புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_m10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10 
336 Posts - 79%
heezulia
போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_m10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_m10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_m10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10 
8 Posts - 2%
prajai
போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_m10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_m10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_m10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_m10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_m10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_m10போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 18, 2010 10:13 pm

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு, ஆண்மைக் குறைவுக்கு அதிரடித் தீர்வு, எய்ட்ஸ் நோய்க்கு நிச்சய குணம், புற்று நோய்களுக்கு அற்புத சிகிச்சை என்ற விளம்பரங்கள் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து வெளி வருகின்றன. எத்தனையோ மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பயன்பெறாத நோயாளிகள் இத்தகைய விளம்பரங்களுக்கு பலியாவது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

ஆங்கில மருத்துவம் என்று அழைக்கப்படும் அலோபதி மருத்துவ முறையிலிருந்து சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகள் வரை இதுபோன்ற அற்புத சிகிச்சை விளம்பரங்களுக்கு தடை விதிக்கும் சட்டம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருப்பது பலரும் அறியாததாகும்.

அற்புத சிகிச்சை

போலி மருத்துவர்கள் பிடியிலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் எண்ணத்துடன் மருந்துகள் மற்றும் அற்புத சிகிச்சை குறித்த கண்டனத்துக்குரிய விளம்பரங்கள் சட்டத்தை 1954-ம் ஆண்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இந்தச் சட்டம் 1955-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

தீராத நோய்களுக்கு உடனடித் தீர்வு வழங்குவதாக வெளியாகும் விளம்பரங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதிசயமான முறைகளில் நோய்களை கண்டறிவது, அவற்றை தணிப்பது, அவற்றைத் தடுப்பது போன்ற நிவாரணங்களை வழங்குவதாக மருத்துவர்களோ, நிறுவனங்களோ விளம்பரம் செய்வது இச்சட்டத்தின் மூலம் தடை செய்யப்படுகிறது.

நோய் பட்டியல்

இந்தச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள விளம்பரங்கள் குறித்த பட்டியலில் 54 வகை நோய்கள் இடம் பெற்றுள்ளன. குடல்வால் நோய், பார்வைக் குறைவு, புற்று நோய், செவித் திறன் இழப்பு, நீரிழிவு, மூளைக் கோளாறு, கருப்பை நோய்கள், வலிப்பு நோய், பெண்களின் நோய்கள், காய்ச்சல், சிறுநீரகக் கற்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம், விரை வீக்கம், தொழுநோய், உடல் பருமன், பக்கவாதம், முடக்கு நோய், பாலியல் கோளாறுகள், உயரக் குறைவு, காசநோய், கட்டிகள், எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்கள் போன்றவை இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நோய்களுக்கு நிவாரணம் வழங்குவதாகவோ அற்புத சிகிச்சை வழங்குவதாகவோ விளம்பரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய விளம்பரங்கள் அடங்கிய ஆவணங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வதும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதும் இச்சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

அதிசய மருந்துகள்

கருத்தடையை ஊக்குவிக்கும் மருந்துகள் என்றோ, பாலியல் ஈடுபாட்டை அதிகரிக்கும் மருந்துகள் என்றோ கூறப்படும் எவ்வித மருந்துகள் குறித்தும் விளம்பரங்கள் செய்யப்படக் கூடாது என்று இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.

அறிவியல் ரீதியான ஆய்வுகள் மூலம் ஏற்கத்தக்க சான்றுகளின் அடிப்படையில் நிரூபணமாகும் மருந்துகளையும், சிகிச்சை முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ முறைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள மருத்துவ கவுன்சில்களில் பதிவு செய்யப்படாத மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதை தடுக்கவும் இந்தச் சட்டம் வகை செய்கிறது.

சட்ட செயலாக்கம்

தீராத நோய்களுக்கு தீர்வு வழங்குவதாக கூறி நோயாளிகளுக்கு ஏராளமான பொருட்செலவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மன ரீதியில் பெரும் வேதனைகளை இத்தகைய விளம்பரங்கள் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக எய்ட்ஸ், புற்று நோய், உடல் பருமன், பாலியல் குறைபாடுகள் போன்றவற்றிற்கு அதிசய சிகிச்சை வழங்குவதாக ஏராளமான விளம்பரங்கள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன.

பாரம்பரிய மருத்துவர்கள் மட்டுமல்லாமல் அலோபதி மருத்துவர்களும் இத்தகைய விளம்பரங்களை அண்மைக் காலமாக வெளியிட்டு வருகிறார்கள். வருவாய் கருதி பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் இத்தகைய விளம்பரங்களை தொடர்ந்து வெளியிடுகின்றன.

இத்தகைய விளம்பரங்களால் ஈர்க்கப்படும் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் ஏமாற்றப்படுவதோடு நோய் முற்றும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பரம்பரை மருத்துவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் மருத்துவர்கள் எல்லாவித நோய்களுக்கும் தங்களிடம் சிகிச்சையும் மருந்துகளும் உள்ளதாக விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இத்தகைய விளம்பரங்களை தடுக்கும் நோக்கத்துடன் அ¬ர் நூற்றாண்டுக்கு முன்பே நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம் சரிவர நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பது வேதனை அளிப்பதாகும். இந்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருந்தாலும் இதனைச் செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளைச் சார்ந்ததாகும்.

தண்டனை

இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுபவர்களின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் ஆறு மாதம் வரை சிறைத் தண்டனையோ, அபராதமோ, அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெறுபவர்களுக்கு ஒரு ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நியமிக்கும் அதிகாரிகள் இந்தச் சட்டத்தின் விதிமுறைகளை செயல்படுத்துவதோடு இச்சட்ட விதிமுறைகள் மீறப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட இடங்களில் நுழைந்து தேடவும், கண்டனத்திற்குரிய விளம்பரங்கள் அடங்கிய ஆவணங்களை கைப்பற்றவும் அதிகாரம் பெற்றுள்ளனர்.

சட்டத் திருத்தம்

அற்புத சிகிச்சை குறித்த விளம்பரங்களை தடை செய்யும் சட்டம் எதிர்பார்த்த பயன்களை உருவாக்கவில்லை என்பது கருதி இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இச்சட்ட விதி முறைகளை மீறும் போலி மருத்துவர்கள் உள்ளிட்டோர் மீது விதிக்கப்படும் தண்டனையை கடுமையாக்குவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.

அறிவியல் ரீதியான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாத மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். இதேபோல உரிய தகுதியும் அங்கீகாரமும் பெறாத நபர்கள் மருத்துவர்களாக செயல்படுவது தடுக்கப்பட வேண்டும்.

அரசும், பல்வேறு மருத்துவ முறைகளின் கவுன்சில்களும் மட்டுமே இந்தக் கடமையை முழுமையாக நிறைவேற்ற இயலாது. இந்தியா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் நிறைந்த நாட்டில் இதுபோன்ற சட்டங்களை கடுமையாக செயல்படுத்துவதும் எளிதானதாக இல்லை.

விழிப்புணர்வு

மருத்துவ முறைகள் குறித்தும், மருத்துவர்கள் குறித்தும், மருந்துகள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு உருவாகுமானால் போலி மருத்துவர்களுக்கு முடிவுகட்டுவது எளிதாகும். அறிவியல் ரீதியாக நிரூபணமாகாத சிகிச்சை முறைகளையும், மருந்துகளையும் பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும்.

மாயத்தாலும், மந்திரத்தாலும் நோய்கள் தீரும் என்ற மூட நம்பிக்கையை மக்கள் விட்டொழித்து ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் மருந்துகளையும், சிகிச்சை முறைகளையும் மட்டுமே ஏற்கும் சூழ்நிலை உருவாக வேண்டும்.

ஊடகங்கள்

எய்ட்ஸ் போன்ற குணமாக்க இயலாத நோய்களுக்கு முழுமையான தீர்வு வழங்குவதாக கூறும் விளம்பரங்களை பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ஏற்பதில்லை என்ற நிலை உருவாகுமானால் இப்பிரச்சினைக்கு எளிதில் தீர்வு கண்டுவிடலாம். ஒட்டுமொத்த சமுதாய நலனில் பத்திரிகைத் துறைக்கு முக்கிய பொறுப்பு இருப்பதால், பொதுமக்களையும் குறிப்பாக போதுமான கல்வியறிவு இல்லாத ஏழை எளிய பாமர மக்களையும் குறிவைத்து வெளியாகும் இத்தகைய விளம்பரங்களை ஊடகங்கள் நிராகரிக்க வேண்டும்.

நுகர்வோர் நல அமைப்புகளும், அரசு சாரா அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், மருத்துவர் சங்கங்களும், மருத்துவ கவுன்சில்களும், மத்திய மாநில அரசுகளும் கைகோர்த்து செயல்பட்டால் இப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டுவிடலாம்.

அற்புத சிகிச்சை குறித்த விளம்பரங்கள் அண்மைக் காலமாக இணைய தளம் மூலமாகவும் மின் அஞ்சல் வாயிலாகவும் பரவுகின்றன. இவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாக வேண்டும். மேலை நாடுகளிலும் இப்பிரச்சினை இன்றளவும் நிலவுவதால் சர்வதேச அளவில் போலி மருத்துவத்திற்கும் போலி மருந்துகளுக்கும் சாவு மணி அடிக்கும் நாள் உருவாவதே மனித சமுதாயத்தின் விடியலாகும்.

மூலம்: இந்திய அரசின் பத்திரிகைத் தகவல் அமைச்சகம்!



போலிச் சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக