புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_m10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_m10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10 
251 Posts - 52%
heezulia
சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_m10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10 
148 Posts - 31%
Dr.S.Soundarapandian
சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_m10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_m10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_m10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10 
18 Posts - 4%
prajai
சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_m10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10 
5 Posts - 1%
Barushree
சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_m10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_m10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_m10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_m10சரியான பாதையில் சந்திராயன் -1 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியான பாதையில் சந்திராயன் -1


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 7:16 pm

சென்னை : சந்திராயன்-1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது இந்தியா. இன்று காலை 6.22 மணிக்கு சந்திராயன் - 1 செயற்கோளை தாங்கியவாறு பி.எஸ்.எல்.வி.சி-11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.


சரியான பாதை :சந்திராயன் -1 விண்கலம் ஏவப்பட்ட 18 நிமிடங்கள் 2 நொடிகளில் பூமியின் சரியான சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் -1 பூமியின்சரியான சுற்றுவட்டப்பாதையை அடைந்ததை அடுத்து , விண்கலம் வெற்றிகரமாக செயல்படுவதை உறுதி செய்துள்ளனர்.


ஜனாதிபதி வாழ்த்து:
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஐனாதிபதி பிரதீபா பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, இந்த நாள் இந்தியா வரலாற்றில் குறிப்பிடத் தக்க நாள் என்றும், இந்த வரலாற்று சாதனைக்காக பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.


பிரதமர் வாழ்த்து: சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது : இந்திய விண்வெளி திட்டத்தில், சந்திராயன் விண்கலம் ஏவப்பட்டது ஒரு மைல்கல் ஆகும். சந்திராயன் விண்கலம் சரியான சுற்றுப்பாதையை அடைந்துள்ளது. இஸ்ரோ தலைவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, சந்திராயனின் சாதனை பயணத்தை அரங்கேற்றியதற்கு வாழ்த்து தெரிவித்தேன். இவ்வாறு டோக்கி‌யோவில் உள்ள பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 7:17 pm

சந்திராயன் விண்கலம் - 1, 11 வகையான உபகரணங்களை சுமந்து செல்கிறது. இவற்றில் ஐந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, ஆறு உபகரணங்கள் அமெரிக்கா மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளில் உள்ள ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியில் தயாரிக்கப்பட்டவை. சந்திராயன் -1, நிலவின் 3-டி (மும்முனை பரிமானம்) வரைபடத்தை ஏற்படுத்தி தரும். அது மட்டுமல்லாமல் நிலவில் உள்ள வேதி பொருட்கள் மற்றும், கணிம வளங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

வரலாற்று சாதனை: நிலவுக்கு ஆளில்லா சந்திராயன்-1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது இந்தியா. இதுபற்றி இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறுகையில் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு இந்தியாவின் சந்திராயன் - 1 செயற்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது பெரிதும் மகிழ்ச்சியளிப்பதாகவும், இதற்காக பாடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் தம்முடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்தியாவிற்கு இது ஒரு வரலாற்று சாதனை என்றும் மாதவன் நாயர் கூறியுள்ளார். சந்திராயன்-1, விண்கலம், நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பதை பற்றியும், ஹீலியம் -3 வாயுகூறு இருக்கிறதா என்பன பற்றியும் ஆருாய்ச்சி மேற்கொள்ளும்.

நிலவில் இந்திய கொடி: சந்திராயன் -1 விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்திராயன் -1 விண்கலத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது : எங்களது குழந்தை, நிலவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருப்பதால் அடுத்த மாதம் நமது தேசிய கொடி நிலவில் பறக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 7:22 pm

சரியான பாதையில் சந்திராயன் -1 1


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 7:25 pm

மிக, மிக குறைந்த செலவில் விண்கலம் மற்றும் ராக்கெட்டை உருவாக்கி நிலாவை நோக்கி ஏவியதன் மூலம் வளர்ந்து விட்ட நாடுகள் சற்று மிரட்சி யுடன் இந்தியாவைப் பார்க்கத் தொடங்கி உள்ளன.

பூமியின் துணைக்கோளான நிலா, தன்னைத் தானே சுற்றிக் கொண்டு பூமி யையும் சுற்றி வருகிறது. அது பூமியை ஒரு தடவை சுற்றி வர 27 நாட்களாகும். பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பூமியில் இருந்து நிலாவுக்கு செல்ல சுமார் 5 நாட்களாகும்.

நிலாவை ஒரு தெய்வமாக நம் மூதாதையர்கள் பார்த்தனர். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நிலாவில் "ஹீலியம்-3'' என்ற மூலப் பொருள் அபரிதமாக இருப் பது தெரிந்தது. இது தவிர ஏராளமான கனிம வளங் களும் உள்ளன. இந்த வளங்களை அள்ளவே ஒவ் வொரு நாடும் நிலாவை குறி வைத்து ஆராய்ச்சிகளை முடுக்கி விட்டுள்ளன.

1969-ல் அமெரிக்கா நிலாவுக்கு "அப்பல்லோ'' எனும் விண்கலத்தை 2 பேருடன் ஏவியது. அதன் பிறகு ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய விண்வெளிக் கழகம், சீனா ஆகியவை நிலாவுக்கு விண்கலத்தை அனுப்பின. இந்த வரிசையில் இன்று இந்தியா 6-வது நாடாக இடம் பெற்று முத்திரை படைத்துள்ளது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நிலாவுக்கு விண்கலத்தை அனுப்பும் திட்டம் தீட்டப்பட்டது. அதற்கான விண்கலத்துக்கு சந்திராயன்-1 என்று பெயர் சூட்டப்பட்டது.

சந்திராயனை உருவாக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரில் நடந்து வந்தது. அந்த விண்கலத்துக்குள் 11 அறிவியல் ஆய்வுக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் 5 கருவிகள் இந்தியாவுக்குரியவை. 3 கருவிகள் ஐரோப்பிய விண் வெளிகழகத்தில் தயாரானவை. 2 கருவிகள் அமெரிக்காவுக்கும், ஒன்று பல்கேரியாவுக்கும் சொந்தமானவை.

இவற்றை விண்ணில் எடுத்துச் செல்ல 4 அடுக்கு கொண்ட 44.4 மீட்டர் பிரமாண்ட உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. ராக்கெட் தயாரிக்கப்பட்டது. அதனு டன் கடந்த வாரம் சந்திராயன்-1 விண்கலம் இணைக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு 49 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 7:25 pm

கடந்த 3 தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் சந்திராயன்-1 விண்கலம் திட்டமிட்டப்படி ஏவப்படுமா என்று பெரும்பாலானவர்கள் ஆர்வம் கலந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஆனால் சந்தி ராயனை உருவாக்கிய விஞ்ஞானிகள் அனைவரும், "எவ்வளவு மழை பெய்தாலும் பரவாயில்லை. சந்திராயன் பறக்கும்'' என்றனர். அவர்களது உறுதியான தன்னம்பிக்கை வீண்போகவில்லை.

இன்று அதிகாலை 6.22-க்கு கவுன்ட்டவுன் 9,8,7,6,5,4,3,2,1 என்று குறைய அடுத்த வினாடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்-1 வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது.

நெருப்பை கக்கிக்கொண்டு அடர்ந்த கரும் மேகக் கூட்டத்தைக் கிழித்தப்படி சந்திராயன்-1 கம்பீரமாக சென்றதைப் பார்த்து மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னைக்கு வடக்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து சந்திராயன் தனது வெற்றி கரமான பயணத்தைத் தொடங்கியது.

அது சரியான இலக்கு நோக்கி செல்கிறதா என்பதை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் பெங்களூரில் உள்ள ஆய்வு மைய அரங்கில் அமர்ந்து விஞ்ஞானிகள் கண்காணித்தனர்.

18.2-வது நிமிடம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத் தலைவர் ஜி.மாதவன் நாயர், "சந்திராயன்-1 திட்ட பயணம் வெற்றி. அது மிக நேர்த்தியாக, சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது'' என்று அறிவித்தார்.

இதைக் கேட்டதும் ஆய்வு மையத்தில் இருந்த சுமார் ஆயிரம் விஞ்ஞானிகள் எழுந்து நின்று கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகள் இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 7:26 pm

நிலா.... நிலா... ஓடிவா... நில்லாமல்... ஓடிவா.... தமிழன் அன்று பாடியது, நனவாகி விட்டது.

சந்திராயன் ஆய்வுக்கலம் மூலம் நிலா நமக்கு நெருக்கமாகி விட்டது.

அமெரிக்கா, ரஷியா, உள்ளிட்ட முன்னேற்றம் அடைந்த நாடுகள் மட்டுமே நிலவுக்கு போக முடியும் என்ற எண்ணத்தை இன்று இந்தியா உடைத்து தகர்த்து எறிந்துள்ளது.

இன்னும் சொல்லப்போனால் விண்வெளி ஆராய்ச்சியில் தன்னிரகற்று திகழும் அமெரிக்காவால் செய்ய முடியாத சில சாதனைகளை சந்திராயன் மூலம் இந்தியா செய்யப் போகிறது.

அவை அனைத்தும் உலக சாதனைகளாக மாறப் போகின்றன. அந்த வகை யில் நிலாவுக்குள் புதைந்து கிடக்கும் கோடான கோடி மர்மங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் இந்தியா அமைத்துக் கொடுக்கும் பாதையில் தான் அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளும் பயணிக்க முடியும்.

1969-ம் ஆண்டு நிலாவை ஆராய்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள் கனிம வளங்கள் கொட்டிக் கிடப்பதை உறுதி செய்தனர். ரஷியா நடத்திய ஆராய்ச்சியின் விளைவாக ஹீலியம் மற்றும் ஏராளமான தாதுப் பொருட்கள் டன்கணக்கில் இருப்பது தெரிந்தது.

1998-ம் ஆண்டு நிலாவில் தண்ணீர் இருப்பதாக ஒரு ஆராய்ச்சி மூலம் கூறப்பட்டது. ஆனால் அந்த முடிவு இன்னும் உறுதியான இறுதிக் கட்டத்தை எட்டவில்லை.

ஆக.. நிலாவில் நிறைய வளங்கள் இருப்பது உறுதியாக தெரிந்துள்ளது. மேலும் என்னென்ன கனிமங்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்க ஜப்பானும், சீனாவும் கடந்த ஆண்டு ஆள் இல்லாத விண்கலத்தை அனுப்பின.

நிலாவில் குறிப்பிட்ட ஒரு இடத்தை பங்கு போட்டுக் கொண்டு, அங்குள்ள வளத்தை எடுக்கத்தான் இந்த நாடுகள் போட்டி போட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நாம் சும்மா "தேமே'' என்று வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்க முடியும்?

எனவேதான் நம்ம ஆட்களும் சந்திராயன் மூலம் நிலாவை நோக்கி ஓடி உள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 7:26 pm

நிலா இன்னமும் நிறைய மர்மங்களுடன் சுற்றிக் கொண்டிருக்கிறது. எந்தஒரு நாடும் நிலாவை இன்னும் முழுமையாக ஆராயவில்லை. நிலா பற்றி வெளிவராத மர்ம முடிச்சுகள் நிறைய உள்ளன. நிலா எப்படி தோன்றியது? அது பூமி பந்தில் இருந்து பிரிந்து போன நிலப்பகுதியா? அல்லது அது துகள்கள் சேர்ந்து உருவான நட்சத்திரமா? என்பதே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சந்திராயன் நிலாவை நெருங்கி 2 ஆண்டுகள் சுற்றி, சுற்றி வரும்போது பல மர்ம முடிச்சுகளுக்கு விடைகாண முயற்சி செய்யும். இந்த ஆய்வுதான் எதிர்கால இந்தியாவுக்கு மிகப்பெரும் வளத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது. என்னென்ன வளங்கள் தெரியுமா?

முதல் வளம்- தண்ணீர், நிலாவில் தண்ணீர் உள்ளதா என்பதை சந்திராயன் விண்கலம் தீவிரமாக ஆராயும். இதற்காக 4 கருவிகளை சந்திராயனில் விஞ்ஞானிகள் பொருத்தி உள்ளனர்.

இதன் மூலம் தண்ணீர் இருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், நிலாவில் வீடு கட்டி குடியேறும் எண்ணம் வலுவடையும். அதோடு நிலாவில் ஒரு தளம் அமைத்து, அங்கிருந்து மற்ற கிரகங்களுக்கு விண் கலங்களை செலுத்தி பிரபஞ்சத்தின் புரியாத புதிர்களை கண்டுபிடிக்கலாம்.

2020-ம் ஆண்டு நிலாவில் ஒரு தளம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதே காலக்கட்டத்தில் ரஷ்யா, சீனா, ஜப்பான், நாடுகளும் நிலாவை ஆக்கிரமிக்க உள்ளன. இந்தியாவும் அதே சமயத்தில் நிலாவில் ஒரு இந்தியனை இறக்கி விட விïகம் வகுத்துள்ளது.

இந்த திட்டங்களுக்கு எல்லாம் சந்திராயன் தரப்போகும் முடிவுகள் மிக, மிக முக்கியதான இருக்கும்.

தண்ணீர் பற்றிய கண்டு பிடிப்பைத் தவிர சந்திராயனின் அடுத்த முக்கிய பணி- நிலாவை முப்பரி மாணங்களில் படம் எடுப்பது.

வானத்தில் இருந்தபடி பூமியை துல்லியமாக படம் பிடிக்கும் தொழில் நுட்பத்தில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

என்றாலும் இதுவரை அமெரிக்கா நிலாவை துல்லியமாக படம் பிடித்ததே இல்லை. தற்போது இந்தியா நிலாவை மிகத் தெளிவாக படம் பிடிக்க உள்ளது. அந்த வகையில் நிலாவை இந்தியாதான் முதன் முதலாக மிகத் தெளிவாக முப்பரி மாணத்தில் படம் எடுக்கப் போகிறது.

இந்த படங்களைத் தொகுத்து பார்ப்பதன் மூலம் நிலாவில் பள்ளம் எங்கெங்கு உள்ளது? சம தரை எங்கெங்கு உள்ளது? என்பதை தீர்மானிக்க முடியும். இதை அறிந்த அமெரிக்கா சந்திராயன் படங்களை ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்து இருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 7:27 pm

நிலாவின் தென் துருவப் பகுதியில் மனிதனை இறக்கி தளம் கட்ட நாசாவிடம் ஒரு திட்டம் உள்ளது. அதற்கு சந்திராயன் எடுத்துக் கொடுக்கப்போகும் முப்பரிமாணப் படங்கள்தான் உதவியாக இருக்கும். எனவே படம் பிடிக்கும் தொழில் நுட்பத்தில் அமெரிக்காவையும் இந்தியா மிஞ்சப் போகிறது.

சந்திராயன் மூலம் இந்தியா செய்யப்போகும் மற்றொரு ஆய்வு- நிலாவை துளைப்பது. சந்திராயனில் இருந்து பிரிந்து செல்ல உள்ள ஒரு கருவி நிலாவில் இறங்கி சில மீட்டர் தூரத்துக்கு ஆழமாகத் தோண்டும். அந்த குழிக்குள் ஏதேனும் கனிம வளம் மறைந்து புதைந்து கிடக்கிறதா என்பதை இதன் மூலம் ஆராய்வார்கள்.

அமெரிக்கா 1969-ல் நிலாவில் இருந்து கல்லை மட்டுமே எடுத்தது. இன்று இந்தியா நிலாவை துளைத்து ஆராயப் போகிறது. நிலா தரைப் பகுதிக்குள் யுரேனியம், தோரியம் போன்றவை பல கோடி டன் கணக்கில் இருக்கலாம் என்று கருதுகிறார்கள். அதற்கு சந்திராயன் ஆய்வு மூலம் விடை கிடைக்கும்.

சந்திராயன் மூலம் இந்தியாவுக்கு கிடைக்கும் மற்றொரு பெரிய பலன்- அணுசக்தி உற்பத்தியை பெருக்க துணை புரிவது. இதுதான் இன்றைய தலையாய தேவையாக உள்ளது.

மின் உற்பத்திக்கு தேவையான ஹீலியம்- 3 மூலப்பொருள் நிலாவில் தாராளமாக உள்ளது. நிலாவில் உள்ள பாறைகளுக்கு அடியில் சுமார் 50 லட்சம் டன் ஹீலியம் இருப்பதாக குத்து மதிப்பாக கணக்கிட்டுள்ளனர்.

இதில் கொஞ்சம் கிடைத்தால் கூட போதும், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மின்சாரம் தட்டுப்பாடு என்ற நிலை இல்லாமல் செய்து விடலாம். நிலாவில் இருந்து 5 டன் ஹீலியத்தை ஒரு தடவை கொண்டு வந்தால் போதும், அந்த வருடம் முழுவதும் நாம், மிக மிக எளிதாக மின்சாரத்தை தயாரித்து சப்ளை செய்து விடலாம்.

ஹீலியத்தின் அருமையை உணர்ந்த சீனா அடுத்த நூற்றாண்டு மக்களை வளமாக வாழ வைப் பதற் காகவே நிலாவில் உள்ள ஹீலியத்தை மட்டுமே குறி வைத்து ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது.

தற்போது இந்தியாவும் அந்த ஆராய்ச்சி எல்லைக்குள் குதித்து விட்டது. இனி நிலாவில் உள்ள ஹீலியம் உள்ளிட்ட எல்லா செல்வங்களும் வளங்களும் நமக்கும் சொந்தம்.

இப்போது புரிகிறதா... சந்திராயன் விண்கலத்தின் முக்கியத்துவம்!

அடுத்து 2011-ம் ஆண்டு சந்திராயன்-2 என்று ஒரு விண்கலத்தை இந்தியா அனுப்ப உள்ளது. அந்த விண்கலம் நிலாவில் நேரடியாக தரை இறங்கும். 2015 முதல் 2020-க்குள் ஒரு இந்தியன் நிலாவில் தரை இறங்குவான்.

2025-ம் ஆண்டுக்குள் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் நிலாவில் இடம் பிடித்து பட்டா போட்டு விடுவார்கள். அதன் பிறகு நிலாவில் உள்ள வளங்களை அள்ள ஆரம்பித்து விடுவார்கள்.

முந்துனவன் கைக்குத்தான் முந்திரி பக்கோடா கிடைக்கும் என்பார்கள். நிலா ஆராய்ச்சியில் நாம் பல வகைகளில் முந்திக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் நமக்கு அளவிலா வளங்கள் கிடைக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 7:28 pm

சரியான பாதையில் சந்திராயன் -1 2


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 7:29 pm

சரியான பாதையில் சந்திராயன் -1 4


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக