புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia
கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia
கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிடைத்தற்கரியவை


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:21 am

First topic message reminder :

மூலம்: தமிழம்.நெட்

கிடைத்தற்கரியவை எண் 1.

தங்கமுலாம் பூசிய திருக்குறள் நூல்

திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.

கிடைத்தற்கரியவை - Page 3 Sup110


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:06 am

கிடைத்தற்கரியவை எண் 18.

அஞ்சலட்டையில் நாலில் ஒரு பகுதி அளவுள்ள இதழ்

அஞ்சலட்டையில் கடந்த சில வருடங்களாக இதழை வெளியிட்டுச் சாதனை படைத்துவரும் "அணு" இதழ் தற்பொழுது அஞ்சலட்டையில் நாலில் ஒரு பகுதி அளவுள்ள (43 மி.மீ அகலமுள்ள) அஞ்சலட்டை இதழாக வெளியிட்டுள்ளது.

மிகச் சிறிய இந்த அணு இதழுடன் இதழைப் படிப்பதற்காக ஒரு உருப்பெருக்கிக் கண்ணாடியும் இணைக்கப்பட்டுள்ளது.

சிறிய அஞ்சலட்டை போலத் தோற்றமளிக்கும் இந்த அஞ்சலட்டை இதழில் துணுக்குச் செய்திகள், சிரிப்பு, போட்டி, எதிரலை, விளம்பரம் என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.

முகவரி : 31.பிள்ளையார் கோயில் தெரு, சிவகங்கை, 630 561

கிடைத்தற்கரியவை - Page 3 Sup17b
கிடைத்தற்கரியவை - Page 3 Sup17a

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:28 am

கிடைத்தற்கரியவை எண் 19.

தமிழர்கள் பயன்படுத்திய ஈமத்தாழி

இறந்த மாந்தன் திரும்பவும் தாயின் கருப்பையில் பிறக்கிறான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அவனது மறுபிறவிக்குத் தேவைப்படும் உடம்பிற்கான எலும்புகளையும், அவன் பயன்படுத்திய கருவிகள், அணிகலன்கள் போன்றவற்றையும் மண்பாண்டங்களில் வைத்துப் புதைக்க வேண்டும் என்று சங்ககால மாந்த சமுதாயம் கருதியது.

இதனாலேயே இதற்கென உருவாக்கிய ஈமத் தாழியை தாயின் அகண்ட கருப்பை வடிவத்தில் உருவாக்கினர். ஈமத்தாழியின் கழுத்துப் பகுதிக்கும் சற்று கீழே காட்டப்படும் தொப்புள் கொடியின் வடிவமைப்பு இக்கருத்தாக்கத்தை வலுப்படுத்தும்.

கிடைத்தற்கரியவை - Page 3 Sup19

நிலத்தின் கீழே மாந்தரின் தோராய உயரமான 5 அடிக்குக் கீழேயே இந்த ஈமத்தாழிகள் பொதுவாகப் புதைக்கப்பட்டன. இருப்பினும் நிலத்தைத் தோண்டத் தொடங்கிய ஒரு அடிக்குக் கீழேயே ஈமத்தாழியுடன் தொடர்புடைய சிறு சுடுமண் கலன்கள் கிடைக்கின்றன. அவற்றுள் மாந்தர் பயன்படுத்திய கருவிகள், அணிகலன்கள், எலும்பு மிச்சங்கள் கிடைக்கின்றன. இதிலிருந்து ஈமத்தாழியில் புதைக்கப்பட்ட மாந்தரின் சுற்றமும் நட்பும் அவனுக்கு விருப்பமான பொருள்களை ஈமத்தாழி புதைக்கப்பட்ட பிறகு நிலத்தில் அவன் நினைவாக இந்தச் சிறு மண்கலங்களில் புதைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

கருத்தும் படமும் உதவி : திரு.மகேசுவரன், காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், கோவை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:32 am

கிடைத்தற்கரியவை எண் 20.

1915 கிருஷிகன் இதழில் குறிப்பிட்டுள்ள நவீன தமிழ் நாவல்கள்

1915 சூலை 16 கிருஷிகன் இதழில் ( புத்தகம் 7, பிரதி 4) நவீன தமிழ் நாவல்கள் விற்பனைக்கு உள்ளதாக இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. கிருஷிகன் இதழ் திங்கள்தோறும் வெளியான வேளாண்மை இதழ். இதழின் பின் அட்டையில் ஆர்.கே.சர்மா அண்டு கம்பெனியின் விளம்பரமாக கீழே காணும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான நாவல்களின் தலைப்புகளே தமிழில் இல்லை. 1917 இன் நிலைமை இது. இன்றைய சூழலில் மக்கள் நலம் பேசும் பல நாவல்கள் வெளியாவதைக் காணும் பொழுது தமிழ் வளர்நிலையில் இருப்பதை உணரமுடியும்.

1940, 50, 60 களில் விதைக்கப்பட்ட தரமான விதை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் மாற்றத்தின் விளைச்சல் அரசியல் வழியில் சுருங்கிப்போனதால், தமிழின் நிலை பாதைமாறிச் சென்று கொண்டிருந்தது. 2005 இல் மீண்டும் தமிழுணர்வை முன்னெடுக்கிற தன்மை முனைப்போடு தொடங்கியுள்ளது. வரலாறு திரும்பியுள்ளது.

தமிழ் உணர்வாளர்கள் ஒன்றிணைந்து இயங்க வரலாறு திருத்தி எழுதப்படும்.. இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றை விதைப்பதோடு, தமிழுணர்வை விதைக்கத் தமிழ் மேலோங்கும். வளர்நிலை காட்டும். தமிழ் இனி வளரும் எனச் செயலாற்றுவோம்.
கிடைத்தற்கரியவை - Page 3 Sup20

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:33 am

கிடைத்தற்கரியவை எண் 21.

சுண்ணக்கட்டியில் பழங்கால இசைக்கருவிகள்

கோவை அருங்காட்சியகத்தில் பணிபுரியும் நண்பர் சுண்ணக்கட்டியில் செதுக்கி வைத்துள்ள பழங்கால இசைக் கருவிகள் இவை. மிகச் சிறிய வடிவில் செய்யப்பட்டுள்ள இவை கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளன.
கிடைத்தற்கரியவை - Page 3 Sup20

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:35 am

கிடைத்தற்கரியவை எண் 22.

இதழ் அனுப்பும் உறையில் திருக்குறள்

குந்த குந்கா நகரிலிருந்து வெளிவருகிற சமண சர்புடைய இதழ் சுருதவேலி. பதிவுபெற்ற இதழாகத் திங்கள் ஒருமுறை இந்த இதழ் வெளிவருகிறது. சமண வரலாற்று ஆராய்ச்சிக் குறிப்புகள், கட்டுரைகளை இதழில் வெளியிட்டு வருகிறது. இதழில் வரும் துணுக்குக் குறிப்புகள்
வாழ்வியலுக்குப் பயனாகுபவை.

இந்த இதழின் அஞ்சல் உறை படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இந்த உறையில் இரண்டு திருக்குறளும், அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பும் தரப்பட்டுள்ளன. குறளின் பெருமையை அஞ்சல் உறையில் வெளியிட்டு அனைவரும் படிக்க வைக்கிற இந்த இதழின் செயல் வணங்குதற்குரியது அல்லவா ?.

கிடைத்தற்கரியவை - Page 3 Sup21

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:36 am

கிடைத்தற்கரியவை எண் 23.

படத்தில் உருவாக்கப்பட்ட சிறுவர் கதை

1958 கண்ணன் தீபாவளி மலரில் (சிறுவர்களுக்கான இதழ்) சங்கிலித் திருடன் என்ற கதையானது வெளியிடப் பட்டுள்ளது. இந்தக் கதையின் ஒருபகுதியை இங்கே பார்க்கிறீர்கள். எழுத்தும் படமும் கலந்த தொடரானது இக்கதையில் அமைக்கப்பட்டுள்ளது.

நடராஜன் அப்பாவிடம் போய் கடலை வாங்கித் தரும்படிக் கேட்டான். என்ற தொடருக்காக முதல் வரியானது படங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. பிற தொடர்களைப் படித்துப் பார்க்கவும்.

இளம் மாணவர்களுக்கு இதுபோன்ற ஊக்குமூட்டுகிற, தேடிக் கண்டறிகிற, சிறுகதைகளோ, பாடப்புத்தகங்களோ தற்பொழுது இல்லை. 1958 இல் இப்படி உளவியல் அடிப்படையில் இதழ் நடந்துள்ளது வணங்குதற்குரிய வியப்பான செய்தியல்லவா ?
கிடைத்தற்கரியவை - Page 3 Sup22

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:40 am

கிடைத்தற்கரியவை எண் 24.

ஆறாரைச் சக்கரம்


விளக்கம்

இ·து ஆறு ஆர்க்கால்களையுடைய சக்கரமாய், சக்கரத்தின் அச்சுப் பகுதியாகிய மையப் பகுதியில் "ற"கரம் நின்று, ஒவ்வொரு ஆர்க்காலின் மேல் ஒன்பதொன்பது எழுத்துகளாய்க் குறட்டின் மேல் "பெரியக்கா" என்னும் பெயர் நின்று, சூட்டின் மேல் 24 எழுத்துகள் நின்று முற்றுப்பெற்றது.

பாடலைப் படிக்கும் முறை

ஒன்றாவது ஆர்க்காலின் முதலெழுத்தாகிய "த" என்ற எழுத்திற்றொடங்கி மேலே போய்த் தொடர்ந்து, நான்காவது ஆர்க்காலின் கும்பப் பகுதியிலிருந்து மேலே போய் "ன்" என்ற எழுத்தில் முடிந்தால் பாடலின் முதலடி முடிவுறும். அவ்வாறே, இரண்டாவது ஆர்க்காலின் முதலெழுத்தாகிய "ப" என்ற எழுத்தில் தொடங்கி மேலே போய்த் தொடர்ந்து ஐந்தாவது ஆர்க்காலின் கும்பப் பகுதியிலிருந்து மேலே போய் "ம்" என்ற எழுத்தில் முடிந்தால், பாடலின் இரண்டாம் அடி முடிவுறும். மீண்டும் மூன்றாம் ஆர்க்காலின் முதலெழுத்தாகிய "க" என்ற எழுத்திற் தொடங்கி மேலே போய்த் "தை" என்ற எழுத்தில் முடிந்தால் பாடலின் மூன்றாமடி கிடைக்கும். பின்னர் சூட்டின் முதலாம் ஆர்க்காலின் "த" என்ற எழுத்தைத் தொடர்ந்து வலப்புறமாக நகர்ந்து சூட்டின் மேலுள்ள இருபத்து நான்கு எழுத்துகளைப் படித்தால் பாடலின் நான்காவது அடி கிடைத்துப் பாடல் முடிவுறும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:41 am

பாடல் (கட்டளைக் கலித்துறை)

தண்ணார் தமிழைத் தகைபெறக் கற்கா விடினுமெங்ஙன்
பண்ணார் கவிகள் கவரிறக் காட்டிப் படைக்கலாகும்!
கண்ணார் கவிகள் பிழையற யாக்க விலக்கணத்தைத்
தண்மைப் படகற் கவும்நன் றிலகும் வள்த்தையுற்றே!

தண்ணார் தமிழைத் - அருள் மிகுந்த தமிழ் மொழியை
தகைபெறக் கற்கா விடின் - மேம்பாடு கொள்ளத் தக்க வகையில் கசடறக் கற்காவிட்டால்
எங்ஙன் - எவ்வாறு
பண்ணார் கவிகள் - இசை நிறைவு கொண்ட கவிதைகளை
கவரிற - (கவர்-இற) யாப்பிலக்கண மரபினைத் துறந்தும் சிதைத்தும் அதனின்று பிரிவு கொண்டு சிலர் எழுதுகின்ற உரைவீச்சுகள் புதுக்கவிதைகள் என்ற பெயர் தாங்கி உலா வரும் போலித் தன்மைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கத் தற்போது நேர்ந்துள்ள் கட்டாய நிலைமையினை
காட்டிப் படைக்கலாகும் - கவிதைகள் புனையும் அவாத் கொண்ட ஆர்வலர்களிடம் எடுத்துக் காட்டி நல்ல பல கவிதைகளை அவர்கள் மூலம் படைக்கச் செய்ய முடியும்.
கண்ணார் கவிகள் - அறிவுப் பெருக்கினை அளிக்கக்கூடிய அழகுக் கவிதைகள்
பிழையற யாக்க - பிழையில்லாமல் எழுதுவதற்கு
இலக்கணத்தை - செய்யுள்கள் செய்வதற்கென்றே வழிகாட்டியாய் இலங்குகின்ற யாப்பிலக்கண நூல்கள் கற்றுத் தரும் பாடங்களை
தண்மைபட கற்கவும் - அறிந்து கொள்ள உள்ளத்துள் இன்பங்கொண்டு அவாவோடு கற்றுக் கொண்டால்
நன்று இலகும் வளத்தையுற்றே - அவ்வாறு கற்றபின் புனைகின்ற கவிதைகள் மேம்பட்ட இலக்கண இலக்கிய வளமை பெற்று வளங்குமா மறிக.
கருத்து

அருள்மிகுந்த தமிழ் மொழியை மேன்மையுறும் வகையிற் கற்க வேண்டும், பாக்கள் புனையும் ஆர்வலர்கள் யாப்பிலக்கணத்தைக் கசடறக் கற்க வேண்டும். கற்றபின் அதற்குத் தக்கபடி நின்று மரபு வழுவாப் பாக்களைப் புனைதல் வேண்டும். அவ்வாறு புனையப்படும் பாக்களே சாலச் சிறந்ததெனச் சான்றோரால் ஏற்கப்பட்டுக் காலம் கடந்து விளங்குமா மறிக.

நன்றி : சித்திரகவி நூல்
திருமிகு பாவலர். க.பழனிவேலனார் - உடுமலை (மறைவு)

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:42 am

கிடைத்தற்கரியவை - Page 3 Sup23

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:44 am

கிடைத்தற்கரியவை எண் 25.

கையடக்க செய்முறை மருத்துவ நூல்

7 செ.மீ நீளமும், 11 செ.மீ அகலமும் உடைய கைடக்க நூல் இது. 380 பக்கங்களில் இயற்கை வைத்திய முறையானது விளக்கப்பட்டுள்ளது. செய்முறையாக எப்படிச் செய்வது என்பதும் குறிப்பிட்டுள்ளது. சுத்தி முறைகள், மாத்திரை முறைகள், சூரண முறைகள், லேகிய முறைகள், எண்ணெய் முறைகள், பற்ப முறைகள், செந்தூர முறைகள், கிருத முறைகள், கட்டு முறைகள், மெழுகு முறைகள், வடக முறைகள், ரசாயன முறைகள், திராவக முறைகள், சர்பத் முறைகள், பலரோக முறைகள் என ஒவ்வொரு தலைப்பிலும் - பொருள்கள் - செய்முறைகள் - பயன்பாடு என்பதை சுருக்கமாகத்தந்துள்ளது. கைடக்க அளவில் பையில் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்ற நினைவே நோய்வராது தடுக்குமல்லவா ?

எடுத்துக்காட்டு : உஷ்ணந் தீரக் கியாழம் : தனியா, பரஞ்கிச் சக்கை, நன்னாரி வேர், சோம்பு வகைக்கு பலம் 1 நிறுத்தெடுத்து கால்படி ஜலம் விட்டு அரிக்கால்படி கியாழஞ்செய்து பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்துச் சாப்பிட எப்படிப்பட்ட சூடுந்தணிந்து விடும். இப்படி 2,3 வேளை செய்யவும்.

கிடைத்தற்கரியவை - Page 3 Sup25

Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக