்லும் நீரோட்டம்) என்று பெயர். அதன் வேகம் ஒரு வினாடிக்கு சுமார் இரண்டு அடி முதல் எட்டு அடிவரை இருக்கும். இதை கரையில் இருந்து பார்க்கும் கடல் அனுபவம் இல்லாத ஒருவர் அலைகள் இல்லாமல் இருப்பதால் பாதுகாப்பாக குளிக்கலாம் என நினைத்து இடுப்பளவு இறங்கினால்கூட சில வினாடிகளில் ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவார். குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு இதை பற்றி விழிப்புணர்வு இல்லாததால் எளிதாக சிக்கி கொள்கின்றனர்.

அலைவெட்டு நீரோட்டம் ஒருவரையும் தண்ணீருக்குள் அழுத்தி மூழ்கடிப்பதில்லை. இவை கடலுக்குள் வேகமாக இழுத்துதான் செல்கின்றன. நீச்சல் தெரியாத ஒருவர் இடுப்பளவு ஆழத்தில் இருந்து மிக ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்படும்போது அவர் தானாகவே மூழ்கிவிடுகிறார்.

ஒலிம்பிக் நீச்சல் வீரராக இருந்தாலும் இந்த அலைவெட்டு நீரோட்டங்களை எதிர்த்து நீந்துவது கடினம். இதில் மாட்டிக்கொண்ட நீச்சல் தெரிந்த ஒருவர் கரையை நோக்கி மீண்டும் வருவதற்காக அலைவெட்டு நீரோட்டங்களை திசையை எதிர்த்து நீந்த துவங்கிவிடுவார். இதனால் சிறிது நேரத்தில் சோர்வடைந்து அவரும் மூழ்கத் தொடங்கி விடுவார். இவரை காப்பாற்ற செல்லும் அடுத்த நண்பர்களும் உறவினர்களும் திரும்பி வர நிச்சயம் வாய்ப்புகள் இல்லை. இதனால்தான் கடலில் குளிக்கச் சென்ற ஒருவரை காப்பாற்ற செல்லும் நண்பர்களும் கடலில் மூழ்கி இறந்ததாக அடிக்கடி நாம் செய்தித் தாள்களில் படிக்கிறோம்.

கடலில் குளிக்க செல்லும் சுற்றுலா பயணிகள் கவனிக்க வேண்டியவை

* பாதுகாப்பு மிதவைகளை அணிந்து கடலுக்குள் குளிக்க செல்ல வேண்டும்.

* குழந்தைகளுக்கு மிதவை வளையங்கள் அணிவித்து கரையோரமாகவே குளிக்க அனுமதிக்க வேண்டும்.

* நீச்சல் தெரியாத பெரியவர்கள் மிதவை வளையங்களை நம்பி ஆழமாக செல்வது ஆபத்தை உருவாக்கும்.

* புதிய இடங்களில் குளிக்க செல்லும்போது குளிப்பதற்கு ஏற்ற நிலையில் கடல் உள்ளதா என அருகில் உள்ள மீனவர்களை கேட்டுவிட்டு கடலில் இறங்குவது பாதுகாப்பானது.

* அலையடிக்கும் பகுதிகளில் உள்ள பாறைகளில் ஏறுவதை தவிர்க்க வேண்டும்.

* நீங்கள் குளிக்கும்போது உங்களை சேர்ந்த யாராவது ஒருவர் உங்களை கண்காணித்துக் கொண்டு இருக்க வேண்டும்.

* சாப்பிட்டவுடனே கடலில் இறங்குவதால் வாந்தி போன்ற உடல் கோளாறுகள் ஏற்படும்.

* மது அருந்தி விட்டு கடலில் குளிப்பது ஆபத்தை விளைவிக்கும்.

* அலைப்பகுதியில் குளிக்கும்போது கடலை நோக்கியே நிற்க வேண்டும். இதனால் பெரிய அலைகள் உங்களை தாக்கும் முன்பே கரைக்கு நகர முடியும்.

* இந்த அடிப்படை விதிகளை பின்பற்றினால் கடல் குளியல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஒரு இனிய அனுபவமாக அமையும்.

தகவல் - வே.பாலாஜி, கடல்வாழ உயிரின ஆராய்ச்சியாளர், பட்டுக்கோட்டை.



அலைகளுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக