புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
75 Posts - 58%
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
70 Posts - 58%
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை- 1 முதல் 100 வரை


   
   

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jul 31, 2010 4:34 am

First topic message reminder :

1956ல் இலங்கையின்
அரசாங்க மொழியாகச் சிங்களத்தை அறிவிக்க முற்பட்டார்கள். தந்தை செல்வாவின் தலைமையில்
தமிழர்கள் அறவழிப் போராட்டம் நடாத்தினர். காலே ஃபேஸ் விடுதி வழியாக சென்றார்கள். கொழும்பு
துறைமுகம் அருகில் தான் உள்ளது. பணிகளை முடித்துக் கொண்டு சிங்கள பணியாளர்கள் எதிர்பட்டனர்.
பேனர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தனர்.



சிங்கள நாட்டில்
சிங்களத்தை ஆட்சி மொழியாக கொண்டுவர தமிழர்கள் எதிர்ப்பதா? ஒருவரையும் விடக்கூடாது என
முடிவெடுத்து, கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து, தாக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில்,
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். எக்காரணம் கொண்டும் திருப்பித்
தாக்கக் கூடாது என, தந்தை செல்வா தடுத்துவிட்டார். தமிழர்கள் சிதறி அங்கும் இங்கும்
ஓடினர். ஒளிந்து கொள்ளத்தான் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மனோகரன், வசீகரன் தந்தை செல்வாவின்
மகன்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டார்கள்..



இத்தாக்குதல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் தாக்கவில்லை, அனைத்து தமிழர்களின் வீடுகளிலும்
கடைகளிலும் புகுந்து தாக்கினார்கள், சூரையாடினார்கள். பேருந்து, ஆட்டோ மிதிவண்டியில்
செல்கின்ற தமிழர்கள் ஒருவரையும் விடவில்லை. இந்த தாக்குதலை கவனித்துப் பார்த்தால் நன்றாக
புரியும்… இந்த வெறி திடீரென தோன்றியது அல்ல. பல ஆண்டுகளாக, அவர்களின் மனதில் கனத்துக்
கொண்டிருந்த நெருப்பு, கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிமலையாக வெடித்தது.
தமிழன் எங்கெல்லாம் வசிக்கிறான், அவன் வீடு எண், கடைகள் எக்கெல்லாம் உள்ளது என சுலபமாக
கண்டுபிடித்து தாக்கினார்கள்.



ஆயினும், போராட்டக்
குழு, நாடாளுமன்றத்தை அடைந்தது. பிரதமர் பண்டாரநாயக்காவின் அலுவலகத்திற்குள் இரத்தம்
சொட்ட சொட்ட அமிர்தலிங்கமும், சுந்தரலிங்கமும் நுழைந்தனர். தங்களின் கருத்தை மனுவில்
குறிப்பிட்டு பிரதமரிடம் கொடுத்தனர். அவர்கள் சென்றபின், அது குப்பைத்தொட்டிக்கு சென்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு தந்தை செல்வா, சத்தியாகிரக போராட்டத்தை திரும்பப் பெற்றார்.



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 17, 2010 11:37 pm

உங்கள் விருப்பப்படி பதியுங்க நிசாந்தன்.. நான் அதை அவ்வப்போது இணைத்துக்கொண்டே வருகிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 11:42 pm

திருநெல்வேலியில் எல்.டி.டி.ஈ நடாத்திய தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடியாக நடந்த நிகழ்ச்சி என சிங்களர்கள் கூறினாலும், இது சிங்களரின் திட்டமிட்ட ஒருங்கிணைக்கப்பட்ட மிருகத்தனம் என்று மட்டுமே அதை அழைக்க முடியும். இது நடந்தது 1983, யூலை மாதத்தில். இதனை யூலை 1983 சம்பவம் என்று இலங்கை இதனை பதிவு செய்திருக்கிறது. தமிழர்களுக்கு இது கறுப்பு யூலை.
அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடன் சிங்களர்கள் யூலை 24-ல் ஆரம்பித்தார்கள். ஏழு நாட்கள் நடந்த கோரத் தாண்டவம். தமிழன் என்ற ஓர் இனமே இலங்கையில் இருக்கக் கூடாது என்னும் வெறி ஒவ்வொருவரின் கண்ணிலும் தெரிந்தது. இந்த ஏழு நாட்களில் எத்தனை லிட்டர் பெட்ரோல் செலவானது என கண்டுபிடிக்க முடிந்தால், எவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டனர் என தெரிந்து கொள்ளலாம்.

தமிழர்களின் வீட்டை வெளியில் பூட்டிவிட்டு உள்ளே தீப்பந்தத்தை தூக்கியெறிந்தனர். தமிழர்களின் கடைகளை உடைத்து சரக்குகளை சூரையாடினர். ஒரே ஒரு நிபந்தனை. எடுத்து முடித்தபின், கடையையும் கடைக்காரனையும் எரித்துவிட வேண்டும்.

பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள். வகுப்புக்குச் செல்லும் ஆசிரியர்கள். வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினர்கள். தந்தை செல்வாவின் அறவழியில் செல்பவர்கள். இன்று பிறந்த குழந்தை முதல் நாளை இறக்கப் போகும் வயதானவர்கள் வரை அத்தனை பேரையும் கொன்று தீர்த்தார்கள். சைக்கிள் டயரை உடலில் சுற்றி பெட்ரோல் ஊற்றி எரித்தார்கள்.

கொழும்பிலுள்ள வெளிக்கடை சிறைச்சாலையில், அடைக்கப்பட்டிருந்த 35 தமிழர்கள், அங்கிருந்த சிங்கள கைதிகளால் படு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அரசியல் கைதிகள். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் வெறுமனே சந்தேகத்தின் பேரில் அடைக்கப்பட்டிருந்தனர்.

குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட 35 பேரும் கொல்லப்பட்டனர். குட்டிமணியை சிங்களருக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால், நீதிமன்றத்தில் தனது இறுதி வாக்குமூலமாக தனது கண்களை ஒரு தமிழ் சிறுவனுக்கு வைக்குமாறு கேட்டுக்கொண்டார். தான் இறந்த பின், தமிழ் ஈழம் உருவாவதையும், தமிழ் மக்களின் சுதந்திர தன்மான வாழ்க்கையை அந்த கண்கள் மூலமாக பார்க்க ஆசைப்பட்டார். ஆகையால் முதலில், குட்டிமணியின் கண்களை தோண்டி எடுத்து அதனை காலில் போட்டு மிதித்தனர். பின் அவரின் உடலை உயிரோடு கிழித்தனர்.

சிறையின் ஒரு மூலையில் மறைந்திருந்த மயில்வாகணன் என்னும் 16 வயது சிறுவனை, சிங்களர்கள் கவனிக்க தவறிவிட்டனர். ஆனால் அவனை கண்டுகொண்ட சிறைக் கண்காணிப்பாளர், அவனை அடித்தே கொன்றார்.

கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களை, சிறைக்குப் பின்னால் இருந்த புத்தர் சிலைக்கு முன்னர் குவித்தனர். குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட அத்தனை தமிழரின் இர்த்தத்தால் புத்தரை குளிப்பாட்டினர். இது வருணனை அல்ல. உண்மைச் சம்பவம். அமைதியையே போதித்து, எறும்புக்கு கூட தீங்கு விழைவிக்காத கவுதம புத்தரின் சிலைக்கு இரத்தாபிசேகம் செய்தனர். புத்தரின் சிலைக்கு முன்னால் குவிக்கப்பட்ட உடல்களையும் கொளுத்தினர்.

இலங்கை இனப் பிரச்சனைக்கு ஆயுதப் போராட்டம் ஒன்றே வழி என்னும் நம்பிக்கையை ஒவ்வொரு தமிழனின் மனதிலும் மிக அழுத்தமாக பதிய வைத்த சம்பவம் அது.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 11:45 pm

நன்றி கலை அவர்களே. மீண்டும் 53வது பதிவை மட்டும் தனியாக இணைக்கிறேன்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Oct 18, 2010 12:12 am

தமிழகம் முழுவதும் தமிழ் மக்கள் வீதிகளுக்கு வந்து ஜெயவர்தனேக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள். குறிப்பாக சென்னையிலும் மதுரையிலும். இதற்கு மேலும் இந்திரா காந்தி தலையிடாமல் இருப்பது சரியல்ல என அவர்கள் கூறினார்கள். தமிழகத்திலுள்ள ஐந்து கோடி தமிழர்களும் இர்த்தக் கண்ணீர் வடிக்கிறார்கள் என தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் கூறினார். இந்திரா காந்தி விரைந்து செயல்படுமாறு கலைஞர் வழியுறுத்தினார்.

அப்போதைய வெளியுறவு அமைச்சர் பி.வி.நரசிமராவை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் இந்திரா காந்தி. இன்முகத்துடன் வரவேற்றார் ஜெயவர்தனே. வரும் வழியில் ஒரு இளம் தமிழ் பெண்ணை சிங்களர்கள் எரித்துக் கொள்வதை பார்த்தார். நாங்கள் எவ்வளவு போராடியும் சிங்கள மக்களை தடுக்க இயலவில்லை அவர்கள் தமிழர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்றார் ஜெயவர்தனே. ஏழு நாட்களும் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தனர். நரசிம்மராவ் ஒரே கேள்வியைத் தான் கேட்டார்.

”நீங்கள் நிறுத்துகிறீர்களா? இல்லை நாங்கள் நிறுத்தட்டுமா?”. அடுத்த ஒரு மணி நேரத்தில் பேச்சை முடித்துக் கொண்டு, விமான நிலையத்துக்கு செல்லும் வழியில், தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. ஜெயவர்தனேவால் வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்ட கலவரம் என வெளிச்சம் போட்டுக் காட்டிய நிகழ்ச்சி அது.

ஜெயவர்தனே மக்கள் முன் உரையாற்றினார்.
“இத்தனைக்கும் காரணம் எல்.டி.டி.ஈ. தான். இராணுவத்தினரை அவர்கள் கொன்றதால் தான் சிங்களர்கள் கொதிப்படைந்திருக்கிறார்கள். இன்னொரு விடயம். தனி தேசம் கேட்டு யாரும் இங்கே போராட்டம் நடத்தக் கூடாது. அதற்கு ஏற்றாற்ப்போல அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கப் போகிறேன். இலங்கையில் தனி நாடு அமையாது. அமையக்கூடாது.”


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Oct 18, 2010 12:17 am

நிசாந்தன் wrote:இதை எப்படி செய்தீர்கள்?

ராஜா அண்ணன் சொன்ன காட்டிய வழியில் இப்படி இணைக்க முடிந்தது. கொஞ்சம் சிரமப்பட்டேன் நிசாந்தன் தொடருங்கள் நன்றி நன்றி



தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 8 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Oct 18, 2010 12:18 am

இலங்கை அரசின் அதிகாரபூர்வ அறிக்கை வந்தது. 350 பேர் மொத்தமாக இறந்து போயிருந்தார்கள். தமிழர்களுக்கு சொந்தமான 18000 வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் சூரையாடி எரிக்கப்பட்டிருந்தன. ஒரு இலட்சம் தமிழர்கள் அகதிகளாக மாற்றப்பட்டிருந்தனர்.

உண்மையான எண்ணிக்கையை தெரிந்துக் கொள்ள ஒவ்வொன்றையும் எத்தனை மடங்கு பெருக்கிக் கொள்ள வேண்டும் என தமிழ் மக்களுக்கு தெரிந்திருந்தது. முக்கியமாக இந்தியாவிற்கு தெரிந்திருந்தது.

ஆகஸ்ட் 2-ம் தேதி இந்திரா காந்தி ஒரு முடிவுக்கு வந்திருந்தார். இலங்கை தமிழருக்கு உதவ வேண்டும். அகதிகளுக்கு உதவ வேண்டும். மருந்து, மாத்திரைகள், உடைகள், உணவுப்பொருள்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. கொழும்பில் குவிந்திருந்த அகதிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்ல கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆகஸ்ட் 15 சுதந்திரதின கொண்டாட்டத்துக்கு அமிர்தலிங்கத்தை வரவேற்றார் இந்திரா. ஜெயவர்தனேவின் இரத்தம் கொதிக்க வேண்டும் என அவர் செய்த ஏற்பாடு. இரண்டு மூன்று முறை ஜெயவர்தனேவுடன் பேசிப் பார்த்தார் இந்திரா. இனியும் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று ஒரு கட்டத்தில் இலங்கையுடன் மோதுவதை நிறுத்திக் கொண்டார் இந்திரா காந்தி.

இந்திரா காந்தி தெளிவாக இருந்தார். இந்தியாவின் நலன் பாதிக்கப்படாத வரை, இந்தியா எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாது.
அதாவது வெளிப்படையாக.


இதை முக்கியாக நோக்கப்பட வேண்டிய ஒன்று. பங்களாதேசுக்கும் ஈழத்துக்கும் இடையில் இந்தியாவின் நிலைப்பாடை நன்கு புரிந்துக் கொள்ளலாம்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Oct 18, 2010 12:29 am

செப்டம்பர் 1983. சென்னை முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களால் நிரம்பியிருந்தது. அதில் யார் யார் அகதிகள், யார் பயிற்சிக்கு வந்தவர்கள் என பேருந்து கொண்டு வந்தவர்களுக்கு தெரிந்திருந்தது. பயிற்சிக்கு வந்தவர்களை மட்டும் தனியே பிரித்து கூட்டிச் சென்றனர். மூன்று நாள் பயணம். தில்லியை சுற்றிக் காட்டிவிட்டு முகாமுக்கு அழைத்துச் சென்றனர். பயிற்சி முகாம்கள் தேராதூனில் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து இயக்கத்தவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது அங்கே. எல்.டி.டி.ஈ.க்கு தனியே அளிக்கப்பட்டது. பிரபாகரனின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுக்கு பிரித்தியேக பயிற்சி அளிக்கப்பட்டன. அளித்தவர்கள் இந்தியாவின் உளவு பிரிவான ”றோ”வை சேர்ந்தவர்கள். ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள். சிறப்பு பயிற்சியாளர்கள். இராணுவ ஆசிரியர்கள்.

மிக விரிவான, கடினமான பயிற்சி திட்டம் அது. காலை எட்டு மணிக்கு ஆரம்பித்துவிடுவார்கள். காலையில் வகுப்புகள் நடக்கும். கெரில்லா தாக்குதல் முறை குறித்து. எப்படி மறைந்துக் கொள்வது? எப்படி அலைகழிப்பது? எப்போது தனியாக தாக்க வேண்டும்? எப்போது குழுவாக? தாக்கிக்கொண்டே விரைவாக ஓடுவது எப்படி? எப்படி பதுங்குவது? எப்படி சமயம் பார்த்து பாய்வது? பிறகு, செய்முறை பயிற்சி. விதவிதமான ஆயுதங்கள் வழங்கப்படும். ஒவ்வொன்றைப் பற்றியும் பயன்பாடைப் பற்றியும் விரிவாக எடுத்துறைக்கப்படும்.

ஒரு மணி முதல் இரண்டு மணி வரை மதிய உணவு வழங்கப்படும். பிறகு, மைதானத்தில் திரள வேண்டும். துப்பாக்கி பயிற்சி. உலகிலுள்ள அத்தனை கைத்துப்பாக்கிகளையும், அத்தனை ரைஃபில்களையும், அத்தனை ஆயுதங்களையும் பழக்கிவிடுவார்கள். பிறகு சிறப்பு பயிற்சி. வெடிமருந்துகள், வெடிகுண்டுகள் குறித்து. தகவல் தொடர்பு சாதனங்கள் உபயோகம் குறித்து. ரேடியோ சிக்னல்களை எப்படி அனுப்புவது, பெறுவது குறித்து. வயர்லெஸ் சாதனங்களை எப்படி கையாள்வது?

அவ்வப்பொது தேர்வுகள் நடைபெறும். மதிப்பெண்கள் அளிக்கப்படும். ஒருவர் எதில் பிந்தங்கியிருக்கிறார் என ஆராய்ந்து, மீண்டும் பயிற்சிகள் ஆரம்பிக்கும். எல்லாம், முடிந்ததும், பிரிவு உபசார விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. எல்.டி.டி.ஈ. வீரர்களை குறிப்பிட்டு பாராட்டினார்கள் பயிற்சியாளர்கள்.

கிட்டு, பொன்னம்மான் போன்றவர்கள் பயிற்சி முடிந்ததும், பிரபாகரனை சந்தித்தனர். இந்தியா அளித்த பயிற்சிகள் பற்றி ஆஹா ஒஹோ என பாராட்டினார்கள். அனைத்தையும் கேட்டுக் கொண்டு பிரபாகரன் கூறினார்….

“அவர்கள் பயிற்சியளித்தது வேறொரு காரணத்திற்காக. நாம் பயிற்சிபெற்றது மற்றொரு காரணத்திற்காக. நமக்கு எதிராக இந்தியா தனது படைகளை திருப்பும் காலம் வரலாம். அது போன்ற சந்தர்பத்தில், நாம் இந்தியாவை எதிர்த்து போரிட நேரிடலாம். ஆகவே, அதிகம் உணர்சிவசப்பட வேண்டாம்.” தலைவரின் தீர்க்கதரிசனம் நான்காம் ஈழப் போரில் உண்மையானது.

ஒரு புலி கம்பீரமாக நடந்து வருவதைப் போல நடந்து வந்தார். தீர்க்கமான கண்கள். அவர் பேசினாரா அல்லது உறுமினாரா என்று கண்டுபிடிக்க இயலாது. ஒவ்வொரு வார்த்தையிலும் அனல் பறந்தது. இப்படி ஒரு முன்னுரையுடன் தன் கட்டுரையை ஆரம்பிக்க நினைத்த அனிதா பிரதாப்புக்கு ஆச்சரியமும் ஏமாற்றமுமே மிஞ்சியது.

இவரா? இளங்கருப்பு கால்சட்டை. நீல சட்டை. குள்ளம். மிக மிக மென்மையான குறல். இவரா புலிகளின் தலைவர்?

சென்னை பெசண்ட் நகரில் பிரபாகரனை சந்தித்தார் அனிதா பிரதாப். சண்டே செய்தி பத்திரிக்கையின் நிருபர். பொதுவாக, பிரபாகரன் யாருக்கும் பேட்டி கொடுப்பதில்லை, ஆனால், 1983 கறுப்பு யூலை கலவரத்தை சரியான முறையில் உலகுக்கு எடுத்துச் சென்றவர் அனிதா பிரதாப். அதனால் அனிதா பிரதாப் மீது பிரபாகரனுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது.

“இந்தியாவுடன் நாங்கள் போரிட வேண்டியிருக்கும்” என்றார் பிரபாகரன்.

அனிதா பிரதாப்புக்கு அதிர்ச்சி.

“என்ன இப்படி சொல்கிறீர்கள்? சமீபத்தில் கூட, உங்கள் இயக்கத்துக்கு மிகச் சிறந்த ஆயுதப் பயிற்சிகளை கொடுத்திருக்கிறார்கள்”

“தனி ஈழம் அமைவதை இந்தியா விரும்பாது. இலங்கையை விட இந்தியா இதில் தீவிரமாக இருக்கும்.”

”ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

“ஏனென்றால் தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்தரை கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். எங்கள் கோரிக்கை அங்கேயும் எழுந்தால்?”

இந்த காரணத்தைத் தான் புலிகளுக்கு எதிராக செயல்பட இந்தியா மடத்தனமாக இன்றுவரை சொல்லும் சப்பக் காரணம். ஆனால் இதில் எள்ளளவும் உண்மையில்லை என அனைவருக்கும் தெரியும்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Oct 18, 2010 12:39 am

நடந்து முடிந்த கலவரங்களின் நினைவுகள் மனதைவிட்டு இன்னும் அகலவில்லை. தெற்கு மாகாணங்களிலுள்ள பல்கலைகழகங்கள் திறந்துவிட்டன. தமிழ் மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என அறிவிப்பு வெளியானது. ஆனால் தமிழ் மாணவர்கள் அச்சத்தில் இருந்தனர். மீண்டும் பிடித்து உதைத்தால்? தங்களை யாழ் பல்கலைகழகத்தில் தொடர்ந்து படிக்க விடுமாறு கோரிக்கையுடன் போராட்டத்தை ஆரம்பித்தனர். முதல் வேலையாக அரசு செய்த காரியம், யாழ் பல்கலைகழகத்தை மூடியதுதான். போராட்டம் செய்த மாணவர்களை தமிழ்நாட்டிற்கு நாடுகடத்தியது.

பிரபாகரன் சென்னைக்கு வந்து அவர்களைப் பார்த்தார். துடிப்பான இளைஞர்கள். வந்திருந்தவர்களில் நால்வர் பெண்கள். அப்போது ஆன்ரன் பாலசிங்கமும் அடேல் பாலசிங்கமும் சென்னை திருவான்மையூரில் தங்கியிருந்தனர்.அடேல் பாலசிங்கத்தின் வீட்டிற்கு நான்கு பெண்கள் தங்க வருவதாக பிரபாகரன் தகவல் அனுப்பியிருந்தார். அவர்கள் நால்வரையும் அனுப்பினார். அதில் ஒருவர் மதிவதனி. நன்றாக படிக்கக்கூடிய பெண். படு சுட்டி. கால்நடை படிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டவர் ஆனால் அவர் தேர்வு செய்தது, விவசாயக் கல்வி. அவரின் சொந்த ஊர் பூங்குடுதீவு. அப்பா ஒரு ஆசிரியர்.

அடேல் எழுதிய Women And Revolution என்னும் புத்தகம் நினைவுக்கு வந்தது. ’பெண்கள் அவசியம் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். இயக்கங்களில் பங்குகொள்ள வேண்டும். பெண்கள் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிறார்கள். ஆகவே, ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் அவர்களும் பங்குகொள்வது பொருத்தமானது. பெண்களை இயக்கத்தில் இணைத்துக் கொண்டால், இயக்கம் பலவீனமடையும் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறு. இயக்கத்தை வலுப்படுத்துபவர்கள் பெண்கள்.’

மதிவதனியின் அறிவுக்கூர்மையும் செயல்திறனும் பிரபகரனை வசீகரித்தது. பிரபாகரன் மதிவதனியை காதலிக்க ஆரம்பித்தார். திருமணமும் முடிந்தது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. சார்லஸ் அந்தோணி, துவாரகை.

ஒக்ரோபர் 31, 1984 அன்று இந்திரா காந்தி தனது மெய்காப்பாளர்களால் கொல்லப்பட்டார்.
இராசீவ் இந்திய பிரதமராக பொறுப்பேற்றார். ஆட்சியில் அமரப் போகும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இது பிரபாகரன் இராசீவிற்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதம்

இராசீவ் ஒரு முன்னாள் விமானி. வானத்தில் பறப்பதில் ஆர்வம் கொண்டவருக்கு அரசியல் களத்தில் கால்களை சுயமாக ஊன்றி நடக்கும் பக்குவம் இல்லை. சுறுக்கமாக, சொந்த புத்தி இல்லை. குறிப்பாக அயல் நாட்டு விவகாரங்களில். தாயும் மகனும் வேறுபடுவது இந்த புள்ளியில் தான். இந்திராவால் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடிந்தது. சரியாகவோ, தவறாகவோ.

ஆகஸ்ட் 4,1984. எல்.டி.டி.ஈ. க்கும் சிங்கள இராணுவத்துக்கும் முதல் யுத்தம் மூண்டது. முதலில் தாக்கியது சிங்களப் படை. பொலிகண்டி கடற்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த புலிகள் மீது தாக்குதல் நடாத்தினர். சுதாகரித்துக் கொண்டு புலிகள் தொடர்ந்த பதில் தாக்குதலில் ஆறு இராணுவத்தினர் இறந்தனர். சிங்கள இராணுவத்திற்கு அவமானம் தான் மிஞ்சியது. இதற்கு விடை தேட அவர்கள் குறுக்கு வழியில் சென்றனர். வல்வெட்டித் துறையில் கண்ணில் பட்ட அனைத்து இளைஞர்களையும் கைது செய்தனர். தீவிரவாதிகள் என்று.

புலிகள் இதனை ஒரு ஆரம்பமாக எடுத்துக் கொண்டார்கள். கண்ணி வெடிகளை புதைத்து வைத்து, இராணுவ கவச வாகனங்களையும் இராணுவ வீரர்களையும் சிதறடித்தனர். குழுவாகச் செயல்பட்டு கமாண்டோக்களை கொன்றனர். அறுபது பேர் கொண்ட குழு காவல் நிலையத்துக்குள் புகுந்து, அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை அள்ளிப் போட்டுக்கொண்டு வந்தார்கள்.

உடனே, இலங்கை அரசு அவசர உத்தரவுகளை பிரப்பித்தது. முதலில் கடல் பகுதிகளைக் கைப்பற்ற வேண்டும். மன்னார் முதல் முல்லைத்தீவு வரை ஒரு தமிழனும் பயணம் மேற்கொள்ளகூடாது. யார் கடலில் நுழைந்தாலும் தயவு தாட்சணம் இன்றி சுட்டுக் கொல்லப்படுவார்கள். அடுத்து, தமிழர்களின் பிரதான நகரமான யாழ்ப்பாணத்துக்கு சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சாலைகளில் அரசு வாகனங்கள் தவிர வேறு எந்த வாகனமும் செல்லக்கூடாது. பேருந்துகள் இரண்டு மணி நேரம் மட்டுமே இயங்கும். அடுத்து, கண்ணில் தென்படும் தமிழர்களின் கிராமங்களுக்குள் நுழைய வேண்டும். அடி, உதை, வெட்டு, கொல்.

வேண்டிய மட்டும் பயத்தை விதைத்துவிட்டோம். இனிமேல் பயந்து நடுங்குவார்கள் என்று நம்பியது சிங்கள அரசு.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Oct 18, 2010 12:49 am

அனைத்து இயக்கங்களும் ஒன்றாக இணைந்தனர். Eelam National liberation Front(ENLF). இதில் இணைந்தவர்களில் முக்கியமானவர்கள் TELO, EROS, PLOTE, EPRLF மற்றும் LTTE.

ஈழப் போராட்டத்தில் 1984-ம் ஆண்டு பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. எல்.டி.டி.ஈ.யின் வரலாற்றிலும் கூட. மூன்று முக்கிய விடயங்களை பிரபாகரனால் சாதிக்க முடிந்தது.

முதலாவது, மக்கள் ஆதரவு. வாருங்கள் என அழைத்தால், அணி திரள மக்கள் தயாராக இருந்தனர். தாங்கள் சாகச வீரர்கள் அல்ல. விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்த முடிந்தது. அதற்கு, ஜெயவர்தனேவின் காட்டாட்சியும் இராணுவத்தின் தொடர் அராஜகங்களும் பெரிதும் உதவின.

இரண்டாவது, இந்தியாவிடமிருந்து பெற்ற அதிநவீனப் பயிற்சி. முதலில் நூறு பேரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார் பிரபாகரன். பிறகு மேலும் நூறு பேரை அனுப்பினார். பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தவர்கள் மற்ற வீரர்களுக்கு பயிற்சி வழங்கினர். இனி புதிதாக இணையும் வீரர்களுக்கும் அதே உயர் ரக பயிற்சியை வழங்க இயலும். எத்தனை செலவு செய்தாலும் இத்தகைய பயிற்சியை வேறு எங்கேயும் பெற்றிருக்க முடியாது.

மூன்றாவது, நிதி தேவைப்படும் போதெல்லாம், பணத்தை அளிக்கக்கூடிய ஒருவரை எல்.டி.டி.ஈ. அடையாளம் கண்டிருந்தது. அவர், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஆன்ரன் பாலசிங்கம் தான் அவரை சந்தித்து பணம் வாங்கி வருவது வழக்கம். ஒவ்வொரு முறை போகும்போதும் எவ்வளவு வேணும் தம்பி என்று மட்டுமே கேட்பார். நான்கு என்று ஆன்டன் கூறினால், நான்கு பெட்டிகள் வரும். நான்கு கோடி. பணத்தை ஜீப்பில் ஏற்றி பாதுகாப்புக்கு காவல்துறையினரையும் சைரன் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பார். ஒரு முறை ஆன்ரன் பாலசிங்கமும் பிரபாகரனும் எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று, விருந்து சாப்பிட்டுவிட்டு திரும்பினார்கள்.

கட்டமைப்பு ரீதியாகவும் எல்.டி.டி.ஈ. அபார வளர்ச்சி அடைந்திருந்தது. 1983 கலவரத்துக்கு முன்பு 30 பேர் மட்டுமே இருந்த இயக்கத்தில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 300 ஆக இருந்தது. எந்தெந்த துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்? என்னென்ன தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தனியாக பட்டியலிட்டார் பிரபாகரன்.

1) பயிற்சி முகாம்கள் அமைக்க வேண்டும்

2) நவீன ரக ஆயுதங்கள் தருவிக்கப்பட வேண்டும்.

3) நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் தருவிக்க வேண்டும்.

4) கடல் புலிகள் என்ற பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

5) பெண்கள் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.

6) புலனாய்வுப் பிரிவு அமைக்க வேண்டும்.

இயக்கத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல கீழ்கண்டவற்றை செய்து முடிக்க வேண்டும்.

1) அரசியல் பிரிவுக்கு வலு சேர்க்க வேண்டும்.

2) பிரச்சாரத் துறையை முடக்கிவிட வேண்டும்

3) இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்ப் பிரதேசங்களை விடுவிக்க வேண்டும்.

4) சட்ட, ஒழுங்கு விவகாரங்களைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

5) வரி வசூலிக்க வேண்டும்.

6) மக்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும்.

எல்லாவற்றிலும் பிரதானமானது பயிற்சி முகாம்கள். பிறகு, ஆயுதங்கள் தருவிப்பது. தமிழ்நாட்டில் ஏற்கனவே இரண்டு பயிற்சி முகாம்கள் இயங்கிக் கொண்டிருந்தன. ஒன்று மதுரையில் மற்றொன்று சேலத்தில். பயிற்சி முகாம்களை அமைக்கும் பணி பொன்னம்மானிடம் ஒப்படைக்கப்பட்டது.

அக்டோபர் 1984-ம் ஆண்டு, முதல் பெண்கள் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. நூறு பெண்கள் கொண்ட பிரிவு.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Oct 18, 2010 12:56 am

1984-ன் இறுதியில் தன்னை ஒரு பலம் பொருந்திய இயக்கமாக எல்.டி.டி.ஈ. வளர்த்துக் கொண்டது. நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் சாரை சாரையாக வந்து இணைந்துக் கொண்டிருந்தனர். பயிற்சி முகாம்கள் விரிவுபடுத்தப்பட்டன. தமிழகத்தில் மட்டும் ஐந்து இருந்தன.

தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து செல்ல வேண்டி இருந்ததால், மீன்பிடி படகுகளை விட்டுவிட்டு, சொந்தமாக படகுகள் செய்ய தொடங்கினர். ஆயுத பரிவர்தனைக்கு கப்பல் முக்கியமாக தேவைப்பட்டது. அதனால் சீனாவிலிருந்து பயன்படுத்தப்பட்ட ஒரு கப்பலை வாங்கினார்கள். புதிப்பித்தார்கள். பனாமாவில் பதிவு செய்து கொண்டு வந்தனர். பின் அது பத்தாக உயர்ந்தது.

பின், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் வழித்தடம் அமைக்கும் பணி. வேதாரணியம், நாகப்பட்டிணம், பொலிகண்டி, மணல்காடு, வல்வெட்டித்துறைப் பகுதிகளில் சாலைகள் சீறமைக்கப்பட்டன. வேதாரணியத்தில் படகில் ஏறினால், வல்வெட்டித்துறைக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் வந்துவிட வேண்டும். முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பிலிருந்து சரக்குகள் போய்வர அதிவிரைவு படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்திய ஆயுதங்கள் மீது பிரபாகரனுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது கிடையாது. அவர்கள் ஆயுதம் கொடுத்தால் அதில் ஒரு உள்ளர்த்தம் கண்டிப்பாக இருக்கும். மறுத்துவிடுங்கள். தவிரவும், இந்திய கருவிகள் தரம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அவர்களின் பயிற்சி போதும். ஆயுதம் வேறு எங்காவது வாங்கிக் கொள்ளலாம். கே.பத்மநாபன் தலைமையில் ஆயுதக் கொள்முதல் பிரிவு தொடங்கப்பட்டது. உலகின் அனைத்து கள்ள மார்க்கெட்டுக்கும் நடையாய் நடந்து பின், லெபனானில் ஆயுதம் வாங்க தீர்மானம் செய்தார் கே.பி. விலையும் குறைவு. தரமோ உயர்வு.

ஒரு முறை, ஒரு கண்டெயினர் முழுக்க சரக்குகள் வாங்கிவிட்டார்கள். ஏகே 47 ரக துப்பாக்கிகள், வெடி மருந்துகள், தகவல் தொடர்பு சாதனங்கள். சென்னைத் துறைமுகத்தில் சோதனையின் போது பிடித்துவிட்டார்கள். எவ்வளவு முயன்றும் பிரபாகரனால் அதனை வெளிக்கொண்டு வர முடியவில்லை. எம்.ஜி.ஆரின் உதவியை நாடினார். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் எம்.ஜி.ஆர். கண்டெயினர் க்ளியர் ஆனது மட்டுமல்லாமல் தகுந்த பாதுகாப்போடு முகாமுக்கே அனுப்பிவைத்தார்.

எல்.டி.டி.ஈ.யின் கீழ் உள்ள பகுதியென தெரிந்தால், காவல்துறையும் இராணுவமும் சற்று தயங்கி நிற்கும். சிங்களர்களின் தொல்லைகள் இல்லாததால் தமிழர்களால் சுதந்திரமாக வாழ முடிந்தது. அரசாங்கத்துக்கு பதிலாக புலிகளுக்கு வரி செலுத்த ஆரம்பித்தார்கள். அரசு ஆடிப் போனது. புலிகள் வந்து மிரட்டினால் எங்களிடம் புகார் அளியுங்கள். நாங்கள் உங்களை பாதுகாக்கிறோம் என்றது அரசு. சர்தான் போயா என்றனர் மக்கள். தனி அரசாங்கமே நடத்தினார்கள் புலிகள்.

தனிப் பத்திரிக்கை ஆரம்பித்தார்கள். பெயர் விடுதலைப் புலிகள். தனி வானொலி நிலையம் ஆரம்பித்தார்கள். பெயர் புலிகளின் குரல்.


Sponsored content

PostSponsored content



Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக