புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
142 Posts - 79%
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
307 Posts - 78%
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 9 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை- 1 முதல் 100 வரை


   
   

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jul 31, 2010 4:34 am

First topic message reminder :

1956ல் இலங்கையின்
அரசாங்க மொழியாகச் சிங்களத்தை அறிவிக்க முற்பட்டார்கள். தந்தை செல்வாவின் தலைமையில்
தமிழர்கள் அறவழிப் போராட்டம் நடாத்தினர். காலே ஃபேஸ் விடுதி வழியாக சென்றார்கள். கொழும்பு
துறைமுகம் அருகில் தான் உள்ளது. பணிகளை முடித்துக் கொண்டு சிங்கள பணியாளர்கள் எதிர்பட்டனர்.
பேனர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தனர்.



சிங்கள நாட்டில்
சிங்களத்தை ஆட்சி மொழியாக கொண்டுவர தமிழர்கள் எதிர்ப்பதா? ஒருவரையும் விடக்கூடாது என
முடிவெடுத்து, கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து, தாக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில்,
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். எக்காரணம் கொண்டும் திருப்பித்
தாக்கக் கூடாது என, தந்தை செல்வா தடுத்துவிட்டார். தமிழர்கள் சிதறி அங்கும் இங்கும்
ஓடினர். ஒளிந்து கொள்ளத்தான் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மனோகரன், வசீகரன் தந்தை செல்வாவின்
மகன்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டார்கள்..



இத்தாக்குதல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் தாக்கவில்லை, அனைத்து தமிழர்களின் வீடுகளிலும்
கடைகளிலும் புகுந்து தாக்கினார்கள், சூரையாடினார்கள். பேருந்து, ஆட்டோ மிதிவண்டியில்
செல்கின்ற தமிழர்கள் ஒருவரையும் விடவில்லை. இந்த தாக்குதலை கவனித்துப் பார்த்தால் நன்றாக
புரியும்… இந்த வெறி திடீரென தோன்றியது அல்ல. பல ஆண்டுகளாக, அவர்களின் மனதில் கனத்துக்
கொண்டிருந்த நெருப்பு, கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிமலையாக வெடித்தது.
தமிழன் எங்கெல்லாம் வசிக்கிறான், அவன் வீடு எண், கடைகள் எக்கெல்லாம் உள்ளது என சுலபமாக
கண்டுபிடித்து தாக்கினார்கள்.



ஆயினும், போராட்டக்
குழு, நாடாளுமன்றத்தை அடைந்தது. பிரதமர் பண்டாரநாயக்காவின் அலுவலகத்திற்குள் இரத்தம்
சொட்ட சொட்ட அமிர்தலிங்கமும், சுந்தரலிங்கமும் நுழைந்தனர். தங்களின் கருத்தை மனுவில்
குறிப்பிட்டு பிரதமரிடம் கொடுத்தனர். அவர்கள் சென்றபின், அது குப்பைத்தொட்டிக்கு சென்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு தந்தை செல்வா, சத்தியாகிரக போராட்டத்தை திரும்பப் பெற்றார்.



நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Oct 18, 2010 1:04 am

நவம்பர் 1,1984. இராசீவ் காந்தி இந்திய பிரதமரானார். ஜெயவர்தனேவுக்கு சில வாக்குறுதிகளைக் கொடுத்தார். இந்தியா எக்காரணம் கொண்டும் இலங்கை மீது போர் தொடுக்காது. இலங்கை விவகாரத்தை இந்தியா புத்தம் புதிதாக பரிசீலிக்கும். இலங்கை பிளவுபடாமல் ஒற்றுமையாக இருக்க இந்தியா உதவும். இராசீவ் ஒரு முட்டாள் என்பதை ஜெயவர்தனே புரிந்துக் கொண்டார். அவரின் அறியாமையை நன்கு பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.

இராசீவ் தலைமையில் பூடான் தலைநகரான திம்புவில் இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை தொடங்கியது.

யாழ்ப்பாணம் பக்கம் போய் ஒப்பந்தம் என்று சொன்னால், துடைப்பத்தால் நாலு அடி விழும். இலங்கை அரசு ஓகஸ்ட் மாதம் ஒரு ஒப்பந்தம் போடுவார்கள். பிறகு, அது செல்லாது என சொல்லி அக்ரோபரில் ஒன்று போடுவார்கள். பின் அதுவும் செல்லாது என அறிவிக்கப்படும். நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல், தமிழர்கள் பல ஒப்பந்தங்களை பார்த்துவிட்டனர். செல்வா-டட்லி ஒப்பந்தம், செல்வா-பண்டாரநாயகா ஒப்பந்தம், அமிர்தலிங்கம் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். பண்டாரநாயகா, சேனநாயகா, அந்த நாயகா, இந்த நாயகா என்று எக்கச்சக்க ஒப்பந்தங்கள்.

1985-ம் ஆண்டு யூலை 8-ம் தேதி திம்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள்(EPRLF, EROS, TELO, PLOTE), தமிழர் அரசியல் பிரதிநிதிகள்(அமிர்தலிங்கமும் அவரின் குழுவினரும்), இலங்கை அரசுப் பிரதிநிகள் என்று பலரும் கலந்துக் கொண்டனர். 8-ம் தேதி தொடங்கி 14 வரை நடக்க உத்தேசிக்கப்பட்டது. பிரபாகரன் கல்ந்துக் கொள்ளவில்லை. விடுதலைப் புலிகள் சார்பில் இரண்டு பேரை அனுப்பி வைத்தார்.

தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நான்கு முக்கிய கோரிக்கையை முன்வைத்தனர்.

1) ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்று அங்கீகரிக்கப்பட வேண்டும்.

2) சுயநிர்ணய உரிமை அளிக்க வேண்டும்.

3) தமிழர்களின் தாயகத்தை அங்கீகரிக்க வேண்டும்.

4) இலங்கையை தாய்நாடாக கொண்ட அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அவர்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்
.

பேச்சுவார்த்தைக்கென இலங்கை அரசு ஒரு இலக்கணத்தை வைத்திருந்தது. தமிழர்களின் பிரச்சனைகளை வாய்க்கிழியப் பேசுவார்கள். தமிழ் தலைவர்களை பேசவிட்டு கேட்பார்கள். இன்னும் சில நிமிடங்களில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துபோகும் என்னும் மாயையை உருவாக்குவார்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள்.. பின் அதை கிழித்தெறிந்துவிட்டு, தமிழர்களை தெருவில் இழுத்துப் போட்டு சாத்து சாத்து என சாத்துவார்கள்.

இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கும் போதே வவுனியா பற்றி எரிய ஆரம்பித்தது. இராணுவ வீரர்கள் வவுனியா நூல் நிலையத்துக்கு சென்றனர். உள்ளே தமிழர்கள் இருப்பார்கள் தானே? எவ்வளவு? நூறு? இருநூறு? படித்து அறிவை விருத்தி செய்து கொள்கிறார்களா? கொளுத்தப்பட்டது. கூக்குரலும் மரண ஓலமும் அனைத்து திசையெங்கும் கேட்டன. மொத்தம் 200 தமிழர்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கரிக்கட்டையாய் சரிந்தனர்.

இது நடந்தது திம்புவில் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருந்த போது. இனி பேச்சாவது மண்ணாவது? தமிழர் குழு கோபத்துடன் எழுந்துக் கொண்டது.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Oct 19, 2010 1:03 am

இரண்டாவது முறையாக அனிதா பிரதாப்புக்கு பிரபாகரன் பேட்டியளித்தார். சண்டே இதழில்(செப்டம்பர் 29- அக்டோபர் 5, 1985) வெளியான செய்தி பேட்டி.

அனிதா பிரபாப்: இந்த அமைதிப் பேச்சுவார்த்தை, ஜெயவர்தனே நடத்திய நாடகம் என நம்புகிறீர்களா? எப்படியாவது நேரத்தைக் கடத்தி தன்னை பலப்படுத்திகொள்ள வேண்டும் என்பது அவரின் திட்டமா?

பிரபாகரன்: நிச்சயமாக. அவர் ஒன்றை மறந்துவிட்டார். அவர் தனது பலத்தை அதிகரிக்கும் போது நாங்களும் அதையே தான் செய்வோம்.

அனிதா பிரதாப்: இந்திய அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டு, இந்தியா தனது ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டால் என்ன செய்வீர்கள்? உங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வீர்களா?

பிரபாகரன்: பிறகு? எங்கள் இலக்கை அடையும் வரை போராட்டத்தை நாங்கள் கைவிடப் போவதில்லை. இந்தியா எங்களுக்கு ஆதரவாக இருந்தால், நிச்சயமாக அது எங்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும். ஒருவேளை ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டால், அதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவின் உதவிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கமல்ல இது. அல்லது வேறு எந்த ஒரு வெளி ஆதரவையும் கொண்டு இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. இறக்கும் வரை நாங்கள் போராடுவோம். நான் இறந்துபோனால், இன்னொருவர் இந்த போராட்டத்தைத் தொடங்குவார்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Oct 19, 2010 1:13 am

சனவரி 1, 1987. விடுதலைப் புலிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். யாழ்ப்பாணத்தின் வடக்கு பிரதேசங்களின் நிர்வாக பொறுப்புகளை இனி நாங்கள் ஏற்று நடத்துகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி அது. நாங்களே வரி வசூலித்துக் கொள்கிறோம். தபால் தலைகள் கூட தயார். மூன்று தொலைக்காட்சிகள் தொடங்க ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. பல பாரிய திட்டங்களை வைத்திருக்கின்றோம். இனி சிங்கள அரசு இங்கு பிரவேசிக்கக் வேண்டாம். நன்றி.

உக்கிரம் கொப்பளிக்க உத்தரவிட்டார் ஜெயவர்தனே. பெட்ரோல், டீசல் ஒரு துளிக்கூட தமிழ் பிரதேசங்களுக்கு செல்லக் கூடாது. ஒரு மில்லியன் தமிழர்களும் தவித்து நடுத்தெருவுக்கு வர வேண்டும். வரட்டியாக காய்ந்து போகட்டும். அப்போது தான் அரசாங்கத்தின் அருமை அவர்களுக்குப் புரியும்.

இராணுவம் வெறியுடன் பிரவேசித்தது. புலிகள் பதிலடி கொடுக்க ஆயுத்தமாயினர். அதே சமயம், ராசீவ் காந்தி, ஜெயவர்தனேவை தொடர்பு கொண்டார். பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். இராணுவ தீர்வைக் காண முயல வேண்டாம். இதனை சற்றும் மதிக்காமல், ஜெயவர்தனே அடுத்த உத்தரவை பிறப்பித்தார்.

புல், பூண்டுகூட முளைக்காதபடி அழிக்கவும். யாழ்ப்பாண நகரங்களின் மீது விமானங்கள் குண்டு மழைப் பொழிந்தது. புலிகள் பதிலடி கொடுத்தனர். ஏப்ரல் 21, மாலை 5 மணிக்கு கொழும்பில் உள்ள பேருந்து நிலையத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டன. மே 26. இலங்கை தனது தாக்குதலை அடுத்தக் கட்டத்துக்கு முன்னெடுத்தது. ஆப்பரேசன் லிபரேஷன். வல்வெட்டித்துறையைக் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.

யாழ்ப்பாணத்துக்கு இந்தியாவிலிருந்து கப்பலில் உணவுப் பொருள்களும், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட்டன. அந்தக் கப்பலை இலங்கை திருப்பி அனுப்பியது. இந்தியாவும் இதைத் தான் விரும்பியது. உடனடியாக ஐந்து விமானப்படை விமானங்கள் தயார் செய்யப்பட்டன. அரிசி, கோதுமை, சர்க்கரை, உடைகள், உணவுப்பொருட்கள் ஏற்றிக் கொண்டு பெங்களூரிலிருந்து புறப்பட்டன. இலங்கை அரசின் அனுமதியை எல்லாம் எதிர்ப்பார்க்கவில்லை. யாழ்ப்பாணத்தின் மீது பறந்து பொட்டலங்களை வீசியது. இதனை மனிதாபிமான செயலாக மக்கள் பார்த்தனர். ஆனால் தன் வல்லமையை ஜெயவர்தனேவுக்கு எடுத்துக் காட்டவே இந்தியா செய்த காரியம் இது. ஒரு பொடலங்காய் மனிதாபிமானமும் கிடையாது.
அடுத்ததாக யாழ்ப்பாணம், சுடுமலை அம்மன் கோவிலில் தங்கியிருந்த பிரபாகரனை உலங்கு வானூர்தியில் அப்படியே தூக்கிப் போட்டுக் கொண்டு திருச்சிக்குப் போனார்கள். ஆப்பரேசன் பூமாலை.

அடிப்பட்ட பாம்பாக மாறியிருந்தார் ஜெயவர்தனே. இந்தியாவின் தலையீடு அவரை பின்வாங்க செய்தது. பொட்டலம் வீசத் தெரிந்த விமானங்களுக்கு குண்டு வீசத் தெரியாதா என்ன? ஜெயவர்தனே அந்த இராணுவக் குறிப்பை படித்தார். இலங்கை இராணுவம் பலவீனமடைந்து வருகிறது. புலிகள் இயக்கம் தினம் தினம் வலுப்பெற்று வருகிறது. துணிச்சலாக இராணுவத்தை டார்கெட் செய்து குண்டு வீசுகிறார்கள். நிலத்தில் கண்ணி வெடி புதைத்து வைக்கிறார்கள். தனி ஈழக் கோரிக்கை வலுவடைந்துக் கொண்டே போகிறது. கூடுதலாக இந்தியா அவர்களுடன் ஒட்டி உறவாடுகிறது. போகிற போக்கில் வடக்கு கிழக்கு பகுதிகளை தமிழர்களிடம் தாரை வார்த்துக் கொடுக்க நேரிடும்.

தவிரவும், தேசம் பொருளதார ரீதியாக மிகவும் பிந்தங்கி இருக்கிறது. இராணுவத்தை பலப்படுத்த எப்படியும் ஐந்து ஆண்டுகள் ஆகும். அதுவரை அரசு பிழைத்திருக்க வேண்டும். இலங்கை பிழைத்திருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் முதலிய இயக்கங்களின் கைகளை கட்டிப் போட்டால்தான் இனி தாக்குப்பிடிக்க இயலும்.

ஒரே வழி. இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவு முறிய வேண்டும். இருவருக்கும் இடையில் குரோதம் பரவ வேண்டும்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Oct 19, 2010 1:21 am

இலங்கையுடன் திட்டவட்டமாக பேசி ஒப்பந்தம் ஒன்றை அமைத்துக் கொள்ளும் உத்தேசத்தில் இருந்தது, இந்தியா. மீண்டும் ஓர் ஒப்பந்தம். ஆனால், இலங்கை சரித்திரத்தை மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் சரித்திரத்தையும், தமிழர்களின் சரித்திரத்தையும், ஏன் இந்தியாவின் சரித்திரத்தைக் கூட வெகுவாக மாற்றியமைத்த ஒப்பந்தம் அது.

திருச்சியிலிருந்து இலங்கை திரும்பிய பிரபாகரனுக்கு, ராசீவிடமிருந்து அழைப்பு வந்தது. தில்லியிலிருந்த ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்க வைத்தனர். அப்படியே, தமிழ் பிரதிநிதிகளையும் வரவழைத்தனர்.

இராசீவ் கொடுத்தனுப்பினார் என்று ஒரு கத்தை காகிதங்களை கொடுத்துவிட்டு சென்றனர். படித்து பார்த்துவிட்டு கையெழுத்திடுமாறு கூறினர். பிரபாகரனும் ஆண்டன் பாலசிங்கமும் படித்துப்பார்த்தனர். இந்தியா ஜெயவர்தனேவுடன் செய்து கொள்ளப்போகும் ஒப்பந்தத்தின் பிரதி அது. பிரச்சனையின் அடித்தளமே அது என்பதால், விடுதலைப் புலிகள் என்பதால் அவர்களிடமிருந்து ஒரு கையெழுத்து.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்…

1) இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்படும். இணைப்பு தொடர வேண்டுமா என வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கப்படும். இந்த வாக்கெடுப்பு ஒட்டுமொத்த இலங்கையிலும் நடத்தப்படும். இலங்கையில் பெரும்பான்மையினர் சிங்களவர்கள். ஆகவே இணைப்பு தொடராது.

2) இலங்கை இராணுவத்துக்கும் தமிழ்ப் போராளிகளுக்கும் இடையே யுத்த நிருத்தம். யுத்தம் மீண்டும் தொடராமல் இருக்க இந்தியா தனது படைகளை அனுப்பும். அமைதிப்படை என்னும் பெயரில்.
3) போராளிகள் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். இராணுவ உதவி தேவைப்பட்டால் இந்தியா அனுப்பும். அதாவது, இலங்கை இராணுவத்துக்கு.

4) இலங்கை இராணுவமும் காவல் துறையும் கைது செய்திருக்கும் தமிழ்ப் போராளிகளை விடுவிக்கும்

5) இலங்கை இராணுவத்துக்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிக்கும்.


பிரபாகரன் நிராகரித்துவிட்டார். ராசீவ்வின் அதிகாரிகள் முதலில் கேட்டுப்பார்த்தனர், பின் கெஞ்சிப்பார்த்தனர். பின் மிரட்டிப் பார்த்தனர். ஆனால் பிரபாகரன் மசியவில்லை. உடனே ராசீவ் பிரபாகரனைத் தொடர்பு கொண்டார். உங்களுக்கு நன்மை செய்வதற்காக தானே இந்த ஒப்பந்தம். ஏன் நிராகரித்தீர்கள் எனக் கேட்டார். இந்த ஒப்பந்தம் பற்றி இந்தியாவோ இலங்கையோ ஒரு வார்த்தைக் கூட எங்களிடம் கூறவில்லை. மேலும் ஒரு விடுதியில் என்னை சிறைவைத்துள்ளீர்கள். இது நியாயமா? பிரபாகரன் விடுவிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் விரைந்தார்.

கையோடு கையாக ராசீவ் இலங்கை பறந்து சென்றார். யூலை 29, 1987 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில். தமிழர்களுக்கு எதிராக இந்தியாவும் இலங்கையும் நிகழ்த்திய கொடூரங்களின் ஆரம்பம் இந்த ஒப்பந்தம்.
யூலை 30, 1987. ராசீவ் இந்தியாவிற்கு கிளம்ப வேண்டிய தினம். இராணுவ மரியாதை அளித்து அவருக்கு வழியனுப்ப இலங்கை முடிவுசெய்திருந்தது. இராணுவ அணிவகுப்பை பார்வையிட்டுக் கொண்டே வந்தார் இராசீவ். ஒரு துப்பாக்கியின் பின்புறக் கட்டையால் அவரைத் தாக்க வந்தான் ஒரு சிங்கள சிப்பாய். பின்வாங்கிய இராசீவ்வின் பின்புறத் தோள்பட்டையில் அடி விழுந்தது. அவரைத் தாக்கியவன், விஷயமுனி விஷிதா ரோகண டி சில்வா. இலங்கை கடற்படையில் வேளை செய்பவன்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Oct 19, 2010 1:26 am

யூலை 30, 1987. ஒவ்வொரு தமிழனின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. ஜெனரல் திபேந்திர சிங் தலைமையில் இந்திய அமைதிப் படை(Indian Peace Keeping Force- IPKF) இலங்கையில் கால் பதித்ததுதான் அவர்களின் கொண்டாட்டங்களுக்கு காரணம்.

இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டு பொருட்களை தடை செய்தபோது, வானத்திலிருந்து அருளிய தேவர்கள். எமது தலைவர்களை பத்திரமாக பாதுகாத்து இந்தியாவிற்கு கொண்டு சென்ற இராணுவம். இதோ, வந்துவிட்டது. எமது குலத்தைக் காக்க. எமது உயிரைக் காக்க. எமது போராட்டத்தைக் காக்க. சொல்லமுடியாது, பாக்கித்தானிலிருந்து பங்களாதேசை பிரித்தது போல, இலங்கையிடமிருந்து எம்மை விடுவிக்கலாம். தமிழீழக் கனவு நினைவாகப் போகிறது. பாவம். அவர்களுக்கு தெரியவில்லை. காலன் இந்தியாவின் படை வடிவில் வந்திருக்கிறான் என்று.
இன்முகத்துடன் இந்திய வீரர்களை, வரவேற்றார்கள் தமிழர்கள். தமிழ் பெண்கள் இராணுவ வீரர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். அளவற்ற மகிழ்ச்சியுடன் அவர்களுடன் கதைத்தார்கள். விடுதலைப் புலிகள் மட்டும் முதலிலிருந்தே முறைத்துக் கொண்டு நின்றது. மனதில் ஏதோ ஒரு அவநம்பிக்கை. எதற்கும் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்றார் பிரபாகரன்.

எந்தவொரு இராணுவ பள்ளியில் பயின்றவர் அல்லர் அவர். பலமுறை தனது இயக்கத்தவரை பயிற்சி முகாம்களுக்கு அனுப்பியிருந்தாலும், தனிப்பட்ட முறையில் எந்தவொரு பயிற்சியையும் அவர் மேற்கொண்டதில்லை. இராணுவ குரு என்று அவருக்கு யாரும் கிடையாது. தனக்குத்தானே கற்பித்துக் கொண்டு, தனக்குத்தானே பயிற்சிகள் அளித்துக் கொண்டு தன்னை செழுமைப்படுத்திக் கொண்டவர். ஆனால் அவரின் தீர்க்கதரிசமும், அவரின் போர் யுக்திகளும் தோற்றது கிடையாது. உலகின் இராணுவ வல்லுநர்கள் அனைவரும் அதிசயிக்கும் ஒரு மாவீரன்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Oct 19, 2010 1:31 am

போராளிகள் அனைவரும் ஆயுதங்களை கையளிக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. ஆகவே, இந்திய அமைதிப்படையின் தளபதிகள் விடுதலைப்புலிகளை சந்தித்து பேசினார்கள். நேரம், இடம் எல்லாம் முடிவானது. ஆகஸ்ட் 5, யோகி என்னும் புலி, தன் ஆயுதத்தை கையளித்தார். பின் இன்னும் ஆயுதங்கள். ஆனால் மற்ற போராளிக் குழுக்கள்?

இந்திய அரசுக்கு நன்கு தெரிந்திருந்தது. புலிகளை மட்டும் என்ன விலைக் கொடுத்தாலும் விலைக்கு வாங்க இயலாது. மற்ற குழுக்கள் ஒரு பொருட்டே அல்ல. இந்தியாவின் உளவு அமைப்பான ”றோ”, ஈ.பி.ஆர்.எல்.ஃப். போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தது. இந்தியாவின் யுக்தி வேறு வகையாக இருந்தது. இதை அறிந்துக் கொண்டது போல புலிகளும் அனைத்து ஆயுதங்களையும் கையளிக்கவில்லை.

அமைதிப்படை வந்த பின்னும், கிழக்கில் தமிழர்கள் மீது சிங்களவர்கள் நடாத்தும் அட்டூழியங்கள் குறையவில்லை. இது புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திலீபனை ஆத்திரப்படுத்தியது. இந்திய அமைதிப்படை வந்தால் அனைத்தும் சரி ஆகிவிடும் என்றார்களே. ஏன் நடக்கவில்லை? இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டால், தமிழர்களுக்கு இனி எந்த பிரச்சனைகளும் இராது என்றார்களே? இந்தியா உத்தரவாதம் கொடுத்ததே?

செப்டம்பர் 15 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார் திலீபன். சில முக்கிய கோரிக்கைகளை இந்திய அரசாங்கத்தின் முன் வைத்தார்.

1) பொய் வழக்குகளில் சிக்கி சிறையில் வாடும் அப்பாவி தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்த வேண்டும்.

2) கிழக்கு மாகாணங்களில் அரசின் உதவியுடன் திட்டமிட்டே நடாத்தப்படும் சிங்களக் குடியேற்றங்களை உடனே நிறுத்த வேண்டும்.

3) தமிழர் பகுதியில் இருக்கும் இராணுவ காவல் முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்.

4) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடைக்கால நிர்வாகத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் அதிகாரம் யாரிடமுள்ளது என அமைதிப் படைக்கு தெரியவில்லை. துப்பாக்கிகளை பழகிய இந்திய வீரர்களுக்கு, அரசியல் விளையாட்டு தெரியவில்லை.

நாளுக்கு நாள் யாழ்ப்பாணத்தின் நிலை மோசமாகிக் கொண்டு போனது. திலீபனுக்கு ஆதரவாக மக்கள் பலரும் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்கள்.

உண்ணாவிரதம் இருந்த பனிரண்டாம் நாள், செப்டம்பர் 26-ம் தேதி, அந்த செய்தி வந்து சேர்ந்தது.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Oct 19, 2010 1:37 am

நிலைகொள்ளாமல் தள்ளாடினார் பிரபாகரன். ஒரு சொட்டு நீர் கூட அருந்த மறந்துவிட்டாயே திலீபா! காந்தியின் பாதையில் தந்தை செல்வாவின் பாதையில் போராட்டத்தை இட்டுச் சென்ற உனக்கு மரணமே பரிசாக கிடைத்திருக்கிறது. இந்தியாவின் அலட்சியத்தால், திமிர்தனத்தால் விழைந்த மரணம். உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த உலகின் முதல் போராளி நீயே. நீ அமைத்த பாதையில் நாங்கள் பயணிப்போம். எமது இயக்கத்தின் பலத்தை இந்திய அரசுக்கு புரியவைப்போம். உனது வீரமரணம் எமக்கு உத்வேகம் அளிக்கட்டும்.

தினமும் விடுதலைப் புலிகளின் வானொலியிலும் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் திலீபனின் நிலையை எடுத்துச் சொல்லிவந்ததால், ஈழமே கொந்தளித்தது.

ஒக்ரோபர் 3-ம் தேதியன்று இலங்கை இராணுவம் 17 விடுதலைப்புலிகளை சுற்றிவளைத்தது. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் குமரப்பா, திருகோணமலைக் கமாண்டர் மற்றும் புலேந்திரன், யாழ்ப்பாண கமாண்டர். இந்திய அமைதிப்படை அங்கே உடனே விரைந்தது. இந்தியாவைத் தொடர்பு கொண்டனர். அமைதி ஒப்பந்தம் அமுலில் இருக்கும் போது விடுதலைப் புலிகளை கைது செய்வது கண்டனத்துக்குரியது. போராளிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

அமைதிப்படையால் அதனை உடனே செய்திருக்க முடியும். அமைதிப்படையின் கமாண்டர் திபேந்தர் சிங் அங்கே தான் இருந்தார். இந்தியத் தூதர் தீக்ஷித் இருந்தார். ஆனால் அவர்களை ஜெயவர்தனே தூக்கி சாப்பிட்டார். இது என் நாடு. நான் வைத்தது தான் சட்டம். உடனே புலிகளை எங்கள் இராணுவத்திடம் ஒப்படையுங்கள் என்றார்.

பலாலி இராணுவ முகாமில் அவர்களைச் சிறையில் அடைத்தது இலங்கை இராணுவம். பதினேழு பேரையும் கொழும்புக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளை செய்தனர்.

ஒக்ரோபர் 5. ஆன்டன் பாலசிங்கமும் மாத்தையாவும் சிறைக்கு சென்று பதினேழு பேரையும் சந்தித்தனர். சிறிது நேரம் உரையாடிவிட்டு கிளம்பினார்கள்.

இலங்கை அரசு அதிர்ந்தது. குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேர் சயனைட் உட்கொண்டு இறந்துவிட்டார்கள். மற்ற ஐந்து பேரைக் காப்பாற்ற தீவிர சிகிச்சை நடந்துக் கொண்டிருக்கிறது. கூடுதலாக ஒரு செய்தி வந்து சேர்ந்தது. இலங்கை அரசு உரைந்து போனது. எட்டு சிங்கள இராணுவத்தினர் உயிரற்ற உடல்களாக யாழ் பேருந்து நிலையத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அமைதி ஒப்பந்தம், அமைதியாய் ஒழிந்துபோனது.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Oct 19, 2010 1:42 am

அமைதிப்படைக்கு இந்தியாவிலிருந்து ஆணை வந்தது. விடுதலைப் புலிகள் பிரச்சனை செய்கிறார்கள். அடக்கிவிடுங்கள்.

என்ன பெரிய புலி? இலங்கை அரசுக்கு வேண்டுமானால் அவர்கள் பூதம், பிசாசாக இருக்கலாம். எங்களுக்கு அவர்கள் வெறும் கொசு. ஒரு வாரம் கூட வேண்டாம். நாலே நாள் போதும். புலி என்று சொல்லிக் கொண்டு ஒரு பயலும் வாலாட்ட முடியாது.

ஒக்ரோபர் 10. இந்திய அமைதிப்படை களத்தில் இறங்கியது. முதலில் புலிகளின் செய்தித்தாள்கள் அச்சாகும் அலுவலகங்கள் நொறுக்கப்பட்டன. அன்று மாலையே புலிகளின் தொலைக்காட்சி நிலையம் தகர்க்கப்பட்டது. செய்து பரவாமல் தடுக்க.

இது நாள் வரை சிங்கள இராணுவம் என்னென்ன செய்ததோ அனைத்தையும் இந்திய அமைதிப்படை செய்தது.
வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களை தர தர வென்று இழத்துச் சென்று வெளியில் தள்ளுவார்கள். கட்டி வைத்து அடி, அடி, அடியென அடித்து எழும்பை முறித்தனர். கும்பல் கும்பலாக இழுத்துச் சென்று இந்திய இராணுவ முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்தனர். சோதனை என்ற பெயரில் சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி ஓட்டுநரை அடித்து துவைத்தனர்.. நள்ளிரவில் வீட்டுக் கதவை உடைத்து, விசாரணை என்ற பெயரில் பெண்களிடம் தவறாக நடந்துக் கொண்டனர். கணவனையும் மனைவியையும் தனித் தனியே அடைத்து விசாரனை செய்தனர்.

எந்நேரம் வருவார்களோ என தெரியாமல் இரவு முழுவதும் கண்விழித்து முகம் வீங்கும் வரை அழுது தீர்த்த குடும்பங்கள் பற்பல. தீவிர மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்துகொண்டவர்கள் பலர்.

விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்ட சில பெண்கள் பிற்பாடு சாலையோரமோ, குப்பைத்தொட்டி ஓரமோ உடைகளற்று உடலெங்கும் இரத்தக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டனர். மயங்கிய நிலையில் அல்லது இறந்து சில நாட்கள் கழித்து.

இந்திய அமைதிப்படை வருமா? வருமா? என ஏங்கித் தவித்த தமிழர்கள், சீ இவர்கள் எப்போது ஒழிந்து போவார்கள் என வாய்விட்டுக் கதறினர்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Oct 19, 2010 1:48 am

ஒக்ரோபர் 12,1987. பிரபாகரனின் தளத்தை அறிந்துக் கொண்டு மிக மிக இரகசியமாக முன்னேறியது இந்திய கூலிப்படை. முதல் படையில் 72 பேர். இரண்டாவது படையில் 91 பேர். எதிர் எதிர் திசையில் திரளவேண்டும். பிரபாகரன் தப்பித்து செல்ல வழியில்லாதபடி சுற்றி வளைக்க வேண்டும். இது போதாதென்று, உலங்கு வானூர்தி மூலம் 103 அதிரடிப் படையினர் குதிக்க வேண்டும். மேலும் முழுக்க முழுக்க கமாண்டோக்கள் நிறைந்த ஒரு பிரிவு.

இயந்திரத் துப்பாக்கிகள் தயார் நிலையில், பிரபாகரனுடன், மாத்தையா, பொட்டம்மான் மற்றும் சில புலிகள் காத்திருந்தனர். உலங்கு வானூர்தி வந்து சேர்ந்தது. வீரர்கள் இறங்க ஆரம்பித்தார்கள். ஓவ்வொரு வீரர் இறங்க இறங்க சுட்டுக் கொண்டே இருந்தார்கள். காலாட்படையை கவனித்துக் கொள்ள தனியொரு புலிப்படை தயார் நிலையில் இருந்தது. முடியும் வரை நிறுத்த வேண்டாம் என்றார் பிரபாகரன். சில மணி நேரங்களில் இந்திய கூலிப்படையிடமிருந்து எந்த சத்தமும் எழவில்லை. அன்றைய தாக்குதலில் உயிர் பிழைத்து ஊர் போய் சேர்ந்த IPKF வீரர்கள் இருவர் மட்டுமே.

புலிகளை அடக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. போரிட வந்திருந்தால் அதற்கென கனரக அயுதங்களை எடுத்து வந்திருக்கலாம். ஆனால் சாவதற்காகவே வந்தால் என்ன செய்வது? புலம்பியது இந்திய கூலிப்படை. புலிகள் எங்கே இருக்கிறார்கள்? எங்கே பதுங்குகிறார்கள்? எப்படித் தாக்குகிறார்கள்? எதுவும் புரியவில்லை.

மற்றொரு புறம், கெரில்லா தாக்குதல் நடாத்துகிறார்கள். புலிகளை சந்திக்க முடியாத இந்திய கூலிப்படை பலத்த ஆள் சேதத்தைக் கண்டது. அரசியல் ரீதியாகவும் என்ன சாதிக்கப்போகிறோம் என இந்திய அமைதிப்படைக்கு புரியவில்லை. யார் எதிரி? யார் நண்பன்? யாரை எதற்காகத் தாக்குகிறோம்? யார் நம்மைத் தாக்குகிறார்கள்? பொதுமக்கள் நமது எதிரிகளா? நண்பர்களா? எதுவும் புரியாத குழப்பத்திலும், வெறியிலும் இடையில் சிக்கிக் கொண்டது அப்பாவி தமிழ் மக்கள்தான்.

விடுதலைப் புலிகளைத் தவிர மற்ற அனைத்து இயக்கங்களும் இந்திய கூலிப்படைக்கு கைகூலியாக செயல்பட்டன. ஒருபுறம் விடுதலைப் புலிகளுடன் சண்டை. மற்றொரு புறம், தன் சொந்த தமிழ் மக்கள் மீது தாக்குதல்.
இதற்கிடையே, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி ஒருங்கிணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான மும்முரங்களில் அமைதிப்படை ஈடுபட வேண்டியதாயிற்று.

நவம்பர் 1988. தேர்தல் நடைப்பெற்றது. விடுதலைப் புலிகள் தேர்தலை புறக்கணித்தனர். EPRLF, ENTLF அமைப்புகளும், கிழக்கு பகுதிகளில் இசுலாமிய அமைப்புகளும் தேர்தலில் வெற்றி பெற்றன. EPRLF சார்பாக வரதராச பெருமாள் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Oct 19, 2010 1:54 am

இந்நிலையில் தமிழர்களுக்கு எதிரான தனது பராக்கிரமங்களை முடித்துக் கொண்டு, ஜெயவர்தனே ஓய்வுபெற்றார். அடுத்த தேர்தலில் ரணசிங்க பிரமதேசா, சிறிமாவோ பண்டாரநாயகாவை மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்று, சனவரி 2,1989-ல் பதவியேற்றுக் கொண்டார். ஜெயவர்தனே காலத்தில், பிரேமதாசா பிரதமராக பணியாற்றியவர். இலங்கை விவகாரத்தில் இந்தியா மூக்கை நுழைப்பதை, அல்ல, மூக்கின் நிழலை நுழைப்பதைக் கூட விரும்பாதவர். ஆட்சியில் அமர்ந்த மறுநொடி அவர் மனதில் ஓடிய எண்ணம்… எப்படி இந்திய படைகளை இலங்கை மண்ணிலிருந்து அகற்றுவது?

இதனை விடுதலைப் புலிகள் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இலங்கை அரசாங்கம் நமது எதிரி தான். அதைவிட முக்கியம் அயல் எதிரியான இந்தியா. சிங்கள அரசுடனான போராட்டம் என்றென்றும் நீளக்கூடிய ஒன்று. அவர்களும் இங்கே தான் இருக்கப் போகிறார்கள். நாமும் இங்கே தான் இருக்கப் போகிறோம். பின்னால் கவனித்துக் கொள்ளலாம். அதற்கு முன்னால், இந்தியாவை விரட்ட வேண்டும்.

பிரபாகரனும் பிரேமதாசாவும் ஒரு புள்ளியில் இணைந்தார்கள். இந்தியாவின் தலையீட்டை இருவரும் விரும்பவில்லை. இந்திய அமைதிப்படை இங்கே இருக்கக்கூடாது. என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். பண உதவி. பொருள் உதவி. ஆயுத உதவி. தார்மீக உதவி. எதுவேண்டுமானாலும் கேளுங்கள் என்றார் பிரேமதாசா. புன்னகைத்தார் பிரபாகரன்.

விடுதலைப் புலிகளின் இடைவிடாத தாக்குதல். பிரேமதாசாவின் வெறுப்பு. ஈழத் தமிழர்களின் முழு எதிர்ப்பு. மூன்றையும் எதிர்கொள்ள வேண்டிய தர்மசங்கடத்துக்கு இந்திய அமைதிப்படை தள்ளப்பட்டது. இராசீவ் இருக்கும் வரையில் அமைதிப்படை திரும்ப அழக்கப்படமாட்டாது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேறினால் தான் அமைதிப்படை திரும்ப அழைத்துக் கொள்ளப்படும் என்றார் இராசீவ். அதுவும், பிரேமதாசாவோ, பிரபாகரனோ விரும்பினால் அல்ல. இராசீவ் விரும்பினால் தான். ஆனால் இராசீவ்வின் விருப்பம் தேவைப்படவில்லை.

போஃபர்ஸ் பீரிங்கி ஊழலில் சிக்கித் தவித்த இராசீவ் தேர்தலில் தோற்றுப்போனார். ஐக்கிய முன்னனியின் வி.பி.சிங் பிரதமரானார். அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் உதவியுடன் தான் வி.பி.சிங் பிரதமரானார். கருணாநிதி வி.பி.சிங்கைத் தொடர்புகொண்டு. அமைதிப்படையை உடனே திரும்பப் பெறுமாறு வற்புறுத்தினார்.

மார்ச் 24,1990 அன்று இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து வெளியேறியது. ஜெனரல் திபேந்திர சிங்கின் தலைமையில் வந்த இந்திய கூலிப்படை லெப்.ஜென்ரல். அமர்ஜித் சிங்கின் தலைமையில் வெளியேறியது.
1971 யுத்தத்தில், பாக்கித்தானுடன் மோதி பங்களாதேசை விடுவித்த போது பலியான இந்திய வீரர்களின் எண்ணிக்கை 1,047. அமைதியை நிலைநாட்டுகிறோம் என்று சொல்லிக் கொண்டு இலங்கைக்கு சென்ற இந்திய படையில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 1,115.

எஞ்சியிருந்த உயிர் தப்பிய வீரர்கள் முணுமுணுத்துக் கொண்டார்கள். விடுதலைப் புலிகள் விவகாரத்தில் நம் கணிப்பு தவறோ?
வியத்நாமிலும், ஆப்கானித்தானிலும் தோற்றுப்போன அமெரிக்காவிற்கு இன்றுவரை அது ஒரு தீராக் கலங்கமாக இருக்கிறது. அது போல இந்தியாவிற்கு இலங்கை யுத்தம் முகத்தில் கரியைப் பூசியது.


Sponsored content

PostSponsored content



Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக