புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே.பாக்யராஜ் கேள்வி பதில்


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:47 pm

First topic message reminder :

எதுவும் நம் கையில் இல்லை, எல்லாம் நம் கையில் எது சரி?

ரெண்டுமே சரிதான். எப்படின்னா...

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் வாழ்ந்த ராய் சி.கல்வன்ங்கறவரை, 1942ம் வருஷம் முதன் முதலில் இடி தாக்கியது. இதனால் அவர் தன் கால் கட்டை விரலை இழந்தார். ரெண்டாவது தடவையா 1969ம் வருஷம் இடி தாக்கினப்போ, இவரோட புருவமுடியெல்லாம் கருகிடுச்சு. இதே வருஷம் மூணாவது முறையா இடி தலையை தாக்கினப்ப, தலைமுடிகள் பற்றி எரிந்து போனதாம். இப்படி இதே வருஷத்துல திரும்ப திரும்ப ரெண்டு தடவை இடி தாக்கி, சிறு சிறு காயங்களோட தப்பிச்சிட்டாரு. பிறகு 6வது முறையா 1970ம் வருஷம் ஜூன் மாதம் தாக்கிய இடியால இவருக்கு கணுக்காலில் பலத்தக் காயம் ஏற்பட்டுச்சு. அதுலயும் தப்பிச்சுட்டாரு. ஏழாவது தடவையா 1977ம் வருஷம் ஜூன் மாதம் 25ம் தேதி இடி தாக்கினப்போ, மார்பிலும் வயிற்றிலும் தீப்புண் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரு.இந்த இடி தாக்கி இவருக்கு என்ன நேர்ந்ததோ தெரியல... 1982ம் வருஷம் இவர் தற்கொலை செஞ்சுகிட்டாராம்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:48 am

தான்,கடைபிடிக்காமல் பிறருக்கு உபதேசம் செய்பவர்களை பற்றி உங்கள் அபிப்ராயம்?



தப்பா சொல்ல முடியல.அவங்களையும் உயர்வா பாராட்ட வேண்டித்தான் இருக்கு. ஏன்னா, பூவோட வாசத்தை செடி அனுபவிக்கிறதில்லை. மத்தவங்க தான் அனுபவிக்கிறாங்க. அதனால தப்பான ஆளுங்களா இருந்தாலும், அவங்க சொல்ற வார்த்தை நல்லதா இருந்தா, அதை ஃபாலோ பண்றதுல தப்பில்ல.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:48 am

சந்தோஷம் சரி, அது என்ன சார், அற்ப சந்தோஷம்?



ஒரு நாள் முல்லா முகத்துல ரொம்ப சோகத்தோட வேகமா ரோட்டுல போய்ட்டிருந்தாரு.

அவரோட நண்பர் என்னப்பா விஷயம்? ஏன் இவ்வளவு சோகமா இருக்கிறாய்?ன்னு கேட்டாரு.

என் இரண்டு செருப்பும் சின்னதா இருக்கிறது. இதை விட கொஞ்சம் பெரிய செருப்பாக இருந்தால் தான் நான் நடப்பதற்கு எளிதாக இருக்கும். அதான் கவலையாக இருக்கிறேன் னாரு முல்லா.

செருப்பு சின்னதா இருந்தா அதை மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே?ன்னாரு நண்பர்.

அது முடியாது?

ஏன்? உன்கிட்ட தான் பணம் நிறைய இருக்கே.

பணம் இருக்கு.. ஆனா பணத்தை விட வேறு விஷயம் இதில் இருக்கிறது. நாள் முழுக்க அந்த செருப்பு கடியைத் தாங்கிக் கொண்டு மாலையில் வீடு வந்து சேர்ந்து அதைக் கழற்றி போட்டு விட்டு அப்பாடா என்று படுக்கையில் படுத்தவுடன் ஒரு பெரிய பாரம் இறங்கியது போல் இருக்கிறது. நான் செருப்பை மாற்றினால் என் வாழ்க்கையில் கிடைக்கும் இந்த ஒரு சுகமும் கிடைக்காமல் போய் விடும். அதனால் செருப்பை நான் மாற்றப் போவதில்லைன்னாராம் முல்லா.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:49 am

மாமூல் மனிதனுக்கும் மகானுக்கும் உள்ள வேறுபாடு எப்படித் தெரியும்?



குருநானக் ஒரு தடவை ஹரித்வார் போயிருந்தாரு. அங்கேயிருந்த அவரை அறியாத சிலர், அவரைச் சுற்றியும் கூட்டமாக கூடி நின்னு, அவர்கிட்ட உங்களோட சாதி என்ன? ஊர் என்னனு கேட்டாங்க.

அவர்களிடம் குருநானக் சிரிச்சுட்டே, காற்றும் நீரும் என்ன சாதியோ, அது தான் என் சாதி. இரவும் பகலும் எந்த ஊரில் இருக்கிறதோ, அது என் ஊருன்னாரு.

அதாவது மகான்கள் வாயிலிருந்து எப்பவும் மாமூல் மனிதர்களது வார்த்தைகள் வராது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:49 am

பொறுமை கடலினும் பெரிது' எதிர்ப்பத மாக ஏதாவது?


கஷ்டத்திலிருந்து ஒருத்தன், தன்னோட நண்பனைப் பார்த்து, ஏதாவது உதவி கேட்கலாம்னு போனான்.

அந்த நண்பனோ சாமி வரம் பெற்றவன். கஷ்டத்திலிருந்த நண்பனின் வறுமையைக் கேட்ட அவன், சாலை ஓரத்தில் கிடந்த, ஒரு செங்கலைப் பார்த்து தன் சுட்டு விரலை நீட்ட,

அது உடனே தங்கமா மாறிப் போச்சு. அதை எடுத்து வந்து தன் நண்பனுக்கு கொடுத்தான். நண்பனோ அதைப் பார்த்து திருப்தி படலை வாங்கவும் இல்லை.

சாமி வரம் பெற்ற நண்பன்,மறுபடியும் பக்கத்தில் இருந்த பெரிய கரடி பொம்மையை பார்த்து, விரலை நீட்ட, "து தங்க கரடியா மாறிப் போச்சு.

அதை நண்பனை எடுத்துக் கொள்ளச் சொன்னான்.

அப்போதும், அந்த கஷ்டகாலத்துக்காரன் திருப்தி அடைய லைன்னு தலையை ஆட்டினான். வேறு என்ன தான் வேணும் உனக்கு? அந்த மலையைப் பார்த்து தன் விரலை நீட்டவா?

அதுக்கு கஷ்டகாலத்துக் காரன் அதுவும் எனக்கு வேண்டாம்னு சொன்னான்..

பின் உனக்கு என்ன தான் வேண்டும்னு சொல் னான்.

இதற்கு கஷ்டகாலத்துக்காரன் சொன்னது உன் விரல்.

இப்ப... இவன்கிட்ட நீங்க பொறுமையை கடைபிடிக்க முடியுமான்னு யோசிச்சுப் பாருங்க.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:50 am

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்று சொல்ல காரணம்?


என்னை மாதிரி ஒரு விஞ்ஞானி வெளிநாடு போய், பல வருஷங்கள் தாவரவியல் படிச்சு, டாக்டர் பட்டம் வாங்கிட்டு ஊர் திரும்பினாரு. சொந்த கிராமத்திற்கு வந்த அவர், வழியில ஒரு மரத்தடியில ஒரு ஏழை விவசாயி ஒருத்தரைப் பார்த்தாரு.

சிரிச்சுட்டே விவசாயியைப் பார்த்து, நீங்க மரத்துக்கு உரமெல்லாம் போடுறீங்களா..? ன்னு கேட்டாரு.

விவசாயி, குப்பைகளை போடுறோம்னு சொன்னாரு.

அம்மோனியம் பாஸ்ஃபேட் போடறதில்லையா?ன்னு விஞ்ஞானி கேட்டார்.

அதெல்லாம் போடறது இல்லீங்க. மாட்டுச்சானம் ஆட்டுப்புழுக்கை இதாங்க போடுறோம் ன்னாரு விவசாயி.

இதோ பாருங்க.. அமோனியம் பாஸ்பேட் சோடியம் சல்பேட் இரண்டையும் போட்டா, இந்த மரம் இப்ப காய்க்கிறதை விட கூடுதலா 50 தேங்காய் காய்க்குங்க, இல்லை காய்க்காதுங்க

அதெப்படி அவ்வளவு தீர்மானமா சொல்றீங்க? ஏன்னா இது கொய்யா மரமுங்க''

இப்படி என்வைன மாதிரி சில ஏட்டுச் சுரைக்காயாலே அப்படி பழமொழி வந்திருக்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:51 am

உங்களிடம் உதவியாளனாகச் சேர்த்து வைக்க என்வை ஒருவன் கெஞ்சிக் கொண்டே இருக்கிறான் தலைவா?


கீறே வர்றதை படிச்சுட்டு முடிவு பண்ணுங்க தோழா.

இஸ்தான்புல்பேகம்இவங்களும் அக்பருக்கும் ஒரு மனைவி. இஸ்தான்புல்பேகத்திற்கு ஒரு சகோதரன் இருந்தான். அவனுக்கு தான் மந்திரியாகணும்னு கொள்ளை ஆசை. சகோதரியிடம் சொல்லி அக்பரிடம் கேட்கச் சொல்லி தூண்டினான்.

சகோதர பாசத்தில், அவரும் மன்னரிடம் பலமுறை இது பற்றி கேட்க,?#060;/P>

அக்பர் அவன் அதற்கு லாயக்கற்றவன்னு தவிர்த்து வந்தாரு.

ஒருதடவை அக்பர், ராஜாங்க விஷயத்தில் டென்ஷனா இருந்த சமயம், அந்தப்புரத்திற்கு வந்தார். சூழ்நிலை தெரியாமல் தன் சகோதரனை மந்திரியாக்கும்படி அப்பவும் கேட்க,

அக்பருக்கு கோபம் வந்து, மனைவியை அரண்மனையைவிட்டு வெளியேறிவிடும்படி கட்டளையிட்டாரு.

கொஞ்சம் கோபம் தணிந்த பின், இவ்வளவு நாள் மனைவியாக இருந்த தோஷத்துக்கு, போகும் போது உனக்கு பிரியமான பொருட்களை எடுத்துச் செல் ன்னு சொல்லிட்டுப் போனாரு.

மனைவி பேகத்துக்கு, ஒரு வழியும் புரியலை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:51 am

மதியூகி பீர்பாலை அழைத்து வரச்சொல்லி, நடந்த விபரத்தைச் சொன்னாங்க.

பீர்பால், ராணியை சமாதானப்படுத்திவிட்டு, ரகசிய ஒரு யோசனை சொல்லிட்டுப் போனாரு.

பேகம் உடனே தன் பணிப்பெண்ணை அழைத்து அரசரின் ஆணைப்படி நான் அரண்மனையை விட்டு வெளியேறி, என் தாய் வீட்டிற்கு போகிறேன்,போவதற்கு முன் அரசரிடம் கொஞ்சம் பேச வேண்டும். இந்த விஷயத்தை அரசரிடம் சொல்லுனு சொல்லி அனுப்பிச்சாங்க.

அக்பரும் வந்தாரு.

பேகம் தன் தவறுக்கு வருந்தி, அக்பர்கிட்ட நான் தாய் வீட்டுக்கு போறதுக்கு முன்னால, என் கையால உங்களுக்கு பாயாசம் கொடுக்கனும்னு சொல்லிக் கொடுத்தாங்க.

அக்பரும் அதை வாங்கிக் குடிச்சாரு கொஞ்ச நேரத்துல மயக்கமாயிட்டாரு.

அவரை ஒரு பெட்டியில போட்டு மூடி, தன்னோட மற்ற துணிமணிகள் பெட்டியோட பல்லக்குல ஏத்தி, தன் தாய் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிட்டாங்க.

மறுநாள், அக்பர் கண்விழிச்சா மாமனார் வீட்டுல இருப்பது தெரிஞ்சது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:51 am

மனைவியை கோபமா திட்ட.

பேகம், நீங்கதானே எனக்கு பிரியமானதை அரண்மனையில இருந்து எடுத்துட்டு வரலாம்னு சொன்னீங்க, எனக்கு உங்க மேல பிரியம் அதிகம் னாங்கக.

அக்பர் அசந்துட்டார்.

மனைவிகிட்ட இப்படி நீ புத்திசாலித்தனமா செய்ய யார் யோசனை சொன்னது? உன் தம்பியா அப்படின்னா.. அவனை மந்திரியாக்குறேன் னாரு.

பேகம் அதை மறுத்து பீர்பால் தந்த யோசனை தான் இதுன்னு சொல்லி, தம்பிக்காக இனிமே மந்திரி பதவி கேட்டு, நான் மோசம் போகமாட்டேன். மந்திரின்னா எப்படி இருக்கணும்னு பீர்பால் மூலமா உணர்ந்துட்டேன் னு சொன்னாங்களாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:52 am

அர்த்தத்தை அனர்த்தமாக புரிந்து கொள்வது என்பதெப்படி?

ஒரு மரத்தில் ஏராளமான பறவைகள் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது இருகைகளையும் கொண்டு ஒரு முறை தட்டினாலே சத்தத்தின் அதிர்ச்சியில் பறவைகள் பறக்க தொடங்குகின்றன. அது போல தான் நமது மனதில் இருக்கும் கவலைகள், பாவ எண்ணங்கள் அனைத்தும்.. கடவுளின் பிராத்தனை மூலம் வெளியேறலாம். அதே போல் ஒரு முறை கடவுள் பெயரைச் சொல்லி கைகூப்பி உச்சரித்தால் அனைத்து கஷ்டங்களும்ல, பாவங்களும் பறந்து ஒடிவிடும் னு இராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசித்துள்ளார்.

இதை ஒருத்தன் படிச்சிருக்கான்.

ஒரு நாள்... இவன் ஒரு மரம் ஏறினப்ப, கால் இடறி சரிஞ்சு ஒரு கிளையைப் புடிச்சுட்டு, தொங்கிக் கீழே பார்த்தான். எப்பவும் இருபது அடி உயரத்துல இருக்கறது தெரிஞ்சது. இப்ப பரமஹம்சர், கஷ்டம் தீர சொன்ன உபதேசம் ஞாபகத்துக்கு வர, கிளையைப் பிடிச்சு தொங்கிட்டிருந்த ரெண்டு கையையும் எடுத்து, கூப்பி, ராம் ராம்னா என்னாகும்?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:53 am

ஆராரோ, ஆரிராரோ மாதிரி மூட்டையைத் திருப்பிப் போடும் ஒரு சமாச்சாரம் ப்ளீஸ்?


மாண்ட்யூங்கிற மனிதன், தன் பக்கத்து வீட்டுக்காரன் ஆட்டைத் திருடி விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டுல விசாரணைக்குப் போனான்.

அவனுக்காக வாதாட வந்த வக்கீல், அவன் சொன்ன விஷயத்துல இருந்து, அவன் பேர்ல தப்பு இருக்குன்னு புரிஞ்சுட்டாரு, இருந்தாலும் தன் கட்சிக்காரனை காப்பாத்தணுமேன்னு மாண்ட்யூகிட்ட ஜட்ஜோ, வக்கீலோ என்ன கேட்டாலும், யாருக்குத் தெரியும்னு அப்பாவியா சொல்லு. வேறு எதுவும் சொல்லாதேன்னு சொல்லிக் கொடுத்தாரு.

கோர்ட்ல மாண்ட்யூ, அதே போல ஜட்ஜ் கேட்ட கேள்விகளுக்கும் எதிர் வக்கீல் கேட்ட கேள்விக்கும் அப்பாவியா யாருக்கு தெரியும்னு பதில் சொல்ல,

ஜட்ஜ் அவன் ஒரு அப்பாவின்னு முடிவு பண்ணி அவனை விடுதலை பண்ணிட்டாரு.

கோர்ட்டுக்கு வெளியே வந்த மாண்ட்யூகிட்ட, அவனோட வக்கீல் மாண்ட்யூ.. சொல்லிக் கொடுத்த மாதிரியே நல்லபடியா பதில் சொல்லி விடுதலையாயிட்டே.. எனக்கு சேர வேண்டிய பீஸை வெளியே இருக்கிற உன் மனைவி தருவாள்னு சொன்னியே மனைவி எங்கே? ன்னு கேட்க,

மாண்ட்யூ, அப்பாவியாக யாருக்குத் தெரியும்னு அவருகிட்டயும் அதே பதிலைச் சொல்ல,

வக்கீலுக்கு தலை சுத்துச்சாம்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக